கோவிட்-19 “தொடர்ச்சியான தொற்றுநோயாக” மாறும் என்று ஸ்பானிய அதிகாரிகள் அறிவிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஸ்பெயினில் உள்ள பிராந்திய அரசாங்கங்கள், மக்கள் மத்தியில் கோவிட்-19 “உள்ளூர் சார்ந்த நோயாக” மாறும் என்று அறிவித்துள்ளன, இது, பொது சுகாதார நடவடிக்கைகளை கைவிடவும், ஸ்பெயினின் மக்களை “வைரஸூடன் வாழ” கட்டாயப்படுத்தவும் சோசலிஸ்ட் கட்சி (PSOE) பொடேமோஸ் அரசாங்கம் அதிகரித்தளவில் சமீபத்தில் நடத்திய அதன் குற்றவியல் பிரச்சாரத்தின் போது அறிவிக்கப்பட்டது.

தொற்றுநோயியல் ரீதியாக, “உள்ளூர் சார்ந்த நோய்” (“endemic”) என்ற சொல் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களிடையே ஒரு நோய் தொடர்ந்து பரவலாக பரவும் என்பதை விவரிக்கிறது. அதாவது, ஒரு நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பகுதியினருக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அளவிற்கு ஒரு நோய் பரவும் என்பதையே இது குறிக்கிறது. பொதுவான ஜலதோஷம் போன்ற வைரஸ் நோய்கள் உள்ளூர் சார்ந்த நோயாகக் கருதப்படுகின்றன.

Regional premier of the Basque Country, Iñigo Urkullu (Source: Wikimedia Commons)

கோவிட்-19 ஐ “உள்ளூர் சார்ந்த நோய்,” என்று அறிவித்து ஸ்பானிய ஆளும் வர்க்கம், நோய்தொற்றை தடையின்றி பரவ அனுமதிக்கும், மற்றும் மருத்துவமனைகள் கட்டுப்பாட்டை இழக்கும் அளவிற்கு நெருக்கடிக்குள்ளாகும் வகையில் பருவகால நோய்களை பரவ அனுமதிக்கும் அதன் நோக்கத்தை சமிக்ஞை செய்கிறது. ஒப்பீட்டளவில் தீங்கற்ற வைரஸாக கருதப்பட்டாலும், கட்டுப்படுத்த முடியாத தவிர்க்க முடியாத ஒரு நோய்தொற்றை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் உயிர்களைக் கொல்லும் என்பது பற்றி கவலைப்படாமல் ஒரு கொடிய நோயை மக்கள் மத்தியில் பரவ அனுமதிக்க, வேண்டுமென்றே எடுக்கப்பட்ட ஒரு முடிவாக இது உள்ளது.

Navarrese Institute of Public and Working Health (ISPLN) நிறுவனம் நவாராவின் வடக்கு பிராந்தியத்தின் தொற்றுநோயியல் நிலைமை பற்றி அறிவிக்கையில், நடைமுறையில் தொற்றுநோய் முடிந்துவிட்டது, என்றாலும் வைரஸ் தொடர்ந்து பெருகும் என்று கூறியது. “புதிய மற்றும் எதிர்பாராத காரணிகள் உருவாகாத வரை,” “நவாராவில் தொற்றுநோய் சூழ்நிலையின் முடிவில் நாம் இருக்க முடியும். அதனால் கோவிட்-19 பரவலாக பரவுவதை நிரந்தரமாக நிறுத்துகிறது என்று அர்த்தமல்ல, மாறாக இது அநேகமாக ஒரு பகுதி சார்ந்த அல்லது பருவகால நோய்தொற்றுக்களின் பட்டியலில் சேர்க்கப்படக்கூடும்” என்று அறிக்கை தெரிவித்தது.

“கோவிட்-19, இலையுதிர் மற்றும் குளிர் காலங்களில் நோய்தொற்று அலைகளை ஏற்படுத்தும் என்பதை நிராகரிக்க முடியாது,” “என்றாலும் பாரியளவிலான தடுப்பூசி வழங்கல் திட்டம் மற்றும் மக்களின் ஏனைய தடுப்பு நடவடிக்கைகளுக்கு நன்றி கூறும் வகையில் அவை படிப்படியாக குறைந்து சிறியளவிலான சுகாதார தாக்கத்தை ஏற்படுத்தும். சரியாக தடுப்பூசி போடப்பட்ட மக்கள் மத்தியில் காணப்படும் கோவிட்-19 இன் ஆபத்து காய்ச்சல் போன்ற பிற பொதுவான நோய்களை விட அதிகமானதல்ல” என்று ISPLN அறிக்கை தொடர்ந்து தெரிவித்தது.

கோவிட்-19 இயற்கையாகவே குறைந்த ஆபத்துள்ள நோயாக மாறும் என்பதுடன், அது வெறும் “காய்ச்சல் போன்றதே” என்று கூறப்படுவது எந்தவித விஞ்ஞானபூர்வ அடிப்படையும் இல்லாத ஒரு பொய்யாகும். இந்த நோய்தொற்றை கட்டுப்படுத்தவும் முற்றிலும் ஒழிக்கவும் தவறும் பட்சத்தில் உருவெடுக்க சாத்தியமுள்ள மேலதிக பிறழ்வுகள் இன்னும் கொடிய வைரஸ் மாறுபாடுகளை உருவாக்க முடியும், இது மிகுந்த தொற்றும் தன்மை கொண்ட மற்றும் அபாயகரமான வைரஸின் டெல்டா மாறுபாட்டின் எழுச்சியினால் ஏற்கனவே எடுத்துக்காட்டப்பட்டது.

கடந்த வெள்ளியன்று, பாஸ்க் நாட்டின் பிராந்திய பிரதமர் Inigo Urkullu கூட, பிராந்தியத்தில் “உள்ளூர் சார்ந்த நோயாக” வைரஸ் மாறியுள்ளது என்று அறிவித்தார். மேலும் Urkullu, “ஒரு தொற்றுநோய் சூழ்நிலையிலிருந்து ஒரு உள்ளூர் சார்ந்த சூழ்நிலைக்கு பாஸ்க் நாடு நகர்கிறது” என்று பாஸ்க் பொதுமக்கள் பாதுகாப்பு திட்டத்திற்கான ஆலோசனைக் குழுவிடம் (Advisory Commission of the LABI (Basque Civil Protection Plan) தெரிவித்தார்.

வைரஸின் போக்கு தொடர்ந்து “பரவக்கூடியதாக” இருந்தாலும், பிராந்தியத்தில் “சுகாதார அவசரநிலைகளை முடிவுக்குக் கொண்டுவர ஆணையிட்டு அதனை முன்னோக்கி நகர்த்த” “நாம் ஒரு புதிய நடவடிக்கை எடுக்க முடியும்,” என்று தெரிவித்தார்.

பாஸ்க் நாட்டில் வைரஸ் பரவும் சூழ்நிலை பற்றி பேசுகையில் Urkullu இவ்வாறு தெரிவித்தார்: “இது ஒரு இறங்குமுகமான, மற்றும் மிக நிலையான போக்கில் உள்ளது. [தொற்றுநோயின் ஆரம்பகாலத்தை விட] வேறுபட்ட சூழ்நிலையில் தற்போது நாம் இருப்பதால் வேறுபட்ட நடவடிக்கைகளை நாம் செயல்படுத்த வேண்டும்.”

செவ்வாயன்று, பாஸ்க் அரசாங்கம் பிராந்தியத்தில் நடைமுறையில் இருந்த “சுகாதார அவசரநிலையை” முடிவுக்குக் கொண்டுவந்தது, மேலும் நெரிசல் மிக்க பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டுப்பாட்டை தவிர சுகாதாரம் தொடர்புபட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியது. காஸ்டில்லா-லா மஞ்சா, காஸ்டில்லா ஒய் லியோன், எக்ஸ்ட்ரீமதுரா, நவாரா மற்றும் மாட்ரிட் ஆகிய பிராந்தியங்களை அடுத்து, பெரும்பாலான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நீக்கும் ஸ்பெயினின் ஆறாவது பிராந்தியமாக இது உள்ளது.

நவாரீஸ் மற்றும் பாஸ்க் அரசாங்கங்களின் அறிவிப்புக்கள் ஸ்பெயின் மற்றும் சர்வதேச அளவில் ஆளும் வர்க்கத்தால் பின்பற்றப்படும் “கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை எடுத்துக்காட்டுகின்றன. சுகாதார எச்சரிக்கைகள் மற்றும் அவசரநிலைகளின் ஒருங்கிணைப்பு மையத்தின் (Centre for the Coordination of Health Alerts and Emergencies-CCAES) இயக்குநரும், மற்றும் PSOE பொடேமோஸ் அரசாங்கத்தின் தொற்றுநோய் சம்பந்தப்பட்ட முக்கிய ஆலோசகர்களில் ஒருவருமான, பெர்னாண்டோ சைமன், நோய்தொற்றை “வழமையானதாக்க” அழைப்புவிடுத்து இரண்டு வாரங்களில் இது வெளி வருகிறது.

தொற்றுநோயியலுக்கான ஸ்பானிய சங்க கூட்டத்தில் பேசுகையில், கோவிட்-19 நியாயமாக தீங்கற்ற நோய் என்று தவறாக கூறியதுடன், “bazooka வைத்து ஒரு ஈயை சுட்டுக் கொள்வது” போல ஸ்பெயினின் தொற்றுநோய் நடவடிக்கை இருப்பதாக ஒப்பீடு செய்து, தொற்றுநோயுடன் தொடர்புபட்ட அபாயங்களை குறைத்து மதிப்பிட்டார்.

“ஸ்பெயினில் பெரியளவிலான தொற்றுநோயியல் அலைகள் எதுவும் இனி எழாது,” என்றாலும், “ஆறாவது, ஏழாவது, எட்டாவது அல்லது ஒன்பதாவது நோய்தொற்று அலைகள் தோன்றலாம், ஆனால் அவை மற்ற அலைகளைப் போல இருக்காது” என்று சைமன் கூறினார்.

ஸ்பெயினின் தற்போதைய நிலைமை “நாம் முன்னர் எதிர்கொண்டதைப் போல பொதுவானது எதுவும் இல்லை,” என்றும் சைமன் கூறினார். மேலும், “சில குறிப்பிட்ட குழுக்களின் மத்தியில் [தொற்றுநோயின்] மற்றொரு சிற்றலை எழக்கூடும், என்றாலும் ஸ்பெயினின் தற்போதைய சூழ்நிலை கொஞ்ச கொஞ்சமாக சூழ்நிலையை இயல்பாக்க மிகவும் சாதகமானதாக உள்ளது” என்றும் கூறினார்.

கோவிட்-19 ஐ வழமையாக்குவதற்கான, அல்லது “உள்ளூர் சார்ந்த நோயாக” மாற அனுமதிப்பதற்கான இந்த அழைப்புகள், ஸ்பெயினில் ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான மக்கள் மடிந்து கொண்டிருக்கும், மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நோய்தொற்று பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் வெளிவருகின்றன. இந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் நோய்தொற்று ஏற்பட்டு பல வாரங்கள் அல்லது பல மாதங்களுக்கு பின்னர் கூட, பல் உறுப்பு சேதம், அறிவாற்றல் குறைபாடு, கடுமையான சோர்வு மற்றும் தசை வலி உள்ளிட்ட தீவிர சாத்தியமுள்ள நீண்டகால சுகாதார விளைவுகளுடன் கொரோனா வைரஸின் நிலையான அறிகுறிகளால் பாதிக்கப்படுவார்கள்.

நோயை மிகக் குறைந்த ஆபத்துள்ளதாக்கும் பாரியளவிலான தடுப்பூசி பிரச்சாரங்கள் தொற்றுநோய் நிலைமையை அடிப்படையில் மாற்றியுள்ளது, மேலும் முற்று முழுதாக வைரஸை ஒழிப்பது சாத்தியமற்றதே என்பது போன்ற வாதங்களை முன்வைத்து இந்த கொள்கைகள் நியாயப்படுத்தப்படுகின்றன.

இந்த இரண்டு கூற்றுக்களும் பொய்யானவையே. நோய்தொற்றை எதிர்த்து போராடுவதில் தடுப்பூசி ஒரு தகுதியற்ற கருவியாக இருப்பதால், கடுமையான நோயைத் தடுக்க இது மட்டுமே போதுமானதல்ல, மாறாக நோய்தொற்று பரவுவதை ஒடுக்குவதற்கான விஞ்ஞான ரீதியாக வழிநடத்தப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகளுடன் இணைந்து இதை செயல்படுத்த வேண்டும்.

மேலும், 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட சீனா போன்ற நாடுகளின் உதாரணம், நோய்தொற்று ஒழிப்பு உத்தியை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்பதைக் காட்டுகிறது. வைரஸின் பிறப்பிடமாக இருந்தாலும் கூட, பரவலான பரிசோதனை நடவடிக்கை, தொடர்பு தடமறிதல், பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல் மற்றும் கடுமையான பயண கட்டுப்பாடுகளை விதித்தல் போன்ற ஏராளமான பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்தி சீனாவால் நோய்தொற்று வெடிப்பை விரைந்து கட்டுப்படுத்த முடிந்தது.

இந்த நடவடிக்கைகள் சீனாவில் தொற்றுநோயால் 5,000 க்கும் குறைவாகவே இறப்புக்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலையை தக்கவைத்தன, இது ஸ்பெயின் மற்றும் ஏனைய “முன்னேறிய” பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளின் மொத்த இறப்புக்களில் மிகக் குறைந்த பகுதியாகும். சீனா தனது சொந்த எல்லைக்குள் வைரஸை முற்றிலும் ஒழித்த பின்னரும், சர்வதேச பயணத்தின் மூலம் நாட்டுக்குள் வந்த டெல்டா மாறுபாட்டை மீண்டும் மீண்டும் எதிர்த்து போராட வேண்டிய நிலை அதற்கும் உருவானது.

ஆரம்பம் முதல் “பூஜ்ஜிய கோவிட்” நிலையை பின்பற்றிய மற்றும் வைரஸ் பரவலை கிட்டத்தட்ட முழுமையாக ஒடுக்கிய நியூசிலாந்து போன்ற பிற நாடுகள் கூட, சமீபத்தில் இந்த மூலோபாயத்தை கைவிட்டதுடன், உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான முதலாளித்துவ அரசாங்கங்களால் பின்பற்றப்படும் “கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை நோக்கி திரும்புகின்றன. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் திங்களன்று, டெல்டா மாறுபாடு ஒரு “game-changer” என்று வாதிட்டு, அவரது அரசாங்கம் “நடவடிக்கைகளை ஒரு புதிய வழிமுறைக்கு மாற்றும்” என்று அறிவித்தார்.

நியூசிலாந்து, ஸ்பெயின் அல்லது வேறு எந்த நாட்டிலும் தொற்றுநோயின் ஆபத்தான அலைகள் தொடர்ந்து எழுவதை தவிர்க்க முடியாது என்று எதுவுமில்லை. சீனாவும் மற்றும் ஏனைய சில முதலாளித்துவ நாடுகளும் அடைந்த வெற்றிகள் தொற்றுநோயை எதிர்த்துப் போராட முடியும் என்பதைக் காட்டுகின்றன. கோவிட்-19 ஐ முற்றிலும் ஒழிப்பதற்கு தேவையான சமூக வளங்களை திரட்டுவதற்கான சாத்தியமும் உள்ளது. உலகளவில் ஒருங்கிணைந்த முறையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டால், தொற்றுநோயை விரைந்து முடிவுக்குக் கொண்டுவருவது சாத்தியமே.

ஸ்பெயினின் PSOE பொடேமோஸ் அரசாங்கம், தொற்றுநோயை ஒழிப்பதற்கும் மற்றும் உயிர்களை காப்பாற்றுவதற்கும் என விஞ்ஞான ரீதியாக வழிநடத்தப்பட்ட கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது என்பதை நிரூபித்துள்ளது. ஐரோப்பா முழுவதும் உள்ள ஆளும் வர்க்கத்தைப் போல, 100,000 க்கும் மேற்பட்ட இறப்புக்களை வணிகத்திற்கான செலவாக பார்க்கும் இந்த அரசாங்கமும், எல்லாவற்றிற்கும் மேலாக பெருநிறுவன இலாபங்களுக்கும் பெரும் பணக்கார உயரடுக்கின் செல்வ அதிகரிப்புக்கும் முன்னுரிமை அளிக்கின்றது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), தொற்றுநோயியல் நிபுணர்களும் ஏனைய விஞ்ஞானிகளும் முன்வைத்த கொள்கைகளின் அடிப்படையில் வைரஸை ஒழிக்க உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இவையனைத்திற்கும் மேலாக, தொற்றுநோய்க்கு எதிரான ஒரு விஞ்ஞானபூர்வ போராட்டத்தை ஒவ்வொரு திருப்பத்திலும் எதிர்த்து வந்துள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஜனநாயக கட்சி, மற்றும் PSOE மற்றும் பொடேமோஸ் போன்ற “இடது ஜனரஞ்சக” கட்சிகளின் கழுத்து நெரிப்பிலிருந்து தொழிலாள வர்க்கம் தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

நோய் பரவுவதை எதிர்க்கவும், மற்றும் ஸ்பெயினிலும், ஐரோப்பா முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் ICFI இன் பிரிவுகளை உருவாக்கவும் பணியிடங்களிலும் பள்ளிகளிலும் தொழிலாளர்களுக்கான சுயாதீன பாதுகாப்புக் குழுக்களை உருவாக்கி, தொழிலாளர்கள் இந்த பிரச்சினைகளை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Loading