இந்திய தொழிலாளர்களும் மாணவர்களும் நேட்டோ-ரஷ்யா போர் குறித்து பேசுகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளால் ரஷ்யாவிற்கு எதிராக தொடுக்கப்பட்ட பினாமி போருக்கு மத்தியில் சோசலிச சர்வதேசியத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (International Committee of the Fourth International - ICFI) இந்திய ஆதரவாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் கலந்துரையாடினர்.

இந்தியாவின் ஆளும் உயரடுக்கு, மாஸ்கோவுடனான அதன் நீண்டகால இராணுவ-மூலோபாய மற்றும் பொருளாதார உறவுகளை மேற்கோள் காட்டி அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளின் ரஷ்யாவுக்கு எதிரான அறிவிக்கப்படாத போரில் வெளிப்படையாக பக்கபலமாக இருக்க மறுத்துவருகிறது. ஆனால் உலகெங்கிலும் பெரும் வல்லரசு போட்டிகளை தீவிரப்படுத்தப்படுவதில் இந்திய முதலாளித்துவம் முழுமையாக உடந்தையாக உள்ளது, அது மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுக்கிறது. கடந்த ஒன்றரை தசாப்தத்தில், புது டெல்லி அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் எப்போதும் நெருக்கமான கூட்டணியை உருவாக்கியுள்ளது, அதன் மூலம் சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியாவை ஒரு உண்மையான முன்னணி அரசாக மாற்றியுள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடனான கலந்துரையாடல்கள், உக்ரேன் மீதான தற்போதைய மோதல், அமெரிக்க-நேட்டோ மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஒரு நேரடிப் போருக்கு இட்டுச் செல்வது குறித்து மேலும் அணு ஆயுதங்களுடன் போரிடும் உலகளாவிய மோதலாக விரிவடையும் அபாயம் ஆகியவற்றை மையமாக கொண்டது. இத்தகைய மோதல் உலகளவில் கோடிக்கணக்கில் இல்லாவிட்டாலும் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு கொடிய விளைவுகளை ஏற்படுத்தும், மேலும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன அணிதிரட்டல் மற்றும் புரட்சிகர நடவடிக்கை மூலம் மட்டுமே அதைத் தவிர்க்க முடியும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளி எஸ்.வாசன் கூறியதாவது: இந்தப் போர் எங்கு கொண்டு செல்லப் போகிறது என்பதையும், அதன் வரலாற்று வேர்களையும் அறிவதுதான் மிக முக்கியமான விடயம் என்று நினைக்கிறேன். உக்ரேனை அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவிற்கு எதிரான போரின் ஏவுதளமாக பயன்படுத்த விரும்பியுள்ளன. உக்ரேனின் நிதியாதிக்க குழுக்கள் இந்த பிற்போக்குத்தனமான முடிவுக்கு நேட்டோவில் சேர விரும்பின. உக்ரேன் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இப்போது, உக்ரேனின் தொழிலாள வர்க்கமும், பொது மக்களும்தான் போரின் சுமைகளைச் சுமக்கிறார்கள்.

“பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட்-19 இன் பேரழிவு தாக்கம் மற்றும் இயற்கை பேரிடர்களின் வெடிப்பு காரணமாக தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், நிதியாதிக்க குழுக்கள் உலகில் தீவிரமான சம்பவங்கள் எதுவும் நடக்காதது போல் தங்கள் இயல்பான வாழ்க்கையைத் தொடர்கின்றன.

'போரை எதிர்க்கவும் சமூக சமத்துவத்திற்காக போராடவும் உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும்.'

சென்னைக்கு அருகிலுள்ள மதர்சன் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளியான பாலகிருஷ்ணன், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லிபியா மற்றும் பிற நாடுகளில் அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகளால் 30 ஆண்டுகாலமாக நடத்தப்பட்ட ஏகாதிபத்தியப் போர்களின் தவிர்க்க முடியாத விளைவாக இந்தப் போர் ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார்.

பழிவாங்கப்பட்ட மதர்சன் ஆலைத் தொழிலாளி பாலகிருஷ்ணன் [புகைப்படம்: WSWS]

'ரஷ்யாவிற்கு எதிரான போரை தீவிரப்படுத்த அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உக்ரேனுக்கு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குகின்றன.மேலும் உக்ரேனில் இனப்படுகொலை (genocide) நடைபெறுவதாகக் கூறிக்கொண்டு நேரடி இராணுவத் தலையீட்டிற்கான நிலைமைகளை அமெரிக்கா உருவாக்கிக்கொண்டிருக்கிறது,” என்றார். 'உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க போர் உந்துதலில் ஒரு ஆபத்தான அணுசக்தி பேரழிவு காத்திருக்கிறது“.

'போர் பற்றிய உலக சோசலிச வலைத் தளத்தின் பகுப்பாய்வு மற்றும் உலக சோசலிசத்திற்கான போராட்டத்தின் மூலம் அணு ஆயுதப் போர் வெடிக்கும் சாத்தியத்தை நிறுத்துவதற்கான புரட்சிகர மாற்று வேலைத்திட்டத்துடன் நான் உடன்படுகிறேன்.'

கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் பி.எட்., படிக்கும் மாணவி சுமிதா ஷா கூறியதாவது: “ஏகாதிபத்திய போர் மனிதாபிமானமற்றது மற்றும் நாகரீகத்தின் அழிவுக்கு அது பங்களிக்கிறது. உக்ரேன் மீது ரஷ்யாவின் பயங்கரமான குண்டுவீச்சை முன்வைக்கும் ஊடகங்களில் உள்ள காட்சிளை மட்டும் பார்க்காமல், வெளிப்படையாக, அதன் வரலாற்றுப் பின்னணியில் நாம் ஆழமாகச் சென்றுபார்க்கவேண்டும்..

சுமிதா ஷா

'உக்ரேன் வெறும் நேட்டோவின் பினாமி ஆகும், சிறந்த சலுகைகளுக்காக அதில் சேர தூண்டப்படுகிறது. பிரச்சினை எப்படிப் பார்க்கப்பட்டாலும், உண்மையில் போர் என்பது ஓரளவு மட்டுமே பாதிக்கப்படும் முதலாளிகளின் மற்றும் உயரடுக்குகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட விளைவாக இருக்கிறது. பெரும்பான்மை மக்களும், பெண்களும், குழந்தைகளும்தான் அதிகம் அதனால் பாதிக்கப்படுகிறார்கள்” என்றார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள கல்யாணி பல்கலைக்கழக மாணவர் சோமக் பானர்ஜி கூறியதாவது: “உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் நிறுத்தப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கம் இந்தப் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய விலைவாசி உயர்வு மற்றும் உணவுப் பற்றாக்குறை போன்ற அதனால் ஏற்படும் விளைவுகளையும் சவால்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது..

'அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டணி நாடுகளும் சோவியத் யூனியன் உடைந்ததிலிருந்து கடந்த மூன்று தசாப்தங்களாக ரஷ்யாவுடன் ஒரு போரைத் தயாரித்து தூண்டிகொண்டு வருகின்றன. அதன்படி உக்ரேனுக்கு எதிரான போரினை உருவாக்கி ரஷ்யாவை சிக்கவைத்துள்ளனர்.

'ரஷ்யா தனது பிற்போக்குத்தனமான போர் நடவடிக்கையை அதன் தேசிய பாதுகாப்பு நலன்களின் அடிப்படையில் நியாயப்படுத்த முயல்கிறது. இது ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ கூட்டணியில் உக்ரேனை சேர்க்க முயற்சிக்கும் நேட்டோவின் ஆற்றொணா முயற்சிகளால் அச்சுறுத்தப்படுகிறது. ரஷ்யாவிற்கு எதிராக போரைத் தொடுத்து, அதை ஒரு அரை-காலனித்துவ நாடாக மாற்றுவதும், அதன் அபாரமான இயற்கை வளங்களை சூறையாடுவதும், அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கான அமெரிக்காவின் உத்தியின் ஒரு பகுதியாக இது இருக்கிறது.

'நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) போர்-எதிர்ப்பு பிரச்சாரத்துடன் நான் உடன்படுகிறேன். அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் ஏகாதிபத்திய போர் உந்துதல் மற்றும் உக்ரேன் மீதான புதினின் பிற்போக்குத்தனமான படையெடுப்பு ஆகியவைகளை அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாளர்களின் ஆதரவுடன் ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களின் ஐக்கியபட்ட வர்க்கப் போராட்டங்களால் எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்.

1917 அக்டோபர் புரட்சி மற்றும் சோவியத் ஒன்றியத்தினை உருவாக்கிய லெனின் மீதான புதினின் தாக்குதலை சென்னை, அம்பத்தூரில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் செனின்பன் எதிர்த்தார். 'பிற்போக்குத்தனமான சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு ஒரு காலத்தில் ஐக்கியப்பட்டிருந்த தொழிலாள வர்க்கத்தை விரோதமான தேசிய அரசுகளாகப் பிரித்தது. இப்போது, தொழிலாள வர்க்கம் இந்த தேசியவாதப் பிளவுகளையும் இனப் பேரினவாதத்தையும் எதிர்க்க வேண்டும், மேலும் சோசலிசப் புரட்சியின் மூலம் அவர்கள் ஒன்றிணைவதற்காக மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும்.

“இன்னொரு உலகப் போரை உலகம் தாங்க முடியாது. எனவே தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை உருவாக்குவது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு அவசரப் பணியாக இருக்கிறது. இந்தப் போர் நெருக்கடி உலக சோசலிசப் புரட்சிக்காகப் போராடுவதற்கான ஒரு மிகப்பெரிய இயக்கத்திற்கு தூண்டுதலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

”நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டும் தான் ஒரு வேலைத்திட்டத்துடன் அப்படியான ஒரு இயக்கமாக இருப்பதை நான் பார்க்கிறேன், அதன் முன்முயற்சிகளுடன் தோளோடு தோள் நின்று செயற்படுவது எனது தொழிலாள வர்க்க சகோதர, சகோதரிகளின் கடமை என்று நான் பார்க்கிறேன்.”

Loading