முன்னோக்கு

வாஷிங்டன் போஸ்ட் கோவிட்-19 மூடிமறைப்புக்கு அழைப்பு விடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

'இந்த பெருந்தொற்றை ஆய்வு செய்து வருங்காலத்திற்குத் தயாரிப்பு செய்ய உதவும் வகையில் 9/11 ஆணையம் பாணியில் ஒரு தேசியக் குழு' அமைப்பதை ஆமோதித்து செவ்வாய்கிழமை வாஷிங்டன் போஸ்ட் ஒரு தலையங்கம் வெளியிட்டது. உண்மையில் சொல்லப் போனால், அமெரிக்க அரசு எந்திரத்தின் முன்னணி பிரதிநிதிகளைக் கொண்ட அந்த முன்மொழியப்பட்டுள்ள குழு, அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களும் உலகளவில் 15 மில்லியனுக்கு அதிகமானவர்களும் உயிரிழந்துள்ள ஒரு பெருந்தொற்றுக்கான நிஜமான காரணத்தையும் அதற்குப் பொறுப்பானவர்களையும் மூடி மறைக்கவே சேவையாற்றும்.

அக்குழுவை உருவாக்குவதற்கான ஒரு மசோதா நவம்பர் 4 இல் ஜனநாயகக் கட்சியின் டயான் ஃபையின்ஸ்டைன் மற்றும் கிர்ஸ்டன் கில்லிபிராண்ட் மற்றும் குடியரசுக் கட்சியின் ரோஜர் மார்ஷல் மற்றும் ஜோனி ஏர்ன்ஸ்ட் ஆகிய நான்கு செனட்டர்களால் கொண்டு வரப்பட்டது. அந்த ஆணையத்தில் ஜனநாயகக் கட்சியின் ஐந்து நபர்கள் மற்றும் குடியரசுக் கட்சியின் ஐந்து நபர்கள் என 10 உறுப்பினர்கள் இருப்பார்கள்.

அந்த ஆணையத்தின் கருப்பொருளை விளக்கி போஸ்ட் எழுதுகையில், 'இந்த பெருந்தொற்றின் போது மூழ்கடிக்கப்பட்டிருந்த பொது சுகாதார அமைப்புகள் விசாரணையின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும். இந்த ஆணையம் பல துறைகளின் செயல்பாடுகளை நுண்மையாக ஆராய்ந்து, அரசின் எல்லா மட்டங்களிலும் 'கட்டமைப்பு, ஒருங்கிணைப்பு [மற்றும்] நிர்வாகத்தை' ஆய்வு செய்யும்,” என்று குறிப்பிட்டது.

வடமேற்கு DC இல் 15வது தெருவில் உள்ள வாஷிங்டன் போஸ்ட்டின் நுழைவாயில் (Dion Hinchcliffe/Flickr)

அந்த விசாரணையின் மற்றொரு பகுதி 'வைரஸின் தோற்றுவாய்கள் மீது ஒருமுனைப்' படும், அந்த மசோதாவின் எழுத்துக்களின்படி, “வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்தின் பரிசோதனை, விலங்குகளைக் கையாண்ட விதம், அல்லது மாதிரி சேகரிப்பு ஆகியவை சம்பந்தமாக ஓர் ஆய்வகத்துடன் தொடர்புடைய சம்பவம்' நிகழ்ந்திருக்குமா என்பதும் அதில் உள்ளடங்கும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க அரசியல்வாதிகளின் குற்றகரமான நடவடிக்கைகளை மூடிமறைப்பதும், கோவிட்-19 பெருந்தொற்றுக்குச் சீனா மீது பழிசுமத்துவதும் என அந்த விசாரணை இரண்டு நோக்கங்களைக் கொண்டிருக்கும்.

போஸ்ட்டைப் பொறுத்த வரை, குறிப்பாக இந்த இரண்டாவது நோக்கம் முக்கியமானதாக உள்ளது. இரத்தக்கறை படிந்த அதன் கரங்களுடன், உள்நாட்டில் அதிகரித்து வரும் சமூக அமைதியின்மையை முகங்கொடுத்து வரும் அமெரிக்க ஆளும் வர்க்கம், அந்த வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற பொய் மற்றும் நிரூபிக்கப்படாத வாதங்களின் அடிப்படையில் சீனாவைப் பலிக்கடா ஆக்கும் பெரும்பிரயத்தனத்தில் இறங்கி உள்ளது. போஸ்ட்இந்த பொய்களை முடிந்த வரை ஆக்ரோஷமாக முன்னெடுக்கும் பணியை ஏற்றுக் கொண்டுள்ளது.

'இந்த வைரஸின் தோற்றுவாய்கள் மீதான சமீபத்திய அமெரிக்க உளவுத்துறை சமூகத்தின் அறிக்கை தீர்மானமான முடிவைக் கூறவில்லை,” என்றது புலம்புகிறது. அந்த உளவுத்துறை அறிக்கை எந்தளவுக்கு 'தீர்மானத்திற்கு வரவில்லை' என்றால் அது போஸ்ட் விரும்பும் தீர்மானங்களை அது எட்டவில்லை, ஏனென்றால் அந்த தீர்மானத்திற்கான ஆதாரத்தை உருவாக்க முடியவில்லை. கோவிட்-19 'உயிரி ஆயுதமாக உருவாக்கப்படவில்லை'” என்றும், 'மரபணுரீதியாக வடிவமைக்கப்பட்டதில்லை' என்றும் ஐந்தில் நான்கு அமெரிக்க உளவுத்துறை முகமைகள் தீர்மானித்திருந்தன.

ஆனாலும் போஸ்ட் தொடர்ந்து செல்கிறது, “நேரம் மற்றும் ஆதாரவளங்களைப் பெற்ற ஓர் ஆணையத்தால் உண்மைக்கு அருகில் செல்ல முடியும்,” என்று குறிப்பிட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க ஆளும் வர்க்க நலன்களுக்குப் பொருந்தும் விதத்தில் ஒரு சொல்லாடலை இட்டுக்கட்ட அதற்கு அதிக அவகாசம் கிடைக்கும்.

சொல்லப் போனால் இந்த பாரிய மரணத்திற்கு பொறுப்பான சமூக மற்றும் அரசியல் சக்திகள் மீதான எந்தவொரு ஆய்வையும் தவிர்ப்பதையே இந்த ஆணையத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் நோக்கமாக கொண்டுள்ளது, ஏனெனில் இது அமெரிக்காவில் உள்ள முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகளையும், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டிலும் உள்ள அவர்களின் அரசியல் சேவகர்களையும் காட்டிக் கொடுத்துவிடும்.

இந்த நோக்கத்தை அடைவதற்காக, “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கை பற்றிய எந்தவொரு குறிப்பும் அந்த மசோதாவிலோ அல்லது போஸ்டின் தலையங்கத்திலோ குறிப்பிடப்படவில்லை, இந்த கொள்கையின் கீழ் தான் ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் பங்குச் சந்தைகள் மீது அந்த பெருந்தொற்றின் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில் மக்களுக்கு பாரியளவில் நோய்தொற்று ஏற்படுவதை வேண்டுமென்றே ஊக்கப்படுத்தினார்கள்.

இதே போல, பங்குச் சந்தை விற்றுத்தள்ளலைத் தவிர்க்கும் நம்பிக்கையில் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் வெள்ளை மாளிகை, காங்கிரஸ் சபை மற்றும் ஊடகங்கள் இந்த கோவிட்-19 பெருந்தொற்றைக் 'குறைத்துக் காட்ட' முயற்சிப்பதற்கு இட்டுச் சென்ற நிதிய நலன்களைக் குறித்த எந்த விவாதமும் அதில் தவிர்க்கப்பட்டிருந்தது. இந்த பெருந்தொற்றின் அபாயங்கள் குறித்து தெரிந்திருந்த காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் பங்குகளை விற்றனர் என்பதைக் குறித்து எதையும் குறிப்பிடுவதையும் அந்த மசோதாவும் போஸ்ட் தலையங்கமும் தவிர்த்திருந்தன. (காங்கிரஸ் சபை உறுப்பினர்களில் ஒருவரான ஃபையின்ஸ்டைன் அவரே கூட மார்ச் 2020 பொறிவுக்கு முன்னதாக பங்குகளை விற்றிருந்தார்.)

இந்த பெருந்தொற்றின் தோற்றுவாய்கள் என்னவாக இருந்தாலும், இந்த பெருந்தொற்று பரவலுக்கு எரியூட்டும் வகையில், ஆலைகளையும் வேலையிடங்களையும் மீண்டும் திறக்க முடிவெடுத்தது, அமெரிக்கா ஆளும் வர்க்கமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் தான். “குணப்படுத்தல் நோயை விட மோசமாக இருந்துவிடக் கூடாது' என்று அறிவித்தவர்கள் அவர்கள் தான். இன்று வரையில் தொடர்ந்து கொண்டிருக்கும் பாரியளவிலான பல ட்ரில்லியன் டாலர்கள் வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்பை முடுக்கி விட்டவர்கள் அவர்கள் தான்.

தங்களின் குடியரசுக் கட்சி சமதரப்பை விட சளைத்தவர்கள் இல்லை என்று காங்கிரஸ் சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர், அந்த அதிகரித்து வந்த பேரிடரைக் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கவில்லை, நாடெங்கிலுமான ஜனநாயகக் கட்சி ஆளுநர்கள் வெள்ளை மாளிகை ஏற்றிருந்த வழிகாட்டி நெறிமுறைகள் அறிவுறுத்தியதை விட இன்னும் அதிக வேகமாக சமூக இடைவெளி நடவடிக்கைகளைக் கைவிட்டனர். பைடென் நிர்வாகம் பரிபூரணமாக நேரடி வகுப்புகளுக்காக அமெரிக்க பள்ளிகளை மீண்டும் திறந்துவிட்டது, கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாடின்றி பரவிக் கொண்டிருக்கையிலும் கூட தொழிலாளர்கள் வேலைக்கு வருவதை அது உறுதிப்படுத்த முனைந்துள்ளது.

இத்தகைய பாரியளவிலான குற்றங்களைத் தவிர்க்கும் ஒரு 'விசாரணை' என்பது மூடிமறைப்பு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இந்த 'விசாரணை' சுமார் இரண்டு ஆண்டுகள் நடத்தப்படும், அதற்குள் இறப்பு எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்து விடும்.

ஒவ்வொரு மாதமும் பத்தாயிரக் கணக்கான அமெரிக்கர்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் வேளையில், ஜனநாயகக் கட்சியினரும் மற்றும் குடியரசுக் கட்சியில் உள்ள அவர்களின் பாசிச 'சகாக்களும்' இந்த பெருந்தொற்று பரவல் மீது எஞ்சியுள்ள எல்லா கட்டுப்பாடுகளையும் அகற்றி வருவதுடன், மூடிமறைப்புக்கு அவர்கள் தயாரிப்பு செய்து வருகிறார்கள்.

இந்த ஆணையத்தின் வடிவமே அதை வெளிப்படுத்துகிறது. இந்த ஆணையம், 9/11 ஆணையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரான பிலிப் டேவிட் ஜெலிகோவின் தலைமையிலான 'கோவிட் ஆணையத் திட்டக் குழுவின்' பணிகளை அடிப்படையாகக் கொண்டிருக்க போஸ்ட் அழைப்பு விடுத்தது. இதே போல ஜெலிகோ குழுவை அடிப்படையாக கொண்டு ஒரு விசாரணை ஆணையம் அமைப்பதை ஆமோதித்து, நியூ யோர்க் டைம்ஸ், ஜூன் 2 மற்றும் ஜூன் 16 இல் இரண்டு கட்டுரைகளைப் பிரசுரித்திருந்தது.

புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டாலிசா ரைஸின் முன்னாள் உதவியாளரான ஜெலிகோ, அந்த விசாரணையின் போது புஷ் நிர்வாக அதிகாரிகளுடன் இரகசிய பின்புல விவாதங்களை நடத்தியதுடன், சித்திரவதை மூலமாக பெறப்பட்ட ஆதாரங்கள் மீதே பெரும்பாலான அந்த விசாரணை முடிவின் கண்டுபிடிப்புகளை வைத்திருந்தார். அதன் முடிவுகள் பெருவாரியாக அடுத்தடுத்து வெளியான ஆணவங்களுடன் முரண்பட்டுள்ளன.

போஸ்ட் பரிந்துரைக்கும் 'ஆணையம்', சொல்லப் போனால் அவர்கள் விசாரிப்பதாக கூறப்படும் அந்த பேரிடருக்கு பொறுப்பானவர்களையே உள்ளடக்கிய மற்றும் அவர்களால் இயக்கப்படும் ஓர் ஆணையமாக இருக்கும்.

கோவிட்-19 பெருந்தொற்றில் பாரிய மரணங்களுக்கு இட்டுச் சென்ற கொள்கைகள் பற்றிய ஒரு தீவிர விசாரணை, நிச்சயம் அவசியம் என்பதோடு, எந்தளவுக்குச் சாத்தியம் என்றால் அது சர்வதேச தொழிலாள வர்க்கம் தலைமையில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளை எதிர்த்து சுதந்திரமாக நடத்தப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்.

Loading