கோவிட்-19 பெருந்தொற்று நோய் அதிகரிக்கையில் ஐரோப்பிய அரசுகள் சமூக இடைவெளியை அகற்றுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டெல்டா திரிபுவகையால் உந்தப்பட்ட கோவிட்-19 பெருந்தொற்று நோய் ஐரோப்பாவில் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய அரசாங்கங்கள் சமூக இடைவெளி நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதால், ஐரோப்பா முழுவதும் புதிய கோவிட்-19 தொற்றுகள் கடந்த வாரத்தில் 43 சதவீதம் உயர்ந்து 5,48,000 ஆக அதிகரித்தது. 80 சதவீதத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் பிரிட்டன் (190,294 தொற்றுக்கள்), ரஷ்யா (168,035) மற்றும் ஸ்பெயின் (89,036) ஆகியவைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன, அங்கு தொற்றுக்கள் 148 சதவீதமாக உயர்ந்துள்ளன.

எக்மோ (Extracorporeal membrane oxygenation) கீழ் கோவிட்-19 நோயாளி, பாரிஸிலுள்ள பிசாட் மருத்துவமனையில், AP-HP, வியாழக்கிழமை, ஏப்ரல் 22, 2021 இல் சுயநினைவின்றி இருக்கிறார். (AP Photo/Lewis Joly)

இருப்பினும், சிறிய தொற்று அளவுகளைக் கொண்ட பல நாடுகளில், தடுப்பூசி பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்தாலும், கோவிட்-19 நோயாளிகளின் பேரழிவுகரமான அதிகரிப்பு அபாயத்தை சுட்டிக்காட்டுகின்ற அதே வேளையில், நோய்த் தொற்றுகள் இன்னும் வேகமாக பரவி வருகின்றன. லுக்சம்பேர்க்கில் வாராந்திர கோவிட்-19 தொற்று ஏற்பட்ட நோயாளிகள் நான்கு மடங்காக 961 ஆகவும், நெதர்லாந்து (11,480) மற்றும் கிரீஸ் (8,504) ஆகிய இடங்களில் மும்மடங்காகவும், டென்மார்க்கில் (3,208) இரட்டிப்பாகவும் உள்ளன. அவை பிரான்சில் (19,364) மற்றும் போர்த்துக்கல் (16,469) ஆகியவற்றில் சுமார் 50 சதவீதம் உயர்ந்தன.

ஜூலை 1 திகதியன்று, ஐரோப்பாவிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூக் கூறினார்: 'கடந்த வாரம், அதிகரித்த சமூக ஒன்றுகலப்பு, பயணம், கூட்டங்கள் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை தளர்த்துதல் ஆகியவற்றால் உந்தப்பட்டு நோயாளிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் உயர்ந்தது.' ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 63 சதவிகிதத்தினர் இன்னும் அதன் முதல் தடுப்பூசி டோஸைப் பெறாத நிலைமைகளின் கீழ், ஆகஸ்ட் மாதத்திற்குள் ஐரோப்பாவில் டெல்டா திரிபுவகை ஆதிக்கம் செலுத்தும் என்றும் அவர் எச்சரித்தார். வயதானவர்களில் பாதிப்பேர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களில் 40 சதவிகிதத்தினர் தடுப்பூசி போடப்படவில்லை. இந்த அடிப்படையில், 'உலக சுகாதார அமைப்பு ஐரோப்பிய பிராந்தியத்தில் ஒரு புதிய அலை இருக்கும்' என்று அவர் எச்சரித்தார்.

ஐரோப்பா முழுவதும் வெடிக்கும் பெருந்தொற்று நோயின் ஒரு புதிய அலை பற்றிய க்ளூக்கின் கணிப்புகளும் எச்சரிக்கைகளும் உணரப்பட்டு வருகின்றன. ஐரோப்பாவில் கோவிட்-19 நோயால் ஏற்கனவே 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர், ஆனால் ஐரோப்பிய அரசாங்கங்கள் மனித உயிர்களை துணிச்சலாக அலட்சியம் செய்து, மில்லியன் கணக்கான தொற்றுக்களின் புதிய எழுச்சிக்கு வழிவகுக்க ஆரம்பிக்கும் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு முன்னேறி வருகின்றன.

வணிக இலாபங்களை கீழறுக்கும் சமூக இடைவெளி நடைமுறைகளை அகற்றுவதன் மூலம், கடந்த ஆண்டு வங்கி பிணையெடுப்புக்களானது ஐரோப்பாவின் பில்லியனர்களின் கூட்டு செல்வத்தை 1 டிரில்லியன் யூரோக்களாக அதிகரித்ததை தொற்றுநோய் கண்ட பின்னர், சமூகச் செல்வத்தை சமூகத்தின் உச்சியிலிருப்பவர்களுக்கு கொண்டு செல்வதை தீவிரப்படுத்த அவர்கள் நம்புகின்றனர்.

ஐரோப்பா முழுவதும் வெளிப்பட்டுவரும் போக்குக்கு பிரிட்டன் தலைமை வகிக்கிறது. ஜூலை 1ம் தேதி பிரான்ஸ் வணிகங்களுக்கான சமூக இடைவெளி நடைமுறைகளை இரத்து செய்த பின்னர், பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் ஜூலை 19க்குள் முகவசத் தேவைகள் மற்றும் சமூக இடைவெளி நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். தொற்றுநோய் நிபுணர் பேராசிரியர் நீல் பேர்குசன் பிரிட்டன் கோடை இறுதிக்குள் 150,000 முதல் 200,000 வரை தொற்றுக்களைக் பார்க்க முடியும் என்று எச்சரித்துள்ளார், ஆனால் ஜோன்சன் அப்பட்டமாக பொருளாதாரம் மற்றும் பெருநிறுவன இலாபங்கள் உயிர்களை விட முன்னுரிமை பெற வேண்டும் என்று கோரினார்.

'அதிகரித்து வரும் மருத்துவமனை அனுமதிகளை நாங்கள் காண்கிறோம், துரதிர்ஷ்டவசமாக, கோவிட் நோயால் அதிக இறப்புகளுக்கு நம்மை சமரசம் செய்து கொள்ள வேண்டும்,' என்று ஜோன்சன் கூறினார்: 'மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களில் அவற்றின் தாக்கத்துடன், நோயின் அபாயங்களை நாம் சமநிலைப்படுத்த வேண்டும் மற்றும் சட்ட கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்.'

கடந்த மாதம் இங்கிலாந்து பொது சுகாதார சேவையிலிருந்த ஒரு ஆய்வு தான் பேரழிவின் நோக்கம் குறித்த அறிகுறியாகும். தடுப்பூசிகள் இறப்பு விகிதத்தை 0.13 சதவீதமாகக் குறைப்பதால், பிரிட்டனில் இதுவரை 117 பேர் டெல்டா திரிபு வகையால் இறந்துள்ளனர், இதில் 50 பேர் இரட்டை தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். எவ்வாறெனினும், இந்த மிகக் குறைந்த இறப்பு விகிதம் வைரஸின் சுற்றோட்டத்தில் பரந்த அதிகரிப்பு இருந்தபோதிலும் கூட, பேர்குசனின் கணிப்புகள் உணரப்பட்டால் கோடையின் இறுதிக்குள் பிரிட்டனில் நாளொன்றுக்கு 200 முதல் 250 இறப்புக்கள் ஏற்படும்.

தடுப்பூசி விகிதங்கள் கணிசமாக குறைவாக இருக்கும் ஐரோப்பிய கண்டத்தில், இது இன்னும் அதிக அளவு மரணத்திற்கு வழிவகுக்கும்.

நேற்று, ரஷ்ய அதிகாரிகள் கோவிட்-19 நோயால் ஒவ்வொரு நாளும் 700 க்கும் மேற்பட்டவர்கள் இறப்பதால், மேலும் சமூக இடைவெளி நடவடிக்கைகளுக்கான அழைப்புகளை நிராகரித்தனர். 146 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடான ரஷ்யா, கோவிட்-19 இறப்புக்களுக்கு ஐரோப்பாவை வழிநடத்துகிறது, இது பிரிட்டன் (128,336) மற்றும் இத்தாலியை (127,731) விட சற்று முன்னால் ரஷ்யாவில் 140,775 இறப்புகளாகும். ஆயினும் கூட ரஷ்ய மனித நல்வாழ்வு ஆணையர் அன்னா போபோவா மென்மையாக அறிவித்தார், 'இப்போது எந்த அச்சுறுத்தலும் ஆபத்தும் இல்லை, அது எங்களை பொதுமுடக்கம் செய்வற்கு அல்லது கடுமையான கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த நிர்ப்பந்திப்பதற்கான தேவை, இன்று அதற்கு இல்லை.'

ஸ்பெயினில், நிகழ்வு விகிதம் 100,000 மக்களுக்கு 200 க்கும் அதிகமாகவும், 30 வயதிற்குட்பட்டவர்களில் 600 க்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளது. இனப்பெருக்க விகிதம் (R0), ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரும் பின்னர் தொற்றுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை, இப்போது 3.3 ஆக உள்ளது, இது பெருந்தொற்று நோய் தொடங்கியதில் இருந்து மிக அதிகமாகும். பள்ளி விடுமுறை மற்றும் இரவு விடுதிகளில் அதிகூடிய பரவல் நிகழ்வுகள் ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளன. நிகழ்வு விகிதம் 380 இருக்கும் கட்டலோனியா பிராந்தியம், இந்த வார இறுதியில் தொடங்கி 15 நாட்களுக்கு டிஸ்கோ அரங்குகளை மூடுவதாக செவ்வாயன்று அறிவித்தது.

இளைஞர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், ஜூலை தொடக்கத்தில், 30 வயதிற்குட்பட்ட குறைந்தபட்சம் 600 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும், ஸ்பெயினில் கோவிட்-19 காரணமாக 80 பேர் இறந்ததாகவும் எல் பைஸ் பத்திரிகை தெரிவித்தது.

இது ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி (PSOE) -பொடேமோஸ் அரசாங்கத்தின் அதிகாரிகளால் பரப்பப்பட்ட தவறான உறுதிமொழிகளின் உயிர்களுக்கான கசப்பான இழப்பை அம்பலப்படுத்துகிறது. கடந்த மாதம், சுகாதார எச்சரிக்கைகள் மற்றும் அவசரநிலைகளின் ஒருங்கிணைப்பு மையத்தின் (CCAES) தலைவர் பெர்னாண்டோ சிமோன் கூறினார்: 'குறைந்தபட்சம் 70 சதவீத நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் வரை விஷயங்கள் நடக்கலாம் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் அவை கடந்த காலத்தைப் போல் இருக்க முடியாது என்பதையும் நாங்கள் அறிவோம். ... குளிர்காலத்தில் என்ன நடந்தது என்பது போல் எந்த வகையிலும் அவைகள் இருக்க முடியாது, அது பிரிட்டனிலும் உண்மையாகும்.'

முககவசங்ககளின் பயன்பாட்டை அகற்றுவதை ஆதரிப்பதில் தான் நம்பிக்கை கொண்டிருப்பதாக சிமோன் மேலும் கூறினார்: 'அது எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று நான் நம்புகிறேன்.'

நெதர்லாந்தில் கோவிட்-19 வெடித்து பரவும் போது, சுகாதார அமைச்சர் ஃபெர்ட் கிராப்பர்ஹாஸ் அரசாங்கம் 'விதிகளை கடுமையாக்குவது நியாயமானால் வரும் நாட்களில்' பார்க்கலாம் என்று மட்டுமே கூறினார். டச்சு பொது சுகாதார நிறுவனமான RIVM, ஐந்தில் ஒரு புதிய தொற்றுக்களை ஒரு கஃபே, பார் அல்லது கிளப்பில் காணலாம் என்றும், 30 வயதிற்குட்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகள் உள்ளனர் என்றும் கூறியுள்ளது.

ஜூன் 28 அன்று என்ஷேடே (Enschede) என்ற நகரத்தில் 'கோவிட்-இன்மை' என்று அழைக்கப்படும் ஒரு விருந்து ஒரு அதி கூடிய பரவல் தொற்று நிகழ்வாக மாறியது, கலந்து கொண்ட 800 பேரில் 180 பேர் தொற்று உள்ளதாக பரிசோதிப்பில் அடையாளம் காணப்பட்டனர். விருந்துக்கு வருபவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதை அல்லது வைரஸ் தொற்று இல்லை என்பதை பரிசோதித்ததைக் காட்டும் 'கொரோனா அனுமதி சீட்டை' விருந்திற்கு அனுமதிக்க தேவைப்பட்டது. இருப்பினும், ஒருமுறை அனுமதிக்கப்பட்டால், அவர்கள் முககவசங்களை அணிய வேண்டியதில்லை. பலர் தங்கள் கொரோனா அனுமதி சீட்டைப் பொய்யாக்கி, அவர்கள் பாதுகாப்பாக விருந்தில் கலந்து கொள்ளலாம் என்று சான்றளிக்கும் ஒற்றை QR குறியீட்டைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பிரான்சில், அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டால் புதனன்று ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் நடத்திய தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் தெரிவித்தார். கோவிட்-19 ஆனது 20-29 வயது அடைப்புக்குறியை மிகவும் அதிகமாக பாதிக்கிறது என்றும், பிரான்சின் 12 பிராந்தியங்களில் 11 பிராந்தியங்களில் முடுக்கிவிடப்படுகிறது என்றும், பாரிஸ் மற்றும் மார்சை பிராந்தியங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். பாரிஸ் நகர எல்லைக்குள், நிகழ்வு விகிதம் மீண்டும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ 'எச்சரிக்கை வரம்பு' 100,000 க்கு 50 க்கு மேல் உயர்ந்துள்ளது.

ஆயினும்கூட, அட்டால் புதிய நடவடிக்கைகளை அறிவிக்கவில்லை, குடிமக்களை தடுப்பூசி போடுமாறு மட்டுமே கேட்டுக்கொண்டார். பிரிட்டனில் 51 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், பிரெஞ்சு மக்களில் 34 சதவீதத்தினர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.

பிரான்சில் வெளிநாட்டு வருகையாளர்களுக்கு உடனடியாக நடைமுறையாக தொடங்கி, மற்றும் இலையுதிர் காலத்தில் பிரஞ்சு குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனைகளுக்கு பயனர்கள் பணம் செலுத்த வேண்டும் என்றும் மக்ரோன் விரும்புகிறார். இது 'ஆறுதல்' பரிசோதனையை அகற்றுவதையும், அனைவருக்கும் தடுப்பூசி போட ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியிருந்தாலும், பரிசோதனைகளின் மொத்த செலவு இந்த ஆண்டு பல பில்லியன் யூரோக்களாக உயரக்கூடும் என்று அரசாங்கம் கவலை கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஒரு தடம் மற்றும் தடமறிதல் கொள்கை செயல்படுத்தப்படும் முக்கிய முறைகளில் ஒன்றை அரசாங்கம் கைவிட்டு வருகிறது.

இந்த அறிவிப்புகளாது தொழிலாளர்கள் பெருந்தொற்று நோயை நிறுத்த அரசாங்கங்களை நம்ப முடியாது என்பதைக் காட்டுகின்றன. பணியிடங்கள் மற்றும் பள்ளிகளில் சுயாதீனமான பாதுகாப்பு குழுக்களை கட்டமைத்து, வைரஸ் பரவுவதை நிறுத்துவதற்கு பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணித்து பின்பற்றுவது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்னோக்கி செல்லும் வழியாகும். ஐரோப்பாவிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான வலிமையை அணிதிரட்டி, ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் வரவிருக்கும் எழுச்சி மேலும் மில்லியன் கணக்கான உயிர்களை பலிகொள்ளவிடாமல் தடுக்க ஒரு பகுத்தறிவார்ந்த, விஞ்ஞான ரீதியாக வழிநடத்தப்பட்ட சுகாதாரக் கொள்கையை திணிப்பதே முக்கியமான கேள்வியாகும்.

Loading