"எல்லோரும் விரும்பும் அனைத்திற்கும் அவர் போராடுகிறார்": UAW தலைவருக்கான பதவிக்கு வில் லெஹ்மனுக்கு ஏன் வாக்களிக்கிறோம் என மிச்சிகன் மற்றும் ஓஹியோ வாகனத் தொழிலாளர்கள் கூறுகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த சில நாட்களாக, ஐக்கிய வாகனத் தொழிற்சங்க (UAW) தலைவருக்கான வில் லெஹ்மனின் பிரச்சாரத்தின் ஆதரவாளர்கள் ஓஹியோ மற்றும் மிச்சிகனில் உள்ள பல கார் ஆலைகளுக்கு சென்றனர். ஸ்டெல்லண்டிஸ் வாரன் ட்ரக் அசெம்பிளி ஆலை மற்றும் பிற பணிநீக்கங்களில் மூன்றாவது பணிமுறையை அகற்றுவதை எதிர்த்து லெஹ்மனின் அறிக்கையின் நூற்றுக்கணக்கான பிரதிகளை இக்குழுவினர் வழங்கி, மேலும் அவர்கள் ஏன் வில்லிற்கு வாக்களித்தனர் அல்லது தங்களுக்கு வாக்குச் சீட்டு கிடைத்தவுடன் அவ்வாறு திட்டமிட்டனர் என்பது பற்றி தொழிலாளர்களிடம் பேசினர்.

ஓஹியோவின் டோலிடோவில் உள்ள டேனா ஆலையில் லெஹ்மனின் பிரச்சாரம்

டோலிடோ, ஓஹியோ டேனா வாகன உதிரிபாகங்கள் ஆலை

கடந்த ஆண்டு, ஐக்கிய வாகனத் தொழிற்சங்கமும் மற்றும் ஐக்கிய உருக்கு தொழிற்சங்கமும் நான்கரை ஆண்டு ஒப்பந்தத்தை வாகன உதிரிப்பாக விநியோகத்தரான டானாவில் 3,500 தொழிலாளர்கள் மீது திணித்தனர். இதைத் தொழிலாளர்கள் ஆரம்பத்தில் 90 சதவீதம் நிராகரிக்க வாக்களித்தனர். ஒன்றரை மாதங்களாக, தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்குவதற்கு உறுப்பினர்கள் அளித்த பெரும்பான்மையான வாக்களிப்பை புறக்கணித்தன. இது முக்கிய கார் ஆலைகளை விரைவில் மூடுவதற்கு இட்டுச்சென்றிருக்கும்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் அச்சுறுத்தல் பிரச்சாரத்தை தொடங்கினர். சில தொழிலாளர்களை வன்முறையால் அச்சுறுத்தி, எதிர்ப்பை முறியடித்து ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக மற்றவர்களை பணிநீக்கம் செய்ய நிர்வாகத்துடன் சதி செய்தனர்.

டோலிடோ, ஓஹியோ, டேனா ஆலையில் உள்ள தொழிலாளர்களுடன் பிரச்சாரகர்கள் அவர்கள் ஏன் வில்லுக்கு வாக்களிக்கிறார்கள் என்பது பற்றி பேசினர். ஐந்து ஆண்டுகளாக டேனாவில் பணிபுரியும் ஒரு தொழிலாளி சியரா, 'அவர் எங்களை வழிநடத்தி, அதிகாரத்தை மீண்டும் எங்களுக்கு திரும்பப்பெற போகிறாறர் என்று நான் நினைக்கிறேன். அவர் எங்கள் குரல், எங்களை ஒன்றிணைத்து எங்களை முன்கொண்டு செல்ல ஒரு தொழிற்சங்கமாக அவர் தேவை என்று நான் நினைக்கிறேன். அவர் மேலும் கூறினார், 'நமக்காக, நம்மைப் பற்றி மற்றும் அக்கறையுள்ள ஒருவர் எங்களிடம் இருக்கவேண்டும்' என்று கூறினார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

ஆலையில் இரண்டு ஆண்டுகள் பணிபுரியும் ஒரு தொழிலாளியான டான், 'எங்களுக்கு அதிக பணம் தேவைப்படுவதால் நாங்கள் கடைசி ஒப்பந்தத்தை நிராகரித்தோம். ஒரு பில்லியன் டாலர் நிறுவனத்திடமிருந்து ஒரு மணி நேரத்திற்கு $18 சம்பளம் பெறுகிறேன். மக்கள் மிகவும் கோபமாக உள்ளனர். தொழிற்சங்கம் எங்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும், ஆனால் அது அவ்வாறு இல்லை. உங்கள் வேட்பாளர் சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது” என்று கூறினார்.

Toledo Dana workers read Lehman flyers [Photo: WSWS]

ஐந்து வருட தொழிலாளியான ஜெஃப், “நான் வில் க்கு வாக்களிப்பேன். ஏனென்றால் நாங்கள் திரும்பபெறமுடியாத எங்களின் பணத்தை பறித்த ஊழல் அதிகாரிகளை வெளியேற்ற அவர் சரியான ஆள் என்பதால். UAW அதிகாரிகள் யாரும் இப்போது சிறையில் இல்லை. அவர் போராடும் சாமானிய தொழிலாளர் குழுக்களுடன் நான் உடன்படுகிறேன். ஆனால் அது ஒரு உண்மையான போராட்டத்தை எடுக்கப் போகிறது. முதல் ஒப்பந்தத்தை 435-0 என்ற கணக்கில் நாங்கள் நிராகரித்தோம். ஆலை வாக்களிப்பில் 800 பேரில் 375 தொழிலாளர்களுடன் மட்டுமே இரண்டாவது ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது என்று அவர்கள் கூறினர். இது மிகத்தெளிவானது'.

'டேனாவுக்கு இப்போது சேவைசெய்த தொழிற்சங்கத்துடன் நான் சோர்வாக இருக்கிறேன். எங்களுக்காக யாராவது போராட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அவர்களுக்காக அல்ல” என்று பாப் கூறினார். 'அவர்கள் ஒப்பந்தத்தில் எதையும் செயல்படுத்துவதில்லை. நிறுவனத்திற்கு எது நல்லது, அதைத்தான் தொழிற்சங்கம் செய்கிறது”.

இரண்டு வருட இளம் டேனா தொழிலாளியான பிராண்டன், “எங்களுக்கு இப்போதுதான் தொழிற்சங்க அங்கத்துவ புத்தகம் கிடைத்தது. வாக்களித்த ஒரு வருடம் வரை நாங்கள் வாக்களித்தவற்றின் முழு ஒப்பந்தத்தையும் நாங்கள் பெறவில்லை - அது மோசமானது.'

ஆலையில் உள்ள தொழிலாளர்களுக்கு என்ன பிரச்சினைகள் முக்கியம் என்று கேட்டபோது, அவர் “முதல் படி புதிய தொழிற்சங்க பிரதிநிதிகளைப் பெறுவது. அவர்கள் அனைவரும் நிறுவனத்திற்காக வேலை செய்கிறார்களே தவிர எங்களுக்காக அல்ல. நாம் நிச்சயமாக அதிக பணம் சம்பாதிக்க வேண்டும். டேனா ஒரு உயர்மட்ட 500 நிறுவனங்களில் ஒன்றாகும். ஆனால் அவர்களுக்காக நாங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு இழப்பீடு எதுவும் இல்லை. இதற்கிடையில், அனைத்தும் விலை உயர்ந்து வருகின்றன” எனப் பதிலளித்தார்.

இந்த வாரம் ஆலையில் தொடங்கிய ஒரு டேனா தொழிலாளி, தான் ஒரு மணி நேரத்திற்கு $15 மட்டுமே சம்பாதிப்பதாகக் கூறினார்.

பகலில் ஒரு 15 நிமிட இடைவேளையும், எட்டு மணி நேரவேலைக்கு பகல் நேரத்தில் 25 நிமிட மதிய உணவு இடைவேளையும் கிடைக்கின்றது என்று டேனா தொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர். இரண்டு மாதங்களுக்கு பாதுகாப்பு விதிகளை மீறவில்லை என்றால், தொழிலாளர்களுக்கு கூடுதல் 15 நிமிட இடைவேளை கிடைக்கும்.

பிரச்சாரகர்கள் பல தொழிலாளர்களிடம் பேசிய பின்னர், டேனா ஆலையில் உள்ள UAW 12 தொழிற்சாலை அதிகாரிகள், லெஹ்மனின் அணியை அகற்ற நிர்வாகத்தை அழைத்தனர். இது UAW உறுப்பினர்களுக்கு தனது கருத்துக்களைக் கொண்டு வருவதற்கும், தொழிலாளர்கள் கூறுவதை கேட்பதற்கும் உள்ள சாமானிய தொழிலாளர் வேட்பாளரின் உரிமைகள் இரண்டையும் தெளிவாக மீறுகிறது.

ஸ்டெல்லாரிஸ் டோலிடோ ஜீப் பொருத்தும் ஆலை

Campaign at Toledo Jeep plant

வடமேற்கு ஓஹியோவில் உள்ள ஸ்டெல்லாண்டிஸ் டோலிடோ ஜீப் ஆலையில் 10 ஆண்டுகள் பணிபுரியும் ஒரு தொழிலாளி, “வில் மாற்றத்தை விரும்புவதால் நான் அவருக்கு வாக்களித்தேன். நான் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளேன். தொழிற்சங்கம் நிர்வாகத்தினரைப்போல் செயல்படுகிறது. நாங்கள் உள்ளூர் தொழிற்சங்கத்தில் பலரை அகற்றி ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினோம். ஆனால் இவர்கள் உள்ளே நுழைந்தவுடனேயே மூளைச்சலவை செய்யப்பட்டு இப்போது நிர்வாகம் விரும்புவதை மட்டுமே செய்கிறார்கள். ஆலையில் பாதுகாப்பு பற்றி என்னிடம் கேட்க வேண்டாம். மூன்று வருடங்களாக எங்களிடம் தீயணைப்பு பயிற்சி இல்லை. அங்கு தீ ஏற்பட்டால், வழியில் அனைத்து இயந்திரங்கள் மற்றும் பாகங்கள் இருப்பதால் உங்களால் வெளியேற முடியாது. அது ஒரு பேரழிவாக இருக்கும்” என்றார்.

ஆறு ஆண்டுகளாக டோலிடோ ஜீப்பில் பணிபுரிந்த மைக், லெஹ்மனுக்கு ஏற்கனவே வாக்களித்ததாகக் கூறினார். 'வாக்குச்சீட்டில் உள்ள அனைவரிலும், நாம் திரும்பப் பெற வேண்டிய அனைத்தையும் அவர் மட்டுமே கொண்டு வந்தார். நாம் இன்னும் நல்லதை பெறுவதற்கு முன், நம்மிடம் முன்னர் இருந்ததை திரும்பப் பெற வேண்டும். எல்லோரும் விரும்பும் எல்லாவற்றிற்கும் அவர் போராடுகிறார்” என்றார்.

வடக்கு இல்லினோய்ஸில் உள்ள பெல்விடேர் அசெம்பிளி ஆலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட துணை ஊழியர் (SE, முன்பு தற்காலிக பகுதிநேர அல்லது TPT) ரொபேர்ட், இடமாற்றங்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கான நிலைமைகள் ஆலையில் மிகவும் மோசமாக உள்ளன என்று கூறினார். 'நான் என்னை இங்கு அனுப்பும்படி கேட்கவில்லை' என்றார்.

பல தொழிலாளர்கள் டெட்ராய்டில் ஸ்டெல்லாண்டிஸின் பணிநீக்கங்களைப் பற்றிப் பேசினர் மற்றும் கண்டனம் செய்தனர்.

மாக்னா இன்டர்நேஷனல், போர்வியா (முன்னாள் ஃபாரேசியா) மற்றும் யான்ஃபெங் வாகன உதிரிப்பாக விநியோகஸ்தர்களுடன் மிச்சிகனில் உள்ள ஹைலேண்ட் பூங்காவில் உள்ள தொழில்துறை பூங்கா

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

ஒரு வாகன உதிரிப்பாக தொழிலாளியான சாண்டி, பிரச்சாரகர்களிடம் லெஹ்மனுக்கு வாக்களிக்கிறேன் என்று கூறினார். 'ஏனென்றால் நான் உண்மையை விரும்புகிறேன். அநீதிக்கு முன்னால் நிற்பது, எல்லாவற்றின் முன்னால் நிற்பதும் எனக்கு உண்மை பிடிக்கும். ஏனென்றால் நாங்கள் விழுந்துவிட்டோம், நாங்கள் எழுந்திருக்க வேண்டும்! அவர் நேர்மையானவர், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர் கூறுகிறார் - அது முக்கியமானது” என்றார்.

உதிரிபாகங்களைத் தயாரிக்கும் யான்ஃபெங்கின் மற்றொரு தொழிலாளி தனது ஆலையின் நிலைமைகளைப் பற்றி பின்வருமாறு கூறினார். 'இப்போது, எல்லாம் மெதுவாக உள்ளது. மக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக உள்ளே இருப்பவர்களுக்காக நாங்கள் குறைந்தது மூன்று அல்லது நான்கு நிலையங்களில் வேலை செய்கிறோம்.”

'என் குடும்பத்திற்கு உணவளிப்பதே எனது குறிக்கோள்' என்று அவர் தொடர்ந்தார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

GM லான்சிங் டெல்டா அசெம்பிளி

லான்சிங் டெல்டா அசெம்பிளி ஆலையில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளி ஒருவர், “[UAW] வேலைநிறுத்த நிதியில் உள்ள பில்லியன் சொத்துக்களை நம் கைகளில் எடுக்க வேண்டும். இந்த இடம் சோகமான நிலையில் உள்ளது மேலும் பலவற்றை சரிசெய்ய வேண்டும். மேலாளர்கள் பரிதாபமாக உள்ளனர் மற்றும் இந்த உற்பத்தி வணிகத்தை எவ்வாறு இயக்குவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

“தொழிலாளர்களுக்கு இப்போது எந்த கருத்துகூறும் உரிமையும் இல்லை. எங்களுக்கு அது இருப்பதாக கூறுகின்றார்கள், ஆனால் எங்களுக்கு அது இல்லை. நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் அவர்களிடம் கூறுகிறோம், அவர்கள் எங்களைப் பின்தொடரவில்லை. வில் கூறுவது நன்றாக இருக்கிறது. நான் அவருக்கு வாக்களிப்பேன்' என்றார்.

மற்றொரு தொழிலாளி, “வில் சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது. நான் விவாதத்தைப் பார்த்தபோது, தற்போதைய UAW தலைவர் ரே கரியின் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தது. அவர் மிகவும் விரும்பத்தகாத நபர்”.

ஃபோர்டு டியர்போர்ன் டிரக் ஆலை

செவ்வாய் மதியம், ஒரு பிரச்சாரக் குழு 1,300 பிரசுரங்களை போர்டு டியர்போர்ன் டிரக் ஆலையில் தொழிலாளர்களுக்கு வழங்கியது.

ஒரு தொழிலாளி, தான் ஏற்கனவே வில்லுக்கு வாக்களிக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறினார். “நான் வேலைக்குச் சேர்ந்தபோது, துப்பாக்கியால் சுடுவது அல்லது வாகனத்தில் ஒரு பாரம்தாங்கியை பொருத்துவது போன்ற அழுத்தம் நிறைந்த ஒரு வேலை உங்களுக்கு இருந்தது. இப்போது நீங்கள் ஒவ்வொரு வாகனத்திலும் செய்ய வேண்டிய நான்கு அல்லது ஐந்து வெவ்வேறு செயல்பாடுகள் இருக்கலாம்”.

ஆலையில் தான் எட்டு ஆண்டுகள் இருப்பதாகவும், 'தொழிற்சங்கம் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது' என்று கூறி, தொழிற்சங்க எந்திரத்திற்கு எதிரான வில்லின் போராட்டத்தை ஆதரிப்பதாகவும் கேத்தி கூறினார்.

பெரும்பாலான வேலைகள் மேலதிகசுமையாக இருக்கும் நிலைமைகளை அவர் விவரித்தார். புதிய மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் புதிய உற்பத்தி நிலையத்தை நிறுவ கூடுதல் இலாபத்தைப் பெறுவதற்காக ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் நிறுவனம் மேலும் மேலும் அழுத்துகிறது.

“அதிக வேலைப்பளு குறித்து எனது தொழிற்சங்க பிரதிநிதியிடம் பேசும்போது, புதிய கட்டிடம் கட்டி முடித்த பின்னரும் பணிச்சுமை குறைய வேண்டும் என்று அவர் கூறுகிறார். ஆனால் நான் அதை நம்பவில்லை.'

அவர் தொடர்ந்தார், “நாங்கள் அதிகாரத்தை தொழிலாளர்களிடம் வைத்திருக்க வேண்டும். கடந்த வாரம் நாங்கள் வில்லிற்கு ஆதரவளிப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். என்னைப் போன்றவர்களைப் போலவே நான் ஆதரவளிக்கின்றேன்”.

Loading