பப்லோவாத தலைவர் ஜில்பேர் அஷ்கார் ஏகாதிபத்திய சார்பு சூழ்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த கட்டுரை முதலில் ட்விட்டரில் வெளியிடப்பட்டது .

பப்லோவாத தலைவரும், 'முழங்கால் நடுங்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு' போலி-இடது எதிர்ப்பாளருமான ஜில்பேர் அஷ்கார், ரஷ்யாவிற்கு எதிரான அதன் பினாமிப் போரில் நேட்டோ வெற்றியை ஆதரிப்பதற்கான காரணங்களை தனது சொந்த உள்ளுணர்வான ஏகாதிபத்திய சார்புக்கு மற்றொரு உதாரணத்தை வாசகர்களுக்கு வழங்குகிறார்.

அஷ்கார் ரஷ்யாவை 'ஏகாதிபத்தியம்' என்று வரையறுக்கிறார், இது எந்த தீவிரமான பொருளாதார உள்ளடக்கமும் இல்லாத அடைமொழியாகும். ஆனால் அது சரியாக இருந்தாலும் (அது அப்படி இல்லை), இது நேட்டோவுக்கான அவரது ஆதரவை நியாயப்படுத்தாது. சோசலிச 'தோற்கடிப்புவாதம்' என்பது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதலில் அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

அஷ்கார் ரஷ்ய 'ஏகாதிபத்தியத்தை' மட்டுமே எதிர்க்கிறார், அதே நேரத்தில் அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியத்தின் வெற்றியை ஆதரிக்கிறார். இது அவரை அவரது சொந்த ஆளும் வர்க்கத்தின் அரசியல் அடியாளாக ஆக்குகிறது. இந்த நிலைப்பாட்டை அவர் அபத்தமான வாதங்களால் பாதுகாக்கிறார்.

ஒரு ரஷ்ய வெற்றி 'அமெரிக்காவை வலுக்கட்டாயமாக உலகைக் கைப்பற்றும் பாதைக்குத் திரும்ப ஊக்குவிக்கும்...' 'திரும்ப'? அமெரிக்கா எப்போது இராணுவ வெற்றியின் பாதையை விட்டு வெளியேறியது? கடந்த 30 வருடங்களாக அஷ்கார் எங்கே இருந்தார்?

நேட்டோவின் உக்ரேனிய பினாமிகளை பாரியளவில் ஆயுதம் ஏந்தியதன் மூலம் அடையப்பட்ட ரஷ்யாவின் தோல்வி, 'பொது ஆயுதக் குறைப்பு மற்றும் நேட்டோ கலைப்புக்கான நமது போருக்கு மிகச் சிறந்த நிலைமைகளை வழங்கும்' என்று அவர் எழுதுகிறார்.

ஒரு அபத்தமான மற்றும் வஞ்சகத்தனமான வாதம். நேட்டோவை நிராயுதபாணி ஆக்குவதற்கான சிறந்த வழி, உக்ரேனில் அதன் பாரிய இராணுவச் செலவு மற்றும் தலையீட்டின் வளர்ச்சியை ஆதரிப்பதாகும்! இது 'போர் மூலம் அமைதி' என்பதன் பப்லோவாத பதிப்பு ஆகும்.

'ரஷ்ய நுகத்தை உக்ரேன் தூக்கி எறிய முடிந்தால், அது மேற்கத்திய சக்திகளால் ஆக்கிரமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்' என அஷ்கார் ஒப்புக்கொள்கிறார். ஆனால் ரஷ்ய அடிமையாக இருப்பதை விட ஏகாதிபத்திய அடிமையாக இருப்பது சிறந்தது என்ற வாதத்துடன் இது நியாயப்படுத்தப்படுகிறது! என்ன புத்திசாலித்தனம்!

அஷ்கரின் அனைத்து வாதங்களும் இந்த வகையான இழிந்த சூழ்ச்சிகளையே கொண்டிருக்கின்றன. இவற்றில் மோசமானது நேட்டோவை ஆதரிப்பது நியாயமானது என்ற கூற்று, ஏனெனில் அதன் போர் இன்னும் முழுமையான ஏகாதிபத்தியங்களுக்கு- இடையிலான மோதலாக இல்லை.

2014 இல் ஜில்பேர் அஷ்கார் (Wikimedia Commons)

'வோலோடிமிர் செலென்ஸ்கியின் வற்புறுத்தலுக்குப் பின்னரும், இப்போதைக்கு, நேட்டோ உறுப்பினர்கள் உக்ரேனிய மண்ணில் ரஷ்ய ஆயுதப் படைகளுடன் போரிட துருப்புக்களை அனுப்புவது அல்லது உக்ரேனிய வான்வெளியில் ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்துவது போன்ற சிவப்புக் கோட்டைக் கடக்க மாட்டார்கள் என அறிவிக்கிறார்கள்” என்று அவர் எழுதுகிறார்.

எனவே, நேட்டோவுக்கான அஷ்காரின் ஆதரவு, நேட்டோ விரைவாக அழிந்துகொண்டிருக்கும் சிவப்புக் கோட்டைக் கடக்காது என்ற அவர் தனது முழு நம்பிக்கையையும் வைக்கும் அவரது உறுதிப்பாடுகளின் மீது தொடர்ந்து உள்ளது.

ஆனால் உக்ரேனிலேயே ரஷ்யப் படைகளை ஈடுபடுத்துவதைக் குறைக்க அஷ்கார் 'உக்ரேனுக்கு விமான எதிர்ப்பு மற்றும் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், அத்துடன் ஒரு பிரதேசத்தின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து ஆயுதங்களையும் வழங்குவதற்கு ஆதரவாக இருக்கிறார்.'

அஷ்கார் மற்றும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் பப்லோவாத இயக்கம், ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் அரசியல் முகவர்களாகச் செயல்படுகின்றன. ரஷ்ய படையெடுப்பிற்கு WSWS இன் எதிர்ப்பு சோசலிச சர்வதேசியத்தின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

1991 இல் சோவியத் ஒன்றியம் பேரழிவுகரமாக கலைக்கப்பட்டதன் விளைவுதான் இந்தப் போர் என்பதை நாங்கள் விளக்குகிறோம். உலகின் ஒரு புதிய பிளவின் பின்னணியில், உலக மேலாதிக்கத்திற்கான அதன் தேடலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தடையற்ற சீற்றத்திற்கு வழி வகுத்துள்ளது.

புட்டினின் படையெடுப்பு, முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதும் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட ஆபத்துகளுக்கு ஒரு முதலாளித்துவ- தன்னலக்குழு ஆட்சியின் அவநம்பிக்கையான மற்றும் பிற்போக்குத்தனமான பிரதிபலிப்பாகும். இந்த ஆபத்தை, பெரிய ரஷ்ய தேசிய நலன்களை மிருகத்தனமான முறையில் பாதுகாப்பதன் மூலம் கடந்துவர முடியாது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளின் உலகளாவிய பசிக்கு ஒரே சாத்தியமான எதிர்ப்பு உலக சோசலிசப் புரட்சி ஆகும். இந்த முன்னோக்குடன் உடன்படுபவர்கள், தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைக்கும் போராட்டத்தில் இணைய வேண்டும்.

Loading