உக்ரைன் போர் இரண்டாம் ஆண்டில் நுழைகிறது: அணுவாயுத மூன்றாம் உலகப் போரை நிறுத்து!

பேராதனை மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக சூழல்களில் நடைபெறும் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு IYSSE அழைப்புவிடுக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

24 பிப்ரவரி 2023 அன்று, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் தலைமையிலான நேட்டோ சக்திகள் உக்ரைனை மையமாகக் ரஷ்யாவிற்கு எதிரான போரைத் தொடங்கி ஒரு வருடம் கடந்துவிட்டது.

இந்தச் சூழலில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமையிலான சோசலிச சமத்துவக் கட்சிகளின் (சோ.ச.க.) இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, உலக சோசலிச வலைத் தளத்துடன் இணைந்து, அணுவாயுத சக்திகளுக்கு இடையே ஒரு பேரழிவுகரமான மோதலாக அபிவிருத்தியடைந்து கொண்டிருக்கும் இந்த யுத்தத்துக்கு எதிராக, சர்வதேச சோசலிச முன்நோக்கின் அடிப்படையில், தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்டு, உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் வேலைத் தளங்களில் கூட்டங்கள், விரிவுரைகள் மற்றும் மறியல் பிரச்சாரங்களை ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளன.

இந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பேராதனை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களை அண்மித்த பகுதிகளில் மார்ச் 7 அன்று நடைபெறவுள்ள போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

போர் தொடங்குவதற்கு முன்பே உக்ரேனுக்கு இராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கி போரைத் தூண்டிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய சக்திகள், உக்ரேனில் தறைப்படையை இறக்கி ரஷ்யாவுடன் வெளிப்படையான போரை நோக்கி நகர்கின்றன. இது அணுவாயுத மூன்றாம் உலக யுத்த அச்சுறுத்தலை உக்கிரமாக்கியுள்ளது.

ரஷ்யாவின் பரந்த இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய பேராசையால் உந்தப்பட்ட போர், ஏற்கனவே ஐரோப்பியப் பொருளாதாரம் உட்பட உலகப் பொருளாதாரத்தின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆளும் வர்க்கங்கள் ஒவ்வொரு நாட்டிலும் உலக முதலாளித்துவ முறைமையின் ஆழமான நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது.திணித்து வருகின்றன. 

முதலாளித்துவ ஊடகங்கள், போலி-இடது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களும் உலகப் போரின் பெருகி வரும் ஆபத்து மற்றும் போரின் சர்வதேச விளைவுகள் குறித்து பொதுமக்களை இருட்டில் வைத்துள்ளன. வளர்ந்து வரும் போர் நிலைமை பற்றி உலகம் முழுதும் தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விழிப்பூட்டி, அணுவாயுத உலகப் போரின் பேரழிவிலிருந்து மனிதகுலத்தை விடுவிப்பதற்காகப் போராடி வரும் நான்காம் அகிலத்தின் அனைத்துகக் குழுவின் ஊடகமான உலக சோசலிச வலைத் தளத்தை கவனமாகப் படிக்குமாறும் நமது போர் எதிர்ப்பு மறியல் போராட்டங்களில் பங்கேற்குமாறும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

தேதி: மார்ச் 07

இடம் மற்றும் நேரம்: பேராதனை, கலஹா சந்தி, மாலை 4 மணிக்கு.

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தி, மாலை 3 மணிக்கு.

உலகம் முழுவதும் இளைஞர்களுக்கு ஓர் அழைப்பு: உக்ரேன் போரை நிறுத்த ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டமைப்போம்!

உக்ரேனில் போர், அதை நிறுத்துவது எப்படி: இணையவழி கூட்டம் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சோசலிச போர்-எதிர்ப்பு மூலோபாயத்தை முன்வைக்கிறது

Loading