முன்னோக்கு

அமெரிக்க இரயில்வே மற்றும் எண்ணெய் துறை தொழிலாளர்களின் போராட்டத்தில் பணயத்தில் இருப்பது என்ன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த பல வாரங்களாக, அமெரிக்காவில் இரயில்வே மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்கள், அபாயகரமான உழைப்பை உறிஞ்சும் வேலை நேரங்களுக்கு எதிராகவும் மற்றும் வாழ்வாதார செலவுகள் வெடிப்பார்ந்து அதிகரித்து வருவதற்கு எதிராகவும், அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க இயக்கத்தின் முன்னணிக்கு வந்துள்ளார்கள்.

BNSF 2646 in Sioux Falls, S.D. (Jerry Huddleston/Flickr)

உத்தியோகபூர்வமாக Burlington Northern Santa Fe எனப்படும் BNSF இரயில்வேயின் 17,000 பொறியாளர்கள் மற்றும் நடத்துனர்கள், அமெரிக்காவின் இந்த மிகப் பெரிய இரயில்வே நிறுவனத்தில் தண்டிக்கும் வகையிலான புதிய வருகைப் பதிவேட்டுக் கொள்கை திணிப்பைத் தடுக்க, கடந்த மாதம் வேலைநிறுத்த நடவடிக்கையை அங்கீகரித்து வாக்களித்தனர். இந்த “Hi Viz” கொள்கை ஒவ்வொரு தொழிலாளருக்கும் 30 புள்ளிகளை ஒதுக்குவதுடன், ஒரு தொழிலாளி வேலை விடுப்பு எடுக்கையில் எந்தவித காரணமும் கூறாமல் ஒவ்வொரு முறையும் புள்ளிகளைக் குறைக்கும். புள்ளிகளை மீண்டும் ஈட்ட வேண்டுமானால், தொழிலாளர்கள் இடைவிடாமல் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு தினமும் 24 மணி நேரமும் வேலை அழைப்பில் இருக்க வேண்டும். புள்ளிகளை இழக்கும் தொழிலாளர்களை ஒழுங்குப்படுத்துதவற்காக அல்லது வேலையை விட்டு நீக்கவும் மற்றும் நடைமுறையளவில் தொழிலாளர்கள் எப்போதும் வேலையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் இந்த கொள்கை பயன்படுத்தப்படுகிறது.

ஜனவரி 25 இல், டெக்சாஸின் ஒரு கூட்டாட்சி நீதிபதி வேலைநிறுத்தத்தை தடுக்க ஓர் தடையாணைப் பிறப்பித்தார், அடிமை-உழைப்பு வருகைப் பதிவேட்டுக் கொள்கை ஒரு 'சிறிய' பிரச்சினையே, இரயில்வே தொழிலாளர் சட்டம் 1926 இன் கீழ் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அவர் அறிவித்தார், அந்த சட்டத்தின் நோக்கம் ஏறத்தாழ முழுமையாக இரயில்வே தொழில்துறையில் வேலைநிறுத்தங்களை நீக்குவதாக இருந்தது. அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி மார்க் பிட்மன் அவர் தீர்ப்பில் அறிவிக்கையில், ஒரு வேலைநிறுத்தம் நாட்டின் வினியோகச் சங்கிலியைத் தொந்தரவுக்குட்படுத்தும் என்பதால் அதை ஏற்க முடியாது என்று அறிவித்து, தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் ஒப்பந்தரீதியான உரிமைகளை விடவும் கூட BNSF இலாபங்கள் மற்றும் பெருநிறுவன அமெரிக்காவின் இலாபங்களுக்கு முன்னுரிமை அளித்தார்.

வேலைநிறுத்தத்தைத் தடுக்கும் தடுப்பாணையைக் கையில் வைத்திருந்த நிறுவனம் பெப்ரவரி 1 இல் ஒருதலைபட்சமாக வருகை பதிவேட்டுக் கொள்கையைத் திணித்தது. இரயில்வே தொழிலாளர்கள் அதற்கு முன்னரே ஊகிக்கவியலா வேலைநேரங்களில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த புதிய கொள்கையால் அவர்கள் மருத்துவர் சந்திப்பு நேரத்தை இரத்து செய்யவோ மற்றும் அவர்கள் குடும்பங்களுடன் குறைவான நேரத்தைச் செலவிடவோ மற்றும் தேவையானளவுக்கும் குறைவான தூக்கத்தைப் பெறவோ நிர்பந்திக்கப்படுவார்கள். இந்த கொள்கையின் ஒரு தவிர்க்கவியலாத விளைவாக அது தொழிலாளர்களின் சோர்வை அதிகரிக்கும், இதன் விளைவாக தீவிர விபத்துக்கள் மற்றும் மரணங்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். இது BNSF தொழிலாளி ஒருவரின் மரணத்தில் எடுத்துக்காட்டப்பட்டது, நீதிபதி அவரின் தடுப்பாணையை நீடித்த மறுநாள், பெப்ரவரி 9 இல், கொலொராடோ டென்வரில் அந்த தொழிலாளி ஒரு இரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

விமான மற்றும் இரயில்வே போக்குவரத்து தகர வடிவமைப்பு பிரிவு (SMART-TD) சங்கமும் இரயில் பெட்டி உற்பத்திப் பிரிவு பொறியாளர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்களின் சகோதரத்துவம் அமைப்பும் (BLET) இந்த Hi-viz கொள்கைக்கு எதிராக எந்தவொரு தீவிர அணித்திரள்வையும் எதிர்க்கின்றன. அதற்குப் பதிலாக, தொழிற்சங்கங்கள் தடுப்பாணையை அமுலாக்குவதுடன், வருகைப் பதிவேட்டுக் கொள்கையை எதிர்த்து எந்த பொது கருத்துக்களும் தொழிலாளர்கள் கூற வேண்டாம் என்று அவை அறிவுறுத்துகின்றன.

இரண்டாண்டுகளாக ஒரு புதிய தேசிய உடன்படிக்கை இல்லாமல் இருந்த பின்னர் 115,000 இரயில்வே தொழிலாளர்களுக்கான ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் ஒரு முட்டுச்சந்தை எட்டியுள்ள நிலையில், இந்த BNSF போராட்டம் நடக்கிறது. BNSF உடன் சேர்ந்து, தெற்கு கன்சாஸ் நகரச் சேவை, தெற்கு நோர்ஃபோல்க், யூனியன் பசிபிக், CSX மற்றும் CN ஆகியவை பத்தாயிரக் கணக்கான வேலைகளைக் குறைத்துள்ளன, அதுவும் கடந்த இரண்டு தசாப்தங்களாக இரயில்வே சரக்கு போக்குவரத்து நகர்வு 30 சதவீத அளவில் அதிகரித்துள்ள நிலையில் இது செய்யப்பட்டுள்ளது.

12 பிரதான எரிசக்தித்துறை நிறுவனங்களின் 30,000 எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிலாளர்களுக்கான தேசிய தொழிலாளர் ஒப்பந்தம் பெப்ரவரி 1 இல் காலாவதி ஆனது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலருக்கு அதிகமாகவும் மற்றும் எரிவாயு விலைகள் ஏழாண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், மாரத்தான், ஷெல், BP மற்றும் ஏனைய பெருநிறுவனங்கள் பாரியளவில் இலாபமீட்டி உள்ளன. ஆனால் பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை கொடுத்து வரும் மாரத்தான் 'தீர்வுக்கான இறுதி' முன்மொழிவை வெளியிட்டுள்ளது, இது 2-3 சதவீத வருடாந்தர உயர்வுகளையே உள்ளடக்கி உள்ளது, 7.5 சதவீத ஆண்டு பணவீக்க விகிதத்தை வைத்துப் பார்த்தால், இது நடைமுறையளவில் நிஜமான கூலிகள் குறைவதில் போய் முடியும். 2021 இல் 9.7 பில்லியன் டாலர் சம்பாதித்த இந்த நிறுவனம் அதன் செல்வசெழிப்பான முதலீட்டாளர்களுக்கான பங்கு வாங்கிவிற்கும் திட்டத்திற்கு 5 பில்லியன் டாலர் அறிவித்தது.

2005 வெடி விபத்தில் 13 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு 180 பேர் காயமடைந்த மாரத்தானின் டெக்சாஸ் நகர கல்வெஸ்டன் வளைகுடா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் (அப்போது BP க்கு சொந்தமாக இருந்தது) தொழிலாளர் ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்திற்குக் கூறுகையில், இந்த சுத்திகரிப்பு ஆலையில் தொழிலாளர்கள் வழமையாக தொடர்ந்து ஏறக்குறைய 13 நாட்களுக்கு 16 ஷிப்ட் வேலை செய்கிறார்கள். “கோவிட் நிவாரணப் பணமாக CARES சட்டத்தில் மாரத்தானுக்கு 2 பில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டது, இருந்தும் அவர்கள் சரியான நேரம் பார்த்து தொழிலாளர்களில் 10 சதவீதம் பேரை வேலையிலிருந்து நீக்கினார்கள், தலைமைச் செயலதிகாரியின் சம்பளத்தை இரட்டிப்பாக்கினார்கள்,” என்றார்.

கூலிகள் மற்றும் வேலையிட நிலைமைகளில் கணிசமான மேம்பாட்டை வென்றெடுக்க எண்ணெய் துறை தொழிலாளர்கள் தீர்மானகரமாக உள்ளனர், ஆனால் ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர்கள் சங்கம் (USW) வேலைநிறுத்தத்தை தடுத்துள்ளதுடன், தொழிலாளர்கள் 24 மணி நேரமும் 'சுழற்சி முறையிலான' ஒப்பந்த நீடிப்பின் கீழ் வேலை செய்ய நிர்பந்தித்துள்ளது. இது ஒரு சாத்தியமான வேலைநிறுத்தத்திற்குப் பணியாளர்களை நியமித்து தயாராக எண்ணெய் நிறுவனங்களுக்கு கால அவகாசம் வழங்குகிறது.

அடுத்த ஏழு மாதங்களில் தொழிலாளர்களின் இன்னும் பிற முக்கிய பிரிவுகளின் ஒப்பந்தமும் காலாவதியாக உள்ளன. இவற்றில் உள்ளடங்குபவை:

• வாஷிங்டன், ஓரேகான் மற்றும் கலிபோர்னியாவின் 22,000 துறைமுகத் தொழிலாளர்கள், இவர்களின் ஒப்பந்தம் ஜூலை 1 இல் காலாவதியாகிறது.

• நியூ யோர்க்கின் பஃபலோவில் கலெய்டா மருத்துவமனையின் 7,000 செவிலியர்கள், மற்றும் மிச்சிகன் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 5,000 செவிலியர்களின் ஒப்பந்தங்கள் முறையே மே 31 மற்றும் ஜூன் 30 இல் காலாவதி ஆகின்றன, இவர்கள் உட்பட 118,000 மருத்துவத் தொழிலாளர்கள் பணியாளர்களை அதிகரிக்கவும் மற்றும் நல்லதொரு சம்பளத்திற்கும் போராடி வருகிறார்கள்.

• நியூ யோர்க் நகரில் 120,000 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பணியாளர்கள், லோஸ் ஏஞ்சல்ஸில் 34,000 பேர் மற்றும் ஆக்லாந்தில் 3,000 பேர் உட்பட 268,000 கல்வியாளர்களின் ஒப்பந்தம் செப்டம்பரில் காலாவதி ஆகிறது.

வாழ்க்கை செலவுகள் அதிகரித்து வருவதாலும் தொழிலாளர்கள் போராட்டத்தினுள் தள்ளப்படுகிறார்கள். வருடாந்தர அடிப்படையில் எரிசக்தி விலைக் குறியீடு 27 சதவீதம் அதிகரித்தது, அதேவேளையில் உணவுப் பொருள் விலைகளோ 7 சதவீதம் அதிகரித்தது. இறைச்சி, உணவுக் கோழி மற்றும் முட்டை விலைகள் 12.2 சதவீதம் அதிகரித்தன, குழாய்வழி இயற்கை எரிவாயு 23.9 சதவீதம் அதிகரித்தது மற்றும் மின்சாரம் 10.7 சதவீதம் அதிகரித்தது. கேசோலின் 40 சதவீதம் அதிகரித்தது. வினியோகச் சங்கிலி தொந்தரவுகளால் புதிய கார் விலைகள் 12.2 சதவீதம் அதிகரிக்க இட்டுச் சென்றது மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகள் மிக அதிகமாக 40.5 சதவீதம் அதிகரித்தது.

எண்ணெய் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து வருவதற்கு மத்தியில் எரிசக்தித்துறை மற்றும் சரக்கு பரிவர்த்தனைத் துறையின் பெருநிறுவனங்கள் பாரியளவில் இலாபங்களை அறுவடை செய்துள்ள போதிலும் கூட, அவை பணவீக்கத்திற்கு ஏற்ப கூலிகளை அதிகரிப்பதற்கான கோரிக்கைகளை எதிர்க்க தீர்மானமாக உள்ளன. அதேநேரத்தில், அரசாங்கமும் பெருநிறுவனங்களும் 900,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் இறந்துள்ள போதும் கூட கோவிட்-19 பரவலைத் தடுக்கும் எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்தி உள்ளன.

பிரதான பெருநிறுவனங்கள் மற்றும் செல்வச்செழிப்பான பங்குதாரர்களைக் கொழிக்க வைக்க, தொழிலாளர்கள் நோய்வாய்பட்டோ அல்லது சோர்ந்து போயோ, வெளியேறும் வரையில் அவர்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட வேண்டும் என்பதற்கான சமிக்ஞை தெளிவாக உள்ளது.

அமெரிக்க வாழ்வில் இருந்து கிட்டத்தட்ட முழுமையாக வேலைநிறுத்தங்களை நீக்குவதற்காகவே இதுவரையில் செயல்பட்டு வந்துள்ள பெருநிறுவன-சார்பு தொழிற்சங்கங்கள் பரவலாக மதிப்பிழந்துள்ளதுடன், வெறுக்கப்படுகின்றன. ஒருபுறம் தொழிலாளர்களின் போராட்டங்களை முன்பினும் அதிக பகிரங்கமாகவும் வெட்கமின்றியும் காட்டிக்கொடுத்து விடையிறுத்துள்ள தொழிற்சங்கங்களுக்கும் இந்த காலங்கடந்த அமைப்புகளுக்கு எதிராக இன்னும் அதிகமாக கிளர்ந்தெழுந்து வரும் தொழிலாளர்களுக்கும் இடையே அதிகரித்து வரும் பகிரங்கமான மோதலே அதிகரித்து வரும் இந்த இயக்கத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களால் சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்கள் உருவாக்கப்படுவது இந்த கிளர்ச்சியின் மிகவும் நனவுபூர்வமான வெளிப்பாடாக உள்ளது.

இத்தகைய சீரழிந்த அமைப்புகளின் பக்கம் திருப்புவதற்காக ஜனாதிபதி பைடென் திட்டமிட்டு தொழிற்சங்கங்களை ஊக்குவிக்க முயன்று வருகிறார். தொழிற்சங்கங்களை விரிவாக்குவதன் மூலம், தொழிலாளர்களைப் பாதுகாப்பான அரசு வடிவத்தின் கீழ் நிறுத்த முடியுமென பைடென் நம்புகிறார். இது தொழிலாளர்களை ஒழுங்கமைப்பது மற்றும் பலப்படுத்துவதற்கான பைடென் பணிக் குழுவின் கடந்த வார அறிக்கையில் மிகவும் வெளிப்படையாக காட்டப்பட்டது, அது குறிப்பிடுகையில், “பண்டங்கள் மற்றும் சேவைகளைக் கொள்முதல் செய்பவராக' விளங்கும் கூட்டாட்சி அரசு 'பண்டங்கள் மற்றும் சேவைகளைக் கூட்டாட்சி அரசாங்கம் கொள்வதில் ஏற்படும் இடைஞ்சல்களைக் குறைக்கவும் மற்றும் ஸ்திரப்பாட்டை அதிகரிக்கவும் முதலில் அதன் ஒப்பந்ததாரர்களுடன் கூட்டு பேரம்பேசல் உடன்படிக்கைகளை எட்டுவதில் ஆர்வம் கொண்டுள்ளது' என்று வாதிட்டது.

தொழிலாளர் 'ஒழுக்கத்தை' அமுலாக்குவது என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய எதிர்விரோதிகளான ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அதன் இராணுவ மோதலுக்கான அதிநவீன தயாரிப்புகளுடன் உள்ளார்ந்து பிணைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சமூகத்தையும் போர் வேட்கையில் வைக்காமல் மற்றும் அதிருப்திகளை ஒடுக்காமல் இந்தளவிலான போரைச் சிந்திக்க முடியாது. இதனால் தான், போக்குவரத்துத்துறை செயலர் Pete Buttigieg கடந்த இலையுதிர் காலத்தில் அறிவிக்கையில், சீனா உடனான ஒரு மோதல் 'நாம் ஒருங்கிணைந்து அரசியல் பிளவைக் கடந்து வர நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது,” என்றார். “குறைந்தபட்சம் அரைவாசிப் போர் உள்நாட்டில் உள்ளது,” என்றவர் நிறைவு செய்தார்.

தொழிற்சங்கத்திற்கு எதிராக மட்டுமல்ல முதலாளித்துவ அரசுக்கு எதிரான விட்டுக்கொடுக்காத எதிர்ப்பின் அடிப்படையில், தொழிலாளர்கள் அவர்களின் போராட்டங்களுக்கு ஒரு புதிய மூலோபாயத்தை ஏற்க வேண்டியதை இது சுட்டிக் காட்டுகிறது. இந்த ஊழல் தொழிற்சங்கங்கள் மற்றும் இரண்டு பெருவணிகக் கட்சிகளில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியைத் தொடர்ந்து கட்டியெழுப்ப வேண்டும்.

ஆனால் அரசுடன் சேர்ந்து தொழிற்சங்கங்கள் வளர்ந்து வருவது, உலகை பேரழிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கும் மற்றும் நவீன உலகளாவிய சமூகம் எதிர்கொண்டிருக்கும் எந்தவொரு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இலாயக்கற்றுள்ள இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கே எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் போராட்டம் அவசியப்படுவதையும் சுட்டிக் காட்டுகிறது. அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் சர்வாதிகாரம் மற்றும் போர் மூலோபாயத்தை எதிர்த்து, தொழிலாள வர்க்கம் சோசலிசத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும்.

Loading