தொழிலாளர்கள் சரமாரியாகப் பிரச்சாரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மன்னர் சார்லஸ் உரையாற்றுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்கள்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் நடந்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ் கலந்து கொண்டார். பிரபுக்கள் அவையின் சபாநாயகர் பரோன் ஜான் மெக்பால் மற்றும் மக்களவை சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்லின் ஆர்ப்பரிப்பான உரைகளுடன் அவர் வரவேற்கப்பட்டார், இவர்கள் இருவருமே தொழிற்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவார்கள்.

King Charles III and Camilla, the Queen Consort sit, in Westminster Hall, where both Houses of Parliament met to express their condolences, following the death of Queen Elizabeth II, in London, Monday September 12, 2022 [AP Photo/Dan Kitwood/Pool Photo via AP]

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஆமோதித்த ஒரு 'பணிவான உரையை' அவர்கள் வழங்கினார்கள், அதே நேரத்தில் சார்லஸ் ஓர் உயரமான மேடையில், புதுமையான ஆடைகள் அணிந்த பிரமுகர்கள் சூழ அமர்ந்திருந்தார், அதில் மன்னரின் யோமென் பாதுகாவலரும் மற்றும் மரியாதைக்குரிய கார்ப்ஸ் ஆஃப் ஜென்டில்மேன் அட் ஆர்ம்ஸூம் உள்ளடங்குவார்.

ஹோய்லின் வார்த்தைகளில், 'எப்போதும் மாறிவரும் உலகில் ஸ்திரத்தன்மையின் சின்னமாக' விளங்கும் 'நம் அரசியலமைப்பு முடியாட்சியைப்' புனிதப்படுத்துவதற்காக அந்த விழா இருந்தது. 'புகழ்பெற்ற புரட்சியின்' 300வது நினைவாண்டு உட்பட, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளைக் குறிக்கும் வகையில், மறைந்த மகாராணி பல முறை வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு சென்றிருந்ததாக அவர் குறிப்பிட்டார். நிகழ்வின் கட்டுக்கடங்கா எரிச்சலூட்டும் தன்மைக்கு ஒரு சான்றாக, ஹோய்ல் கூறுகையில், 'அவர் மாட்சிமைக்கு ஓர் உரை வழங்குவதன் மூலம் புரட்சிகளைப் பிரிட்டிஷ் கொண்டாடி இருக்கலாம், மாறாக அந்த புரட்சிகள் நம் அரசியலமைப்பு சுதந்திரங்களுக்கு வழி வகுத்தன.'

கடந்த வாரம் இராணியின் மரணத்திற்கு அடுத்த சில நாட்களில் சுட்டிக் காட்டப்பட்ட பெரும்பாலான வரலாற்றுக் குறிப்புகளைப் போலவே, ஆளும் வர்க்கம் குழம்பி போயிருப்பதற்கு அந்த உரை சிறப்பான ஒன்றாக இருந்தது. புகழ்பெற்ற புரட்சி என்பது 1688 போர் வெற்றியைக் குறிக்கிறது, அது ஆரஞ்சு ஆஃப் வில்லியம் இங்கிலாந்து மீது படையெடுத்ததுடன் தொடங்கி இரண்டாம் கத்தோலிக்க ஜேம்ஸைப் பதவியில் இருந்து வெளியேற்றியது, பின்னர் எதிர்தரப்பு மூன்றாம் கிங் வில்லியம்ஸ் மற்றும் மேரி இராணி நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டங்களை நிலைநிறுத்துவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஆகவே வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் கொண்டாடப்படுவது முடியாட்சியை புனிதப்படுத்துவதற்கான மற்றும் அதன் சொந்த பலத்தை மீளவலியுறுத்துவதற்கான ஒரு வழிவகையாகப் பயன்படுத்துவதற்கான பிரிட்டிஷ் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் திறமையாகும்.

இது தான் இராணியின் மரணத்தை ஒட்டி நடந்த எல்லா அன்றாட சடங்குகளின் இன்றியமையாத செயல்பாடாக உள்ளது, அவை பிரிட்டன் ஊடகங்களில் செறிவூட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளன, அந்த நிகழ்வுகள் எவ்வளவு கேலிக்குரியதாக இருந்தாலும் அவை எப்போதுமே புனிதமான தொனியில் வழங்கப்பட்டு வருகின்றன.

சார்லஸ் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அசெஷன் கவுன்சில் முதன்முறையாக படமாக்கப்பட்டது, அதன் போது தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பிரைவி கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் கூடி, சார்லஸ் தான் மன்னர் என்று அவரின் சொந்த கையெழுத்தின் கீழ் இருந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.

1066 இல், ரோஜாக்களின் போர்கள் மற்றும் புகழ்பெற்ற புரட்சி என இந்தப் பிரச்சினையில் சிந்தப்பட்ட இரத்தத்தை விட்டு விட்டு, அதெல்ஸ்டன் மன்னருக்குப் பின்னர், மூன்றாம் சார்லஸ் அமைதியான மாற்றங்களின் வரிசையில் சமீபத்தியவர் என்பது போல, வர்ணனையாளர்கள் 'ஆயிரம் ஆண்டுகள் பழமையான' ஆங்கில முடியாட்சி மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான அந்த பிரகடனத்தின் தோற்றுவாய் குறித்து குறிப்பிட்டனர்.

பிரகடனத்தில் லிஸ் ட்ரஸ் மற்றும் முன்னாள் பிரதமர்களான ஜோன் மேஜர், டோனி பிளேயர், கோர்டன் பிரவுன், டேவிட் கேமரூன், தெரசா மே மற்றும் போரிஸ் ஜோன்சன் மற்றும் தொழிற்கட்சி தலைவர் சர் கீர் ஸ்டார்மர் ஆகியோர் கையெழுத்திட்டனர். முன்னாள் தொழிற்கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் அரசியல் சங்கடத்தைத் தவிர்ப்பதற்காக அதில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் நடந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

ஸ்காட்லாந்தின் ஜேம்ஸ் ஆறாம் ஜேம்ஸை இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸாகவும், அவ்விதத்தில் 1604 இல் பிரிட்டன் அரசராகவும் அங்கீகரித்ததில் இருந்து பெரிதும் இந்த பிரகடனம் வரையப்பட்டிருந்தது. அரசர்களின் புனித உரிமையை வலியுறுத்தும் வகையில், 'அரசர்களும் மகாராணிகளும் யாரால் ஆட்சி செய்யப்படுகிறார்களோ' அந்த கடவுளிடம் அது மன்றாடுகிறது, ஆலிவர் குரோம்வெல் தலைமையில் 1642-51 ஆங்கில உள்நாட்டுப் போரின் உண்மையான புரட்சிகர நிகழ்வுகளின் போது, முதலாம் சார்லஸ் தலை துண்டிக்கப்பட்டதன் மூலம் நடைமுறையில் அது தீர்க்கமாக நிராகரிக்கப்பட்டது. 1660 இல் இரண்டாம் சார்லஸின் கீழ் முடியாட்சி மீட்டமைக்கப்பட்டதன் மூலமாக மட்டுமே அந்தப் பிரகடனம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது.

1649 ஜனவரியில் முதலாம் சார்லஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இதே வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் மூன்றாம் சார்லஸ் நாடாளுமன்றத்திற்கு உரை நிகழ்த்தினார் என்றாலும் கூட, முடிவில்லா அந்த பகட்டாரவாத காட்சிகளின் போது யாருமே உள்நாட்டுப் போர் குறித்து ஒன்றுமே குறிப்பிடவில்லை.

அரசின் வலிமை, தேசத்தின் முதன்மை, பரந்த சமத்துவமின்மைகளால் குணாம்சப்பட்ட இப்போதைய இந்த சமூக ஒழுங்கின் நிரந்தரத் தன்மை என்று கூறப்படுவது, இங்கே 'பாரம்பரியத்திற்கும்' மற்றும் இந்த பாரம்பரியங்களை உள்ளடக்கிய ஆளும் உயரடுக்கிற்கும் தேவைப்படும் மரியாதை மற்றும் மதிப்பை ஒவ்வொருவரும் வழங்க வேண்டும் என்பதையுமே இந்த முடிவில்லா ஆடம்பரம் மற்றும் கொண்டாட்டத்தில் எடுத்துக் காட்டப்படுகிறது.

முடியாட்சியைப் பயன்படுத்துவதையும், பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் பழைய நிலப்பிரபுத்துவ ஒழுங்கின் சின்னங்களையும் குறித்து ட்ரொட்ஸ்கி மிகவும் பலமாக எழுதி உள்ளார். 'முதலாளித்துவ வளர்ச்சி பாதையை எடுத்த முதல் நாடாகவும்', 'பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகச் சந்தையின் மேலாதிக்கத்தை' உறுதிப்படுத்தி இருந்ததாகவும் பிரிட்டனின் நிலைப்பாட்டைக் குறிப்பிட்ட அவர், இது 'பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தில் உயர்மட்ட அடுக்குகளுக்கான ஒரு தனிச்சலுகையான அந்தஸ்தை உருவாக்கவும், அவ்விதத்தில் வர்க்க விரோதங்களை மழுங்கடிக்கவும்', அவ்விதத்தில் பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியதையும் அவர் குறிப்பிட்டார்.

அதன் கடந்த கால நிலப்பிரபுத்துவத்துடன் முதலாளித்துவம் கொண்டிருந்த உறவுகளை நோக்கி திரும்பிய ட்ரொட்ஸ்கி பின்வருமாறு கவனித்தார்:

'பிரிட்டிஷ் முதலாளித்துவம் பண்டைய அமைப்புகளின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்தது, ஒருபுறம் அவற்றைத் தழுவியவாறு, மறுபுறம், படிப்படியாக, இயற்கையாக, அவற்றை 'ஒரு பரிணாம வழியில்' அதற்கு கீழ்படியச் செய்தது. 17 ஆம் நூற்றாண்டின் புரட்சிகர எழுச்சிகள் ஆழமாக மறக்கடிக்கப்பட்டன. இது தான் பிரிட்டிஷ் பாரம்பரியம் என்று அழைக்கப்படுகிறது. அதன் அடிப்படை அம்சம் பழமைவாதமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, பழைய கட்டிடங்கள் மற்றும் பழைய நம்பிக்கைகளை அது அழிக்கவில்லை, மாறாக பழைய அரச மற்றும் உன்னத கோட்டையை வணிக நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப படிப்படியாக மாற்றியமைத்துள்ளது என்பதில் பிரிட்டிஷ் முதலாளித்துவம் பெருமை கொள்கிறது. இந்த கோட்டையில், அதன் மூலைகளில், அதன் சின்னங்கள், அதன் அடையாளங்கள், அதன் பொக்கிஷங்கள் இருந்தன, முதலாளித்துவம் அவற்றை அகற்றவில்லை. அது அதன் சொந்த ஆட்சியைப் புனிதப்படுத்த அவற்றைப் பயன்படுத்தியது. அது மேலிருந்து அதன் பாட்டாளி வர்க்கத்தின் மீது கலாச்சாரப் பழமைவாதத்தின் கனமான மூடியால் அடைத்தது. (ட்ரொட்ஸ்கி எழுதிய “நாம் எந்த கட்டத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறோம்? கம்யூனிஸ்ட் கட்சியின் பலமும் ஒரு நாட்டில் கலாச்சார மட்டமும்”, நான்காம் அகிலம் இதழில், நியூ பார்க், இலண்டன், கோடை 1964.)

வலதுசாரி பழமைவாதி டானியல் ஹன்னன் செப்டம்பர் 10 இல் Telegraph இல் எழுதிய ஒரு கட்டுரையில், “அரசாங்கத்தை சட்டபூர்வமாக்குவதற்கும், அரசின் முக்கிய செயல்பாடுகளை உயர்த்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் மற்றும், பகுப்பாய்வின் இறுதியில், உள்நாட்டுப் போரின் சாத்தியக்கூறைத் தடுக்கவும் ஓர் அரசியலமைப்பு முடியாட்சி உள்ளது” என்று வலியுறுத்தி, ஒரே வாக்கியத்தில் இந்த வரலாற்று மதிப்பீடு எதிர்பாராமல் உறுதி செய்யப்பட்டது.”

இருப்பினும் அதிருப்தி வெளிப்படும் போது, பின் வேண்டுமென்றே மிரட்டல், தணிக்கை மற்றும் அடக்குமுறைக்கு வழி வகுக்கிறது. அரச எதிர்ப்பு, சோசலிச மற்றும் குடியரசு எதிரான பரவலான உணர்வுகளைக் கொண்ட ஒவ்வொரு பொது வெளிப்பாடும், பொலிஸால் மவுனமாக்கப்பட்டுள்ளன.

மகாராணியின் சவப்பெட்டி வரவிருந்த செயின்ட் கில்ஸ் கதீட்ரலுக்கு வெளியே, 'ஏகாதிபத்தியம் ஒழிக, முடியாட்சியை அகற்று' என்ற பதாகை வைத்திருந்ததற்காக, 'அமைதி மீறல் தொடர்பாக' ஒரு பெண் எடின்பேர்க்கில் கைது செய்யப்பட்டார். அதே 'குற்றத்திற்காக' 74 வயது ஒருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது, அந்த அரச ஊர்வலத்தின் போது '[இளவரசர்] ஆண்ட்ரூ, நீங்கள் ஒரு நோய்வாய்ப்பட்ட முதியவர்' என்று அழைத்ததற்காக ஓர் இளைஞரும் கைது செய்யப்பட்டார். ஆக்ஸ்போர்டில், சைமன் ஹில் என்ற ஒருவர், சார்லஸின் பிரகடன வாசிப்பின் போது, “யார் அவரைத் தேர்ந்தெடுத்தார்?”என்று கூச்சலிட்டதும், “ஒழுங்குமீறல்' க்காக கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். எம்.பி. களுக்குச் சார்லஸ் உரையாற்றிக் கொண்டிருந்த போது 'என் அரசர் இல்லை' என்று குறிப்பிடும் ஒரு பதாகை வைத்திருந்ததற்காக இலண்டனில் நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு பெண் வெளியே அனுப்பப்பட்டார்.

The King's Body Guard of the Yeomen of the Guard march ahead of the arrival of King Charles III and Camilla, the Queen Consort, at Westminster Hall, where both Houses of Parliament met to express their condolences, following the death of Queen Elizabeth II, in London. Former Labour Party leader Jeremy Corbyn is circled in the bottom left of the photo. September 12, 2022 [AP Photo/Ben Stansall/Pool Photo via AP]

'இந்த குளிர்காலத்தில் இறக்கும் ஒரே வயதான பெண்மணி இவர் மட்டுமே இல்லை' என்று மகாராணியைப் பற்றிய அவரது கூர்மையான கருத்துக்காக பிரபல ஸ்காட்டிஷ் நகைச்சுவை நடிகர் கெவின் பிரிட்ஜஸை ஊடகங்கள் கண்டித்திருப்பது அடியிலுள்ள கவலைகளைச் சுட்டிக் காட்டுகிறது.

டோரி அரசாங்கத்தின் சிறப்பான முயற்சிகள் இருந்தாலும், தொழிற்கட்சி சார்லஸின் காலடியில் மும்முரமாக மண்டியிட்டுள்ளது, RMT இரயில்வே தொழிற்சங்கம் மற்றும் CWU தபால் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 'மரியாதை' செலுத்துவதற்காக வேலைநிறுத்தங்களைக் கைவிட அழைப்பு விடுத்துள்ளன மற்றும் ஊடகங்களின் செறிவூட்டப்பட்ட 'மதிப்பார்ந்த' செய்திளும் உள்ளன இவற்றுக்கு மத்தியில், பிரிட்ஜஸின் கருத்து, இந்த அரச சார்பு பிரச்சாரப் பேரலையானது ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அமைப்பு முறையை மூழ்கடிக்கும் மக்கள் எதிர்ப்புக்கு முன்னால் ஏன் ஜெயிக்காது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

அதே 1921 உரையில், ட்ரொட்ஸ்கி, 'சமூகளவில் பார்த்தால், மனித நனவு பயத்துடன் பழமைவாதமானது மற்றும் மெதுவாக நகர்கிறது... வரலாறு அதன் பலமான சாட்டையால் மக்களை விளாசிய போது தவிர, இதுவரையிலான வர்க்கங்களும் மக்களும் தீர்க்கமான முன்முயற்சியைக் காட்டியதில்லை என்று நாம் கூறுகையில் நாம் வெளிப்படையாக பேசுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

மில்லியன் கணக்கானவர்களைப் பட்டினியால் அச்சுறுத்தி வரும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் பலமான சாட்டையடியால் தொழிலாள வர்க்கம் இன்று தீர்க்கமான முன்முயற்சியை நோக்கி உந்தப்பட்டு வருகிறது, இது ஏற்கனவே கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களில் இல்லாத மிகப் பெரிய வேலைநிறுத்த அலையைத் தூண்டிவிட்டுள்ளது. சம்பாதிக்காமல் சேர்த்த மிகப் பெரியளவிலான செல்வ வளத்தின் இறுதிப் பிரதிநிதிகளுக்கு மரியாதைச் செலுத்தும் கொண்டாட்டம் தொடரும் வரையில், ஒரு கண்ணியமான வேலை, கல்வி, மருத்துவக் கவனிப்பு மற்றும் தவறான சமூக வர்க்கத்தில் பிறந்ததற்காக வாழ்க்கைத் தேவைகள் யாருக்கும் மறுக்கப்படாத ஒரு சமூகத்திற்காக மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் அதிகரித்த கோரிக்கையோடு அது அதை விட அதிகமாக மோதலைச் சந்திக்கும்.

Loading