முன்னோக்கு

ஓமிக்ரோன் கட்டுப்பாட்டை மீறி பரவி வருகிறது

வைரஸ் பரவலைத் தடுக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும், இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வரவும் அவசர நடவடிக்கை தேவை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனாதிபதி பைடென் மற்றும் ஊடகங்களால் பொறுப்பின்றியும் பொய்யாகவும் மறுஉத்தரவாதம் வழங்கப்பட்டதால், மில்லியன் கணக்கானவர்கள் அவர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் இந்த விடுமுறையைக் கொண்டாட அமெரிக்கா எங்கிலும் பயணித்து வருகிறார்கள். இந்த பெருந்தொற்றின் இயல்பு குறித்தும், நோய்தொற்றுக்கு எதிராக இப்போதிருக்கும் தடுப்பூசிகளின் செயல்திறன் குறைந்திருப்பது குறித்தும், மற்றும் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானால் ஏற்படும் ஆபத்து குறித்தும் அவர்களுக்குத் தவறாக வழிகாட்டப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்க அவசியமான பொது சுகாதார நடவடிக்கைகளை பைடென் நிர்வாகம் எடுக்க மறுப்பதற்காக பயங்கர விலை கொடுக்க வேண்டியிருக்கும். மில்லியன் கணக்கானவர்களுக்கு இந்த நோய்தொற்று ஏற்படும் மிகப்பெரும் ஆபத்து உள்ளது. எண்ணிக்கையின்றி ஆயிரக் கணக்கானவர்கள் மிகவும் தீவிரமாக நோய்வாய்ப்படலாம், நீண்டகால பாதிப்புகளுக்கு உள்ளாகலாம் மற்றும் உயிரிழக்கவும் நேரிடலாம்.

டிசம்பர் 14, 2021 செவ்வாய்க்கிழமை, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிராவிடன்ஸ் ஹோலி கிராஸ் மருத்துவ மையத்தில் கொரோனா வைரஸால் இறந்த நோயாளியின் உடல் பையில் பதிவுசெய்யப்பட்ட செவிலியர் பிரையன் ஹோஃபிலினா “COVID நோயாளி” ஸ்டிக்கரை இணைக்கிறார். நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகள் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன (AP Photo/Jae C. Hong)

தெற்கு ஆபிரிக்காவில் வெளிப்பட்ட இந்த புதிய வைரஸ் வகை குறித்த செய்திகள் வந்து வெறும் ஒரேயொரு மாதத்தில், ஓமிக்ரோன் முன்பில்லாத வேகத்தில் உலகெங்கிலும் பரவி உள்ளது. ஏற்கனவே அது உலகளவில் டெல்டா வகையை விஞ்சிவிட்டது, அது, குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நோயாளிகளின் எண்ணிக்கையை வெகுவேகமாக அதிகரித்து வருகிறது.

எண்ணற்ற விஞ்ஞானிகளின் முன்கணிப்புகளின்படி, இந்த பெருந்தொற்றின் முந்தைய எல்லா அதிகரிப்புகளையும் மிஞ்சிவிடும் அளவுக்கு ஒரு பேரிடர் கட்டவிழ்ந்து வருகிறது. ஏறக்குறைய 3 பில்லியன் பேர், உலக மக்களில் சுமார் 38 சதவீதத்தினர், அடுத்த மூன்று மாதங்களில் ஓமிக்ரோன் நோய்தொற்றுக்கு உள்ளாகக்கூடும் என்று சுகாதாரத்துறை புள்ளிவிபரங்கள் மற்றும் மதிப்பீட்டு பயிலகம் (IHME) இந்த வாரம் முன்கணித்தது.

ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகம் கூறும் வாதங்களுக்கு மத்தியில், ஓமிக்ரோன் வகை முந்தைய திரிபுகளை விட குறிப்பிடத்தக்களவில் கடுமை குறைந்தது என்பதற்கு அங்கே எந்த ஆதாரமும் இல்லை. ஓமிக்ரோன் தொற்று ஏற்பட்டவர்களில் குறைந்த சதவீதத்தினரே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் என்று வியாழக்கிழமை பிரிட்டன் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டின. ஆனால் பெரிதும் இது, தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் அல்லது ஏற்கனவே கோவிட்-19 ஏற்பட்டவர்களுக்கும் அதிகளவில் ஓமிக்ரோன் தொற்று ஏற்படுகிறது என்ற உண்மையின் துணைவிளைவாகும், ஆகவே, அந்த வைரஸிற்கு அதிக எதிர்ப்புத்திறன் உள்ளது.

ஓமிக்ரோனின் 'உள்ளார்ந்த தீவிரத்தன்மை' டெல்டா வகை அளவுக்கு அல்லது சற்று குறைவாக இருப்பதாக தெரிகிறது என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஓமிக்ரோன் அதிகமாக தொற்றக்கூடியது என்பதால், இதன் அர்த்தம் இது மொத்தத்தில் நிறையப் பேர் நோய்வாய்படுவதற்கும் மற்றும் இந்த நோயால் உயிரிழப்பதற்கும் வழிவகுக்கும் என்பதை அர்த்தப்படுத்துகிறது.

ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான உலக மக்கள் இந்த நோய்தொற்றுக்களின் வரவிருக்கும் சுனாமியில் இருந்து முற்றிலும் பாதுகாக்கப்படாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு மதிப்பீட்டின்படி உலகளாவிய மக்களில் 43 சதவீதத்தினருக்கு ஒரு தவணை தடுப்பூசி கூட இன்னும் செலுத்தப்படவில்லை, அதேவேளையில் வெறும் 5.7 சதவீதத்தினர் மட்டுமே ஓமிக்ரோனுக்கு எதிராக போதியளவில் பாதுகாப்பு வழங்கும் மூன்றாவது தவணை மருந்தைப் பெற்றுள்ளனர். இரண்டு தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளவர்கள் பெரிதும் இந்த நோய்தொற்றுக்குப் பாதுகாப்பற்றவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் மருத்துவமனை அனுமதி மற்றும் இறப்புகளின் அபாயம் தீர்மானிக்க முடியாமல் உள்ளது என்றாலும் இது ஆறு மாதங்களில் படிப்படியாக அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் மற்றும் செலுத்தப்படாதவர்களின் சராசரி நோய்தொற்று இறப்பு விகிதம் உலகளவில் சுமார் 0.5 சதவீதம் என்றால், பின்னர் வரவிருக்கும் நோய்தொற்றுகள் மற்றும் மருத்துவமனை அனுமதிப்புகளின் அலையில் 15 மில்லியன் பேர் இறக்கக்கூடும். நோய்தொற்றுக்களின் வேகமான அதிகரிப்பு காரணமாக, உலகளவில் மருத்துவமனை அமைப்பு முறைகள் நிரம்பி வழியும், இது இன்னும் அதிக இறப்பு விதிகங்கள் மற்றும் அதிகப்படியான இறப்புகளின் எண்ணிக்கைக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளதுடன், குறைவாக அபிவிருத்தி அடைந்த நாடுகள் படுமோசமான விளைவுகளை அனுபவிக்கக்கூடும்.

குழந்தைகளுக்கு, குறிப்பாக உலகளவில் ஐந்து வயதுக்குக் குறைவான தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளுக்கு, முந்தைய வகைகளை விட ஓமிக்ரோன் மிக அதிக அபாயத்தை முன்நிறுத்துகிறது. தென் ஆபிரிக்கா மற்றும் பிரிட்டனின் தரவுகள் குழந்தைகளின் முன்பில்லா அளவிலான அதிகபட்ச மருத்துவமனை அனுமதிப்புகளைக் காட்டுகின்றன, ஆகவே குழந்தைகள் மத்தியில் ஓமிக்ரோன் குறைந்தபட்சம் 20 சதவீதம் அதிக கடுமையாக இருக்கக்கூடும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. முந்தைய வகைகளுடன் ஒப்பிட்டால் தென் ஆபிரிக்காவில் ஓமிக்ரோன் அதிகரிப்பின் ஆரம்பத்திலேயே ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகமான குழந்தைகள் இறந்துள்ளனர்.

இந்த கட்டவிழ்ந்து வரும் பேரிடருக்கு ஆளும் வர்க்கம் குற்றகரமான அலட்சியத்துடன் விடையிறுத்து வருகிறது. இறப்புகள் குறைத்துக் காட்டப்பட்டு வருகிறது. இது அமெரிக்காவை விட வேறெங்கும் இந்தளவுக்குத் தெளிவாக இல்லை, இங்கே ஓமிக்ரோன் பாதிப்பு வருவதற்கு முன்னரே, ஒவ்வொரு நாளும் 1,000 க்கும் அதிகமானவர்கள் இறந்து கொண்டிருந்தார்கள்.

இவ்வார தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் உரையாற்றுகையில், அமெரிக்க அரசாங்கத்தின் 'தடுப்பூசி மட்டுமே போதும்' அணுகுமுறையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அறிவித்தார். மார்ச் 2020 இந்த பெருந்தொற்று தொடங்கிய போது இருந்ததை விட அமெரிக்கா இப்போது எவ்வளவோ சிறப்பாக இருப்பதாக கூறி, அவர் ஜனாதிபதி ஆனதற்குப் பின்னர் 400,000 க்கும் அதிகமானவர்கள் இறந்திருப்பது உட்பட, இந்த காலகட்டத்தில் 830,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதை அவர் ஒப்புக்கொள்ளக் கூட இல்லை.

ஊடகங்களில், ஒவ்வொரு வாரமும் சுமார் 10,000 பேரின் இறப்புகள் பெரிதும் குறிப்பிடப்படாமலேயே உதறி விடப்படுகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்னர், அமெரிக்கா முழுவதையும் சூறாவளிகள் சீரழித்து அண்மித்து 100 பேர் கொல்லப்பட்ட போது, அந்நாடு உண்மையிலேயே அந்த துயரால் அதிர்ந்தது. ஆனால் ஏறக்குறைய அதற்கு 10 மடங்குக்கு அதிகமான மக்கள் ஒவ்வொரு நாளும் கோவிட்-19 ஆல் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஊடக்கங்கள் அறிவிப்பதில்லை.

செய்திகளை அறிவிப்பதில் காட்டப்படும் இந்த அலட்சியம் எந்த கணக்கில் வருகிறது? தேசிய மற்றும் உலகளாவிய சமூக கொள்கைகளின் மீது மட்டுப்படுத்தப்பட்ட விளைவுகள் மற்றும் பாதிப்புகளைக் கொண்டிருப்பதால், சூறாவளி ஒரு வெறித்தனமான நிகழ்வாக அறிவிக்க முடிகிறது.

ஆனால் மிகப் பரந்த பருமனில் ஒரு பேரழிவாக ஒட்டுமொத்த உலகையும் பாதித்துக் கொண்டிருக்கும் இந்த பெருந்தொற்றுக்கு உடனடியாகவும் பாரியளவிலும் பொருளாதார ஆதாரவளங்களும் சமூக முன்னுரிமைகளில் அடிப்படை மாற்றமும் அவசியப்படுகின்றன. இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர அவசியமான கொள்கைள் மற்றும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதை நிதிய-பெருநிறுவன முதலாளித்துவ உயரடுக்களும் அவை கட்டுப்பாட்டில் கொண்டுள்ள அரசாங்கங்களும் அவற்றின் வர்க்க நலன்களுக்கு பொருத்தமற்றவையாக பார்க்கப்படுகின்றன.

இதனால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள ஊடகங்கள், கோவிட்-19 ஐ ஒருபோதும் அகற்ற முடியாது என்றும் அது வரவிருக்கும் ஆண்டுகளிலும் தொடரும் என்ற கருத்துருவை ஊக்குவித்து வருகின்றன. இந்த பெருந்தொற்று பகுதிசார் அவ்வப்போதைய தொற்றுநோயாக ஆக்கப்படும். இதை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு கட்டுரையில் அப்பட்டமாக கூறியது:

ஓமிக்ரோன் வகையின் ஆக்ரோஷமான அதிகரிப்பானது, அமெரிக்காவில் பகுதிசார் அவ்வபோதைய தொற்றுநோயாக ஆகி வரும் பாதையில் செல்வதாக பொது சுகாதார வல்லுனர்கள் கூறும் ஒரு நோயின் போக்கில் ஏற்பட்டுள்ள சமீபத்திய திருப்பமாக உள்ளது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு இறுதி நாள் கிடையாது. மாறாக, சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சில மாதங்களுக்குள் உலகையே சுற்றி வளைத்த ஒரு நெருக்கடி, வரவிருக்கும் ஆண்டுகளில் அதிக வழமையானதைப் போல உணரப்படும் ஒன்றாக பொருந்தத் தொடங்கிவிடுமென தொற்றுநோய் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அவ்வப்போதைய பகுதிசார் தொற்றுநோயாக கோவிட்-19 நோய் நீடிக்கும் என்பது உண்மையில் என்ன அர்த்தப்படுத்துகிறது என்பதை விவரித்து, ஜேர்னல் எழுதுகிறது:

அமெரிக்காவில் 1,200 க்கும் அதிகமானவர்கள் ஒவ்வொரு நாளும் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த சளிக்காய்ச்சலுக்கு இதை விட அதிகளவிலான இறப்புகளும் பரவலும் எடுத்துக்காட்டாக அமைந்தாலும், போதுமானளவுக்கு அவ்வபோதைய பகுதிசார் தொற்றுநோயாக ஏற்படுவதை அனுமதிக்கும் ஒரு வடிவில் கோவிட்-19 இன் பரவல் அமைந்து விட வாய்ப்புள்ளதாக பொது சுகாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்த கட்டுரை இர்வைன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஒரு தொற்றுநோய் நிபுணரான ஆண்ட்ரூ நொயெஸின் உறைய வைக்கும் கருத்துடன் நிறைவடைகிறது: “கோவிட் இப்போது நம் செயல்பாடுகளின் பாகமாக ஆகிவிட்டது,” என்று கூறிய அவர், 'அது நம் வாழ்வின் பாகமாக ஆகி உள்ளது,” என்றார்.

நாஜிக்களைப் போன்று மனித உயிர்கள் மீதான இந்த அலட்சியமே இந்த பெருந்தொற்றுக்கு அரசாங்கங்களின் விடையிறுப்பை வழிநடத்தும் உத்வேகமாகும்.

எண்ணற்ற மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களை முதலாளித்துவ நலன்களுக்காக பிணை வைக்க முடியாது! ஒரு பேரழிவைத் தடுக்க வேண்டுமானால் ஓர் அவசர கொள்கை மாற்றம் தேவைப்படுகிறது. உலகின் பெரும்பகுதிகளில், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், மேலோங்கிய அணுகுமுறையாக நடைமுறைப்படுத்தப்படும் தடுப்பூசி மட்டுமே போதும் அணுகுமுறை இந்த நெருக்கடியைத் தீர்க்க முற்றிலுமாக தவறியுள்ளது.

இந்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் தடுப்பூசிகள் ஓர் அவசியமான அம்சம் தான். பொது முடக்கங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்த, பாசிசவாத வலதால் ஊக்குவிக்கப்பட்ட தடுப்பூசி-எதிர்ப்புணர்வு முற்றிலும் பிற்போக்குத்தனமானதாகும். தடுப்பூசிக்குத் தயக்கம் காட்டுவதை ஊக்குவிப்பவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் உயிர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் உயிரையும் ஆபத்திற்குட்படுத்துகிறார்கள்.

ஆனால் இந்த பெருந்தொற்று அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் ஒரு பிரச்சினை என்ற தற்போதைய சொல்லாடல் —செவ்வாய்கிழமை பைடெனால் பலமாக ஊக்குவிக்கப்பட்ட இது—பொய்யாகும். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து குறைவு என்ற வாதங்கள் முற்றிலும் ஆதாரமற்றவை. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் கூட நோய்தொற்றுக்கு எதிராக செயல்திறனற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதோடு, அவர்களில் நோய்தொற்றுக்கு உள்ளானவர்கள் நீண்டகால கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு தடுப்பூசி செலுத்தப்படாதவர்களின் விகிதம் என்னவோ அதனுடன் ஒப்பிடக்கூடிய அளவில் உள்ளனர் என்பதற்குக் கணிசமான ஆதாரம் உள்ளது. வேகமாக பரவி வரும் ஒரு வைரஸை முகங்கொடுத்திருக்கையில், வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் வைரஸ் பரவலைத் தடுக்க செயலற்ற பிரச்சாரமாக, தடுப்பூசிகளுக்கான நீண்ட நெடிய பிரச்சாரத்துடன் நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்வது குற்றகரமானது என்பதற்கும் குறைந்ததில்லை.

அனைத்திற்கும் மேலாக, ஓமிக்ரோன் வகை உருவெடுத்திருப்பதே, இந்த வைரஸ் பரவ அனுமதிக்கப்படும் வரையில், அங்கே இன்னும் அதிகமாக தொற்றக்கூடிய மற்றும் தடுப்பூசியையே எதிர்க்கக்கூடிய புதிய வகைகள் உருவெடுக்கும் அபாயம் தொடர்ந்து இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இதற்கும் மேலாக, இந்தளவுக்குக் குறுகிய காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஓமிக்ரோன் தொற்றி வருவதால் அது உருமாறும் விகிதத்தைத் தீவிரப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இந்த வைரஸ் பரவலைத் தடுத்து, அதை ஒரேயடியாக அகற்றுவதை மற்றும் முற்றிலுமாக ஒழிப்பதை நோக்கமாக கொண்ட தீவிர பொது சுகாதார நடவடிக்கைகளுடன் இணைந்தால் மட்டுமே பெருந்திரளான மக்களுக்கான தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும்.

அடுத்து வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் செய்ய வேண்டியவை மிக முக்கியமானவை. இந்த வைரஸ் பரவலைத் தடுத்து உயிர்களைக் காப்பாற்ற அனைத்து பொது சுகாதார நடவடிக்கையும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவது நிற்கும் வரையில் மற்றும் உலகளவில் இந்த வைரஸ் அகற்றப்படும் வரையில் முன்பினும் பரந்த புவிசார் பிராந்தியங்களில் SARS-CoV-2 ஐ படிப்படியாக அகற்றும் நோக்கில், ஒவ்வொரு நாட்டிலும் பூஜ்ஜிய கோவிட் மூலோபாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இது எட்டப்படக்கூடியதே.

1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாடான சீனா அதன் இறப்புகளை 5,000 க்குக் கீழேயும், நோயாளிகளின் எண்ணிக்கையை 100,000 க்கு கீழேயும் வைத்திருக்க முடிந்துள்ளது என்பது பூஜ்ஜிய கோவிட் சாத்தியமே என்பதை எடுத்துக்காட்டுகிறது. பெருந்திரளான மக்களுக்குப் பரிசோதனைகள், நோயின் தடம் அறிதல் மற்றும் நோய்தொற்று சங்கிலியை உடைக்க தனிமைப்படுத்தல்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து, அவசர பொது முடக்கங்கள் உட்பட, சமீபத்திய வெடிப்புகளுக்கு அது காட்டிய விடையிறுப்பு, என்ன வகையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

சீனாவில் 13 மில்லியன் பேர் வசிக்கும் ஷான்ஷி மாகாண தலைநகரான Xi’an இல் சீன அதிகாரிகள் இப்போது குறிப்பிடத்தக்க வெடிப்பை எதிர்கொண்டுள்ளனர். ஆங்கிலத்தில் வெளியாகும் ஒரு சீனப் பத்திரிகையான குளோபல் டைம்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

வியாழக்கிழமையில் இருந்து, Xi’an இல் வசிக்கும் 13 மில்லியன் பேர் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும். ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தினசரி அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை வாங்க குடும்பத்தில் ஒரேயொருவருக்கு மட்டும் வீட்டில் இருந்து வெளியே வர அனுமதிக்கப்படுகிறது. நோய்வாய்ப்படுதல் அல்லது தொற்றுநோய்-தடுப்பு பணிகளில் பங்களிப்பது போன்ற பிரத்யேக தேவைகளைத் தவிர, மக்கள் வெளியே வர ஊக்குவிக்கப்படவில்லை.

ஜியான் ஜியன்யாங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அனைத்து உள்நாட்டு விமானச் சேவைகளும் வியாழக்கிழமையில் இருந்து இரத்து செய்யப்பட்டன. வியாழக்கிழமை புறப்பட இருந்த 765 விமானங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதை சீனாவின் விமானச் சேவை தகவல் வழங்கு தளம் Feichangzhun எடுத்துக்காட்டியது. செய்தி வெளியிடப்பட்ட நேரத்தில் அந்த விமானத் தளத்தில் வெறும் மூன்று சர்வதேச விமானங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்தது. பல்வேறு நகரங்களுக்கான இரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இத்தகைய நடவடிக்கைகள் தனிநபர்கள் மீது தற்காலிகமாக குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன என்றாலும், மனித உயிர்களுக்கு முன் உள்ள நிஜமான அச்சுறுத்தலால் இவை நியாயப்படுகின்றன என்பதோடு, அவற்றின் பலன்களும் ஊர்ஜிதப்பட்டுள்ளன. சீனாவில் பாரிய மக்கள் ஆதரவைப் பெற்றுள்ள இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள இயலாதளவுக்கு 'தனிநபர் சுதந்திர' மீறல் என்ற வாதம் சிடுமூஞ்சித்தனமானது என்பதுடன், மில்லியன் கணக்கானவர்களின் உயிர்கள் இறப்பதற்கு வழிவகுக்கும் மற்றும் வழிவகுத்துள்ள ஒரு கொள்கைக்கான நியாயப்பாடாக அமைகிறது.

இரண்டு மாதங்களுக்காவது அனைத்து அத்தியாவசியமற்ற வேலையிடங்களையும் மூடுவதும் எல்லா பள்ளிகளையும் தொலைதூர கற்பித்தலுக்கு மாற்றுவதும் இந்த வைரஸ் பரவலை வேகமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்பதோடு, கோவிட்-19 ஐ முழு அளவில் அகற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கும் என்பதை நவீன விஞ்ஞானம் எடுத்துக்காட்டி உள்ளது. இத்தகைய அத்தியாவசிய பொது முடக்கங்களால் பாதிக்கப்படும் எல்லா தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கும் நிதி மற்றும் சமூக ஆதரவுகளை முழுமையாக வழங்குதும் இணைந்திருக்க வேண்டும்.

இரண்டு மாத கால பொது முடக்கங்களுடன் உலகளவில் ஒருங்கிணைந்த தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் வினியோகம் மற்றும் எல்லா நாடுகளுக்கும் தரமான முகக்கவசங்கள் வழங்குதல் ஆகியவற்றுடன், பெருந்திரளான மக்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளுதல், நோயின் தடம் அறிதல், நோய்தொற்று ஏற்பட்ட நோயாளிகளைப் பாதுகாப்பாக தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை அளித்தல் மற்றும் பொது சுகாதார உள்கட்டமைப்பை வேகமாக விரிவாக்குதல் ஆகியவையும் சேர்ந்திருக்க வேண்டும். ஒவ்வொரு அத்தியாவசிய வேலையிடம் மற்றும் மருத்துவமனையில், தொழிலாளர்களுக்கு நல்ல தரமான N95 ரக முகக்கவசங்கள் அல்லது சிறந்த முகக்கவசங்கள் வழங்கப்பட வேண்டும், அத்துடன் நவீன காற்றோட்ட வசதி மற்றும் காற்று தூய்மைப்படுத்தும் வசதி முறைகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் இந்த வைரஸை அகற்றுவதற்காக உடனடியாக அனைத்து அத்தியாவசியமற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணமும் இரத்துச் செய்யப்பட வேண்டும்.

பில்லியன் கணக்கான மக்களால் இப்பபோது இணையத்தை அணுக முடிகிறது என்பதால், இந்த பெருந்தொற்றைக் குறித்த விஞ்ஞானத்தை சமூகத்திற்குக் கற்றுக் கொடுக்க பாரிய பொதுக் கல்விக்கான நிலைமைகள் இருக்கின்றன. காற்றுவழி பரவல் பற்றிய விஞ்ஞானம் பரவலாக கொண்டு செல்லப்பட்டு, குறிப்பாக சமூக ஊடக மற்றும் தொலைக்காட்சி கல்வித் திட்டங்கள் மூலமாக நாள்தோறும் கூடுதலாக பலப்படுத்தப்பட வேண்டும்.

நிதிய சந்தைகளுக்கும் பெருநிறுவனங்களின் இலாப நலன்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட விஞ்ஞானம் மற்றும் பொது சுகாதாரத்திற்கு நிபந்தனையின்றி முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். இந்த 21 ஆம் நூற்றாண்டில், இந்த பெருந்தொற்றை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர தொழில்நுட்பம் உள்ளது. ஆனால் உலக அரசாங்கங்களின் விடையிறுப்போ பின்நோக்கி 14 ஆம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் கருப்பினத்தவர் மரணங்கள் ஏற்பட்டு அண்மித்து 100 மில்லியன் பேர் கொல்லப்பட்ட அந்த காலத்திற்குரியதாக உள்ளது.

உலகம் இந்த பெருந்தொற்றின் மூன்றாம் ஆண்டுக்குள் நுழைகின்ற வேளையில், இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவது ஒரு மருத்துவப் பிரச்சினையோ அல்லது விஞ்ஞானப் பிரச்சினையோ இல்லை என்பது முன்பினும் அதிகமாக தெளிவாகி விட்டது. இதுவொரு வர்க்கப் பிரச்சினை. ஆளும் உயரடுக்கைப் பொறுத்த வரையில், அதன் கருத்தில் இருப்பது நாளாந்த இறப்பு எண்ணிக்கை அல்ல, வோல் ஸ்ட்ரீட்டில் வர்த்தகமும் பங்கு விலைகளின் எண்ணிக்கையும் தான். இந்த கட்டவிழ்ந்து வரும் பேரிடருக்கு மத்தியிலும், பெடரல் ரிசர்வின் முடிவில்லா பணப்புழக்கத்தால் எரியூட்டப்பட்டும் மற்றும் பெருநிறுவன இலாபங்களுக்குத் தடையாக எதுவும் செய்யப் போவதில்லை என்ற பைடெனின் வாக்குறுதியாலும் எரியூட்டப்பட்டு, எஸ் & பி பங்குச் சந்தை குறியீடு வியாழக்கிழமை முன்பில்லாத உயர்வுடன் நிறைவடைந்தது.

ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரையில், அவர்கள் ஏற்றுக் கொள்ளும் இறப்புகளின் எண்ணிக்கைக்கு எந்த வரம்பும் இல்லை. இந்த வரம்பு மேலே இருந்த வராது, அடிமட்டத்திலிருந்து வரும்: அதாவது, தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய சமூக மற்றும் அரசியல் இயக்கத்திலிருந்து வரும்.

தொழிலாள வர்க்கம் விஷயங்களை அவர்களின் சொந்த கரங்களில் எடுக்க வேண்டும். முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகளுக்குத் தங்கள் உயிர் அர்த்தமற்றது என்ற புரிதல், கடந்த இரண்டாண்டு கால அனுபவத்திலிருந்து, தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. “பண்ணை விலங்குகளைப் பார்ப்பது போல அதே விதத்தில் நாங்கள் பார்க்கப்படுகிறோம்,” என்று இண்டியானாவின் ஒரு வாகனத்துறை தொழிலாளி குறிப்பிட்டார். “நாங்கள் இறந்ததும், அவர்கள் இன்னும் நிறைய பேரை நியமிப்பார்கள்,” என்றார்.

வேலையிடங்களும் பள்ளிகளுமே வைரஸ் பரவலுக்கான மையங்களாக உள்ளன, அதேவேளையில் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கையோ பெருநிறுவனங்கள் மற்றும் அதிகாரபூர்வ தொழிற்சங்கங்களால் மூடிமறைக்கப்பட்டு வருகின்றன. “நிறைய தொழிலாளர்கள் மருத்துவ விடுப்பில் செல்கிறார்கள், பணிமுறைகளைத் தொடங்க போதுமான தொழிலாளர்கள் இல்லை,” என்று மிச்சிகனில் மற்றொரு வாகனத்துறை தொழிலாளர் WSWS க்குத் தெரிவித்தார். “ஒரு தொழிலாளிக்கு எப்போது கோவிட் ஏற்படுகிறது என்று நிறுவனமோ தொழிற்சங்கமோ எங்களுக்கு எந்த விபரமும் தருவதில்லை, ஆனால் எங்கள் வழியில் நாங்கள் தெரிந்து கொள்கிறோம், நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறோம்,” என்றார்.

மில்லியன் கணக்கானவர்களின் இறப்புகளுக்கு பொறுப்பான கொள்கைகளை நியாயப்படுத்த இந்த பெருந்தொற்று நெடுகிலும் செய்யப்பட்டுள்ள மூடிமறைப்பு, பொய்மைப்படுத்தல்கள் மற்றும் தவறான தகவல் வழங்கல்களை முறிக்கவே கோவிட்-19 பெருந்தொற்று மீதான உலகளாவிய தொழிலாளர் விசாரணையை உலக சோசலிச வலைத் தளம் ஏற்படுத்தி உள்ளது. இந்த விசாரணை, கோவிட்-19 பரவலுக்கான மத்திய இடங்களாக செயலாற்றி உள்ள மற்றும் தொடர்ந்து செயலாற்ற உள்ள வேலையிடங்கள் மற்றும் பள்ளிகளின் நிலைமைகளை அம்பலப்படுத்த எல்லா துறைகளிலும் தொழிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளிடம் இருந்து ஆதாரங்களைச் சேகரித்து வருகிறது.

இந்த பெருந்தொற்றைக் குறித்த ஒரு புரிதல் இந்த பெருந்தொற்றை நிறுத்துவதற்கான நடவடிக்கையைத் திறம்பட ஒழுங்கமைக்க வழிவகுக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் வேலையிடங்கள், பள்ளிகள், பொது சுகாதார மையங்கள் மற்றும் அண்டைப் பகுதிகளில் சாமானிய பாதுகாப்பு குழுக்களை அமைக்க அழைப்பு விடுக்கின்றன.

இந்த அறிக்கையை சாத்தியமானளவில் நேரடியாகவும் மற்றும் சமூக ஊடகங்களிலும் பரந்தளவில் பரப்புங்கள். இணையத்திலும் வேலையிடங்களிலும் கலந்துரையாடல்களை ஒழுங்கமையுங்கள். அத்தியாவசியமற்ற உற்பத்தியை மூடவும் மற்றும் நேரடி வகுப்புகளை முடிவுக்குக் கொண்டு வரவும் கோரவும். அதிகரித்து வரும் அபாயம் குறித்தும் இதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்தும் உங்கள் சக-தொழிலாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களை எச்சரிக்கையூட்ட உங்களால் முடிந்த வகையில் அனைத்தையும் செய்யுங்கள்.

விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார கவனிப்பு தொழில் வல்லுனர்களுக்கு நாங்கள் பிரத்யேக முறையீடு செய்கிறோம்: இதைக் குறித்து பேசும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. உண்மைகளை வெளியிட்டு, பொதுகளுக்குத் தகவல் அளியுங்கள். மூடிமறைக்கப்பட்டுள்ள மற்றும் மறுக்கப்பட்டுள்ள கோவிட்-19 பற்றிய பல்வேறு வெவ்வேறு விஞ்ஞான கூறுபாடுகளைக் குறித்த விளக்கங்களைச் சமர்பித்து இந்த உலகளாவிய தொழிலாளர் விசாரணையை ஆதரியுங்கள். ஓர் அகற்றும் மூலோபாயத்திற்காக இந்த பெருந்தொற்று நெடுகிலும் பல விஞ்ஞானிகள் போராடி உள்ளனர். கொள்கை மாற்றத்தின் அவசர தேவை குறித்து பேசவும் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தவும் விஞ்ஞானிகளின் பரந்த அடுக்குகள் அணிதிரட்டப்பட வேண்டும்.

இந்த பெருந்தொற்று பற்றிய ஒரு விஞ்ஞானபூர்வ புரிதலுடன் ஆயுதபாணியாக்கப்பட்ட மில்லியன் கணக்கான பெருந்திரளான மக்களையும் சேர்த்து அணித்திரட்டுவதன் மூலமாக மட்டுமே, மேற்கொண்டு உலகெங்கிலும் தேவையற்ற நோய்தொற்றுகள், அவதிகள் மற்றும் இறப்புகள் ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியும்.

Loading