பொதுத் தேர்தலுக்கான காரணங்கள்: பிரிட்டனை மூன்றாம் உலகப் போருக்குள் இழுக்கும் டோரி-தொழிற்கட்சி சதியை அம்பலப்படுத்துவோம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சோசலிச சமத்துவக் கட்சி (SEP) பொதுத் தேர்தலுக்கான கோரிக்கையை வெளியிட்டுள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு அடியில் இருக்கும் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக நாங்கள் இந்த வேண்டுகோளை விடுக்கிறோம்: 1) ரஷ்யாவிற்கு எதிரான போரின் இடைவிடாத விரிவாக்கம், அணு ஆயுதப் போரை ஆபத்தில் வைக்கும் அளவிற்கு கூட; 2) சார்ஸ்-கோவிட்-2 வைரஸின் முடிவில்லாத பரவலை நிறுத்தவும், வெகுஜன தொற்று மற்றும் மரணத்தை அனுமதிக்கும் குற்றவியல் தனமான மறுப்பு; மற்றும் 3) தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இரக்கமற்ற தாக்குதல்.

டோரிகள் மற்றும் அவர்களது தொழிற் கட்சி கூட்டாளிகளின் கொள்கைகளுக்கு மக்கள் எதிர்ப்பை அம்பலப்படுத்தவும் கட்டியெழுப்பவும் ஒரு தேர்தலை நாங்கள் கோருகிறோம்.

டோரி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் இராஜினாமா டோரி கட்சிக்குள் ஆழமான பிளவுகள் மட்டுமல்ல, வர்க்க ஆட்சியின் பெருகிவரும் நெருக்கடியின் விளைவும் ஆகும். வெறுக்கப்படும் மற்றும் இழிவாக கருதப்படும் நபரான ஜோன்சன், பதவியில் இருந்து நீக்கப்பட்டார், ஏனெனில் ஆளும் உயரடுக்கு பிரிட்டனை வழிநடத்தும் அவரது திறனில் நம்பிக்கை இழந்துவிட்டது, ஏனெனில் அது ரஷ்யாவிற்கு எதிரான போரை தீவிரப்படுத்துகிறது மற்றும் அதே நேரத்தில் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போரை தீவிரப்படுத்துகிறது.

பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் தனது 2022 ஆம் ஆண்டின் முதல் அமைச்சரவையை கூட்டினார் [Photo by Simon Dawson / No 10 Downing Street / Flickr / CC BY-NC-ND 4.0] [Photo by Simon Dawson / No 10 Downing Street / Flickr / CC BY-NC-ND 4.0]

பிரித்தானியாவின் அரசியல் வரலாற்றில், ஆளும் கட்சியின் தலைமையை மாற்றுவதற்கு அவசியமான பெரும் அரசியல் நெருக்கடிகளுக்கு போர் அடிக்கடி வழிவகுத்துள்ளது.

1916 ஆம் ஆண்டில், லிபரல் கட்சி, முதலாம் உலகப் போரின் போது அவரது தலைமையின் மீதான அதிருப்தியின் காரணமாக பிரதமர் அஸ்கித்தை (Asquith) பதவி நீக்கம் செய்தது.

1940 ஆம் ஆண்டில், நெவில் சேம்பர்லைன் முனிச்சில் ஹிட்லருக்கு வழங்கிய சலுகைகளால் மிகவும் சமரசம் செய்து கொண்டார் என முடிவு செய்து, கன்சர்வேடிவ் கட்சி இரண்டாம் உலகப் போர் தொடங்கி எட்டு மாதங்களுக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக சேர்ச்சிலை நியமித்தது.

1957 ஆம் ஆண்டின் முற்பகுதியில், பேரழிவுகரமான சூயஸ் போருக்குப் பின்னர், டோரிகள் அந்தோனி ஈடனை நீக்கி, அவருக்குப் பதிலாக ஹரோல்ட் மாக்மில்லனை நியமித்தனர்.

குறிப்பிடத்தக்க வேறுபாட்டுடன் இருந்தாலும், இந்த அரசியல் முறை மீண்டும் மீண்டும் வருகிறது. இம்முறை, ரஷ்யாவிற்கு எதிரான போர் தீவிரமடையும் சூழ்நிலையில், தலைமை நெருக்கடியின் அடிப்படையிலான உண்மையான பிரச்சினைகள் பொது விவாதத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.

டோரிகள் போரைத் தீவிரப்படுத்துவதற்கும், அவர்களின் கொலைவெறித் தொற்றுக் கொள்கைகளைத் தொடர்வதற்கும், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைப்பதற்குமான தங்களின் திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுவதை விரும்பவில்லை. இந்த அரசியல் நிகழ்ச்சி நிரலில் தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டைத் தடுப்பதற்கான அவர்களின் உறுதிப்பாடு தொழிற் கட்சியால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தேர்தல், போருக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை எழுப்பி, அதற்கு எதிரான வெகுஜன இயக்கத்திற்கு வழிவகுக்கும் என இரண்டு கட்சிகளும் அஞ்சுகின்றன.

மில்லியன் கணக்கான மக்களின் முதுகுக்குப் பின்னால், டோரிகளும் தொழிற்கட்சியும் பிரிட்டனை இன்னும் ஆழமாக மூன்றாம் உலகப் போரை நோக்கிச் சுழன்று கொண்டிருக்கும் அணு ஆயுத நாடான ரஷ்யாவிற்கு எதிரான போருக்குள் இன்னும் ஆழமாக இழுத்துச் செல்கின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சி, இரண்டு பெரிய கட்சிகளின் சதியை முறியடிப்பதற்கும், அவர்களின் கொள்கைகளை எதிர்ப்பதற்கும், அதன் சுயாதீனமான சமூக நலன்களை வலியுறுத்துவதற்கும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு வழிமுறையாக பொதுத் தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

அரசாங்கத்தின் போர்க் கொள்கைகளுக்கு எதிர்ப்பைத் தூண்டுவதற்கும், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தோற்கடிக்கவும் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன நடவடிக்கைக்காக கிளர்ச்சி செய்வதற்கும் தேர்தல் காலத்தைப் பயன்படுத்துவோம்.

வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை மற்றும் அரசியல் போராட்டத்தை வளர்ப்பதே எங்கள் அழைப்பின் இலக்காகும். தொழிற்கட்சி மற்றும் ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியாலும், அதேபோல் டோரிக்களாலும் ஆதரிக்கப்படும் ஒரு போர் வெறிகொண்ட நிதிய தன்னலக்குழு, ரஷ்யாவிற்கு எதிரான போரை ஒரு நம்பிக்கைக்குரிய செயலாக முன்வைக்கிறது. ஊழல் நிறைந்த ஊடகங்களால் ஆதரிக்கப்பட்டு, தொழிலாள வர்க்கத்திற்கு பெரும் அபாயகரமான தாக்கங்கள் மறைக்கப்படுகின்றன.

மே 2022 இல் இராணியின் உரையைக் கேட்க தொழிற்கட்சி தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் போரிஸ் ஜோன்சன் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸுக்கு நடந்து செல்கிறார்கள் [Photo by Jessica Taylor / UK Parliament / Flickr / CC BY-NC 4.0]. [Photo by Jessica Taylor / UK Parliament / Flickr / CC BY-NC 4.0]

அரசாங்கமோ அல்லது தொழிற்கட்சியோ பொதுத் தேர்தலை விரும்பவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தை அறிமுகப்படுத்த ஸ்டார்மரின் தாமதமான முயற்சி ஜோன்சனை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டது, டோரிகளை அல்ல. அரசாங்கத்துடன் தாங்கள் பகிர்ந்து கொள்ளும் வலதுசாரிக் கொள்கைகள் பற்றிய எந்தவொரு வெளிப்படையான விவாதமும் பாரிய மக்கள் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும் என தொழிற்கட்சி அஞ்சுகிறது. அவர்கள் கட்சியின் தலைமையை வெறுக்கும் ஒரு கோபமான தொழிலாள வர்க்க வாக்காளர்களின் மேல் அமர்ந்துள்ளனர் மற்றும் ஸ்டார்மர் டோரி கட்சியின் தலைவராக இருக்க முடியும் என்பதை அறிவார்கள்.

பல வர்க்க உணர்வுள்ள, சோசலிச எண்ணம் கொண்ட தொழிலாளர்கள் ஒரு பொதுத் தேர்தலின் அவசியத்தை கேள்விக்குள்ளாக்கலாம், ஏனெனில் பழமைவாத அரசாங்கத்தை தொழிற்கட்சி அரசாங்கத்தால் மாற்றுவது எதையும் மாற்றாது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அது சரிதான், ஆனால் அரசியல் நெருக்கடியில் தொழிலாள வர்க்கம் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று இது அர்த்தப்படுத்தாது.

ஒரு பொதுத் தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் கோரிக்கையானது தொழிற்கட்சிக்கான ஆதரவையோ அல்லது இல்லாத பாராளுமன்றத் தீர்வையோ குறிக்கவில்லை. தேர்தல் நடந்தால், தொழிற் கட்சிக்காக வாக்குகள் கேட்க மாட்டோம். தொழிற்கட்சி அவர்களின் எதிரி என்றும், டோரிகளைப் போலவே தீர்க்கமாக எதிர்க்கப்பட வேண்டும் என்றும் நாம் தொழிலாளர்களை எச்சரிப்போம்.

வேலைநிறுத்தங்கள், வெகுஜன எதிர்ப்புகள் மற்றும் போரை நிறுத்த பொது வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்ய பொதுத் தேர்தலைப் பயன்படுத்துவோம், பூஜ்ஜிய கோவிட் கொள்கையை ஏற்கும்படி கட்டாயப்படுத்துவோம், மற்றும் முதலாளித்துவத்திற்கு மாற்றாக சோசலிசத்திற்கான ஆதரவைக் கட்டியெழுப்புவோம். தொழிற்சங்கங்கள் வளர்ந்து வரும் வேலைநிறுத்த இயக்கத்தை நசுக்கி, டோரி அரசாங்கம் மற்றும் தொழிற்கட்சியின் வலதுசாரிக் கொள்கைகளுக்கு எந்த அரசியல் சவாலையும் தடுக்கும் சூழ்நிலையில் இது இன்றியமையாததாகும்.

அரசியல் ரீதியாகப் பிரதிநிதித்துவம் செய்யப்படுவது ஒருபுறம் இருக்க, ஒருபோதும் கருத்துக் கேட்கப்படாத மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம்.

இவையே பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கும் கொள்கைகளாகும்.

போருக்கு எதிரான சர்வதேச சோசலிச இயக்கத்திற்காக!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாகமாக உள்ள சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் சகோதரக் கட்சிகளும் மூன்றாம் உலகப் போருக்கான நேட்டோ மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் தயாரிப்புகளுக்கு எதிராக பிரிட்டிஷ் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கத்தின் வளர்ச்சிக்காக போராடுகின்றன.

NLAW மற்றும் Starstreak ஏவுகணைகளை தயாரிக்கும் பெல்ஃபாஸ்டில் உள்ள Thales UK க்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் விஜயம் செய்தார் [Photo by Andrew Parsons / No 10 Downing Street / Flickr / CC BY-NC-ND 4.0] [Photo by Andrew Parsons / No 10 Downing Street / Flickr / CC BY-NC-ND 4.0]

1945ல் இருந்து எந்த நேரத்திலும் இல்லாத வகையில் இன்று மனிதகுலம் உலகப் போரை நெருங்கி நிற்கிறது. இராணுவம் இதற்காக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.

ஜூன் 28 அன்று, பிரிட்டிஷ் இராணுவத்தின் புதிய தலைவர், ஜெனரல் சர் பேட்ரிக் சான்டர்ஸ், நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு தரைவழி போருக்கான தனது திட்டத்தை கோடிட்டுக் காட்டினார். 'பிரிட்டிஷ் இராணுவம் அதன் மிக வன்முறையான போரில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும்,' என்று அவர் கூறினார், 'ஐரோப்பிய தரைப் போர் என்பது அடிவானத்தில் உள்ள தொலைதூர புயல் மேகங்களின் வெளிப்பாடு மட்டுமல்ல; அதை நாம் இப்போது பார்க்கலாம்.'

இங்கிலாந்தின் போர் நோக்கங்களின் அளவு, பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் இராணுவமயமாக்கலைக் கோருகிறது என்று சான்டர்ஸ் தெளிவுபடுத்தினார். “போருக்கு முன்னதாக நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளின் அடுப்புகளை நாம் பற்றவைக்க முடியாது; இந்த முயற்சியை இப்போதே தொடங்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார். பிரிட்டன் 'எங்கள் மக்களின் கற்பனையை ஊக்குவிக்க வேண்டும், அழைப்பு விடுக்கப்பட்டால் போராடி வெற்றி பெற வேண்டும்... அணிதிரட்டுவதில் வெற்றிபெற, தேவையான கலாச்சாரம் மற்றும் நடத்தையை நாம் உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டும்.'

சீனாவுக்கு எதிரான போரும் தீவிரமாக தயாராகி வருகிறது. கடந்த மாதம் மாட்ரிட்டில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் வெளியுறவு செயலர் லிஸ் ட்ரஸ், உக்ரேனில் தங்கள் போர் சீன ஜனாதிபதி ஜிக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது என்று கூறினார். ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அதிகரித்த ஒத்துழைப்பு மற்றும் 'அவர்களின் இராணுவ திறன்' மற்றும் 'அவர்களின் உலகளாவிய செல்வாக்கு' ஆகியவற்றின் விரிவாக்கம் இந்தோ-பசிபிக் மற்றும் யூரோ-அட்லாண்டிக் பாதுகாப்பிற்கான ஒரு புதிய மூலோபாய கருத்தை அவசியமாக்கியது.

இந்த உலகளாவிய போர் நோக்கங்கள் ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் பொருந்தாது. பிரிட்டனை ஒரு போர்க் கட்டத்தில் வைப்பது என்பது உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போராகும். இது வெகுஜன சிக்கன நடவடிக்கை மற்றும் வேலைநிறுத்தம், பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் உரிமை உட்பட அடிப்படை ஜனநாயக உரிமைகளை நசுக்குவதைக் குறிக்கிறது. இங்கிலாந்து ஏற்கனவே உக்ரேனை ஆயுதபாணியாக்குவதற்கு 4 பில்லியன் பவுண்டுகளை செலவிட்டுள்ளது. இது பாதுகாப்பு செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு முதல் 3 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு வழிவகுத்தது. ஆனால் இது ஒரு ஆரம்பம் மட்டுமே.

இந்த பேரழிவிலிருந்து வெளியேற ஒரே வழி தொழிலாள வர்க்கத்தின் நனவான தலையீடுதான்.

தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பூஜ்ஜிய-கோவிட் உத்திக்காக!

சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) தொற்றுநோயைத் தடுக்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்திற்கு தலைமை தாங்குகின்றன.

இலண்டன் பேருந்து ஓட்டுநர் டேவிட் ஓ'சுல்லிவன், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது உடல்நலம் மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்தியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார், இலண்டன் சுரங்கப்பாதை தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம். [புகைப்படம்: WSWS]

தொற்றுநோய்க்கு 200,000 க்கும் அதிகமான உயிர்களைக் கொன்ற ஜோன்சனின் வீழ்ச்சியை மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கொண்டாடினர். ஆயினும்கூட, 'இனி பூட்டுதல்கள் இல்லை, உடல்கள் ஆயிரக்கணக்கில் குவியட்டும்!' என்று அறிவித்தவர் அகற்றப்பட்ட போதிலும். அவரது கொள்கைகள் தொடர்கின்றன.

நாம் 'வைரஸுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று ஆளும் வர்க்கம் கோருவது வெகுஜன நோய் மற்றும் இறப்புக்கான கொள்கையாகும். ஜோன்சன் 'சுதந்திர தினம்' அறிவித்து ஒரு வருடம் கழித்து, தொற்றுநோய் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 3.5 மில்லியன் மக்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரித்துள்ளது, இளைஞர்கள் மற்றும் வேலை செய்யும் வயதுடையவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட கால தாக்கங்கள் பேரழிவு தரக்கூடியவை, 1.8 மில்லியன் மக்கள் நெடுங்கோவிட் நோயின் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். தி எகனாமிஸ்ட் நாளிதழின் அதிகப்படியான இறப்புகளைக் கண்காணிப்பவரின் கூற்றுப்படி, உலகளவில் 3.8 மில்லியன் மக்கள் ஜனவரி 3 முதல் தொற்றுநோயால் இறந்துள்ளனர்.

தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கையை விட வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் இலாபங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பது ஒரு பேரழிவை உருவாக்கியுள்ளது. தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்கங்களால் இது சாத்தியமானது, அவர்கள் டிரில்லியன் கணக்கான டாலர்கள் பெருநிறுவன கோவிட் பிணையெடுப்புகளை ஆதரிக்கும் அதே வேளையில், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பாதுகாப்பான வேலை செய்யும் இடங்களைக் கோரி ஒரு வேலைநிறுத்தம் கூட நடத்தவில்லை. இன்று, மட்டுப்படுத்தப்பட்ட தணிப்பு (mitigation) முறைகளின் முன்னாள் 'இடது' ஆதரவாளர்கள் கூட எதுவும் கூறவில்லை.

தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கான முழு இழப்பீட்டுடன் அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுவது மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட சோதனை நெறிமுறைகளை மீண்டும் நிலைநிறுத்துவது உட்பட வைரஸை அடக்குவதற்குத் தேவையான அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் மற்றும் தேவைப்படும் போது பூட்டுதல் உட்பட மீட்டெடுக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இந்த நடவடிக்கைகள், பெரு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தொற்றுநோய்களின் போது கொள்ளை இலாபம் ஈட்டுபவர்களை கையகப்படுத்துதலால் நிதியளிக்கப்பட வேண்டும்.

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர தொழிலாள வர்க்கத்தை ஒரு பொது வேலைநிறுத்தத்தில் அணிதிரட்டவும்!

சோசலிச சமத்துவக் கட்சி தேர்தலுக்கான கோரிக்கையை ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான போராட்டத்துடன் இணைக்கும்.

ரஷ்யாவிற்கு எதிரான போர் மற்றும் தொற்றுநோய் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பேரழிவிற்கு உட்படுத்தும் பணவீக்க சுழலைத் தூண்டுகிறது. எண்ணெய், எரிவாயு, தானியங்கள் மற்றும் பிற பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன, எரிபொருள் கட்டணங்கள் இன்றைய சாதனை அளவான 1,971 பவுண்டுகளில் இருந்து அக்டோபரில் 3,245 பவுண்டுகளாக உயரும்.

ஷெஃபீல்டில் உள்ள நெட்வொர்க் ரெயிலின் பிளாஸ்ட் லேன் டிப்போவில் மறியல் போராட்டம் [புகைப்படம்: WSWS]

பெரும் பணக்காரர்களின் நலனுக்காக சமூகம் இயங்குவதால் தொழிலாள வர்க்கம் வாழ முடியாது! ஆக்ஸ்பாமின் கூற்றுப்படி, பெருநிறுவன இலாபங்கள் அதிகரித்து வருவதே பணவீக்க உயர்வுக்கு 60 சதவிகிதம் காரணமாகும். இதற்கிடையில், பிரிட்டிஷ் தொழிலாளர்கள் பல தசாப்தங்களில் 'உண்மையான ஊதியத்தில் மிக மோசமான அழுத்தத்தை' எதிர்கொண்டுள்ளனர். ஐரோப்பாவில் பல்கேரியாவிற்கு அடுத்தபடியாக சமத்துவமற்ற இரண்டாவது நாடு பிரிட்டன்.

கடந்த மாதம் இரயில், கடல் மற்றும் போக்குவரத்து (RMT) தொழிற்சங்க வேலைநிறுத்தம் கோடைகால அதிருப்தி பற்றிய எச்சரிக்கைகளை தூண்டியது மற்றும் அரசாங்கம் தற்காலிக தொழிலாளர்களை கருங்காலிகளாக பயன்படுத்துவதற்கான சட்டத்தை இயற்றியது மற்றும் அத்தியாவசிய சேவைகளில் வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்குவதாக அச்சுறுத்தியது. வேலைநிறுத்தம் செய்பவர்கள் போர் முயற்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் 'புட்டினின் கைக்கூலிகள்' என்று கண்டிக்கப்பட்டுள்ளனர்.

இரயில் ஓட்டுனர்கள், தபால் ஊழியர்கள், பிரிட்டிஷ் டெலிகாம் தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், கவுன்சில் ஊழியர்கள் ஆகியோரின் கோபமான கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்துள்ள நிலையில், பணவீக்கத்தைக் குறைக்கும் ஊதிய உயர்வுக்கான இந்தப் போராட்டத்தில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கலந்துகொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் வர்க்கப் போராட்டத்தை எந்த விலை கொடுத்தாவது நசுக்குவதற்கு உறுதியான தொழிற்சங்க அதிகாரத்துவத்தை எதிர்கொள்கின்றனர்.

ஒவ்வொரு பணியிடத்திலும், ஜனநாயக ரீதியில் பொறுப்புக்கூறக்கூடிய மற்றும் மிகவும் மரியாதைக்குரிய தொழிலாளர் போராளிகளால் வழிநடத்தப்படும் நடவடிக்கை குழுக்களை உருவாக்குமாறு தொழிலாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்து, பொது எதிரிக்கு எதிரான தங்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்காக!

சோசலிச சமத்துவக் கட்சி போராடும் மைய முன்னோக்கு சோசலிச சர்வதேசியம் ஆகும்.

பிரிட்டிஷ் தொழிலாளர்களின் உண்மையான கூட்டாளிகள் ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களாவர். கடந்த வாரங்களில், கிரீஸ், இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் பொது வேலைநிறுத்தங்கள் நடந்தன. தொழில்துறை நடவடிக்கைகளின் அலைகள் துருக்கி, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளில் பரவியுள்ளன. தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளின் வெகுஜன இயக்கம் இலங்கையில் இராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்தியுள்ளது.

பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் உறுதியான தொழில்துறை மற்றும் அரசியல் தாக்குதலானது, பெருவணிகக் கட்சிகளின் ஆட்சி உரிமைக்கு சவால் விடுவதை மையமாகக் கொண்டது, ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் வளரும் வர்க்கப் போராட்டங்களுக்கு ஒரு சக்திவாய்ந்த உத்வேகமாக மாறும்.

இதைத்தான் சோசலிச சமத்துவக் கட்சி நிலைநிறுத்துகிறது, இதுவே பொதுத் தேர்தல்களுக்கான நமது அழைப்பின் அடிப்படையாகவும், தொழிலாள வர்க்கத்தின் புதிய சோசலிச தலைமையாக எங்கள் கட்சியைக் கட்டியெழுப்புவதும் ஆகும்.

Loading