WSWS : Tamil : நூலகம்
பதினைந்தாவது ஆண்டு தினம்

உலக சோசலிச வலைத் தளத்தின் பதினைந்து வருடங்கள்: 1998-2013

உலக சோசலிச வலைத் தளத்தின் 15 வது ஆண்டு நிறைவுக்கு வாசகர் வாழ்த்துக்கள்
உலக சோசலிச வலைத் தளம் 1998
உலக சோசலிச வலைத் தளம் 1999
உலக சோசலிச வலைத் தளம் 2000
உலக சோசலிச வலைத் தளம் 2001
உலக சோசலிச வலைத் தளம் 2002
உலக சோசலிச வலைத் தளம் 2003
உலக சோசலிச வலைத் தளம் 2004
உலக சோசலிச வலைத் தளம 2005
உலக சோசலிச வலைத் தளம 2006
உலக சோசலிச வலைத் தளம 2007
உலக சோசலிச வலைத் தளம 2008
உலக சோசலிச வலைத் தளம 2009

Year in Review: 2000

உலக சோசலிச வலைத் தளத்தின் முன்றாம் ஆண்டு

use this version to print | Send feedback

2000 ம் ஆண்டின் புத்தாண்டு தினத்தில் உலகெங்குமான மக்கள், புத்தாயிரமாண்டு வன்முறையும் ஏழ்மையும் குறைந்த ஒரு சிறந்த உலகத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கைகளோடு தொலைபேசிகளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஆளும் வர்க்கங்களும் தமது பங்காக சமூகப் பிரளயங்களும் புரட்சிகளும் கடந்த காலத்திற்குரியன என்றும் எதிர்வரும் காலகட்டம் முதலாளித்துவம் வெற்றிமுரசு கொட்டும் காலகட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் பிரகடனம் செய்தன.SWS!


திருடப்பட்ட தேர்தல்

அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவத்திற்குள்ளாக முன்னெப்போதையும் விட விரிந்துசெல்லும் சமூக மற்றும் பொருளாதாரப் பிரிவுகள் நிலவியதை உலக சோசலிச வலைத் தளம் அடையாளம் கண்டது. உலகளாவிய நிதி ஸ்திரமின்மையும் போட்டி தேசிய-அரசுகளுக்கு இடையில் தீவிரமடையும் மோதல்களும் போர்கள் மற்றும் அரசியல் கிளர்ச்சிகளின் ஒரு புதிய காலகட்டத்திற்கு கட்டியம் கூறி நிற்பதை நாம் வலியுறுத்தினோம்.

அந்த ஆண்டிலேயே இந்த மதிப்பீடு முதலில் பங்குச் சந்தையில் டாட்-காம் (dot-com) குமிழியின் உடைவின் மூலமாகவும் பின்னர் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் அமெரிக்காவின் மிகப் பெரும் அரசியல் நெருக்கடியாக உருவெடுத்த 2000 ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின் மூலமாகவும் நிரூபணம் பெற்றது. வாக்குகள் இடப்பட்டு ஒரு மாதத்திற்கும் அதிகமான காலத்திற்கு இந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவு சந்தேகத்திற்குரியதாகவே இருந்தது. இறுதியாக, உச்ச நீதிமன்றம் தலையிட்டு புளோரிடாவின் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி, அம்மாநிலத்தின் வாக்கு வெற்றியையும் அதன்மூலம் வெள்ளை மாளிகை அதிகாரத்தையும் ஜோர்ஜ் W. புஷ்ஷிற்கு வழங்கியது.

பெருநிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் தளராத எதிர்ப்பினை பராமரித்த WSWS அதேசமயத்தில், புளோரிடாவில் நடந்த இந்த கடுமையான மோதல் தொழிலாள வர்க்கத்திற்கு முக்கியத்துவம் உடையது ஏனென்றால் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளுமே ஜனநாயக நிர்ணயங்களுடன் முறித்துக் கொண்டு விட்டதை அது வெளியில் கொண்டுவந்து காட்டியிருந்தது என்று விளக்கியது.

அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதில் இருந்தே, WSWS, சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பின் மீதும், உழைக்கும் மக்களுக்கும் இந்த இரண்டு முதலாளித்துவக் கட்சிகளின் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான மிகப்பரந்த பிளவின் மீதும் கவனத்தைக் குவித்தது.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான துணை ஜனாதிபதியாக இருந்த அல் கோர், கிளின்டன் மீதான பதவிவிலக்கல் தீர்மான நெருக்கடிக்குக் காரணமான வலதுசாரி சதிக்கு பரந்துபட்டமக்கள் காட்டிய விரோதத்திற்கு எவ்வித அழைப்பையும் விட மறுத்தார். ஜனநாயகக் கட்சியில் கிளின்டனை மிகவும் பகிரங்கமாக விமர்சனம் செய்த கனெக்டிகட் செனட்டர் ஜோசப் லிபர்மானை துணைஜனாதிபதி பதவிக்கு நிறுத்த தேர்வு செய்யுமளவுக்கு இது சென்றிருந்தது.

 

பெருநிறுவன உயரடுக்கின் போட்டிக் கன்னைகள் அல் கோரின் பின்னாலோ அல்லது குடியரசுக் கட்சி போட்டி வேட்பாளரான, டெக்சாஸ் கவர்னரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான ஜோர்ஜ் W. புஷ்ஷின் பின்னாலோ திரண்ட அதேவேளை தொழிலாளர்கள் இந்த நிகழ்ச்சிப்போக்கில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டும் பெருமளவில் ஒதுக்கப்பட்டதுமாய் இருந்தனர். கண்ணியமான நேசமிக்க ஒரு கன்சர்வேடிவ் போன்று தோற்றம் காட்டிக் கொண்டிருந்த புஷ்ஷிடம் தோற்கக் கூடும் என்கிற நிலை தெளிவாக எழுந்த நிலையில் தான் கோர் கடைசி நிமிடத்தில் வெகுஜன அழைப்புவிட முனைந்தார். இதன்மூலம் தேர்தலில் அவரது சரிவு நின்று, அவருக்கு வெகுஜன வாக்கெடுப்பில் ஒரு குறுகிய வித்தியாசத்தில் வெற்றியை அளித்தது. கோர் பிரச்சாரம் குறித்த ஒரு முக்கியமான ஆய்வு அமெரிக்க தாராளவாதத்தின் வரலாற்று நெருக்கடியின் ஒரு கட்டமைப்பினுள் செய்யப்பட்டது.

 

சோசலிச சமத்துவக் கட்சி மூன்று பாகங்களாக ஒரு அறிக்கையை அக்டோபர் 3-5 தேதிகளில் பிரசுரித்தது. இந்த அறிக்கை தொழிலாள வர்க்கம் முகம் கொடுத்த அரசியல் பிரச்சினைகளை ஆய்வு செய்தது. தொழிலாளர்கள் மேற்கூறிய இரண்டு வேட்பாளர்களையும், அத்துடன் பசுமைக் கட்சி வேட்பாளரான ரால்ப் நாடரையும் நிராகரிக்கவும், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான ஒரு சுயாதீன தொழிலாள வர்க்கக் கட்சியைக் கட்டியெழுப்பும் போராட்டத்தில் இணைவதற்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுத்தது.

 

அமெரிக்க சமூகத்தில் வர்க்க முரண்பாடுகள் பெருகி வந்ததை இந்த அறிக்கை ஸ்தூலமாக பகுப்பாய்ந்து கூறியது. கடந்த தசாப்த காலத்தின் பங்குச் சந்தை எழுச்சியில் இருந்து மிகக்குறைந்த  அனுகூலம் பெற்றிருந்தது (அனுகூலம் என்று ஒன்று இருந்ததாயின்) அமெரிக்க மக்கள்தொகையில் அதிக பெரும்பான்மையாக இருந்த உழைக்கும் மக்கள் தான் என்பதை ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினர் அவர்களே ஆச்சரியத்தக்க வகையில் வெளிப்படையாகக் கண்டு கொண்டனர் என்பது தான் 2000 ம் ஆண்டின் அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரத்தின் மிக முக்கியமான சிறப்பு என்பதை அந்த அறிக்கை அறிவித்தது.

தேர்தலுக்குப் பிந்தைய நெருக்கடி வெடிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை இந்த தீர்க்கதரிசனமான முடிவைக் கூறியது: ஏற்கனவே பல திருப்பங்களைக் கண்டிருக்கும் ஒரு பிரச்சாரத்தில் இன்னும் கூட அதிர்ச்சிகள் காத்திருக்கலாம். முடிவு எப்படியிருந்தாலும், இந்த இரண்டு முதலாளித்துவ வேட்பாளர்கள் அல்லது கட்சிகளுக்குமே ஆழமடையும் சமூக நெருக்கடிக்கான எந்தத் தீர்வும் இல்லை என்பதே மிகமுக்கிய விடயமாகும்.

நவம்பர் 7 தேர்தல் இரவில், மக்கள் வாக்கெடுப்பில் கோர் தான் முன்னிலை வகித்துக் கொண்டிருந்தார் என்பதும், புளோரிடாவில் அவரது முன்னிலை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது எனக் கருதியபோது அவர் தான் தேர்தல் பிரதிநிதிகள் மத்தியிலும் அநேகமாய் வெற்றிபெறவிருக்கிறார் என்பதும் தெளிவாகிக் கொண்டிருந்தது. புஷ்ஷின் பிரச்சாரம் புளோரிடாவில் குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டில் இருந்த வேட்பாளரின் சகோதரரான ஜெப் தலைமையிலான மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனும்வலது-சாரி ஃபாக்ஸ் நியூஸ் ஒத்துழைப்புடனும் (இங்கு புஷ்ஷின் உறவினர் ஜோன் எல்லிஸ் தேர்தல் செய்திப் பிரிவுக்குத் தலைமையில் இருந்தார்) தீர்மானத்துடன் முன்னேறிக் கொண்டிருந்தது. புஷ் புளோரிடாவில் வென்றுள்ளார் என்ற செய்தியை இது ஆரம்பித்து வைத்தது.

இது ஐந்து வார கால முன்கண்டிராத அரசியல் குழப்பத்தை ஆரம்பித்து வைத்தது. இச்சமயத்தில் உலகின் மிகச் சக்தி வாய்ந்த ஏகாதிபத்திய நாட்டின் அரசின் தலைவராக யார் ஆகவிருக்கிறார் என்பதே தெளிவற்றதாகி விட்டது. முன்னதாக கிளிண்டன் பதவிவிலக்கல் தீர்மான நெருக்கடி குறித்தும் ஜனநாயகக் கட்சி குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் வலது-சாரித் தேர்தல் பிரச்சாரம் குறித்தும் WSWS ஏற்கனவே ஆய்வுகள் செய்திருந்ததன் அடிப்படையில், நிகழ்வுகள் கட்டவிழ்கையில் அவற்றை ஆய்வு செய்வதற்கும் விளக்குவதற்கும் WSWS தயாரிப்புடன் இருந்தது.

 

2000 அமெரிக்க தேர்தல் முடிவுகள்: அரசியல்சட்ட நெருக்கடி முற்றுகிறது என்ற தலைப்பில் நவம்பர் 9 அன்று பிரசுரமான ஆசிரியர் குழு அறிக்கை இந்தவகையில் விளங்கப்படுத்தியிருந்தது:

 

கடந்த 24 மணி நேரத்தின் அசாதாரணமான நிகழ்வுகள் அமெரிக்காவில் அரசியல் வாழ்க்கையை அடிப்படையாகவும் திரும்பவியலாததாகவும் மாற்றியமைத்திருக்கிறது. 125க்கும் அதிகமான ஆண்டுகளில் முதன்முறையாக, ஒரு தேசிய தேர்தல் ஒரு சர்ச்சைக்குரிய முடிவை அளித்திருக்கிறது. பரந்துபட்ட மக்களின் வாக்குகளுக்கும் பிரதிநிதிகளின் வாக்குகளுக்கும் ஒரு பிளவு உருவாகியிருக்கிறது என்பது மட்டுமல்ல, ஆளுனர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் வெற்றி அதில் தான் தங்கியிருக்கும் தேர்தல் மோசடியின் துர்நாற்ற நெடி புளோரிடாவின் வாக்குப் பெட்டிகளில் இருந்து வீசுகிறது.

 

புளோரிடா மாநிலத்தின் முடிவுகளின் சந்தேகத்திற்குரிய தன்மை குறித்து ஆரம்பத்தில் இருந்து WSWS கூடிய கவனம் செலுத்தியிருந்த்து. WSWS செய்தியாளர்கள் புளோரிடா சென்றிருந்து நெருக்கடி கட்டவிழ்கையில் களத்திலிருந்தான செய்திகளையும் உழைக்கும் மக்களுடனான நேர்காணல்களையும் வெளியிட்டனர். தேர்தல் நாளில் கறுப்பின மக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் சோதனையிடங்களையும் சாலைத் தடுப்புகளையும் உருவாக்குவது உட்பட வாக்காளர்களை பயமுறுத்துவது மற்றும் மோசடி செய்யும் பிரச்சாரத்தில் குடியரசுக் கட்சியினர் ஈடுபட்டிருந்தனர் என்பது தெளிவாகியது. வெகுமுக்கியமான புளோரிடா மறுஎண்ணிக்கை சமயத்தில், அவர்கள் நேரடியான உடலியல் வன்முறை மூலமாக வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க முனைந்தனர்.

அசாதாரணமான நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. பல மாகாணங்களிலும் மறுஎண்ணிக்கை தொடர்ந்து கொண்டிருந்தபோது, புளோரிடா மாநிலத்தின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அரசுச் செயலர் கத்தரின் ஹாரிஸ் புஷ் தான் தேர்தலில் வெற்றிபெற்றவர் என்று சான்றளிக்கச் சென்று விட்டார். அந்நடவடிக்கை வாக்களிப்பதற்கான உரிமை, அத்துடன் ஒவ்வொரு வாக்கும் எண்ணப்படுவதற்கான உரிமை என்கின்ற ஜனநாயகத்தின் மிக அடிப்படையான உரிமையை மீறியிருப்பதாக சரியான முடிவுக்கு வந்த புளோரிடா மாநில உயர் நீதிமன்றம் அதைத் தடைசெய்தது.

குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த மாநில சட்டமன்றம் இந்த வெகுஜன வாக்கெடுப்பை முற்றிலுமாய் நிராகரித்து விட்டு மாநிலத்தின் தேர்தல் வாக்குகளை சட்டமன்ற தீர்ப்பின் மூலமாக புஷ்ஷுக்கு அளிப்பது குறித்து விவாதித்தது. ஒரு ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்க மக்கள் தங்களது ஆதரவு வாக்குகளை அளிப்பதற்கான உரிமை எதுவும் கிடையாது என்றும் மாநிலங்கள் தங்களுக்குப் பொருத்தமாகக் கருதுவதன் படி செயல்படலாம் என்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த வலது-சாரி நீதிபதிகள் அளித்த ஆலோசனைகளால் இவ்விவாதம் ஊக்கம் பெற்றது.

 

இறுதியில் புஷ்-கோர் விவகாரத்தில் அந்த படுபயங்கர முடிவு உச்சநீதி மன்றத்திடம் இருந்து வந்தது. நீதிபதிகள் குழு 5-4 பெரும்பான்மையில் புளோரிடா மறுஎண்ணிக்கையை முடிக்குமாறு உத்தரவிட்டதுடன், தனது தீர்ப்பு எந்த வருங்கால நடவடிக்கைக்கும் முன்னுதாரணமாகப் பயன்படுத்தப்பட முடியாது என்றும் அறிவித்தது. புஷ்ஷை வெள்ளை மாளிகையில் அமர்த்துவது என்கின்ற தனது விருப்பமான முடிவைச் சாதிக்கும் ஒரே நோக்கத்திற்கு அவசியமான ஒரு சட்டபூர்வமான தத்துவத்தை நீதிமன்றம் இட்டுக்கட்டி விட்டிருந்தது.

 

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பிற்கு ஒரு சில நாட்கள் முன்னதாக, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஒரு கூட்டத்தில் வழங்கிய உரையில், அமெரிக்காவில் நடந்து கொண்டிருந்ததின் நீண்டகால முக்கியத்துவத்தைத் பின்வருமாறு ஆய்வு செய்தார்:

பாரம்பரிய முதலாளித்துவ-ஜனநாயக மற்றும் அரசியல்சட்ட நிர்ணயங்களை முறிப்பதில் அமெரிக்க ஆளும் வர்க்கம் எத்தனை தூரம் முன்னேறிச் செல்ல தயாரிப்புடன் இருக்கிறது என்பதை இந்த நீதிமன்றத்தின் முடிவு காட்டப் போகிறது. தேர்தல் மோசடியையும், வாக்குகளை ஒடுக்குவதையும்வெள்ளைமாளிகையை அப்பட்டமான சட்டவிரோத மற்றும் ஜனநாயக-விரோத வழிமுறைகளில் ஒரு வேட்பாளர் பெறுவதையும் அங்கீகரிப்பதற்கு அது தயாராக இருக்கிறதா?

முதலாளித்துவத்தின் ஒரு கணிசமான பகுதியும், இன்னும் சிலவேளை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மையான ஒரு பகுதியும் கூட அதனைச் செய்வதற்கு தயாரிப்புடனே இருக்கிறது. அமெரிக்காவில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் பாரம்பரிய வடிவங்களுக்கு ஆளும் உயரடுக்கினரிடையே உள்ள ஆதரவு மிகப் பெருமளவில் குறைந்து சென்று கொண்டிருக்கிறது.

 

நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர், உச்ச நீதிமன்றம் அமெரிக்க வாக்காளர்களை மேலதிகாரம் செலுத்துகிறது: காலத்திற்கும் அவப்பெயர் பெற்று விட்ட ஒரு தீர்ப்பு என்ற தலைப்பில் WSWS ஆசிரியர் குழு அளித்த ஒரு அறிக்கை, மறுஎண்ணிக்கை செய்யப்பட்ட முடிவுகளைச் சேர்க்காமல் தேர்தல் முடிவுகளைச் சான்றளிப்பதற்கு புளோரிடாவை அனுமதிப்பதற்கு செய்யப்பட்ட முடிவானது ஜனநாயகத்துடன் மற்றும் முதலாளித்துவ நிர்ணயத்தின் பாரம்பரிய வடிவங்களுடன் ஏற்பட்டிருக்கும் ஒரு அடிப்படையானதும் திரும்பவியலாததுமான ஒரு முறிவைக் குறித்து நிற்கிறது என விளக்கியது.

உச்ச நீதிமன்றம் அவமதிப்பைச் சம்பாதித்துள்ளதின் மூலம், முதலாளித்துவ அரசின் ஒவ்வொரு அமைப்புமே அவப்பெயருக்குள் விழுந்துள்ளது. 2000 ம் ஆண்டின் தேர்தல் நெருக்கடியானது அமெரிக்க வாழ்வில், இன்னும் சொன்னால், உலக விவகாரங்களிலும் ஒரு புதிய தொடக்கப் புள்ளியைக் குறித்து நிற்கிறது. சமூக உறவுகளும் சரி அரசியல் நிலைமைகளும் சரி இனியொருபோதும் நவம்பர் 7 க்கு முன்பிருந்த நிலைமைகளுக்குத் திரும்பாது.

 

உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்கு கோர் மற்றும் ஜனநாயகக் கட்சியினரும், அவர்களுடன் சேர்ந்து ஒட்டுமொத்த தாராளவாத ஸ்தாபகமும் சரணடைந்ததை நாம் கண்டனம் செய்தோம். கவனத்தில் கொள்ள வேண்டிய வித்தியாசம்: ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதித் தேர்தலில் வென்றவரா அல்லது ஜனாதிபதிக்கு தெரிவு செய்யப்பட்டவரா என்கின்ற கட்டுரையில் பரி கிரே பின்வருமாறு எழுதினார்:

 

தேர்தல் நெருக்கடியை மறக்கடிப்பதற்கு ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் எவ்வளவு அதிஅவசரமாக விரைகிறது என்பது அரசியலமைப்பு முறையின் நொருங்கிவிடும் தன்மைக்கும், அமெரிக்க சமூகத்தின் நெருக்கடியின் ஆழத்திற்கும் சாட்சியமாக உள்ளது. இறுதியில், ஜனாதிபதித் தேர்தல் நெருக்கடியை ஜனநாயகரீதியில் சட்டமுறைமைக்கு உட்பட்டு தீர்ப்பதற்கு ஆதரவாய் ஆளும் உயரடுக்கிற்குள் எந்த முக்கியமான பிரிவும் இல்லை என்பதையே இந்த நெருக்கடி வெளிப்படுத்தியிருக்கிறது. நாளுக்கு நாள் அமெரிக்காவில் ஒரு பெரும் கேள்விக்குறியாகி வரும் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பென்பது, இதுவரை பெருநிறுவன மற்றும் நிதிச் சிலவரால் கட்டுப்பாடு செலுத்தப்படும் இரண்டு கட்சிகளால் ஏகபோகம் செலுத்தப்பட்டு வந்திருக்கின்ற அரசியல் நிகழ்ச்சிப்போக்கில் இருந்து நெடுங்காலமாய் உண்மையாகவே ஒதுக்கி வைக்கப்பட்டு வந்திருக்கின்ற பல மில்லியன்கணக்கிலான உழைக்கும் மக்களின் தோள்களில் தான் நேரடியாக வீழ்கிறது.


ஜோர்ஜ் டபிள்யூ புஷ் பதவிப் பிரமாணம் எடுக்கிறார்

 

2000 ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வபட்டாம்பூச்சி வாக்குச்சீட்டு

மேலதிக தகவல்கள்

·   22 January 2000  The class divide in America and the 2000 presidential campaign

·  2 March 2000  The US elections and the lessons of the Clinton impeachment crisis

·   2 August 2000 Democratic presidential candidate Al Gore pushes "law-and-order" agenda

8 August 2000  குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோர்ஜ். டபிள்யூ. புஷ்: முதலீட்டாளர்கள் கொள்வனவு பங்குமுதலின் (IPO) வேட்பாளர்

3 October 2000 தொழிலாள வர்க்கமும் 2000ம் ஆண்டின் அமெரிக்கத் தேர்தல்களும்
பகுதி1. அமெரிக்க அரசியலின் மாறும் தளங்கள்

4 October 2000 தொழிலாள வர்க்கமும் 2000ம் ஆண்டின் அமெரிக்கத் தேர்தல்களும்
பகுதி2: இரண்டாயிரத்தில் அமெரிக்காவின் சமூகக்கட்டமைப்பு

5 October 2000 தொழிலாள வர்க்கமும் 2000 ல் அமெரிக்கத் தேர்தல்களும்
பகுதி3: அரசியல் அமைப்பின் நெருக்கடி

·  2 November 2000 Green Party presidential candidate at the University of Michigan
For what social forces does Ralph Nader speak?

·    6 November 2000The US elections
Al Gore's campaign: the death rattle of American liberalism

14 November 2000  அமெரிக்கத் தேர்தல் : சதி அம்பலமாகிறது

·   11 December 2000 Lessons from history: the 2000 elections and the new "irrepressible conflict"

·   5 December 2000 The US media: a critical component of the conspiracy against democratic rights—Part 1

10 December 2000  புளோரிடா மாநில வாக்குகள் மீள எண்ணப்படுவதற்கு உயர்நீதிமன்றம் தடை: அமெரிக்க ஜனநாயகத்துக்கு ஒரு கரிநாள்

·  14 December 2000 Supreme Court overrides US voters: a ruling that will live in infamy


ஆழமடையும்  உலகப் பொருளாதார நெருக்கடி

2000ம் ஆண்டின் போது, தீவிரமடைந்த உலகப் பொருளாதார நெருக்கடியால் உந்தப்பட்டு WSWS மார்க்சிச அரசியல் பொருளாதாரத்தின் மீதான அதன் வேலையை அபிவிருத்தி செய்தது. இணையத் தொடர்புடைய பங்குகளின் மீது மிகையான மதிப்பீடுகள் இருந்ததன் அடிப்படையில் அமெரிக்காவில் பங்குச் சந்தை குமிழி உடைவு இதற்கான மிகக் கண்கூடான வெளிப்பாடுகளில் ஒன்றாக இருந்ததுடன், உலக அளவிலும் ஸ்திரமின்மை பெருகிக் கொண்டிருந்தது.

 

அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையும் சர்வதேசக் கடனும் வெடிப்புடன் பெருகியது தவிர, ஜப்பானின் மந்தநிலை தொடர்ந்தமை, யூரோவில் ஒரு சரிவு தோன்றியமை, ஆர்ஜெண்டினா கடன் நெருக்கடி மற்றும் சர்வதேசப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகியமை ஆகியவையும் இருந்தன. இவை தங்களுக்குள் பெரும் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த முக்கியமான ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்களால் தணிக்க முடியாதவையாகவும் சமாளிக்க முடியாதவையாகவும் இருந்தன.

 

இந்த எமது ஆய்வு குட்டி-முதலாளித்துவ இடதுகளில் இருந்து ஒரு மாறுபட்டவிதத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டது. மார்க்சிச சர்வதேசியவாதம் எதிர் தீவிர எதிர்ப்புகளின் முன்னோக்கு என்ற கட்டுரையில் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலரான நிக் பீம்ஸ் 1999 டிசம்பரில் சியாட்டிலில் நடந்த பூகோளமயமாக்கல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளை ஆராய்ந்தார். உலக வர்த்தக அமைப்பின் ஒரு கூட்டத்திற்கு எதிராக நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களில் பத்தாயிரக்கணக்கானோர் பங்குபெற்றிருந்தனர். ஜூன் மாதத்தில் நிக் பீம்ஸின் பூகோளமயமாக்கம்: சோசலிச முன்னோக்கு என்ற உரையை WSWS பிரசுரித்தது. இந்த உரை அந்த மாதத்தில் பல்வேறு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்டதாகும்.

 

உலக முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் மிக முக்கியமான அரசியல் பிரச்சினைகள் என்ற ஆசிரியர் குழுவின் அறிக்கை செப்டம்பர் 11 அன்று ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தின் உச்சிமாநாட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த அறிக்கை ICFI இன் சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கு குறித்த ஒரு முக்கியமான சுருக்கத்தை வழங்கியது.

 

கணினித் தொழில்நுட்பம், விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பில் மிகப் பரந்த முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டு நிகழும் உற்பத்தியின் பூகோளமயமாக்கம் வரலாற்றுரீதியாக முற்போக்கானதொரு அபிவிருத்தி ஆகும். இது மனிதகுலத்தின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கான சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது.... இப்போது விளைந்திருக்கும் சமூக அழிவூட்டும் பின்விளைவுகள் இவ்வாறான பூகோளமயமாக்கத்தில் இருந்தோ அல்லது தொழில்நுட்பத்தில் இருந்தோ எழுந்தவையல்ல. அவையெல்லாம் உலகப் பொருளாதாரத்தை முதலாளித்துவ ஒழுங்கிற்கும், போட்டி முதலாளித்துவ தேசிய-அரசுகள் என்னும் காலாவதியான அமைப்புமுறைக்கும் அடிபணியச் செய்யவைத்திருப்பதன் விளைவே.

 

பொருளாதார நெருக்கடி தீவிரமுற்றமையுடன் கைகோர்த்து வேலைநிறுத்த நடவடிக்கையிலான ஒரு மேல்நோக்கிய எழுச்சியும் குறிப்பாக அமெரிக்காவில் நிகழ்ந்தது. நியூயோர்க் நகரின் நவீன ஓவிய அருங்காட்சியக தொழிலாளர்கள், தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர்கள், வெரிசான் தொலைதொடர்பு நிறுவனத் தொழிலாளர்கள், மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்திய முக்கியமான மற்றும் நீண்ட வேலைநிறுத்தங்கள் இச்சமயத்தில் நடந்தன.

 

ஐரோப்பாவில், எரிபொருள் வரிகள் மற்றும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டுநர்கள், பிற தொழிலாளர்கள், மற்றும் சிறு வணிகர்கள் நடத்திய தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் மற்றும் சாலைமறியல்கள், குறிப்பாக பிரிட்டன் மற்றும் பிரான்சில் பரவலான பாதிப்பைக் கொண்டிருந்தன.

 

நாஸ்டாக் டாட்காம் குமிழி உடைவின் சமயத்திலும் அதற்குப் பின்னரும்

 

மேலதிக தகவல்கள்

·   26 January 2000 Concerns in G7 over "imbalances" in world economy

·   17 April 2000 Wall Street's crisis and the shattering of illusions

·   5 June 2000 Globalisation: The Socialist Perspective 
Part One

·    28 July 2000Rhetoric but no action on global financial problems at G8 summit

·    28 August 2000Record US trade deficit a symptom of deeper economic problems

·   12 September 2000Fuel protests escalate throughout Europe


உலகளாவிய அரசியல் திருப்பங்கள்

அமெரிக்காவின் அரசியல் நெருக்கடி தான் மிக முக்கியமானது என்ற போதிலும், 2000ம் ஆண்டில் இன்னும் பிற அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தன. இவற்றில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் இருந்த பாலஸ்தீனத்தில் இரண்டாவது இன்டிபாடா கிளர்ச்சி வெடித்தமை, ரஷ்யா, மெக்சிக்கோ, ஸ்பெயின், ஆஸ்திரியா மற்றும் சேர்பியாவில் முதலாளித்துவ அரசியலில் நடந்த முக்கியமான மாற்றங்கள் மற்றும் பிஜியில் நடைபெற்ற ஒரு இராணுவ ஆட்சிசதி ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையில் நடந்த கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தைகளின் தோல்வி முதலாளித்துவ தேசியவாதத்தின் முட்டுச் சந்தியை எடுத்துக்காட்டியது. 1993 இல் தொடங்கியிருந்த இந்த ஏழாண்டு கால பேச்சுவார்த்தைகள், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துவத்தின் மூலமான பேச்சுவார்த்தைகளின் மூலமாக இஸ்ரேலின் யூத உயரடுக்கிடம் இருந்து சலுகைகளை வென்றெடுப்பது என்ற பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முன்னோக்கின் திவால்நிலையை எடுத்துக்காட்டியது.

பேச்சுவார்த்தைகள் முறிந்ததற்குப் பிந்தைய காலத்தில், அப்போது இஸ்ரேலில் எகுட் பராக்கின் அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சியாக இருந்த வலதுசாரி லிகுட் கட்சியின் தலைவரான ஏரியல் ஷரோன் கடும் ஆயுதமேந்திய பாதுகாப்புடன் மலைக் கோவிலுக்கு ஒரு ஆத்திரமூட்டும் பயணத்தை மேற்கொண்டார். மேற்குக் கரையின் பாலஸ்தீனப் பகுதிகள் மற்றும் காஸா பகுதியில் கலவரம் மூண்டது, அக்கலவரம் இஸ்ரேலிய இராணுவத்தின் வலிமைப் பிரயோகத்தின் மூலம் எதிர்கொள்ளப்பட்டது. இராணுவத்தின் தரப்பு மக்களின் தரப்பு ஆகிய இருதரப்பிலும் சேர்த்து மொத்தமாக 4,000க்கும் அதிகமான பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டது.

 

WSWS இன் ஒரு ஆய்வு பாலஸ்தீன மக்களுக்குள் இருந்த சமூகப் பதட்டங்களையும், யாசீர் அரபாத்தின் கீழான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினால் ஸ்தாபகம் செய்யப்பட்ட பாலஸ்தீனிய நிர்வாகம் பாலஸ்தீன மக்களுக்கு எவ்விதமான கணிசமான முன்னேற்றத்தையும் கொண்டுவரத் தோல்வியுற்றதையும் சுட்டிக் காட்டியது.

ஒஸ்லோ உடன்படிக்கைகளும் அதனையடுத்து இஸ்ரேலுடன் செய்து கொள்ளப்பட்டஅமைதிக்கான நிலம் ஒப்பந்தங்களும் அமைதியைக் கொண்டுவருவதற்கும் வாழ்க்கைத் தரங்களில் மேம்பாட்டைக் கொண்டு வருவதற்கும் பதிலாக பெரும்பான்மையான பாலஸ்தீன மக்களின் துயரத்தைப் பெருக்கவே செய்திருக்கிறது. பாலஸ்தீன நிர்வாகத்தின் (PA) பொருளாதாரமென்பது இன்னும் முழுமையாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள் தான் இருந்து வரும் நிலையில் வாழ்க்கைத் தரங்கள் பாதாளத்திற்குச் சரிந்து விட்டன, வேலைவாய்ப்பின்மை பெருகி, காஸா பகுதியில் இது 50சதவீதத்திற்கும் அதிகமாகச் சென்று விட்டது. இந்நிலை காலவரையின்றி இப்படியே தொடர முடியாது என்பதை ஷரோனின் பயணத்திற்குப் பின்னரான ஏறக்குறைய உள்நாட்டு யுத்தத்தை ஒத்த நிலைமைகள் காட்டுகின்றன. அரபாத் மற்றும் பாரக் இருவரின் நிலைகளுமே மிகவும் பலவீனப்பட்டு நிற்கும் ஒரு தருணத்தில் சமூக மற்றும் அரசியல் பதட்டங்கள் அவற்றின் உடைவுப் புள்ளியை இப்போது எட்டியிருக்கின்றன.

 

2000 இன் ஆரம்பத்தில் WSWS கணிசமான கவனத்தை ரஷ்யாவின் மீதும், யெல்ட்சினிடம் இருந்து அதிகாரம் புட்டினுக்கு மாற்றப்பட்டதின் மீதும் குவித்தது. 1990-91 இன் கொந்தளிப்பான வருடங்களில் தீவிரமான முதலாளித்துவ சந்தைச்சீர்திருத்தவாதிகளை பின்பற்றி நடக்கும் ஒருவரைப் போலவே புட்டின் முதன்முதலாக அரசியல் மேடையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். இரகசிய போலிஸ் அதிகாரத்துவத்தை எழுச்சி பெறும் நிதிச் சிலவராட்சியுடன் ஐக்கியப்படுத்தும் ஒரு எதேச்சாதிகார ஆட்சியாளராக புட்டினின் பயணம் இருக்கும் என்பதை WSWS முன்கணித்தது.

 

ஸ்பெயினில் ஜோஸே மரியா அஸ்னார் தலைமையிலான வலது-சாரி மக்கள் கட்சி (PP) மார்ச்சில் நடந்த பொதுத் தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளை மிகவும் கடந்து முழுமையான பெரும்பான்மையைப் பெற்றது. 1976 இல் பாசிச பிராங்கோ சர்வாதிகாரம் முடிவுக்கு வந்த பிறகான முதல் பெரும்பான்மை அரசாங்கத்தை அது உருவாக்கியது.

 

ஐரோப்பாவிலும், ஜோர்க் ஹைடரின் தீவிர வலது சுதந்திரக் கட்சியானது ஆஸ்திரியாவில் கூட்டணி அரசாங்கத்தில் நுழைந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நாசிசத்துடன் தொடர்புபட்ட ஒரு கட்சி அதிகாரத்தில் பங்குபெற்றது இதுவே முதல்முறையாகும். சேர்பியாவில், 1999 இல் கொசோவோ மற்றும் சேர்பியா மீது நேட்டோ குண்டுவீச்சு தொடங்கியதில் இருந்து ஏகாதிபத்திய சக்திகள் நடத்திய ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தின் உச்சமாக நெடுங்காலம் ஜனாதிபதியாக இருந்த ஸ்லோபாடன் மிலோசெவிக் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

 

மெக்சிகோவில், Partido Revolucionario Institucional -PRI- இன் வேட்பாளரான பிரான்சிஸ்கோ லபாஸ்டிடாவை வலது சாரி Partido Acción Nacional இன் விசெண்ட் ஃபாக்ஸ் வெற்றி கண்டதை அடுத்து PRI இன் 71 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம் எஞ்சிய வட அமெரிக்காவின் ஏனைய பகுதிகளுடன் ஏற்கனவே கணிசமாய் ஒருங்கிணைந்திருந்த மெக்சிகோவின் பொருளாதாரத்தை மேலும் மறுஒழுங்கமைக்க PAN வாக்குறுதியளித்தது என்பதால் அதற்கு வோல் ஸ்ட்ரீட்டின் ஆதரவு கிடைத்திருந்தது. PRI இன் ஒரு கட்சி ஆட்சி மறைந்து போனமையானது தனிமைப்பட்ட தேசிய அபிவிருத்தி மற்றும் மெக்சிகோவிற்குள்ளாக கூர்மையான சமூக முரண்பாடுகளின் எந்தவொரு வெளிப்பாட்டையும் ஒடுக்குவது என்ற அதன் முதலாளித்துவ தேசிய முன்னோக்கின் நிலைக்குலைவேயே குறித்து நின்றது என்பதை வாக்கெடுப்பிற்கு சிறிது முன்னரான ஆய்வில் WSWS விளக்கியது.

 

உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் பசிபிக் தீவுகளின் மிக தொலைதூரப் பகுதிகளிலும் கூட அரசியல் அதிர்வுகளாய் உணரப்பட்டது. பிஜியில் ஜனாதிபதி மகேந்திர சவுத்ரியின் தொழிற்கட்சி அரசாங்கம் ஒரு ஆட்சிசதியினால் வெளியேற்றப்பட்டது. அந்த பசுபிக் நாட்டில் உள்ள தனது கணிசமான பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைப் பாதுகாக்கும் வழிமுறையாக ஆஸ்திரேலிய அரசாங்கம் இராணுவத் தலையீட்டை ஆதரித்தது. தொழிற்கட்சி அரசாங்கத்தை ஆதரித்து வந்திருந்த பிஜியின் தொழிற்சங்கங்கள் எல்லாம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு தொழிலாள வர்க்கம் எந்த சவாலையும் முன்னெடுக்கவிடாமல் தடுத்து விட்டனர்.


இஸ்ரேலின் பிரதமர் எஹூத் பராக், அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன் மற்றும் PLO தலைவர் யாசர் அராபத்


போரிஸ் யெல்ட்சின் ஜனாதிபதிச் சின்னத்தை விளாடிமிர் புட்டினிடம் ஒப்படைக்கிறார்

 

மேலதிக தகவல்கள்

·  8 January 2000 The transfer of power in Moscow: what it means for Russia's political trajectory

·  17 January 2000The political and historical issues in Russia's assault on Chechnya

·  30 March 2000Putin's election as president signals authoritarian turn in Russia

·  1 July 2000 Presidential election marks turning point for Mexico

· 7 October 2000 மிலோசிவிக்கின் வீழ்ச்சி எதனை முன்னறிவிக்கின்றது?

·  16 October 2000  இஸ்ரேலின் யுத்த நடவடிக்கைகளும் சியோனிசத்தின் பாரம்பரியமும்


கலை, விஞ்ஞானம் மற்றும் தணிக்கை

2000 ம் ஆண்டின் போது, சினிமா மற்றும் கலைத் துறையில் அரசியல் தணிக்கைக்கு எதிராக WSWS கணிசமான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. பிப்ரவரி மாதத்தில் இந்திய மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் தண்ணீர்-Water- என்ற படத்தின் உருவாக்கத்தின் முதல் நாளில் அதன் படப்பிடிப்பு தளத்தை இந்து அடிப்படைவாதிகள் அடித்து நொருக்கியதற்கு பிரதிபலிப்பாக இது தொடங்கியது. திரைப் படைப்பாளியான தீபா மேத்தா இயக்கிய தொடர்வரிசைப் படத்தில் மூன்றாவது படமான இந்தப் படம் சமகால இந்தியாவில் விதவைகள் ஒடுக்கப்படும் நிலை குறித்துப் பேசியது.

 

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் பிரதான கட்சியாக இருந்த பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமையில் நடந்த ஒரு பேரினவாதப் பிரச்சாரத்தில், இந்தியாவை அவமதிப்பதாகவும் இந்துத்துவத்தை தாக்குவதாகவும் சொல்லி மேத்தா அவதூறுகளுக்கும் கொலை மிரட்டல்களுக்கும் உட்படுத்தப்பட்டார். அடிப்படைவாத குண்டர்களுக்கான தனது ஆதரவை சுட்டிக் காட்டும் விதமாக, உத்திரப் பிரதேச அரசாங்கம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை தடை செய்ததோடு தீபா மேத்தாவையும் அவரது குழுவினரையும் மாநிலத்தை விட்டு வெளியேற்றியது.

 

தீபா மேத்தாவையும் திரைப்படம் உருவாக்குவதற்கு அவருக்கிருக்கும் உரிமையையும் பாதுகாத்து உலக சோசலிச வலைத் தளம் ஒரு சர்வதேசப் பிரச்சாரத்தை தொடக்கியது. இந்தப் பிரச்சாரத்திற்கு கென் லோச் மற்றும் மோசென் மேக்மல்பாஃப் உள்ளிட்ட சர்வதேசப் புகழ்மிக்க இயக்குநர்கள், சுயேச்சையான திரைப்பட உருவாக்குநர்கள், திரைப்படக் கலைஞர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து சக்திவாய்ந்த ஆதரவு கிட்டியது. இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலும் ஜனநாயக உரிமைகள் மற்றும் கலை வெளிப்பாட்டு சுதந்திரத்தின் மீது அதிகரித்துச் சென்ற தாக்குதல்களுக்கு எதிரான ஒரு முக்கியமான பதில்-தாக்குதலை அது பிரதிநிதித்துவம் செய்தது.

 

இலங்கையில் அரசாங்கத்தின் நேரடி அரசியல் தணிக்கை எனும் பிரச்சினை இருந்தது. இங்கு போர் எதிர்ப்பு திரைப்படம் ஒன்றைத் தடைசெய்வதற்கு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் ஆட்சி விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போர் சமயத்தில் இயற்றப்பட்ட அவசரகாலச் சட்டங்களை பயன்படுத்தியது. பிரசன்னா விதனாகே இயக்கியிருந்த பெளர்ணமி தின மரணம் என்ற இத்திரைப்படம் இலங்கையில் ஒரு கிராமத்தில் போர் ஏற்படுத்தியிருந்த அழிவின் ஒரு உறையவைக்கும் சித்தரிப்பாக இருந்தது. சர்வதேச அளவில் கணிசமான பார்வையாளர்களை வென்றெடுத்திருந்த இத்திரைப்படம் தடை செய்யப்பட்டதை இலங்கையிலும் சர்வதேச அளவிலும் WSWS பரவலாக விளம்பரப்படுத்தியது, அந்த இயக்குநரையும் நேர்காணல் செய்தது.

 

அமெரிக்காவில் ஜெப் போர்ஜியா என்ற ஓவியக் கலைஞருக்கு நிகழ்ந்த தணிக்கையை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் WSWS இன் கலைப் பிரிவு ஆசிரியர் டேவிட் வோல்ஷ் பங்குபெற்றார். சமகால ஓவியம் குறித்த இக்கலைஞரின் கண்காட்சி 1999 நவம்பரில் டெட்ராயிட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்ட்ஸ் இயக்குநரான கிரஹாம் பெல்லினால் மூடப்பட்டது. 2000 ஜனவரியில் WSWS உடன் தனது அனுபவத்தை விவாதித்த போர்ஜியா, தணிக்கை, அருங்காட்சியகங்களின் பாத்திரம் மற்றும் சமகால ஓவியத்தின் செல்தகைமை ஆகியவை குறித்து உயிரோட்டமான கருத்துப் பரிமாற்றத்தினை நிகழ்த்தினார்.

 

2000ம் ஆண்டு ஹாலிவுட் திரைப்பட உருவாக்கத்தில் ஒரு பரிதாபமான ஆண்டாக இருந்தது. ஆனால் WSWS அதன் சர்வதேச கலை ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, சான்பிரான்சிஸ்கோ, டொராண்டோ, வான்கோவர், பேர்லின் மற்றும் சிங்கப்பூரில் நடந்த திரைப்பட விழாக்கள் குறித்த செய்திகளை வெளியிட்டது. இவ்விழாக்களில் சர்வதேச இயக்குநர்களிடம் இருந்து பல முக்கியமான மற்றும் நெகிழ வைக்கும் திரைப்படங்கள் வெளியிடப்பட்டதை எமது திறனாய்வாளர்கள் கண்டனர். சான் பிரான்சிஸ்கோ திரைப்பட விழா செய்திகளின் ஒரு சிறப்பம்சமாக புகழ்பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநர் அப்பாஸ் கியரோஸ்டமி உடனான ஒரு நேர்காணல் இடம்பெற்றிருந்தது.

 

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பச் செய்திகளையும் WSWS அபிவிருத்தி செய்திருந்ததோடு, அந்த ஆண்டில் 60 கட்டுரைகளுக்கும் அதிகமாகப் பிரசுரிக்கப்பட்டன. 2000ம் ஆண்டில் விஞ்ஞானத்தின் மிகக் குறிப்பிடத்தக்க அபிவிருத்தியாக குறிப்பிடுவதென்றால், மனித மரபணு ஆய்வுத் திட்டத்தின்முதல் வரைவு நிறைவு பெற்றதைத் தான் குறிப்பிட வேண்டும். இது மருத்துவத் துறை மற்றும் பரிணாம வளர்ச்சி ஆய்வுத் துறையில் மகத்தான தாக்கங்களைக் கொண்டிருந்தது. மனித மரபணுத் தொகுதியை வரைபடப்படுத்தியமை விஞ்ஞான அபிவிருத்தியின் பிரம்மாண்ட சாத்தியத்தை விளங்கப்படுத்தியது.

 

விஞ்ஞானத்திலும் கூட, அரசியல் தணிக்கைக்கு எதிரான ஒரு போராட்டம் இருந்தது. பிரிட்டனில் உண்டான BSE (விசர் மாட்டு நோய்) நெருக்கடி இருட்டடிப்பு செய்யப்பட்டதில் இது மிக முழுமையாக வெளிப்பட்டது. கால்நடைகளுக்கு உணவளிப்பதில் இலாபத்தை மட்டும் மனதிற்கொண்டு செயல்படும் வழிமுறைகளின் விளைபொருளாக இருந்த இந்த நோயின் நெருக்கடி குறித்து விசாரிக்க 1997 இல் தொழிற்கட்சி அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருந்த பிலிப்ஸ் விசாரணைக் குழு 2000 அக்டோபரில் தனது அறிக்கையை வெளியிட்டது.

1,80,000 கால்நடைகளைப் பாதித்து, அத்துடன் நோய் தொற்றிய மாட்டிறைச்சியை சாப்பிட்டதுடன் தொடர்புபட்ட உயிருக்கு ஆபத்தான Creutzfeldt-Jakob Disease (vCJD) என்ற மூளை நோயின் ஒரு வகை ஏற்பட்டு 160 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த அந்த அழிவு நோய்க்கு இந்த விசாரணையில் யாரின் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை.

 

இதேபோல் கனடாவிலும் கிராமப்புற வாகர்டன் பகுதியில் நீர் விநியோகத்தால் உண்டான -கோலி நோய் ஆயிரக்கணக்கானோரைத் தொற்றி ஏழு பேர் உயிரிழந்த விவகாரத்திலும் இதேபோன்ற இருட்டடிப்பு நிகழ்ந்தது. இந்தத் துயர சம்பவம் ஒண்டோரியோவில் ஹாரிஸ் டோரி அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான தாரளமயக் கொள்கைகளின் தவிர்க்கமுடியாத விளைபொருள் என்பதையும், இந்த அழிவின் வீச்சு மற்றும் காரணங்களை இந்த அரசாங்கம் திட்டமிட்டு மறைத்தது என்பதையும் WSWS விளக்கியது.

 


தீபா மேத்தாவின் தண்ணீர் திரைப்படத்தின் ஒரு காட்சி

மேலதிக தகவல்கள்

·   22 January 2000Censorship, democracy and the state of contemporary art 
A conversation with artist Jef Bourgeau

·  15 February 2000Deepa Mehta speaks out against Hindu extremist campaign to stop her film

·   7 March 2000WSWS Arts Editor David Walsh's remarks to Pontiac meeting on censorship and the arts
"On what basis should a movement in defense of artistic freedom be founded?"

·  24 April 2000Film directors and critics at Singapore film festival oppose Hindu extremist attempt to stop Deepa Mehta film

·  11 July 2000  மனித உயிரணுத்திட்டம் 21ம் நூற்றாண்டின் முதலாவது முக்கிய விஞ்ஞான நிகழ்வு

·  31 October 2000Britain's official inquiry into BSE/Mad Cow Disease finds no one to blame


நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு

2000ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (LTTE) ஆனையிறவில் இருக்கும் முக்கியமான மூலோபாய இராணுவத் தளத்தைக் கைப்பற்றி யாழ்ப்பாண வளைகுடாப் பகுதிக்கு துரிதமாக முன்னேறினர். வடமுனையில் இருந்த சுமார் 50,000 இலங்கை துருப்புகள் சிக்கிக் கொண்டிருந்தன. கடும் சர்வதேச அழுத்தங்களின் கீழ் விடுதலைப் புலிகள் தமது தாக்குதலை நிறுத்தினர். ஆயினும் இந்த இராணுவப் படுதோல்வியானது தலைநகர் கொழும்பில் ஆழமான அரசியல் நெருக்கடியைத் தூண்டியது.

தனது அரசாங்கத்தைத் தூக்கி நிறுத்தும் பரிதாபகரமான முயற்சியில், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அனைத்துக் கட்சி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். முன்னோடியில்லாத ஒரு நடவடிக்கையாக, அவரது அரசாங்கம் முதலில் சோசலிச சமத்துவக் கட்சியை ஒரு உத்தியோகபூர்வக் கட்சியாக அங்கீகரித்தது (இந்த அந்தஸ்து பல தசாப்தங்களாக மறுக்கப்பட்டு வந்திருந்ததாகும்), பின் இப்பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்கும் அழைப்பு விடுத்தது. ஜனாதிபதிக்கு எழுதிய ஒரு கடிதத்தில், சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலரான விஜே டயஸ் இந்த அழைப்பை நிராகரித்தார். இந்த கூட்டம் ஒருமுழு மோசடி என்றும்ஏற்கனவே செய்யப்பட்டு விட்ட அரசாங்க முடிவுகளுக்கு ஒப்புதல் முத்திரை பெறுவதும், அதன் மூலம் அதன் கொள்கைகளுக்கு நம்பகத்தன்மையை பெற்று போரைத் தொடர்வதற்கு ஆதரவைத் திரட்டுவதுமே அதன் உண்மையான நோக்கம்என்றும் அக்கடிதத்தில் அறிவித்தார்.

டயஸின் எச்சரிக்கைகள் ஊர்ஜிதப்பட்டன. தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எதிர்ப்பு ஆழமடைந்த நிலையில் ஒரு முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விட சந்திரிகா குமாரதுங்கா தள்ளப்பட்டார். போருக்கு உடனடியாக முடிவு கட்டவும், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து துருப்புகள் அனைத்தையும் திரும்பப் பெறவும், தொழிலாளர்கள் தமது வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைக் பாதுகாப்பதற்கு ஒன்றுபட்ட போராட்டத்தில் இறங்கவும் அழைத்து கொழும்பில் சோசலிச சமத்துவக் கட்சியின் பலவேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

 

உலக சோசலிச வலைத் தளம் அதன் தமிழ் மொழித் தளத்தை மே 1 அன்று தொடங்கியது. இதன்மூலம் இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் அத்துடன் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் என 80 மில்லியனுக்கும் அதிகமான தமிழ் வாசகர்கள் இடையே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் மற்றும் தத்துவார்த்தப் ஆய்வை இது கொண்டு சேர்த்தது தெற்காசிய தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதிலும் இலங்கையின் உள்நாட்டுப் போரினால் கிளறப்பட்டிருந்த இனரீதியான அரசியலுக்கு எதிராகப் போராடுவதிலும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் போராட்டத்தை தமிழ் தளம் வலுப்படுத்தியது. போருக்குப் பொறுப்பான இலங்கை அரசாங்கங்களின் சிங்கள மேலாதிக்கவாதத்தை சோசலிச சமத்துவக் கட்சி எதிர்த்தது என்பதோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தமிழ் பிரிவினைவாதம் தமிழ் தொழிலாளர்களுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் ஒரு பேரழிவை உருவாக்கும் என்றும் எச்சரித்தது.

 

 
உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் பதிப்பு

 

மேலதிக தகவல்கள்

25 April 2000 ஆனையிறவில் இராணுவம் வீழ்ச்சி கண்டமை இலங்கையில் அரசியல் நெருக்கடியை தூண்டிவிடும்

17 May 2000 இலங்கையில் ஜனாதிபதி குமாரதுங்கவின் அனைத்து கட்சி கூட்டம்: தீவிர வலதுசாரிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது

26 September 2000  சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்
யுத்தத்துக்கும் சமூக சமத்துவமின்மைக்கும் முடிவுகட்டும் ஒரு சோசலிச வேலைத்திட்டம்