1619 திட்டத்தால் தூண்டப்பட்டு, வரலாற்றாளர் வூடி ஹோல்டன் அமெரிக்க புரட்சி மீது தாக்குதல் தொடுக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தெற்கு கரோலினா பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் வூடி ஹோல்டன் (Woody Holton), அமெரிக்க புரட்சியானது அடிமைமுறையைப் பாதுகாக்க நடத்தப்பட்ட ஓர் எதிர்புரட்சி என்ற நியூ யோர்க் டைம்ஸின் 1619 திட்டத்தின் மையக் கூற்றை ஆதரித்து ஒரு பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.

வூடி ஹோல்டன் (Alcethron)

அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4 இல் வாஷிங்டன் போஸ்ட் கருத்துரை ஒன்றிலிருந்து ஹோல்டன் இந்த முயற்சியை தொடங்கினார், காலனித்துவ வேர்ஜீனியாவின் ஆளுநராக இருந்த டன்மோர் பிரபு ஏற்கனவே கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த அடிமைகளுக்கு எஜமானர்களை விட்டு வெளியேற சுதந்திரம் வழங்கும் பிரகடனத்தை வெளியிடாமல் இருந்திருந்தால், அமெரிக்கப் புரட்சி தவிர்க்கப்பட்டிருக்கும் என்றவர் அதில் வாதிட்டார். மேலும் சுதந்திரப் பிரகடனம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஹோல்டன் வாதிட்டார். ஹோல்டனின் பார்வையில், அது ஒரு புரட்சிகர அறிக்கை அல்ல, மாறாக ஒரு பிரிவினைவாத சட்ட முன்மொழிவாக இருந்தது.

ஹோவர்ட் பைல் வரைந்த பங்கர் மலைப் போரில் பிரிட்டிஷ் வீரர்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர்

சுதந்திரப் பிரகடனமானது அவர் குறிப்பிடும் “ஆங்கில-கறுப்பின கூட்டணி' க்கு எதிரான இனரீதியிலான எதிர்வினை என்பதை நிரூபிக்க அவர் ஒவ்வொரு நாளும் அவர் ட்வீட்டர் கணக்கில் கூடுதலாக ஒரு 'ஆதார தகவல்களை' பதிய இருப்பதாக செப்டம்பர் 1 இல் ஹோல்டன் அறிவித்தார். அமெரிக்க சுதந்திரம் பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டான 1776 ஐ குறிக்கும் விதத்தில் எரிச்சலூட்டும் குறிப்பாக தொடர்ந்து 76 நாட்களுக்கு அவ்வாறு செய்ய அவர் உத்தேசித்துள்ளார். இந்த வாதத்தை ஆதரிக்க அவரிடம் இன்னும் பல 'ஆதார தகவல்கள்' இருப்பதாகவும் ஹோல்டன் அவரை பின்தொடர்பவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறார்.

பிழைகள் நிறைந்த மற்றும் எழுத்துத் திருட்டு செய்யப்பட்ட நூலான 1776 இன் எதிர்-புரட்சி (Counter-Revolution of 1776) என்ற நூலின் ஆசிரியரும், அவருக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஸ்ராலினிசவாதியுமான ஜெரால்ட் ஹோர்ன் (Gerald Horne) உட்பட அவருடன் ஒத்த சிந்தனை கொண்ட வரலாற்றாளர்களின் படைப்புகளை கருத்திலெடுக்குமாறு ஹோல்டன் ஐயுறவுவாதிகளை ஊக்குவிக்கிறார். ஹோர்னை ஹோல்டன் தழுவுவது, அவர், வரலாற்று ஆவணக் காப்பகத்தின் ஆவணங்களை அப்பட்டமாக சிதைத்து பொய்மைப்படுத்தும் ஹோர்ன் அணுகுமுறையைப் பயன்படுத்த தயாராகிறார் என்பதற்கு ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட ஹோர்ன் நூலின் ஒரு கவனமான மற்றும் விரிவான திறனாய்வில் ஃபிரெட் ஷ்லெஜர் (Fred Schleger) பின்வருமாறு நிறைவு செய்தார்:

ஹோர்னின் புலமை மிகச் சிறிய குறுக்கு ஆய்வுக்கும் கூட தாக்குப் பிடிப்பதாக இல்லை. ஹோர்னின் படைப்பு துல்லியமில்லை என்பதை விட மோசமாக உள்ளது: இது, பெரியளவில், ஒரு புனைகதை படைப்பாக உள்ளது. மூல ஆவணத்தைக் குறித்த அவர் விளக்கம் கற்பனையை நினைவூட்டுகின்றது: மேற்கோள்கள் அவற்றின் அர்த்தத்தை தலைகீழாக மாற்றுகின்றன, ஆதாரங்கள் தவறாகக் கூறப்படுகின்றன, அடிப்படை உண்மைகள் கூட தவறாக சித்தரிக்கப்படுகின்றன — அல்லது பட்டவர்த்தனமான பிழையாக உள்ளன. … ஹோர்னின் தவறான விளக்கங்களை எது இந்தளவுக்குக் காழ்ப்புணர்ச்சியான பாணிக்கு மாற்றுகிறது என்றால் அது அவற்றின் அளவோ அல்லது எண்ணிக்கையோ அல்ல, மாறாக அமெரிக்க வரலாற்றைத் திருத்தி எழுதும் அவர் திட்டத்தின் மையத்தில் அவை வைக்கப்படுகின்றன.

Lord Dunmore தப்பித்தல் / Ogden; American Colortype Co., N.Y.

“கறுப்பின-விரோத இனவாதம்' என்பது “அவ்வப்போதைய பகுதிசார் நோய்தொற்று” (endemic), இது 'இந்நாட்டின் மரபணுவிலேயே உள்ளார்ந்து உள்ளது' என்று 1619 திட்டத்தால் ஈர்க்கப்பட்டவராக பெயரெடுத்துள்ள ஊடக பிரபலம் நிக்கோல் ஹன்னா-ஜோன்ஸின் வலியுறுத்தலில், முகஸ்துதியோடு சேர்ந்து, ஹோல்டன் அவருடன் உடன்படுகிறார். இந்த இனவாத, வரலாற்று-விரோத மற்றும் அடிப்படையிலேயே வலதுசாரி ஆய்வு முடிவை உறுதிப்படுத்தும் முயற்சியில், துல்லியமாக ஹோல்டன், நாம் பார்க்க இருக்கும் விதத்தில், வரலாற்றுப் பதிவுகளை தவறாகப் பயன்படுத்தவும், அவரே எடுத்துள்ள முந்தைய நிலைப்பாடுகளை தலைகீழாக மாற்றவும், அறிஞர்களின் விமர்சனம் மீது ஆத்திரமூட்டும் மற்றும் ஆதாரமற்ற தாக்குதல்களைத் தொடுக்கவும் விரும்புகிறார்.

சுதந்திரம் இனிப்பானது: அமெரிக்க புரட்சியின் மறைக்கப்பட்ட வரலாறு என்ற புத்தகத்தை ஹோல்டன் அக்டோபரில் வெளியிட உள்ளார், இதில் அவர் அமெரிக்க புரட்சியை ஒரு பிற்போக்கு நிகழ்வாக மதிப்பு குறைக்கும் அவர் முயற்சியை முன்னெடுக்க உறுதியளிக்கிறார். இது, மதரீதியாக தொனிப்பதற்கு பொருத்தமான, 1619: ஒரு புதிய தோற்றுவாயின் கதை (1619: A New Origin Story) என்ற தலைப்பிலான ஒரு புதிய நூல் நியூ யோர்க் டைம்ஸில் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக வெளியாகும். அதே நேரத்தில் 1619 திட்டம் சம்பந்தமான மற்றொரு நூலும் வெளியிடப்படும், இது குழந்தைகளுக்காக எழுதப்பட்டிருக்கும்.

வாஷிங்டன் போஸ்டில் வெளியான ஹோல்டனின் கட்டுரை

ஹோல்டன் போஸ்டில் எழுதிய கட்டுரையில், 'கறுப்பினத்தவர்கள் பிரிட்டிஷாருடன் ஒரு முறைசாரா கூட்டணியை உருவாக்கி இருந்ததை' அறிந்து 'வெள்ளையினத்தவர்கள்' 'சீற்றமடைந்த போது' தான் அமெரிக்கப் புரட்சி ஏற்பட்டதென அவர் நம்புவதாக கூறுகிறார். இந்த கட்டுப்படுத்த முடியாத இனவாத சீற்றம் தான் 'வெள்ளையர்கள்' சுதந்திரத்தை முறையாக அறிவிக்க காரணமாக இருந்தது என்கிறார். ஹோல்டன் கருத்துப்படி, அமெரிக்கப் புரட்சி புரட்சியே அல்ல, மாறாக பிரிட்டிஷ் பேரரசால் முன்வைக்கப்பட்ட அடிமை விடுதலை அச்சுறுத்தலுக்கு ஒரு 'பிரிவினைவாத' எதிர்வினையாக இருந்தது என்றாகிறது. இவ்விதத்தில், அதன் உண்மையான சாராம்சம், அது 1861 இன் கூட்டமைப்பு எதிர்ப்புரட்சிக்கான ஓர் வெள்ளோட்டம் என்பதற்கு அதிகமாக வேறொன்றுமில்லை என்றாகிறது. ஹோல்டன், ட்வீட்டரில், டன்மோர் பிரகடனத்தை லிங்கனின் விடுதலை பிரகடனத்துடனும் கூட சமப்படுத்துகிறார்.

அமெரிக்காவின் உருவாக்கம் அடிமைமுறைக்கு ஆதரவான எதிர்ப்புரட்சி என்ற அவர் கூற்றுக்கு ஆதரவாக, ஹோல்டன் 1772 சோமர்செட் (Somerset) தீர்மானத்தை சுட்டிக் காட்டுகிறார். அதில் கிங்ஸ் பெஞ்ச் நீதிமன்றத்தின் நீதிபதி லார்ட் மான்ஸ்பீல்ட், இங்கிலாந்தில் அடிமைமுறை சட்டப்பூர்வமாக நிறுவப்படவில்லை என்பதால் அது இங்கிலாந்தில் இருக்க முடியாது என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு 13 காலனி நாடுகளில் அங்கே அதற்கு சட்டரீதியான பயன்பாடு இல்லை என்றாலும் அங்கெல்லாம் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியதாக ஹோல்டன் கூறுகிறார். ஆனால் அந்த தீர்மானத்தின் தாக்கத்தை ஆராயும் ஓர் அறிஞர் 'தெற்கு செய்தித்தாள்களில் சோமர்செட் பற்றிய ஆறு குறிப்புகளை' மட்டுமே காணமுடியும் என்பதில் அவர் உடன்படுகிறார். பிரிட்டிஷ் இந்தியாவிலும் ஜமைக்காவிலும் சோமர்செட் கடுமையாக எதிர்க்கப்பட்டது, அமெரிக்க நெருக்கடியின் போது அந்த பேரரசிடம் இருந்து எந்த ஆட்சேபணையும் அதற்கு வரவில்லை, ஆனால் இதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. எந்த விதத்தில் பார்த்தாலும், தபால் வில்லைகள், தேயிலை மற்றும் அரச பிரகடன சட்டங்களை (Stamp, Tea and Declaratory acts) எதிர்த்த பத்திரிகைகளின் நூறாயிரக் கணக்கான பக்கங்கள் மற்றும் துண்டறிக்கைகளுடன் ஒப்பிட்டால் அந்த ஆறு 'குறிப்புகள்' ஒன்றுமே இல்லை. அந்த நூறாயிரக் கணக்கான செய்திகள் மற்றும் அறிக்கைகளை 'நாடாளுமன்றத்தின் புதிய முறைகளுக்கு எதிரான எதிர்ப்பு' என்பதற்கு அதிகமாக ஒன்றுமில்லை என்று ஹோல்டன் உதறிவிடுகிறார்.

'STAMP சட்ட விளைவுகளின் சின்னம்'. பென்சில்வேனியா ஜேர்னலில் இருந்து ஒரு பகுதி, அக்டோபர் 1765.

இவ்வாறாக ஹோல்டன் அவர் வாதத்தை டன்மோர் பிரகடனத்தின் அடிப்படையில் அமைக்க நிர்பந்திக்கப்படுகிறார், அரச மகுடத்திற்கு எதிராக கலகத்தில் இருந்த எஜமானர்களுக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்திய அடிமைகளுக்கு சுதந்திரம் வழங்கி, அந்த பிரகடனம் 1775 நவம்பரில் வேர்ஜீனியாவின் கடைசி அரச ஆளுநரால் (டன்மோரின் நான்காவது மேதகு கோமான் ஜான் முர்ரேயால்) வெளியிடப்பட்டது.

ஹோல்டனின் கருத்துப்படி, 1775 வசந்த காலத்தில் புரட்சிகரப் போர் தொடங்கிய உடனேயே கிளர்ச்சியாக வெடித்து, 1763 இல் பிரெஞ்சு மற்றும் இந்தியப் போரின் முடிவில் இருந்து அதிகரித்திருந்த ஏகாதிபத்திய நெருக்கடி, டன்மோர் பிரபு ஆரம்பிக்காதுவிட்டிருந்தாலும் பூதாகரமாக ஒரு பெரும்புயலாக வெடித்திருக்குமாம். 1775 நவம்பரில் டன்மோர் அவர் பிரகடனத்தை வெளியிட்டவுடன், 'பிரிவினைக்கு' ஆதரவாக வெள்ளையின அமெரிக்கர்கள் மத்தியில் ஓர் இனவாத பேரலை மூண்டெழுந்ததாம். ஹோல்டன் அவர் கட்டுரையில் முன்வைக்கும் ஒவ்வொரு துணுக்கு ஆதாரமும், சிலவேளைகளில் வரலாற்றின் மிகவும் நம்ப முடியாத புரட்சியாளராக டன்மோர் பிரபுவையே சுற்றி சுற்றி வருகிறது.

அதைக் குறித்து ஹோல்டன் இவ்வாறு கூறுகிறார்,

1775 வரை, பெரும்பாலான வெள்ளையின அமெரிக்கர்கள் முத்திரைச் சட்டம் மற்றும் தேயிலை வரி போன்ற நாடாளுமன்றத்தின் புதிய முறைகளை எதிர்த்தனர், ஆனால் சுதந்திரம் மீது அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கறுப்பினத்தவர்கள் பிரிட்டிஷாருடன் ஒரு முறைசாரா கூட்டணியை உருவாக்கியதாக கேள்விப்பட்டதும், வெள்ளையினத்தவர்கள் கோபமடைந்தனர்... அடிமை மக்களுடன் அவர்களின் தலைவிதியை ஒன்றிணைத்திருந்தற்காக பிரிட்டிஷார் மீது வெள்ளையின மக்களின் சீற்றம் தான் சுதந்திரத்தை அங்கீகரிப்பதற்கான துரதிருஷ்டவசமான நகர்வை நோக்கி பலரை உந்தியது...

இந்த தீர்மானத்தை எட்டுவதற்கு, ஹோல்டன் புரட்சியின் அடிப்படை காலவரிசையை புறக்கணிக்க வேண்டி இருந்தது. உண்மையில் டன்மோரின் உத்தரவுக்கு முன்னரே ஆறு மாதங்களாக போர் நடந்து கொண்டிருந்தது. நியூ இங்கிலாந்தில் ஏற்கனவே பெரும் போர்கள் நடந்திருந்தன, கான்டினென்டல் படைப்பிரிவு (Continental Army - கண்டம்தழுவிய படைப்பிரிவு) உருவாக்கப்பட்டிருந்தது, காலனிகள் எங்கிலும் இரட்டை அதிகார சூழல் உருவாகி இருந்தது, ஏகாதிபத்திய அரசு நொறுங்கிக் கொண்டிருந்தது மற்றும் அதன் இடத்தில் புதிய புரட்சிகர அதிகாரக் கட்டமைப்புகள் வந்து கொண்டிருந்தன, அதன் தலையாய நிகழ்வாக பிலடெல்பியாவில் கான்டினென்டல் காங்கிரஸ் (கண்டந்தழுவிய காங்கிரஸ் மகாசபை) இருந்தது. வேர்ஜீனியாவில், அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் பிரிட்டிஷ் அதிகாரம் விரைவாக கலைக்கப்பட்டது. உண்மையில், ஜேம்ஸ் ஆற்றில் ஒரு பிரிட்டிஷ் கடற்படை கப்பலில் அகதியாக இருந்து தான் டன்மோர் அவர் பிரகடனத்தை வெளியிட்டார் என்பதை ஹோல்டன் சுட்டிக் காட்டவில்லை! Robert Middlekauff அமெரிக்க புரட்சி பற்றிய அவரின் புகழ்பெற்ற தொகுப்பான The Glorious Cause இல் இந்த காட்சியைப் படம் பிடித்திருந்தார்:

புதிய பெயரின் கீழ் கூட்டப்பட்டிருந்த பர்கெஸ்சியர்களின் பழைய சபையின் (House of Burgesses) கூட்டம் ஆட்சியமைப்பதற்கான பணியைக் கையிலெடுத்திருந்த வேளையில், அங்கே அவர் உட்கார்ந்திருந்தார்... நவம்பர் வாக்கில், பெயர்ந்து கொண்டிருந்த பீடத்தில் உட்கார்ந்திருந்த நிலையில் டன்மோர் விரக்தியோடு, பிரிட்டிஷ் அதிகாரத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார், அதுவும் அவரைப் போலவே அதிகளவில் தள்ளாடிக் கொண்டிருந்தது. [1]

அமெரிக்க புரட்சியின் வரலாற்றாளர்கள் ஹோல்டனைக் கண்டிக்கின்றனர்

செப்டம்பர் 6 இல், அமெரிக்கப் புரட்சியின் ஆறு வரலாற்றாளர்கள் — கரோல் பெர்கின், ரிச்சர்ட் டி. பிரவுன், ஜேன் ஈ. கால்வெர்ட், ஜோசப் ஜே. எல்லிஸ், ஜாக் என். ராகோவ், கோர்டன் எஸ். வுட் ஆகியோர் — ஒரு பகிரங்கக் கடிதம் வெளியிட்டனர், அது ஒரு சில பத்திகளிலேயே, ஹோல்டன் அவர் வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையில் முன்வைத்த முக்கிய வாதங்களைத் தகர்த்திருந்தது. அந்த வரலாற்றாசிரியர்கள் டஜன் கணக்கில் மிகவும் மதிக்கத்தக்க புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்ட முன்னணி அறிஞர்கள் என்பதோடு, மூன்று புலிட்சர் விருதுகள் பெற்றவர்கள் உட்பட அவர்களில் பலர் கௌரவமான எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர்கள் ஆவர்.

இந்த வரலாற்றாளர்கள், கறுப்பின மக்களுக்கும் பிரிட்டிஷ் பேரரசுக்கும் இடையிலான ஒரு 'கூட்டணி' என்று ஹோல்டன் குறிப்பிடும் போலித்தனத்தின் மீது ஒருமுனைப்படுகின்றனர். உண்மையில் சொல்லப் போனால் வேர்ஜீனியாவில் இருந்ததாக மதிப்பிடப்பட்ட 300,000 அடிமைகளில் வெறும் 200 பேர் மட்டுமே, அதாவது 1,000 இல் ஒருவர், டன்மோரின் 'எத்தியோப்பிய படைப்பிரிவில்' (Ethiopian Regiment) நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சம்பவங்களின் அடிப்படை தொடர்ச்சியையே மறந்து போயிருப்பதாக தெரியும் ஹோல்டனுக்கு, “மற்ற காலனிகளைப் போலவே, நவம்பர் 1775 வாக்கில், வேர்ஜீனியாவும், பிரிட்டிஷ் அதிகாரத்திலிருந்து நடைமுறையளவில் சுதந்திரத்தை நோக்கி வேகமாக நகர்ந்திருந்தது,” என்பதை வரலாற்றாளர்கள் நினைவூட்டனர். “டன்மோர், அடிமை ஒழிப்பு கருத்துக்களால் உந்தப்பட்டு அல்ல, இராணுவ அழுத்தத்தால் உந்தப்பட்டே அவர் பிரகடனத்தை அறிவிக்க தள்ளப்பட்டார். 1774 இல், காலனிய மக்கள் ஏற்கனவே பிரிட்டிஷ் அதிகாரத்திலிருந்து நடைமுறையளவில் சுதந்திரம் அடைந்திருந்தனர்,” என்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

லெக்சிங்டன் மற்றும் கான்கார்ட் போர்களுடன், ஏற்கனவே ஏப்ரல் 1775 லேயே போர் தொடங்கி இருந்தது. அதைத் தொடர்ந்து நடந்த இரண்டாம் கான்டினென்டல் மாநாடு கனடா மீதான படையெடுப்புக்குக் கட்டளையிட ஜோர்ஜ் வாஷிங்டனுக்கு அதிகாரம் வழங்கியது என்பதை அவர்கள் விளக்குகிறார்கள். ஆகஸ்ட் 1775 இல் ஏற்கனவே, அரசர் 'காலனி மக்கள் வெளிப்படையான கலகத்தில் இறங்கியிருப்பாக அறிவித்தார்' என்றவர்கள் எழுதுகிறார்கள். 'மூன்று மாதங்களுக்குப் பின்னர் வந்த டன்மோரின் பிரகடனம் எதையும் தொடங்கி வைக்கவில்லை; மாறாக அது ஏற்கனவே சிறப்பாக நடந்து கொண்டிருந்த ஓர் இயக்கத்தை நசுக்க முயன்றது.' சோமர்செட் தீர்மானத்தைப் பொறுத்த வரை, 'வேர்ஜீனியாவின் தலைவர்கள் யாருமே சோமர்செட் பற்றி ஒரு நாட்குறிப்பிலோ அல்லது கடிதப் பரிமாற்றத்திலோ மேற்கோள் காட்டவில்லை—வாஷிங்டனும் காட்டவில்லை, ஜெபர்சனும் இல்லை அல்லது வேறு யாருமே குறிப்பிடவில்லை' என்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

'நவீன வரலாற்றில் அடிமைமுறையை எதிர்க்கும் நோக்கம் கொண்ட முதல் சமூகம் 1775 இல் புரட்சிகர பிலடெல்பியாவில் தோன்றியது' என்றும், 'போரின் போது சில வடக்கு மாநிலங்கள் சட்டத்தால் அடிமை முறையை ஒழிப்பதற்காக, அடிமை முறையைத் தக்க வைத்திருந்த உலக வரலாற்றின் முதல் அமைப்புகளாக ஆகியிருந்தன,” என்றும் எழுதிய அந்த வரலாற்றாசிரியர்கள், அமெரிக்க புரட்சியானது அடிமைமுறை எதிர்ப்புணர்வை ஊக்குவித்தது என்பதை அடிக்கோடிடுகின்றனர்.

அந்த விமர்சனம் மிகவும் நிதானமாக மற்றும் சக-பாணி சொற்களில் முன்வைக்கப்படுகிறது. அடிமைமுறை அமெரிக்க வரலாற்றின் மையத்தில் வைத்து ஆராயப்பட வேண்டுமென தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொள்வதாக எழுதும் அந்த வரலாற்றாளர்கள், அவர்கள் 'சமூக நீதியை நம்புவதாகவும், ஆனால் அதற்காக வரலாற்று உண்மையை விலை கொடுக்க முடியாது' என்றும் எழுதுகிறார்கள்.

ஹோல்டன் டன்மோர் பிரபுவில் அதிகமாக தங்கியிருக்கின்றார்

இரண்டு நாட்களுக்குள் ஹோல்டன் தன்னைப் பாதுகாக்கும் கவனமான ஒரு பதிலை வெளியிட்டார். [2] அந்த வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்ட எந்தவொரு குறிப்பிட்ட புள்ளியையும் சவால் செய்யவில்லை. அதற்கு மாறாக, போஸ்டில் வெளியான அவரின் '700 வார்த்தை' கட்டுரைக்கு—உண்மையில் அது அதை விட இரண்டு மடங்கு நீளமாக இருந்தது—அந்த வரலாற்றாளர்கள் விடையிறுத்ததன் மீது அவர் எரிச்சலை வெளிப்படுத்தினார் (“அது எனக்கு வருத்தமளிக்கிறது...”), அவர்கள் வெளியாக உள்ள அவரின் '700 பக்க புத்தகத்திற்காக' காத்திருந்து இருக்கலாம் என்பது அவர் விருப்பதாக இருந்தது.

ஹோல்டன் போஸ்ட் இல் அவர் பிரதிநிதித்துவம் செய்த புரட்சி பற்றிய காரண விளக்கத்திலிருந்து பின்வாங்குவதைப் போல காட்டிக் கொள்கிறார். தவறான பொருள்விளக்கத்தால் பாதிக்கப்பட்டதாக வேஷமிடும் ஹோல்டன், அவர் விமர்சகர்கள் கூறுவதைப் போல அவர் டன்மோர் பிரகடனம் மீது அந்தளவுக்கு அதிக வலியுறுத்தலை வைக்கவில்லை என்று இப்போது வாதிடுகிறார்:

நான், அந்த பேராசிரியர்கள் விமர்சிக்கும் அந்த கட்டுரையில், இத்தகைய வெள்ளையின மீட்டமைப்புவாதிகள் (restorationists) அவர்களின் அடிமைகளுடன் சேர்ந்து தாய் நாட்டுக்கு ஒத்துழைத்ததே அவர்களைச் சுதந்திரத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களாக மாற்றிய காரணிகளில் ஒன்றாக இருந்தது. அது தான் காரணம் என்பதல்ல, ஆனால் அதுவும் ஒரு காரணமாக இருந்தது என்றே வாதிட்டிருந்தேன். [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது]

உண்மையில், ஹோல்டனின் போஸ்ட் கட்டுரை பிரிட்டிஷிடம் இருந்து விடுதலைக்காக வெள்ளையினத்தவர் மத்தியில் இனவாத அச்சங்கள் நிலவியதாக குறிப்பிட்டதற்கு அப்பாற்பட்டு வேறெந்த 'காரணியையும்' குறிப்பிடவில்லை. [3] டன்மோர் பிரகடனத்திற்கு முன்னர் நடந்த ஒவ்வொன்றையும் அவர் சர்வ சாதாரணமாக ஒதுக்கித் தள்ளி, 'பெரும்பாலான வெள்ளையின அமெரிக்கர்கள்... சுதந்திரத்தில் ஆர்வம் காட்டவில்லை,” ஆனால் 'பிரிட்டிஷாருடன் கறுப்பின மக்கள் ஒரு முறைசாரா கூட்டணியை உருவாக்கியதாக கேள்விப்பட்ட போது, வெள்ளையின மக்கள் கோபமடைந்தனர்' என்று எழுதுகிறார். அவர்களுக்குள் இருந்த இனவாதம் டன்மோரால் கட்டவிழ்ந்தது, கோபமடைந்த 'வெள்ளையினத்தவர்' “பிரிவினைக்கு' முடிவெடுத்தனர் என்கிறார்.

ஹோல்டன் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக வெறுமனே பாசாங்கு செய்கிறார். வரலாற்றாசிரியர்களுக்கு அவர் அளிக்கும் பதிலில் சுற்றி வளைத்த வார்த்தைகளில் அவரின் நிஜமான உள்அர்த்தத்தை மறைக்கப் பார்க்கிறார். இருந்தாலும் அதை மறைக்க முடியவில்லை. டன்மோர் ஏற்படுத்திய 'ஆங்கிலோ-கறுப்பின கூட்டணி' மட்டுமே புரட்சியில் நிஜமான காரணியாக இருந்தது என்பதை ஹோல்டன் தொடர்ந்து வலியுறுத்துகிறார். அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

இத்தகைய ஆபிரிக்க அமெரிக்க முன்முயற்சிகள் தொடங்கிய 1774 இலையுதிர் காலத்திலேயே வெள்ளையின காலனி மக்கள் ஏற்கனவே சுதந்திரத்தை நோக்கி நகர்ந்திருந்ததாக பேராசிரியர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதில் அவர்கள்—என்ன நடந்திருக்குமென அவர்களுக்கு தெரிந்ததைப் போல ஊகித்து—உண்மைக்குப் புறம்பான வரலாறை இட்டுக் கட்டுகிறார்கள். 1762 இல் இருந்து நாடாளுமன்றம் அதன் காலனித்துவச் சட்டங்கள் அனைத்தையும் இரத்து செய்யத் தீர்மானித்திருந்தால், அது அமெரிக்க பேரரசைச் சேதமில்லாமல் வைத்திருக்கும் என்பது, தாமதமாக என்றாலும் கூட, எனக்குத் தெளிவாக தெரிகிறது. தெரிந்த விஷயங்களை மறக்க முடியாமல் நாம் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக தெற்கில் [மூலப்பிரதியில் உள்ளவாறு], காலனித்துவவாதிகளின் அடிமைகளுடன் சேர்ந்து ஒத்துழைப்பது என்ற ஆளுநர்கள் மற்றும் கடற்படை அதிகாரிகளின் முடிவே சமரசத்திற்கான சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே அகற்றியிருந்த பிரிட்டிஷ் ஆக்ரோஷங்களில் ஒன்றாக இருந்தது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஹோல்டனின் விமர்சகர்களுக்கு 'என்ன நடந்திருக்கும் என்பது' தெரியாது. வூடி ஹோல்டனுக்கு மட்டுந்தான் 'என்ன நடந்திருக்கும் என்பது தெரியும்.' அதுவும் ...டன்மோர் பிரபு இல்லாமல் எதுவும் நடக்கவில்லை! போரின் ஆரம்பத்தில் இரத்தம் சிந்திய பல ஆயிரம் மரணங்கள், காலனி மக்கள் கிளர்ச்சி மீது அரசரின் போர் பிரகடனம், கான்டினென்டல் இராணுவத்தின் தலைமையில் வாஷிங்டனை நியமித்தமை, இன்னும் பல உள்ளடங்கலாக, டன்மோர் பிரகடனத்திற்கு முன்னர் நடந்த அனைத்தும், இவை எல்லாமும் 'மறக்கப்பட்டுவிடுகிறது.” டன்மோர் பிரகடனம் மட்டும் தான் 'மறக்க முடியாத' ஒன்றாக நிற்கிறது. அது வரையில், நாடாளுமன்றம் 'அதன் அமெரிக்க பேரரசைச் சிதையாமல் வைத்திருக்க முடிந்தது.” டன்மோர் பிரகடனம் மட்டுந்தான், அது தூண்டிவிட்ட வெள்ளையின மக்களின் இனவாத சீற்றத்தின் காரணமாக, “சமரசத்திற்கான சாத்தியக்கூறை முன்கூட்டியே இல்லாது செய்துவிட்டது.”

ஹோல்டன் அவருடன் அவரே முரண்படுவதைக் கூட உணர்ந்ததாக தெரியவில்லை. ஒருபுறம் அவர் டன்மோர் பிரகடனம் பேரழிவுகரமான பிழை என்றும், பிரிட்டிஷாரின் வட அமெரிக்க பேரரசின் பெரும்பகுதியை விலையாக கொடுத்ததாகவும் குறிப்பிடுகிறார். அதேநேரத்தில் அவர் அதை ஒரு தலைச்சிறந்த புரட்சிகர அடியாக பிரதிநிதித்துவம் செய்கிறார். அனேகமாக அவரின் வரவிருக்கும் '700 பக்க புத்தகம்' இதனை சாத்தியமற்றதாக்கும்.

1619 திட்ட சர்ச்சையையும் மற்றும் ஹன்னா-ஜோன்ஸ் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் ஜேக் சில்வர்ஸ்டைன் ஆகியோரின் செயல்பாடுகளையும் பின்தொடர்ந்தவர்களுக்கு ஹோல்டனின் அணுகுமுறை பரிச்சயமாக இருக்கும். முக்கிய பார்வையாளர்களுக்கு, வாஷிங்டன் போஸ்ட் வாசகர்களுக்கு, ஹோல்டன் மிகவும் விஷமத்தனமான விபரத்தை சாத்தியமாக்குகிறார்: வெள்ளையின மக்களின் இனவாத சீற்றந்தான் புரட்சிக்கான ஒரே காரணம்! என்கிறார். பின்னர், அத்துறைசார் பிரபல அறிஞர்கள் சவால் விடுத்ததும், தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டவராக பாத்திரத்தை ஏற்று, அவரின் உண்மையான நிலைப்பாட்டிலிருந்து வஞ்சகமாக பின்வாங்குகிறார். இப்போதும் மற்றொரு இடத்தில், சமூக ஊடகத்தில், அவரும் அவரைப் பின்தொடர்பவர்களும் கொடூரமான உணர்வுபூர்வ தாக்குதல்களைத் தொடுக்கின்றனர், அவர்கள் —ஹோல்டனின் சொந்த குரூர வார்த்தைகளில் கூறுவதானால்— 'ஸ்தாபக தந்தையரைப் மதிப்பிழக்க செய்வதாக கூறி தனிப்பட்டமுறையில்' அதே அறிஞர்களைக் தாக்குகின்றார் குறை கூறுகிறார்.

அணுகுமுறை தான் மனிதன். ஹோல்டனும் அவர் ஆதரவாளர்களும் ஒரு நேர்மையான கல்வித்துறைசார் விவாவதத்தில் ஈடுபடவில்லை. தனது துறையில் மிகவும் அடிப்படை புலமைசார் தரங்களைக் கூட முறித்துக் கொண்டுள்ள ஒருவரால் வழங்கப்படும் 'வரலாறு' இது தான்.

ஹோல்டனுக்கு எதிராக ஹோல்டன்

ஹோல்டன் தன்னைத்தானே சேதப்படுத்திக் கொள்கிறார். டன்மோர் பிரகடனத்தை போருக்கு காரணமான ஒரே நிகழ்வாக ஆக்கும் அமெரிக்கப் புரட்சி பற்றிய அவரது புதிய ஒற்றைக்காரண கோட்பாடு, ஸ்தாபக தந்தை ஜோன் ஆதம்ஸின் மனைவி அபிகெய்ல் ஆதம்ஸ் (Abigail Adams) மீதான அவரின் பேன்கிராஃப்ட் விருது (Bancroft Award) பெற்ற வாழ்க்கை வரலாற்று நூலில் அவர் சித்தரிக்கும் ஒரு நிலைப்பாட்டுடன் முற்றிலும் முரண்படுகிறது:

அமெரிக்கப் புரட்சி தவிர்க்க முடியாததாக ஆனதற்கு ஒரேயொரு தருணம் தான் இருந்தது என்றால், அது லார்ட் நோர்த், பிரெட்ரிக் தலைமையில் பிரிட்டிஷ் அமைச்சகம் போஸ்டன் டீ கட்சிக்கு விடையிறுப்பதென அது தீர்மானித்த நாளாக இருந்தது. (நூற்றுக் கணக்கான போஸ்டன் தீவிரக் கொள்கையாளர்கள் கப்பல் தளங்களில் இருந்து உற்சாக கூச்சலிட்டுக் கொண்டிருந்தாலும்) டீ கட்சியை சிதைக்க வெறும் சுமார் ஐம்பது பேர் மட்டுமே பங்கெடுத்தனர். இருப்பினும், அந்த கொந்தளிப்புக்காக எல்லோருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டுமென நோர்த் முடிவெடுத்தார். 1774 வசந்த காலத்தின் ஒன்பது வாரக் காலத்தில், நாடாளுமன்றம் நான்கு நடைமுறைகளை நிறைவேற்றியது, அவை போஸ்டனில் மட்டுமல்ல, மாசசூசெட்ஸ் நெடுகிலும் மட்டுமல்ல, மாறாக பிரிட்டிஷ் வடக்கு அமெரிக்கா எங்கிலும் எச்சரிக்கையைப் பரப்பியது [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது]. [4]

மாசசூசெட்ஸின் போஸ்டனில் உள்ள லிபேர்ட்டி மரத்தின் கீழ் ஜனவரி 5, 1774 அன்று சுங்க ஆணையர் ஜோன் மால்கமுக்கு தார் மற்றும் இறகுகளைப் பயன்படுத்தி தண்டிக்கும் தேசபக்தர்கள்.

அபிகயில் ஆடம்ஸ் பற்றிய அவரின் வாழ்க்கை வரலாற்று நூலில் ஹோல்டன், 1773 டிசம்பரில் நடந்திருந்த போஸ்டன் டீ கட்சி சம்பவத்திற்கு 1774 கோடையில் நாடாளுமன்றத்தில் எழுந்த எதிர்வினையோடு அந்த போர் 'தவிர்க்க முடியாததாக ஆகியிருந்தது' என்று குறிப்பிடுகிறார். இந்த நிகழ்வுகள் டன்மோர் பிரகடனத்திற்கு பல மாதங்களுக்கு முன்பு நடந்தவை ஆகும். அதற்கு முன்னர் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டிருந்தது, அதை குறித்தும் அவர் அந்நூலில் மிகவும் விரிவாக விவாதித்துள்ளார், அதற்குப் பின்னர் தான் உண்மையில் போர் வெடித்தது. அபிகயில் ஆதம்ஸ் மீதான ஹோல்டனின் 483 பக்க தொகுப்பு டன்மோர் பிரகடனம் குறித்து ஒரேயொரு குறிப்பைக் கூட உள்ளடக்கி இருக்கவில்லை!

அபிகயில் ஆதம்ஸ் பற்றிய அவர் ஆய்வில், ஹோல்டன் மிகவும் பிரபலமான ஓர் அரசியல் பெண்மணியின் புரட்சியின் சிறந்த புள்ளியை அடைய முயற்சிக்கிறார். அவர் ஒரு புரட்சிகர தலைமுறையின் பாகமாக இருந்தார் என்பதையும், அவர் கணவர் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவராக இருந்தார் என்பதையும் தவிர வேறெதையும் அந்த நூல் குறிப்பிடவில்லை. அவர் தவறாக புரிந்து வைத்திருந்ததாக இப்போது அவர் வாதிட்டு வருவதை, ஹோல்டனின் அந்த வாழ்க்கை வரலாற்று நூல் எடுத்துக்காட்டுகிறது.

“ஆங்கிலோ-கறுப்பின கூட்டணி' பற்றிய ஹோல்டனின் கட்டுக்கதை

“ஆங்கிலோ-கறுப்பினத்தவர் கூட்டணி' என்பது என்ன அர்த்தப்படுத்துகிறது என்று வரலாற்றாளர் ரேமண்ட் லாவெர்ட் சக உணர்வுடன் மீண்டும் அழுத்தமளித்த போது, ஹோல்டன் உறுதியாக வெறுக்கத்தக்க ஒரு வசைமாரியைப் பொழிந்தார். ஆனால் அவர் லாவெர்ட்டின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை.

இது வரை அவர் முன் வைத்த ஆதாரங்களில் இருந்து சாத்தியமானளவுக்குத் தகவல்களைச் சேகரித்து பார்த்தால், 1774 மற்றும் 1775 இல் சில வேர்ஜீனிய அடிமைகள் பிரிட்டிஷ் தரப்புக்குச் சென்றிருந்தனர் என்ற உண்மையிலிருந்து அது போன்றவொரு 'கூட்டணி' இருந்ததாக ஹோல்டன் முடிவெடுக்கிறார். பின்னர் அந்த கூட்டணி டன்மோர் பிரகடனத்தால் உறுதிப்பட்டதாக அவர் கூறுகிறார். அவரின் போஸ்ட் கட்டுரையில், ஹோல்டன் பின்வருமாறு எழுதுகிறார்,

லெக்சிங்டன் மற்றும் கான்கார்ட் போர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர், 1774 நவம்பரில் தொடங்கி வேர்ஜீனியா பீட்மாண்ட் கறுப்பினத்தவர்கள், காலனித்துவ மக்களுக்கும் மன்னருக்கும் இடையே ஏற்படவிருந்த மோதலை அவர்களின் விடுதலைக்கு எவ்வாறு பயன்படுத்துவது என ஆலோசிக்க ஒன்றுகூடினர். அடுத்த 12 மாதங்களில், தெற்கில் இருந்த ஆபிரிக்க அமெரிக்கர்கள் தொந்தரவுக்கு உள்ளான அரச அதிகாரிகளிடையே, நீங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறீர்கள், உங்களுக்கு நாங்கள் அவசியப்படுவோம் — எங்களுக்கு சுதந்திரம் வழங்கினால் நாங்கள் உங்களுக்காக சண்டையிடுவோம் என்று குறிப்பாக இந்த தொனியை வெளிப்படுத்தினர். முதலில் பிரிட்டிஷ் மறுத்தாலும், தவிர்க்க இயலாமல் வேர்ஜீனியாவின் கடைசி அரச ஆளுநரான டன்மோர் பிரபு அவர் 'எத்தியோப்பிய படைப்பிரிவு' என்று குறிப்பிட்ட அதில் அந்த ஆபிரிக்க அமெரிக்கர்களை அமைதியாக வரவேற்கத் தொடங்கினார்.

அடிமைகளின் ஒரு சுதந்திரமான மாநாடு பிரதிநிதிகளை நியமித்தது அவர்கள் பின்னர் தொடர்ச்சியான பல உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஏகாதிபத்திய அதிகாரிகளை நட்புடன் அணுகினார்கள் என்று ஊகிப்பதற்காக, 1774 வேர்ஜீனியா சம்பவங்கள் பற்றி எதுவும் அறியாத ஒரு வாசகரை வேண்டுமானால் மன்னித்து விடலாம்—மேரி பெர்த் நோர்டனின் ஒரு புதிய புத்தகத்தில் இந்தாண்டு விரிவாக விளக்கப்பட்டுள்ளது [5]. நிச்சயமாக, அதுபோன்றவொரு முறையான கூட்டங்கள், சுய-அமைப்பு உரிமையை மறுப்பதை அதன் மத்திய அம்சமாக கொண்ட அடிமை உடைமை முறையின் கீழ் சாத்தியமே இல்லை.

“கூட்டணி' பற்றிய ஹோல்டன் வரையறை ஏற்றுக் கொள்ள முடியாதளவுக்குச் செல்கிறது. சொல்லப் போனால் அவர் என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்றால் அடிமைகளின் இயக்கத்தை, அவர் போர் ஏற்பட்ட போது பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த நிலையங்களுக்கு எதிரான தனிநபர்கள் மற்றும் சிறு குழுக்களின் இயக்கமாக, சொல்லப் போனால் குடும்பங்கள், பண்ணை அடிமைகளின் இயக்கமாக கூறுகிறார். இதுவொரு முக்கிய கவனத்திற்குரிய விஷயமாகும். வெள்ளையின எஜமானர்களிடையே நிலவிய மோதலை அறிந்து கொண்ட அடிமைகள் அதை சுரண்ட முயன்றார்கள். சிலர் டன்மோர் பிரகடனத்திற்கு முன்னரே அவர்களின் விடுதலைக்கு அழுத்தமளிக்க அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் 'கூட்டணி' என்ற இந்த பெரிய வார்த்தை போர் வரலாற்றில் ஒரு முறையான அர்த்தத்தைக் கொண்டுள்ளது, அதை ஆதாரங்களுடன் நிலைநிறுத்த முடியாது. போர் தொடங்கிய பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒரு 'கூட்டணி' எவ்வாறு போருக்குக் காரணமாக இருக்க முடியும் என்பதை ஹோல்டன் இதுவரையில் விவரிக்கவில்லை.

இனரீதியிலான கூட்டணி முறை உருவாக்கப்பட்டது தான் போருக்கான காரணம் என்ற ஹோல்டனின் வாதங்களைத் தர்க்கம் மட்டுமல்ல, மாறாக அடிப்படை உண்மைகளுமே குழிபறிக்கின்றன.

புரட்சி சம்பந்தமாகவும் சரி அடிமைமுறை சம்பந்தமான பிரச்சினையிலும் சரி 'வெள்ளையினத்தவர்கள்' அவர்களுக்குள் ஒன்றுபட்டு இருக்கவில்லை. வெள்ளையின காலனிய மக்களில் சுமார் 20 சதவீதமாக இருந்த பிரிட்டிஷ் விசுவாசிகளது (Loyalists) கணக்கீடுகளில், அடிமை எதிர்ப்புணர்வு இருக்கவில்லை. அதற்கு முரண்பட்ட விதத்தில், பிரிட்டிஷ் விசுவாசிகள் தரப்பில் அடிமைகளின் எஜமானர்களது மனித உடைமைகள் அந்த பேரரசால் பாதுகாக்கப்பட்டது. புரட்சியில் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், பலர், அடிமைகளை பின்தொடர்ந்து, பிரிட்டிஷ் கரீபியனுக்குத் தப்பிப் பிழைத்தோடினர். டன்மோர் அவரே இப்படி வெளியேறியவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராக உள்ளார், அடிமைகள் நிறைந்த பஹாமாஸ் காலனியின் ஆளுநர் பதவியை அவர் ஏற்றார். உண்மையில் பிரிட்டிஷ் வடக்கு அமெரிக்க பேரரசின் மிகவும் உறுதியான விசுவாசிகளின் பகுதியாக, கரீபியன் தான் அதிக எண்ணிக்கையிலான அடிமைகளைக் கொண்ட பகுதியாக இருந்தது.

ஓர் 'ஆங்கிலோ-கறுப்பின' கூட்டணியில் கறுப்பின அமெரிக்கர்கள் பேரரசின் பின்னால் ஒன்றிணைந்தனர் என்ற கருத்து முற்றிலும் முரணாக உள்ளது. 1770 பாஸ்டன் படுகொலையில் அடிமையல்லாத கறுப்பினத்தவரான கிரிஸ்பஸ் அட்டக்ஸ் கொல்லப்பட்டது தான் அமெரிக்கப் புரட்சியில் தேசப்பற்றாளர்கள் தரப்பில் ஏற்பட்ட முதல் பலி என்பது நன்கறியப்பட்டதாகும் — குறைந்தபட்சம் ஒரு காலத்தில் அது அவ்வாறு அறியப்பட்டிருந்தது. சமீபத்தில் காலமான அமெரிக்க புரட்சியின் வரலாற்றாளர் கேரி நாஸ், 9,000 கறுப்பினத்தவர்கள் தேசபற்றாளர்கள் தரப்பில் (Patriot) சேவையாற்றியதாக மதிப்பிட்டார். [6] அனேகமாக அதே எண்ணிக்கையில் பிரிட்டிஷ் ஆயுதப் படையிலும் இருந்தார்கள். ஆனால் 100,000 பேர் பிரிட்டிஷ் தரப்புக்கு ஓடிவிட்டதாகவும், 20,000 பேர் அரச மணிமகுடத்தின் கீழ் சேவையாற்றியதாகவும் கூறும் கூற்றுக்கள், இணையத்தில் பரவலாக உலா வரும் இந்த புள்ளிவிபரங்கள், உண்மையின் அடிப்படையில் இருப்பதாக தெரியவில்லை. இந்த தரவுகள் மீது மிகவும் முழுமையாக ஆய்வு செய்துள்ள ஆஸ்திரேலிய வரலாற்றாளர் Cassandra Pybus குறிப்பிடுகையில், சண்டை நடந்த அந்த ஒட்டுமொத்த காலத்திலும் வேர்ஜீனியா, மேரிலாந்து, ஜோர்ஜியா மற்றும் கரோலினாஸில் 20,000 க்கு அதிகமான அடிமைகள் பிரிட்டிஷ் தரப்புக்குச் செல்லவில்லை என்று அறிவுறுத்துகிறார். இன்னும் இரண்டு அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள், பிரபல வரலாற்றாளர்களான Allan Kulikoff மற்றும் Ira Berlin ஆகியோரினதும், அந்த எண்ணிக்கையை 100,000 ஆக மிகப் பெரியளவில் குறைக்கிறது. [7]

ஆனால் உண்மையில் 100,000 அடிமைகள் பிரிட்டிஷ் தரப்புக்குச் சென்றிருந்தால், அல்லது அந்த எண்ணிக்கையில் பாதி கூட அவ்வாறு செய்திருந்தால், அவர்களுக்கு என்ன ஆனது? பிரிட்டிஷார் 'அவர்கள் வாக்குறுதியைக் காப்பாற்றியதாக' ஹோல்டன் கூறுகிறார். ஆனால் விடுவிக்கப்பட்ட ஒரு சில ஆயிர அமெரிக்க அடிமைகள் மட்டுமே நோவா ஸ்கோடியாவுக்கு சென்றதாக அவர் ஒப்புக் கொள்கிறார்—அங்கே, கனடிய வரலாற்றாளர் James W. St.G. Walker எடுத்துக்காட்டுவதைப் போல, பிரிட்டிஷ் வாக்குறுதி அளித்திருந்த நிலம் மற்றும் சலுகைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. [8] அவர்களிலும் சிறிய எண்ணிக்கையில் சிலர் பிரிட்டன் மற்றும் சியாரா லியோன் சென்றனர். இந்த எண்ணிக்கைகள் சரியானவை என்றால், வரையறையின்படி, இதன் அர்த்தம் என்னவென்றால், பிரிட்டிஷ் பல ஆயிரக் கணக்கானவர்களுக்கு 'அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை' என்பதால், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்று நோயால் இறந்திருப்பார்கள், திரும்பவும் அடிமைமுறைக்குத் திரும்பி இருப்பார்கள், அல்லது, ஐரா பேர்லின் குறிப்பிடுவதைப் போல, புதிய அமெரிக்காவுக்குள் திரும்ப வந்து அவர்களின் சுதந்திரத்தைப் பேணியிருப்பார்கள்.

பிரிட்டிஷ் முகாம்களின் கொடூரமான நிலைமைகள், பெருவாரியாக பரவிய சிற்றம்மையால் தீவிரப்பட்டிருந்த அந்த நிலைமைகள், வெளியேறிய பலரின் உயிரைப் பறித்தன. போரின் ஆரம்பக் கட்டங்களில் டன்மோருடன் தஞ்சம் புகுந்த 1,500 அகதிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் நோயில் இறந்தனர். டெய்பாய்ட், வரியோலா மற்றும் குறிப்பாக சிற்றம்மை ஆகிய நோயின் மரணங்கள், யோர்க்டவுன் சரணடையும் வரையில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அந்த முன்னாள் அடிமைகளைத் தொடர்ந்து நிர்மூலமாக்கின. அக்டோபர் 1781 இல் Pybus அந்த காட்சியைப் பின்வருமாறு விவரிக்கிறார்:

கார்ன்வாலிஸ் சரணடைவதற்கு முந்தைய பயங்கரமான இறுதி நாட்களில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என நடந்து செல்லக்கூடிய பெரும்பாலான கறுப்பினத்தவர்கள் காவற்படையிலிருந்து அனுப்பப்பட்டனர், அவர்களை வெளியேற்றுவதன் மூலம் எந்தளவுக்கு வினியோகப் பொருட்களைச் சேமிக்கலாம் என்று பார்க்கப்பட்டது. வெற்றி பெற்ற அமெரிக்கர்கள் யோர்க்டவுனில் நுழைந்த போது, காயங்கள் மற்றும் சிற்றம்மையால் பரவலாக மக்கள் இறந்து கொண்டிருந்ததை கண்டார்கள். [9]

டன்மோரின் சுதந்திரப் பிரகடனம் 'பதுங்கியிருந்தவர்கள்' (sequestered) என்று முத்திரை குத்தப்பட்ட அடிமைகளின் ஒரு பெரிய வகைப்பாடு வரை நீண்டிருக்கவில்லை. ஆயிரக் கணக்கில் இருந்த இத்தகைய அடிமைகள், வழமையாக கைவிடப்பட்ட தேசப்பற்றாளர்களது பண்ணைகளில் பிரிட்டிஷால் பிடிக்கப்பட்டனர். அவர்கள் தனி அடையாளத்துடன் பிரிட்டிஷ் இராணுவச் சேவையில் அடிமைகளாக சேர்க்கப்பட்டார்கள், அல்லது பிரிட்டிஷ் விசுவாசிகள் அணியிலிருந்த அடிமைகளது எஜமானர்கள் தேசப்பற்றாளர்களிடம் இழந்த அடிமைகளை ஈடு செய்வதற்காக அவர்கள் வசம் கொடுக்கப்பட்டனர் —இது ஹோல்டனின் 'கூட்டணி' கற்பனையைத் தெளிவாக மீறுகிறது. இறுதியாக, தேசபற்றாளர்கள் தரப்பில் சேவையில் இருந்ததன் மூலமும் அடிமைகள் விடுதலை பெற்றிருந்தனர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்— வேர்ஜீனியா 1783 இல் இத்தகைய ஒரு விடுதலைச் சட்டத்தை நிறைவேற்றியது. [10]

டன்மோரின் பிரகடனத்திற்குப் பிறகு, சுதந்திரமடைந்த கறுப்பினத்தவர்களை அடிமை முறையைக் கொண்டு அச்சுறுத்திய மற்றொரு பிரிட்டிஷ் பிரகடனம் குறித்து ஹோல்டன் விசித்திரமாக வாய் திறக்கவில்லை. ஜூன் 1779 இல் பிரிட்டிஷ் தளபதி சர் ஹென்றி கிளிண்டனால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட 'அந்த பிலிப்ஸ்பர்க் பிரகடனம்' (Philipsburg Proclamation), இவ்வாறு தான் அது நினைவுகூரப்படுகிறது என்ற வகையில், கிளர்ச்சியில் இருந்த எஜமானர்களின் அடிமைகளுக்கு சுதந்திரம் வழங்குமாறு மீள வலியுறுத்தியது. ஆனால் அது அதன் பிரதான நோக்கமாக இருக்கவில்லை. அது தேசப்பற்றாளர்களது படைகள் 'அவர்களின் துருப்புகளில் நீக்ரோக்களை நியமிக்கும் நடைமுறையை ஏற்று' இருப்பதாக அதற்கு எதிராக குற்றங்கூறி தொடங்கியது. பிரிட்டிஷ் இராணுவம் 'ஆயுதம் ஏந்திய எல்லா நீக்ரோக்களையும், அல்லது ஏதேனும் இராணுவக் கடமையின் பொருட்டு' கைப்பற்றி, அடிமைமுறைக்கு அவர்களை விற்று, “அந்த பணம் சிறை வைப்போருக்காக (Captors) செலவிடப்படும்,” என்று அறிவித்தது. [11]

புரட்சிகர நெருக்கடியின் மத்தியிலும் மற்றும் சண்டைக்குப் பின்னரும் மட்டுந்தான் அடிமைமுறை மீதான கேள்வி எழுந்திருந்தது என்பதே அடிப்படை புள்ளியாகும். அப்போது தான் சண்டையில் போது இரண்டு தரப்புகளில் இருந்தும், கறுப்பினத்தவர்கள், அடிமைகள் மற்றும் விடுதலை என அது அதன் வெவ்வேறு அம்சங்களில் வெடித்தது. அது புரட்சியின் ஒரு துணைவிளைவாக இருந்தது. அவர் முயன்றாலும் கூட இந்த உண்மையிலிருந்து ஹோல்டனால் தப்பிக்க முடியாது.

அமெரிக்க புரட்சி மற்றும் அடிமைமுறை பற்றி, மீண்டுமொருமுறை

பிரிட்டிஷ் தரப்புக்கு மாறிய அடிமைகள் மற்றும் இறுதியில் அந்த வழியில் விடுதலை அடைந்த ஒரு சில ஆயிரம் பேரின் சண்டை, அடிமைமுறைக்கு அமெரிக்க புரட்சி ஏற்படுத்திய சவால்களில் ஓர் அம்சமாக இருந்தது. ஆனால் அடிமைமுறை இறுதியில் ஒழிக்கப்பட எல்லையின்றி மிக முக்கியமாக இருந்தது என்னவென்றால், அமெரிக்க உள்நாட்டு போரின் இறுதியில் வந்த 'நான்கு கூறுபாடுகளும் ஏழு ஆண்டுகளும்' இயக்கம் (four score and seven years) என்பதாகும், இந்த இயக்கம் வடக்கிலும் மற்றும் குறுகிய காலத்திற்குத் தெற்கிலும் ஏற்படுத்தப்பட்ட அடிமைமுறையை இல்லாதொழிப்பதை நோக்கி இருந்தது. ('நான்கு கூறுபாடுகளும் ஏழு ஆண்டுகளும்' என்ற சொற்றொடர் அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது ஆபிரகாம் லிங்கன் நிகழ்த்திய புகழ்பெற்ற உரையான கெட்டிஸ்பர்க் முகவரியின் தொடக்கமாகும்.)

உள்நாட்டுப் போரைப் போல் இல்லாமல், இந்த இரண்டாம் அமெரிக்க புரட்சியும், புரட்சியில் அடிமைமுறைக்கு எதிரான நகர்வும் மற்றும் முன்கூட்டிய குடியரசும் புரட்சியின் உத்தேசிக்கப்பட்ட ஒரு விளைவாக இருக்கவில்லை. ஆனால் அது தற்செயலானதாகவும் இருக்கவில்லை. கோர்டன் வுட், எரிக் ஃபொனெர், டேவிட் பிரியோன் டேவிஸ் மற்றும் இன்னும் பலரும் விவரித்துள்ளதைப் போல, விடுதலை மற்றும் அடிமைமுறை பற்றிய வீராவேச பேச்சுக்களை பிரிட்டனுடனான காலனித்துவ உறவுகளுக்கு ஓர் உருவகமாக ஏற்பதில் இந்த அமெரிக்க புரட்சி வழிவழியாக வந்த பண்டைய அடிமை முறை மீது கவனத்தைத் திருப்பி, முன்னர் இல்லாத விதத்தில் அதை தெளிவுபடுத்தியது. மற்றொரு புகழ்பெற்ற வரலாற்றாளர், மறைந்த பேர்னார்ட் பெய்ல் விவரிக்கையில், எவ்வாறிருப்பினும் புரட்சியில் அடிமை முறை ஒழிக்கப்படவில்லை என்று விவரித்தார்.

… புரட்சிகர கருத்துக்கள் நீண்டதன் விளைவாக அது கடுமையான அழுத்தத்திற்கு உட்பட்டிருந்தது, அதற்குப் பின்னரும் கூட அதன் வடுக்கள் இருந்தன. அடிமை அமைப்புமுறை இருந்த வரையில், “எல்லோரும் சமமாக படைக்கப்பட்டிருக்கிறார்கள்' என்ற கருத்து அது கூற வந்த கருத்தை, அதாவது எல்லோரும் என்பது “கறுப்பினத்தவர்களும் வெள்ளையினத்தவர்களும்' என்பதை, துல்லியமாக அதனால் ஏன் வெளிப்படுத்த முடியவில்லை என்பதை எடுத்துக்காட்ட, ஆதாரத்தின் சுமை அதற்கு வக்காலத்து வாங்கியவர்கள் மீது இருந்திருக்கும். [12]

ஆல்பிரட் யங், ரே ரபேல் மற்றும் கேரி நாஷ் உட்பட மற்றொரு அறிஞர்கள் குழு, அந்த புரட்சி அமெரிக்க சமூகத்தை ஆழமாகவும் பரவலாகவும் ஊடுருவி, பெண்கள், ஏழைகள், விவசாயிகள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பிற சொத்துக்கள் இல்லாத வெள்ளையினத்தவர்கள், சுதந்திரமான கறுப்பினத்தவர்கள் மற்றும் அடிமைகளும் உட்பட அதன் ஒடுக்கப்பட்ட அடுக்குகளைக் கூட அரசியல்ரீதியில் சிந்திக்க செய்தது. விடுதலை நோக்கத்தை முன்னெடுக்க இந்த புரட்சி முன்நிறுத்திய கருத்துக்கள் மற்றும் வாய்ப்புகளை கறுப்பினத்தவர்கள் —வடக்கு மற்றும் தெற்கில் இருந்த அடிமைகள் மற்றும் சுதந்திரமாக இருந்தவர்கள் இருதரப்பினருமே— கைப்பற்றிக் கொண்டனர் என்பதை இந்த அறிஞர் குழு எடுத்துக் காட்டியுள்ளது.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான் அடிமை முறைக்கு எதிரான முதல் செறிவூட்டப்பட்ட நகர்வு நடந்தது. வேர்ஜீனியாவிலும் மேரிலாந்திலும் 1790 மற்றும் 1810 க்கு இடையே அமெரிக்க எஜமானர்களிடையே இருந்த ஒரு அடிமை ஒழிப்பு இயக்கம் சுதந்திர கறுப்பினத்தவர்களின் எண்ணிக்கையை ஆறு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்தது. தெற்கு கரோலினாவில் கூட, சுதந்திர கறுப்பினத்தவர்களின் எண்ணிக்கை 1,800 இல் இருந்து 4,500 ஆக மூன்று மடங்கு அதிகரித்தது. [13] வடக்கு மாநிலங்கள், புரட்சிக்குப் பின்னர் உடனடியாக, அதற்கடுத்து வரவிருந்த தசாப்தங்களில் படிப்படியாக அடிமை முறையை ஒழிக்கும் சட்டங்களை ஏற்படுத்த தொடங்கின. 1776 க்குப் பின்னர் ஒன்றியத்திற்குள் நுழைந்த முதல் மாநிலமான வெர்மாண்ட்டும், சட்டத்தின் மூலம் அடிமை முறையை ஒழிப்பதற்கான மேற்கு அரைக்கோளத்தின் முதல் ஆட்சி அதிகாரமாக மாறியது. 1775 இல் உலகில் முதலாவது அடிமை ஒழிப்பு சமூகமாக பிலடெல்பியா உருவெடுத்தது. அனேகமாக 1782 இல் ஜெஃபர்சன் நம்பிக்கையுடன் எழுதிய போது இத்தகைய அபிவிருத்திகளை ஒருவேளை மனதில் கொண்டிருக்கலாம், அவர் கண்டுணர்ந்தது

இப்போதைய இந்த புரட்சி ஆரம்பித்ததில் இருந்தே, ஒரு மாற்றம் ஏற்கனவே உணரக் கூடியதாக உள்ளது. எஜமானரின் உத்வேகம் தணிந்து வருகிறது, அடிமையின் உத்வேகம் அடிமட்டத்திலிருந்து அதிகரித்து கொண்டிருக்கிறது, அவர் நிலைமை சாந்தமடைந்து வருகிறது, பரலோகத்தின் ஆசீர்வாதத்துடன், மொத்த விடுதலைக்குமான வழி தயாராகி வருகின்றன; சம்பவங்களின் ஒழுங்கைக் கொண்டு பார்த்தால், எஜமானர்களைப் பூண்டோடு அழிப்பதன் மூலமாக அல்ல, மாறாக அவர்களின் ஒத்துழைப்புடன் இது நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன். [14]

வரலாற்றாசிரியர் Kate Masur முதல் உள்நாட்டு உரிமை இயக்கம் பற்றிய அவரின் புதிய நூலில், அதாவது இந்த விஷயத்தில் தற்போதைய மிகவும் அதிகாரப்பூர்வ நூலாக விளங்கும் இதில், எடுத்துக் காட்டுவதைப் போல, “புரட்சிகர சகாப்தத்தின் அடிமை ஒழிப்பு இயக்கம் இன அடிப்படையிலான அடிமை முறையை மட்டுமல்ல, மாறாக புதிதாக சுதந்திரம் அடைந்தவர்களையும் அங்கீகரிக்க முயன்றது.' அதன்படி, இன-எதிர்ப்பு சட்டங்களுக்காக போராடிய அடிமை முறை எதிர்ப்பு அமைப்புகள், ஆரம்ப குடியரசில் இனவாத சட்டங்கள் ஏற்படுத்தியதன் மூலம், இலக்கில் வைக்கப்பட்ட சுதந்திரம் அடைந்த கறுப்பினத்தவர்களுக்குச் சட்டபூர்வ பாதுகாப்பையும் வழங்கின. ஒருபுறம் அடிமை முறை ஒழிப்பும் இனவாத எதிர்ப்பும், மறுபுறம் அடிமை முறையும் இனவாதமும் என இவை முற்றிலும் பிணைந்திருந்தன. [15]

இன்னும் அடிப்படையில், வடக்கில் ஏற்பட்ட விரைவான முதலாளித்துவ வளர்ச்சி 'சுதந்திர உழைப்பு' என்று அழைக்கப்பட இருந்த விஷயத்தின் தோற்றுவாயுடன் இணைந்திருந்தது, இந்த வகைப்பாடு, அந்த காலத்திய சிந்தனையில், கூலி உழைப்பு, ஆக்கப்பூர்வமான முதலாளித்துவ நிறுவனம், சிறு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை உள்ளடக்கி இருந்தது. அடிமை முறை மட்டுமல்ல, மாறாக எழுத்துப்பூர்வ சேவக முறை (indentured servitude) மற்றும் பண்டைய தொழில்வழி சமூக அமைப்புமுறை (guild system) உட்பட தனிப்பட்டரீதியில் சார்ந்திருக்கும் மற்ற வடிவங்களையும் அகற்றியது. ஆனால் தெற்கில், 1970 களின் இறுதியில் பருத்தி நூற்பு ஏற்படுத்தப்பட்டதும் தோட்ட அமைப்பு முறைகளில் ஏற்பட்ட மிகப் பெரியளவிலான விரிவாக்கம் மலைப்பூட்டும் அளவுக்கு அடிமை முறையின் விரிவாக்கத்தை ஏற்படுத்தியது, இந்த அபிவிருத்தி பிரிட்டிஷ் தொழில்துறைமயமாக்கத்தின் வேகத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய உலகளாவிய முதலாளித்துவ வளர்ச்சியின் உள்ளார்ந்த பாகமாக இருந்தது.

இத்தகைய சிக்கலான மற்றும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வரலாற்று நிகழ்வுபோக்கிலிருந்து, 1820 கள் மற்றும் 1830 களில் உலக வரலாற்றின் முதல் பாரிய அடிமை ஒழிப்பு அரசியல் இயக்கம் எழுந்தது, பின்னர் 1850 களில் அடிமைமுறை ஒழிப்பு குடியரசுக் கட்சி மற்றும் ஆப்ரகாம் லிங்கன் மற்றும் பின்னர் 1860 களின் உள்நாட்டு போர் ஆகியவை பின்தொடர்ந்தன—அந்த உள்நாட்டு போரில் சுமார் 700,000 அமெரிக்கர்கள் போரிட்டு மடிந்தனர், அது அடிமைகளைச் சுதந்திரப்படுத்தியதுடன், ரஷ்யாவின் 1917 அக்டோபர் புரட்சிக்கு முன்னரே உலக வரலாற்றில் மிகப் பெரியளவில் தனிச்சொத்துடைமை பறிமுதலைச் செய்திருந்தது.

சுதந்திரப் பிரகடனம்

உலக வரலாற்றில் மிக முக்கிய புரட்சிகர அறிக்கைகளில் ஒன்றான சுதந்திரப் பிரகடனத்தை, ஒரு பகிரங்கமான எதிர்-புரட்சிகர சதி அறிவிப்பை விட சற்று கூடுதலானது என்று ஹோல்டன் அதை குறைத்துக் காட்ட முயற்சிக்கிறார். அமெரிக்க கடிதங்களின் வரலாற்றில் மிகவும் பிரபலமான வரிகளைக் கொண்ட அந்த பிரகடனத்தின் முன்னுரையை அவர் நிராகரிக்கிறார், அந்த முன்னுரையில் ஜெஃபர்சன் பின்வருமாறு எழுதினார்: 'எல்லா மனிதர்களும் சமமாக படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற இந்த உண்மைகளை இயல்பாகவே நாம் ஏற்றுக் கொள்கிறோம்.” ஜெஃபர்சன் உரத்த தொனியில் புரட்சிக்கான உள்ளார்ந்த மற்றும் இயல்பான உரிமையை இன்னும் கூடுதலாக விவரித்ததுடன், “மனிதகுலத்தின் கருத்துக்களுக்கு ஒரு கண்ணியமான மதிப்பதற்கு' “உண்மைகளை நேர்மையான உலகில் சமர்பிப்பது' அவசியமாகிறது என்றவர் விவரித்தார்.

தாமஸ் ஜெஃபர்சன்

ஹோல்டன் இதில் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. “[அ]ந்த பிரகடனம் மனித உரிமைகளைச் சுருக்கமாக குறிப்பிடுகிறது என்றாலும் மாநிலத்தின் (தேசத்தின்) உரிமைகள் மீதே ஒருமுனைப்படுகிறது, குறிப்பாக அந்த 13 காலனிகள் அவற்றின் தாய் நாடுகளில் இருந்து உடைந்து வர அந்த அமைப்புகளின் உரிமைகள் மீது ஒருமுனைப்படுகிறது,” என்றவர் கருத்துரைக்கிறார். “அதை மேற்கோள் காட்டிய வெள்ளையினத்தவர்களில் [பெ]ரும்பாலானவர்கள் நேராக அதன் பிரிவினைவாத சாசனங்களுக்குள் சென்றனர்,” என்றார்.

அந்த 'பிரிவினைவாத சாசனங்களில்' ஹோல்டன் ஒன்றே ஒன்றை மட்டும் ஏதோ நலனைக் கொண்டிருப்பதாக காண்கிறார்—ஆனால் அந்த ஒன்றே ஒன்று மட்டுமே இறுதி பிரகடனம் அல்ல. அந்த ஒன்று, அட்லாண்டிக் கடந்த அடிமை வியாபாரத்திற்கு ஜெஃபர்சன் கண்டனம் தெரிவித்திருந்தார், அது தெற்கு கரோலினா மற்றும் ஜோர்ஜியா அடிமை நலன்களில் இருந்தும், அத்துடன் நியூ இங்கிலாந்து அடிமை வியாபாரிகளின் எதிர்ப்பினாலும் நீக்கப்பட்டதாக ஜெஃபர்சன் பின்னர் விளக்கினார். இந்த நீக்கப்பட்ட பந்தியை, அந்த நேரத்தில் அடிமை முறை ஒழிப்பு மீதான ஜெஃபர்சனின் நம்பிக்கைக்கு ஆதாரமாக ஹோல்டன் பார்க்கவில்லை. ஆனால் ஜெஃபர்சனின் சாசனம் பிரிட்டிஷ் அரச மகுடம் மீதான அதன் கண்டனத்தில் அடிமைமுறைக்கு எதிராக பலமாக பேசியது, அதை அவர் பின்வருமாறு எழுதினார்,

மனிதகுல இயல்புக்கு எதிராகவே கூட கொடூரமான தாக்குதலைத் தொடுத்துள்ள, அவரை ஒருபோதும் புண்படுத்தாத அந்த தொலைதூர மக்களின் சுதந்திரம் மற்றும் மிகவும் புனிதமான வாழ்க்கை உரிமைகளை மீறி, மற்றொரு அரைக்கோளத்தில் அவர்களை அடிமை முறைக்குள் கொண்டு சென்று அடிபணிய செய்கிறார் அல்லது அவர்கள் கொண்டு செல்லப்படும் வழியிலேயே பரிதாபகரமாக மரணிக்க செய்கிறார். இந்த கடல் வழி கடத்தல் போர்முறை, இந்த மத நம்பிக்கையற்ற சக்திகளின் மானக்கேடு, கிரேட் பிரிட்டனின் கிறிஸ்துவ அரசரின் போர்முறையாக உள்ளது. மனிதர்கள் அழைத்து வரப்பட்டு விற்கப்படும் ஒரு பகிரங்கமான சந்தையைத் திறந்து வைக்க தீர்மானித்ததன் மூலம், அவர் இந்த அருவருக்கத்தக்க வர்த்தகத்திற்குத் தடை விதிப்பதற்கான அல்லது தடுப்பதற்கான ஒவ்வொரு சட்டரீதியான முயற்சியையும் நசுக்கி அவரின் எதிர்மறையான தன்மையை அவர் காட்டிக் கொள்கிறார்.

இந்த சாசனம் ஜெஃபர்சன் எழுதிய மற்ற எதை விடவும் 'மூன்று மடங்கு நீளமானது' என்ற உண்மையைக் கொண்டு ஹோல்டன் அளப்பரிய முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆனால் எரிச்சலூட்டும் விதத்தில் ஹோல்டன், அடிமை முறை மற்றும் அடிமை வர்த்தகம் இரண்டையும் கண்டிக்கும் முதல் பகுதியைப் புறக்கணிக்கிறார், இது அவரின் ஆய்வைக் கீழறுக்கின்றன. அடிமை முறைக்கு ஆதரவான மற்றும் 'பிரிவினையை' இனரீதியில் நியாயப்படுத்தும் அடிமை முறை ஒழிப்பு உட்பிரிவு சாசனத்தை அவர் திரிக்க விரும்புவதால், ஹோல்டன் கடைசி வாக்கியத்தை மட்டும் பரிசீலிக்கிறார், அதில் ஜெஃபர்சன் பின்வருமாறு எழுதியிருந்தார்,

இந்த கொடூர கூட்டம் கண்கூடான இறப்பு குறித்த உண்மையை விரும்பாமல் இருக்கலாம், நம்மிடையே ஆயுதமேந்தியவர்களை எழுச்சி அடைய செய்யவும் மற்றும் யாரை அவர் தடுத்தாரோ அவர்களைப் படுகொலை செய்ததன் மூலம் அவர்களிடம் இருந்து அவர் பறித்த சுதந்திரத்தை விலைக்கு வாங்கவும் அவர்களையே இப்போது அவர் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்: அதாவது ஒரு நபரின் சுதந்திரத்திற்கு எதிராக செய்யப்பட்ட முன்னாள் குற்றங்களை, மற்றொரு நபரின் உயிருக்கு எதிராக செய்யும்படி அவர் அவர்களைத் தூண்டும் குற்றங்களுடன் திருப்பிச் செலுத்துகிறார்.

பட்டவர்த்தனமான கூறுவதானால், ஆதாரத்தை ஒருதலைபட்சமாகவும் மற்றும் பெரிதும் தேர்ந்தெடுக்கப்பட்டரீதியிலும் பயன்படுத்துவது தொழில்ரீதியிலான ஒரு வரலாற்றாளருக்குக் கௌரவமானது இல்லை, அமெரிக்க புரட்சி இனரீதியில் எதிர்புரட்சியாகும் என்ற அவர் வாதத்திற்கு ஆதரவாக கண்டறிந்திருப்பதாக ஹோல்டன் கூறும் ஆதாரங்கள் அனைத்தினது செல்லுபடி தகைமையை அது கேள்விக்கு உட்படுத்துகிறது. ட்வீட்டரில் அவர் பரப்பி வரும் மற்ற 'ஆதார தகவல்களில்' இவ்வாறு எத்தனை மிகப் பெரியளவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளனவோ, சுதந்திர பிரகடனத்திலிருந்து இந்த ஒரேயொரு பந்தியை அவர் கையாள்வதைப் போல அவற்றின் உள்ளடக்கத்திலிருந்து எத்தனை திரிக்கப்பட்டுள்ளனவோ?

அந்த சகாப்தத்தின் எல்லா முதலாளித்துவ-ஜனநாயக புரட்சிகளைப் போலவே, அமெரிக்க புரட்சியும் சமத்துவம் பற்றிய கேள்வியைச் சித்தாந்த வடிவில் மட்டுமே உயர்த்துவதாக இருக்கலாம். அது அந்த கேள்வியைத் தீர்க்க தகைமை கொண்டிருக்கவில்லை என்றாலும், அந்த கேள்வியை முன்வைக்கக் கூடியதாக இருந்தது. ஸ்தாபக தந்தையர் கற்பனை செய்த குடியரசு சமூகத்தை உலகுக்குக் கொண்டு வர அவர்கள் இயலாமல் இருந்தார்கள் என்ற இந்த முரண்பாட்டை, சொல்லப் போனால் இன்றியமையா சோகத்தை, அந்த சகாப்தத்தைக் குறித்த வரலாற்றாளர் கோர்டன் வுட் அங்கீகரித்தது தான் அவர் எழுத்துக்களின் ஆற்றலாக இருந்தது. இருப்பினும், அவர்களின் பிரமைகளுக்கு மத்தியிலும் அவர்கள் போராட்டத்தில் இறங்கி இருந்தார்கள், அதற்கு நினைவுகூரத்தக்க முக்கியத்துவம் இருந்தது. புரட்சியின் மகத்தான முரண்பாடுகள் முதிர்ந்தபோது, மிகவும் குறிப்பாக அடிமை முறை சம்பந்தமானவை, புரட்சியின் முன்னேற்றத்திற்குக் காரணிகளாக ஆகி, அமெரிக்க உள்நாட்டு போரில் முன்னிலைக்கு வந்தன.

புரட்சிகர சக்தியாக ஹோல்டனின் பிரிட்டிஷ் பேரரசு

அமெரிக்கப் புரட்சி ஓர் எதிர்ப்புரட்சி என்ற ஹோல்டனின் கருதுகோள் —1619 திட்டம் மற்றும் ஹோர்னால் பகிர்ந்து கொள்ளப்படும் இந்த நிலைப்பாடு— உலக வரலாற்றில் கொண்டு வரும்போது அவரைத் தப்பிக்கவியலா மூலைக்குள் கொண்டு செல்கிறது. விடுதலைக்கான பிரிட்டிஷ் அச்சுறுத்தல்களுக்கு எதிராக அடிமைமுறையைப் பாதுகாக்கவே அமெரிக்க புரட்சி முன்கூட்டி தொடங்கப்பட்டிருந்தால்—வேறு வார்த்தைகளில் கூறினால், உள்நாட்டு போரின் போது தெற்கு பிரிவினை இருந்ததைப் போலவே அமெரிக்க புரட்சியும் சாராம்சத்தில் அவ்வாறு இருந்தது என்றால்—பிரிட்டிஷ் பேரரசு, “அமெரிக்க வெள்ளை இனத்தவர்களுக்கு' எதிராக 'கறுப்பினத்தவர்கள்' உடனான 'கூட்டணியில்', நிச்சயமாக அந்த போராட்டத்தில் முற்போக்கான போட்டியாளராக இருந்தது என்றாகிவிடுகிறது. வரலாறு முன்னேறியதற்கான காரணம் மூன்றாம் ஜோர்ஜ் அரசர் மீது தங்கியிருந்தது என்பதும், அமெரிக்கா உருவாக்கப்படாமல் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பதே ஹோல்டன், ஹோர்ன் மற்றும் 1619 திட்டத்தின் வாதமாக அமைகிறது.

பிரிட்டிஷ் பேரரசின் 19 ஆம் நூற்றாண்டு வரைபடம்

இது அடுத்தடுத்து வந்த அமெரிக்க வரலாற்றை மட்டும் அவமதிக்கவில்லை —மிகவும் குறிப்பாக உள்நாட்டுப் போருக்கும் மற்றும் அடிமைமுறை ஒழிப்புக்கும் இடையிலான பலமான இணைப்புகளை மட்டுமல்ல— மாறாக உலக வரலாற்றையும் அவமதிக்கிறது. ஹோல்டன் எப்போதுமே குறுகிய தேசிய அணுகுமுறையுடன் இருந்துள்ளார். அவர் 2016 புத்தக திறனாய்வு ஒன்றில், “விடுதலைப் போரை உலகளாவிய உள்ளடக்கத்தில் நிறுத்துவது, ஏறக்குறைய தவிர்க்கவியலாமல், அதை ஒன்றுமில்லாது செய்து விடுகிறது,” [16] என்று எழுதுமளவில் இருந்தார். அவரின் அவநம்பிக்கையான பிராந்தியரீதியான பார்வை தேசிய நாட்டுப்பற்று சொல்லாடல்களைத் தூக்கி எறிந்துவிடவில்லை மாறாக அவற்றைத் தலைகீழாக ஆக்குகிறது. உண்மையில் சொல்லப் போனால், அமெரிக்க புரட்சியை அதன் உலகளாவிய உள்ளடக்கத்தில் நிறுத்தாமல் அதை புரிந்து கொள்வதே சாத்தியமில்லை.

பிரெஞ்சுப் புரட்சி உடனான அமெரிக்கப் புரட்சியின் தொடர்பு அந்நேரத்தின் தெளிவாகவும் அறியப்பட்டதாகவும் இருந்தது. பிரான்ஸிற்கான அப்போதைய தூதராக இருந்த ஜெஃபர்சன், 1789 மே இல் வேர்சையில் இடம் பெற்ற பிரெஞ்சு சட்டமன்ற-தலைவர் உரையில் தனிப்பட்டரீதியில் கலந்து கொண்டார். அதற்கடுத்த மாதம் உரிமைகளுக்கான ஓர் அறிக்கை வரைவதில் அவர் லாஃபயெட் (Lafayette) உடன் இணைந்தார், அது மனித மற்றும் குடிமக்கள் உரிமைகள் பிரகடனத்திற்கான அடித்தளமாக சேவையாற்றியது. பின்னர் ஜூலையில், பிரெஞ்சு புரட்சியாளர்கள் பாஸ்டியை நொறுக்கிய பின்னர், ஒரு புதிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக விவாதிக்க ஜெஃபர்சனின் வசிப்பிடமான Hôtel de Langeac இல் இரகசியமாக ஒன்று கூடினர். பிரெஞ்சு சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகளில் பலர் அமெரிக்க புரட்சியின் 'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' கருத்துக்களை உள்வாங்கி இருந்தனர், அவர்களில் Lafayette மிகவும் குறிப்பிடத்தக்கவராக இருந்தார், பிரெஞ்சு புத்திஜீவிகள் ஆனந்த பரவசத்துடன் அமெரிக்க நிகழ்வுகளைப் பின்தொடர்ந்தனர். பிரெஞ்சு புரட்சிக்கு அமெரிக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, லாஃபயெட் 1790 இல் புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனுக்கு பாஸ்டிக்கான திறவுகோலை வழங்கினார்.

பிரான்சில் ஏற்பட்ட புரட்சி விரைவிலேயே அதன் மிகவும் பணக்கார மற்றும் மிக முக்கிய காலனியான செயிண்ட்-டோமிங், அல்லது ஹைட்டியில் ஒரு புரட்சியைத் தூண்டியது, அது இரண்டு மடங்கிற்கு ஜனநாயக புரட்சித்தன்மை மற்றும் பாரியளவில் அடிமைகளின் எழுச்சியைக் கொண்டிருந்தது. ஹைட்டி 90 சதவீதம் அடிமையாக இருந்ததுடன், புரட்சியை முன்னெடுக்க உதவிய சுதந்திரமான கறுப்பினத்தவர்களின் கணிசமான பங்களிப்பையும் கொண்டிருந்தது. இந்த சுதந்திரமான கறுப்பினத்தவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் அமெரிக்கப் புரட்சியில் பிரிட்டிஷாருக்கு எதிராக பிரெஞ்சுக்காரர்களுடன் சேர்ந்து “பலநிற மனிதர்கள்” ('gens de couleur') படைப்பிரிவுகளில் பணியாற்றியிருந்தனர். இந்த ஹைட்டிய புரட்சி அமெரிக்க அடிமை உடைமையாளர்களைப் பயமுறுத்திய நிலையில் —ஏராளமான ஹைட்டிய அடிமைகளின் எஜமானர்கள் அதன் பின்னர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தனர், குறிப்பாக லூசியானாவுக்கு— அமெரிக்க மற்றும் ஹைட்டிய புரட்சிக்கு இடையிலான தொடர்பை மறுக்கவியலாது. 1776 க்கும் 1848 இல் தோல்வியுற்ற ஐரோப்பியப் புரட்சிகளுக்கும் இடையில் அட்லாண்டிக் உலகில் நடந்த எல்லா புரட்சிகளுக்கும் இடையேயும் உண்மையில் தொடர்புகள் இருந்தன. [17]

மறுபுறம், 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் மற்றும் ஒட்டுமொத்த 19 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் நிலவிய உலகளாவிய பிற்போக்குத்தனத்திற்குப் பிரிட்டிஷ் பேரரசு கட்டுப்பாட்டு அறையாக இருந்தது. அது அமெரிக்க, பிரெஞ்சு மற்றும் ஹைட்டிய புரட்சிகளையும், அவற்றை தொடர்ந்து வந்த அயர்லாந்து, ஐரோப்பா, இந்தியா, ஆபிரிக்கா, அரபு நாடுகள் மற்றும் சீனாவின் ஒவ்வொரு ஜனநாயக, புரட்சிகர மற்றும் காலனிய-எதிர்ப்பு எதிர்ப்பையும் நசுக்க போராடியது. இங்கிலாந்துக்கு உள்ளேயே கூட, பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்க ஆண்களுக்கு வாக்குரிமை வழங்குவது போன்ற அடிப்படை கோரிக்கைகளைக் கூட தடுக்க, 1819 பீட்டர்லூ படுகொலை விவகாரத்தைப் போல காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட விரும்பியது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது, பால்மர்ஸ்டன் பிரபுவின் (Lord Palmerston) கீழ் இருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் பலமாக கூட்டமைப்பு சாசனத்தை (Confederate cause) நோக்கி சாய்ந்தது. மாநில கூட்டமைப்பு சதிக்கு இராஜாங்க அங்கீகாரம் அளிப்பதை நோக்கிய இலண்டனின் நகர்வு, போருக்கு நிகரான ஒரு நடவடிக்கையாக இருந்திருக்கக் கூடிய இது, முக்கியமாக பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தால் தடுக்கப்பட்டது, அது, 'பருத்தி பஞ்சத்தின்' அளப்பரிய துன்பம் இருந்த போதினும், லிங்கனின் விடுதலை பிரகடன வெளியீட்டை அடுத்து பெருவாரியாக சுதந்திரத்திற்கான சாசனத்துடன் அடையாளப்பட்டிருந்தது.

சில அடிமைகள் பிரிட்டனிடம் இருந்து ஆதரவைக் கோரினர் என்பது முற்றிலும் புரிந்து கொள்ளக்கூடியது தான். ஆனால் புரட்சியில் அடிமைகள் பறந்து வந்ததை அந்த பேரரசு மிகவும் குறைவாகவே ஊக்குவித்தமை, அதற்கடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் அல்ஸ்டரில் (Ulster) இருந்து கென்யா வரையில் மும்பை வரையில் குவாங்டாங் வரையில் மொத்த உலகெங்கிலும் நாசகரமான விளைவை ஏற்படுத்த இருந்த அதன் பிளவுபடுத்தி வெற்றி கொள்ளும் அணுகுமுறைகளுக்கு ஏற்ப, அதன் கணக்கிடப்பட்ட நிஜ-அரசியலுக்கு ஓர் உதாரணமாக இருந்தது. பட்டியலிடுவதற்கு மிகவும் நீண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் குற்றங்கள், அமெரிக்க அடிமைமுறைக்காக கோரப்படும் ஒரு மன்னிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் உலகளவில் பிரிட்டிஷ் பேரரசு பிரதிநிதித்துவம் செய்த புறநிலை இயல்பை அமெரிக்க புரட்சியின் அரசியல் தன்மை மீதான எந்தவொரு மதிப்பீட்டிலும் புறக்கணித்து விட முடியாது.

அடிமைமுறையைப் பொறுத்த வரை, பிரிட்டிஷ் ஆதிக்கம் செலுத்திய பண்டைய மனித வர்த்தகம் அதன் கிழக்கு அரைகோள பெருநிலங்கள் (Indies) மற்றும் அமெரிக்க உடைமைகள் வரையில் தொடர்ந்தன, சுமார் 1760-1805 இன் ஏகாதிபத்திய நெருக்கடி ஆண்டுகளின் போது சுமார் 1.5 மில்லியன் ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆபிரிக்காவில் இருந்து பறிக்கப்பட்டனர். 1833 இல் தான் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கிழக்கு அரைகோள பெருநிலங்களில் (Indies) அடிமை முறையை முடிவுக்குக் கொண்டு வந்தது. இது அமெரிக்க உள்நாட்டு போரின் இரத்தந்தோய்ந்த புரட்சியை விட மிகவும் வித்தியாசமான விதத்தில் செய்யப்பட்டது. அது எஜமானர்களுக்கு 40 மில்லியன் பவுண்டுகள் வழங்கியதன் மூலம் எட்டப்பட்டது, அவர்களில் பலர் மிகவும் அரிதாகவே அந்த கிழக்கு அரைகோள பெருநிலங்களில் அடியெடுத்து வைத்திருந்தனர். 2009 இல் தொழிற்கட்சி பிரதம மந்திரி கோர்டன் பிரௌன் இலண்டன் நகர வங்கியியல் தொழில்துறைக்கு மிகப் பெரியளவில் செல்வ வளத்தைக் கைமாற்றும் வரையில் இது தான் பிரிட்டிஷ் வரலாற்றில் மிகப் பெரிய பிணையெடுப்பாக இருந்தது.

இனரீதியிலான வரலாற்று 'தத்துவம்'

ஓர் 'ஆங்கிலோ-கறுப்பினத்தவர் கூட்டணி' பற்றிய ஹோல்டனின் அனுமானம் ஒரு மிகப் பெரிய பிரச்சினையிலிருந்து வெளிப்படுகிறது. அமெரிக்கப் புரட்சியில் பங்கெடுத்தவர்களை 'வெள்ளையினத்தவர்கள்' மற்றும் 'கறுப்பினத்தவர்கள்' என்று வகைப்படுத்துவதன் மூலம் அவர்களின் நோக்கங்களை புனிதப்படுத்தி இருப்பதாக அவர் நம்புகிறார். அவரது போஸ்ட் கட்டுரையிலும் மற்றும் ட்வீட்டரில் அவரின் 'ஆதாரங்களின் துணுக்குகளிலும்', ஹோல்டன் ஏகாதிபத்திய நெருக்கடியின் மற்றும் போரின் அனைத்து நடவடிக்கைகளையும் இந்த இரண்டு பிரிவுகளில் இருந்து உய்த்துணர்கிறார். அவ்விதத்தில் அவரால் பின்வரும் வார்த்தைகளை எழுத முடிகிறது: “கறுப்பினத்தவர்கள் ஒரு கூட்டணி அமைத்திருந்தனர்';“வெள்ளையினத்தவர்கள் சீற்றத்துடன் இருந்தனர்'; “டன்போர்டின் விடுதலை பிரகடனம் வெள்ளையினத்தவர்களை ஆத்திரமூட்டியது.' அவர், சான்றாக, தேசப்பற்றாளர் தரப்பிலிருந்த அடிமை உரிமையாளர்களுக்கும் பிரிட்டிஷ் விசுவாசிகள் தரப்பின் அடிமை-உரிமையாளர்களுக்கும் இடையே, பென்சில்வேனியா குவாக்கர்களுக்கும் (Quakers) அல்லது தெற்கு கரோலினா எல்லையோர மக்களுக்கும் இடையே, அல்லது போஸ்டனின் சுதந்திர கறுப்பினத்தவர்களுக்கும் மற்றும் தெற்கு கரோலினாவில் வழிவழியாக வந்த அடிமைகளுக்கும் இடையே வித்தியாசப்படுத்திக் காட்டுவதன் மூலம் இதில் எதையும் அவர் தகுதியடைய செய்யவில்லை.

இனவாதம் வரலாற்றின் மீது முரட்டுத்தனமாக சவாரி செய்துள்ளது. ஹோல்டனின் கணக்கில் கைவிடப்பட்டிருப்பவை மலைப்பூட்டுகின்றன. அங்கே ஆங்கிலோ உள்நாட்டு போர் இல்லை, அறிவொளி இல்லை, நிலபிரபுத்துவம் மற்றும் பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம் பற்றிய கருத்து இல்லை. வடக்கு அமெரிக்காவின் நிலவளம் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை போன்ற தீர்க்கமான பொருளாதார காரணிகளைக் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. மிகப்பெரிய ஏகாதிபத்திய நெருக்கடியின் ஒரு மிக முக்கிய அம்சமான, வணிக முதலாளித்துவத்திற்கு (mercantilist capitalism) ஏற்பட்டு வந்த நிதி நெருக்கடி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், அது ஒப்புக் கொள்ளப்படவும் இல்லை. [18]

என்ன காரணத் தத்துவம் (theory of causatio) வரலாற்றுக்கு இனவாத அணுகுமுறையை வழங்குகிறது? அது இனத்திற்கு மிகைப்படுத்தப்பட்ட முக்கியத்ததுவத்தை வழங்குகிறது, ஆனால் இந்த இனம் என்பதே எங்கிருந்து வந்தது? ஹன்னாஹ்-ஜோன்ஸைத் தொடர்ந்து, ஹோல்டனும், ஒரு காலத்தில் 'அமெரிக்க விதிவிலக்குவாதம்' (American exceptionalism) என்று அழைக்கப்பட்டதன் ஒரு புதிய வடிவத்தை முன்வைப்பதாக தெரிகிறது. “இனங்கள்' என்பது விசித்திரமாக அமெரிக்காவினதாக இருக்கின்றன, 'வெள்ளையினம்' மற்றும் 'கறுப்பினம்' என்று இந்த இனங்களுக்கு மட்டுமே நிஜமான முக்கியத்துவம் வழங்கப்படுகிறது, இந்தியர்களுக்கு இல்லை, காலனித்துவ சகாப்தத்தில் இருந்து இன்று வரை அமெரிக்காவில் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டுள்ள பல புலம்பெயர்ந்த குழுக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

வரலாறு இனத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்ற நம்பிக்கை நீண்ட காலமாகவே, மிகச் சரியாக, வலது சாரியுடன் தொடர்புடையது. இது அமெரிக்காவில் Ku Klux Klan மற்றும் ஜேர்மனியில் நாஜிக்களின் வரலாற்று மெய்யியலாக இருந்தது. ஆனால் பாசிசவாதிகளின் பைத்தியக்காரத்தனமான புராணத்திற்கு முரண்பட்ட விதத்தில், இனம் என்பது இயற்கையாக தோன்றியதில்லை. அது சுரண்டலின் பல்வேறு 'இயல்பான' வடிவங்களை உருவாக்கவும் நியாயப்படுத்தவும் வழிவகையாக வரலாற்றுரீதியில் முதலாளித்துவத்துடன் சேர்ந்து வளர்ந்தது.

'இனத்தின் கருத்துருவாக்கம்' (reification of race), ஆளும் வர்க்கம் அறிவொளி பகுத்தறிவாதத்திலிருந்து புத்திஜீவித பின்வாங்கலில், 19 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் தான் அதிகரித்தளவில் திடமான புத்திஜீவித தன்மையை எடுத்தது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சமூக யதார்த்தத்தின் மீது ஒரு பொய்யான பொருள்விளக்கத்தைத் திணிக்க ஒரு வழிவகையாக இனத்தை ஊக்குவித்தமை, பிரிவிக்கவியலாதவாறு தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிசத்தின் எழுச்சியுடன் பிணைந்திருந்தது—உண்மையில் சொல்லப் போனால் அதற்கு எதிரான ஒரு மாற்று மருந்தாக இருந்தது. “ஏகாதிபத்திய காலத்தில் சமூக விஞ்ஞானத்தின் குழப்பமும் சீர்குலைவும், (வர்க்கத்தை இனமாக பிரதியீடு செய்து) பெரிதும் இனவாத தத்துவத்தின் போக்கை ஒட்டி ஏற்படுத்தப்பட்டது” என்று ஜோர்ஜ் லூகாக்ஸ் (Georg Lukacs) குறிப்பிட்டார். [19]

தன்னை ஓர் இனவாதியாக ஹோல்டன் கருதவில்லை. அவர் இனவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக ஹோல்டன் நம்புகிறார் என்பதில் சந்தேகமில்லை, அந்த போராட்டத்தில் 'ஒரு பயனுள்ள கடந்த காலத்தை' மொத்தத்தில் நிகழ்காலத்திற்காக சிறப்பான விதத்தில் எட்டுவதற்காக வரலாற்று உண்மைகளுடன் வேகமாகவும் தளர்வாகவும் விளையாடுவது அனுமதிக்கப்படுகிறது.

அவர் தவறாக எடுத்துக் கொண்டுள்ளார். எந்த இனமாகட்டும் எந்த தேசியங்களாகட்டும் ஒடுக்கப்படும் ஜனங்களுக்கு, நிகழ்காலத்திற்கு தேவைப்படுவதைப் போலவே அதேயளவுக்கு, கடந்த காலத்தைப் பற்றிய ஒரு நேர்மையான புறநிலை புரிதல் அவசியப்படுகிறது.

வரலாற்றின் மீது இனவாத கட்டுக்கதையின் திணிப்பு எந்தளவுக்கு குறுகிய காலத்திற்காக இருந்தாலும், வெளிப்படையாகவே, வினோதமான நோக்கங்களைக் கொண்டிருந்தாலும், அது அதிவலது எதிலிருந்து எழுகிறதோ அந்த விஞ்ஞான-விரோத பகுத்தறிவற்ற பிசாசுக்கு மட்டுமே தீனியிடுகிறது. அமெரிக்க புரட்சி மற்றும் உள்நாட்டு போர் மீதான தாக்குதலும், இத்தகைய புரட்சிகளை உச்சபட்ச உயரத்திற்குக் கொண்டு சென்ற சமத்துவத்திற்கான பரந்த வரலாற்று போராட்டம் மீதான தாக்குதலும் வலதுசாரிகளை மட்டுமே பலப்படுத்துகின்றன. அமெரிக்காவிலும் ஏனைய இடங்களிலும் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கும் ஓர் அபாயகரமான தருணத்தில் இது வருகிறது. உண்மையில், அமெரிக்க தாராளமயமாக்கலால் கைவிடப்பட்ட, மற்றும் இப்போது குறைகூறப்படும், வரலாற்று பகுதிகளில், அதிவலது அதன் சொந்த 'பயன்படுத்தத்தக்க கடந்த காலத்தை' காண்கிறது. நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வூடி ஹோல்டன் போன்ற வரலாற்றாளர்களின் அமெரிக்க புரட்சி மீதான தாக்குதல், ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியை 1776 இன் பாதுகாவலர்களாக காட்டிக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த காட்சிக்குப் பின்னால் ஜனநாயகத்திற்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு சதி ஆழமடைகிறது.

[1] Middlekauff, Robert and University of Oxford. The Glorious Cause: The American Revolution 1763–1789. New York; Oxford: Oxford University Press, 1985: 322.

[2] Holton, Woody. “The Specter of Emancipation and the Road to Revolution: A Rejoinder to Richard Brown et. al. | History News Network.” Accessed September 13, 2021. https://historynewsnetwork.org/article/181195.

[3] Holton, Woody. “Perspective | The Declaration of Independence’s Debt to Black America,” July 2, 2021. https://www.washingtonpost.com/outlook/2021/07/02/fourth-july-african-americans-declaration/.

[4] Holton, Woody. Abigail Adams: A Life. Atria Books. Kindle Edition: 56–57

[5] Norton, Mary Beth. 1774: The Long Year of Revolution, 2021.

[6] Nash, Gary B. “The African Americans’ Revolution,” in Gray, Edward G, and Jane Kamensky. The Oxford Handbook of the American Revolution, 2015: 254.

[7] Pybus, Cassandra. “Jefferson’s Faulty Math: The Question of Slave Defections in the American Revolution.” The William and Mary Quarterly 62, no. 2 (2005): 258; Berlin, Ira. Many Thousands Gone: The First Two Centuries of Slavery in N.A. Harvard U.P., 1998: 263, 303; Kulikoff, Allan. Tobacco and Slaves: The Development of Southern Cultures in the Chesapeake, 1680–1800. Chapel Hill: Univ. of North Carolina Pr., 2002: 418.

[8] Walker, James W. St.G. Black Loyalists: The Search for a Promised Land in Nova Scotia and Sierra Leone 1783-1870. S.l.: Univ of Toronto Press, 2017.

[9] Pybus, Cassandra, “Jefferson’s Faulty Math”: 257.

[10] Frey, Silvia, “Between Slavery and Freedom: Virginia Blacks in the American Revolution,” Journal of Southern History, vol. 49, no. 3 (Aug., 1983), pp. 387–88; and Quarles, Benjamin, “Lord Dunmore as Liberator,” The William and Mary Quarterly, 3rd Ser., vol. 15, no. 4.

[11] “Philipsburg Proclamation.” In Wikipedia, July 17, 2021. https://en.wikipedia.org/w/index.php?title=Philipsburg_Proclamation&oldid=1034059392.

[12] Bailyn, Bernard. Ideological Origins of the American Revolution. Belknap Press, 2021: 246.

[13] Berlin, Ira. Slaves without Masters: The Free Negro in the Antebellum South. New York: Pantheon, 1974.

[14] “Extract from Thomas Jefferson’s ‘Notes on the State of Virginia,’ 1782 [Quote] | Jefferson Quotes & Family Letters.” Accessed September 13, 2021. https://tjrs.monticello.org/letter/2218.

[15] Masur, Kate. Until Justice Be Done: America’s First Civil Rights Movement, from the Revolution to Reconstruction, 2021: 9.

[16] Holton, Woody. “The World is not Enough.” Reviews in American History 43, no. 1 (2015): 33.

[17] James, Cyril Lionel Robert. The Black Jacobins: Toussaint L’Ouverture and the San Domingo Revolution. Secker and Warburg, 1938.

[18] Sheridan, Richard B. “The British Credit Crisis of 1772 and The American Colonies.” The Journal of Economic History 20, no. 2 (1960): 161–86.

[19] Lukacs, Georg. The Destruction of Reason, 1952. Accessed September 13, 2021. https://www.marxists.org/archive/lukacs/works/destruction-reason/ch03.htm.

Loading