ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா-நேட்டோவின் போர் அச்சுறுத்தல்கள் தெற்காசியாவில் புவிசார் அரசியல் நெருக்கடியை அதிகரித்துள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா-நேட்டோவின் அனைத்து பக்கங்களில் இருந்தும் எழுகின்ற இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ–மூலோபாய போர் அச்சுறுத்தல்கள் தெற்காசியாவில் புவிசார் அரசியல் நெருக்கடியை அதிகரித்துள்ளன.

இந்த வாரம் புட்டின் ஆட்சி உக்ரேன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, பைடென் நிர்வாகம் இந்தியாவின் மீது அழுத்தத்தை அதிகரித்தது, இது சீனாவை மூலோபாய ரீதியாக தனிமைப்படுத்துவதற்கும் சுற்றி வளைப்பதற்குமான அதன் உந்துதலுக்கு வாஷிங்டன் வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளது, தற்போது மாஸ்கோவிற்கு எதிரான அதன் போர் உந்துதலுக்குப் பின்னால் இந்தியாவை முழுமையாக அணிதிரட்டுவதற்கு பயன்படுத்துகிறது.

இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி (BJP) அரசாங்கமும் இந்திய முதலாளித்துவமும் வாஷிங்டனுடன் புது டெல்லியின் வளர்ந்து வரும் உறவுகளை தங்களது மிக முக்கியமான மூலோபாய கூட்டாண்மையாகவும், அவர்களின் பெரும் வல்லரசாகும் இலட்சியங்களை நனவாக்குவதற்கு முக்கியமானதாகவும் கருதுகின்றன. இருப்பினும், இந்தியாவும் மிக நீண்ட மற்றும் சில முக்கியமான விஷயங்களில் இராணுவ உறவுகள் உள்ளிட்ட நெருக்கமான உறவைக் ரஷ்யாவுடன் கொண்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2019 இல் ஹூஸ்டனில் பேசுகிறார். (AP புகைப்படம்/மைக்கேல் வைக்)

சமீப மாதங்களில் அமெரிக்கா, அதன் நேட்டோ நட்பு நாடுகள் மற்றும் ரஷ்யா இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், மோடி அரசாங்கம் ஒரு ஆபத்தான சமநிலையை பராமரிக்க முயன்றது. வாஷிங்டனின் அதிருப்தி மற்றும் அதிகரித்து வரும் கோபத்திற்கும் மத்தியில் ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கைகளை புது டெல்லி இதுவரை எதிர்த்துள்ளது, இதில் தற்போது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சுழற்சி முறையில் ஒரு இடத்தை பெற்றுள்ள இந்தியாவின் நிலைப்பாடும் அடங்கும்.

வியாழன் அன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை அறிவித்த செய்தியாளர் கூட்டத்தில், மாஸ்கோவிற்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டுடன் இந்தியா முழுமையாக ஒத்துப்போகிறதா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பைடெனின் பதில் “நாங்கள் இன்று இந்தியாவுடன் கலந்தாலோசனையில் இருக்கிறோம். அதை நாங்கள் முழுமையாக தீர்க்கவில்லை.'

அமெரிக்க அரசுத்துறையின் ஒரு அறிக்கையின்படி, அமெரிக்க வெளியுறவு செயலர் செயலர் ஆண்டனி பிளிங்கென் அதே நாளில் தனது இந்திய சகபாடியான சுப்ரமணியம் ஜெய்சங்கருடன் பேசினார், அப்போது 'ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிப்பதற்கும், உடனடியாக படைகளை திரும்ப பெறுவதற்கும் போர்நிறுத்தம் செய்வதற்கும் வலுவான கூட்டுப் பதிலடியின் முக்கியத்துவத்தை” வலியுறுத்தினார்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் (UNSC) கூட்டத்தில் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்குமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. ஆனால் ரஷ்யா தனது வீட்டோவைப் பயன்படுத்திய நிலையில், புதுடெல்லி வாக்களிப்பில் பங்கெடுக்கவில்லை.

ரஷ்யாவிற்கு எதிராக இந்தியா முழுமையாக அதன் பின்னால் அணிவகுப்பதைத் தவிர வேறு எதிலும் அமெரிக்கா திருப்தி அடையாது என்ற தெளிவான எச்சரிக்கையை விடுக்கும் வகையில் பைடென் தனது வியாழன் செய்தியாளர் சந்திப்பில் மேலும் பேசுகையில், 'உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் அப்பட்டமான ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் எந்த நாடும் கூட்டு ஒத்துழைப்பில் கறைபடிதலை கொண்டதாக இருக்கும்' என்று கூறினார். வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், 'ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பிற்கு கூட்டுப் பதிலடி கொடுப்பது குறித்து நாங்கள் எங்கள் இந்திய சகாக்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்றார்.

ரஷ்யாவில் இருந்து இந்தியாவை பிரித்துக் கொண்டு வருவது மாஸ்கோவை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், மூலோபாய ரீதியாகவும் மேலும் வலுவிழக்கச் செய்து தனிமைப்படுத்தும் என்று வாஷிங்டன் கணக்கிடுகிறது. ரஷ்யாவுடனான இந்தியாவின் பல தசாப்த கால நெருக்கமான உறவுகளை முறித்துக் கொள்வது, புது டெல்லியை அமெரிக்காவின் ஒரு வாடிக்கையாளர் அரசாக குறைக்கும், மேலும் அது மிகவும் பெருமை பேசும் அதன் 'மூலோபாய சுயாட்சிக்கு' ஆணியை திறம்பட அடிப்பதாக இருக்கும்.

செவ்வாயன்று UNSC இன் முந்தைய விவாதத்தில், ரஷ்யாவிற்கு ஆதரவான இரண்டு டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய 'மக்கள் குடியரசுகளின்' 'சுதந்திர' பிரகடனங்களை அங்கீகரிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் முடிவை கண்டிப்பதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி மற்றும் பிற உறுப்பினர்களுடன் இந்தியா சேரவில்லை. உக்ரேனின் டொன்பாஸ் பகுதியில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள். அதே நேரத்தில், புட்டினின் நடவடிக்கைகளுக்கு எந்த ஒப்புதலையும் வழங்குவதை இந்தியா தவிர்த்தது. 'பதட்டங்களை அதிகரிப்பதில்' யார் ஈடுபட்டுள்ளனர் என்பதை குறிப்பாக குறிப்பிடாமல், இந்தியாவின் ஐ.நா பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, 'அனைத்து தரப்புக்கும் ... ஒரு பரஸ்பர இணக்கமான தீர்வை ... விரைவில் உறுதிசெய்ய' அழைப்பு விடுத்தார்.

அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளால் தூண்டிவிடப்படும் போர் பதட்டங்கள் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு இராணுவ மோதலுக்கு இட்டுச் சென்றால், இந்தியா ஒரு பக்கம் எடுக்க நிர்ப்பந்திக்கப்படும் என்பதை நன்கு அறிந்த புதுடெல்லி, அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க முடியும் என்று ஆற்றொணா நிலையில் நம்புகிறது.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வெளிப்படையான இராணுவ மோதலைத் தடுக்கும் இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வியாழன் அன்று தொலைபேசி உரையில் 'ஒரு உரையாடல் மற்றும் போர் நிறுத்தத்திற்கு' அழைப்பு விடுத்தார். அவரது வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், 'பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரமே முன்னோக்கிச் செல்லும் சிறந்த வழி என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காக' ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவுடன் பேசியதாகக் கூறினார்.

'பரஸ்பர இணக்கமான தீர்வு' பற்றிய இந்தியாவின் நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல், அமெரிக்க ஏகாதிபத்தியம் ரஷ்யாவை அதன் மேலாதிக்கத்தின் கீழ் முழுமையாக அடிபணியச் செய்வதற்கு குறைவாக சிறிதும் திருப்தி அடையாது. மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து, வாஷிங்டன் அதன் இராணுவ பலத்தை கிழக்கு ஐரோப்பாவில் ஆக்கிரோஷமாக விரிவுபடுத்துவதன் மூலம் முழு யூரேசிய பிராந்தியத்தையும் அதன் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மூலோபாயத்தின் ஒரு முக்கிய பகுதியாக ரஷ்யாவை சிறிய தொடர் அரசுகளாக கூறு போடுவதை உள்ளடக்கியுள்ளது, அவை அடக்குவதற்கு எளிதாக இருக்கும்.

சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியா ஒரு உண்மையான முன்னணி நாடாக மாற்றப்பட்டிருப்பது போல் சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவிற்கு எதிராக தன்னுடன் அணிதிரளுமாறு இந்தியா மீது தனது அழுத்தத்தை அமெரிக்கா அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 'இந்தோ-அமெரிக்க பூகோள மூலோபாய கூட்டாண்மையின்' மேல் கட்டியெழுப்பி, மோடி ஆட்சியானது அமெரிக்காவுடனும் அதன் நெருங்கிய ஆசிய பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனும் இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்கர இராணுவ-பாதுகாப்பு உறவுகளின் எப்போதும் விரிவடையும் வலையை உருவாக்கியுள்ளது. இதில் அமெரிக்கா தலைமையிலான ஒரு முறைசாரா சீன எதிர்ப்பு இராணுவ-பாதுகாப்பு முகாமான 'குவாட்' உம் அடங்கும்.

தற்போதைய நெருக்கடிக்கு முன்னர், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகளை கீழிறக்க, ரஷ்யாவின் S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இந்தியா வாங்குவது குறித்த விஷயத்தில் கவனம் செலுத்தியது. அமெரிக்க எதிர்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் அதாவது, அமெரிக்கா தனது எதிரிகளை எதிர்கொள்ளும் தடைகள் சட்டத்தின் (CAATSA) கீழ், இந்தியா அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற போதிலும், இந்தியா சமீபத்தில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பல S-400 பேட்டரிகளில் முதல் பேட்டரியைப் பெற்று பயன்படுத்தியது.

S-400 ஒப்பந்தத்தின் மீதான CAATSA பொருளாதாரத் தடைகளிலிருந்து இந்தியா விலக்கு பெறலாம் என்று சில அமெரிக்க அதிகாரிகள் முன்னர் சுட்டிக்காட்டினர், ஏனெனில் அது சீனாவை எதிர்ப்பதற்கான அமெரிக்க முயற்சிகளுக்கு, அது தென் சீனக்கடலிலும் அதற்கு அப்பாலும் பெய்ஜிங்கின் செல்வாக்கை எதிர் கொள்ள வாஷிங்டனுடன் சேர்ந்து செயல்படுவதற்கு உறுதியான ஆதரவு வழங்குகிறது. ஆனால் தற்போது அவை எல்லாமே கேள்விக்குறியாக உள்ளது. உண்மையில், உக்ரேன் மீதான மோதலில் வாஷிங்டனுக்கு சேவை செய்ய மறுத்ததற்கு தண்டிப்பதற்காக S-400 சம்பந்தமாக இந்தியா மீது தடைகளை விதிப்பது குறித்த வாய்ப்பு பற்றி அமெரிக்க அதிகாரிகள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இந்திய ஆளும் உயரடுக்கு, ரஷ்யாவுடனான அதன் நெருங்கிய உறவுகளை அதன் இராணுவத் திறன்களைப் பேணுவதற்கு இன்றியமையாததாகக் கருதுகிறது. வாஷிங்டனின் 'முக்கிய பாதுகாப்புப் பங்காளியாக' அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட உயர்-தொழில்நுட்ப இராணுவ உபகரணங்களை இந்தியா பெறுவதற்கு உறுதியளிக்கப்பட்டாலும், அது இன்னும் பெரும்பாலும் ரஷ்யாவின் இராணுவத் தளவாடங்களையே சார்ந்துள்ளது. மேலும், இந்தியாவுடன் உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை கூட்டாக உருவாக்கி பகிர்ந்து கொண்டதற்கான நிரூபிக்கப்பட்ட சாதனையை மாஸ்கோ கொண்டுள்ளது. ஸ்டிம்சன் மையத்தின் ஆய்வின்படி, இந்தியாவின் 86 சதவீத இராணுவ தளவாடங்களின் பிறப்பிடமாக ரஷ்யா உள்ளது. இந்தியாவின் சிவில் அணுசக்தி திட்டமும் ரஷ்யாவின் தொழில்நுட்ப விநியோகத்தை பெரிதும் நம்பியுள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவில் இருந்து முக்கியமான உர இறக்குமதியை சீர்குலைக்கும் என்ற அச்சத்தில், இந்திய அதிகாரிகள் ரஷ்யாவுடன் வர்த்தகத்தை பராமரிக்க ரூபாய் செலுத்தும் வழிமுறையை நிறுவுவது குறித்து ஆராய்வதாக கூறப்படுகிறது.

இந்திய ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகள், அவை இன்னும் சிறுபான்மையினராக இருந்தாலும், இந்தியா தனது புவிசார் அரசியல் நலன்களை சிறப்பாக முன்னெடுப்பதற்காக ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவின் பக்கத்தை நேரடியாக எடுக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.

புவிசார் அரசியல் பிரச்சினைகளில் முன்னணி இந்திய வர்ணனையாளரான சி. ராஜா மோகன் செவ்வாயன்று இந்தியன் எக்ஸ்பிரஸில் இவ்வாறு எழுதினார், “உக்ரேனில் நெருக்கடியை தணிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகள் தொடரும் நிலையில், டெல்லி மத்திய ஐரோப்பாவில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது, அது ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான போட்டியின் மையமாக உள்ளது. டெல்லியால் இந்த முக்கியமான பகுதியை எப்போதும் மேற்குலகுடனான ரஷ்யாவின் மோதல் கண்ணாடியின் ஊடாக பார்க்க முடியாது. இது அதன் வளர்ந்து வரும் மூலோபாய முக்கியத்துவத்துடன் ஒத்துப்போக வேண்டும்.'

பிப்ரவரி 7 அன்று தி பிரிண்டில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக் கட்டுரையில், ராஜேஷ் ராஜகோபாலன், “இந்தியாவின் மூலோபாய சுயாட்சிக்கு ரஷ்யாவுடன் உயர் பாதுகாப்பு உறவுகள் தேவை என்ற வாதம் முட்டாள்தனமானது. [ரஷ்யா மீது] ஆயுதங்களுக்காக சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.' இந்தியா தனது கொள்கைகளை வாஷிங்டனுடன் மிகவும் நெருக்கமாக ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், 'இந்தியக் கொள்கையானது அமெரிக்கா என்ன செய்யக்கூடும் என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், அது அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறது என்பதல்ல' என்று கூறினார்.

தெற்காசியாவில் இந்தியாவின் பரம எதிரியாக இருக்கும் பாகிஸ்தான், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே வளர்ந்து வரும் மோதலில் வெளிப்படையாக பக்கம் எடுப்பதை தவிர்க்க ஆற்றொணா நிலையில் முயற்சிக்கிறது. அமெரிக்காவுடன் அதன் இராணுவ-உளவுத்துறை உறவுகளை இன்னும் பேணிவரும் அதே வேளையில், இந்தியா-அமெரிக்க கூட்டணிக்கு ஓரளவு பிரதிபலிப்பாக, பாகிஸ்தான் மாஸ்கோவை நோக்கித் திரும்புவது அதிகரித்துள்ளது.

அதன் பங்கிற்கு, இந்தியாவின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இந்தியாவின் கூட்டணியை மேற்கோள் காட்டி, பாகிஸ்தானுடனான அதன் நெருக்கமான உறவுகளை ரஷ்யா நியாயப்படுத்துகிறது.

பெய்ஜிங், இஸ்லாமாபாத்துடன் பல தசாப்தங்களாக 'அனைத்து காலநிலை கூட்டாண்மையை' கொண்டுள்ளது, அது அமெரிக்காவிடமிருந்து அவர்கள் எதிர்கொள்ளும் பொதுவான அச்சுறுத்தலை எதிர்கொள்ள ரஷ்யாவுடன் அதிகளவில் நெருக்கமாக வேலை செய்து வருகிறது, இது சமீபத்திய ரஷ்ய-பாகிஸ்தான் நல்லிணக்கத்தை எளிதாக்க உதவியது

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் பயணமாக புதன்கிழமை மாஸ்கோ வந்தடைந்தார், இது இரண்டு தசாப்தங்களில் பாகிஸ்தான் பிரதமரின் முதல் பயணம். ரஷ்யா-உக்ரேன் போருக்கு முன்பே இந்த விஜயம் திட்டமிடப்பட்டிருந்தாலும், மோதலின் வெளிச்சத்தில் இது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

வருகைக்கு முன்னதாக, உக்ரேன் மீதான தற்போதைய நெருக்கடியை கான் நிராகரித்தார். Zee News க்கு அளித்த பேட்டியில், 'இதில் எங்களுக்கு அக்கறையில்லை, ரஷ்யாவுடன் எங்களுக்கு இருதரப்பு உறவு உள்ளது, நாங்கள் உண்மையில் அதை வலுப்படுத்த விரும்புகிறோம்' என்று கூறினார். ரஷ்யாவின் அரசுக்கு சொந்தமான RT தொலைக்காட்சி நெட்வொர்க்குடனான மற்றொரு பேட்டியில், 'இந்த உக்ரேனிய நெருக்கடி அமைதியான முறையில் தீர்க்கப்படும் என்று நான் நம்புகிறேன்.' என்றார்.

வியாழன் அன்று, கான் புட்டினுடன் தனது முதல் உச்சிமாநாட்டை நடத்தினார், மேலும் 'இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்களைப் பற்றி விவாதித்தார் மற்றும் தெற்காசியாவின் முன்னேற்றங்கள் உட்பட தற்போதைய பிராந்திய தலைப்புகளில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்' என்று மாஸ்கோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான சமீபத்திய சூழ்நிலைக்கு கான் 'வருந்துவதாக' இந்த விஜயம் குறித்த பாகிஸ்தான் அரசாங்க அறிக்கை குறிப்பிட்டது. “மோதல் என்பது யாருடைய நலனுக்காகவும் இல்லை என்றும், மோதல்கள் ஏற்பட்டால் வளரும் நாடுகள் எப்போதும் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்படும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் சர்ச்சைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற பாகிஸ்தானின் நம்பிக்கையை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்,” என்று அந்த அறிக்கை தொடர்ந்தது.

ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான சமீபத்திய சூழ்நிலைக்கு கான் 'வருந்துவதாக' இந்த விஜயம் குறித்த பாக்கிஸ்தான் அரசாங்க அறிக்கை குறிப்பிட்டது. “மோதல் என்பது யாருடைய நலனிலும் இல்லை என்றும், மோதல்கள் ஏற்பட்டால் வளரும் நாடுகள் எப்போதும் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்படும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். சர்ச்சைகள் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்ற பாகிஸ்தானின் நம்பிக்கையை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்,” என்று அந்த அறிக்கை தொடர்ந்தது.

அமெரிக்கா-நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே போர் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு பக்கம் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க முயற்சிக்கையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொறுப்பற்ற போருக்கான உந்துதல் தெற்காசியா உட்பட முழு உலகத்தையும் அணுவாயுதங்களுடன் போரிடும் ஒரு இராணுவ மோதலுக்குள் இழுக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

சீனாவை ஒட்டி அமைந்துள்ள தெற்காசியா, பெய்ஜிங்கை இராஜதந்திர ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மற்றும் இராணுவ ரீதியாகவும் தனிமைப்படுத்துவதற்கான அதன் உந்துதலில் வாஷிங்டனுக்கு ஒரு முக்கியமான பகுதியாகும். தெற்காசியாவில் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கம் வாஷிங்டனுக்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள முக்கியமான கடல் பாதைகளைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொடுக்கும், அது உலக சந்தைக்கான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான உயிர்நாடியாக சேவை செய்கின்றன. ரஷ்யாவுடனான அதன் அருகாமையானது, முழு யூரேசிய நிலப்பரப்பிலும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பொருத்தமான இடமாக இப்பகுதி உள்ளது.

Loading