பிரிட்டனின் டெல்டா வகை வைரஸ் பரவல் பள்ளி மாணவர்களிடையே விரைந்து அதிகரித்து வருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், தங்கள் மக்கள்தொகை ஊடாக கொரோனா வைரஸ் வெடித்து பரவ விட்டுவிட்டதை நியாயப்படுத்த முழுமையான தடுப்பூசி திட்டங்களுக்கு உடனடி வாய்ப்பு இல்லாமையை பயன்படுத்துகின்றன.

அத்துடன் நாடுகள் இப்போது வரை தடுப்பூசி வழங்காமல் ஏராளமானோரை ஆபத்தில் விட்டுள்ளன, மேலும் தடுப்பூசி தயாரிக்காத நாடுகளில் இந்த கொள்கை மில்லியன் கணக்கான குழந்தைகளை மட்டுப்படுத்த முடியாத சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் திட்டத்திற்கு அர்ப்பணிக்கும் ஒரு வலுவான பதிலாக உள்ளது.

மே 24, 2021, திங்கட்கிழமை, இலண்டனின் கிரீன்விச்சில் உள்ள புனித குடும்ப கத்தோலிக்க தொடக்கப்பள்ளியில் வரவேற்பு வகுப்பு ஆசிரியரான அலெக்ஸ் டிக்கர்சன் வகுப்பை வழிநடத்துகிறார். (AP Photo/Alastair Grant) [AP Photo/Alastair Grant]

கோவிட்-19 நோய்தொற்று இளைஞர்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதன் விளைவாக பிரேசில் போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்துள்ளனர். நேற்று கூட இந்தியாவில், கொரோனா வைரஸ் நோய்தொற்றுடன் கறுப்பு பூஞ்சை (Black Fungus) நோய்தொற்றும் ஏற்பட்டதால் மூன்று குழந்தைகளுக்கு கண்கள் அகற்றப்பட்டன. பிரிட்டனில் நோய்தொற்று ஏற்பட்ட குழந்தைகளில் சுமார் 8 சதவீதம் பேர் நீண்ட கோவிட் அறிகுறிகளை கொண்டுள்ளனர். குழந்தைகளுக்கு ஏற்படும் கோவிட்-19 இன் நீண்டகால விளைவுகள் பற்றி இன்னும் கூட அதிகம் தெரியவில்லை. மிகக் குறைந்த ஆய்வுகள் வைரஸ் தொற்றுக்கும் நீரிழிவு நிலைகளின் வளர்ச்சிக்கும் இடையேயான ஒரு தொடர்பை கண்டறிந்துள்ளன.

மேலும், மக்கள்தொகையின் எந்தவொரு குறிப்பிடத்தக்க பிரிவுக்குள்ளும் வைரஸை பரவ அனுமதிப்பதானது முழு தடுப்பூசி திட்டத்தையும் அச்சுறுத்தும் வகையில் புதிய திரிபு வகை வைரஸ்களை உருவாக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

பொது சுகாதார கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்படும்போது இளைஞர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் வேகமெடுத்து பரவுவது இங்கிலாந்தில் நிரூபனமாகி வருகிறது. அதிக பரவும் தன்மையுள்ள மற்றும் கொடிய டெல்டா திரிபு வகை வைரஸால் ஏற்பட்ட கோவிட்-19 நோய்தொற்றுக்கள், பிரிட்டனில் அதிவேகமாக அதிகரித்து வருகின்றன, வியாழக்கிழமை அங்கு 11,000 க்கும் மேற்பட்ட நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

பத்து நாட்களுக்கு முன்னர், சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் “சமீபத்திய நோய்தொற்றுக்களில் பெரும்பங்கு வீதம் குழந்தைகளில் ஏற்பட்டுள்ளதை” ஒப்புக் கொண்டார். பள்ளிகளில் நோய்தொற்றுக்கள் இப்போது வரை இன்னும் அதிகரித்துள்ளன. தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் சமீபத்திய தரவுகள் மேல்நிலைப் பள்ளிகளில் அதிக தொற்று விகிதங்கள் இருப்பதைக் காட்டுகின்றன. 7 முதல் 11 வயதிற்குட்பட்ட மாணவர்களில் எந்த வயதினரும் மிக உயர்ந்த விகிதத்தைக் கொண்டிருந்தனர், ஜூன் 2 நிலவரப்படி ஒவ்வொரு 210 பேரில் ஒருவருக்கு நோய்தொற்று இருந்தது.

இலண்டனின் இம்பீரியல் கல்லூரியின் வியாழக்கிழமை REACT-1 ஆய்வு, 5 முதல் 12 வயதினர், அத்துடன் 18 முதல் 24 வயது இளம் பருவத்தினர் மத்தியில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டியது.

புதிய திரிபு வகை குழந்தைகளுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பது மருத்துவமனை சேர்க்கைகளினால் நிருபனமாகும் என்பது தெளிவாகவுள்ளது. கைக்குழந்தைகள் முதல் ஒன்பது வயதுக்குட்பட்டவர்களில் 10 குழந்தைகள் மே கடைசி வாரத்தில் மட்டும் ஸ்காட்லாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வைரஸை முற்றிலும் ஒழிக்கும் வரை பள்ளிகளை உடனடியாக மூடுவதற்கும், தொலைநிலைக் கற்பித்தலுக்கு திரும்புவதற்கும் மாறாக, கல்வித்துறை (Department for Education-DfE), “மாணவர்கள் சுற்றித்திரியாமல்… அவரவர் இடத்தில் இருக்க வேண்டும்” என்று கூறி, “வாரத்திற்கு இரண்டு முறை பரிசோதித்துக் கொள்வதை தொடருமாறு ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஊக்கமளிக்க” பள்ளி தலைவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

மே 27 அன்று, DfE குழந்தைகள் மத்தியில் 4,000 கோவிட்-19 நோய்தொற்றுக்கள் இருப்பதாக தெரிவித்தது. இங்கிலாந்து அரசு பள்ளிகளில் மதிப்பிடப்பட்ட வராதவர்கள் விகிதம் 1.8 சதவீதமாக இருந்தது, இது கோடைக்கால கல்விக்காலம் தொடங்கியதிலிருந்து மிகவுயர்ந்த விகிதமாகும். சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் 60,000 முதல் 90,000 வரை அதிகரித்தது. இந்த வாரம், பொது சுகாதார இங்கிலாந்து தரவு (Public Health England-PHE), ஏப்ரல் 26 க்கு பின்னர் பள்ளிகளில் கண்டறியபட்ட 149 நோய்தொற்றுக்கள் டெல்டா திரிபு வகையுடன் தொடர்புடையவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது, இவற்றில் 136 நோய்தொற்றுக்கள் ஜூன் 6 க்கு முன்னைய நான்கு வாரங்களில் ஏற்பட்டிருந்தன.

அரை கல்விக்காலத்தின் ஆரம்பம் வரை, இங்கிலாந்தில் கோவிட்-19 காரணமாக பள்ளிக்கு வராத மாணவர்கள் விகிதம் 1 இலிருந்து 1.8 ஆக கிட்டத்தட்ட இருமடங்காகியது. அதாவது உத்தியோகபூர்வ தரவுகளின்படி, 140,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.

BMJ (பிரிட்டிஷ் மருத்துவ இதழ்) இன் ஐந்து நிபுணர்கள் எழுதிய ஜூன் 11 கட்டுரை, “குழந்தைகள், ஊழியர்கள், மற்றும் சமூகங்களை ஒரு புதிய மற்றும் அதிகம் பரவக்கூடிய திரிபு வகை வைரஸின் வேகமெடுத்த பரவலுக்குட்படுத்தி, நீண்ட கோவிட் பாதிப்பு அபாயத்திற்குள்” தள்ளுவதாக அரசாங்கத்தை கண்டித்தது. மேலும், பள்ளிகளுக்கு குழந்தைகள் வராததற்கு “முகக்கவசம் அணிவது, இடவசதி, மற்றும் காற்றோட்ட வசதி போன்ற அடிப்படை தணிப்பு நடவடிக்கைகள்” எடுக்கப்படாததுதான் காரணம் என்றும் குறிப்பிட்டது.

மே 17 அன்று அரசாங்கம் கிட்டத்தட்ட பொருளாதாரத்தை முழுமையாக மீண்டும் திறந்ததிலிருந்து தான் நோய்தொற்று இவ்வாறு விரைந்து பரவியது, அதேவேளை பள்ளிகளில் கோடைக்கால கல்விக்காலம் மீண்டும் தொடங்கப்பட்டது, பல பள்ளிகளில் முகக்கவச பயன்பாடு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அரசாங்க ஆலோசனைகளுக்கு எதிராக இருந்தது, ஏனென்றால் பள்ளிகளிலும் பிற கல்வி அமைப்புகளிலும் முகக்கவசம் அணிவது தளர்த்தப்படலாம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

அவசரநிலைகளுக்கான சுயாதீன விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் (Scientific Advisory Group for Emergencies-SAGE) தலைவரும், அரசாங்கத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞான ஆலோசகருமான, சர் டேவிட் கிங் (Sir David King), ஜூன் 7 அன்று Sky News ஊடகத்தில் பேசுகையில், பள்ளிகளில் கட்டாய முகக்கவச பயன்பாடு அமல்படுத்தப்பட வேண்டும் என்றார். அரசாங்கம் உண்மையில் “பள்ளி குழந்தைகள் மத்தியில் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை வேலைசெய்யும் என்று நம்புகிறதா? என்றும், அப்போதுதான் மாணவர்களிடையே நோய்தொற்று விரைந்து பரவி, அவர்கள் நோயெதிர்ப்பு சக்தியுடையவர்களாவார்கள் என்பதற்காக முகக்கவசம் அணிய வேண்டாமென அவர்கள் கூறுகிறார்களா?” என்றும் கிங் கேள்விகளை எழுப்பினார்.

பள்ளிகளில் டெல்டா திரிபு வகை பரவி வருவதை அறிந்தும் கூட, முகக்கவச பயன்பாட்டை தளர்த்த அரசாங்கம் முடிவு செய்தது. குடிமக்கள் மற்றும் தரவு உரிமைக்கான நிறுவனம் AWO இன் வக்கீல்கள் குழு, பள்ளிகளில் திரிபு வகை வைரஸின் பரவல் பற்றிய முக்கிய தரவுகள் வெளிவராமல் அரசாங்க அமைப்பு தடுத்து நிறுத்தியதாக குற்றம்சாட்டி PHE க்கு ஒரு சட்ட முன்-நடவடிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. இதுபற்றி ஒரு அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்படவிருந்தது.

கோவிட்-19 பள்ளிகளில் காட்டுத்தீ போல பரவி வருவதை மறைப்பது சாத்தியமற்றது என்பதே உண்மை.

கடந்த வாரம், கிரேட்டர் மான்செஸ்டரின் அனைத்து 10 பகுதிகளிலும் உள்ள 15 பள்ளிகள் டெல்டா திரிபு வகை நோய்தொற்றுக்கள் பரவியிருப்பதை உறுதிப்படுத்தின. திரிபு வகை பரவலின் காரணமாக மே மாதம் கடைசி வாரத்தில் போல்டன் பள்ளிகளில் கிட்டத்தட்ட மூன்று பேருக்கு ஒருவர் வீதம் பள்ளிக்கு வரவில்லை.

அருகிலுள்ள லிவர்பூலில், நோய்தொற்றுக்கள் இருப்பதை உறுதிப்படுத்திய பின்னர் புளூகோட் பள்ளி 180 மாணவர்களை வீட்டிற்கு அனுப்பியது.

31 நோய்தொற்றுக்கள் ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய பின்னர் Downend பள்ளி க்ளோசெஸ்டர்ஷையரில் (Gloucestershire) தொலைநிலைக் கற்பித்தலை மீண்டும் தொடங்க நேரிட்டது.

இலண்டன் பெருநகரமான ப்ரோம்லியில் (Bromley), சுகாதார தலைவர்கள் “அடுத்த அறிவிப்பு வரும் வரை” மாணவர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறித்தி ஈலிங் (Ealing), ஹில்லிங்டன் (Hillingdon), ப்ரெண்ட் (Brent), ஹாரோ (Harrow), மற்றும் ஹவுன்ஸ்லோ (Hounslow) பகுதிகளிலுள்ள பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினர். 58 உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்களுடன் ப்ரோம்லி புதிய திரிபு வகை பாதிப்பால் இலண்டனின் எட்டாவது மோசமான பாதிக்கப்பட்ட பெருநகரமாக உள்ளது.

25 பள்ளிகளில் திரிபு வகை நோய்தொற்று பரவியுள்ளதாக அறிவித்த பிரிஸ்டோல் (Bristol) நகரமும், முகக்கவச பயன்பாட்டை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

யோர்க்ஷைரில் (Yorkshire), வேக்ஃபீல்டில் (Wakefield) உள்ள Sandal Castel தொடக்கப்பள்ளியும், மற்றும் Outwood Academy Hemsworth பள்ளியும் இந்த கல்விக்கால தொடக்கத்திலேயே டெல்டா திரிபு வகை நோய்தொற்றுக்கள் இருப்பதாக கூறின. மேலும், நோய்தொற்றுக்கள் இருப்பதை கண்டறிந்த பின்னர் Tadcaster Grammer பள்ளி தொலைநிலைக் கற்பித்தலுக்கு திரும்பியது.

லங்காஷையரின் (Lancashire), ரோசண்டேலில் (Rossendale) உள்ள Haslingden உயர்நிலைப் பள்ளியில் அரை கல்விக்கால முன்னேற்பாடு காலத்தில் எந்த நோய்தொற்றும் இல்லை. திங்களன்று பள்ளி மீண்டும் தொடங்கியபோது, இரண்டு மாணவர்களுக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டது, பின்னர் வெள்ளியன்று 35 பேருக்கு இருந்தது, அதுவே வார இறுதியில் 70 பேராக அதிகரித்தது.

கேன்டர்பரி (Canterbury) இல் உள்ள University of Kent and King’s School இல் நோய்தொற்று பரவுவதை அறிந்த பின்னர், கென்ட் (Kent) இல் உள்ள Wilmington Grammar Schools for Girls and Boys பள்ளி மாணவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் மாகாண கவுன்சில் (Hertfordshire County Concil), 93,323 மக்கள்தொகை கொண்ட Three Rivers மாவட்டத்தில் கோவிட் எச்சரிக்கை விடுத்துள்ளது, ஏனென்றால் இங்கு 10 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே மே 27-29 தேதிகளில் ஒரு கொத்தாக கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்கள் கண்டறியப்பட்டன.

வாட்ஃபோர்டில் (Watford), Cherry Tree Primary பள்ளியில் நோய்தொற்றுக்கள் இருப்பது உறுதியான நிலையில் அரை கல்விக்காலத்திற்கு முன்னரே அது மூடப்பட்டது.

வேல்ஸில் (Wales), மெர்திர் டைட்ஃபில்லில் (Merthyr Tydfil) உள்ள Goitre ஆரம்பப் பள்ளியில் ஒரு பார்வையாளருக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட பின்னர் குழந்தைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கப்பட்டது. பள்ளிகளில் டெல்டா திரிபு வகை நோய்தொற்று இருப்பது டென்பிக்ஷையரில் (Denbighshire) பதிவாகியுள்ளது. நியூபோர்ட்டில் (Newport) உள்ள Basseleg பள்ளி 100 நோய்தொற்றுக்கள் இருப்பதை உறுதிசெய்ததன் பின்னர், 300 குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பியது.

ஸ்காட்லாந்தில், பெர்த் (Perth) மற்றும் கின்ரோஸ் (Kinross) இல் ஐந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதிசெய்ததன் பின்னர் 316 குழந்தைகள் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டனர். St John’s RC Academy மே 26 மற்றும் ஜூன் 1 தேதிகளுக்கு இடையில் 9 நோய்தொற்றுக்கள் ஏற்பட்டிருப்பதாக அறிவித்தது. மேலும் Balhousie தொடக்கப்பள்ளி, Inch View தொடக்கப்பள்ளி, Kinross உயர்நிலைப்பள்ளி மற்றும் Perth இலக்கணப் பள்ளி ஆகிய பள்ளிகளில் மாணவர்களிடையே நோய்தொற்றுக்கள் கண்டறியப்பட்டது.

நோய்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பள்ளிகளில் விஞ்ஞான ரீதியாக மதிப்பிழந்த தாமதப்படுத்தப்பட்ட பரிசோதனையை நம்புவது முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. தடுப்பூசி மற்றும் நோய்தடுப்புக்கான இங்கிலாந்தின் கூட்டுக் குழு (UK’s Joint Committee on Vaccination and Immunisation (JCVI) 18 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட பரிந்துரைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கட்டுக்கடங்காத பேரழிவுக்கு கல்வி தொழிற்சங்கங்களின் பதிலிறுப்பு என்பது, கட்டாய முகக்கவச பயன்பாட்டை மீண்டும் செயல்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பது மட்டுமே உள்ளது. கூட்டு NEU பொதுச் செயலாளர் மேரி பூஸ்டெட் (Mary Bousted), “முகக்கவசம் அணிவதை நாம் முன்கூட்டியே நிறுத்துகிறோம் என நாங்கள் அரசாங்கத்திற்கு அப்போதே அறிவுறுத்தினோம்” என்று நொண்டிச் சாக்கு கூறினார்.

தொற்றுநோய் காலத்தின் போது பள்ளிகளை மூடுவதற்கு அதன் 450,000 அங்கத்தினர்களை அணிதிரட்ட NEU உறுதிபட மறுத்துவிட்டது. ஏனைய கல்வி தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து கொண்டு, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்ப்பை இது நசுக்கியது, இவர்கள் மாணவர்கள் பாதுகாப்பாக வகுப்பறைகளுக்கு திரும்பும் காலம் வரும் வரை, அவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்கு பதிலாக தொலைநிலைக் கற்பித்தலை வழங்க வேண்டுமென விரும்பினர். பள்ளி தளங்களை மூடுவதை NEU மிகவும் எதிர்த்தது என்ற நிலையில், தொழிற்சங்கத்தின் கூட்டுத் தலைவர் கெவின் கோர்ட்னி (Kevin Courtney), கடந்த வாரம் “வெளிப்புற பயிற்றுவிப்புகளுக்கு சாத்தியமுள்ள இடங்களில் அதற்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும்” என்று ட்வீட் செய்தார்.

பள்ளித் தலைவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் NAHT Paul Whiteman, “சில பகுதிகளில் நோய்தொற்றுக்கள் தெளிவாக அதிகரித்து வந்தாலும்…” “கோவிட் காரணமாக பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை மொத்தத்தில் குறைவாகவே உள்ளது” என்று மெத்தனமாக குறிப்பிட்டார்.

தொழிற் கட்சியும் தொழிற்சங்கங்களும் பள்ளிகளையும் பொருளாதாரத்தையும் மீளத்திறக்க ஒப்புக்கொண்டதால், இந்த வைரஸ் விரைந்து பரவுவதற்கும் பிறழ்வு வடிவம் எடுப்பதற்கும் முடிந்தது. கிரேட்டர் மான்செஸ்டரின் தொழிற் கட்சி மேயர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை ஆதரித்தார். சமூக இடைவெளிக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் முடிவுக் கொண்டுவருவதில் நான்கு வார கால தாமதம் குறித்து திங்களன்று அறிவிக்கப்படுவதற்கு முன்னர் (முதலில் ஜூன் 21 க்கு திட்டமிடப்பட்டது), இவர், “நான் ஜூன் 21 க்கு முயற்சி செய்ய விரும்புகிறேன்… ஆனால் அது பாதுகாப்பாக செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்.

மிகவும் கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்தாமல், ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் வரை, அதிகமான நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் தொடரும்.

வைரஸை முற்றிலும் ஒழிக்கும் வரை அனைத்து கல்வி அமைப்புக்களையும் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் மூடுவது, அத்துடன் தொலைநிலைக் கற்பித்தலுக்கு வழிவகை செய்ய பல பில்லியன் பவுண்டுகளை வழங்குவது உட்பட, தொற்றுநோய்க்கு விஞ்ஞான அடிப்படையிலான ஒரு பகுத்தறிவார்ந்த பதிலுக்கான போராட்டத்தை முன்னெடுக்க கல்வியாளர்களின் சாமானிய பாதுகாப்புக் குழுவில் (Educator’s Rank-and-File Safety Committee) சேருமாறு கல்வியாளர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. அதாவது அத்தகைய போராட்டம், முதலாளித்துவம் இலாபத்திற்காக உயிர்களை கீழ்ப்படுத்துவதற்கு எதிராக அனைத்துத் துறைகள் சார்ந்த தொழிலாளர்களுடன் இணைந்து சோசலிசத்திற்கான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக நடத்தப்பட்டால் மட்டுமே அது வெற்றிபெற முடியும் என்கிறது.

Loading