இலங்கை ஜனாதிபதி அரசாங்க ஊழியர்கள் மீது வேலைநிறுத்த தடையை விதிக்கின்றார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, மே 27 அன்று, பெரும்பாலான அரச துறைகளை “அத்தியவசிய சேவைகளாக” அறிவித்து, அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் தடைசெய்கின்ற ஒரு அசாதாரணமான வர்த்தமாணியை வெளியிட்டார். நாடு முழுவதிலும் கொவிட்-19 தொற்றுக்கள் சடுதியாக உயர்வடைகின்ற வேளையில், வாழ்க்கை நிலைமைகள் சீரழிந்துவருகின்றமை மற்றும் ஜனநாய உரிமைகள் மீதான அதிகரித்து வருகின்றமை தொடர்பாக மேலோங்கி வருகின்ற வெகுஜன கோபத்தையும் அமைதியின்மையையும் அடக்குவதே இந்த கொடூரமான சட்டத்தின் நோக்கமாகும்“

கோடாபய இராஜபக்ஷ [Credit: AP Photo/Eranga Jayawardena]

துறைமுகங்கள், சுங்கம், பெற்றோலியம், அரச ரயில் மற்றும் பேரூந்து, நிர்வாகம் மற்றும் நலன்புரி அலுவல்கள், மத்திய வங்கி உள்ளிட்ட அரச வங்கி மற்றும் தேசிய அளவிலான காப்புறுதி சேவைகள், அதே போல, உள்ளுராட்சி மன்றங்களின் கீழ் உள்ள வடிகால் முகாமைத்துவம் போன்ற அனைத்தும், தற்போது அத்திவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் உள்ளன.

இந்தச் சட்டத்தின் கீழ், இந்த நிறுவனங்களில் பணிக்கு சமுகம் அளிக்காத எவரும் “நீதிபதிக்கு முன்னால் சுருக்கமான விசாரனையின் பின் குற்றாவாளி ஆக்கப்பட்டு” இரண்டு முதல் ஐந்து வருடங்கள் வரை “கடுமையான சிறைத் தண்டனையை” எதிர்கொள்வார். அல்லது 2,000 முதல் 5000 ரூபா வரையான தண்டப் பணத்தை செலுத்த பொறுப்புடையவர் ஆவார். குற்றவாளியாக்கப்பட்ட எவரினதும் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் அரசால் பறிமுதல் செய்யப்படமுடியும். அத்துடன் வாழ்க்கைத் தொழில் மற்றும் வேலைக்காகப் பேணப்படுகின்ற எந்தப் பதிவுகளில் இருந்தும் அவர்களுடைய பெயர் நீக்கப்படும்.

மேலதிகமாக, எந்தவொரு தனி நபரும் “சரீர ரீதியாகவோ அல்லது வேறு எந்தவொரு பேச்சு அல்லது எழுத்து மூலமாகவோ, இன்னொரு நபரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என துாண்டுகின்ற, ஊக்கமளிக்கின்றமை ஒரு குற்றமாகும். இதன் அர்த்தம், குறித்த தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கப் போராடுகின்ற எவரும் தண்டிக்கப்படலாம் என்பதாகும்.

இராஜபக்ஷவின் இந்த தீர்மானத்திற்கான உடனடி நிமித்தம், கொவிட்-19 தடுப்பூசி கோரி 12,000 அரச கிராம அலுவலர்கள் மே 27 அன்று திட்டமிடிருந்த ஒரு தேசிய வேலைநிறுத்தத்தை தடை செய்வதை குறியாகக் கொண்டிருந்ததாக தோன்றுகின்றது. எவ்வாறாயினும், தொழிலாள வர்கத்தின் பரந்த பிரவினரால், இதே போன்ற கோரிக்கைகள் மீதான வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படுவதை முன்கூட்டியே தடுப்பதே அரசாங்கத்தின் இந்த கொடூரமான நடவடிக்கையின் நோக்கமாகும்.

கடந்த நவம்பர் மாதம், தமது வேலைத் தளங்களில் கொவிட்-19 ஆபத்து மற்றும் அரசாங்கத்தின் தனியார் மயமாக்கல் நடவடிக்கைகளை எதிர்த்து தொழிற்சங்க நடவக்கையை முன்னெடுக்கப் போவதாக அச்சுறுத்திய உடன், 15,000 துறைமுக அதிகார சபை ஊழியர்கள் மீது அத்தியவசிய சேவைகள் சட்டத்தை இராஜபக்ஷ திணித்தார். துறைமுகத் தொழிலாளர்கள் மீதான வேலைநிறுத்த தடையானது மூன்று மதாங்களுக்கு பிறகு தணிவடைவதற்கு அனுமதிக்கப்பட்ட போதிலும், அதுவும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் போராட்டத்தை தற்காலிகமாக சிதறடிக்கச் செய்த பின்னரே இடம்பெற்றது.

கொவிட்-19 தொற்று வேகமாக பரவுகின்றமை, உணவு மற்றும் ஏனைய அத்தியவசியப் பொருட்களின் கூர்மையான விலை உயர்வுகள், போதுமான சமூக நிவாரணங்கள் அல்லது சரியான பாதுகாப்புக்களை வழங்குவதில் அரசாங்கத்தின் அலட்சியம் போன்றவை, அண்மைய மாதங்களில் அஞ்சல், ரயில், பெருந்தோட்டம், கல்வி, சுகாதார மற்றும் மின்சாரத் தொழிலாளர்களும் பங்குபற்றிய வேலை நிறுத்தங்களுக்கும் போராட்டங்களுக்கும் தூண்டுகோளாக இருந்தது.

2020 மார்ச் 15 இல் இருந்து ஏப்ரல் 15 வரையில் இலங்கையில் உத்தியோகபூர்வ கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 94,949 ஆக இருந்த போதிலும், இந்த எண்ணிக்கைகள் அதன் பின்னர் 76,328 ஆக 80 சதவீதத்தால் அதிகரித்தது. இந்த புள்ளி விபரங்கள், குறைந்த பரிசோதனை எண்ணிக்கையின் காரணமாக உண்மைாயான சூழ்நிலைமை பற்றி ஆபத்தான குறைந்த மதிப்பீடு ஆகும்.

கொரேனா தொற்று எண்ணிக்கையின் சடுதியாக அதிகரிப்பானது தொற்று நோய் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற இராஜபக்ஷவின் கூற்றை தகர்தெறிந்துள்ளதோடு, இந்தியா மற்றும் உலகளாவிய கொரரோனா தொற்று பேரழிவை பீதியுடன் அவதானிக்கின்ற இலங்கைத் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.

இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள வைத்திய நிபுணர்கள், திவானது வரவிருக்கின்ற பேரிடரை முகங்கொடுப்பதாக பகிரங்கமாக எச்சரித்ததோடு, அனைத்து அத்தியவசியமற்ற சேவைகளை மூடவும் நாட்டின் மோசமான சுகாதார சேவைகளை விரவாக சீர்படுத்தவும் அழைப்பு விடுத்தனர்.

எந்தவொரு பொது முடக்கத்தையும் தீவிரமாக எதிர்கின்ற அரசாங்கமானது ஜூன் 7 வரையில் இரண்டு வராராங்களுக்கு பயணத் தடைகளை அமுல்படுத்துவதன் மூலம் பதிலிறுத்தது. ஜனாதிபதி இராஜபக்ஷ, பொருளாதாரம் குறிப்பாக ஏற்றுமதி துறை திறந்த நிலையில் இருக்க வேண்டும் என வலியுறத்தினார். கடந்த வாரம், அவர் அனுமதி வழங்கினால் ஒழிய, தொற்று நோய் தொடர்பான ஊடக அறிக்கைகளை சுகாதார மற்றும் ஏனைய அதிகாரிகள் வெளியிடுவதை தடைசெய்தார். அவை “மக்களை பயமுறுத்த” கூடும் என அவர் கூறினார்.

கொவிட்-19 நோயாளர்களுடன் வைத்தியசாலைகள் நிரம்பிவழிகின்ற நிலையில், உதவியாளர்கள், தாதிகள் மற்றும் வைத்தியர்கள் உள்ளடங்களாக சுகாதார தொழிலாளர்கள், சாத்தியமற்ற வேலைச் சுமை சம்பந்தமாக அதிகரித்த கோபத்திற்கு உள்ளானர்கள். பல சுகாதார தொழிலாளர்கள் இந்த உயர்-தொற்று வைரஸிற்கு பலியாகியுள்ளனர்.

நாட்டின் சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ளும் வெளியிலும் உள்ள ஆடைத் தொழற்சாலைகளில் நுாற்றுக் கணக்கான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் சில நிறுவனங்களில் 5,000 வரையான தொழிலாளர்கள் உள்ளனர். சமீப வராங்களில் கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாததால், தொழிலாளர்கள் மற்றும் அயல் குடியிருப்பாளர்களின் கோபமான கவலைகளுக்கு பிரதிபலிக்கும் வகையில், பல தொழிற்சாலைகள் மூடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டன.

உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கங்கள் போலவே பெரு நிறுவனங்களின் இலாப நலனைத் தளர்வின்றி பாதுகாக்கின்ற இராஜபக்ஷ அரசாங்கம், தொழிலாளர்கள் தொடர்ந்தும் பணியாற்ற வலியுறுத்துகின்றது.

ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிலாளர்களின் சம்பளத்தை 50 சதவிகிதத்தால் வெட்டவும், தமது நிறுவனங்கள் தொற்று நோயால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளை முகங்கொடுப்பின், அவர்களை வேலையிலிருந்து நீக்கவும் முடியும் என, மே 4 அன்று தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அறிவித்தார்.

எந்தவொரு எதிர்கட்சியோ தொழிற்சங்கங்களோ இலட்சக் கணக்கான அரசாங்க ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற எந்தவொரு நபரினதும் ஜனநாயக உரிமைகளை நேரடியாக பாதிக்கின்ற இராஜபக்ஷவின் கொடூரமான அறிவிப்பை எதிர்க்கவில்லை. இதே தொழிற்சங்கள் மற்றும் அரசியல் கட்சிகள், கடந்த நவம்பரில் துறைமுக ஊழியர்கள் மீது திணிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை எதிர்கவும் இல்லை.

இது தற்செயலானது அல்ல. இந்த அமைப்புகள் இராஜபக்ஷ அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைளுடன் எவ்வித அடிப்படை முரண்பாடுகளையும் கொணடவை அல்ல. இவை இலாப முறைமையைப் பாதுகாக்க அர்ப்பணித்துக்கொண்டவை ஆகும்.

இந்த மாத ஆரம்பத்தில் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியானது மோசமைடைந்து வருகின்ற தொற்றுநொய் சம்பந்தமாக ஒரு அனைத்துக் கட்சி மாநாட்டுக்கு அழைப்புவிடுத்தது. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), அரசாங்கம் எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து செயற்பட தயார் இல்லாவிட்டால், “ஒரு சபையை அடிப்படையாகக் கொண்ட பொறிமுறை” ஸ்தாபிக்கப்பட வேண்டும் என அறிவித்தது. இதேபோன்ற அறிவுறைகளையே தமிழ் தேசிய கூட்டமைப்பபும் வழங்கியது.

இராஜபக்ஷ அரசாங்கத்தைப் போலவே, இந்தக் எதிர்க் கட்சிகள் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் மத்தியில் அபிவருத்தியடைகின்ற வெகுஜன எதிரப்பு பற்றி கூர்மையாக விழிப்புடன் உள்ளன.

ஜனாதிபதி இராஜபக்ஷ நாட்டின் 25 மாவட்டங்களில் “சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்கு” இலங்கை ஆயுதப் படைகளை அணிதிரட்டுவதற்காக முன்னர் வெளியிட்ட அசாதாராண வர்த்தமானியை மீண்டும் புதுப்பித்துள்ளார். வீதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள இந்த இராணுவங்களும் பொலிசும், தொழிலாளர்களும் ஏழைகளும் போராட்டத்துக்கு வரும் போது அவர்களுக்கு எதிராக அணிதிரட்டப்படவுள்ளன.

தொழிலாள வர்க்கம் இந்த அபிவிருத்திகளை பாரதூரமானவையாக எடுத்துக்கொள்ள வேண்டும். எதிர் கட்சிகள் மற்றும் தொழிற்சங்சங்களின் உதவியுடன், இராஜபக்ஷ அரசாங்கம் ஒரு முழுமையான வர்க்கப் போருக்கான தனது தயார்படுத்தல்களை தீவிரமாக முன்னெடுக்கின்றது.

தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து, தனது தொழிற்துறை அரசியல் பலத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலமே, அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தனது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க முடியும். சோசலிச மற்றும் அனைத்துகவாத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தின் பாகமாக, ஒவ்வொரு வேலைத் தளங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவது அவசியமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே, இந்த முன்னோக்கிற்காக போராடுகின்ற அமைப்பாகும். இந்த வேலைத்திட்டத்துடன் உடன்படுகின்ற அனைவரையும், மே 30 அன்று “இந்தியாவில் கொவிட்-19 தொற்றுநோயும் ஒரு சோசலிச முன்னோக்குக்கான அவசியமும்” என்ற தலைப்பில் இடம்பெற்ற இணையவழி கூட்டத்தை செவிமடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading