பிரித்தானிய சிறப்புப் படைகள் உக்ரேன் துருப்புக்களுக்கு போர் பிராந்திய பயிற்சிகளை அளித்து வருகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டைம்ஸில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி பிரிட்டிஷ் சிறப்புப் படைகள் உக்ரேனிய துருப்புக்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றன.

வெள்ளிக்கிழமை மாலை 'பிரிட்டிஷ் சிறப்புப் படைகள் 'உக்ரேனில் உள்ளூர் துருப்புக்களுக்கு பயிற்சி அளிக்கின்றன': முதல் முறையாக இங்கிலாந்து துருப்புகள் 'போர்முனையில்' சேவை செய்கின்றன' என்ற தலையங்கத்துடன் வெளியிடப்பட்ட கட்டுரையில், 'தலைநகரிலும் அதைச் சுற்றி நிலைகொண்டுள்ள இரண்டு உக்ரேனிய படைகளின் அதிகாரிகள் கடந்த வாரமும் அதற்கு முந்தைய வாரமும் இராணுவப் பயிற்சி பெற்றிருந்தாக அவர்கள் கூறியதாக' அது கூறுகிறது.

ஜனவரி 28, 2022 வெள்ளியன்று மேற்கு உக்ரேனின் எல்விவ் நகருக்கு அருகில் உள்ள யாவோரிவ் இராணுவப் பயிற்சி மைதானத்தில் NLAW தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியில் உக்ரேனிய வீரர்கள் பங்கேற்கின்றனர் (AP Photo/Pavlo Palamarchuk)

அது மேலும் “கியேவின் வடக்குப் புறநகரில் உள்ள ஓபோலோனில் அவரது படைப்பிரிவு நிலைகொண்டுள்ள தளபதி யூரி மிரோனென்கோ, படையெடுப்பு தொடங்கியபோது பெப்ரவரியில் வழங்கப்பட்ட NLA களைப் பயன்படுத்துமாறு இராணுவப் பயிற்சியாளர்கள் வந்திருப்பதாகக் கூறிதாக தெரிவிக்கிறது.

'Skiff' என்ற இராணுவ புனைப்பெயரால் அழைக்கப்படும் உக்ரேனிய சிறப்புப் படைத் தளபதி ஒருவர், தான் இணைக்கப்பட்ட 112 வது படைப்பிரிவு கடந்த வாரம் பயிற்சி பெற்றதாகக் கூறினார். இதைப்பற்றி அவரது மூத்த தளபதி உறுதிப்படுத்தினார்.

இக்கட்டுரை 'கிரிமியாவின் படையெடுப்பிற்குப் பின்னர் பிரிட்டிஷ் இராணுவப் பயிற்சியாளர்கள் முதலில் உக்ரேனுக்கு அனுப்பப்பட்டனர். ரஷ்யப் படைகளுடன் நேரடி மோதலைத் தவிர்க்கவும், சமீபத்திய மோதலில் நேட்டோ இழுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை தவிர்க்கவும் பெப்ரவரியில் அவை திரும்பப் பெறப்பட்டனர்” என கூறுகிறது.

அது, 'முன்னாள் பிரிட்டிஷ் படையினர்கள், கடற்படையினர் மற்றும் சிறப்புப் படை கமாண்டோக்களும் உக்ரேனில் பயிற்சி ஒப்பந்தக்காரர்களாகவும் மற்றும் தன்னார்வலர்களாக பணிபுரிகின்றனர். ஆனால் இந்த மாதம் சேவையிலுள்ள பிரிட்டிஷ் படையினர் தங்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என உக்ரேனிய அதிகாரிகள் பிடிவாதமாக இருந்தனர்' என தொடர்கிறது.

உக்ரேனுக்கு பிரிட்டன் வழங்கிய சமீபத்திய பயிற்சிகளில் பெரும்பாலானவை 3,600 Next Generation Light Anti-tank Weapons டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை (NLAWs) பயன்படுத்துவதாகும். இவை பல ரஷ்ய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை அழிக்கும் உக்ரேனிய இராணுவத்தின் திறனில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ரஷ்ய இராணுவ பின்னடைவுகளில் பிரிட்டிஷ் படைகளின் பங்கு குறித்து பிரிட்டிஷ் ஊடகங்கள் பல வாரங்களாக மகிழ்ச்சியுடன் உள்ளன. ஏப்ரல் 1 அன்று, டைம்ஸ், “பெப்ரவரி 13 வரை நாட்டில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்ட பில் எனப்படும் தளபதி வில்லியம் ரோஸின் தகவலை மேற்கோள் காட்டி, “நாடு முழுவதிலும் இருந்து உக்ரேனிய படையினர்கள் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சியைப் பெற திரளாக வந்தனர். படையெடுப்பிற்கு முந்தைய நாட்களில் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், பின்னர் ரஷ்ய முன்னேற்றத்தை குறைப்பதில் பெறுமதிமிக்கதாக நிரூபிக்கப்பட்டது.

'ரஷ்யாவின் படையெடுப்பிற்கு முந்தைய மாதங்களில் உக்ரேனுக்கு அனுப்பப்பட்ட Ross மற்றும் பிற பிரிட்டிஷ் துருப்புக்கள் பற்றி 'நாட்டில் இங்கிலாந்தின் பயிற்சி முயற்சியின் அளவை' டைம்ஸ் குறிப்பிட்டது. 'இங்கிலாந்து துருப்புக்கள் படையினருக்கு குறிபார்த்து துப்பாக்கி சுடுவதற்கு எதிரான உத்திகள், கனரக பீரங்கிகளுக்கு எதிராக எவ்வாறு பாதுகாப்பது மற்றும் நகர்ப்புற போர்களில் எவ்வாறு போராடுவது போன்றவற்றில் பயிற்சி அளித்தனர்' என டைம்ஸ் குறிப்பிட்டது.

சிறப்புப் படைகளின் பங்கு தொடர்பாக சமீபத்திய டைம்ஸ் கட்டுரை பின்வருமாறு கூறுகிறது, “இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் [MoD] சிறப்பு நடவடிக்கைகளில் கருத்து தெரிவிக்கக்கூடாது என்ற நீண்டகால உடன்பாட்டைக் காரணம் காட்டி உக்ரேனிய தளபதிகளின் தகவல்களை உறுதிப்படுத்த மறுத்துவிட்டது”.

2014 மைதான் சதுக்க ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் உக்ரேனுக்குப் பயிற்சி அளித்து ஆயுதம் கொடுத்ததனையும், ரஷ்ய-எதிர்ப்பு சூழ்ச்சிகளில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நீண்டகாலப் பதிவைக் கருத்தில் கொண்டு, இலண்டன் அத்தகைய அறிக்கைகள் அனைத்தையும் உறுதிப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ மறுப்பது ஒரு ஏமாற்று என்று கருதப்பட வேண்டும். அப்போது Right Sector, ஸ்வோபோடா மற்றும் அசோவ் படைப்பிரிவு உள்ளிட்ட பாசிச சக்திகளின் தலைமையிலான சதியை பிரிட்டன் ஆதரித்தது. இது ரஷ்ய சார்பு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை தூக்கியெறிந்தது.

பெப்ரவரி 2015 இல், பிரதம மந்திரி டேவிட் கேமரூன், உக்ரேனிய துருப்புக்களின் 'உயிர்வாழ்வை மேம்படுத்த' பிரிட்டன் இராணுவ 'ஆலோசகர்கள்' மற்றும் 'மரணத்தை ஏற்படுத்தாத உதவிகளை' உக்ரேனுக்கு அனுப்புவதாக அறிவித்தார். அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 75 இராணுவ பயிற்சியாளர்கள் மேற்கு உக்ரேனுக்கு அனுப்பப்பட்டனர். 'கட்டளை நடைமுறைகள், தந்திரோபாய நுண்ணறிவு, போர்க்களத்தில் முதலுதவி, தளவாடங்கள் மற்றும் நகர்ப்புற நடவடிக்கைகளின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றில் அறிவுறுத்தல்களை வழங்குதல்' அடங்கும்.

The British also assessed the future training requirements of Ukraine’s infantry.

உக்ரேனின் தரைப்படையின் எதிர்கால பயிற்சி தேவைகளையும் பிரித்தானியர்கள் மதிப்பீடு செய்தனர்.

சில மாதங்களுக்குப் பின்னர், ஜூலை மாதம் Rapid Trident என்ற பன்னாட்டுப் பயிற்சி நடவடிக்கையில் பிரிட்டன் பங்கேற்றது. அமெரிக்கா மற்றும் உக்ரேன் தலைமையில், 'பிரிட்டிஷ் படையினர்களை நாட்டின் மேற்கில் உள்ள பல கூட்டணி நாடுகளின் துருப்புக்களுடன்' இது ஒன்றாக கொண்டு வந்தது. 'பங்காளி நாடுகளின்' துருப்புக்கள் 'எதிரி படைகளுடன் தொடர்பு கொள்வதற்கு எதிர்வினையாற்றுவது போன்ற அத்தியாவசிய தந்திரோபாயங்களில்' பயிற்சி பெற்றது. இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம், போர்க் குழு தலைமையக ஊழியர்களும் ஒரு கட்டளையக பயிற்சிக்கு பங்களிப்பார்கள், மற்ற நாடுகளைச் சேர்ந்த படையினருடனும் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கைகளை வழிநடத்தும் தளபதிகளின் திறனை பரிசோதிப்பார்கள்” எனக் கூறியது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் இராணுவம் 'போர்க்குழு தலைமையக அதிகாரிகள் மற்றும் 1ஆவது துப்பாக்கிசுடும் பிரிவிலிருந்து ஒரு தரைப்படை படைப்பிரிவை அனுப்பியது. மொத்தம் சுமார் 50 பணியாளர்கள், முக்கிய பயிற்சியை வழங்கவும், பணி கட்டளை தலைமையகத்திற்கு பங்களிக்கவும்' அனுப்பப்பட்டனர்.

அதே ஆண்டு, உக்ரேனுக்கான அதன் அதிகாரப்பூர்வ பயிற்சிப் பணியான Operation Orbital இன் தொடக்கத்துடன் பிரிட்டன் தனது ஆதரவை உறுதிப்படுத்தியது.

2015 ஆம் ஆண்டின் இறுதியில், 5 வருட காலத்திற்கு சிறப்புப் படைகளின் வரவு-செலவுத் திட்டத்தில் £2 பில்லியனை அதிகரிக்க கேமரூன் அங்கீகாரம் அளித்தார்.

2018 ஆம் ஆண்டில், 'அசோவ் கடலில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் உக்ரேனிய கடற்படைக்கு பயிற்சி அளிப்பதற்காக Royal Navy மற்றும் Royal Marine இன் பயிற்சி குழுக்களை' அனுப்புவதன் மூலம் Orbital பயிற்சியின் நோக்கம் விரிவடைந்தது.

2019 ஆம் ஆண்டில், உக்ரேனிய ஆயுதப் படைகளின் 17,500 உறுப்பினர்கள் ஏற்கனவே Orbital மூலமாக பிரிட்டனால் பயிற்சி பெற்றுள்ளனர் என்பதை இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் வெளிப்படுத்தியதால், அது 'உக்ரேனுக்கான தனது பயிற்சி பணியை மார்ச் 2023 வரை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக' அறிவித்தது.

பிரிட்டிஷ் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் செப்டம்பர் 2020 இல் உக்ரேனிய கடற்படைக்கான பன்னாட்டு கடல்சார் பயிற்சி முயற்சியை பிரிட்டன் வழிநடத்தும் என்று அறிவித்தார். அடுத்த ஆண்டு, போருக்கு முன்னும் பின்னும் 20,000 க்கும் மேற்பட்ட உக்ரேனின் ஆயுதப் படை உறுப்பினர்களுக்கு பிரிட்டன் பயிற்சி அளித்ததாக பெருமையடித்த நிலையில், கருங்கடலில் நடவடிக்கைகளுக்கு நேட்டோவின் இங்கிலாந்து தலைமையிலான தாக்குதல் கப்பல் குழு 21இன் ஒரு பகுதியாக ரஷ்யாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல்களை அதிகரிப்பதில் இரு நாடுகளும் முக்கிய பங்கு வகித்தன.

உலக சோசலிச வலைத் தளம் ஏப்ரல் 2021 இல் பிரிட்டனின் சிறப்பு விமான சேவைகள் (SAS) உக்ரேனில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தன என்று தெரிவித்தது: “இங்கிலாந்தில் ஏற்கனவே சிறப்புப் படைகள் மற்றும் Royal Air Force (RAF) விமானங்கள் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு SAS சிறப்புப் படைக் குழுவும் Royal Signals electronic பிரிவும் உக்ரேனுக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பப்பட்டது. இது அமெரிக்க சிறப்பு நடவடிக்கைக் குழுவுடன் இணைந்து, ‘ரஷ்ய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும்’”.

உக்ரேனில் உள்ள உக்ரைன் துருப்புக்களுக்கு இங்கிலாந்து படைகளுக்கு பயிற்சி அளிப்பது போல, பிரிட்டனில் நடைபெறும் இரு நாடுகளுக்கும் இடையே வழக்கமான பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம், ஏப்ரல் 12 அன்று, i செய்தி இணைய தளம், “ரஷ்யாவுக்கு எதிரான போரில் அவசரகால பயிற்சிக்காக உக்ரேனிய துருப்புக்கள் சில நாட்களில் இங்கிலாந்து மண்ணுக்கு வந்து சேரும்” என்று தெரிவித்தது.

உக்ரேனின் கிழக்கில் போர் தீவிரமடையும் என்ற இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் மதிப்பீட்டின் மூலம், ஆயுதப்படை அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி LBC ரேடியோவிடம் பிரிட்டன் உக்ரேனுக்கு 120 கவச வாகனங்களை 'தயாராக' வழங்குவதாகக் கூறியதாக i செய்தி இணைய தளம் தெரிவித்தது. 'அவற்றை இயக்கும் உக்ரேன் துருப்புக்கள் அடுத்த சில நாட்களில் அந்த வாகனங்களை எவ்வாறு ஓட்டுவது மற்றும் கட்டளையிடுவது என்பதை அறிய இங்கிலாந்துக்கு வரும்' என்று அவர் கூறினார்.

பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் தனது பிரெக்சிட்டிற்குப் பிந்தைய மூலோபாயத்தின் மையப் பகுதியாக அமெரிக்காவிற்கு ஒரு உறுதியான முன்னோடியை உருவாக்கி, இலண்டனின் இராணுவ திறன்களை பெருமளவில் அதிகரிப்பதன் மூலம், என்ன விளைவுகள் ஏற்பட்டாலும், மோதலை தீவிரமாக்க பிரிட்டனை நம்பியிருக்கலாம் என காட்டுகின்றார். கடந்த ஆண்டு கருங்கடலில் பிரிட்டனின் ரஷ்ய எதிர்ப்பு ஆத்திரமூட்டல்களால் பதட்டங்கள் கொதிநிலையை எட்டியபோது, ஒரு ரஷ்ய போர் விமானம் இங்கிலாந்து போர்க்கப்பலின் பாதையில் குண்டுகளை வீசியது.

இந்த வார இறுதியில் யூரேசிய நிலப்பரப்பு மற்றும் இறுதியாக ரஷ்யாவின் துண்டாடப்படுதல் ஆகியவற்றில் அதன் நீண்டகால வடிவமைப்புகளை எளிதாக்குவதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான கையாளாக பிரிட்டன் வகிக்கும் பங்கை ரஷ்யா ஒப்புக்கொண்டது. சனிக்கிழமையன்று, வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ், பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ், அதிபர் ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் தெரசா மே, ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் மற்றும் பிற மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் ஜோன்சன் ரஷ்யாவிற்குள் நுழைவதை மாஸ்கோ தடை செய்தது.

மாஸ்கோவின் வெளியுறவு அமைச்சகம், 'மூத்த ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் என்ற பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முன்னோடியில்லாத விரோத நடவடிக்கை கருத்தில் கொண்டு' இது தடுக்கப்பட்டதாக கூறியது. பிரிட்டன் 'ரஷ்யாவை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தவும், நமது நாட்டைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுப் பொருளாதாரத்தை நெரிக்கவும் நிலைமைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட கட்டுப்பாடற்ற தகவல் மற்றும் அரசியல் பிரச்சாரத்தை' நடத்தியது என அது குறிப்பிட்டது.

ஒரு நடைமுறைப் போர்க் கட்சியாக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியுடன் தொழிற் கட்சித் தலைவர் கீர் ஸ்டார்மர் மற்றும் அவரது முன்னணி அங்கத்தவர்கள் இணைந்திருப்பதற்கு எதிராக ரஷ்யா எளிதாக நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ரஷ்யாவிற்கு எதிரான ஆரம்பத் தடைகளை ஜோன்சன் வெளியிட்டபோது, 'செயல்படும் திறனை முடக்குவதற்கு' ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை 'அதிகப்படுத்த' கோரி ஸ்டார்மர் மூர்க்கத்துடன் இருந்தார்.

Loading