நான் ஒருபோதும் அழவில்லை: புதிய ஐரோப்பாவில் ஒரு உணர்ச்சியற்ற நிலையை உருவாக்குதல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

எழுத்து, இயக்கம் பியோட்டர் டொமலேவ்ஸ்கி

1989-91ல் சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும் முதலாளித்துவ மறுசீரமைப்பானது பாரிய பரிமாணத்தில் சமூக, கலாச்சார மற்றும் அறிவார்ந்த பின்னடைவைக் கொண்டுவந்தது.

பல தசாப்தங்களாக ஸ்ராலினிச குற்றங்களும், சோசலிசத்தைப் பற்றி மக்கள் மத்தியில் அவர்கள் உருவாக்கிய குழப்பமும், புதிதாக “விடுதலை செய்யப்பட்ட” முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ அடுக்குகளின் பேராசை, இலட்சியம் மற்றும் முட்டாள்தனம் ஆகியவற்றுடன் இணைந்து, அறியாமையும் மற்றும் உணர்வற்றதாக இருந்த பெரும்பாலும் பின்தங்கிய மற்றும் வெறுமையான ஒரு கலாச்சாரத்தை உருவாக்கியது.

அடர்த்தியான மூடுபனியிலிருந்து ஒற்றை அம்பு வெளிவருவது போல, போலந்து, ரூமேனியா, பல்கேரியா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவியா ஆகிய நாடுகளிலிருந்து சுவாரஸ்யமான படங்கள் வெளிவந்துள்ளன. புதிய படங்களில் மிகச் சிறந்தவை, முதலாளித்துவ மறுசீரமைப்பு பற்றிய பொய்களால் உருவாக்கப்பட்ட ஏமாற்றத்தின் அறிகுறிகளைக் காட்டுகின்றன. மேலும் பல சிக்கல்கள் இருந்தாலும் அவை புதிய சமூக யதார்த்தங்களை எதிர்கொள்ளத் தொடங்குகின்றன.

நான் ஒருபோதும் அழவில்லை

போலந்து எழுத்தாளர்-இயக்குனர் பியோட்ர் டொமலெவ்ஸ்கியின் நான் ஒருபோதும் அழவில்லை (Jak najdalej stad) மிகவும் வளமான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான போலந்து மக்களின் குடியேற்றம் மற்றும் அவர்கள் தங்கள் நாட்டில் விட்டுச்செல்லும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை பற்றி கையாள்கிறது.

இந்த திரைப்படம் ஓலா (Zofia Stafiej) வை பற்றியதாகும். 17 வயதான இந்த போலந்து யுவதி, பல தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பின்னர், ஓட்டுநர் சோதனையில் தேர்ச்சி பெறுவதில் வெறி கொண்டிருந்தார். மூன்று தடவை தோல்விக்கு பின்னர், அவர் "மழையில் நிற்கும் ஒரு விலைமாது போல்" உணர்கிறார். அயர்லாந்தில் பணிபுரிந்து வரும் அவரது தந்தை, தனது ஒட்டுனர் உரிமத்தைப் பெற்றவுடன் ஒரு கார் வாங்குவதற்கான பணத்தை வழங்குவதாக உறுதியளித்தார். இந்த கலகக்கார பெண்ணைப் பொறுத்தவரை, ஒரு வாகனம் என்பது அவள் தாய் (கிங்கா ப்ரீஸ்) மற்றும் கடுமையாக ஊனமுற்ற சகோதரர் (டேவிட் துலேஜ்) ஆகியோருடன் பகிர்ந்து கொள்ளும் வறுமையிலிருந்து தப்பிப்பதற்கான சாத்தியமான வழியாகும். அவர்களின் நெரிசலான, இருட்டான குடியிருப்பில் அம்மூவரும் மூச்சு விட மட்டுமே முடியும்.

ஓலாவின் தந்தை “அவளது வாழ்க்கையின் பாதிக்கு” முன்பு போலந்தை விட்டு வெளியேறிவிட்டார். அவள் தொடர்ச்சியாக புகைப்பிடிப்பதுடன், பள்ளிக்கு செல்லாதுவிடுவது, “மோசமான போலீஸ்!” (“F-----g police!”) என்ற மிகவும் பொருத்தமற்ற தருணங்களில் அதிகளவில் ஒலிக்கும் தொலைபேசி சத்தத்தை வைத்திருக்கிறார். இறுதியில், எப்போதாவது மரண வாகன திருடுதல் அவளது வாழ்க்கை வரலாற்றில் சேர்க்கப்படும்.

அவரது தந்தை ஒரு வேலை விபத்தில் இறந்தால், ஆங்கிலம் பேசமாட்டாத மற்றும் அவரது மகனின் ஒரே பராமரிப்பாளராக இருக்கும் ஓலாவின் தாய், இறந்தவரின் உடலை டப்ளினிலிருந்து கொண்டு வருமாறு ஒலாவை பணிக்கின்றார். அவளுக்கு வயது குறைவாக இருந்தாலும், ஐரிஷ் தலைநகரில் உள்ள அதிகாரத்துவ அதிகாரிகளையும், வேலை முகவர் (ஆர்காடியஸ் ஜாகுபிக்), அவரது தந்தையின் முதலாளி மற்றும் மரணவிசாரணை அதிகாரியாயும் எளிதில் கட்டுப்படுத்த அவளால் முடிந்தது. ஓலா தனது தந்தையுடன் மிகவும் அறிமுகமில்லாது இருந்ததால், பிறப்பு அடையாளங்களைப் பற்றி விசாரிக்க தாயை அழைக்காமல் அவரது உடலை அடையாளம் காண முடியாது இருந்தது.

ஓலாவின் கெட்டித்தனத்தால் அவள் சிரமமின்றி நிறுவன அலுவலகங்களுக்குள் நுழைந்து, தனது தந்தையின் அலுமாரியை தேடிக்குடைந்து, ரூமேனியாவிலிருந்து குடியேறிய சாரா (காஸ்மினா ஸ்ட்ராட்டன்) என்ற கர்ப்பிணி காதலியை எதிர்கொள்கிறாள். உண்மையில், ஓலா பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சாராவுக்கு உதவுகிறாள்.

ஒரு நடைமுறை காரணமாகவும் மற்றும் மோசமான வேலை நிலைமைகளை நிரூபிப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாகவும், விபத்தின் விளைவாக பணம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் ஓலா தனது தந்தை தனக்காக பணத்தை ஒதுக்கி வைத்திருப்பதை அறிகிறாள். இது ஓலாவை அவளின் தந்தை இல்லாதநிலைமையோடு உணர்ச்சிவசமாக போராடுவதற்கு பங்களிக்கிறது.

அவள் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்றும்போது, ஓலா தனது கண்ணீர் குழாய்கள் உண்மையில் செயல்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்தாள்!

"புதிய" ஐரோப்பாவில் பொருளாதார மற்றும் சமூக யதார்த்தங்களைப் பற்றி நான் ஒருபோதும் அழவில்லை மிகத்தெளிவான பார்வையை கொண்டுள்ளது. "சுதந்திரம்" மற்றும் "ஜனநாயகம்" மற்றும் "தடையற்ற சந்தையின்" அதிசயங்கள் பற்றிய முட்டாள்தனங்களுக்கு இங்கு அதிக இடமில்லை.

நான் ஒருபோதும் அழவில்லை (2020)

இருப்பினும், படம் ஒரு பொருத்தமற்ற மற்றும் தேவையற்ற மனச்சோர்வை

வெளிப்படுத்துகிறது. இந்த நிகழ்வுப்போக்கிற்கு பல்வேறு காரணிகள் ஊட்டமளிக்கின்றன. இது பரவலாக உள்ளது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில், கலைஞர்களுக்கு “சமூக யதார்த்தம்” மணக்கும் ஒரு பயங்கரமும் உள்ளது. ஏனெனில் ஸ்ராலினிசத்துடன் கலை மற்றும் உளவியல் யதார்த்தத்தை தவறாக இணைத்திருப்பதால். கூடுதலாக, தற்போது பல்வேறு போக்குகளின் மகிழ்ச்சியற்ற செல்வாக்கு உள்ளது. அவை "விஷயங்களின் இதயத்தை" அடைவதன் மூலம் உணர்வின்மையையும் மிருகத்தனத்தையும் அடையாளம் காண்கின்றன. இயக்குனர் டொமலேவ்ஸ்கி "விழிப்புணர்வு" மற்றும் "எளிமையாக" இருப்பதில் கொஞ்சம் கடினமாக உழைக்கிறார். இதனால் படத்திற்கு ஒரு குறிப்பிட்ட நுணுக்கமும் உணர்வும் இல்லாதிருக்கின்றது. இவை திரைப்படத் தயாரிப்பாளர் இன்னும் கடினமான கலாச்சார சூழ்நிலையின் கீழ் இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகளும் மற்றும் அடையாள அரசியலுக்கான அவரது வெளிப்படையான ஒப்புதலும் இதில் அடங்கும்: அவருக்கு ஓலா ஒரு வெல்லமுடியாத கதாநாயகியாக இருக்கிறாள்.

அனைத்து நடிகர்களும் தங்களது குறுகிய வரையறுக்கப்பட்ட பாத்திரங்களின் எல்லைக்குள் சிறப்பாக செயல்படுகிறார்கள். நான் ஒருபோதும் அழவில்லை "யூரோ-அனாதைகள்" என்ற நிகழ்வை சுட்டிக்காட்டுவதால் மரியாதைக்குள்ளாகிறது. போலந்திலும் பிற இடங்களிலும், மில்லியன் கணக்கானவர்கள் இல்லையென்றாலும் நூறாயிரக்கணக்கான குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு பெற்றோர்களும் இல்லாமல் வளர்கிறார்கள். ஏனெனில் அவர்கள் பொருளாதாரத் தேவையினால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஓலாவின் கடினத்தன்மை அவரது அனாதை நிலையின் சகித்துக்கொள்ளமுடியாத வலியின் ஒரு பகுதியாகும். அவள் உணர்ச்சிவசப்பட்ட பாதிப்புகளை அனுபவித்துள்ளாள். அவளது வளர்ச்சி குன்றிய, திணறடிக்கப்பட்ட இருப்பினால் எளிதில் இதனை தீர்த்துக்கொள்ளப்பட முடியாது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான ருமேனியா, பல்கேரியா மற்றும் போலந்து போன்ற நாடுகளில், 500,000 முதல் 1 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மதிப்பிடுகின்றன. 2004 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்ததிலிருந்து, போலந்து அதன் போருக்குப் பிந்தைய வரலாற்றில் மிகப்பெரிய குடியகல்வுகளில் ஒன்றை அனுபவித்தது. கூடுதலாக, "பூஜ்ஜிய வேலைநேர" ஒப்பந்தங்கள், ஊதிய திருட்டு, பாகுபாடு மற்றும் பெரும்பாலும் அபாயகரமான வேலை நிலைமைகளால் அயர்லாந்தில் போலந்து குடியேறிய தொழிலாளர்கள் கடுமையான அளவிலான சுரண்டலை எதிர்கொள்கின்றனர்.

ஓலா கண்டுபிடித்தபடி, அவரது தந்தையின் உயிர் பற்றி அவரது முதலாளிக்கு எவ்வித அக்கறையும் இல்லை. தனிநபர் காயப்படல் மதிப்பீட்டு வாரியம் எந்த இழப்பீடும் கொடுப்பதை மறுத்ததை அடுத்து அவர் சில யூரோக்களை ஓலா மீது வீசியெறிந்தார். போலந்து தொழிலாளி ஒரு சக ஊழியருடன் பணிக்காலமுறையை மாற்றினால் சட்டபூர்வமாக இல்லாத ஒரு நபராக கருதப்படலாம். "யாரோ ஒருவர் இங்கே இல்லாதபோது அவர்களைப் பற்றி அறிந்து கொள்வது கடினம்" என்று அவரது முதலாளி மகிழ்ச்சியடைகிறார். விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை எதுவும் செய்யப்படுவதில்லை என்பதால் பணியிடத்தில் ஒரு இறந்த உடல் ஒரு அசெளகரியமாக இருக்கின்றது. மற்றொரு புலம்பெயர்ந்த தொழிலாளி ஒரு முகமற்ற புள்ளிவிவரமாக மாறுகிறார்.

டொமலேவ்ஸ்கி ஒரு குறிப்பிட்ட நிலைமையின் அந்நேரத்திற்குரிய விளக்கத்தை வழங்குகின்றார். கிழக்கு ஐரோப்பிய நோயின் மூலத்தைப் பற்றிய அதிக நுண்ணறிவு அல்லது ஆர்வத்தைக் கூட இந்தப் படம் கொடுக்கவில்லை. பல போலந்து கலைஞர்கள் மோசமான சட்டம் மற்றும் நீதிக் கட்சி (PiS) அரசாங்கத்தை வெறுக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த அரசாங்கம் கடுமையான சர்வாதிகார, கம்யூனிச எதிர்ப்பு மற்றும் கலாச்சார விரோதமானது. ஆனால் அக்கலைஞர்கள் தற்போதைய முட்டுசந்திலிருந்து வெளியேறுவதற்கான ஒரு பாதையை இன்னும் காணவில்லை.

Loading