2007 சோசலிச சமத்துவக் கட்சி கோடைக்கால பள்ளி: இடது எதிர்ப்பு மற்றும் நான்காம் அகிலத்தை ஸ்தாபித்தல்

இந்த விரிவுரைகள் 2007 இல் மிச்சிகனில் உள்ள அன் ஆர்பரில் நடைபெற்ற சோசலிச சமத்துவ கட்சி (அமெரிக்கா) கோடைகால பள்ளியில் வழங்கப்பட்டன.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தேசியவாத கொள்கைகளுக்கும், சோவியத் யூனியன் மற்றும் கம்யூனிச அகிலத்துக்குள்அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் எதிராக, 1923 இல் லியோன் ட்ரொட்ஸ்கிஸ்தாபித்தஇடது எதிர்ப்பின்போராட்டம் தொடர்பான முக்கியமான அரசியல் மற்றும் வரலாற்று பிரச்சினைகள் தொடர்பாகஅவர்கள் உரையாற்றுகிறார்கள்.

1926 பிரிட்டிஷ் பொது வேலைநிறுத்தம், 1925-1927 சீனப் புரட்சி மற்றும் சோவியத் ஒன்றியத்துக்குள்ளே பொருளாதாரக் கொள்கை குறித்த ஸ்ராலினின் பேரழிவு கொள்கைகளுக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டம் ஆகியவை இதில் அடங்கும். ட்ரொட்ஸ்கியின் நினைவுச்சின்னப் படைப்பான காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி பற்றிபீட்டர் டானியல்ஸ் மற்றும் பில் வான் ஆக்கென் ஆகியோரின் சொற்பொழிவுகள், இது எதிர் புரட்சிகர ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சடத்துவ வளர்ச்சியின் அடிப்படையையும் மற்றும் மத்தியவாத போக்குகளுக்கு எதிரான ஒரு புதிய நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தையும் விளக்குகிறது.

1927 இல் இடது எதிர்ப்பின் அங்கத்தவர்கள்