பாங்க் ஆஃப் இங்கிலாந்து சமூக எதிர்ப்புரட்சியை வரைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பேங்க் ஆஃப் இங்கிலாந்து (Bank of England - BoE) வட்டி விகிதங்களை 0.5 சதவீதப் புள்ளிகள் உயர்த்தி 1.75 ஆக அதிகரித்துள்ளது, இது 27 ஆண்டுகளில் மிகப் பெரிய உயர்வாகும். இங்கிலாந்து நீண்ட கால மந்தநிலைக்குள் நுழையவிருப்பதால் அது அவ்வாறு செய்தது, மேலும் மில்லியன் கணக்கானவர்களுக்கு வேலையின்மை மற்றும் சமூக கஷ்டங்களை உயர்த்தும்.

பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் நாணய கொள்கை குழு (MPC) வெள்ளிக்கிழமை அதன் முடிவை அறிவித்தது. 1930 களுக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில், கூலி உயர்வுகளுக்கான கோரிக்கைகளை 'நசுக்க', இந்த வட்டி விகிதம், அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி தலைமையிலான உலகின் முன்னணி மத்திய வங்கிகளின் அதிரடி நகர்வுகளின் பாகமாக உள்ளது.

பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் ஆளுநர், ஆண்ட்ரூ பெய்லி இங்கிலாந்து வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை அறிக்கை பத்திரிகையாளர் சந்திப்பின் போது, லண்டன், ஆகஸ்ட் 4, 2022 வியாழக்கிழமை, பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் அமர்ந்திருக்கிறார் [AP Photo / Yui Mok/Pool Photo] [AP Photo/Yui Mok/Pool Photo]

வெள்ளிக்கிழமை வெளியிட்ட அதன் அறிக்கையில், பேங்க் ஆஃப் இங்கிலாந்து குறிப்பிடுகையில், மே மாத நிதிக் கொள்கை அறிக்கை மற்றும் MPC இன் முந்தைய கூட்டத்திற்குப் பின்னர் பணவீக்கம் 'கணிசமாகத் தீவிரமடைந்து உள்ளதாகத் தெரிவித்தது, “ஐரோப்பாவுக்கான எண்ணெய் வினியோகங்களுக்கு ரஷ்யாவின் கட்டுப்பாடுகளும் இன்னும் கூடுதலாகத் தடைகள் விதிக்கும் அபாயம் இருப்பதாலும், மே மாதத்தில் இருந்து எரிவாயு மொத்த விற்பனை விலை ஏறக்குறைய இரண்டு மடங்காகி இருப்பதையே பெரிதும் இது பிரதிபலிக்கிறது,” என்று அந்த அறிக்கைக் குறிப்பிட்டது.

நுகர்வு விலைக் குறியீட்டு (Consumer Price Index - CPI) பணவீக்கம் அக்டோபர் வாக்கில் 13 சதவீதத்திற்கு அதிகமாக உயர்ந்து, “2023 இன் பெரும்பகுதி மிகவும் அதிக மட்டங்களில் இருக்கும்' என்றும், இது எரிபொருள் விலை உச்ச வரம்புகளை நீக்குவதன் மூலம் பெரிதும் உந்தப்படும் என்றும் அனுமானிக்கப்படுகிறது. உள்நாட்டு எரிபொருள் செலவுகள் அக்டோபரிலும் மீண்டும் ஜனவரியிலும் கூடுதலாக 65 சதவீதத்திற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி உயர்வுகளுக்கான கோரிக்கைகளைக் கட்டுப்படுத்துவதே அதன் முக்கிய கவலை என்பதை பேங்க் ஆஃப் இங்கிலாந்து தெளிவுபடுத்தி விட்டது. வேலைவாய்ப்பின்மை வெறும் 3.8 சதவீதத்தில் இருக்கையில் வேலை இடங்களோ 'வரலாற்றிலேயே மிகவும் அதிக மட்டங்களில்' உள்ளன என்று அதன் ஆளுநர்கள் குறை கூறினர். முக்கிய துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையுடன் சேர்ந்து, இது 'அடியிலிருக்கும் பெயரளவிலான கூலி உயர்வை' அதிகமாக ஊக்கப்படுத்தியதுடன், “சமீபத்திய சம்பளத் தீர்வுகளில் [பரந்த] அதிகரிப்பையும் ஊக்கப்படுத்தி வந்தது.

சம்பளங்கள் பணவீக்கத்தில் இருந்து மிகவும் பின்தங்கி உள்ள நிலையில், இந்த பெருந்தொற்றுக்கு முன்னர் 3.5 சதவீதமாக இருந்த தனியார் துறை சம்பள உயர்வுகளுடன் ஒப்பிடுகையில் தனியார் துறை சம்பள உயர்வுகள் 5 சதவீதத்திற்கு மேல் இருப்பதாக பேங்க் ஆஃப் இங்கிலாந்து எச்சரிக்கை மணி ஒலித்தது. மே மாதம் வரையிலான மூன்று மாதங்களில் 1.8 சதவீதமாக இருந்த பொதுத் துறை சம்பளம் 4 சதவீதத்திற்கு அதிகரிக்க இருப்பதாக அது எச்சரித்தது.

குறிப்பிடத்தக்க வகையில், 'அடுத்த பன்னிரெண்டு மாதங்களில் வணிகங்கள் சம்பள ஒப்பந்தங்களை சுமார் 6 சதவீதம் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக' முதலாளிமார்களைப் பற்றி பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் ஆய்வறிக்கை 'அறிவுறுத்தியது', இது தற்போதைய சில்லறை விற்பனை விலை (RPI) பணவீக்க குறியீட்டு அளவில் பாதிக்கும் குறைவாகும், இருப்பினும் பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் நெஞ்சை நிமிர்த்த போதுமானதாக உள்ளது.

மந்தநிலைக் கொள்கைகள் மூலம், குறிப்பாக வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பை அடுத்தாண்டு குறைந்தபட்சம் 600,000 க்கு கொண்டு வருவதன் மூலமாக மட்டுமே, 'கூலி அதிகரிப்பின் அழுத்தத்தை' எதிர்த்துப் போராட முடியும் என்று அந்த வங்கி விவரித்தது.

வெளிப்புற மற்றும் உள்நாட்டு 'அதிர்வுகளால்' பொருளாதாரத்திற்கு ஏற்படக் கூடிய அபாயங்களை, வங்கியின் ஆளுநர்கள் 'விதிவிலக்காக மிகப் பெரியது' என்று விவரித்தனர்.

இந்த பனிப்பந்தை அச்சுறுத்தி வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் தன்னிச்சையான திடீர் நடவடிக்கைகளின் அலை அதிகரித்து வருவதற்கு விடையிறுப்பாக, வட்டி விகிதங்களை உயர்த்துவதில், பேங்க் ஆஃப் இங்கிலாந்து, நிதியச் சந்தைகள், பெருநிறுவன பொதுக் குழுக்கள் மற்றும் வங்கிகளுக்குக் ஆணைகளை வழங்கி வருகிறது. அதன் பாரபட்சமற்ற பொருளாதார அறிவிப்புகள் என்று கூறப்படுவது ஒரு வர்க்கப் போர் திட்டநிரலாக உள்ளன.

1) இந்த பெருந்தொற்றின் போது பெருநிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ட்ரில்லியன் கணக்கான பவுண்டுகளை மத்திய வங்கிகள் வழங்கியதன் மூலமும், 2) எரிபொருள் மற்றும் பண்டங்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் பினாமி போர் மூலமாகவும், மற்றும் 3) நிதியத் தன்னலக்குழுக்கள் முன்னோடி இல்லாத வகையில் இலாபமீட்டி உலகளவில் சொத்து விலைகளை ஊதிப் பெரிதாக்கியதன் மூலமும், உலகளாவிய இந்தப் பணவீக்க நெருக்கடிக்குப் பணம் செலுத்த தொழிலாள வர்க்கம் நிர்பந்திக்கப்பட உள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் மீது நேரடித் தாக்குதல் நடத்துவதன் மூலம், ஆளும் உயரடுக்கு, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராகப் போர் தொடுக்க ஆகும் பாதுகாப்புத் துறைச் செலவினங்களில் மிகப் பெரிய அதிகரிப்பை நிர்பந்திக்க உத்தேசித்துள்ளது.

நிதிக் கொள்கையை அது இறுக்குவது, எல்லாவற்றிற்கும் மேலாக, வர்க்கப் போராட்டம் நசுக்கப்பட்டிருந்த பல தசாப்தங்களுக்குப் பின்னர் நூறு ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடும் வேலைநிறுத்தங்களின் வெடிப்புக்கு ஒரு விடையிறுப்பாகும்.

ஏற்கனவே இரயில்வே துறை, தபால் துறை மற்றும் பிரிட்டிஷ் டெலிகாம் தொழிலாளர்கள் மற்றும் பேருந்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன, மேலும் இந்த வாரம் மூன்று அமசன் கிடங்குகள் மற்றும் ஒரு உணவு உற்பத்தி நிறுவனத்தில் சம்பளம் தொடர்பாக தன்னிச்சையான திடீர் வேலைநிறுத்தங்கள் நடத்தப்பட்டன. செவிலியர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், தீயணைப்புத் துறையினர், விரிவுரையாளர்கள், அரசு பொதுப்பணி துறைப் பணியாளர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் கவுன்சில் பணியாளர்களும் மிகக் குறைவாக 2 சதவீத சம்பள உயர்வுகளை வழங்கியதும், அது மில்லியன் கணக்கானவர்களை விளிம்புக்குத் தள்ளும் என்பதால், வேலைநிறுத்தம் செய்ய தீர்மானமாக உள்ள நிலையில், இந்த இயக்கம் இன்னும் பரவும் என்று ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது.

ஆற்றொணா நிலையில் உள்ள தொழிலாளர்களைக் கடுமையான கூடுதல் சம்பள வெட்டுக்களை ஏற்க நிர்பந்திப்பதன் மூலம் அல்லது பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் பணப் பிரச்சினைகளை முகங்கொடுக்க செய்வதன் மூலம் அதிகரித்து வரும் போர்குண அலையை எதிர்கொள்வதே வங்கியின் நோக்கமாகும்.

பணவீக்கத்திற்கு தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கைகள் மீது பழிப் போடப்பட்டு வருகின்ற அதேவேளையில், நிஜமான காரணமோ மலைப்பூட்டும் அளவுக்குப் பெருநிறுவன இலாபங்களின் அதிகரிப்பாகும். பெருந்தொற்று மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் பினாமிப் போர் ஆகியவற்றுக்கு இடையே, இலாபத்திற்கான வெறியே பணவீக்க அதிகரிப்பில் சுமார் 60 சதவீதத்திற்கு பொறுப்பாகின்றன.

உலகின் ஐந்து மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை இல்லாத அதிகபட்சமாக அண்மித்து 50 பில்லியன் பவுண்டுகளை இலாபமாக அறிவித்துள்ளன, ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே பிரிட்டிஷ் பெட்ரோலியம் 6.9 பில்லியன் பவுண்டும் மற்றும் ஷெல் நிறுவனம் 11.5 பில்லியன் டாலர் அறிவித்திருப்பதும் இதில் உள்ளடங்கும். இலண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் 350 நிறுவனங்கள் இந்தப் பெருந்தொற்றுக்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021 இல் 73 சதவீத இலாப அதிகரிப்பைக் கண்டதாக Unite சங்கத்தின் ஜூன் 2022 அறிக்கை குறிப்பிடுகிறது. பிரிட்டன் அளவில் நிறுவனங்களின் இலாபம் அக்டோபர் 2021 இல் இருந்து மார்ச் 2022 வரையிலான ஆறு மாதங்களில் 11.74 சதவீதம் அதிகரித்தது.

இதற்கு நேர்மாறாக, 2008 நிதி நெருக்கடிக்கு முன் இருந்த சராசரி கூலிகளை விட இன்று அதிகமாக இல்லை, ஆண்டுக்கு 9,200 பவுண்டு குறைவாக உள்ளது. இதன் விளைவாக, கட்டுப்பாடின்றி அதிகரித்து வரும் பணவீக்கம் என்பது என்ன அர்த்தப்படுத்துகிறது என்றால், ஜோசப் ரவுண்ட்ரீ அமைப்பின் தகவல்படி, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் 'வெப்பமூட்டலோ அல்லது உணவோ' இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, ஏழு மில்லியன் குடும்பங்கள் 'பயமுறுத்தும் நிதியாண்டு பயத்தில்' வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

குறைந்த வருமான குடும்பங்கள் 2022 இல் 12.5 பில்லியன் பவுண்டை புதிய கடனாகப் பெற்றுள்ளன, கந்து வட்டிக்காரர்கள் மற்றும் வீட்டுவீடு கடன் கொடுப்பவர்களிடம் 3.5 பில்லியன் பவுண்டு கடன் பெறப்பட்டிருப்பதும் இதில் உள்ளடங்கும். இப்போது அவர்கள் அதிக கடன் தவணைகளைத் திரும்பச் செலுத்தவும் பிழிந்தெடுக்கப்படுவார்கள். இந்த வட்டிவிகித அதிகரிப்பு அடமானக் கடன் பெற்றிருப்பவர்கள் மீதும் சுமத்தப்படும். ஏற்கனவே சராசரி வீட்டு விலைகள் சராசரி ஆண்டு வருமானத்தை விட ஒன்பது மடங்கு அதிகமாக உள்ள நிலையில், மில்லியன் கணக்கானவர்கள் அவதிப்படப் போகிறார்கள்.

பாதிக் குடும்பங்கள் ஒரு மாத வருமானத்திற்கும் குறைவாகவே சேமிப்பைக் கொண்டுள்ளன, 1.3 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களில் சேமிப்பே இல்லை. அதிகரித்து வரும் உணவு விலைகளோடு சேர்ந்து, இந்த குளிர்காலத்தில் அண்மித்து 4,000 பவுண்டுக்குப் பிரிட்டன் எரிசக்தி கட்டணங்கள் இரட்டிப்பாக உள்ள நிலையில், சேமிப்பு இல்லாத குடும்பங்களின் எண்ணிக்கை 5.3 மில்லியனை எட்டும். 1.2 மில்லியன் குடும்பங்களை பொறுத்த வரையில், உணவு மற்றும் எரிசக்தி கட்டணங்கள் மட்டுமே கூட அந்தக் குடும்பச் செலவுகளுக்கான வருமானங்களை விஞ்சிவிடும்.

இந்த வெடிப்பார்ந்த சூழ்நிலையில், வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்தி ஒடுக்குவதன் மூலம் மற்றும் விற்றுத் தள்ளப்பட்ட சம்பள உடன்படிக்கைகளுக்கு உடன்படுவதன் மூலம் நடைமுறையில் உள்ள சம்பள வெட்டுக்களைத் திணிப்பதற்காக ஆளும் வர்க்கம் தொழிற்சங்கங்களை நம்பி உள்ளது. இது மே மாதத்துடன் முடிந்த மூன்று மாதங்களில் நிஜமான கூலிகளில் 3.7 சதவீத சரிவுக்கு இட்டுச் சென்றது.

ஆனால் இதுவே தொடர்ந்து கொண்டிருக்க முடியாது. தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியே பாரிய சமூகக் கோபம் வெடிக்க அச்சுறுத்துகிறது.

வட்டி விகிதங்களை உயர்த்துவது ஆளும் வர்க்கத்தின் தாக்குதலின் ஓர் அம்சம் மட்டுந்தான். இந்தப் பழமைவாத அரசாங்கம் 1930 களுக்குப் பின்னர் மிகவும் வலதுசாரி கொள்கைத் திட்டநிரலை வடிவமைப்பதற்காக அதன் தலைமைத்துவத்துக்கான போட்டியை பயன்படுத்தி வருகிறது, மேலும் வேலைநிறுத்தம் மற்றும் போராட்ட உரிமைக்கு எதிராக பல்வேறு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த திட்டநிரலை செயல்படுத்துவதில் தொழிற் கட்சியின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. அதன் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் பொதுவாக வேலைநிறுத்தங்களை கண்டனம் செய்வது போலவே 'மாயஜால பண மர பொருளாதாரத்தை' (magic money tree economics) கண்டிக்கிறார். பிபிசி ரேடியோவின் மெர்சிசைட் உடன் பேசிய அவர், தொழிற் கட்சியானது 'நாங்கள் நேட்டோவுக்கு அசைக்க முடியா ஆதரவளிக்கிறோம் என்பதில் தெளிவாக உள்ளது, நாங்கள் வெட்கப்படுவதற்கு இடமின்றி வணிகத்திற்கு ஆதரவாக இருக்கிறோம், நாங்கள் வணிகத்துடன் இணைந்து செயல்படுகிறோம் என்பதில் தெளிவாக உள்ளோம்' என்றார்.

தொழிலாள வர்க்கம் வெறுமனே ஏதோவொரு முதலாளிக்கு எதிரான போராட்டத்தை முகங்கொடுக்கவில்லை மாறாக இந்த ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கம், அதன் அரசு மற்றும் அதன் கட்சிகளுக்கு எதிரான போராட்டத்தை முகங்கொடுக்கிறது.

ஆளும் வர்க்கத்தின் இந்த சதியைத் தோற்கடிக்க, தொழிலாளர்கள் ஒவ்வொரு வேலையிடத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதன் மூலம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமான ஒரு தொழில்துறை தாக்குதலையும், அத்துடன் பெருவணிகக் கட்சிகளுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட ஓர் அரசியல் போராட்டத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

டோரிகள் மற்றும் தொழிற் கட்சியின் இரக்கமற்ற திட்டங்களை அம்பலப்படுத்தி தோற்கடிக்கவும், சிக்கன நடவடிக்கை, தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தப் பெருந்தொற்று மற்றும் அதிகரித்து வரும் உலகப் போர் அபாயத்திற்கு ஓர் உண்மையான சோசலிச மாற்றீட்டுக்கான போராட்டத்தை முன்னெடுக்கவும் சோசலிச சமத்துவக் கட்சி உடனடியாக உடனடியாக ஒரு பொதுத் தேர்தலைக் கோரி வருகிறது.

Loading