விஞ்ஞானரீதியான சுகாதார கொள்கைகள் சீனாவில் டெல்டா வகை திடீர் பெருக்கத்தை தடுத்து நிறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனாவில் விஞ்ஞானரீதியான பொது சுகாதாரக் கொள்கைகளை பாரியளவில் செயற்படுத்துவதும், அங்கு சமீபத்திய டெல்டா வகை திடீர் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதும் மில்லியன் கணக்கான கோவிட்-19 பெருந்தொற்றுகள் மற்றும் இறப்புகளுக்கு வழிவகுத்த வாஷிங்டனும் ஐரோப்பிய சக்திகளும் பின்பற்றும் விஞ்ஞான-விரோத கொள்கைகளின் பேரழிவுகளை அம்பலப்படுத்துகிறது. சர்வதேச அளவில் ஒரு விஞ்ஞானரீதியான கொள்கைக்கு ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்பை தகர்க்க முடிந்தால், பெருந்தொற்று நோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, வைரஸை ஒழிப்பதற்கான உலகளாவிய நடைவடிக்கைக்கான சாத்தியக்கூறுகளை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க முகமூடி அணிந்த ஒருவரும் ஒரு குழந்தையும் சீனாவின் பெய்ஜிங்கிலுள்ள ஒரு அங்காடிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 15, 2021 அன்று நடந்து செல்கின்றனர். (AP Photo/Ng Han Guan)

கடந்த ஆண்டு சீனாவிற்குள் ஒரு பரந்த பொது சுகாதார அணிதிரட்டலானது பெருந்தொற்று நோயை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், கடந்த மாதம் நான்ஜிங் விமான நிலையத்தில் ஒரு புதிய திடீர் பரவல் வெளிப்பட்டது. மாஸ்கோவிலிருந்து Air China விமானமான CA910 மூலம் கொண்டு வரப்பட்ட டெல்டா வகையானது விமான நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட பராமரிப்பு தொழிலாளர்களை பாதித்துள்ளது மற்றும் சீனா முழுவதும் விரைவாக பரவியது. ஜூலை 20 ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த திடீர் பரவல் ஜூலை இறுதிக்குள் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட மாகாணங்களில் 381 பேருக்கு நோய் தொற்றியிருந்தது. அதன் உச்சமாக திடீர் தொற்று பரவல் ஒரு நாளைக்கு 140 க்கும் மேற்பட்டவர்களைத் பாதித்தாலும், இந்த எண்ணிக்கை இப்போது கணிசமாக வீழ்ச்சியடைந்து வருகிறது; சீனாவின் பரந்த பகுதிகளில் புதிய தொற்றாளர்கள் எவரும் இல்லை என்று அறிவிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக, நேற்று சீனா முழுவதும் 29 கோவிட்-19 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். நான்ஜிங் அமைந்துள்ள ஜியாங்சு மாகாணம், நோய் திடீர் பெருக்கத்தின் ஆரம்ப மையமாக இருந்தது, இது மூன்று புதிய நோயாளிகளை மட்டுமே அறிவித்தது. அருகிலுள்ள ஷாங்காய் இரண்டு மற்றும் தெற்கு எல்லை மாகாணமான யுன்னான், இது ஜியாங்சு நோய் திடீர் பரவலின் அடுத்த மோசமான பாதிப்பிற்கு பின்னர் எட்டு பேரைப் பதிவு செய்தது. குவாங்டாங் மாகாணத்தின் தெற்கு தொழில்துறை மையமானது ஒன்பது என்று அறிவித்தது. நான்ஜிங்கிலிருந்து சுற்றுலாப் பயணிகளால் டெல்டா வகை அங்கு தொற்றிய போது ஆரம்பத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட ஹுனான் மாகாணம், புதிய நோயாளிகள் எதுவும் பதிவாகவில்லை என்று அறிவித்தது.

சீனாவின் நிலைமை ஆபத்தானதாக இருந்தாலும், இந்த ஆரம்ப வெற்றி கடுமையான டெல்டா வகைக்கு எதிராக விஞ்ஞானரீதியான முறைகளின் மகத்தான சக்திக்கு சான்றாக உள்ளது. தடுப்பூசி மற்றும் பொது முடக்கங்கள் பாதிக்கப்பட்ட நகர மாவட்டங்களான - நான்ஜிங், வூஹான் மற்றும் யாங்சோ உட்பட முழு நகரங்களையும் பாரிய அளவில் பரிசோதித்தல், நோயாளிகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி விரைவாக சிகிச்சையளித்தலானது - உலகெங்கிலும் வேறு எங்காவது கட்டுப்பாட்டை மீறி வெடிக்கும் வைரஸ் தொற்றுக்களை நிறுத்துகின்றன.

கடந்த ஆண்டு ஜனவரி 23 முதல் ஏப்ரல் 8 வரை, வூஹான் மற்றும் ஹுபெய் மாகாணம் முழுவதிலும் பெருந்தொற்று நோயின் தொடக்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்க வெற்றிக்குப் பின்னர் இது வந்துள்ளது. இந்த கடுமையான பொது முடக்கம், வைரஸ் புதிய நோயாளிகள் தொற்றுக்குள்ளாவது நிறுத்திய பின்னரே நீக்கப்பட்டது, சீனாவின் எல்லைகளுக்கு வெளியே இருந்து கொண்டுவரப்பட்டு திடீர் பெருக்கத்தை ஏற்படுத்தியதைத் தவிர சீனாவிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதை முடிவுக்குக் கொண்டு வந்தது.

எவ்வாறெனினும், ஏகாதிபத்திய நாடுகளிலும் உலகின் பெரும்பாலான பகுதிகளிலும் அரசாங்கங்கள் முற்றிலும் எதிரான மூலோபாயத்தை பின்பற்றின. அவர்கள் கடுமையான பொது முடக்கங்களை நிராகரித்தனர் அல்லது இத்தாலி மற்றும் அமெரிக்காவைப் போலவே திடீர் வேலைநிறுத்தங்கள் மூலம் அவற்றை செயல்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டபோது, வைரஸ் பரவுவதற்கு முன்னரும் மற்றும் வெகுஜன பரிசோதனைக்கான திட்டங்கள் மற்றும் புதிய தொற்றுக்களை கண்காணிக்கவும் கண்டுபிடிப்பதற்கு முன்னரும் அவற்றை நீக்கியிருந்தனர்.

இதன் பின்விளைவாக சுகாதார விளைவுகளிலுள்ள வேறுபாடு அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. சீனாவில் கோவிட்-19 நோயால் 5,000 க்கும் குறைவானவர்களே இறந்துள்ளனர், ஆனால் அமெரிக்காவில் 643,000 க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர் மற்றும் ஐரோப்பாவில் 1,155,000 பேர் இறந்துள்ளனர். 2020 ஆண்டு வசந்த காலத்தில் பொது முடக்கம் அகற்றப்பட்டதிலிருந்து இந்த வேறுபாடு இன்னும் கூர்மையாக உள்ளது.

2020 மே 1 முதல், வூஹான் பொது முடக்கத்திற்குப் பின்னர், சீனாவில் கோவிட்-19 நோயால் இரண்டு பேர் இறந்துள்ளனர், அமெரிக்காவில் 500,000 க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர், ஐரோப்பாவில் 950,000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். சீனாவின் மக்கள் தொகைக்கு ஒத்ததாகவுள்ள இந்தியாவில், மக்கள் தொகை ஆய்வாளர்களின் மதிப்பீடுகளின்படி, 2.9 முதல் 5.8 மில்லியன் மக்கள் வரை இறந்துள்ளனர், பெரும்பாலானவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளனர்.

எவ்வாறெனினும், பெருந்தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஒரு சர்வதேச மூலோபாயம் தேவைப்படுகிறது. நான்ஜிங் திடீர் தொற்று பெருக்கமானது மீண்டும் ஒரு தேசிய கொள்கையுடன் பெருந்தொற்று நோயை முடிவுக்குக் கொண்டு வர முடியாததை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உலகளாவிய அளவில் வைரஸை ஒழிக்க விஞ்ஞானரீதியான கொள்கைகள் பயன்படுத்தப்பட வேண்டும் -இல்லையெனில், வைரஸ் வேகமாக- திரிபு மாற்றமடைந்து, மிகவும் தொற்றும் தன்மையாக மாறும் புதிய வகைகள் தவிர்க்க முடியாமல் வைரஸ் ஒழிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் பரவுகின்றன.

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நிதிய பிரபுத்துவமானது ஒரு விஞ்ஞானரீதியான கொள்கையை செயல்படுத்த மறுப்பது தான் முக்கிய தடையாக உள்ளது. மாறாக, அவர்கள் டிரில்லியன் கணக்கான டாலர்கள், யூரோக்கள் மற்றும் பவுண்டுகளை வங்கி மற்றும் பெருநிறுவன பிணையெடுப்புக்களில் தங்களைத் தாங்களே பெரும் செல்வந்தர்களாக ஆக்கிக் கொண்டனர் மற்றும் இலாபங்களை உருவாக்க தொழிலாளர்கள் வேலையில் இருக்க வேண்டும் என்பதற்காக உயிர்கள் தியாகம் செய்யப்பட வேண்டும் என்று கோரினர். பிரிட்டன் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் இழிவாக கூறினார்: 'இனி எந்த பொது முடக்கமும் இல்லை, உடல்கள் ஆயிரக்கணக்கில் குவியட்டும்!'

இப்பொழுது, டெல்டா வகையானது உலகெங்கிலும் பாரியளவிலான இழப்புக்களை தூண்டிவிட இருக்கும் நிலையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் சீன சுகாதாரக் கொள்கைகளை இழிவுபடுத்தும் பிரச்சாரத்தைத் தொடங்குகின்றன. அவர்களின் இலக்கு சீனா மட்டுமல்ல, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் தேவையற்ற வெகுஜன மரணக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத்தான் என்பது ஏறக்குறைய வெளிப்படையானது.

'சீனாவின் டெல்டா திடீர் பெருக்கம் குறைவதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது' என்ற அதன் அறிக்கையில், பெய்ஜிங் பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியை நிறுத்தவேண்டும் என்று CNN கோரியது. ஒரு “பூஜ்ஜிய தொற்று பரவல்” மாதிரி என்று ஒப்புக்கொள்ளும் போது ... பரந்த பரவலைக் கட்டுப்படுத்துவதில் இதுவரை பரந்த அளவில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது,' என்று அது கூறியது: 'இருப்பினும், இந்த அணுகுமுறைக்கு தண்டிக்கும், அடக்குமுறை நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன, அவை நீண்ட காலத்திற்கு நிலையானவை அல்ல, குறிப்பாக புதிய வகைகள் பரவி, மற்றய நாடுகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. கோட்டை பிரதேசங்கள் இறுதியில் இந்த மூலோபாயத்திலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் - அந்தப் பகுதிகளை உலகத்திலிருந்து நிரந்தரமாக மூடிவிட முடியாது.'

ஏகாதிபத்திய ஊடகங்களும் சீனாவில் பெருந்தொற்று நோயால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை பயன்படுத்தி உயிர்களைக் காப்பாற்றும் ஒரு விஞ்ஞானரீதியான கொள்கையை இழிவுபடுத்த முயற்சிக்கின்றன. பிரான்சில், பழமைவாத நாளேடான லு ஃபிகாரோ, சீன விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் பெய்ஜிங்கின் கொள்கையை நிராகரிக்கிறார்கள் என்றும், 'வைரஸுடன் வாழ' ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அழைப்பை ஏற்க விரும்புவதாகவும் கூறியது. முன்னணி வைராலஜிஸ்ட் டாக்டர் ஜாங் வென்ஹாங்கின் அறிக்கைகள் தொடர்பாக சீனாவில் சமீபத்தில் நடந்த சர்ச்சையை லு ஃபிகாரோ மேற்கோளிட்டது.

லு ஃபிகாரோ கூறியது: 'ஷாங்காயில் தொற்று நோய்களுக்கு நன்கு அறியப்பட்ட நிபுணரான ஜாங் வென்ஹாங், ஜூலை இறுதியில் சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் மூலோபாயம் குறித்த சந்தேகங்களை வெளிப்படுத்தினார், 'வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்' என்று அழைப்பு விடுத்தார். இந்தக் கருத்து 'சீனாவின் பெருந்தொற்று நோய் நிர்வாகத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியது' மற்றும் 'நாட்டில் கடுமையான விவாதத்தைத் தூண்டியது' என்று அது மேலும் கூறியது.

உண்மையில், ஜாங் பெருந்தொற்று நோய் குறித்த ஐரோப்பிய அரசாங்கங்களின் அரசியல்-குற்றவியல் அணுகுமுறைக்கு ஆதரவாளராக இல்லை, மேலும் அவரை அத்தகையதாக சித்தரிக்கும் முயற்சிகள் ஒரு மோசடியாகும். வெய்போ இணைய தளத்தில் தனது சமீபத்திய பதிவில், ஜாங் சீனாவின் சுகாதாரக் கொள்கையை சந்தேகத்திற்கு இடமின்றி அங்கீகரித்தார்: 'சர்வதேச தொற்றுநோய் எதிர்ப்பு நிலைமை இன்னும் மிகவும் தீவிரமாக உள்ளது மற்றும் சீனா இன்னும் மகத்தான தொற்று நோய் சவால்களை எதிர்கொள்கிறது. ஆனால் நமது நாட்டின் பெருந்தொற்று நோய் எதிர்ப்பு மூலோபாயம் தற்போது நமக்கு சிறந்த மூலோபாயம் என்ற உறுதியான நம்பிக்கையை நாம் கொண்டிருக்க வேண்டும். 'ஒரு காலணி அதை அணிவதன் மூலம் பொருந்துகிறதா என்று நீங்கள் சொல்கிறீர்கள்.'

ஜூலை 29ம் தேதி சீனாவில் விமர்சிக்கப்பட்ட ஜாங் எழுதிய வெய்போ பதிவை லு ஃபிகாரோ மேற்கோளிட்டிருந்தது. இதற்குப் பிறகு, அவரது தொழில்வழங்குனரான ஷாங்காயிலுள்ள ஃபுடான் பல்கலைக்கழகம், ஜாங்கின் PhD ஆய்வுக் கட்டுரையில் கருத்துத் திருட்டு சாத்தியம் பற்றிய விசாரணையைத் தொடங்கியது. ஏகாதிபத்திய பத்திரிகை பிரச்சாரத்தின் திரிக்கப்பட்ட எதிரொலியில், மேற்கத்திய கலாச்சாரத்தை ஆதரித்ததற்காக சீன சமூக ஊடகங்களில் ஜாங் மீது தேசியவாத விமர்சனங்கள் எழுந்தன.

முந்தைய ஜூலை 29 இடுகையில், ஜாங் எழுதியிருந்தார்: 'இந்த வைரஸுடன் உலகம் எவ்வாறு இணைந்து உள்ளது என்பதைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாடும் அதன் சொந்த பதிலை அளிக்கிறது. சீனா ஒரு அழகான பதிலைக் கொடுத்துள்ளது. நான்ஜிங் திடீர் பெருக்கத்திற்குப் பிறகு, நாம் நிச்சயமாக மேலும் கற்றுக்கொள்வோம். சீனா உலகத்துடன் ஒரு பகிரப்பட்ட எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டும், உலகின் பிற பகுதிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் மற்றும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும், அதே நேரத்தில் வைரஸ் பற்றிய பயத்திலிருந்து அதன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். சீனா அத்தகைய ஞானத்தைக் கொண்டிருக்க வேண்டும்.'

ஜாங்கின் அறிக்கை தெளிவற்றதாக உள்ளது, ஏனெனில் அது ஏகாதிபத்திய நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் பின்பற்றும் அரசியல்-குற்றவியல் பெருந்தொற்று நோய் கொள்கைகளை நேரடியாக கண்டனம் செய்வதைத் தவிர்க்கிறது. எவ்வாறெனினும், இந்த தெளிவின்மை வெறுமனே ஜாங்கின் தனிப்பட்ட கருத்துக்களின் பிரச்சினை அல்ல. அவர் ஒரு மருத்துவர் அவர் ஒரு அரசியல்வாதி அல்ல, 1989ல் சீனாவில் முதலாளித்துவத்தை மீட்டெடுத்த ஒரு அதிகாரத்துவ ஸ்ராலினிச கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியில் (CCP) அதனது உறுப்பினர்களால் திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் கீழ் ஜாங் பேசுகிறார், இப்போது உலக ஏகாதிபத்தியத்துடன் ஆழமான பொருளாதார மற்றும் நிதிய தொடர்புகளைக் அது கொண்டுள்ளது.

முதலாளித்துவ உறவுகளில் சிக்கிக் கொண்டு, உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தை குறித்த பெருகிய முறையில் அச்சமடைந்துள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, ஏகாதிபத்திய நாடுகளின் சுகாதாரக் கொள்கைகளை பகிரங்கமாக கண்டனம் செய்வதையே பெரும்பாலும் தவிர்த்துள்ளது. எவ்வாறெனினும், சீனாவில் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய கொள்கைகளை செயல்படுத்துவதிலிருந்து ஜாங் மற்றும் பிற சீன மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களை CCP ஆனது தடுக்கவில்லை.

இதிலிருந்து இரண்டு முக்கியமான முடிவுகள் வெளிப்படுகின்றன. முதலாவதாக, கோவிட்-19 ஐ ஒழிக்கப் பணியாற்றும் ஜாங் மற்றும் பிற சீன விஞ்ஞானிகள் ஏகாதிபத்திய சக்திகளின் பிற்போக்கு பெருந்தொற்று நோய் கொள்கையை ஆதரிப்பவர்கள் அல்லது சீனாவுக்கு எதிரான 'மேற்கின்' முகவர்கள் அல்ல. அவர்களும் சீனாவின் உழைக்கும் மக்களும் செய்த பணி சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு ஒரு பெரிய சேவையாகும்: விஞ்ஞானமும் கூட்டு அணிதிரட்டலும் பெருந்தொற்று நோயை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்பதை இது காட்டுகிறது.

மேலும், இந்த பெருந்தொற்று நோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தொழிலாள வர்க்கத்தை, சோசலிசத்திற்காக, ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிராக, முதலாளித்துவ நிதிய பிரபுத்துவத்தின் கைகளிலிருந்து அதிகாரத்தை அகற்றவும் உயிர்களைக் காப்பாற்ற ஒரு விஞ்ஞானரீதியான கொள்கையை நடைமுறைப்படுத்தவும் ஒரு நனவான, சர்வதேச அணிதிரட்டல் தேவைப்படுகிறது.

Loading