அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்க அச்சுறுத்தல்களின் வரலாறு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தக் கட்டுரை முதலில் ட்விட்டரில் வெளியிடப்பட்டது.

இராணுவ பின்னடைவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான புட்டினின் அச்சுறுத்தலை, நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டதும், இதுவரை கேள்விக்குட்படுத்தப்படாத சர்வதேச அரசுநிர்வாக விதிமுறைகளுக்கு எதிரான ஒரு முன்னோடியில்லாத உடைவாக பைடென் நிர்வாகமும் ஊடகங்களும் முன்வைக்கின்றன. இது ஒரு பொய்யான கட்டுக்கதையாகும்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

உண்மையில், அமெரிக்காவும் மற்ற ஏகாதிபத்திய சக்திகளும் பல முக்கியமான சந்தர்ப்பங்களில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி இராணுவத் தோல்விகளை தவிர்த்துக்கொள்வதை கருத்தில் கொண்டிருந்தன. தமது எதிரிகளிடமிருந்து விட்டுகொடுப்புகளை பெறுவதற்காக அணுகுண்டுகளை வீசுவதாகக் கூட அவர்கள் நேரடியாக அச்சுறுத்தியுள்ளனர்.

சீனா மீது அணு குண்டுகளை வீசுவதற்கு ஜெனரல் டக்ளஸ் மக்ஆர்தரின் கோரிக்கைகள், டீன் பைன் புவில் அணுவாயுதங்களை வெடிக்கச் செய்வதற்கான பிரான்ஸின் கோரிக்கைக்கான ஜனாதிபதி ஐசன்ஹோவரின் பதில், மற்றும் கியூப ஏவுகணை நெருக்கடியின் போது ஜனாதிபதி கென்னடியின் அச்சுறுத்தல்கள் ஆகிய நன்கு ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் உள்ளன.

சோவியத் ஒன்றியத்திற்கும், வியட்நாமுக்கும் எதிராக ஜனாதிபதி நிக்சன் அணு ஆயுத அச்சுறுத்தல்களைப் பயன்படுத்துவது மிகவும் குறைவாக அறியப்பட்ட மற்றும் இன்னும் தீவிரமானதாகும். விக்கிப்பீடியாவின் படி, வியட்நாம் போரை அமெரிக்காவிற்கு சாதகமான நிபந்தனைகளின் அடிப்படையில் நிர்ப்பந்திக்க, Operation Giant Lance அக்டோபர் 27, 1969 அன்று தொடங்கப்பட்டது.

விக்கிப்பீடியாவின் படி, “வியட்நாம் போரை முற்றாக முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சோவியத் ஒன்றியத்திற்கும், வியட்நாமுக்கும் அழுத்தம்கொடுக்க நிக்சன் 'ஆர்க்டிக் துருவ பனிபகுதிகளில் ரோந்து செல்லவும், அணுசக்தி அச்சுறுத்தலை அதிகரிக்கவும் 18 B-52 குண்டுவீச்சு விமானங்களின் ஒரு படைப்பிரிவை அங்கீகரித்தார்”.

அணுசக்தி தாக்குதலுக்கு உத்தரவிடக்கூடியவர் என்று சோவியத் ஒன்றியத்தை நம்ப வைப்பதற்கான 'பைத்தியக்காரன்' தந்திரோபாயம் என்று குறிப்பிடப்பட்டதை நிக்சன் பயன்படுத்தினார். Giant Lance உடன் தொடர்பான மற்றொரு செயல்பாடு 'Duck Hook' ஆகும்.

அதன் நோக்கம் ஒரு பாரிய அணுசக்தி தாக்குதலின் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க நிபந்தனைகளை ஏற்கும்படி வடக்கு வியட்நாமை கட்டாயப்படுத்துவதாகும். Duck Hook வடக்கு வியட்நாம் முழுவதிலும் உள்ள இராணுவ இலக்குகளை அணுகுண்டு வீசுமாறு அழைப்பு விடுத்ததாக விக்கிபீடியா கூறுகிறது. இதில் 'ஹனோய் மற்றும் ஹைபோங்கின் செறிவான குண்டுவீச்சு, வட வியட்நாமின் பெரும்பாலான மக்களின் உணவு விநியோகத்தை அழிப்பதற்காக அணைக்கட்டுகள் மீது குண்டுவீச்சு, வட வியட்நாமின் வடகிழக்கு தகவல் தொடர்பு மற்றும் சீன எல்லையில் உள்ள மலைகளூடான பாதைகள் மற்றும் பாலங்களுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்கள்…' உள்ளடங்கும்.

நிக்சனின் குற்றவியல் கூட்டாளியான ஹென்றி கிஸ்ஸிங்கர், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அமெரிக்கா தயாராக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கூறினார். நிக்சனுக்கான ஒரு குறிப்பில், கிஸ்ஸிங்கர், 'ஹனோயின் சிந்தனையில் முழு தாக்கத்தையும் அடைய, இந்த செயல் மிருகத்தனமாக இருக்க வேண்டும்' என எழுதினார்.

இறுதியில், அதன் மூலோபாய செயல்திறன் பற்றிய சந்தேகம் மற்றும் ஒரு வன்முறையான மக்கள் எதிர்வினை பற்றிய பயம் காரணமாக, Duck Hook செயல்படுத்தப்படவில்லை. ஆனால் நிக்சன் வியட்நாம் மற்றும் சோவியத் ஒன்றியத்தை அணு ஆயுதப் போர் மூலம் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தார்.

இந்த வரலாறு பின்வருபவற்றை நிரூபிக்கிறது 1) அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது பற்றி முன்னர் கேள்விக்குட்படுத்தப்படாத தடையை புட்டின் உடைக்கிறார் என்ற கூற்றுக்கள் மோசடியானவை; மற்றும் 2) அமெரிக்கா, இராணுவத் தோல்வியின் வாய்ப்பை எதிர்கொண்டால், நிச்சயமாக அணு ஆயுதப் போரில் ஈடுபடும்.

ஒரு அவநம்பிக்கையான இராணுவ சூழ்நிலையை எதிர்கொண்டால், அமெரிக்கா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்பதை அறிந்திருந்தும், புட்டினை ஒரு மூலையில் தள்ளி, சரணடையும்படி கட்டாயப்படுத்துவதற்கு பைடென் நிர்வாகத்தின் இடைவிடாத முயற்சிகள் முற்றிலும் பொறுப்பற்றவையாகும்.

Loading