நிறுவனத்தையும், Unite தொழிற்சங்கத்தையும் பற்றி JDE தொழிலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பத்து உண்மைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

Unite பான்பரி JDE ஆலையில் JDE நிர்வாகம் சார்பாக ஒரு மாற்றீட்டை தொழிலாளர்களின் முன்வைக்கிறது. அதாவது ஊதியங்களை குறைக்கவும், நிர்வாகத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள அது நிறுவனத்துடன் அது செய்துள்ள அழுகிய ஒப்பந்தத்தை ஒத்துக்கொள்ளுங்கள் அல்லது செப்டம்பரில் பணிநீக்கத்தை எதிர்கொள்ளவேண்டும் என்று கோருகின்றது.

உலக சோசலிச வலைத் தளம் தாய் நிறுவனமான JDE Peet’s மற்றும் அதன் பிரிட்டிஷ் துணை நிறுவனத்தின் மிக சமீபத்திய நிதி அறிக்கைகள் மற்றும் கணக்குகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களை முன்வைக்கிறது. இதன் மூலம் தொழிலாளர்கள் நிறுவனம் மற்றும் அதன் நிதி நிலைமை இரண்டையும் புரிந்து கொள்ள முடியும்.

1. JDE Peet’s மற்றும் தொற்றுநோய்

JDE இன் பான்பரி ஆலை, நெதர்லாந்தை தளமாகக் கொண்ட மாபெரும் பன்னாட்டு JDE Peet’s இன் ஒரு பகுதியாகும். இது “வருமானத்தில் உலகின் மிகப்பெரிய தனித்த காப்பி மற்றும் தேயிலை தயாரிப்பு குழு” என்று கூறுகிறது. Nestle க்கு அடுத்து இரண்டாவது பெரிய காப்பி பதப்படுத்தும் நிறுவனமானது, “டிசம்பர் 31, 2019 உடன் முடிவடைந்த நிதியாண்டில் சுமார் 130 பில்லியன் குவளை காப்பி மற்றும் தேயிலை ஆகியவற்றை 100 க்கும் மேற்பட்ட அபிவிருத்தியடைந்த மற்றும் வளர்ந்துவரும் நாடுகளில் விற்றுள்ளது.”

அதன் சின்னங்கள், 'எங்கள் உள்ளூரில் விலைமதிப்பற்றவை ... அவற்றின் உள்ளூர் சந்தையில் சின்னங்களானவையும் உள்ளடங்குகின்றன' என்று விவரிக்கிறது. இதில் Jacobs, Senseo, Peet’s Coffee, Ti Ora, Kenco, Tassimo, Moccona, L'OR, Douwe Egberts மற்றும் ஹார்னிமானின் தேயிலை உள்ளிட்ட பல பிரபலமான தேநீர் ஆகியவை அடங்கும்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள JDE Peet’s தொழிற்சாலை (credit: screenshot, JD Peet’s Annual Report 2020)

தொற்றுநோய் காலத்தின்போது அலுவலகங்கள், தங்குவிடுதிகள், மதுபானசாலைகள், உணவகங்கள் மற்றும் நிறுவனத்தின் பல காப்பி கடைகளை மூடுவதற்கு வழிவகுத்த பூட்டுதல்கள் இருந்தபோதிலும், வீட்டு நுகர்வுக்கான காப்பி விற்பனை அதிகரித்ததால், நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் சர்வதேச அளவில் உயர்ந்தபோதும் உற்பத்தியை தொடர்ந்து பேணுவதற்காக தொழிலாளர்கள் கூடுதல் மணிநேரம் பணிபுரிய வேண்டியிருந்தது.

நிறுவனம் அறிவித்தபடி, “2020 ஆம் ஆண்டில் தொற்றுநோய் மற்றும் பூட்டுதல்களின் சவாலான நிலைமைகள் இருந்தபோதிலும், இவை அனைத்திலும், பொது வர்த்தக நிறுவனமாக செய்யப்படும் JDE Peet’s முதல் ஆண்டில் பல பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டது. இந்த சூழலில், எங்கள் ஊழியர்களின் பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு எங்கள் தொழிற்சாலைகளை இயங்க வைத்தது, எங்கள் விநியோகச் சங்கிலிகள் திறம்பட செயல்பட்டன. மேலும் எங்கள் வாடிக்கையாளர்களும் மற்றும் நுகர்வோரும் தொற்றுநோய்களின் பல சவால்களுக்கு மத்தியிலும் சேவை செய்தனர்”.

2. பங்குதாரர்களுக்கு பாரிய பங்கு இலாபத்தை வழங்கியது

நிறுவனம் பங்குதாரர்களுக்கு அளித்த அறிக்கையில் 2020 ஆம் ஆண்டிற்கான 6.7 பில்லியன் யூரோக்கள் மொத்த விற்பனையையும், 933 மில்லியன் யூரோக்கள் இலாபத்தையும் அறிவித்தது. “எங்கள் உட்பாவனை விற்பனை பிரிவில் நாங்கள் அடைந்த பலம், வெளிப்பாவனை நுகர்வினால் ஏற்பட்ட குறைப்பை பெரும்பாலும் ஈடுசெய்கிறது. “மற்றும்” ஆரம்பத்தில், நாங்கள் எங்கள் வெளிப்பாவனை வணிக மாதிரிகளை மேற்கொண்டோம். இதன் விளைவாக, இந்த நடவடிக்கைகள் நெருக்கடியைத் தொடர்ந்து நாம் இன்னும் வலுவாக வெளிவருவோம் என்று எதிர்பார்க்கிறோம்” என்று அறிவித்தது.

2021 ஆம் ஆண்டிற்கான அதன் செய்தி என்னவென்றால், எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதாகும். 'பங்குதாரர்கள் 2020 ஆம் ஆண்டில் அதன் இலாபத்திலிருந்து 89 மில்லியன் யூரோகளை பெற உள்ளனர். இது உலகளவில் நிறுவனத்தின் 20,000 தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் கிட்டத்தட்ட, 4,500 யூரோக்களுக்கு சமம்.'

பான்பரி ஆலையில் உள்ள தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இலாபம் இன்னும் அதிகமாக இருந்தது. உயர்மட்ட நிர்வாகம் உட்பட 371 தொழிலாளர்கள் ஒவ்வொருவரும், 2019 ஆம் ஆண்டில் தாய் நிறுவனத்திற்கு வரி மற்றும் கடன் கட்டணங்கள் செலுத்தப்பட்ட பின்னர் 7,600 பவுண்டுகளுக்கும் அதிகமான இலாபத்தை பெற்றனர். இது கடந்த ஆண்டு கிடைத்தது. இந்த எண்ணிக்கை அநேகமாக JDE அதன் சகோதர நிறுவனங்களுடன் JDE Peet’s இற்குள் வர்த்தகம் செய்வதால், வரி மற்றும் நிதிக் கட்டணங்கள் உட்பட ஒட்டுமொத்த செலவுகளை தாய் நிறுவனத்திற்கு குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஒரு குறைவான மதிப்பீடாக இருப்பது சாத்தியமாகும்.

கடந்த ஆண்டு புதிய தலைமை நிர்வாக அதிகாரி பாபியன் சைமன் (JDE இன் முன்னாள் தலைமை நிதித்துறை அதிகாரி) நியமிக்கப்பட்டபோது, அவர் 10 மில்லியன் யூரோக்கள் 'தங்க வரவேற்பு வருமானமாக' பெற்றார். அவர் மொத்த வருடாந்த சம்பளம் 1 மில்லியன் யூரோக்களும் மற்றும் ஒரு மாத செலவுக்காக 3,300 யூரோக்களும், மற்றும் அவரது சம்பளத்தின் 250 சதவீதத்திற்கு சமமான 'மேலதிக கொடுப்பனவு வாய்ப்புகள்' ஐயும் பெறுகிறார். ஆயினும்கூட, JDE தொழிலாளர்களை பாதுகாப்பற்ற மற்றும் ஆரோக்கியமற்ற இரவு வேலைமாற்ற முறைகளுக்கு கட்டாயப்படுத்துவதைத் தவிர்க்க தொழிலாளர்களுக்கு நிறுவனத்தால் 750,000 - 800,000 பவுண்டுகள் செலுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

3. JDE Peet’s யாருக்கு சொந்தமானது?

JDE Peet’s இனை உருவாக்கியது, JAB ஹோல்டிங் நிறுவனம், JDE மற்றும் Peet’s (சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியிலுள்ள காபி பதப்படுத்தும் மற்றும் சில்லறை விற்பனையாளர்) ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பின் பின்னர் JDE Peet’s கடந்த ஆண்டு மே மாதம் ஆம்ஸ்டர்டாம் பங்குச் சந்தையில் இடம்பெற்றது. (ஹோல்டிங் நிறுவனம் - உற்பத்தியில் நேரடி பங்களிப்பு இல்லாமல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களை ஓரளவு அல்லது முழுமையாக கட்டுப்படுத்தும் ஒரு தொழில்துறை நிறுவனம்)

இரண்டு பாரிய நிறுவனங்கள் 77 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றன. வரிப்புகலிடமான லுக்செம்பேர்க்கை தலைமையிடமாகக் கொண்ட ஜேர்மன் தனியார் முதலீட்டுக் குழுவான JAB Holding என்பது Coty, Pret A Manger, Krispy Kreme, Petcare போன்ற பிரபலமான தயாரிப்பு அடையாளங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் வைத்திருப்பவர்களான Acorn Holdings மூலம் அதன் பங்குகள் வழியாக நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராகும். Acorn ஒரு ஹோல்டிங் நிறுவனமாகும். இது சூடான மற்றும் குளிர்பானங்களின் முக்கிய தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான Keurig Dr Pepper Group குழுமத்துடன் JDE Peet’s இனை கட்டுப்படுத்துகின்றது.

JAB இன் பங்குகளில் 90 சதவிகிதம் பில்லியனர் ரைய்மான் குடும்பத்திற்கு சொந்தமானது. இது 1933 க்கு முன்னர் ஹிட்லரையும் நாஜி கட்சியையும் ஆதரித்ததுடன் மற்றும் தெற்கு ஜேர்மனியில் உள்ள அவர்களின் தொழில்துறை இரசாயன நிறுவனத்தில் அப்போது நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய உழைப்பால் இலாபம் ஈட்டியது.

JDE Peet’s இன் இரண்டாவது பெரிய பங்குதாரர் Mondelez International ஆகும். சிகாகோவை தளமாகக் கொண்ட இந்த பன்னாட்டு உணவு, மிட்டாய் மற்றும் குளிர்பான நிறுவனம் Oreo, Ritz, TUC, Peek Freans, Côte d'Or, Toblerone, Cadbury, Green & Black's, Trident, Dentyne, Chiclets போன்ற பிரபலமான தயாரிப்பு அடையாளங்களை கொண்டுள்ளது. இங்கிலாந்தில் ஷெபீல்ட் நகரத்தில் ஒரு மொண்டலெஸுக்குச் சொந்தமான தொழிற்சாலை உள்ளது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய இனிப்புத் தொழிற்சாலையாகும். பார்ன்வில்லில் உள்ள பிரபலமான Cadbury தொழிற்சாலையையும் மொண்டெலஸ் வைத்திருக்கிறார். பான்பரி 300 தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைத்திருப்பதற்காக, Unite அங்குள்ள தொழிலாளர்களின் ஆதரவைக் கோரவில்லை.

மொண்டெலஸ் சமீபத்திய ஆண்டுகளில் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

* Mighty Earth என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், மொண்டெலெஸ் மற்றும் பிற பெரிய சாக்லேட் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டில் பயன்படுத்தப்படும் கொக்கோவின் பெரும்பகுதி தேசிய பூங்காக்கள் மற்றும் ஐவரி கோஸ்ட் மற்றும் கானாவில் உள்ள பிற பாதுகாக்கப்பட்ட பிராந்தியங்களில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டதாக அறிவித்தது.

* Mondelez International க்கு 22 பால்ம் எண்ணைய் விநியோகத்தர்கள் 2015 முதல் 2017 வரை 70,000 ஹெக்டேர் மழைக்காடுகளை அழித்ததாக Greenpeace International 2018 இல் தெரிவித்துள்ளது.

* 2015 ஆம் ஆண்டில், அமெரிக்க பொருட்கள் மற்றும் எதிர்கால விலைநிர்ணய ஆணையம் Mondelez International உம் அதன் முன்னாள் துணை நிறுவனமும் எதிர்கால கோதுமை விலை நிர்ணயம் செய்வதில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது.

* இந்த ஆண்டின் தொடக்கத்தில், மாலியைச் சேர்ந்த எட்டு முன்னாள் குழந்தை அடிமைகள், Mondelez க்கு எதிராக Nestle மற்றும் பிற பிரபலமான சாக்லேட் உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து, தெரிந்தே கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துவதாகக் கூறி ஒரு கூட்டு நடவடிக்கை வழக்கைக் கொண்டுவந்தனர்.

4. பங்குச்சந்தைக்கு சென்றதன் நோக்கம்

JDE Peet’s இன் பங்குச்சந்தையில் இடம்பிடித்தன் மூலம் கடந்த ஆண்டு 2018 முதல் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொது பங்கு விற்பனை ஊடாக 2.25 பில்லியன் யூரோக்களை திரட்டியது. அதன் தாய் நிறுவனங்களில் ஒன்றான Mondelez International க்கு 1.55 பில்லியன் யூரோக்களை ஈட்டியது. இது அதன் சில பங்குகளை விற்றது.

பங்குச்சந்தையில் இடம்பிடித்த சில நாட்களில், JDE Peet’s இன் பங்குகள் 12 சதவீதம் உயர்ந்து 16.8 பில்லியன் டாலர் சந்தை மதிப்பைக் கொடுத்தன. இதனால் பங்குகளை வாங்கியவர்கள் விற்று விரைவான இலாபம் ஈட்ட அனுமதித்தனர். இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 15 பில்லியன் யூரோக்கள் ஆகும்.

அதன் முன்னாள் உரிமையாளர்களை செல்வவளப்படுத்துவதைத் தவிர, 700 மில்லியன் யூரோக்கள் அதன் உயர் கடனைக் குறைத்து, மேலும் நிறுவனங்களை கையகப்படுத்துதல் மற்றும் மூலதன முதலீட்டிற்கான அடிப்படையை அமைத்தது. மேலும் நிறுவனத்தின் மூலதன அடித்தளத்தை மேலும் அதிகரித்து, இதிலிருந்து தொழிலாளர்களுக்கு எதிர்மாறாக பங்குதாரர்கள் பொதுவாக 10-15 சதவீதம் வருவாய் விகிதத்தை எதிர்பார்க்கலாம். JDE Peet’s இன் தொழிலாளர்களுக்கு வேலைகள், வேகத்தை அதிகரித்தல் மற்றும் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் ஆகியவற்றின் வடிவத்தில் சுரண்டல் விகிதத்தை கணிசமாக அதிகரிப்பதை இது குறிக்கிறது.

5. JDE Peet’s இன் பங்கு இலாபக்கொள்கை

அதன் பங்கு இலாபத்தொகை கொள்கை 'நிறுவனத்தின் சுதந்திரத்தை பாதுகாக்க விரும்புகிறது' என்று நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இது அதன் உற்பத்தி விளைவுகள் உட்பட 'முக்கியமாக அதன் நிதி நிலையை முக்கியமாக சார்ந்திருக்க செய்யும்' என்று குறிப்பிட்டது. கையகப்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு அதன் பங்கு விலை, அதனால் அதன் பங்கு இலாபத்தொகை அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறுவதற்கான குறியீடாகும்.

உண்மையில், நிறுவனம் “ஒரு பங்குக்கு நிலையான மற்றும் அதிகரிக்கும் பங்கு இலாபத்தொகையை வழங்க உத்தேசித்துள்ளதாக அறிவிக்கிறது. அதே நேரத்தில் இதன் வேகம் நிறுவனத்தின் மூலதன ஒதுக்கீடு முன்னுரிமைகளால் தீர்மானிக்கப்படும்.” [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது] இதை உறுதிப்படுத்த முதலீடு மற்றும் கடன் வாங்குவது ஒழுங்கமைக்கப்படும்.

உரிமையாளர்களின் நலன்கள் இங்கு முதன்மையானதாக வருகின்றன.

6. தொழிலாளர்கள் மீதான தாக்குதல்

கடந்த ஆண்டின் பங்குச்சந்தையில் இடம்பிடித்தல் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கும் அதன் கடன் வழங்குநர்களுக்கும் ஒரு நல்ல செய்தி என்று பாராட்டப்பட்டது. ஆனால் இது தொழிலாளர்களை எப்போதும் கடினமாக பிழிந்தெடுப்பதன் மூலம் மட்டுமே அடைய முடியும். அதாவது வேலை நாளை அதிகரிப்பதன் மூலமும் கூடுதல் நேர கொடுப்பனவுகளை குறைப்பதன் மூலமும். பான்பரியில், நிர்வாகம் நான்கு-பணிநேர முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஊழியர்களை 12 மணி நேர பணிமுறைகள், இரவுகள், வார இறுதி நாட்கள் போன்றவற்றை வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறது. பாரம்பரிய கிறிஸ்துமஸ் மற்றும் வங்கி விடுமுறை ஊதிய விகிதங்களைக் குறைத்து, ஊதியமற்ற பணிஇடைவேளைகளைக் கொண்டு வந்து அவற்றை 30 நிமிடங்களுக்கு கட்டுப்படுத்துகிறது. இந்த திட்டங்கள் தொழிலாளர்களுக்கு வருமானத்தில் ஆயிரக்கணக்கான இழப்பாக இருக்கும். சிலர் ஆண்டுக்கு, 7,000£–12,000£ இழக்க நேரிடும்.

ஓய்வூதியம் தொடர்பாக, நிறுவனத்தின் நிதி அறிக்கை மற்றும் கணக்குகள் அதன் வரையறுக்கப்பட்ட நன்மைகள் (defined benefits - DB) ஓய்வூதியத் திட்டத்தை “இங்கிலாந்தின் மிக முக்கியமான DB திட்டம்” என்று எடுத்துக்காட்டுகின்றன. இது வரையறுக்கப்பட்ட பங்களிப்பு (defined contribution - DC) திட்டங்களை விட செலவு உயர்ந்ததால் செலவுக் குறைப்புக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட நன்மைகள் ஓய்வூதிய திட்டத்தின் திட்டமிடப்பட்ட முடிவு மற்றும் தரக்குறைவான வரையறுக்கப்பட்ட பங்களிப்பு திட்டத்தால் அதை மாற்றுவது தொழிலாளர்களுக்கு அதிக செலவாகவும் மற்றும் ஆண்டுக்கு JDE க்கு மில்லியன் பவுண்டுகளை மிச்சப்படுத்தும்.

JDE Peet’s அதன் பங்குதாரர்களுக்கு பணம் செலுத்துவதற்கும் பங்குச் சந்தையை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கும் தொழிலாளர்களிடமிருந்து ஒவ்வொரு பென்னியையும் பிழிந்தெடுக்க விரும்புகிறது.

7. JDE Peet’s தொழிற்சங்கங்களை நம்பியுள்ளது

பெருநிறுவன செலவுக் குறைப்புக்கான திறவுகோல் தொழிற்சங்கங்களுடன் நிறுவனம் கொண்டிருக்கும் நம்பகத்தன்மை மற்றும் கூட்டுழைப்பில் தங்கியுள்ளது. “பல தொழிற்சாலைகளில், எங்களிடம் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் உள்ளன. எங்கள் தொழிலாளர்களில் சுமார் 33 சதவீதம் பேர் கூட்டு பேரம் பேசும் ஒப்பந்தங்களால் பாதுகாக்கப்பட்டுள்ளனர்” என்று நிறுவனம் பெருமை பேசுகிறது. அவர்களில் இங்கிலாந்தில் உள்ள ஊழியர்களும் அடங்குவர். Unite தொழிற்சங்கம் இப்போது JDE நிர்வாகத்தினதும் மற்றும் அதன் பங்குதாரர்களின் கட்டளைகளை சுமத்தும் ஒரு இழிந்த ஒப்பந்தத்தை முன்னெடுக்க முயற்சிக்கிறது.

8. JDE Peet’s அதன் தொழிலாளர்களிலேயே தங்கியுள்ளது

JDE Peet’sஇன் முக்கிய உற்பத்தி ஆலைகள் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, நெதர்லாந்து, ஜேர்மனி, இங்கிலாந்து, பிரேசில், சீனா மற்றும் மலேசியாவில் உள்ளன. இருப்பினும், அதன் தயாரிப்புகளை வறுத்தெடுப்பதற்கும், பதப்படுத்துவதற்கும், பொதிகளாக்குவதற்கும் தேவையான சிறப்பு தொழில்நுட்பத்தின் காரணமாக, நிறுவனம் அதன் உற்பத்தி திறனை பெரிய உற்பத்தி தளங்களாக ஒருங்கிணைத்துள்ளது. இது, இந்த ஆலைகளின் அதிக பயன்பாட்டுடன் சேர்ந்து, 'குறிப்பிடத்தக்க குறுக்கீடு எங்காவது ஏற்பட்டால் ஒருவருக்கொருவர் மாற்றீட்டு பிரதியாக பணியாற்றுவதற்கு தேவையான உதிரி திறனை அனுமதிக்காது.' இதனால் உற்பத்தியை வேறு இடங்களில் எளிதாக மாற்ற முடியாது. மேலும் இது அதன் சந்தைகளுக்கு அனுப்புவதற்கு கூடுதல் போக்குவரத்து செலவுகளையும் ஏற்படுத்தும்.

இங்கிலாந்தில், உடனடி அல்லது உறைந்த உலர்ந்த காபியை பல்வேறு வடிவங்களில் பொதிகளாக்குவதும், தயாரிப்பதும் JDE இன் செயல்முறைகளில் அடங்குகின்றது. இது தனித்த காப்பி இயந்திரகளுக்கான Tassimo R&G அலுமீனியம் குப்பிகளில் அடைக்கும் செயல்முறையையும் மேற்கொள்கின்றது. இதன் விளைவு என்னவென்றால், தொழிலாளர்கள் ஒரு பலம்வாய்ந்த நிலையில் உள்ளதுடன், மேலும் பில்லியன்கணக்கான மோசடி செய்யும் அதிக இலாபம் ஈட்டும் நிறுவனத்துடனான அழுகிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு தொழிற்சங்கத்தால் நெருக்கப்படுவதற்கு முடியாது.

9. JDE Peet’s இன் தொழிலாளர்களுக்கு உலகம் முழுவதும் கூட்டாளிகள் உள்ளனர்

எல்லாவற்றிற்கும் மேலாக, JDE Peet’s 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் 3.2 பில்லியன் டாலர் வருவாயைக் கொண்டுள்ளது. இது கிட்டத்தட்ட 40 நாடுகளில் இயங்குகிறது. இவற்றில் சுமார் 20,000 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இந்த தொழிலாளர்கள் உங்களைப் போன்றே தமது நலன்களை பாதுகாக்க உள்ளனர். அவர்கள் அனைவரும் அதே உலகளாவிய நிறுவனத்தால் சுரண்டப்படுகிறார்கள். அவர்கள் உங்கள் கூட்டாளிகள்.

10. Unite பாரிய சொத்துக்களை கொண்டிருப்பதுடன் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை ஏமாற்றும் ஒப்பந்தங்களில் கீழ் வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறது

Unite இன் நிதி சொத்துக்கள் பாரியளவானவை. தொழிற்சங்கத்தின் சமீபத்திய நிதிக் கணக்குகளின்படி (2019 ஆம் ஆண்டிற்கான) தொழிற்சங்கத்தின் நிகர சொத்துக்கள் 439 மில்லியன் பவுண்டுகளாகும். இதில் 108 மில்லியன் பவுண்டுகள் ரொக்கம், 67 மில்லியன் பவுண்டுகள் முதலீடுகள் மற்றும் 209 மில்லியன் பவுண்டுகள் சொத்துக்கள் உள்ளன. 2019 ஆம் ஆண்டில், உறுப்பினர்களிடமிருந்து கிடைத்த Unite இன் வருமானம் 162 மில்லியன் பவுண்டுகள் ஆகும். ஆனால் இது இங்கிலாந்து முழுவதும் உள்ள அனைத்து “தொழிற்துறை பிரச்சனைகளுக்கும்” (பரவலாக வரையறுக்கப்பட்ட) வெறும் 1.3 மில்லியன் பவுண்டுகளை மட்டுமே செலவழித்தது.

Unite அதிகாரிகள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர்களைக் காட்டிலும் உயர்நிர்வாகிகளுடன் பொதுவான தன்மையை கொண்டுள்ளனர். அதன் பொதுச் செயலாளர் லென் மெக்ளஸ்கி கடந்த ஆண்டு 99,338 பவுண்டுகள் சம்பளம் மற்றும் சலுகைகளைப் பெற்றார். ஆனால் மெக்ளஸ்கி மற்றும் பிற Unite அதிகாரிகளுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கின்றன. 2019 கணக்குகள் பின்வருவபவற்றை மேற்கோள் காட்டுகின்றன: “செயற்குழு (தலைமை அலுவலகம்) செலவுகள்” 338,000 பவுண்டுகள், “மாநாடுகள்” 1.8 மில்லியன் பவுண்டுகள், “குழுக்கள் / நிர்வாக சபைகள்” 3.1 மில்லியன் பவுண்டுகள், “கிளை மற்றும் பிராந்திய செலவுகள்” 169,000 பவுண்டுகள், “பிராந்தியங்களுக்கும் கிளைகளுக்கும் கொடுப்பனவுகள்” 15 மில்லியன் பவுண்டுகள்.

லென் மெக்ளஸ்கி, 2016 தொழிற் கட்சி மாநாடு (credit: Wikimedia Commons)

Unite 2019 ஆம் ஆண்டில் தொழில்துறை நடவடிக்கைகளுக்காக 245 வாக்கெடுப்புக்களை நடாத்தியிருந்தது. ஆனால் இவற்றில் 25 வெறும் வேலைநிறுத்தங்கள் அல்லது “வேலைநிறுத்தங்களிலும் குறைவான” நடவடிக்கைகளுடன் முடிவடைந்தது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொன்று குவித்த ஒரு தொற்றுநோய்களின்போது தொழில்துறை நடவடிக்கையை அடக்குவதும், மேலும் ஆயிரக்கணக்கான 'எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்துவது', வேலை அழிப்பு மற்றும் வேலைநிலைமைகளை மோசமாக்குவதுமே Unite இன் பங்காகும். Unite வேலைநிறுத்த நிதியாக 40 மில்லியன் பவுண்டுகளை கொண்டுள்ளது. ஆனால் அதன் அதிகாரிகள் JDE தொழிலாளர்களிடம் நிறுவனத்தின் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட வழி இல்லை என்று கூறுகின்றனர். Unite என்பது ஒரு வேலைநிறுத்தத்தை முறிக்கும் அமைப்பாகும். இது தொழிலாளர்களின் மிக அடிப்படையான உரிமைகள் மற்றும் நலன்களுக்கு எதிராக நிறுவனத்துடனும் மற்றும் ஜோன்சன் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கிறது.

******

Unite மற்றும் JDE க்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு 'இல்லை' என்று வாக்களிக்க JDE இன் பான்பரி ஆலையில் உள்ள தொழிலாளர்களை உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் கேட்டுக்கொள்கின்றன. மேலும் நிறுவனத்தின் 'எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்துவதற்கு' எதிராக போராட்டத்தை ஒழுங்கமைக்கும் உங்களின் சொந்தமான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குங்கள். வேலைகள், வேலைநிலைமைகள் மற்றும் ஊதியங்கள் மீதான அனைத்து தாக்குதல்களையும் திரும்பப் பெறக்கோரி உங்களின் சொந்தமான கோரிக்கைகளை தயாரித்து, உங்கள் போராட்டத்தை ஆதரிக்கும் இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் சர்வதேசரீதியாக உள்ள உங்கள் சகோதர சகோதரிகளிடம் அழைப்புவிட வேண்டும்.

Loading