இங்கிலாந்தின் யூரோ 2020: “சமூக நோயெதிர்ப்பு சக்தியை” ஊக்குவிப்பதற்கு “தேசிய ஐக்கியம்”

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒத்திவைக்கப்பட்ட 2020 ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிக்கான இங்கிலாந்து அரசாங்கத்தின் ஒழுங்கமைப்பு அரசியல் ரீதியாக திட்டமிடப்பட்ட பைத்தியக்காரத்தனமான காட்சிகளை உருவாக்கியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் டென்மார்க் இடையிலான யூரோ 2020 கால்பந்து அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னதாக, ஜூலை 7, 2021, புதன்கிழமை, லண்டனில் உள்ள வெம்ப்ளி அரங்கத்திற்கு வெளியே ரசிகர்கள் கூடுகிறார்கள்(AP Photo/Thanassis Stavrakis)

கூடுதலாக ஆயிரக்கணக்கான தொழிலாள வர்க்க உயிர்களை அச்சுறுத்தும் தொற்றுநோயின் பெரும் எழுச்சிக்கு மத்தியில், மக்கள் அதிக எண்ணிக்கையில் ஒன்றுகூடி 'தேசிய ஐக்கியம்' என்ற விசித்திரக் கட்டுக்கதைக்கு ஆதரவளிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

விளையாட்டின் மீதான பரவலான ஆர்வம், அதன் வழக்கமான ஆணவத்திலிருந்து விடுபட்ட ஒரு தேசிய அணி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக மார்கூஸ் ராஷ்போர்ட் போன்ற மதிப்புக்கொடுக்கப்பட்ட பொது நபர்கள் ஆகியவை ஊக்குவிக்கப்படல் மற்றும் தொற்றுநோய்களின் போது கட்டமைக்கப்பட்ட உணர்ச்சிகரமான பதட்டங்கள் ஆகியவை போட்டியில் இங்கிலாந்தின் வெற்றியை வாழ்க்கையை விட பெரியதாக காட்டுவதற்கு ஒன்றிணைக்கப்பட்டன. உக்ரேனுக்கு எதிரான காலிறுதிப் போட்டியைக் காண 20.9 மில்லியன் மக்கள் (இணையம் மூலமான ஒளிபரப்பு உட்பட 26.1 மில்லியன்) உள்ளடங்கலாக பார்வையாளர்களில் 81.8 சதவீதத்தை கொண்டிருந்தது. ITV இல் டென்மார்க்குக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை 27.6 மில்லியன் மக்கள் பார்த்தனர். இது ஒரு தனி ஒளிபரப்பு சேவையில் மிகப் பெரியளவிலான கால்பந்து பார்வையாளர்கள் கலந்துகொண்ட ஒன்றாக இருந்தது.

ஆனால் அரசியலும், தொற்றுநோயும் விருப்பம்மிக்க நம்பிக்கையினாலும் நல்ல எண்ணத்தினாலும் இடைநிறுத்தப்படுவதில்லை. நன்கு முன்னறியப்பட்ட திட்டத்தை தொடர்ந்து, யூரோ போட்டிகள் விஞ்ஞான எதிர்ப்பு பிரச்சாரம் மற்றும் தேசியவாத கட்டுக்கதைகளுக்கு ஒரு வாகனமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வீட்டில் இருந்து பார்த்த மில்லியன் கணக்கானவர்களை தவிர, 66,000 பேர் லண்டனில் உள்ள வெம்ப்ளி அரங்கில் நிரம்பியிருந்தனர். ஆனால் இது நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மதுபான அரங்கங்கள், நகர மையங்கள் மற்றும் வீடுகளில் கூடியவர்களை தவிர பகிரங்கமாக காணக்கூடிய ஒன்றாக மட்டுமே இருந்தது. ஒவ்வொரு செய்தித்தாளில் புகைப்படங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் பார்க்கும்போது ஒரு பெரிய நோய் பரவல் நிகழ்வு எப்படி இருக்கும் என்பதை காணக்கூடியதாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை இத்தாலிக்கு எதிராக வெம்பிளியில் நிகழவுள்ள இறுதிப் போட்டியில் இந்த நிகழ்வு கூட மிகவும் சிறியதொன்றாகிவிடும். இங்கிலாந்து ஒரு பெரிய கால்பந்து இறுதிப் போட்டியை எட்டிய கடைசி சந்தர்ப்பமான 1966 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்த்த 32.3 மில்லியன் மக்களை இது தாண்டக்கூடும் என்று ஒளிபரப்பாளர்கள் கணித்துள்ளனர். பிரதம மந்திரி பொரிஸ் ஜோன்சன், வெம்ப்ளியை அதன் முழு கொள்ளளவான 90,000 நபர்களுக்கு திறக்க மறுக்கவில்லை. ஒரு அரசாங்க ஆலோசகர் i செய்தித்தாளிடம், 'இது நாம் தவறவிடக்கூடாத ஒரு தருணமாக இருக்க முடியும் என்ற உணர்வு அதிகரித்து வருகிறது.' என்றார்.

இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே கோவிட்-19 இன் விரைவான பரவலை துரிதப்படுத்துகின்றன. மே 20 இருந்து ஜூன் 7 மற்றும் ஜூன் 24 இருந்து ஜூலை 5 ஆகிய காலங்களுக்கு இடையில், புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி எதிர்வினை ஆய்வு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. தொற்றுக்கள் இப்போது ஒவ்வொரு ஆறு நாட்களுக்கும் இரட்டிப்பாகி வருவதுடன், முதன்முறையாக ஆண்களிடையே கணிசமாக 30 சதவீதம் ஆக உள்ளது.

ஆய்வின் தலைவர் பேராசிரியர் ஸ்டீபன் ரெய்லி பின்வருமாறு விளக்கினார். “இந்த நேரத்தின் காரணமாக, கால்பந்து பார்ப்பதால் ஆண்கள் வழமையைவிட அதிகமான சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கலாம். யூரோ போட்டிகளின் தாக்கத்தைப் பற்றி நான் ஊகிக்க நேர்ந்தால், மக்கள் அரங்குகளின் உள்ளே அதிகமாக கலக்கும் வாய்ப்பு பற்றித்தான் முதலில் சிந்திப்பேன்.”

இம்பீரியல் ஆய்வின்படி, இந்த வேகத்தில் தொற்றுநோய்கள் தொடர்ந்து பெருகினால், ஜூலை 19 அன்று கடைசி பொது கட்டுப்பாடுகள் முடிவடைவதற்கு முன்பே நாடு ஒரு நாளைக்கு 100,000 தொற்றுக்களை மீறும்.

ஒரு வழிகாட்டியாக ஜூன் 18 இங்கிலாந்து-ஸ்காட்லாந்து போட்டியின் பின்னர் நோய்த்தொற்று விகிதங்களைப் பயன்படுத்தி, முன்னணி மாதிரி வடிவமைக்கும் பேராசிரியர் கார்ல் ஃபிரிஸ்டன் அரையிறுதியைச் சுற்றியுள்ள நிகழ்வுகளின் விளைவாக சுமார் 70,000 பேர் கோவிட்-19 உடன் தொடர்பு கொண்டிருப்பார்கள் என்று மதிப்பிட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் அவர்கள் கிட்டத்தட்ட 500,000 பேருக்கு தொற்றை ஏற்படுத்துவர் என்று அவர் கணித்துள்ளார். இறுதிப்போட்டியின் விளைவு இன்னும் பெரியதாக இருக்கும்.

முழு அரசியல் ஸ்தாபகமும் இந்த அணுகுமுறையை ஊக்குவிக்கிறது. குறிப்பாக கோவிட்-19 இலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் கோரமான மறுத்துள்ளபோதும், ஜோன்சன் ஞாயிற்றுக்கிழமை மதுபானசாலைகள் திறக்கும் நேரங்களை நீட்டித்து, திங்களன்று ஊழியர்கள் வருகையின்மை மற்றும் தாமதத்தை ஈடுசெய்வதற்கு நெகிழ்வானதாக இருக்குமாறு வணிகங்களுக்கு தெரிவித்தார். லண்டனின் தொழிற் கட்சி மேயர் சாதிக் கான், போதிய பாதுகாப்பற்ற முதல் தடுப்பூசி பெற்ற அல்லது அதை பெற முன்பதிவு செய்தவர்களுக்கு இறுதிப் போட்டிக்கான அனுமதி சீட்டுக்கான பரிசு இழுப்பு திட்டத்தை உருவாக்கியுள்ளார்.

ஒரு களியாட்ட விழாவின் சூழலை ஊடகங்கள் உற்சாகபடுத்துகின்றதுடன், விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகள் வேறொரு கிரகத்திலிருந்து வருவது போல் தெரிவிக்கப்படுகின்றன. ஜூன் 29 அன்று, கார்டியனின் ஜேம்ஸ் கிரேக் “கூட்டு மகிழ்ச்சியின் தருணங்களை” புகழ்ந்து பின்வருமாறு எழுதினார். “ஆம், நாங்கள் எங்கள் இழப்புகளுக்கு இரங்க வேண்டும், ஆனால் நாங்கள் தெருக்களிலும் கொண்டாட்டங்களை வைக்க வேண்டும். இங்கிலாந்து-டென்மார்க் விளையாட்டின் இறுதி நிமிடங்களில், ITV வர்ணனையாளர் சாம் மேட்டர்ஃபேஸ் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களிடம், “நான் உங்களுக்குச் சொல்கிறேன். இது நடைபெற்றால் இன்றிரவு நீங்கள் விரும்பியதைச் செய்யலாம். உங்களுக்கு ஒரு பயங்கரமான கடந்த 16 மாதங்கள் இருந்தன… நீங்கள் இதை செய்வதற்கு தகுதியானவர், இங்கிலாந்து இதற்கு தகுதியானது”.

அரசியல் வட்டாரங்களில் உற்சாகத்தை உண்டாக்குவது கால்பந்து மீதான காதல் என்று யாரும் நம்பக்கூடாது. இங்கு நிறைய பணம் பந்தயத்தில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு சில மணிநேரங்களில் மதுபானசாலைகளில் செலவிடப்படும் பல்லாயிரக்கணக்கான மில்லியன்களைத் தவிர, “இறுதிப் போட்டியை வெல்வது, மீண்டும் திறப்பது, கட்டுப்பாடுகளை தளர்த்துவது போன்ற பல விஷயங்களுடன் கூடுதல் செலவுக்கு பல பில்லியன்கள் மதிப்புள்ள பவுண்டுகளைத் திறக்க உதவும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று BBC உடன் பேசிய Panmure Gordon இன் தலைமை பொருளாதார நிபுணர் சைமன் பிரெஞ்ச் கூறுகிறார்.

அடிப்படையில், தொற்றுநோய் நெருக்கடி முடிந்துவிட்டதாகவும், பெருவணிகத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு பொது சுகாதார கட்டுப்பாடுகளையும் இரத்து செய்ய முடியும் என்றும் வலியுறுத்துவதற்கான பிரச்சாரத்தின் முக்கிய புள்ளியாக யூரோ போட்டிகள் உள்ளன.

கோவிட்-19 இன் உண்மையான அச்சுறுத்தல் கடந்துவிட்டது என்ற அனைத்து அரசியல் பிரிவுகளின் இடைவிடாத வற்புறுத்தலால் பெரிய கூட்டங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. மேலும் அவை வெற்றிகரமாக 'வைரஸுடன் வாழக் கற்றுக்கொள்வது' என்பதற்கு மேலும் சான்றாக சேவை செய்வதற்கு அமைகின்றன.

அவை சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும் ஒரு திட்டத்தைத் முன்தள்ளி, பரந்த விஞ்ஞான நனவையும் சமூகப் பொறுப்பையும் பலவீனப்படுத்தும் ஒரு இழிந்த முயற்சியாகும். கடந்த பதினைந்து நாட்களில் இங்கிலாந்தில் தடுப்பூசி பெறுவது கிட்டத்தட்ட பாதியாகிவிட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பொது சுகாதார அதிகாரிகள் 'இயல்பு நிலைக்குத் திரும்புதல்' கட்டுகதையை குற்றம் சாட்டினர்.

இதுவரை 150,000 உயிர்களின் இழப்பில், தொழிலாள வர்க்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான மோதலை அசாதாரணமான பதட்டத்திற்கு கொண்டு வந்த இந்த படுகொலை நிகழ்ச்சி நிரலுக்கான அரசியல் சாரக்கட்டாக இருப்பது, அனைத்து சமூக மோதல்களும் தீமைகளும் ஒரு தேசிய ஐக்கியத்தினால் தீர்க்கப்பட்டுவிட்டது என்ற கட்டுக்கதை ஆகும். கால்பந்து ஆடுகளத்தினை இங்கிலாந்து தனக்கு சாதகமாக சுரண்டுவது, அனைத்து சவால்களையும் ஒரு சாத்தியமான ஒற்றுமையான தேசத்தினால் சமாளிக்க முடியும் என்ற வாக்குறுதியாக உயர்த்திக்காட்டப்படுகின்றது.

இது வழக்கமான நச்சுத்தன்மையுள்ள தீவிர தேசியவாதத்திற்கு வழிவகுக்கின்றது. இங்கிலாந்து ரசிகர்கள் இரண்டாம் உலகப் போரை நினைவூட்டும் 'பத்து ஜேர்மன் குண்டுவீச்சு' பற்றி பாடவேண்டாம் என்றும் டேனிஷ் தேசிய கீதத்தை பாடும்போது கூக்குரலிடவேண்டாம் என்று கூறப்பட்டதுடன், ஒரு மோசமானவரால் இங்கிலாந்து பெனால்டியின் (penalty) போது டேனிஷ் பந்துகாவலர் ஷ்மைசெல் காஸ்பரின் கண்களுக்கு ஒரு லேசர் ஒளிப்பாய்ச்சுவதில் எடுத்துக்காட்டப்பட்டது. டேனிஷ் தோல்விக்குப் பின்னர் Daily Mail “டேனிஷ்காரர்கள் ஆண்மையிழக்க செய்யப்பட்டனர்” என்று வெற்றிகளிப்பிட்டது.

எவ்வாறாயினும், 'இடது' தலைமையிலான இந்த போட்டி ஆதிக்கம் செலுத்தும் கருப்பொருள் 'முற்போக்கான தேசபக்தி', 'தாராளமானது மற்றும் தேசிய ஐக்கியத்தை மேம்படுத்துகிறது' என்று New Statesman ஆசிரியர் ஜேசன் கோவ்லி எழுதுகிறார். ஜோன்சன் அரசாங்கத்தின் தீவிர தேசியவாத மற்றும் இனவெறி வார்த்தையாடல்களுக்கு மாற்றாக நவீன மதிப்புகள் மற்றும் 'சமூக மனசாட்சி' ஆகியவற்றுடன் இணைந்த தேசிய பெருமையின் மாதிரியாக இங்கிலாந்து அணி கூறப்படுகிறது. தொழிற் கட்சியைச் சுற்றியுள்ள புள்ளிவிவரங்கள், LabourList இன் எழுத்தாளர் ஜேக் ரிச்சர்ட்ஸின் வார்த்தைகளில், 'தேசபக்தி மற்றும் தேசிய அடையாளத்தைப் பற்றிய தொழிற் கட்சியின் கதையை' சொல்ல இந்த வாய்ப்பைப் பயன்படுத்துமாறு கட்சியை வலியுறுத்தியுள்ளன.

இந்த முயற்சிகளுக்கு ஒரு தொகை அபத்தமான தன்மை இருக்கிறது. இங்கிலாந்து கால்பந்து அணி “உடைந்த, துருவமுனைக்கப்பட்ட தேசத்தை ஒன்றிணைக்கும் வலிமையான சாதனையை அடைந்துள்ளது” என்று New Statesman இல் மார்ட்டின் பிளெட்சர் கூறுகிறார். ஒரு போட்டியை உருவாக்கி, அதில் “களத்திலும் மற்றும் வெளியேயும் ஒரு சிறந்த இங்கிலாந்துக்கு வழிகாட்டிய ஒரு வீரர் குழுவால் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிகிறது” என Guardian இன் டேவிட் கான் கருத்து தெரிவித்தார்.

இங்கிலாந்தின் நட்பான மற்றும் பிரபலமான மேலாளர் கரேத் சவுத்கேட் ஒரு அரசியல் இலட்சிய மனிதரின் நிலைக்கு உயர்த்தப்பட்டார். ஆங்கில சமுதாயத்தின் தலைவிதி அவருடைய தோள்களில் உள்ளது, மற்றும் போட்டியின் தொடக்கத்தில் அவரால் எழுதப்பட்ட “இங்கிலாந்துக்கு எழுதிய கடிதம்” உலக இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாக கூறப்படுகின்றது. ஜோன்சன் மற்றும் தொழிற் கட்சி தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் ஒருவருக்கொருவர் 'பின்பற்ற', 'கற்றுக்கொள்ள' மற்றும் பொதுவாக 'சவுத்கேட்டை விட மேலானவர்களாக' இருக்குமாறு கட்டுரையாளர்கள் மற்றும் கருத்துக் கணிப்பாளர்களால் அழைப்புவிடப்பட்டுள்ளனர்.

பிரதம மந்திரி பொரிஸ் ஜோன்சன் உக்ரேனுக்கு எதிரான இங்கிலாந்து காலாண்டு இறுதி ஆட்டத்திற்கு முன்னால் 10 டவுனிங் தெருவுக்கு வெளியே ஒரு மாபெரும் St George's கொடியுடன் ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். ஜூலை 1, 2021 (Picture by Simon Dawson/No 10 Downing Street/Flickr)

மூச்சுத்திணறவைக்கும் வார்த்தையாடல்களுக்கு பின்னால் ஒரு தெளிவான மற்றும் பிற்போக்குத்தனமான அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளது. இந்த வர்ணனையாளர்கள் பிரித்தானிய அரசியலில் வலதிற்கு ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். இது முன்னாள் தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் இப்போது ஆங்கில அடையாள மற்றும் அரசியல் மையத்தின் இயக்குநருமான ஜான் டென்ஹாமின் அவர் ஏளனமாக “ஒரு 90 நிமிட தேசம்” என்றிருப்பதற்கு அப்பால் செல்லுமாறு கேட்டுக்கொண்டதில் எடுத்துக்காட்டப்படுகின்றது.

எவ்வளவு சுவாரஸ்யமாக முன்வைக்கப்பட்டாலும், இந்த மறுபெயரிடப்பட்ட தேசியவாதத்தின் செயல்பாடுகள் அவை எப்போதுமே இருந்ததைப் போலவே இருக்கும். ஜோன்சனைப் போலவே, 'முற்போக்கான தேசபக்தர்களும்' யூரோ போட்டிகளை பயன்படுத்தி 'நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்' என்ற அபாயகரமான அரசியல் பொய்யை ஊக்குவிக்க நம்புகின்றனர். இது தொழிற் கட்சி மற்றும் டோரிகளால் ஒரு வருடத்திற்கும் மேலாக இன்றுவரை தொடர்கின்ற பாரிய தொற்று மற்றும் இறப்பு, ஊதிய வெட்டுக்கள் மற்றும் வேலை இழப்புகள் ஆகிய கொள்கைகளை இழிவான முறையில் மூடிமறைத்தலாகும்.

Loading