நியூசிலாந்தின் Daily Blog வலைப்பதிவு உலக சோசலிச வலைத் தளத்தை "குறுங்குழுவாதிகள்" என்று தாக்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நியூசிலாந்து பிரதமர் ‘AUKUS இராணுவ உடன்படிக்கையை பார்த்து` மகிழ்ச்சியடைகின்றார்” என்ற உலக சோசலிச வலைத் தளத்தின் செப்டம்பர் 22 கட்டுரை தொழிற்கட்சி-பசுமைக்கட்சி அரசாங்கத்தை ஆதரிக்கும் போலி-இடது வெளியீடான Daily Blog வலைப் பதிவின் விரோதமான பதிலைத் தூண்டியது.

ஒரு பதிவில் “Daily Blog மேல்-நடுத்தர வர்க்கம், போலி-இடது, ஏகாதிபத்தியவாதிகள் என முத்திரை குத்தப்பட்டுள்ளது! யாருக்கு தெரியும்?' (செப்டம்பர் 24), நன்கு அறியப்பட்ட தொழிற் கட்சி சார்பு வர்ணனையாளரான கிறிஸ் ட்ரொட்டர் (Chris Trotter), தன்னையும் மற்றும் வலைப் பதிவின் ஆசிரியர் மார்ட்டின் பிராட்பரியையும் (Martyn Bradbury) அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிப்பவர்களாக உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

கிறிஸ் ட்ரோட்டர் மற்றும் Daily Blogஇன் சின்னம்[Source: Facebook] [Photo: Facebook]

பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் AUKUS உடன்பாட்டை பகிரங்கமாக வரவேற்றார். இதன் கீழ் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை சீனாவுக்கு எதிரான போருக்கான அதிகரிக்கும் தயாரிப்புகள் இராணுவ ஒத்துழைப்பை பெருமளவில் அதிகரிக்கும். ஆஸ்திரேலியாவை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களுடன் ஆயுதமயமாக்கப்படும் ஒப்பந்தமும் இதில் அடங்கும்.

ட்ரொட்டரும் பிராட்பரியும் 'போருக்கான அதிகரித்த தயாரிப்புகளில் இருந்து அரசாங்கம் விலகி நிற்கும் என்ற மாயையை ஊக்குவிப்பதாக' உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தது. Daily Blog வலைப் பதிவு சீனாவை நியூசிலாந்துக்கு அச்சுறுத்தலாக சித்தரிக்கிறது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டினோம். மேலும் அது 'கொரோனா வைரஸ் தொற்றுநோய் வூஹான் வைரஸ் ஆய்வகத்திலிருந்து உருவானது என்ற பொய் உட்பட சீனாவுக்கு எதிரான அமெரிக்க பிரச்சாரத்தை மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.'

பசிபிக்கில் நியூசிலாந்தின் அரை காலனிகளையும், அண்டார்டிகாவில் பிராந்திய உரிமை கோரப்பட்ட பகுதிகளையும் பாதுகாப்பதற்காக ஒரு 'மிகப் பெரிய இராணுவத்திற்கான' பிராட்பரியின் கோரிக்கையை உலக சோசலிச வலைத் தளம் மேற்கோள் காட்டியது. Daily Blog வலைப் பதிவு 'நியூசிலாந்து ஏகாதிபத்தியத்தை தழுவிக்கொள்ளும் உயர் நடுத்தர வர்க்கத்தின் ஒரு அடுக்கை பிரதிநிதித்துவப்படுத்துகிறது' மற்றும் அமெரிக்க தலைமையிலான போர் திட்டங்களுக்கு அதனிடம் எந்த கொள்கை ரீதியான எதிர்ப்பும் இல்லை என்று நாம் அக்கட்டுரையை முடித்திருந்தோம்.

இந்த புள்ளிகளை மறுக்க ட்ரோட்டர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர் உலக சோசலிச வலைத் தளம் 'குறுங்குழுவாதத்தில்' ஈடுபடுவதாக குற்றம்சாட்டி மற்றும் அந்த தளம் 'ஒற்றுமை மற்றும் தோழமை உணர்வுடன் மற்ற இடதுசாரிகளை' ஆதரிக்கவில்லை என்று புகார் கூறுகிறார். உலக சோசலிச வலைத் தளத்தின் 'சிறந்த பகுப்பாய்வு,' எழுத்தாளரின் 'தங்களின் தத்துவார்த்தரீதியான எதிரிகளை தேவையில்லாமல் தூற்றவதால் (நகைச்சுவையாக காட்டும் நோக்கமில்லாதிருந்தாலும்)' கெட்டுப்போனதாக அவர் கூறுகிறார்.

ட்ரோட்டர் 'குறுங்குழுவாதம்' என்று முத்திரை குத்துவது இடதுசாரி அல்லாத Daily Blog வலைப் பதிவின் நிலைப்பாடுகளின் முற்றிலும் முறையான மற்றும் நியாயமான வெளிப்பாடு ஆகும். வலைப் பதிவின் ஆசிரியர் மற்றும் பங்களிப்பாளர்கள் தேசியவாதம், தொழிற் கட்சி மற்றும் பிற முதலாளித்துவக் கட்சிகளுக்கு ஆதரவு, மற்றும் ஒரு சிறிய ஏகாதிபத்திய சக்தியாக நியூசிலாந்தின் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒரு அரசியல் முன்னோக்கை முன்வைக்கின்றனர்.

இந்த உண்மைகளை விளக்குவதற்கும் குறுங்குழுவாதத்திற்கும் பொதுவானது எதுவுமில்ல. சரியாக புரிந்து கொண்டால், போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவதற்கான போராட்டம் உட்பட தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் தீவிரமாக தலையிட மறுப்பது என்பதே குறுங்குழுவாதத்தின் பொருளாகும்.

தொழிலாளர்களும் இளைஞர்களும், ஏகாதிபத்தியம், போர், சமூக சமத்துவமின்மை மற்றும் தொற்றுநோய்க்கு எதிராக ஒரு உண்மையான போராட்டத்தை நடத்த வேண்டும் என்றால், எல்லாவற்றிற்கும் மேலாக, அரசியல் தெளிவு தேவைப்படுகிறது. குறிப்பாக தொழிற் கட்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் Daily Blog போன்றஅவர்களுக்கு ஆதரவளிப்பவர்களின் பங்கு பற்றிய தெளிவு வேண்டும்.

இங்கு ஒரு கேள்வி எழுகிறது: Daily Blog வலைப் பதிவுக்கு எதிரான எங்கள் விமர்சனங்களை நிறுத்த ட்ரோட்டர் இப்போது ஏன் உலக சோசலிச வலைத் தளத்திற்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறார்? Daily Blog வலைப் பதிவு 2013 இல் நிறுவப்பட்டதிலிருந்து டஜன் கணக்கான கட்டுரைகளில் உலக சோசலிச வலைத் தளம் அதனை விமர்சித்துள்ளது.

ட்ரொட்டரும் பிராட்பரியும் ஆர்டெர்ன் அரசாங்கத்தின் வலதுசாரி நிகழ்ச்சி நிரலிலுக்கு எதிரான மக்கள் அதிருப்தியை வளர்வது தொடர்பாக நன்கு உணர்ந்து கொண்டவர்கள். இந்த நிகழ்ச்சி நிரலைப் பற்றி பலமுறை எச்சரித்து, அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்ட உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் குழுவும் முற்படுவதால், அவர்கள் அதிகரித்தளவில் ஆதரவை பெறுவது பற்றி அவர்கள் தெளிவாக அக்கறை கொண்டுள்ளனர்.

தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக, அரசு பில்லியன் கணக்கான மானியங்கள் மற்றும் வரிச் சலுகைகளை பெரிய வணிகர்களுக்கு வழங்கியுள்ளது. அதே நேரத்தில் பொதுத்துறை முழுவதும் சிக்கனத்தை சுமத்துகிறது. இது சமூக சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது. சமீபத்தில், ஆர்டெர்ன், கோவிட்-19 இனை அகற்றுவதற்கான தொழிலாள வர்க்கத்தில் பெரும் ஆதரவைக் கொண்டிருந்த அதன் முந்தைய கொள்கையில் இருந்து அரசாங்கம் 'மாறுவதாக' குறிப்பிட்டது. இந்த மாற்றம் கொடிய வைரஸ் பரவுவதை துரிதப்படுத்தும்.

அதே நேரத்தில், 2017 இல் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, இராணுவத்தை விரிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஆர்டெர்ன் அரசாங்கம் தொடர்ந்து பில்லியன்களை செலவழித்து வருகிறது. மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் உறவுகளை வலுப்படுத்தியுள்ளது. சீனாவுடனான வர்த்தகத்தை நியூசிலாந்து தொடர்ந்து பெரிதும் நம்பியுள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்க ஆளும் வர்க்கம் சீனாவிற்கு எதிரான அதன் இராணுவத் தயாரிப்புகளைத் துரிதப்படுத்தி, அதன் கூட்டாளிகள் இதைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துவதால், நியூசிலாந்து நடுநிலை வகிப்பதாக பெய்ஜிங்கிற்கு பாசாங்கு செய்வது மிகவும் கடினமாகிவிட்டது.

Daily Blog வலைப் பதிவு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபனங்களுக்கு நெருக்கமான நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளைக் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த அடுக்கின் சலுகைநிலை நியூசிலாந்து ஏகாதிபத்தியத்தின் ஸ்திரத்தன்மையில் தங்கியுள்ளது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, பெரிய ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடனான நியூசிலாந்தின் கூட்டணியை பொறுத்தது.

நியூசிலாந்து பசிபிக் பெருங்கடலில் நீண்டகாலமாக நவ காலனித்துவ நலன்களைக் கொண்டுள்ளது என்பதையும், Daily Blog வலைப் பதிவு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கிறது என்ற கருத்தையும் ட்ரொட்டர் நிராகரிக்கிறார். அவர் கிண்டலாக எழுதுகிறார்: 'அந்தத் தந்திரமான பிராட்பரி தான் எடுத்து வைத்திருந்த சிஐஏ இன் பிட்காயினைத் தன் கணினியின் பின்புறத்தில் மறைத்து வைத்திருக்கின்றது!'

இது ஒரு போலிக்குற்றச்சாட்டாகும். Daily Blog வலைப் பதிவு வாஷிங்டனால் நிதியளிக்கப்பட்டது என்று உலக சோசலிச வலைத் தளம் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை. உண்மை என்னவென்றால், பல ஆண்டுகளாக, Daily Blog வலைப் பதிவு சீன எதிர்ப்பு உணர்வை தூண்டிவிடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டதுடன், வெளிநாட்டு போட்டியாளர்களுக்கு எதிராக உள்ளூர் முதலாளித்துவத்தை பாதுகாப்பதுடன் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மிக நெருக்கமான கூட்டணியை விரும்பும் அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகளை ஆதரிக்கிறது.

செப்டம்பர் 2017 தேர்தலைத் தொடர்ந்து, நியூசிலாந்து எதிர்கொள்ளும் 'முக்கிய பிரச்சினை', 2008-2017 தேசிய கட்சி அரசாங்கத்தின் மீது சீன 'செல்வாக்கு' என்று பிராட்பரி எழுதினார். சீன குடியேற்றத்தை 'காலனித்துவத்தின் இரண்டாவது பெரும் அலை' போன்ற அச்சுறுத்தலாக அவர் சித்தரித்தார்.

பிராட்பரி அமெரிக்க ஆதரவு பெற்ற கல்வியாளர் அன்னே-மேரி பிராடி தேசிய அரசாங்கத்தை சீன அரசுக்குக் கீழ்ப்படிவதாகக் கூறியதையும், சீனாவில் பிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக ஜியான் யங் இனை ஒரு உளவாளி என குற்றம்சாட்டியதையும் ஆதரித்தார்.

இதற்கிடையில், நியூசிலாந்து 'சீன மக்கள் குடியரசின் பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார காலனியாக' மாறுவதைத் தடுக்க, தொழிற் கட்சிக்குப் பதிலாக வலதுசாரி ஆசிய எதிர்ப்பு நியூசிலாந்து முதல் கட்சியுடன் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க தேசிய கட்சியை ட்ரோட்டர் வலியுறுத்தினார். (October 19, 2017).

2017-2020 இல் தொழிற்கட்சி-நியூசிலாந்து முதல்-பசுமைக்கட்சி அரசாங்கம் வாஷிங்டனுடனான உறவை வலுப்படுத்தியது. இது ரஷ்யா மற்றும் சீனாவை சர்வதேச ஒழுங்கிற்கு முக்கிய 'அச்சுறுத்தல்கள்' என்று குறிப்பிட்டது. மேலும் பசிபிக் பகுதியில் சீன செல்வாக்கிற்கு எதிராக பின்வாங்கவும் மற்றும் பிராந்தியத்தில் நியூசிலாந்து நலன்களை ஆதரிக்கவும் அதிக அமெரிக்க இராணுவ இருப்பிற்கு அழைப்பு விடுத்தது.

ஆத்திரமூட்டும் இராணுவப் பயிற்சிகளில் நியூசிலாந்து அதிகளவில் ஈடுபட்டு வருகிறது. Te Kaha மற்றும் Air Force Orion கடற்படை கப்பல் இந்த மாதம் இங்கிலாந்து கடற்படை தாக்குதல் குழு மற்றும் தென் சீனக் கடலில் உள்ள நட்புப் படைகளுடன் Bersama Gold 21 போர் பயிற்சிகளுக்கு அனுப்பப்பட்டது.

அணு ஆயுத சக்திகளுக்கிடையே மோதல்கள் வெடிக்கும் அபாயம் அதிகரித்து வரும் நிலையில், Daily Blog வலைப் பதிவு இப்போது ஆர்டெர்ன் அரசாங்கத்தில் அபாயகரமான மாயைகளை ஊக்குவிப்பதன் மூலம் இதற்கான எதிர்ப்பின் வளர்ச்சியைத் தடுக்க முயல்கிறது.

ட்ரோட்டர், வலைப் பதிவின் முன்னைய வரலாற்றை பாதுகாக்க முடியாமல், உலக சோசலிச வலைத் தளத்தின் மீது கம்யூனிச எதிர்ப்பு தாக்குதல்களை நாடுகிறார். 'குறுங்குழுவாதம்' என கண்டனம் செய்வதோடு மட்டுமல்லாமல், அவர் Daily Blog வலைப் பதிவின் மீதானதும் அவரின் மீதான உலக சோசலிச வலைத் தள விமர்சனத்தையும் '1937 சோவியத் போலி வழக்குகளுடன்' ஒப்பிட்டுப் பேசினார்.

போல்ஷிவிக் புரட்சியாளர்கள், குறிப்பாக நாடுகடத்தப்பட்ட தலைவர் லியோன் ட்ரொட்ஸ்கியை ஆதரித்தவர்கள் மீதான எதிர்ப் புரட்சி பாரிய கொலையை நியாயப்படுத்த ஸ்ராலினிச போலி வழக்குகள் பயன்படுத்தப்பட்டன. ட்ரொட்டர், அனைத்து கம்யூனிச எதிர்ப்பாளர்களையும் போலவே, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் 1917 இல் ரஷ்யாவில் முதலாளித்துவத்தை புரட்சிகரமாக தூக்கியெறிந்ததே ஸ்ராலினின் கொலைகார சர்வாதிகாரத்திற்கு தவிர்க்க முடியாமல் வழிவகுத்தது என்ற வலதுசாரி பொய்யை ஊக்குவிக்கின்றார். (ட்ரொட்டரின் ரஷ்ய புரட்சியின் அவதூறுக்கு உலக சோசலிச வலைத் தளம் முன்பு பதிலளித்தது).

ட்ரொட்டர் இப்போது எழுதுவது முற்றிலும் தவறானது: 'இன்னும் கட்டுக்கள் அகற்றப்பட வேண்டிய ஒரு உலகத்தை அடைய வேண்டும் வார்த்தையை மார்க்சிச இடதுசாரிகள் பரப்புவதில் மட்டுப்படுத்தப்பட்டாவிட்டால் புரட்சி எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.' இது சோசலிசப் புரட்சியை கடுமையாக எதிர்க்கும் ஒருவர் கூறுவதாகும்.

ட்ரொட்டரின் சோசலிசத்தை நிராகரிப்பது மற்றும் தொழிற் கட்சியை பாதுகாப்பது தொழிலாள வர்க்கத்தின் மீதான அவமதிப்புடன் பிணைக்கப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தை அவர் இனவெறியுள்ளதாகவும் மற்றும் பின்தங்கியதாகவும் சித்தரிக்கிறார். 'நியூசிலாந்தது மக்களின் மத்தியில் ஆழமான உட்பொதிக்கப்பட்ட இனவெறியை' (டிசம்பர் 22, 2020) மற்றும் பரவலாக 'ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு எதிரான கொடூரமான தப்பெண்ணங்களுக்காக' (பிப்ரவரி 18, 2021) குற்றம்சாட்டி, வறுமை மற்றும் வீடின்மையை தீவிரமாக நிவர்த்தி செய்ய ஆர்டெர்ன் அரசாங்கம் மறுப்பதை அவர் வழக்கமாக நியாயப்படுத்துகிறார். செப்டம்பர் 3 இடுகையில், அவர் 'வெள்ளையின தொழிலாள வர்க்கம் ... இனி இல்லை' என்று தவறாக கூறினார். அவர்கள் அனைவரும் சலுகை பெற்ற சிறு வணிக உரிமையாளர்களாக மாறிவிட்டனர் என்றார்.

தொழிற் கட்சி, ட்ரொட்டர் மற்றும் Daily Blog வலைப் பதிவு உட்பட அதன் ஆதரவாளர்களின் ஏகாதிபத்திய சார்பு அரசியலை அம்பலப்படுத்துவது ஒரு உண்மையான போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தில் உண்மையான புரட்சிகர சோசலிஸ்டுகளின் இன்றியமையாத பணியாகும்.

இத்தகைய இயக்கம் போரின் மூலகாரணமான முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் உலகை போட்டி தேசிய அரசுகளாகப் பிரிப்பதை ஒழிப்பதற்கான போராட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், ட்ரொட்ஸ்கிச இயக்கமும் போராடும் சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கில் உறுதியாக இருக்க வேண்டும். Daily Blog வலைப் பதிவில் ஊக்குவிக்கப்படும் தேசியவாத மற்றும் இராணுவவாத விஷத்திற்கு எதிராக அனைத்து தேசிய இனங்களையும் மற்றும் பின்னணிகளையும் கொண்ட தொழிலாளர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

Loading