இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம்: பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு பெரிய அரசியல் நெருக்கடி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஏழு தசாப்தங்களாக ஐக்கிய இராஜ்ஜியத்தின் தலைவராக அரியணையில் இருந்த இராணி II எலிசபெத் தனது 96 வயதில் காலமானார். அவரது மரணம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு கடுமையான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியின் போது நிகழ்ந்துள்ளது. இதில் பெருமந்தநிலைக்குப் பின்னர் வாழ்க்கைத் தரங்களின் ஆழமான சரிவு, ஐரோப்பாவின் பிரதான நிலப்பரப்பில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ பினாமிப் போர் மற்றும் பொது வேலைநிறுத்தமாக வெடிக்க அச்சுறுத்தும் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சி அலை ஆகியவை அடங்கும்.

இராணி தனது 2015 ஆம் ஆண்டு டெவோன்போர்ட்டில் HMS Ocean கப்பலை மீண்டும் அர்ப்பணிக்கும் விழாவின் போது வருகை தந்தார் [Photo by Joel Rouse/ Ministry of Defence/Open Government Licence v3.0]

ஆளும் வர்க்கம் இப்போது தேசிய ஒற்றுமை பற்றிய கட்டுக்கதையை முன்னிறுத்தவும் சமூக மோதலை அடக்குவதற்கு அது தங்கியிருந்த நாட்டின் பிரபலமான பிரதிநிதி இல்லாமல் இந்த தவிர்க்கமுடியாத புயலை எதிர்கொள்கிறது.

அரசு தலைவராக தனது பாத்திரத்தில், இராணி உத்தியோகபூர்வமாக 15க்கும் குறைவில்லாத பிரதமர்களை நியமித்து, அவர்களுடன் வாராந்திர சந்திப்புகளை நடத்தினார். அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, முதலாளித்துவத்திற்கு அவர் செய்த இறுதிச் செயல், லிஸ் ட்ரஸை பிரதமராக நியமித்ததாகும். அவ்வாறு செய்வதன் மூலம், தொழிலாள வர்க்கத்தின் மீது போரை நடத்துவதே அதன் பணியாக இருக்கும் ஒரு சட்டவிரோத மற்றும் இழிவான அரசாங்கத்திற்கு அவர் அதிகாரம் அளித்தார்.

இராணியின் பங்கின் முக்கியத்துவம் டெலிகிராப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அது கூறுகிறது: “அரசியல் அதிகாரத்தின் சுமூகமான மற்றும் அமைதியான பரிமாற்றங்களை உறுதிப்படுத்த மகுடம் உதவ முடியும்... இந்த வாரம் அதை நாம் மீண்டும் பார்த்தோம். மற்ற நாடுகளில் அரசியல் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்கக்கூடிய நிர்வாக அதிகாரத்தின் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதே மகாராணியின் கடைசி பொதுப் பணியாக இருந்தது.

கலவரத்தை ஏற்படுத்தாமல் ஒரு வாரத்தில் எத்தனை நாடுகள் தங்கள் தலைவரையும் பிரதமரையும் தடையின்றி மாற்ற முடியும்?... நாட்டின் ஸ்திரத்தன்மை நாட்டின் இதயத்தில் மகாராணியின் இருப்புக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.”

அவரது மரணத்துடன், கிரீடம் அவரது மகன் சார்லஸ் III இன் தலைக்கு செல்கிறது. 73 வயதில், அவர் அரியணையில் ஏறிய மிக வயதானவரும் மக்கள் ஆதரவு இல்லாத வேறொருவரும் இருக்கவில்லை. அவரது பதவியேற்பு, பிரிட்டனிலும் உலகெங்கிலும் உள்ள வாழ்க்கையின் யதார்த்தமான ஆழமான மற்றும் சரிசெய்ய முடியாத சமூக மற்றும் அரசியல் பிளவுகளை மறைக்க சிறிதும் இடம்விட்டு வைக்கவில்லை.

பிரிட்டிஷ் ஊடகங்களின் தவிர்க்க முடியாத சம்பிரதாய துதிபாடல்களுக்கு மத்தியில், ஆளும் உயரடுக்கு எதிர்கொள்ளும் சிக்கல்களின் அளவு ஒப்புக் கொள்ளப்படுகிறது.

கார்டியனில் மார்ட்டின் கெட்டில் பின்வருமாறு எழுதினார். “இந்த அரச வம்ச சம்பவம் கட்டவிழ்த்துவிடும் பிரிட்டிஷ் வாழ்க்கையில் ஏற்படவுள்ள எழுச்சியைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். எலிசபெத் II கண்கூடாக, தன்னை உடைத்துக்கொள்ளும் ஒரு தேசத்தில், ஒரு குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆனால் மிகவும் பயனுள்ள ஒருங்கிணைக்கும் சக்தியாக 70 ஆண்டுகளை கழித்தார். அவரது மரணம் அந்த சக்தியை அகற்றிவிடுவதுடன், அவருடைய வாரிசுகளால் அதை புதுப்பிக்க முடியும் என்று கருத முடியாது. அதன் சொந்த வழியில், இந்த வாரிசுக்கு நவீன பிரிட்டன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சோதனைகளில் ஒன்றாக இருக்கும்.

பைனான்சியல் டைம்ஸ் பின்வருமாறு கூறியது. “இராணி விட்டுச் செல்லும் இராஜ்யம் அவரது சொந்த அமைப்பை விட மிகப் பெரிய கேள்விகளை எதிர்கொள்கிறது. பிரிட்டன் அதன் சொந்த பலத்தை இழந்து, அடுத்த பல தசாப்தங்களுக்கு உலகில் தனது இடத்தை வரையறுக்க முயன்றுகொண்டே இருக்கிறது. பல அரசு அமைப்புகள் காலாவதியானதாகவோ அல்லது களங்கப்படுத்தப்பட்டதாகவோ தோன்றுகின்றன. மேலும் 315 ஆண்டுகள் பழமையான பெரிய பிரித்தானியாவின் உயிர்வாழ்வு முற்றிலும் உறுதியானதாக இல்லை.

அரசியாக, எலிசபெத் குறிப்பாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு நெருக்கடியான காலங்களில் சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றினார். 1936 இல் அவரது மாமா எட்வார்ட் VIII பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது அவர் அரியணையில் அமர்த்தப்பட்டார். இதற்குக் காரணம், எட்வார்ட்டினதும் அவரது காதலி வாலிஸ் சிம்ப்சனினதும் நாஜி அனுதாபங்கள் முடியாட்சியை இழிவுபடுத்துவதாகவும் சமூக மற்றும் அரசியல் மோதல்களைத் தூண்டுவதாகவும் அச்சுறுத்தியது.

1953 இல் அவரது முடிசூட்டு விழா, சூயஸ் நெருக்கடிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நீடித்த வீழ்ச்சிக்கும் மத்தியில் நடந்தது. இதனால் அமெரிக்காவால் பிரித்தானியா பின்தள்ளப்பட்டது. பின்னர் அது பொதுநலவாய நாடுகளின் தலைவராக பேரரசில் இருந்து விலகி, மிகவும் நாகரீகமான ஒரு மனிதாபிமான மூடுதிரையை போட்டுக்கொண்டது. எவ்வாறாயினும், அதன் முக்கிய உலகளாவிய நலன்கள் அச்சுறுத்தப்பட்டபோது, பிரிட்டன் மிகவும் கொடூரமாக பதிலளிக்கத் தயாராக இருந்தது. அவர் முதலில் பதவியேற்றபோது கென்யாவின் Mau Mau கிளர்ச்சியை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கியது, பின்னர் வட அயர்லாந்தின் இரத்தக்களரி ஆக்கிரமிப்பு, பால்க்லாந்து தீவுகள் (மால்வினாக்கள்) மீதான மார்கரெட் தாட்சரின் போர் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் பல குற்றவியல் போர்கள் வரை இது பரவியது, 'இராணியை கடவுள் காப்பாற்றுவார்' எனப் பாடிக்கொண்டு பிரிட்டனின் ஆயுதப் படைகள் தமது குற்றங்களை யூனியன் ஜக் கொடியினால் மறைத்துவிட்டன.

முடியாட்சியின் மீதான மதிப்பு மறைகையில், அரச குடும்பத்தின் அபரிமிதமான செல்வத்தை குறைத்துக்காட்டும் ஒரு அரசியல் மறுவடிவமைப்பை அவர் வழிநடத்தி, அதே நேரத்தில் முதலாளித்துவ ஆட்சிக்கு காலத்தால் அழியாத நிரந்தரமான தன்மையைக் கொடுக்கவும், பரம்பரை முறையை சட்டபூர்வமாக்கவும் பயன்படுத்தப்பட்ட தொன்மையான ஆடம்பரத்திலும் விழாவிலும் தன்னால் முடிந்த அளவு கண்ணியத்தை முதலீடு செய்தார். வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்த காலங்களை தவிர, தேசிய ஒற்றுமையின் அடையாளமாக, அவரது இந்தப் பங்கு ஒருபோதும் முக்கியத்துவம் பெற்றதில்லை.

எவ்வாறியினும், 1980 களில் இருந்து, இளைய அரச குடும்பத்தார் செல்வத்தையும் சலுகைகளையும் வெளிப்படையாக காட்டுவதில் இருந்து தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது எனக் கண்டறிந்தனர். முதலில் டயானா, பின்னர் மற்றவர்கள், இந்த உலகின் பெரும் பணக்காரர்களால் ஆடம்பரத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டனர், அதே நேரத்தில் அவர்களின் மரியாதையை இழந்தனர். இராணி இறப்பதற்கு முந்தைய ஆண்டுகளில், இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகானுடன் கடுமையான பகிரங்க பிளவைச் சகித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனெனில் அவர்கள் சர்வதேச பிரபலங்களாக தமக்கான பசுமையான மேய்ச்சல் நிலங்களைத் தேடினர். பின்னர் பில்லியனரான ஜெஃப்ரி எப்ஸ்ரைனின் பாலியல் கடத்தல் வியாபாரத்தில் இளவரசர் ஆண்ட்ரூ ஈடுபட்டமை வெளிப்பட்டது.

இன்று, ஆளும் வர்க்கத்தின் தீவிர ஆசை என்னவென்றால், சார்லஸின் சிம்மாசனத்தில் இருக்கும் நேரம் குறுகியதாக இருக்க வேண்டும், அதனால் கவனமாக வளர்க்கப்பட்ட இளவரசர் வில்லியம் மிகவும் பலவீனமான முடியாட்சியின் பொது பிம்பத்தை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பைப் பெற முடியும் என்பதாகும்.

இந்த மாற்றத்தை எளிதாக்க, இராணியின் மரணத்தைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஒவ்வொரு நிமிடமும் திட்டமிடப்பட்டுள்ளன. Operation London Bridge என்ற நிகழ்வு 12 நாட்கள் உத்தியோகபூர்வ துக்கத்தை உள்ளடக்கியுள்ளதுடன், இதில் அவரது அரசு இறுதிச் சடங்குகள் அடங்கும். இது மீண்டும் ஒருமுறை அரசு எந்திரத்தை வலுப்படுத்தவும், வர்க்கப் போராட்டத்தை தேசபக்தி, தேசிய பெருமை மற்றும் முட்டாள்தனமான உணர்ச்சிகளின் அலைகளால் மூழ்கடிக்கவும் பயன்படுத்தப்படும்.

பொதுவான துயரத்தின் நேரத்தில், தேசிய ஒற்றுமைக்கான அழைப்புகள் ஏற்கனவே வளர்ந்து வரும் வேலைநிறுத்த அலைக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றன.

இந்தத் திட்டங்களில் தொழிற்சங்கங்களும் தொழிற் கட்சியும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இராணியின் மரணம் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்திற்குள், தகவல் தொடர்புத் தொழிலாளர்கள் சங்கம் (CWU) மற்றும் இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கம் (RMT) ஆகியவை வெள்ளிக்கிழமை தபால் வேலைநிறுத்தம் மற்றும் செப்டம்பர் 15 மற்றும் 17 தேதிகளில் திட்டமிடப்பட்ட இரயில் வேலைநிறுத்தங்களை நிறுத்திவிட்டன. RMT பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச் 'எலிசபெத் மகாராணிக்கு மரியாதை செலுத்துவதில் RMT முழு தேசத்துடன் இணைகிறது' என்றார்.

ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருந்த வருடாந்த தொழிற்சங்க மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை காலை அறிவிக்கப்பட்டது.

2022 செப்டம்பர் 6ம் தேதி, கன்சர்வேடிவ் கட்சியின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை பிரதமராக்கி புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு ஸ்காட்லாந்தின் பால்மோரலில் நடந்த பார்வையாளர்களின் போது, எலிசபெத் ராணி II, லிஸ் ட்ரஸை வரவேற்கிறார் [AP Photo/AP, File]

தொழிற்சங்கத் தலைவர்கள் பெயரளவில் வலது அல்லது இடதுபுறமாக இருந்தாலும், தொழிற் கட்சித் தலைவர்களுடன் அவர்களது சொந்த Operation London Bridge இல் இணைவார்கள்.

தொழிற் கட்சித் தலைவர் சேர் கீர் ஸ்டார்மர், இராணியின் மரணத்தைப் பயன்படுத்தி, தேசிய ஒற்றுமை மற்றும் வர்க்க அமைதிக்கான தொழிற் கட்சியின் உறுதிப்பாட்டை பிரகடனப்படுத்தினார், 'அரசியல் மோதல்களுக்கு அப்பாற்பட்டு, அவர் தேசம் எதை எதிர்த்துப் போராடியது என்பதற்காக அல்ல, மாறாக அது ஒப்புக்கொண்டவற்றிற்காக நின்றார்' என எழுதினார். அவர் தனது அழுகிய கட்சியின் சார்பாக: 'எங்கள் பெரிய எலிசபெத்திய சகாப்தம் முடிவுக்கு வரும்போது, மறைந்த இராணியின் நினைவாக அவரினுள் பொதிந்திருந்த பொது சேவையின் மதிப்புகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதன் மூலம் நாங்கள் அவரை கௌரவிப்போம்' என உறுதியளித்தார்.

'தேசிய நலனுக்காக' மட்டுமே செயல்படும் தனது சொந்த சாதனையை ஜெரமி கோர்பின் பராமரித்து, 'இராணியின் குடும்பத்தாரின் தனிப்பட்ட இழப்பு என்று வருகையில் இங்கும் உலகெங்கிலும் உள்ள அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பவர்களுடன் எனது நினைவு நிற்கின்றது. அவருடன் எங்கள் குடும்பங்கள், தோட்டங்கள் மற்றும் பழப்பாகு (jam) தயாரித்தல் ஆகியவற்றை கலந்துரையாடி நான் மகிழ்ந்தேன். அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்' என ட்வீட் செய்துள்ளார்.

எவ்வாறாயினும், அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள் இருந்தபோதிலும், மறைந்த இராணியின் தேசிய ஒற்றுமையின் அடையாளமாகச் செயல்படும் திறன், சமூகப் பதட்டங்கள் வெடிக்கும் நிலையை அடைவதைத் தடுக்கும் முதலாளித்துவத்தின் பரந்த திறனைப் பொறுத்தது.

வின்ஸ்டன் சேர்ச்சிலால் முதன்முதலில் பிரகடனப்படுத்தப்பட்ட 'இரண்டாம் எலிசபெத்திய காலகட்டம்' இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து பல தசாப்தங்களாக நீடித்தது. அந்த நேரத்தில் முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்திற்கு உயர்ந்து வரும் வாழ்க்கைத் தரங்களை வழங்க முடிந்தது. மேலும் தொழிற் கட்சியினதும் தொழிற்சங்கங்களினதும் சீர்திருத்தவாத திட்டங்களால் ஒரு வாழ்க்கைக்கான ஊதியம், கல்வி, வீடு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளுக்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளை குறைந்த பட்சம் ஓரளவு திருப்திப்படுத்த முடிந்தது.

ஆனால் 1990 களில் தொடங்கிய முடியாட்சியின் வேகமான வீழ்ச்சியானது, முதலாளித்துவ ஆட்சியின் அனைத்து அரசியல் கருவிகளையும், குறிப்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் கட்சியை தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமான சக்திகளாக மாற்றும் போக்கின் ஒரு பகுதியாகும். ஆளும் அமைப்பின் பாதுகாவலர்கள், அவர்கள் தொழிலாளர்களை இன்னும் ஆழமான துயரத்தில் ஆழ்த்துகிறார்கள் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான போர் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும்போது அவர்களின் உயிர்வாழ்வையே அச்சுறுத்துகிறது.

எனவே இராணியின் மரணத்தின் உடனடி தாக்கம் என்னவாக இருந்தாலும், தொழிலாள வர்க்கத்திற்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் இடையே ஒரு தீர்க்கமான மோதல் தவிர்க்கமுடியாமல் வளர்ந்து வருகிறது.

Loading