முன்னோக்கு

ஐ.நா பொதுச்சபையும் சீனாவுக்கு எதிரான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் சீனாவை குறிவைத்த, ஆஸ்திரேலிய-ஐக்கிய இராச்சிய-அமெரிக்க (AUKUS) கூட்டணியின் திடீர் அறிவிப்பின் நிழலில் நியூ யோர்க்கில் இன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆரம்பமாகிறது.

செப்டம்பர் 20, 2021 திங்கட்கிழமை ஐ.நா தலைமையகத்தில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த சந்திப்பின் போது தென்கொரிய கே-பாப் இசைக்குழு பிடிஎஸ் உறுப்பினர்கள் பொது மன்ற அரங்கின் திரையில் ஒரு இசை வீடியோவைப் பார்க்கிறார்கள். (John Angelillo/Pool Photo via AP)

முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர், இரண்டு பேரழிவு தரும் உலகப் போர்களுக்குப் பின்னர், வெற்றிபெற்ற நட்பு நாடுகள் ஆக்கிரமிப்புப் போரை சட்டவிரோதமாக்கும் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டது. அதன் சாசனத்தின் பிரிவு 1 'சமாதானத்திற்கான அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும் அகற்றுவதற்கும், ஆக்கிரமிப்பு செயல்களை ஒடுக்குவதற்கும் அல்லது அமைதியின் பிற மீறல்களுக்கும் பயனுள்ள கூட்டு நடவடிக்கைகள்' என்று உறுதியளித்தது. டிசம்பர் 11, 1946 அன்று, நாஜி போர்க்குற்றவாளிகளின் நூரெம்பேர்க் விசாரணைகளின் முடிவானது, 'ஆக்கிரமிப்புப் போரைத் திட்டமிடுதல், தயாரித்தல், தொடங்குவது அல்லது நடத்துவது' மரண தண்டனைக்குரிய குற்றங்கள் என்று உறுதி செய்தது.

ஐ.நா உருவாக்கம் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய தீர்வு, எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு சில ஈவிரக்கமற்ற ஏகாதிபத்திய அரசுகள் ஆதிக்கம் செலுத்தும் உலக பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்பு முறைக்கும் இடையேயான முரண்பாடுகளை, உண்மையில் உலகப் போர்களுக்கு வழிவகுத்த அத்தியாவசிய முரண்பாடுகளை தீர்க்கவில்லை. 1950-1953 கொரியப் போரில் வட கொரிய நகரங்களின் கொத்தணிக் குண்டுவீச்சு முதல் 2011 ல் லிபியாவில் நேட்டோ போர்கள் வரை எண்ணற்ற ஏகாதிபத்திய கொடூரங்களுக்கு ஐ.நா. ஒப்புதல் அளித்தது.

போருக்குப் பிந்தைய முதலாளித்துவ மற்றும் ஸ்ராலினிச ஆட்சிகள், ஐ.நா.வை உலக அமைதிக்கு உத்தரவாதம் அளிப்பதாக புகழ்ந்தபோதிலும், ட்ரொட்ஸ்கிச இயக்கம் மட்டுமே போருக்கு எதிர்ப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை முதலாளித்துவத்தின் கீழ் தீர்ப்பது சாத்தியமற்றது என்றும் சோசலிசத்திற்கான புரட்சிகர இயக்கத்தின் பணியாகும் என வரையறுத்தது.

1945 இல் நான்காம் அகிலம் ஐ.நா.வை 'திருடர்களின் புதிய சமையலறை' என்று முத்திரை குத்தியது. இது, ஐ.நா.வின் முன்னோடியான லீக் ஆஃப் நேஷன்ஸ் க்கு லெனின் கண்டனத்தை எதிரொலித்தது. முதலாம் உலகப் போருக்குப் பின்னர் உருவான லீக் ஆஃப் நேஷன்ஸ், ஐரோப்பா பாசிசத்தில் இறங்குவதையும், இரண்டாம் உலகப் போர் வெடிக்பையும் தடுக்க தவறிவிட்டது. லீக் ஆஃப் நேஷன்ஸ் பற்றி சொல்லுக்குச் சொல் தொழிலாளர்களுக்கு லெனின் மேற்கோள் காட்டினார். இறுதியாக, ஐ.நா.வை 'ஒருவருக்கொருவர் சண்டையிடும் இரண்டு கூட்டம் மிருகங்கள் மட்டுமே' மற்றும் 'ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பொய்யானது' என்றார்.

இந்த வரிகள் நியூ யோர்க்கில் நடந்து வரும் கீழ்த்தரமான நடவடிக்கைகளை சரியாக விவரிக்கின்றன. வழக்கமான மனிதாபிமான வார்த்தைகளை பொதுமக்கள் தவிர்க்க மாட்டார்கள். செப்டம்பர் 10 அன்று வெளியிடப்பட்ட தனது அறிக்கையில், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உலக ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளார். கோவிட் -19 தொற்றுநோய்க்கு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள், குறைந்தது 4.7 மில்லியன் இறப்புகளுடன், அவர் தொற்றுநோய் மற்றும் புவி வெப்பமடைதல், 'கட்டுப்பாடற்ற ஏற்றத்தாழ்வுகள்' மற்றும் 'கணக்கிட முடியாத சமூக மற்றும் சுற்றுச்சூழல் சேதம், உத்தியோகபூர்வ ‘பக்கவாதம்’ குறித்து புலம்புகிறார். அது இலாபத்திற்கான தேடலால் ஏற்படலாமாம்.'

எவ்வாறாயினும், முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் எதுவும் கொலை மற்றும் ஆக்கிரோஷமான போரை அரசமைப்பின் வழக்கமான கருவிகளாகப் பயன்படுத்துவதில்லை என்று எந்த பாசாங்கும் செய்யவில்லை. உண்மையில், இரண்டாம் உலகப் போரின் முன்னாள் நேச நாடுகள் உட்பட ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையேயான பிளவுகள் ஒருபோதும் இவ்வளவு பெரிதாக இருந்ததில்லை. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து பிரதான சக்திகளில் மூன்று - இமானுவல் மக்ரோன் (பிரான்ஸ்), விளாடிமிர் புட்டின் (ரஷ்யா) மற்றும் ஜி ஜின்பிங் (சீனா) ஆகிய மூன்று நாடுகளின் தலைவர்கள் அங்கு இல்லை. சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் பிரச்சாரம், பனிப்போர் முடிவடைந்த பின்னர் ஆழமான இராஜதந்திர நெருக்கடிகளில் ஒன்றைத் தூண்டியுள்ளது.

AUKUS கூட்டணி, ஐரோப்பிய ஒன்றியத்தின் முதுகுக்குப் பின்னால் தயாராகி, ஆஸ்திரேலியா, திடீரென பிரெஞ்சு டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான 56 பில்லியன் யூரோக்கள் ஒப்பந்தத்தை இரத்து செய்தது. இப்போது ஆஸ்திரேலியா, சீனாவின் கடற்கரையில் நீண்ட நேரம் ரோந்து செல்லும் திறன் கொண்ட அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குகிறது. பெய்ஜிங் இந்த ஒப்பந்தத்தை 'மிகவும் பொறுப்பற்றது' என்று கண்டனம் செய்தது, ஏனெனில் அது 'பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை தீவிரமாக குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, ஆயுதப் போட்டியை தீவிரப்படுத்துகிறது மற்றும் அணு ஆயுதங்கள் பரவல் தடை ஒப்பந்தத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது' என்றது.

நேற்றிரவு, ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் (EU), ஊர்சுலா வொன் டெர் லெயென், வாஷிங்டனிடம் இருந்து முறையான விளக்கத்தைக் கோர உத்தியோகபூர்வமாக பாரிஸ் உடன் சேர்ந்தார். 'எங்கள் உறுப்பு நாடுகளில் ஒன்று ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் நடத்தப்பட்டுள்ளது' 'என்ன நடந்தது, ஏன் நடந்தது என்று நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்' என வொன் டெர் லெயென் CNN இடம் கூறினார்.

மக்ரோன் இல்லாத பொதுச் சபையில் பிரான்சை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன் எச்சரித்தார்: “அமெரிக்காவால் தொடங்கப்பட்ட இந்தோ-பசிபிக் மூலோபாயத்தின் எழுச்சி இராணுவ ரீதியாக மோதலாக உள்ளது. அது எங்கள் நிலைப்பாடு அல்ல ... சில சமயங்களில் இராணுவ வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தாலும், முறையான இராணுவ மோதலின் தர்க்கத்தை நாங்கள் நம்பவில்லை.

எளிய மொழியில் 'முறையான இராணுவ மோதலில்' ஈடுபடுவது என்பது போருக்கு தயாராவதாகும். நேட்டோ சக்திகளிடையே இப்போது எழும் இலாபங்கள் மற்றும் மூலோபாய செல்வாக்கு பற்றிய மோதல்கள், பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவால் ஊக்குவிக்கப்பட்ட சீனாவுடன் உலகளாவிய அமெரிக்கப் போரின் உடனடி எதிர்பார்ப்புகளால் இயக்கப்படுகிறது - சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக முன்னுரிமையை பராமரிக்கும் முயற்சியில் நடத்தப்பட்டது.

1991 ல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்புக்கு முப்பது வருடங்களுக்கு பின்னர், உலக அமைதியின் சகாப்தத்தை தொடங்குவதாக முதலாளித்துவ பிரச்சாரகர்கள் பாராட்டினர், பெரும் சக்திகள் மீண்டும் பேரழிவை நோக்கி திரும்புகையில் கண்களை மூடிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் எதிரான அவர்களின் போர் ஏற்பாடுகள், முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்பின் கட்டமைப்பிற்குள் தொற்றுநோய் அல்லது உலக வெப்பமயமாதல் போன்ற முக்கியமான உலகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள எந்த ஒத்திசைவான சர்வதேச கொள்கையையும் வடிவமைக்க இயலாது என்பதற்கு சாட்சியமளிக்கின்றன.

மனிதகுலத்தை எதிர்கொள்ளும் எந்தவொரு பெரிய பிரச்சனைகளையும் தீர்க்க மனிதகுலத்தின் வளங்களை அணிதிரட்டுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் தேசிய முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச இயக்கத்தை உருவாக்க வேண்டும். குறிப்பாக சீனாவை குறிவைத்து புதிய ஏகாதிபத்திய போர்களை நோக்கி உலக முதலாளித்துவத்தின் வேகமான முனைப்பை எதிர்ப்பது இந்த இயக்கத்தின் இன்றியமையாத பணியாகும்.

இந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளில் பங்கேற்கும் குற்றவாளிகளின் பட்டியல், முழு முதலாளித்துவ ஒழுங்கின் அரசியல் சீரழிவை விளக்குகிறது.

இன்று, முதல் பேச்சாளராக இருப்பவர் பிரேசிலின் பாசிச ஜனாதிபதி, ஜெய்ர் போல்சனாரோ ஆவார். அவர் கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போட மறுத்ததாகவும், பிரேசிலிய இராணுவத்தின் சதித்திட்டத்திற்கு பிரச்சாரம் செய்வதாகவும் பெருமை பேசுகிறார். அவருடன் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன், AUKUS இல் முன்னணி நபராகவும், COVID-19 ஐ ஒழிப்பதற்கான விஞ்ஞான ரீதியான போராட்டத்தை எதிர்ப்பதிலும், 'இனி பூட்டுதல்கள் இல்லை - உடல்கள் ஆயிரக்கணக்கில் உயரட்டும்' எனக் கூறி இழிபெயரெடுத்தவர்.

அடுத்து, எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் இரண்டு வருட புரட்சிகர போராட்டங்களை நசுக்கிய லு திரியோனின் நண்பரான எகிப்திய ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-சிசி இருப்பார். 2013 ல் ஒரு இரத்தக்களரி இராணுவ சதித்திட்டத்தில் - கெய்ரோவின் தெருக்களில் ஆயிரக்கணக்கான நிராயுதபாணியான பொதுமக்களை சுட்டுக் கொன்றார்.

ஆகஸ்ட் 29 அன்று காபூலில் நடந்த அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட குறைந்தது 10 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை அடுத்து, அமெரிக்க அதிபர் பைடென் கைகளில் இரத்தத்துடன் தோன்றினார். பைடென், சீனாவை குறிவைக்கும் பிற்போக்குத்தனமான AUKUS சூழ்ச்சிகளின் மையத்தில் இருக்கிறார்.

AUKUS கூட்டணியின் தயாரிப்பு, COVID-19 தொற்றுநோய் இயற்கையான தோற்றத்தின் வைரஸால் அல்ல, மாறாக சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸால் ஏற்படுகிறது என்ற ஒரு மோசமான பத்திரிகை பிரச்சாரத்துடன் கைகோர்த்து, வாஷிங்டன் தலைமையில் நடைபெறுகிறது. நம்பகமான விஞ்ஞான அதிகாரிகளிடையே ஆதரவு இல்லாத இந்த அவதூறு, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏறக்குறைய 2 மில்லியன் இறப்புகளுக்கு சீனாவை தவறாக குற்றம் சாட்டும் போர் பிரச்சாரத்திற்கு சமம்.

கோவிட்-19 இலிருந்து இறக்கும் எண்ணிக்கையின் பொறுப்பானது முதன்மையாக நேட்டோ சக்திகளிடம் உள்ளது, இந்த விஞ்ஞான அடிப்படையிலான கொள்கைகளை பெருநிறுவன இலாபங்கள் மீது தாங்க முடியாத கட்டுப்பாடு என்று எதிர்த்தது. இதன் விளைவாக, உலக கோடீஸ்வரர்களின் கூட்டுச் சொத்து 60 சதவிகிதம், 8 டிரில்லியன் டாலரிலிருந்து 13.1 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பாதுகாப்பற்ற பணியிடங்கள் மற்றும் வேலைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

ஐ.நா பொதுச்சபையில் நடக்கவிருக்கும் சீரழிந்த காட்சி தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு வரலாற்று எச்சரிக்கையாகும். கோவிட்-19 தொற்றுநோய் ஒரு தூண்டுதல் நிகழ்வாக செயல்பட்டுள்ளது, இது உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியை பெரிதும் தீவிரப்படுத்துகிறது மற்றும் இன்றைய அவசர சர்வதேச நெருக்கடிகளுக்கு எந்தவொரு முற்போக்கான, பொதுவான தீர்வையும் வகுக்க ஆளும் வர்க்கத்தின் இயலாமையை அம்பலப்படுத்துகிறது. இந்த பணி, கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு விஞ்ஞானபூர்வமாக வழிநடத்தப்பட்ட பிரச்சாரத்திற்கும், சோசலிசத்துக்காகவும், போருக்கு எதிராக ஒரு சர்வதேச இயக்கத்தை உருவாக்க போராடும் தொழிலாள வர்க்கத்தின் மீது விழுகிறது.

Loading