WSWS : Tamil : நூலகம்
பதினைந்தாவது ஆண்டு தினம்

உலக சோசலிச வலைத் தளத்தின் பதினைந்து வருடங்கள்: 1998-2013

உலக சோசலிச வலைத் தளத்தின் 15 வது ஆண்டு நிறைவுக்கு வாசகர் வாழ்த்துக்கள்
உலக சோசலிச வலைத் தளம் 1998
உலக சோசலிச வலைத் தளம் 1999
உலக சோசலிச வலைத் தளம் 2000
உலக சோசலிச வலைத் தளம் 2001
உலக சோசலிச வலைத் தளம் 2002
உலக சோசலிச வலைத் தளம் 2003
உலக சோசலிச வலைத் தளம் 2004
உலக சோசலிச வலைத் தளம 2005
உலக சோசலிச வலைத் தளம 2006
உலக சோசலிச வலைத் தளம 2007
உலக சோசலிச வலைத் தளம 2008
உலக சோசலிச வலைத் தளம 2009

மீளாய்வு ஆண்டு: 2004

2004 ஆம் ஆண்டில், ஈராக் போருக்கு அடித்தளமாகக் கொள்ளப்பட்ட பொய்கள் அனைத்தும் அம்பலமாகி விட்டிருந்தன. ஈராக் ஆக்கிரமிப்பு நீண்டு கொண்டே சென்றது. அப்போரின் உண்மையான மிருகத்தன மற்றும் குற்றவியல் தன்மையானது ஃபலுஜா மற்றும் பிற நகரங்களில் நடைபெற்ற படுகொலைகளிலும் அபு கிரேப்பில் சிறைவாசிகள் சித்திரவதை செய்யப்பட்டதிலும் வெளிப்பட்டது. அமெரிக்காவிலும் மற்றும் பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போரில் பங்குபெற்ற நாடுகள் அனைத்திலும் இராணுவவாதத்துடன் கைகோர்த்து ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும் நடந்தது.


 

போர்க் குற்றங்களும் ஈராக் ஆக்கிரமிப்பும்

2004 ஆம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் முதல் முழு வருடமாகவும் அதேபோல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்பின் மூன்றாவது முழு வருடமாகவும் இருந்தது. அந்த ஆண்டில் தொடர்ச்சியாக பல அட்டூழியங்களும் போர்க் குற்றங்களும் நடத்தப்பட்டன. ஃபலுஜா, நஜாப், கர்பாலா மற்றும் ஈராக்கின் பிற நகரங்களில் நடந்த படுகொலைகள், அத்துடன் அபு கிரேப், குவாண்டானாமோ விரிகுடா மற்றும் பிற அமெரிக்க சிறை முகாம்களில் நடத்தப்பட்ட வக்கிரமான சித்திரவதைகள் வெளியாகின. 21 ஆம் நூற்றாண்டைத் திறந்து வைத்திருக்கும் ஏகாதிபத்தியப் போரின் வெடிப்பு வெறுமனே புஷ் நிர்வாகத்தின் கொள்கை அல்ல, மாறாக அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடி ஆழமடைந்ததின் விளைபொருளே என்பதை அந்த ஆண்டு முழுவதிலும் WSWS விளக்கியது.

ஏப்ரல் மாத்த்தில் ஃபலுஜாவில் கிளர்ச்சியாளர்கள் பிளாக்வாட்டர் பாதுகாப்பு நிறுவனத்தின் நான்கு ஒப்பந்ததாரர்களைக் கொன்றதை அடுத்து, அமெரிக்கப் படைகள் அடுத்தடுத்த தாக்குதலில் 300,000 பேர் வசிக்கும் இந்நகரைத் திட்டமிட்டுத் தரைமட்டமாக்கின. இத்தாக்குதல்களின் உச்சம் தான் நவம்பரில் நடந்த உருவற்ற ஆவேசம் ஆபரேஷன் (ஃபேண்டம் ஃப்யூரி). இந்த முற்றுகையின் போது 15 வயதில் இருந்து 55 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் அனைவருமே நகரில் இருந்து வெளியேறுவதில் இருந்து தடுக்கப்பட்டு அமெரிக்க மரைன் படையினரால் குறி வைக்கப்பட்டனர். மரைன்களின் தரை வழித் தாக்குதல்களுக்கு உதவியாக சரமாரியான வான்வழிக் குண்டுவீச்சும் இரசாயன ஆயுதமான வெள்ளை பாஸ்பரசும் பயன்படுத்தப்பட்டன.

இன்னதென்று அறியாமலேயே ஆயிரக்கணக்கிலான அப்பாவி மக்கள் இதில் கொல்லப்பட்டனர். இது சர்வதேசச் சட்டத்தை அப்பட்டமாக மீறியதாக இருந்தது. ஃபலுஜாவின் சாம்பலில் காணும் படுபயங்கரக் காட்சிகள் என்ற கட்டுரையில் WSWS எழுதியது:

ஃபலுஜா மீதான தாக்குதல், நாஜி-பாணியிலான கூட்டு தண்டனையே தவிர விடுதலை அல்ல. இந்த நகரத்தின் அரசியல், மத மற்றும் பழங்குடித் தலைவர்கள், ஈராக்கிய தேசியவாதத்தினாலும் தமது நாட்டில் அந்நியத் துருப்புகள் இருப்பதற்குக் கொள்ளும் எதிர்ப்பினாலும் உந்தப்பட்டு அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஒரு கெரில்லா எதிர்ப்பை ஒழுங்கமைத்த காரணத்தால், இன்று அந்த நகரம் தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது.

அந்நாடு அமெரிக்காவின் அடிமை அரசாக மாறுவதை எதிர்க்கும் எவரொருவருக்கும் என்ன நடக்கும் என்பதை ஈராக்கின் எஞ்சிய பகுதிகளும் தெரிந்து கொள்வதற்கு ஒரு உதாரணமாக ஃபலுஜாவை ஆக்க வேண்டும் என்பதே அமெரிக்கத் தாக்குதலின் நோக்கமாக இருக்கிறது.

ஃபலுஜா முற்றுகையை கொலைவெறித் தாண்டவம் என்று WSWS வருணித்தது. காயம்பட்டு நிராயுதபாணியாக இருந்த ஒரு கைதியை மசூதி ஒன்றிற்குள்ளாக அமெரிக்க மரைன் படை வீரர் ஒருவர் கொல்கின்ற ஒரு காட்சிச்சுருளில் - இது அந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியானது - இந்த ஆபரேஷனின் எண்ணம் அடங்கியிருந்தது. ஈராக்கின் பிற நகரங்களிலும் இதேபோன்ற கூட்டுத் தண்டனைகள் அளிக்கப்பட்டிருந்தன.

ஏப்ரலின் பின்பகுதியில் உலகம் முதன்முறையாக அவப்பெயர் ஈட்டிய அபு கிரேப் சிறைச்சாலை படங்களைக் கண்டது. கைதிகளை நிர்வாணமாக பிரமிடு போல அடுக்கி நிறுத்துவது, நாய்கள் மற்றும் மின்னதிர்ச்சியைக் கொண்டு அவர்களை அச்சுறுத்துவது உள்ளிட்ட வக்கிரமான சித்திரவதைப் படங்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு அமெரிக்க ஆக்கிரமிப்பின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தியது.

குவாண்டானாமோ விரிகுடாவிலும் அபு கிரேப்பிலும் நடந்த சித்திரவதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமான சம்பவங்கள் அல்ல. மாறாக மிருகத்தனமான சித்திரவதைக்கு பெண்டகன் மற்றும் புஷ் நிர்வாகத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் வெளிப்படையான அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவிற்குள்ளான சமூகச் சிதைவு மற்றும் உடைவு நிலைமைகளுடன் சேர்ந்து போரின் அவலட்சணமான காலனித்துவ நோக்கங்களும் கைகோர்த்ததில் இருந்து தான் இக்குற்றங்களும் அவற்றின் கீழமைந்த உளவியலும் எழுந்திருக்க முடியும் என்றே புரிந்து கொள்ள முடியும்.

அபு கிரேப்பும் அமெரிக்க சமூகத்தின் தோல்வியும் என்ற கட்டுரையில் WSWS ஆசிரியர் டேவிட் வோல்ஷ் எழுதினார்:

ஒரு சில மோசமானவர்களின் நடத்தையால் தான் அமெரிக்க இராணுவத்தினரும் குடிமை ஒப்பந்ததாரர்களும் இச்சித்திரவதையில் இறங்கியதாகக் கூறப்படும் வாதம் உதாசீனத்துடன் நிராகரிக்கப்பட வேண்டியதாகும். சர்வதேச செஞ்சிலுவைக் குழு, ஊடகங்கள், அல்லது அமெரிக்க இராணுவமே சிறிதளவு விசாரணை செய்தாலே போதும், ஈராக் கைதிகள் அடைக்கப்பட்ட அமெரிக்க சிறைகள் மற்றும் முகாம்களில் கொடுமையும் சித்திரவதையும், கணக்கிலடங்காத வழக்குகளில் கொலையும் கூட, திட்டமிட்ட ஒரு கோட்டில் இயங்குவதை அது சுட்டிக் காட்டும்.

அமெரிக்காவின் பொருளாதார மற்றும் கலாச்சாரச் சிதைவு நிலைமைகளை ஆய்வு செய்து, இராணுவத்தால் வளர்த்தெடுக்கப்படும் சமூக வகை பற்றி வோல்ஷ் இவ்வாறு எழுதினார்:

சமூகத்திடம் இருந்து அறரீதியாகவோ கலாச்சாரரீதியாகவோ எதுவுமே கொண்டுசெல்லப் பெற்றிராதவர்களுக்கு மட்டுமே அபு கிரேப்பில் நடத்தப்பட்டிருக்கும் குற்றங்களைப் புரியும் திறம் இருக்கும். அமெரிக்க இராணுவப் படைகளுக்கு தனது அவலட்சணமான வேலையைச் செய்ய இத்தகைய சமூக வகையினருக்கான தேவை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. ஆனால் இங்கே ஒரு எச்சரிக்கை அளிக்கப்பட்டாக வேண்டும்: இவ்வாறாக ஒரு இராணுவம், பெருகிக் கொண்டே செல்லும் குடிமக்கள் கூலிப்படையினருடன் கைகோர்ப்பது என்பது வெறுமனே மத்திய கிழக்கில், மத்திய ஆசியாவில் மற்றும் பிறவெங்கிலும் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அபாயத்தை மட்டும் குறிக்கவில்லை, அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான அபாயத்தையும் சேர்த்தே குறித்து நிற்கிறது. 

அபு கிரேப் ஒரு விதிவிலக்கு அல்ல என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் விதமாக, ஆப்கானிஸ்தானிலும் குவாண்டானாமோ விரிகுடாவிலும் அமெரிக்கப் படைகளால் இரண்டு வருடங்களுக்கும் அதிகமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பிரித்தானியர்கள் தங்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த பல்வேறு விவரங்களை ஆகஸ்டில் வெளியிட்டனர். இரும்பு வலைச் சுவர்களுடனான ஒரு சிறிய உலோகப் பெட்டி போன்ற ஒன்றுக்குள் தங்க வைக்கப்பட்டிருந்தது உட்பட்ட விவரங்கள் அதில் இருந்தன. ஈராக் சிறைக்கைதிகளின் நிலைமைகள் குறித்த பிற அறிக்கைகளில் அடி உதை, கொலை மிரட்டல்கள், கெட்டுப் போன உணவு, அழுக்கு நீர் இன்னும் உளவியல் சித்திரவதைகள் விவரிக்கப்பட்டிருந்தன.

ஈராக் போரின் வரலாற்று வேர்களையும் அரசியல் பின்விளைவுகளையும் ஆராயும் விடயங்களை WSWS அந்த வருடம் முழுவதிலும் தொடர்ந்து வெளியிட்டது. WSWS சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவரான டேவிட் நோர்த் செப்டம்பரில் ஆஸ்திரேலியாவில் நடந்த கூட்டங்களில் ஒரு அறிக்கை வழங்கினார் (ஈராக் போரும் 2004 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலும்). இதில் அவர் கூறினார்:

அமெரிக்கா குறித்த உலகளாவிய புரிதல்களை, கடந்த நான்காண்டு கால நிகழ்வுகள் ஆழமாய் மாற்றி விட்டிருக்கின்றன. அமெரிக்க சமூகத்தை சொர்க்க பூமியாகப் பார்க்க விருப்பமில்லாதிருந்தவர்களுக்கும், ஜனநாயக மற்றும் கருணை இலட்சியங்களை எப்போதும் அந்நாடு உபதேசிப்பதை விமர்சனப் பார்வையற்று ஏற்றுக் கொள்வதினும் மேலாகச் சிந்திக்கக் கற்றவர்களுக்குமே கூட சமீபத்திய அபிவிருத்திகள் அதிர்ச்சியாக வந்து சேர்ந்திருக்கின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் கண்டிராத கடிவாளமற்ற ஏகாதிபத்திய வகையின் உதாரணங்களையே ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆக்கிரமிப்புகள் வழங்கியிருக்கின்றன. அபு கிரேப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் வெளிப்படும் வக்கிரத்தின் அவலட்சணமான படங்கள் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் மிருகத்தனமான மற்றும் வேட்டையாடும் தன்மை கொண்ட சாரத்தை ஒரு ஒட்டுமொத்தத் தலைமுறைக்கும் வரையறை செய்வதாக இருக்கும்.

அடுத்து அயர்லாந்தின் டுப்ளினில் தான் பங்கேற்ற ஒரு பொது விவாதத்தில் (டிரினிட்டி கல்லூரியில் போர் குறித்து நடந்த ஒரு விவாதத்தில் அவர் பங்குபற்றினார்)  டேவிட் நோர்த், ஈராக் போர் ஒரு போர்க் குற்றமாகும், இக்குற்றத்திற்காக  அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நூரெம்பேர்க் தீர்ப்பாயம் செய்ததை அவர் முன்னுதாரணமாகக் காட்டினார். அந்த விவாதத்தின் தீர்மானத்தின் மீது பேசும்போது, நோர்த் இவ்வாறு தொடங்கினார்:

ஏகாதிபத்திய டாம்பீகத்தின் மயக்கங்களால் நஞ்சேறியிருக்கும் அரசியல் ஸ்தாபகத்திற்கும், போரை வெறுக்கின்ற, அமெரிக்க சாம்ராஜ்யத்தின் எந்தவொரு பகுதிக்கும் ஆசையில்லாத, எவரையும் கொல்வதற்கு அல்லது ஜெயிப்பதற்கு விருப்பமில்லாத, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் இருக்கும் எண்ணெய் வயல்களில் எந்த நிதியார்வங்களும் இல்லாத, அத்துடன் உரிமை தான் வலிமையை உண்டாக்க வேண்டுமே தவிர, தலைகீழாக அல்ல என்ற லிங்கனின் வார்த்தைகளில் மனப்பூர்வமான நம்பிக்கை கொண்ட மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களுக்கும் இடையில் இணைக்க முடியாத ஒரு அறப் பிளவு ஓடுகிறது.

அமெரிக்கா தான் இன்னமும் உலகின் அமைதிக்காவலனாக இருக்கிறது என்று இந்த அவைக்கு முன்னர் வைக்கப்பட்டிருக்கும் முன்மொழிவு சர்வதேச அரசியல் யதார்த்தத்தை தலைகீழாக நிறுத்தி வைக்கிறது. அமெரிக்காவை அமைதிக் காவலன் என்று அழைப்பது பிரேத அலங்காரம் செய்பவரை மறுமை வாழ்க்கையை மேம்படுத்தும் நிபுணர் என்று விவரிப்பதற்கு ஒப்பாகும்.

WSWS ஆரம்பத்தில் இருந்தே, பேரழிவு ஆயுதங்கள் பற்றிய புஷ் நிர்வாகத்தின் கூற்றுகள் எல்லாம் பொய்கள் என்பதை கூறி வந்தது. 2004 ஆம் ஆண்டில் இந்தப் பொய்கள் எல்லாம் அவிழத் தொடங்கின. பென்டகன் மெதுவாக தனது ஆயுதத் தேடல்வேட்டையாளர்களை திரும்பப் பெற்றுக் கொண்டது. சதாம் உசேன் மீதான நாடகத்தன விசாரணையையும் WSWS பகுப்பாய்வு செய்தது. இந்த விசாரணை, எய்ததிசை நோக்கித் திரும்பி, அமெரிக்காவிற்கும் பாக்தாத்தில் இருக்கும் சதாம் உசேனின் பாத் ஆட்சிக்கும் இடையிலான நீண்ட சீரழிந்த வரலாற்றை  அம்பலப்படுத்தி விடுமோ என்று அமெரிக்காவின் ஆளும் வர்க்கம் மறும் ஊடக வட்டாரங்களுக்குள் ஒரு பதட்டம் நிலவிக் கொண்டிருந்ததையும் அக்கட்டுரை குறிப்பிட்டுக் காட்டியது.

ஏகாதிபத்திய இராஜதந்திரம்: ஈராக் மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பில் ஒன்பது பாகங்களாக வெளியான ஒரு முக்கியமான கட்டுரை ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்றைப் பகுப்பாய்வு செய்தது. மத்திய கிழக்கில் தொழிலாள வர்க்கம் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான வரலாற்றுப் படிப்பினைகளை அது வரிசைப்படுத்தியதோடு புஷ் நிர்வாகம் ஈராக் மீதான அதன் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கு கூறியவற்றையும் அம்பலப்படுத்தியது.

அந்த ஆண்டு போருக்கான வெகுஜன எதிர்ப்பு பெருகக் கண்டது. எண்ணிலடங்கா ஆர்ப்பாட்டங்களும் கூட்டங்களும் நடத்தப்பட்டன. பல இடங்களில் சிப்பாய்கள் போருக்கான தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய சம்பவங்களும் நடந்தன. முன்னாள் ஸ்டாஃப் சர்ஜண்ட் ஜிம்மி மாஸி அத்தகைய எதிர்ப்பை வெளிப்படுத்திய ஒருவர். இவர் ஈராக்கில் தனது அனுபவங்கள் குறித்து விரிவான விபரங்களை WSWS இடம் பேசினார்.

ஈராக் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த, மார்ச் 19-20 தேதிகளில், உலகமெங்கும் ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிரான பரந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த ஆர்ப்பாட்டங்களில் உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடங்கி ஒரு வருடம் என்ற அறிக்கையை பரவலாக விநியோகம் செய்தனர். ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் போர்-எதிர்ப்பு இயக்கத்தை ஜனநாயகக் கட்சியின் பின்னால் அணிதிரட்ட முனைகின்றனர் என்றும் அது எச்சரித்தது.

ஈராக் போர், ஸ்பெயின் தேர்தல், தொடர்ச்சியான அமெரிக்க ஆக்கிரமிப்பை ஜனநாயகக் கட்சி ஏற்றுக் கொண்டமை போன்ற அடிப்படையான அரசியல் அனுபவங்களில் இருந்து அடிப்படைப் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். ஜனநாயகக் கட்சிக்கு கட்டுண்டதாக இருக்கும் வரை எந்தவொரு போர் எதிர்ப்பு இயக்கமும் சிறப்பானதாக இருக்க முடியாது. போருக்கு எதிரான போராட்டத்திற்கு ஆளும் உயரடுக்கின் கட்சிகளுக்கும் ஸ்தாபனங்களுக்கும் நெருக்குதல் கொடுக்கும் ஒரு ஆர்ப்பாட்ட இயக்கத்திற்கும் அதிகமான ஒன்று அவசியமாக இருக்கிறது. ஜனநாயகக் கட்சியுடன் முழுமையாக முறித்துக் கொள்வதும் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உழைக்கும் மக்களை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுயாதீனமான வகையில் அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய மூலோபாயத்தை செயல்படுத்துவதும் இதற்கு அவசியமாக இருக்கிறது.


அபு கிரேப்பில் காவலர் ஒருவர் கைதியைச் சித்திரவதை செய்கிறார்


அமெரிக்க வான்வழித் தாக்குதலின் பிடியில் ஃபலுஜா

 

Featured material

·                    8 January 2004 US-imposed democracy in Afghanistan 
Loya jirga rubber-stamps autocratic regime

·                    12 March 2004 ஏகாதிபத்தியத்தின் இராஜதந்திரம்: ஈராக்கும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும்
முதல் பகுதி: ஈராக்கிய முடியாட்சியும், சமூக முரண்பாடுகளின் வளர்ச்சியும்

·                    19 March 2004One year since the US invasion of Iraq

·                    10 June 2004Abu Ghraib and the failure of American society

·                    7 September 2004 ஆஸ்திரேலியாவிலும், நியூ சிலாந்திலும் டேவிட் நோர்த் பொதுக் கூட்டங்களில் உரையாற்றுகிறார்
ஈராக்கியப் போரும் 2004 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும்

·                    15 October 2004 உலக சோசலிச வலைத் தள தலைவர் டேவிட் நோர்த் டப்ளின் விவாதத்தில் ஈராக்கின் மீதான போரைக் கண்டிக்கின்றார்

·                    17 November 2004 US media applauds destruction of Fallujah

·                    23 December 2004Bush as Time magazines 2004 Person of the Year: why him?


2004  அமெரிக்கத் தேர்தல்

அமெரிக்காவிற்குள்ளாக போருக்கான வெகுஜன எதிர்ப்பு பெருகிக் கொண்டிருந்த வேளையில், 2004 ஆம் ஆண்டின் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போர்-எதிர்ப்பு வாக்காளர்களுக்கு முற்றிலும் எந்தவொரு தெரிவும் அற்ற நிலை இருந்தது. இத்தேர்தல்களில் போர் ஆதரவுக் கட்சிகள் இரண்டுமே மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலக்குகளைத் திறம்படச் சாதிக்கப் போவது யார் என்பதில் போட்டி போட்டன. இரண்டு பெருவணிகக் கட்சிகளுக்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி, பில் வான் ஓகன் மற்றும் ஜிம் லோரன்ஸ் ஆகிய தனது சொந்த வேட்பாளர்களை களமிறக்கியது.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான உட்கட்சிப் போட்டியில் ஹோவார்டு டீனின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி மூலம், பெரு வணிகக் கொள்கைகளுக்கு தோன்றுகின்ற எதிர்ப்பை குழிதோண்டிப் புதைக்குமிடமாக தனது மரபான கடமையை அக்கட்சி ஆற்றியது. ஆரம்பத்தில் நிதிநிலை வெட்டுகளின் ஆதரவாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தவரும் நிதிக் கொள்கையில் பழமைவாதியும் வேர்மாண்ட் மாநிலத்தின் முன்னாள் கவர்னருமான இவர், போர் எதிர்ப்பு மனோநிலையை பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலான இருகட்சி ஆட்சியமைப்புமுறைக்குள் அடக்கி வைப்பதற்கான வாகனமாக ஆனார்.

ஆரம்பத்தில் டீன் முன்னிலை வேட்பாளராக ஆகியிருந்தார். ஆனால் புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள் மீது ஏற்பட்டிருந்த பரவலான ஏமாற்றமும் கோபமும், டீனின் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, அது குறித்து ஜனநாயகக் கட்சி செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதன் மீதும் பாய ஆரம்பித்திருந்தது என்பதை உணர்ந்து கொண்ட தருணம் முதலாக அரசியல் ஸ்தாபகமும் ஊடகங்களும் அவரது பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டைகளாக ஆகி விட்டன. இந்த குறிப்பிடத்தக்க அத்தியாயம் அமெரிக்காவில் தேர்தல் அமைப்புமுறையின் மீது அரசியல் ஸ்தாபகம் செலுத்திய இறுக்கமான கட்டுப்பாட்டை மேலும் அம்பலப்படுத்தியது.

அயோவா தொகுதிகளிலும் (caucuses) நியூ ஹாம்ப்சயர் ஆரம்ப தேர்தலிலும் கெரி வென்றார். அதனையடுத்து பிப்ரவரியில் டீன் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள வேட்பாளராக எளிதில் கெர்ரி தெரிவானார். இதனையடுத்து ஈராக் போருக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய அமெரிக்க மக்களின் பெரும்பான்மையோருக்கு நவம்பர் தேர்தலில் எந்தவொரு மாற்றும் இருக்கவில்லை. அமெரிக்க அரசியல் உயரடுக்கு புஷ்-கெர்ரி தேர்தலுக்கு பொறியமைவு செய்தது என்ற ஆசிரியர் குழு அறிக்கையில் WSWS எழுதியது:

"இப்போது எந்த அடிப்படை வித்தியாசங்களும் இல்லாத கெர்ரி மற்றும் ஜோர்ஜ் W. புஷ் ஆகிய அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் இரண்டு பிரதிநிதிகளுக்கு இடையே ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் வகையில் மேடையமைக்கப்பட்டிருக்கிறது. சுமார் 300 மில்லியன் மக்களுடன், சிக்கலானதும் அதிக துருவப்படுத்தப்பட்டதுமான ஒரு சமூக அமைப்பைக் கொண்டதொரு நாட்டில், யேல் (Yale) பல்கலையில் கல்வி பயின்று செல்வச் சீமான் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் இருவரில் யார் நாட்டை ஆளவிருக்கிறார்கள் என்பதே நவம்பரில் வழங்கப்படவிருக்கும் அரசியல் தெரிவாக இருக்கிறது.

மிகவும் கொந்தளிப்பான பிரச்சினையான ஈராக் போர் விடயத்தில், பின்பற்றப்பட வேண்டிய தந்திரோபாயத்தில் மட்டுமே புஷ்ஷுடன் கெர்ரிக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில் இருந்து அமெரிக்கத் துருப்புகளை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளை எதிர்க்கும் அவர் ஈராக்கில் எதிர்ப்பை நசுக்குவதற்கு எவ்வளவு இராணுவப் படைகளும் ஆதார வளங்களும் அவசியப்பட்டாலும் அதனை அளிப்பதற்கு உறுதிபூண அழைக்கிறார்.

2004 ஜூலையில் ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டில் வேட்பினை ஏற்று கெர்ரி கூறிய முதல் வார்த்தைகளிலேயே அவரது கண்ணோட்டம் சுருங்க வெளிப்பட்டு விடுகிறது. ஓய்வுபெற்ற ஜெனரல்களும் அட்மிரல்களும் நிரம்பிய ஒரு மேடையில் நின்று கொண்டு இராணுவ சல்யூட்டை அளித்து அவர் அறிவித்தார்: : ம் ஜான் கெர்ரி. ஐம் ரிப்போர்டிங் ஃபார் டியூட்டி. அவர் வேட்பாளராக ஆன உடனேயே, ஜனாதிபதி வேட்பாளர் டென்னிஸ் குசினிச் உள்ளிட ஜனநாயகக் கட்சியின் இடது பிரிவுகள் துரிதமாக கெர்ரிக்குப் பின்னால் ஆதரவாக அணிவகுத்தன.

இந்தக் கூட்டத்தில் அதிக பிரபலமற்ற இல்லினோய் மாநில செனட்டரான வளரும் நட்சத்திரம் பராக் ஒபாமாவை சிறப்புரையாற்றுபவராக கெர்ரி பயன்படுத்தினார். இந்த நட்சத்திரம் பின்னர் பிரச்சாரத்தின் போது ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலுக்கு அழைப்பு விடுத்தார்.

போர் ஆதரவு முழக்கங்கள், அத்துடன் வணிக-ஆதரவு நிதிச் சிக்கன நடவடிக்கைகளுக்கு வாக்குறுதிகள் இவை இரண்டும் கலந்தவொரு பிரச்சாரத்தை கெர்ரி நடத்தினார். பயங்கரவாதத்தின் மீதான போரில் அளவுக்கதிகமாக பங்கேற்கிறார் என்பதற்காக ஜோர்ஜ் W. புஷ்ஷை குறைகூறவில்லை என்று ஒருசமயம் கூறினார். அவர் மிகவும் குறைவாக செய்திருப்பதாகவே நான் நம்புகிறேன். ’பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்பது தெரிந்திருந்தால் கூட ஈராக் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பேன் என்று கூறுமளவுக்கு அவர் சென்றார்.

பசுமைக் கட்சி வேட்பாளர் ரால்ப் நாடரின் பிரச்சாரம் குறித்த கட்டுரைகளையும் WSWS வெளியிட்டது. 2004 ஆம் ஆண்டில் ஒரு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட நாடர், ஈராக்கின் சாதாரண மக்களை ஆக்கிரமிப்புப் படைகளின் பக்கத்திற்கு வென்றெடுக்கும் வழி குறித்து கெர்ரிக்கு அறிவுரை வழங்கியதன் மூலம் அவரும் ஈராக் போருக்கான தனது ஆதரவுக்கு சமிக்கை அளித்தார். இதனிடையே நாடர் வாக்குச்சீட்டில் இடம்பெறாமல் செய்ய ஒரு பிற்போக்குத்தனமான நடவடிக்கையிலும் ஜனநாயகக் கட்சியினர் இறங்கினர்.

இதனிடையே, ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் குடியரசுக் கட்சியின் பிரச்சாரம் இராணுவவாதம், தேசியப் பேரினவாதம், அச்சுறுத்தல்கள், மற்றும் இரக்க குணமுள்ள பழமைவாதம் அதாவது கிறிஸ்தவ அடிப்படைவாதிகளை மத அடிப்படையில் ஒன்றுதிரட்டுதல் ஆகியவற்றின் கலவையாக இருந்தது. குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த புஷ் ஆதரவு ஸெல் மில்லரிடம் இருந்தான பாசிச ஆவேசம் இடம்பெற்றிருந்தது.

புஷ்ஷின் நிர்வாகம் ஆழமான அவப்பெயர் சம்பாதித்திருந்த நிலையிலும் கூட, கெர்ரி போரை ஏற்றுக் கொண்டமையும், பெருகிச் சென்ற அமெரிக்க சமூக நெருக்கடியைக் கையாளுவதற்கு எந்த உருப்படியான நடவடிக்கைகளையும் அவர் முன்வைக்க மறுத்தமையும் 3 சதவீத குறுகிய வித்தியாசத்தில் புஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை ஏறக்குறைய உறுதிப்படுத்தி விட்டது.

ரொம்பவும் இடது நோக்கி நகர்ந்து விட்டதால் தான் தோல்வி ஏற்பட்டதாக ஜனநாயகக் கட்சியினர் தமது தேர்தல் தோல்விக்கு விளக்கமளித்தனர். போர் ஆதரவுக்கும் வலது-சாரி கொள்கைகளுக்கும் தமக்குத் தாமே நியாயம் கற்பித்துக் கொள்வதென்பது முடிவில் அறப் பிரச்சினைகள் தான் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கும்படி ஆனதுஎன்ற ஒரு கூற்றின் வடிவத்தை எடுத்தது. நோர்த் தேர்தலுக்குப் பின் அளித்த 2004 தேர்தலுக்குப் பின்னர்: சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகளும் கடமைகளும் என்ற அறிக்கையில், இந்த வாதத்தையும் மற்ற பிற வாதங்களையும் திறனாய்வு செய்து, புஷ் நிர்வாகத்தின் இரண்டாம் பதவிக்காலத்திற்கான ஒரு அரசியல் முன்னோக்கினை சுருங்க விவரித்துக் காட்டினார்.

 
2004 தேர்தல் முடிவில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜான் கெர்ரியின் சலுகையைப் பெறுகிறார் அமெரிக்க ஜனாதிபதியான ஜோர்ஜ் W. புஷ்.

 

Featured material

·         21 February 2004The vetting of John Kerry

·         27 April 2004The struggle against war and the 2004 US elections

·         22 September 2004The politics behind Kerrys Iraq speech

·         3 November 2004 2004 தேர்தலுக்குப் பின்னர்: சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகளும் பணிகளும்

·


சர்வதேச அரசியல் மாற்றங்கள்

ஈராக் போர், இராணுவவாதத்தின் வெடிப்பு, அத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் என்ற பேரில் ஒவ்வொரு நாடாய் அடுத்தடுத்து ஒடுக்குமுறை சக்திகளாய் அணிதிரட்டப்பட்டமை இவற்றுடன் கைகோர்த்து சர்வதேச அளவிலும் முக்கியமான அரசியல் அபிவிருத்திகள் நிகழ்ந்தன.

ஈராக்கில் ஆயுதப் பரிசோதனை செய்த முன்னாள் ஐநா ஆயுதப் பரிசோதகரும் ஒரு பொதுநல எச்சரிக்கையூட்டியும் ஆன டேவிட் கெல்லி கொலை செய்யப்பட்ட சூழ்நிலைகள் மீது நடந்த ஹட்டன் விசாரணை அறிக்கை ஜனவரி மாதத்தில் வெளியானது. இந்த அறிக்கை கெல்லியின் மரணத்திற்கு எவ்விதமான பொறுப்பு கூறப்படுவதில் இருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை விடுவித்ததோடு ஈராக்கிற்கு எதிரான ஒரு சட்டவிரோதமான போரில் நாட்டை இழுத்து விடும் பொருட்டு உளவுத் தகவல்களில் தகிடுதத்தம் செய்த குற்றச்சாட்டில் இருந்து டோனி பிளேயரையும் விடுவித்தது.

பிப்ரவரி மாதத்தின் போது, ஹைத்தியில் முன்னாள் இராணுவ அதிகாரிகளாலும் பிற வலது-சாரி மற்றும் சிஐஏ ஆதரவு கூறுகளாலும் தூண்டப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் ஜனாதிபதி ஜோன் - பேர்ட்ராண்ட் அரிஸ்டைடின் தேசியவாத அரசாங்கத்திற்கு எதிரான ஒரு வன்முறையான இரத்தம் பாயும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு பாதையமைத்தது. அமெரிக்க மரைன் வீரர்கள், கனடாவின் துருப்புகள் உடனிருக்க, தலைநகரான Port-au-Prince நகருக்குள் இறங்கினர். அரிஸ்டைட் அமெரிக்க விமானம் ஒன்றுக்குள் வைக்கப்பட்டு தென் ஆபிரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

ஆஸ்திரேலியாவில், பிப்ரவரி மாதத்தில், சிட்னியின் உட்பகுதியில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த டிஜே ஹிக்கி மிதிவண்டியில் போலிசிடம் இருந்து தப்பியோடும்போது இறந்து போன சம்பவம், பரவலான கோபத்தைத் தூண்டியது. ரெடர்ன் புறநகர்ப் பகுதியில் பழங்குடி மக்களுக்கும் கலகத் தடுப்பு போலிசுக்கும் இடையே ஆவேசமான கைகலப்புகள் நடந்தன. ஆதிவாசி மக்களை தாக்குவதற்கும் ஒரு பரந்த போலிஸ் கட்டுமானத்தைத் தயாரிப்பதற்கும் அரசியல் ஸ்தாபகம் இந்த கலகத்தை வசதியாக பற்றிக் கொண்டது.

வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மையில் உழன்று கொண்டிருந்த ஆதிவாசி மக்களின் ஒரு ஒட்டுமொத்த வாழ்க்கைப் பிரதிநிதித்துவமாகவே டிஜே ஹிக்கியின் வாழ்க்கையும் இருந்தது. மரணத்தின் மீதான அரசு விசாரணையை WSWS செய்தியாளர்கள் தொடர்ந்து கவனித்து வந்தனர். அந்த இளைஞரின் கொலைக்குப் பொறுப்பான போலிஸ் அப்பட்டமாக பூசிமெழுகுவதை அம்பலப்படுத்தினர். 

மார்ச் 11 அன்று, ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிட்டில் பயங்கரவாதக் குண்டுவெடிப்பில் 192 பேர் மாண்டனர். WSWS ஆசிரியர் குழு இத்தாக்குதலைக் கண்டனம் செய்து அறிக்கை வெளியிட்டது. அதிகப்பட்ச மனித வாழ்க்கையை அழிக்கும் நோக்குடன் வகைதொகையற்ற முறையில் செய்யப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு ஆழமான குரோதம் படைத்த குழுக்களின் முத்திரை ஆகும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

José María Aznar இன் வலதுசாரி மக்கள் கட்சி அரசாங்கம் இந்தக் குண்டுவெடிப்புக்கும் புஷ்ஷின் ஈராக்கிலான விருப்பக் கூட்டணியில் இணைந்து கொண்ட அதன் முடிவிற்கும் இடையில் இருந்த தொடர்பை மறைக்கும் பொருட்டு இந்தக் குற்றத்திற்கு அல் கெய்தாவைப் பழிகூறாமல் பாஸ்க் பிரிவினைவாத ETA தான் காரணம் என்றது.

மூன்று நாட்களுக்குப் பின்னர், தேச அளவில் நடந்த தேர்தல்களில் மக்கள் கட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டது. WSWS பகுப்பாய்வு செய்திருந்தவாறு இது, முதலாவதாய் ஈராக் போருக்கு ஸ்பெயின் காட்டிய அளவுகடந்த எதிர்ப்பிலும், இரண்டாவதாய் அஸ்னரின் மக்கள் கட்சியின் மீதான பரவலான நம்பிக்கை இழப்பிலும்; இறுதியாய் ஃபிராங்கோவின் அரசியல் வாரிசுகள் தங்களது ஆட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காக மாட்ரிட் அட்டூழியங்களுக்கு யார் காரணம் என்பதில் திட்டமிட்டு பொய் கூறி வந்திருக்கிறார்கள் என்பது வெளிப்பட்டபோது வெடித்த கோபத்திலுமாய் வெளிப்பாடு காட்டிய ஸ்பானிய தொழிலாள வர்க்கத்தின் திட்டவட்டமான ஏகாதிபத்திய எதிர்ப்பு மனோநிலை மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான செயலூக்கமிக்க உறுதி ஆகியவற்றையே பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.

அடுத்து வந்த ஜோசே லூயி சப்பாத்தேரோவின் சோசலிசத் தொழிலாளர் கட்சி அரசாங்கமானது ஸ்பானியத் துருப்புகள் ஈராக்கில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று அறிவித்து புஷ் நிர்வாகத்தின் கோபத்தையும், ஸ்பானிய மக்கள் கோழைகள், பயங்கரவாதத்துடன் சமரசம் செய்து கொள்பவர்கள் என்றெல்லாமான குற்றச்சாட்டுகளையும் கொண்டுவந்தது. எப்படியிருந்தபோதிலும், மக்கள் கட்சியின் ஒட்டுமொத்தமான ஈராக் கொள்கைக்குள் முழுவீச்சிலான பொது விசாரணை எதனையும் தடுத்து விடுகின்ற நோக்கத்துடன், மாட்ரிட் குண்டுவீச்சு குறித்து விசாரிக்க வரம்புக்கு உட்பட்ட ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமித்தது.

அத்துடன் மார்ச் மாதத்தில், சீனாவில் இருந்த ஸ்ராலினிச ஆட்சி தனியார் சொத்துடைமை, வணிகம், மற்றும் செல்வத்தை வெளிப்படையாகப் பாதுகாக்கும் வகையில் நாட்டின் அரசியல் சட்டத்தைத் திருத்தியது. 1979 தொடங்கிய சீனாவின் சுதந்திரச் சந்தை திட்டநிரலால் முளைத்திருந்த புதிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களின் பேரில் சீன அரசு எந்திரம் மறுவடிவமைக்கப்படுவதன் தொடர்ச்சியை இது குறித்தது. சீனாவின் துரிதமான பொருளாதார வளர்ச்சியின்போது பெரும் செல்வம், சீனாவில் இருக்கும் ஆளும் உயரடுக்கினர் மற்றும் முதலாளித்துவ உயரடுக்கினரால் திரட்டிக் கொள்ளப்பட, சீனத் தொழிலாள வர்க்கமோ முன்னெப்போதையும் விட சீரழியும் சமூக மற்றும் வேலை நிலைமைகளால் பாதிப்புற்றது.

மே மாதத்தில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்தது. ஆளும் வலது சாரி பாரதிய-ஜனதாக் கட்சியும் அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) யும் ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு எட்டு மாதங்கள் முன்பாகவே பிப்ரவரியிலேயே கூட்டணி ஆட்சியைக் கலைத்து விட்டு தேர்தலுக்கு அழைப்பு விடுத்தன. துரிதமான பொருளாதார வளர்ச்சிப் புள்ளி விவரங்களையும் பிற்போக்கான சர்வதேசச் சூழலையும் அனுகூலமாக்கிக் கொள்ளும் நம்பிக்கையில் பாஜக இவ்வாறு செய்தது. ஆனால் தேர்தலில் அது அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. இந்தியா ஒளிர்கிறது என்ற பெயரில் ஊக்குவிக்கப்பட்ட பாஜகவின் வணிக-ஆதரவு திட்டநிரலுக்கு உருவாகியிருந்த பரவலான குரோதத்தையே இந்த வாக்குகள் பிரதிபலித்தன.

இதனையடுத்து, இந்தியாவில் ஒரு புதிய அரசாங்கம் உருவாக்கப்படுவதில் ஸ்ராலினிஸ்டுகளும் அவர்களது இடது முன்னணியும் ஒரு மையமான பாத்திரத்தை ஆற்றினர். பாரம்பரியமாய் முதலாளிகளின் அபிமானத்திற்குரிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையில் உருவான இந்த புதிய  அரசாங்கம், தோற்கடிக்கப்பட்ட பாஜக தலைமையிலான ஆட்சி செய்த அதே சந்தை-ஆதரவு சீர்திருத்தங்களை தொடர்ந்ததோடு, அமெரிக்காவுடனான அதன் மூலோபாயக் கூட்டையும் தொடர்ந்து பின்பற்றியது.

ஜூன் மாதத்தில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரோனால்ட் றேகனின் மரணம் முதலாளித்துவ ஊடகங்களுக்கு எதிர்பார்த்தவாறாய் புகழ்ச்சி வெள்ளத்திற்கும் புனைவுப்படுத்தலுக்குமான தருணமாக இருந்தது. அவருக்கான இரங்கல் செய்தியில், டேவிட் நோர்த் றேகனது ஜனாதிபதிக் காலத்தின் உண்மையான முக்கியத்துவம் பற்றி விவாதித்தார். இக்காலம் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பலியிட்டு - உபயம்: AFL-CIO அதிகாரத்துவம் மற்றும் ஜனநாயகக் கட்சி - நிதி உயரடுக்கு செழித்து கொட்டமிட்ட ஒரு காலமாக இருந்தது.

நோர்த் கூறினார்: அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் கொண்டாடும் மகத்தான தகவல்தொடர்பாளராய் இருப்பதற்கு வெகு அப்பால்,

றேகனின் வழக்கமான உரை என்பது அன்றாடம் அமெரிக்காவின் மேரியாட், ஹையாட் மற்றும் ஹில்டான்களின் நடைபெறும் எண்ணற்ற வணிக விருந்துகளில், நசித்த உருளைக்கிழங்கு மற்றும் அவித்த கோழி ஆகியவற்றுடன் சேர்த்து தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள் கொடுக்கக் கூடிய அதே உருப்படாத, உதவாத, சாரமில்லாத, முட்டாள்தன்மான பேச்சு வகையின் கலவையாகவே இருக்கும்.

செப்டம்பர் மாதத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காகசஸ் பகுதிக்கு அருகிலிருக்கும் வடக்கு ஒசடியாவில் உள்ள பெஸ்லானில் இருக்கும் ஒரு பள்ளியை செச்சன் கிளர்ச்சியாளர்களின் ஒரு குழு கைப்பற்றியது. இறுதியில் ரஷ்ய போலிஸ் அதிரடியாக பள்ளிக்குள் நுழைந்தது. இதில் உயிரிழப்பு திகைக்க வைக்கும் எண்ணிக்கையை எட்டியது. பின் புட்டின் அரசாங்கம் இந்த பேரிழப்பை அடுக்கடுக்கான பொய்களைக் கொண்டு மறைக்கப் பார்த்ததுடன் இந்த அட்டூழியத்தை பிராந்தியம் முழுவதும் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிப்பதற்காய் பயன்படுத்திக் கொண்டது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு அடுத்தபடியாக ஈராக்கிற்கு மிக அதிகமான எண்ணிக்கையில் துருப்புகளை அனுப்புவதற்கு உறுதியளித்திருந்த ஆஸ்திரேலிய அரசாங்கம் அக்டோபர் 9 அன்று தேர்தலைச் சந்தித்தது. ஸ்பெயின் தேர்தல் முடிவுக்குப் பின்னர், தொழிற் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் மார்க் லதாம் அந்த ஆண்டு இறுதிக்குள் ஆஸ்திரேலிய படைகளை திரும்பிப் பெற்றுக் கொள்ளவிருப்பதாக மிகவும் தரமானதொரு வாக்குறுதியை அளித்திருந்தார். இதனையடுத்து அமெரிக்காவில் இருந்து மிகக் கூர்மையான எச்சரிக்கைகள் வந்தன. அதனால் தொழிற்கட்சி உடனே வழிக்கு வந்தது. ஈராக்கில் ஆக்கிரமிப்பை தொடர்வதற்கான தனது ஆதரவை உறுதி செய்ததோடு வருங்காலத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அமெரிக்க-தலைமையிலான எந்த வலிந்த முன்கூட்டிய போர்களுக்கும் தனது முன்கூட்டிய ஆதரவையும் தெளிவாக்கியது.

உத்தியோகபூர்வ தேர்தல் பிரச்சாரத்தில் ஈராக் போர் குறித்த எந்தவொரு விவாதமும் இல்லை. ஹோவார்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழிற்கட்சியின் வாக்குகள் 38 சதவீதத்துக்கும் கீழே சரிந்திருந்தது. இது 1931க்குப் பிந்தைய அதன் மிகக் குறைந்த வாக்குவிகிதமாகும். ஒரு இரண்டு பாக கட்டுரையில் WSWS விளக்கியது: ஊடக வித்தகர்கள் சொல்வது போல, ஹோவார்டின் வெற்றி என்பது ஈராக் ஆக்கிரமிப்புக்கான ஆதரவையோ, அரசாங்கத்தின் பொய்களைக் கண்டுகொள்ளாத நிலையையோ, அல்லது கூட்டணி அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளில் வாக்காளர்கள் வளமைக்கான நம்பிக்கையும் திருப்தியும் கொண்டிருப்பதையோ குறிக்கவில்லை. மாறாக, மில்லியன் கணக்கான மக்களின் ஆழமான கவலைகளுக்கு இரு-கட்சி அமைப்புமுறையின் சட்டகத்திற்குள்ளாக எந்த வடிகாலும் இல்லை என்பதையே காட்டுகிறது.

மத்திய கிழக்கில் 2004 ஆம் ஆண்டின் ஒரு முக்கியமான நிகழ்வாக யாசர் அரஃபாத்தின் மரணம் அமைந்திருந்தது. ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக பாலஸ்தீன எதிர்ப்பின் சர்வதேச அடையாளமாக இருந்த யாசர் அரஃபாத் நவம்பர் 11 அன்று மரணமடைந்தார். முன்னதாக பல மாதங்களுக்கு அவர் இஸ்ரேலிய துருப்புகளின் முற்றுகையில் வீட்டுக்கைதியாக வாழத் தள்ளப்பட்டு, மிக அடிப்படை வசதிகளும் கூட மறுக்கப்பட்ட நிலையில் இருந்தார். WSWS இரங்கல் செய்தியில் கூறியது:

மாபெரும் தீரமும் பாலஸ்தீன விடுதலைக்கு மாறா விசுவாசமும் கொண்ட ஒரு மனிதராக யாசர் அரஃபாத் நினைவுகூரப்படுவார்... அரஃபாத்தின் தேசியத் வேலைத்திட்டம் இறுதியில் தோல்வி கண்டதென்றால் அதற்கு தனி மனிதரின் குணநலன்களைக் காரணமாகக் கூற முடியாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அரஃபாத்தின் பலமும் பலவீனங்களும் அவர் தலைமை நடத்திய அரசியல் இயக்கத்தின் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையுமே பிரதிபலித்தது... அரஃபாத்தின் துயரநிலைக்கான வேர் அவரது அரசியல் போராட்டம் அடித்தளமாகக் கொண்டிருந்த தவறான அரசியல் முன்னோக்கிலேயே அமைந்திருக்கிறது. தேசிய ஒடுக்குமுறை மற்றும் சமூகச் சுரண்டலுக்கான தீர்வு என்பது தேசியத்தின் பாதையில் அல்ல, மாறாக சர்வதேசிய மற்றும் சோசலிசத்தின் பாதையிலேயே அமைந்திருக்கிறதுஎன்ற இருபதாம் நூற்றாண்டின் அடிப்படையான பாடம் இன்றும் கூட, அதாவது விரல்விட்டு எண்ணத்தக்க வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிற ஒரு உலகளாவிய பொருளாதாரத்தின் காலத்திலும் கூட, இன்னும் கூடுதல் திட்டவட்டமானதாகவே ஆகியிருக்கிறது.

உக்ரைனில் நவம்பர் 21 அன்று நடந்த ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது சுற்றில், ரஷ்யாவுடன் நெருக்கமான தொடர்புகள் கொண்டவரும், நாட்டின் ரஷ்ய மொழி பேசும் கிழக்குப் பகுதியை அடிப்படையாகக் கொண்ட நிலக்கரி மற்றும் இரும்பு வணிக முதலைகளின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்தவருமான விக்டர் யானுகோவிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆயினும் அவரை எதிர்த்து நின்ற விக்டர் யுஷ்செங்கோ தேர்தல் மோசடி நடந்திருப்பதாகக் கூறி தொடர்ச்சியான மக்கள் ஆர்ப்பாட்டங்களைத் தலைமை கொடுத்து நடத்தினார். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆளும் உயரடுக்கினர் ஆதரவளித்த இப்போராட்டங்களை பெருநிறுவன ஊடகங்கள் ஆரஞ்சுப் புரட்சி என்று  அழைத்தன. அமெரிக்காவின் பாத்திரத்தை எதிர்த்த WSWS அமெரிக்க ஆதரவு வண்ணப் புரட்சிகள் சேர்பியாவிலும் ஜோர்ஜியாவிலும் எதை உருவாக்கியது என்பதைக் கூறி எச்சரித்தது.

யுஷ்செங்கோ உக்ரைனை மேற்கத்திய மூலதனத்திற்கு திறந்து விட்டு மூலோபாயரீதியாக அமெரிக்காவை நோக்கி நோக்குநிலை கொண்டதாக அமைக்க விரும்பினார். இறுதியில், அவரை எதிர்த்தவர்கள் எதிர்ப்பைக் கைவிட்டு டிசம்பர் 26 அன்று மறுதேர்தலுக்கு ஒப்புக் கொண்டார்கள். இதில் யானுகோவிச் தோற்கடிக்கப்பட்டார். உக்ரைனின் ஆளும் உயரடுக்கிற்குள் இருந்த உள்ளுக்குள்ளான சண்டை குறித்த ஒரு சுயாதீனமான பகுப்பாய்வை WSWS வழங்கியது. ஜனாதிபதித் தேர்தல் போட்டியாளர்களுக்குள்ளாக பரந்த மக்களின் நலன்களுக்கு பொதுவான ஏதொன்றும் இல்லை என்ற குறிப்புடன் கீவ் நகரில் இருந்து அளிக்கபட்ட ஒரு கள அறிக்கையும் கூட இதில் அடங்கும்.

 ஹைத்தியில் ஜனாதிபதி ஜோன் பேர்ட்ராண்ட் ஆரிஸ்டைடின் தேசிய அரசாங்கம் சிஐஏ ஆதரவுடனான ஒரு ஆட்சிக்கவிழ்ப்பின் மூலமாகக் கவிழ்க்கப்பட்டதன் பின்னர் அமெரிக்க மரைன்கள் போர்ட்-ஆஃப்- பிரின்ஸ் வீதிகளை ரோந்து வருகிறார்கள்.

 

Featured material

·         1 March 2004The overthrow of Haitis Aristide: a coup made in the USA

·         5 April 2004 ஹைட்டியை அமெரிக்கத் துருப்புக்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது ஏன்

·         20 March 2004 Spain: How Aznars lies paved the way for his defeat

·         6 May 2004 TJ Hickey and the plight of young Aboriginal Australians

·         15 May 2004 இந்தியாவில் அரசியல் பூகம்பம்
இந்து மேலாதிக்கவாத பிஜேபி பதவியை இழந்தது

·         3 November 2004 2004 ஆஸ்திரேலிய தேர்தல்: ஹோவர்டின் "வெற்றியின்" இரகசியம்: முதல் பகுதி

·         4 November 2004 2004 ஆஸ்திரேலியத் தேர்தல்: ஹோவர்ட்டின் "வெற்றியின் இரகசியம்" : பகுதி 2

·         12 November 2004 யாசர் அரஃபாத்: 1929-2004


ஜனநாயக உரிமைகளும் சமூகப் போராட்டங்களும்                

2004 ஆம் ஆண்டு உலகெங்கிலும் ஜனநாயக உரிமைகள் பெருமளவில் தாக்கப்படுவதைக் கண்ட ஆண்டாக இருந்தது. அமெரிக்காவில் பயங்கரவாத அச்சுறுத்தல் என்பதாக சொல்லப்பட்டதைக் கொண்டு புஷ் நிர்வாகம் போலிஸ்-அரசின் அதிகாரங்களைப் பரந்த அளவில் விரிவுபடுத்தியது. அமெரிக்கப் போர்க் கொள்கையுடன் தொடர்பு கொண்ட நாடுகள் பலவற்றிலும் இந்தப் போக்கே ஆளும் உயரடுக்கினரால் பின்பற்றப்பட்டது.

புத்தாண்டு தொடங்கி இரண்டு வாரங்கள் முடிவதற்கு முன்பாகவே, புஷ் போலிசின் உளவு அதிகாரங்களை விரிவுபடுத்தும் ஒரு மசோதாவையும் சர்ச்சை உண்டாக்கிய தேசப்பற்று மசோதாவையும் சட்டமாக்கினார். குவாண்டானாமோ விரிகுடாவில் காலவரையின்றி சிறைக்கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதை சவால் செய்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் கைது செய்யப்படுகிறவர்களுக்கு தங்களது சிறைவாசத்தை சவால் செய்வதற்கான எந்த உரிமையும் இல்லை என்று பதில் கூறி புஷ் நிர்வாகம், ஆட்கொணர்வு மனு போன்ற அடிப்படையான உரிமைகளையும் அழிப்பதற்குத் தேவையான வாதங்களை சட்டரீதியாக வைத்தது.

அமெரிக்காவின் பரந்த மக்களுக்கு எதிராக அந்நாட்டின் உளவு அமைப்புகளின் அதிகாரங்களை வலுப்படுத்தும் வகையில் அவற்றை மிகப்பெரும் அளவில் மறுஒழுங்கு செய்யும் ஒரு தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றம் தழுவிக் கொண்டதுடன் அந்த ஆண்டு நிறைவடைந்தது. அதே நேரத்தில் நியூயோர்க்கின் முன்னாள் போலிஸ் கமிஷனரான பேர்னார்ட் கெரிக் தாயகப் பாதுகாப்புத் துறையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை - இது இறுதியில் ஊழலிலும் பின் கெரிக் திரும்பப் பெறப்படுவதிலும் முடிந்தது - அமெரிக்க பாதுகாப்பு எந்திரத்தில் தாதாக்களைப் போன்ற கூறுகள் எழுச்சி பெற்றதின் மீது வெளிச்சம் பாய்ச்சியது.

இதேபோன்ற அபிவிருத்திகள் ஐரோப்பாவிலும் நிகழ்ந்தன. புலம் பெயர்ந்தவர்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய விடாமல் தடுக்க ஐரோப்பியக் கோட்டை கொள்கை திணிக்கப்பட்டது. மத்திய தரைக்கடலில் ரோந்து சுற்றுவதற்கென ஃபிரண்டெக்ஸ் (Frontex) என்கிற சிறப்பு எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்படுவது இதில் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் வாழ வழி தேடி வந்த பல்லாயிரக்கணக்கான அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். ஐரோப்பாவிற்கு உள்ளே பிடிபடும் அகதிகள், குறிப்பாக ஜேர்மனியில், அதிகமான முரட்டுத்தனத்துடன் கையாளப்பட்டனர்.

பிப்ரவரி மாதம், 25,000க்கும் அதிகமான அகதிகளை மொத்தமாக சொந்த நாட்டிற்குத் திருப்பியனுப்ப டச்சு நாடாளுமன்றம் முடிவு செய்திருந்தது. அக்டோபர் மாதத்தில், இத்தாலி அரசாங்கம், எப்படியோ தப்பிப் பிழைத்து இத்தாலிக் கரைகளுக்கு வந்து சேர்ந்து விட்டிருந்தவர்களையும், அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பிக்க சர்வதேச மற்றும் ஐரோப்பிய சட்டத்தின் கீழ் அவர்களுக்கு இருக்கும் உரிமையைக் கூட அளிக்காமல், உடனடியாக திருப்பியனுப்பத் தொடங்கியது.

பிரான்சில், முஸ்லீம்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களுக்கு எதிரான பிரச்சாரம் மிகப் பகிரங்கமானதும் பிற்போக்குத்தனமானதுமான ஒரு வடிவத்தை எடுத்தது. பள்ளிகளில் இஸ்லாமிய பர்தாவைத் தடை செய்வதை கன்சர்வேட்டிவ் அரசாங்கம், சோசலிஸ்ட் எதிர்க்கட்சி, ஊடகங்கள், மற்றும் மிகவும் தாராளவாதம் பேசும் மற்றும் இடது அமைப்புகளும் கூட ஆதரித்தன. குடியரசு விழுமியங்கள் மற்றும் மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதான போர்வையின் கீழ் இது மேற்கொள்ளப்பட்டது. உண்மையில் சமூக வேலைத்திட்டங்கள் மீதான தாக்குதல்களின் சமயத்தில் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தும் பொருட்டு அந்நியர்வெறுப்பை தூண்டி விடுவதற்கு தேவைப்பட்ட ஒரு முகமூடியாகவே இது இருந்தது.

செப்டம்பர் 11 தாக்குதல் என்பது வெள்ளை மாளிகையும், பென்டகனும் மற்றும் சிஐஏவும் தாங்கள் விரும்பிய எதையும் செய்வதற்கான சகலத்திற்குமான ஒரு சாக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது என்றால், இந்தத் தாக்குதல் மீதான உத்தியோகப்பூர்வ விசாரணையோ, அமெரிக்காவில் ஒரு பேரழிவுகரமான பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவிருக்கிறது என்கிற எச்சரிக்கைகளுக்குப் பதிலிறுப்பாக புஷ் நிர்வாகம் அலட்சியம் காட்டியதை, நடவடிக்கை எடுக்காததை அல்லது முற்றுமுதலாக உதாசீனம் செய்ததை திட்டமிட்டு மூடிமறைத்தது.

செப்டம்பர் 11 விசாரணை வெளிப்படுத்தியது என்ன என்ற விரிவான பகுப்பாய்வில், WSWS, இந்த இருகட்சி ஆணையமானது, அமெரிக்காவின் பாதுகாப்பு எந்திரம் இந்தத் தாக்குதலை உண்மையில் நடக்க அனுமதித்திருந்தது; அத்துடன் அல்கெய்தா தலைமை சிஐஏவுடன் கொண்டிருந்த நீண்டகால உறவுகள் ஒருபோதும் தீவிர விசாரணைக்குட்படுத்தப்படவில்லை ஆகியவற்றுக்கு ஆதாரங்கள் பெருகியிருந்ததை மறைக்கின்ற பணி அளிக்கப்பட்டதாய் இருந்தது.

2004 ஆகஸ்டில், நிதி ஸ்தாபனங்கள் அல்கெய்தாவின் கண்காணிப்பு அச்சுறுத்தல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு விடயத்தைப் பயன்படுத்தி அமெரிக்க அரசாங்கம் ஆரஞ்சு உஷார்நிலையை அறிவித்தது. வாஷிங்டன், நியூயோர்க், நெவார்க், நியூ ஜேர்சி ஆகிய இடங்களில் இருக்கும் முக்கியமான நிதி நிறுவனங்களைச் சுற்றி ஆயுதமேந்திய உள்ளூர் போலிசார் மற்றும் கூட்டரசு போலிசார் நூற்றுக்கணக்கில் நிறுத்தப்பட்டனர். கெர்ரி மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த அரசியல் நடவடிக்கையானது, ஜோர்ஜ் புஷ் மீண்டும் தேர்வு செய்யப்படுவதை ஊக்குவிப்பதற்கும் நவம்பர் தேர்தல் ஒரு பீதியான சூழலின் கீழ் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றாகும்.

அதே மாதத்திலேயே, அடிப்படை ஜனநாயக மற்றும் அரசியல்சட்ட உரிமைகளை அப்பட்டமாக மீறும் விதமாக, FBI இன் பயங்கரவாதத் தடுப்பு கூட்டுப் படை (JTTF) நியூயோர்க் போலிஸ் துறையுடன் இணைந்து, போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை வேவு பார்ப்பதற்கும், அவர்களை விசாரிப்பதற்கும், மற்றும் அச்சுறுத்துவதற்கும் அத்துடன் போஸ்டனில் நடைபெறவிருந்த ஜனநாயகக் கட்சியின் மாநாட்டிற்கும் நியூயோர்க் நகரில் நடைபெறவிருந்த குடியரசுக் கட்சியின் மாநாட்டிற்கும் முன்னதாக அவர்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த நடவடிக்கைகளை குலைப்பதற்கும் முகவர்களைத் திரட்டியது.  

புஷ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடுமையான அடக்குமுறையை கையாண்ட நியூயோர்க் போலிஸ் துறை 1500 பேர் முதல் 2000 பேர் வரை கைது செய்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மிகவும் மோசமான சுற்றுச்சூழலுக்குள் - சில சந்தர்ப்பங்களில் 24 மணி நேரம் அல்லது அதற்கும் கூடுதலான காலத்திற்கும் - அடைக்கப்பட்டிருந்தனர். ரேசர் கம்பி கூரையுடனான சங்கிலிக் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் எண்ணெய் மற்றும் இரசாயனங்கள் சிந்திக் கிடந்த தரைகளில் தூங்குவதற்கு தள்ளப்பட்டனர்.

பயங்கரவாதத்தின் மீதான போரின் உண்மையான இலக்குகள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் குகைகளில் ஒளிந்திருக்கும் ஒரு சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அல்லர், மாறாக அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது ஆளும் வர்க்கம் தொடுக்கின்ற தாக்குதல்களுக்கு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எழுகின்ற பெருகும் சமூக எதிர்ப்பே அதன் உண்மையான இலக்கு என்பதையே இந்த போலிஸ் அணிதிரட்டல்கள் எடுத்துக் காட்டின.

2004 ஆம் ஆண்டுக்குள்ளாக, முக்கியமான தொழிற்மயப்பட்ட நாடுகளில் மிகவும் ஏற்றத்தாழ்வு மிக்கதாக அமெரிக்கா ஆகியிருந்தது. ஆழமடைந்த சமூகத் துருவமயமாக்கலுக்கு WSWS கணிசமாய் கவனம் கொடுத்தது. 2002-2003 காலத்தின் போதான ஒரு சமயத்தில் 82 மில்லியன் அமெரிக்கர்களுக்கு சுகாதாரக் காப்பீடு அற்ற  நிலை இருந்தது; 2001 ஆம் ஆண்டின் மந்தநிலையில் இருந்தான மீட்சி என்று சொல்லப்பட்டதொரு சமயத்தில் பெருநிறுவனங்கள் ஆயிரக்கணக்கான வேலைகளைக் குறைத்தன; அதேசமயத்தில் ஆளும் உயரடுக்கின் செல்வம் மட்டும் வகைதொகையின்றிப் பெருகிச் சென்றது.

இவையே உலகளாவிய போக்குகளாகவும் இருந்தன. உலகெங்கும் இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை 587 என்ற சாதனை அளவுக்கு அதிகரித்தது. அவர்களின் ஒட்டுமொத்த செல்வம் ஒரே வருடத்தில் 36 சதவீதம் அதிகரித்து விட்டிருந்தது. அதே நேரத்தில் ஒரு பில்லியன் குழந்தைகள் சமூக வறுமையின் ஒன்று அல்லது கூடுதலான வடிவங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 500 மில்லியன் குழந்தைகள் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததும் 270 மில்லியன் குழந்தைகள் சுகாதாரப் பராமரிப்புக்கு அணுகலின்றி இருந்ததும் அடங்கும்.

வாழ்க்கைத் தரங்களின் மீதான தாக்குதலுக்கு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பதில் இல்லாமல் இல்லை. சீனாவில் அதிகரித்துச் செல்லும் ஊழல் மற்றும் வறுமைக்கு எதிராக நடந்த போர்க்குணம் மிக்க நகர்ப்புற ஆர்ப்பாட்டங்களின் ஒரு அலை, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நடந்த ஒரு பெரும் வேலைநிறுத்தம், ஜேர்மனியில் ஓப்பல் கார் தொழிற்சாலையில் வேலை வெட்டுகளுக்கு எதிராக நடந்த ஒரு போராட்டம், மிச்சிகனில் செவிலியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தங்கள் ஆகியவை WSWS இல் வெளியான பல்வேறு தொழிலாளர் நடவடிக்கைச் செய்திகளில் சிலவாகும். 

 பயங்கரவாதத்தின் மீதான போர் குறித்து நியூ மெக்சிகோவில் உரையாற்றுவதற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் W.புஷ்

 

Featured material

·         22 April 2004 செப்டம்பர் 11 விசாரணைக் குழு எவற்றை வெளிப்படுத்தின  முதல் பகுதி

·         26 April 2004 செப்டம்பர் 11 குழு விசாரணைகள் எவற்றை வெளிப்படுத்தின?
இரண்டாம் பகுதி: எச்சரிக்கைகள் அலட்சியப்படுதல் -- FBI-யும், நீதித்துறையும்

·         27 April 2004 செப்டம்பர் 11 விசாரணைக்குழு எவற்றை வெளிப்படுத்தியது முன்றாம் பகுதி: CIA-வும் அல்கொய்தாவும்

·         1 May 2004 செப்டம்பர்11 விசாரணைக்குழு எவற்றை வெளிப்படுத்தின
நான்காம் பகுதி: விமானக் கடத்தல்கள் வேண்டுமென்றே கைவிடப்பட்டன

·         10 June 2004 பாரிஸில் லூத் ஊவ்றியேரின் விழா
ஈராக் போர்பற்றி அமைதியும் தலையணி தடைக்கு பாதுகாப்பும்

·         4 September 2004 The Republican convention and the specter of dictatorship

·         7 December 2004Interview with WSWS correspondent
Rich and poor in twenty-first century China
 

Part One

·         8 December 2004Interview with WSWS correspondent
Changing political attitudes in twenty-first century China
 

Part Two

·         16 December 2004The Bernie Kerik saga
The war on terror and the rise of the political underworld


நான்கு கண்டங்களில் SEP பிரச்சாரங்கள்

2004 ஆம் ஆண்டில், அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் நான்கு கண்டங்களில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டன. இலங்கை, ஜேர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்கள் ஒரு பொதுவான சர்வதேசிய வேலைத்திட்டத்தை முன்வைத்தனர். ஏகாதிபத்தியப் போருக்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதற்கான போராட்டத்தை இது மையத்தில் கொண்டிருந்தது.

இலங்கையில் 2004 ஏப்ரலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிட்டது. கட்சியின் தேர்தல் அறிக்கையில், இலங்கை மற்றும் தெற்காசியாவில் உள்ள தொழிலாள வர்க்கத்தை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கும் இருக்கும் அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கை வரைந்து காட்டியது.

ஜனாதிபதி குமாரதுங்காவின் அரசியல்சட்ட கவிழ்ப்பு நடவடிக்கை ஆட்சியின் சர்வாதிகார வடிவங்களை நோக்கியும் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு மிருகத்தனமான இனவாதப் போர் தொடர்வதையும் நோக்கியுமான ஒரு திருப்பத்தைக் காட்டுகின்ற நிலையில், தேர்தலானது ஒரு திருப்புமுனையைக் குறித்து நிற்கிறது என்று சோசலிச சமத்துவக் கட்சி தனது பிரச்சாரத்தில் எச்சரித்தது. சிங்களப் பேரினவாத ஜேவிபி (JVP) மற்றும் ஜேஎச்யூ (JHU) மற்றும் போலி-இடது NSSP உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளையும் SEP அம்பலப்படுத்திக் காட்டியது. தேர்தலுக்குப் பின்னர், குமாரதுங்காவின் நிர்வாகம் உள்நாட்டுப் போரின் மறுவெடிப்புக்கான விதைகளை விதைத்து விட்டிருக்கிறது என SEP எச்சரிக்கை செய்தது.

ஜேர்மன் பிரிவான PSG, ஜூன் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவற்றிலும் நடந்த ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல்களில் தலையீடு செய்தது. பெரும் நிதி ஏகபோகங்களின் அதிகாரம் சூழ்ந்து திகழக் கூடிய முதலாளித்துவ ஐரோப்பிய அரசியல் சட்டம் முன்மொழியப்பட்டதற்கு எதிராக, ஐரோப்பிய கண்டத்தை சோசலிசரீதியில் ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு வேலைத்திட்டத்தை PSG முன்னெடுத்தது.

ஐரோப்பிய ஒன்றிய அரசியல்சட்டத்திற்கு எதிரான இந்த பிரச்சாரத்தில் பிரிட்டிஷ் பிரிவும் இணைந்து கொண்டது. பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் ஐரோப்பாவிற்குள்ளாக நெருக்கமான பொருளாதார உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முனைகின்ற அதே சமயத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான தனது சிறப்பு உறவையும் தொடர்ந்து பராமரிக்கும் முரண்பாடான நிலைப்பாட்டை ஆராயும் தனது சொந்த அறிக்கையை அது வெளியிட்டது.

நேட்டோவை, முன்னாள் வார்சோ ஒப்பந்தப் பிராந்தியமாக இருந்த பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்தமை, ஜேர்மனி மற்றும் பிற நெடுங்கால ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகிய இரண்டையுமே ICFI இன் பிரிவுகள் எதிர்த்தன. தொழிலாளர்களின் வேலைகள் மீதும் வாழ்க்கைத் தரங்களின் மீதுமான தாக்குதல் சமூக ஜனநாயகக் கட்சிக்கான அரசியல் ஆதரவில் ஒரு வீழ்ச்சியை உருவாக்கியது. ஜேர்மனியில் 25 சதவீத வாக்கு வங்கியாக அது குறைந்தது, இது வரலாற்றில் குறைவான அளவாகும்.

ஜேர்மன் முதலாளித்துவத்திற்கான ஒரு புதிய முட்டுத் தூணை வழங்குவதற்கான முயற்சியில், தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் மற்றும் இடதுகளின் ஒரு பிரிவு வேலைகள் மற்றும் சமூக நீதிக்கான ஒரு தேர்தல் மாற்று (WASG) என்ற அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பு இடது கட்சியை உருவாக்குவதற்காக கிழக்கு ஜேர்மன் PDS இன் முன்னாள் ஸ்ராலினிஸ்டுகளுடன் இணைவதற்குச் சென்றது.

ஊடகங்கள் ஏறக்குறைய புறக்கணித்த நிலையிலும் கூட PSG வேட்பாளர்கள் 26,000க்கும் அதிகமான வாக்குகளை வென்றனர். இது ஜேர்மன் தேர்தலில் அது பெற்ற சிறந்த வாக்கு எண்ணிக்கையாகும். முன்னதாக PSG செயலூக்கமான அமைப்புப் பலம் கொண்டிராத நகரங்களிலும் மாநகரங்களிலும் இருந்தும் கூட கணிசமான ஆதரவு கிட்டியிருந்தது. அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தின் அரசாங்கங்களுக்கும் மிகக் குறைந்த வாக்களிப்பு வீதங்களும் ஆளும் கட்சிகளுக்கான தோல்விகளும் அதிர்ச்சியூட்டின.

ஆஸ்திரேலியாவில், சோசலிச சமத்துவக் கட்சி அக்டோபர் கூட்டாட்சித் தேர்தலில் தலையீடு செய்தது. தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான அரசியல் குரலையும், போர், சமூகப் பிற்போக்குத்தனம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிராய் போராடுவதற்கான ஒரு சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தையும் அது வழங்கியது. உத்தியோகப்பூர்வ பிரச்சாரம் பொய்களும் சீண்டல்களும் கொண்ட ஒன்றாக இருந்ததை ஆரம்பத்தில் இருந்தே SEP கோடிட்டுக் காட்டியது. ஹோவார்ட் அரசாங்கம் குடும்பங்களின் கடன் அளவுகள் மிகப் பெருமளவில் இருந்ததைச் சுரண்டிக் கொண்டு அது அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்டால் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்பதான ஒரு அச்சுறுத்தல் பிரச்சாரத்தை நடத்தியதன் மூலம் பெரும் பொய் தந்திரத்தை போர் என்பதில் இருந்து பொருளாதாரத்திற்கு விரிவுபடுத்தியிருந்ததை SEP சுட்டிக் காட்டியது. அந்த ஆண்டு முழுவதிலும் SEP முன்னெடுத்து வந்திருந்த ஈராக் போருக்கு எதிரான பிரச்சாரம் தான் கட்சியின் தேர்தல் தலையீட்டின் மையத்தில் அமைந்திருந்தது.

SEP வேட்பாளர்கள் தொடர்ச்சியான பிரச்சார அறிக்கைகள், பொதுக் கூட்டங்கள் மற்றும் மக்கள் மன்றங்களில் பிரதான கட்சிகளின் வலது-சாரித் திட்டநிரலை அம்பலப்படுத்தியதோடு பல்வேறு சிறு கட்சிகள் மற்றும் ஆர்ப்பாட்ட அரசியல் வேட்பாளர்களிடம் இருந்து கட்சியின் தொழிலாள வர்க்க முன்னோக்கை வேறுபடுத்திக் காட்டினர். பீட்டர் காரெட் ஒரு தீவிரப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர் என்பதில் இருந்து ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசியல்வாதியாக அரசியல் பரிணாம வளர்ச்சி கண்டதை ஜேம்ஸ் கோகன் ஆய்வு செய்தார். SEP இன் தேசியச் செயலரான நிக் பீம்ஸ் எழுதிய இரண்டு பகுதிகள் கொண்டதொரு முக்கியமான கட்டுரையில் ஆஸ்திரேலிய பசுமைக் கட்சியினரின் தத்துவம் மற்றும் அரசியல் குறித்து எழுதினார்.

அமெரிக்காவில் மிக நீண்ட தேர்தல் பிரச்சாரமாக சுமார் பத்து மாத காலம் பிரச்சாரம் வாய்த்தது. ஜனவரி 27 அன்று விடுத்த ஒரு அறிக்கையில் SEP அது ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட இருப்பதை அறிவித்தது. SEP இன் தலைவராக நீண்டகாலம் இருந்தவரும் உலக சோசலிச வலைத் தளத்திற்கு எழுதுபவர் மற்றும் ஆசிரியராகவும் இருந்த பில் வான் ஓகென் ஜனாதிபதி வேட்பாளராக இருந்தார். SEP இன் இன்னொரு நீண்டகாலத் தலைவரும், ஓஹியோவின் டேய்டன் பகுதியில் வாகனத் தொழிலாளியாக இருந்து ஓய்வு பெற்றவருமான ஜிம் லோரென்ஸ் துணை ஜனாதிபதிக்கான வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் பில் வான் ஓகென் விடுத்த அறிக்கைகளில் தெளிவானது போல ஈராக் போருக்கு எதிராய் கொள்கை அடிப்படையிலான ஒரு நிலைப்பாட்டை எடுத்த ஒரே கட்சியாக SEP மட்டுமே இருந்தது என்பது பிரச்சாரத்தின் ஆரம்பத்திலேயே வெளிப்பட்டது.

முதலாளித்துவத்தின் நெருக்கடி, அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு, அத்துடன் ஜனநாயகக் கட்சியின் பாத்திரம் குறித்த ஒரு விரிவான திறனாய்வு ஆகியவை மீதான ஒரு புறநிலை ஆய்வு தான் 2004 அமெரிக்கத் தேர்தல்: ஒரு சோசலிச முன்னோக்கிற்கான அவசியம் என்ற தலைப்பின் கீழ் 2004 மார்ச் மாதத்தில் SEP ஒழுங்கமைத்த ஒரு மாநாட்டின் இதயத்தானமாக இருந்தது.

ஆரம்ப அறிக்கையில், உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவரான டேவிட் நோர்த், போரின் புறநிலைக் காரணங்களை திறனாய்வு செய்தபின் விளக்கினார்:

’2004 ஆம் ஆண்டின் மிக முதன்மையான கடமை ஜனாதிபதி புஷ்ஷை தோற்கடிப்பதே, அத்தனை பிற யோசனைகள் மற்றும் கவலைகளும் அதற்குக் கீழ் தான் என்பதான கூற்றினை சோசலிச சமத்துவக் கட்சி அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றிலான அனைத்துப் படிப்பினைகளின் அடிப்படையில் முற்றிலுமாய் நிராகரிக்கிறது.

ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காகப் போராடுவதே மிகவும் அவசரமானதும் அவசியமானதுமான கடமையாகும். புஷ் பிரச்சினை தொழிலாள வர்க்கத்தினாலேயே தீர்க்கப்பட வேண்டும். அது தனது சொந்தத் தீர்வை முன்னெடுக்க வேண்டுமே அன்றி அதனை ஆளும் உயரடுக்கின் பல்வேறு பிரிவுகளிடம் ஒப்படைக்க முடியாது.

இந்த மாநாட்டில் பில் வான் ஓகென் மற்றும் ஜிம் லோரென்ஸ் உரையாற்றினர். அத்துடன் ஆஸ்திரேலியா, ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் கனடாவில் இருந்து வந்திருந்த அனைத்துலகக் குழுவின் பிரதிநிதிகளும் உரையாற்றினர். அனைவருமே பிரச்சாரத்தின் சர்வதேசத் தன்மை குறித்து பேசினர்.

SEP இன் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே முக்கியமான ஆதரவை வென்றெடுத்தது. கொலராடோ, மிச்சிகன், மினசோடா, நியூ ஜேர்சி மற்றும் வாஷிங்டன் ஆகிய இடங்களின் வாக்குச் சீட்டுகளில் SEP வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றது. செப்டம்பரில் SEP வெளியிட்ட ஒரு தேர்தல் அறிக்கையில் தேர்தலில் இடம்பெற்ற முக்கியமான கருப்பொருட்கள் சுருங்க விவரிக்கப்பட்டிருந்தன.

ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கான வேட்பாளர்களை நிறுத்தியதுடன், கலிபோர்னியா, இலினாய்ஸ், மேய்னெ, மிச்சிகன் மற்றும் ஓஹியோ ஆகிய இடங்களில் நாடாளுமன்றம் அல்லது மாகாண சட்டமன்றத்திற்கான வேட்பாளர்களையும் SEP களமிறக்கியது. பல மாகாணங்களிலும் SEP வேட்பாளர்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் இருந்தான பயங்கர எதிர்ப்பை எதிர்கொண்டனர். இலினோய்யில், SEP வேட்பாளராக மாணவராகவும் பகுதி-நேர ஆசிரியராகவும் இருந்த ரொம் மக்கமன் களமிறக்கப்பட்டிருந்த நிலையில், அவரைத் திட்டமிட்டு பழிவாங்குவதற்கு இலினோய் பல்கலைக்கழக அதிகாரிகள் முனைந்தனர்.

அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் இந்த இலட்சியவேகத்துடனும் உற்சாகத்துடனுமான அரசியல் பிரச்சாரங்களுடன் கைகோர்த்து, ஜனாதிபதித் தேர்தலில் கெர்ரி மற்றும் ஜனநாயகக் கட்சியினருக்கு வழிமொழிந்த நோம் சோம்ஸ்கி வகையைச் சேர்ந்த போலி இடது புத்திஜீவிகள் மீதான ட்ரொட்ஸ்கிச விமர்சனத்தையும் அபிவிருத்தி செய்தன.

மந்த்லி ரிவ்யூ இதழின் இணை-ஆசிரியரும் ஏகபோக மூலதனம் (Monopoly Capital) என்ற செல்வாக்கான எழுத்துத் தொகுதியின் ஆசிரியருமான போல் ஸ்வீசியின் அரசியல் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் மீதான ஒரு முக்கியமான மதிப்பீட்டை நிக் பீம்ஸ் மேற்கொண்டார். ஸ்வீசி அடிப்படையில் மார்க்சின் முதலாளித்துவ உடைவு தத்துவத்தை நிராகரித்தார் என்பதையும் தன்னை அரசியல்ரீதியாக ஸ்ராலினிசத்துக்கு தகவமைத்துக் கொண்டார் என்பதையும் நிக் பீம்ஸ் விளக்கினார்.

ICFI இன் செயலரான பீட்டர் ஸ்வார்ட்ஸ், குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்தின் அரச முதலாளித்துவ, பப்லோவாத மற்றும் கூட்டுத்தொழிற்சங்கவாத வகைப்பாடுகளின் அரசியல் பிரதிநிதிகளாகத் திகழ்ந்த Lutte Ouvrière, the Ligue Communiste Révolutionaire, மற்றும் Parti des Travailleurs ஆகிய பிரான்சின் பிரதான சந்தர்ப்பவாத இடது குழுக்களின் வரலாற்றை விவரித்தார்.

பிரிட்டிஷ் SEP இன் செயலரான கிறிஸ் மார்ஸ்டென், அலெக்ஸ் காலினிகோ எழுதிய ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு விஞ்ஞாபனம் என்ற புத்தகத்திற்கு எழுதப்பட்ட மூன்று பாக திறனாய்வில் பிரிட்டிஷ் அரச முதலாளித்துவ குழுவான சோசலிச தொழிலாளர் கட்சியின் (முன்னதாக சர்வதேச சோசலிஸ்டுகள் என்று இருந்தது) அரசியலை ஆய்வு செய்தார்.

இந்த தத்துவார்த்த வேலையானது, அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளிலும் ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவ ஆட்சிக்கும் ஒரு இன்றியமையாத முட்டுத்தூணாக உருவெடுத்திருக்கும் போலி-இடது அமைப்புகளுக்கு எதிரான அரசியல் தாக்குதலை முன்னெடுப்பதில் அனைத்துலகக் குழுவுக்கு முற்றிலும் இன்றியமையாததாக இருந்தது.

Featured material

·         27 January 2004 சோசலிச சமத்துவக் கட்சி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கலந்து கொள்கின்றது

·         17 March 2004 உலக சோசலிச வலைத் தளம் - சோசலிச சமத்துவக் கட்சி மாநாட்டின் ஆரம்ப அறிக்கை
2004 அமெரிக்க தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் மூலோபாயம்

·         19 March 2004 சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை
இலங்கைத் தேர்தலில் சோசலிச பதிலீடு

·         27 March 2004 ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை: ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக

·         14 May 2004 ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இல்லை --- ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கே ஆம்

·         1 July 2004 ஐரோப்பிய யூனியன் தேர்தல் படிப்பினைகள்

·         2 July 2004 மூன்றாவது கட்சி பிரச்சாரத்தின் மீது ஜனநாகக் கட்சி தாக்குதலை நிறுத்து!
SEP வேட்பாளர் ''ரொம் மக்கமனை வாக்குப்பதிவில் சேர்த்துக்கொள்!

·         3 August 2004 Champaign, Illinois Electoral Board places SEP candidate on ballot

·         6 September 2004 2004 ஆஸ்திரேலிய தேர்தலில் ஒரு சோசலிச மாற்றீடு
சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தை ஆதரிப்பீர்

·         5 November 2004 சோசலிச சமத்துவக் கட்சியின் 2004 பிரச்சாரம்: எதிர்வரும் போராட்டங்களுக்கான ஒரு தயாரிப்பு

·         6 April 2004 மார்க்சிசமும் போல் ஸ்வீசியின் அரசியல் பொருளாதாரமும்
பகுதி 1 : ஆரம்பகால ஆதிக்கம்

·         8 July 2004 சந்தர்ப்பவாத அரசியல்: பிரான்சில் "தீவிர இடது"
முன்னுரை: ட்ரொட்ஸ்கிசமும் இடைநிலைவாதமும்

·         5 July 2004 பிரிட்டனின் சோசலிச தொழிலாளர் கட்சியும் தேசிய சீர்திருத்தவாதத்தை பாதுகாத்தலும்
அலெக்ஸ் காலினிகோஸ் இன் ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு அறிக்கை பற்றிய மதிப்புரை

·


கலையும் கலாச்சாரமும்

2004 ஆம் ஆண்டில் கோல்டு மவுண்டெயின், 21 கிராம்ஸ், மரியா ஃபுல் ஆஃப் கிரேஸ், தி ட்ரீமர்ஸ், சிட்டி ஆஃப் காட், குவெண்டின் டரண்டினோவின் கொஞ்சமும் உவப்பில்லாத கில் பில் 2, மற்றும் ஏராளமான பிற அமெரிக்க மற்றும் சர்வதேச திரைப்படங்களின் விமர்சனங்களை WSWS வெளியிட்டது. 76வது அகாதமி விருதுகள் மீதான ஒரு வருணனையும், அத்துடன் ஆலன் பேட்ஸ், மர்லான் பிராண்டோ மற்றும் மைக்கேலேஞ்சலோ அண்டோனியோனி போன்ற முக்கிய திரை ஆளுமைகளின் நினைவஞ்சலிகள் அல்லது பாராட்டுரைகள் இடம்பெற்றன.

கலாச்சாரத் தலைப்புகளுடனான WSWS இன் வெளியீடுகளில் புனோஸ் ஏரஸ், சான் பிரான்சிஸ்கோ மற்றும் பேர்லின் உள்ளிட உலகெங்கிலும் நடந்த திரைப்பட விழாக்கள் மீதான விரிவான செய்திகளும் இடம்பெற்றன.

சிறப்பான ஏகாதிபத்திய-எதிர்ப்பு ஆவணப்படமான தி பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸின் முழு மீட்புப் பதிப்பு வெளியீடு மீதான ஒரு திறனாய்வும் அத்துடன் அதன் இயக்குநர் கிலேஸ் டி போண்டிகோர்வோ உடனான ஒரு நேர்காணலும் மிக முக்கியமானவை. ரிச்சார்ட் பிலிப்ஸ் தன் திறனாய்வில் எழுதினார்:

ஆரம்ப வெளியீட்டுக்கு சுமார் 40 வருடங்கள் கழித்தும் இத்திரைப்படம் மிகப்பெரும் ஒத்ததிர்வைக் கொண்டுள்ளது. ஏனென்றால் சமகால காலனித்துவ ஒடுக்குமுறையின் செயல்பாட்டுமுறையை இது விளங்கப்படுத்துவதோடு ஒரு தேசிய கிளர்ச்சி இயக்கத்தை எழுச்சியூட்டுவதும் எரியூட்டுவதும் எது என்பதையும் வெளிப்படுத்துகிறது. இன்னும் சொன்னால் இந்த திரைப்படத்தில் காட்டப்படும் நகர முற்றுகைகளும், பாரிய சுற்றிவளைப்புகளும், மற்றும் சித்திரவதையும் பாலஸ்தீன மக்களின் மீதான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களையும் இன்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்படுகின்ற வழிமுறைகளையும் முன்கூட்டி படம்பிடித்தது போல் இருக்கிறது.

மைக்கேல் மூர் இன் அம்பலப்படுத்தல் ஆவணப்படமான ஃபாரன்ஹீட் 9/11 படத்திற்குக் கிடைத்த உண்மையான பரவலான பிரபலம் புஷ் நிர்வாகத்தின் பயங்கரவாதத்தின் மீதான போர் கொள்கைகளுக்கு எழுந்திருந்த பாரிய எதிர்ப்பை சுட்டிக் காட்டியது. டேவிட் வோல்ஷ் தனது திறனாய்வில் இப்படத்திற்கு வசூலில் ஆரம்பத்தில் கிட்டிய வெற்றியின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார். நூறாயிரக்கணக்கான மக்கள் புஷ்ஷிற்கும் ஈராக் போருக்குமான தங்களது வெறுப்பைக் காட்டும் வண்ணம் இப்படத்தைப் பார்க்க படைதிரண்டனர்.

பாரன்ஹீட் 9/11 க்குக் கிட்டியிருக்கும் பதிலிறுப்பு அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அதன் முன்னணி ஆளுமைகள் மீதான ஒரு உலுக்கும் அம்பலப்படுத்தல் ஆகும். இப்படத்திற்கு வசூலில் கிட்டியிருக்கும் வரவேற்பு - ஒரு புனைவல்லாத வகை திரைப்படத்திற்கு இது முன்கண்டிராத ஒரு வரவேற்பு - போர் ஜனாதிபதி மற்றும் அவரது ஆட்சியின் பிரபலம் குறித்த கூற்றுகளை பொய் என்பதை எடுத்துரைக்கிறது.

மூர் இன் அரசியல் பலவீனத்தையும் - குறிப்பாக அவர் ஜனநாயகக் கட்சியுடன், ஜனரஞ்சக கீழ்த்தர எண்ணங்களை சுரண்டுவதுடன், மற்றும் புஷ்ஷை ஒரு தனிநபராக விடாப்பிடியாக அணுகுவதுடன் முறித்துக் கொள்ள மறுத்ததை - இத்திறனாய்வு சுட்டிக்காட்டியது. மூர் இன் அடுத்துவந்த பரிணாமங்கள் இந்த எச்சரிக்கையை நிரூபணம் செய்தன.

பாரன்ஹீட் 9/11 இராணுவவாதத்தின் வெடிப்பை சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்புடன் பொருத்தியது என்றால், இப்போதோ மூர் ஒபாமா நிர்வாகத்தின் இராணுவவாதக் கொள்கைகளுக்கான ஒரு பகிரங்கமான வக்காலத்துவாதியாக இருக்கிறார். இந்நிர்வாகம் புஷ் நிர்வாகத்தைக் காட்டிலும் மென்மையாக இருப்பது போலவும் அவர் மோசடியாக சித்தரித்துக் காட்டுகிறார்.


The Battle of Algiers இருந்து ஒரு காட்சி

Featured material