WSWS : Tamil : நூலகம்
பதினைந்தாவது ஆண்டு தினம்

உலக சோசலிச வலைத் தளத்தின் பதினைந்து வருடங்கள்: 1998-2013

உலக சோசலிச வலைத் தளத்தின் 15 வது ஆண்டு நிறைவுக்கு வாசகர் வாழ்த்துக்கள்
உலக சோசலிச வலைத் தளம் 1998
உலக சோசலிச வலைத் தளம் 1999
உலக சோசலிச வலைத் தளம் 2000
உலக சோசலிச வலைத் தளம் 2001
உலக சோசலிச வலைத் தளம் 2002
உலக சோசலிச வலைத் தளம் 2003
உலக சோசலிச வலைத் தளம் 2004
உலக சோசலிச வலைத் தளம 2005
உலக சோசலிச வலைத் தளம 2006
உலக சோசலிச வலைத் தளம 2007
உலக சோசலிச வலைத் தளம 2008
உலக சோசலிச வலைத் தளம 2009
 
 

உலக சோசலிச வலைத் தளத்தின் பதினைந்து வருடங்கள்: 1998-2013

உலக சோசலிச வலைத் தளம் 1998 பிப்ரவரி 14 அன்று உலக முதலாளித்துவத்தின் இருதயத் தானமான அமெரிக்காவில் ஒரு அரசியல் நெருக்கடி பெருகிவந்த நிலைமைகளின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்டது. கிளின்டன் நிர்வாகத்தைக் கீழிறக்குவதற்கான வலதுசாரிப் பிரச்சாரம் ஊடக உந்துதலுடனான மொனிக்கா-லெவின்ஸ்கி விவகாரத்தின் வடிவில் வெடித்து, டிசம்பர் நடுவில் கிளின்டன் மீது பதவிவிலக்கத் தீர்மானம் கொண்டுவரப்படுவதில் உச்சம் பெற்றது. அதேசமயத்தில், உலகின் மறுமுனையில் இந்தோனேசியாவில் சுகார்டோவின் சர்வாதிகாரத்தின் மறைவுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நீண்டகாலமாக இருந்த முட்டுத்தூண்களில் ஒன்று மறைந்தது.     (மேலும்) 

 
 


உலக சோசலிச வலைத் தளத்தின் முதலாம் ஆண்டு

உலக சோசலிச வலைத் தளம் (WSWS) என்ற தினசரி வெளியீடுஆரம்பிக்கப்பட்டு இன்று பதினைந்தாவது ஆண்டு தினமாகும். பிப்ரவரி 14,1998 தொடங்கி வாரத்திற்கு ஐந்து நாட்களும், அதன் பின் 1999 ஏப்ரல்முதலாக வாரத்திற்கு ஆறு நாட்களும் உலக சோசலிச வலைத் தளம்தவறாது வெளிவந்திருக்கிறது. இவ்வெளியீட்டின் முதல் பல மாதங்களுக்கு,நாளாந்த வாசகர் எண்ணிக்கை நூற்றுக்கணக்காக இருந்தது. பதினைந்துவருடங்களுக்குப் பின்னர் WSWS உலகின் மிகப் பரவலாக வாசிக்கப்படும்இணைய அடிப்படையிலான சோசலிச வெளியீடாகத் திகழ்கிறது  (மேலும்)

 
 

உலக சோசலிச வலைத் தளத்தின் இரண்டாம் ஆண்டு

1999 ஆண்டில் பெரும் ஏகாதிபத்திய சக்திகள் ஒரு சிறிய நாட்டிற்கு எதிராக முன்கண்டிராதவொரு அளவில் பலதரப்பினரும் ஒன்றுகூடி  தாக்குதலுக்கு நிற்கக்கண்டோம். பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் பிற நேச நாடுகளின் படைகள் பங்குபற்றி இருந்த நேட்டோ அமெரிக்காவின் தலைமையில் முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து உடைந்த பெரும் துண்டான சிறிய சேர்பியா மீது குண்டு மழை பொழிந்தது  (மேலும்)

 
 

உலக சோசலிச வலைத் தளத்தின் முன்றாம் ஆண்டு

2000 ம் ஆண்டின் புத்தாண்டு தினத்தில் உலகெங்குமான மக்கள், புத்தாயிரமாண்டு வன்முறையும் ஏழ்மையும் குறைந்த ஒரு சிறந்த உலகத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கைகளோடு தொலைபேசிகளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஆளும் வர்க்கங்களும் தமது பங்காக சமூகப் பிரளயங்களும் புரட்சிகளும் கடந்த காலத்திற்குரியன என்றும் எதிர்வரும் காலகட்டம் முதலாளித்துவம் வெற்றிமுரசு கொட்டும் காலகட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் பிரகடனம் செய்தன.  (மேலும்)

 
 

உலக சோசலிச வலைத் தளத்தின் நான்காம் ஆண்டு

ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை ஜனாதிபதியாக அமர்த்தியதில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் பொறியமைவு செய்யப்பட்ட வலது-சாரி அரசியல் கவிழ்ப்பின் உச்சம் பெற்றதுடன் 2001 ஆம் ஆண்டு ஆரம்பித்தது. அமெரிக்காவில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலக அரசியலிலும் பரந்த ஒரு தீவிர வலதுநோக்கிய மாற்றம் நடந்துகொண்டிருந்தன என்பது வெகு விரைவிலேயே தெளிவானது. (மேலும்)

 

உலக சோசலிச வலைத் தளத்தின் ஐந்தாவது ஆண்டு

செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின் அமெரிக்காவில் புஷ் நிர்வாகம் தொடக்கிய மோசடியானபயங்கரவாதத்திற்கு எதிரான போர், ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமக்கள் சுதந்திரங்களின் மீதான வரலாற்றுப் பெரும் தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படல் 2002 ஆம் ஆண்டு ஒரு இடைமருவல் ஆண்டாக இருந்தது. அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை தொடர்ந்து ஈராக் மீதான ஆக்கிரமிப்புக்கான உறுதியான தயாரிப்புகள் பின் தொடர்ந்தன. (மேலும்)

 
 



உலக சோசலிச வலைத் தளத்தின்
ஆறாம் ஆண்டு

2003 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையை குறித்து நின்றது. முக்கிய நாடுகள் அனைத்தும் உடந்தையாக இருக்க, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கிற்கு எதிரான ஒரு மிருகத்தனமான மற்றும் சட்டவிரோதமான போரைத் தொடங்கியது. மில்லியன் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கையில் உலகின் பெரும்பான்மை மக்களின் விருப்பத்தைப் புறந்தள்ளி தீர்க்கவியலாத பொருளாதார முரண்பாடுகளால் உந்தப்பட்டு இராணுவ வேட்டை மற்றும் உலகைக் கைப்பற்றுவதற்கான ஒரு பிரச்சாரத்தை ஏகாதிபத்திய சக்திகள் அதிகரித்தன. (மேலும்)

 
 



உலக சோசலிச வலைத் தளத்தின்
எழாவது ஆண்டு

2004 ஆம் ஆண்டில், ஈராக் போருக்கு அடித்தளமாகக் கொள்ளப்பட்ட பொய்கள் அனைத்தும் அம்பலமாகி விட்டிருந்தன. ஈராக் ஆக்கிரமிப்பு நீண்டு கொண்டே சென்றது. அப்போரின் உண்மையான மிருகத்தன மற்றும் குற்றவியல் தன்மையானது ஃபலுஜா மற்றும் பிற நகரங்களில் நடைபெற்ற படுகொலைகளிலும் அபு கிரேப்பில் சிறைவாசிகள் சித்திரவதை செய்யப்பட்டதிலும் வெளிப்பட்டது. அமெரிக்காவிலும் மற்றும் பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போரில் பங்குபெற்ற நாடுகள் அனைத்திலும் இராணுவவாதத்துடன் கைகோர்த்து ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும் நடந்தது. (மேலும்)

 
 



உலக சோசலிச வலைத் தளத்தின் எட்டாவது ஆண்டு

உலக முதலாளித்துவத்தின் தோல்வியை அம்பலப்படுத்திய இரு பெரும் இயற்கைப் பேரிடர்களின் பாதிப்பின் கீழ் 2005 ஆம் ஆண்டு விடிந்தது. இந்தியப் பெருங்கடலின் பூகம்பமும் சுனாமியும் இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பெருநாசத்தை உண்டாக்கியதோடு சுமார் 300,000 பேர் உயிரிழந்தனர். காத்ரினா சூறாவளி அமெரிக்காவின் வளைகுடாக் கடற்கரையைத் தாக்கி நியூ ஓர்லியன்ஸை வெள்ளத்தில் மூழ்கடித்தது. இதில் 1800 பேர் இறந்தார்கள். உழைக்கும் மக்களை பொறுத்த வரை உலகின் செல்வச் செழிப்பானதொரு நாட்டில் இருப்பது வறியதொரு நாட்டில் இருப்பதை விடவும் அதிகப் பாதுகாப்பு என்று சொல்ல முடியவில்லை என்பதை அது எடுத்துக் காட்டியது. (மேலும்)

 
 



உலக சோசலிச வலைத் தளத்தின் ஒன்பதாவது ஆண்டு

ஈராக்கிலான அமெரிக்கப் போரின் நான்காவது ஆண்டு, சுன்னி மற்றும் ஷியா பிரிவு போராளிகளுக்கு இடையேயான உட்சண்டை மோதல் முழுவீச்சில் வெடித்த நிலையில் மிகவும் குருதிபாய்ந்ததாக இருந்தது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு ஆட்சி இத்தகைய மோதல்களை ஊக்குவித்தது மற்றும் வளர்த்தது என்பதோடு அப்பாவி மக்களுக்கு எதிரான இரத்தம் தோய்ந்த கொடுமைகளை தானும் தொடர்ந்து செய்து வந்தது. அதே நேரத்தில் அமெரிக்கா, ஈரான் மீதான போருக்கும் அச்சுறுத்தல் விடுக்கத் தொடங்கியது. ஈரான் மீதான அணு ஆயுதத் திட்ட குற்றச்சாட்டு என்ற நாடகபாணியிலான நெருக்கடியின் ஒரு நெடிய வரிசையில் முதலாவதை அடுத்து இது நடந்தது. (மேலும்)

 




உலக சோசலிச வலைத் தளத்தின்
பத்தாவது ஆண்டு

அமெரிக்காவிலும் சரி சர்வதேச அளவிலும் சரி, இராணுவவாதத்தின் வளர்ச்சியை பழைய அரசியல் கட்சிகள் மூலமாகவும் முதலாளித்துவ அரச எந்திரத்தின் மூலமாகவும் எதிர்த்துப் போராடுவது என்பது சாத்தியமற்றது என்பதை 2007 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் எடுத்துக் காட்டின. எப்படி உலக மக்கள் கருத்தை மதிக்காமல் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் W. புஷ்ஷும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரும் 2003 இல் போரைத் தொடுத்தனரோ, அதேபோல 2006 நவம்பரில் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட போதும் புஷ் 2007 இல் போரைத் தீவிரப்படுத்தினார். (மேலும்)

 

2008 ஆம் ஆண்டில், நீண்ட காலமாக மேற்பரப்புக்கு அடியில் அபிவிருத்தியுற்று வந்த உலக முதலாளித்துவ நெருக்கடியானது, பெருமந்தநிலைக்குக் கட்டியம் கூறிய 1929 பங்குச் சந்தைப் பொறிவுக்குப் பிந்தைய மிகப் பெரும் நிதிக் கொந்தளிப்பாக வெடித்தது. இந்த நிகழ்வுக்கு இட்டுச் சென்ற நிகழ்முறைகளை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக WSWS பகுப்பாய்வு செய்து வந்திருந்தது. (மேலும்)

 

2009 ஆம் ஆண்டு 2008 செப்டம்பர் வோல் ஸ்ட்ரீட் பொறிவினால் கட்டியம் கூறப்பட்ட உலகளாவிய பொருளாதாரச் சரிவின் பரவலால் மேலாதிக்கம் செலுத்தப்பட்டது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும், அத்துடன் அதிகமாக ஆசியாவின் “வளரும் பொருளாதாரங்களிலும்” வேலைவாய்ப்பின்மையும் வறுமையும் பெருகின. (மேலும்)