WSWS : Tamil : நூலகம்
பதினைந்தாவது ஆண்டு தினம்

உலக சோசலிச வலைத் தளத்தின் பதினைந்து வருடங்கள்: 1998-2013

உலக சோசலிச வலைத் தளத்தின் 15 வது ஆண்டு நிறைவுக்கு வாசகர் வாழ்த்துக்கள்
உலக சோசலிச வலைத் தளம் 1998
உலக சோசலிச வலைத் தளம் 1999
உலக சோசலிச வலைத் தளம் 2000
உலக சோசலிச வலைத் தளம் 2001
உலக சோசலிச வலைத் தளம் 2002
உலக சோசலிச வலைத் தளம் 2003
உலக சோசலிச வலைத் தளம் 2004
உலக சோசலிச வலைத் தளம 2005
உலக சோசலிச வலைத் தளம 2006
உலக சோசலிச வலைத் தளம 2007
உலக சோசலிச வலைத் தளம 2008
உலக சோசலிச வலைத் தளம 2009

Year in Review: 2005

மீளாய்வு: 2005 ஆம் ஆண்டு

உலக முதலாளித்துவத்தின் தோல்வியை அம்பலப்படுத்திய இரு பெரும் இயற்கைப் பேரிடர்களின் பாதிப்பின் கீழ் 2005 ஆம் ஆண்டு விடிந்தது. இந்தியப் பெருங்கடலின் பூகம்பமும் சுனாமியும் இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பெருநாசத்தை உண்டாக்கியதோடு சுமார் 300,000 பேர் உயிரிழந்தனர். காத்ரினா சூறாவளி அமெரிக்காவின் வளைகுடாக் கடற்கரையைத் தாக்கி நியூ ஓர்லியன்ஸை வெள்ளத்தில் மூழ்கடித்தது. இதில் 1800 பேர் இறந்தார்கள். உழைக்கும் மக்களை பொறுத்த வரை உலகின் செல்வச் செழிப்பானதொரு நாட்டில் இருப்பது வறியதொரு நாட்டில் இருப்பதை விடவும் அதிகப் பாதுகாப்பு என்று சொல்ல முடியவில்லை என்பதை அது எடுத்துக் காட்டியது.

இந்தியப் பெருங்கடலின் பூகம்பம் மற்றும் சுனாமியும் சரி அமெரிக்காவின் காத்ரினா சூறாவளியும் சரி இரண்டுமே வரலாற்றில் பதிவாகி இருக்கக் கூடிய இரண்டு மிகப் பெரும் இயற்கைப் பேரழிவுகள். ஆனால் சாவு எண்ணிக்கையும் நாசத்தின் எல்லையும் கண்மூடித்தனமான இயற்கை சக்திகளின் விளைவு மட்டுமே அல்ல. இந்தப் பேரழிவுகள் குறித்து உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்ட செய்திகளில் குறிப்பிட்டது போல, சமூகக் காரணிகள் இந்த நாசத்தின் அளவில் மையமான பாத்திரத்தைக் கொண்டிருந்தன.

மனிதனால் உருவாக்கப்பட்ட வறுமை தான் எல்லாவற்றுக்கும் மேலாக உயிரிழப்பின் பிரதான காரணமாய் இருந்தது. இந்தியப் பெருங்கடல் கரைகளிலும் அமெரிக்க வளைகுடாக் கரைப் பகுதிகளிலும் வாழும் மக்கள் இறந்தார்கள், பாதிக்கப்பட்டார்கள் என்றால் காரணம் அவர்கள் ஏழை என்பது தான்.

விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் தொடர்ந்த எச்சரிக்கைகளை விடுத்து வந்திருந்தனர், ஆனால் ஆளும் வர்க்கங்களோ எதுவுமே செய்யாமல் மக்களை தயாரிப்பின்றி இருக்கும்படி விட்டு விட்டது. பேரழிவுகள் நடந்த பின்னர், அதிகாரிகளின் பதிலிறுப்பு என்பது திறனின்மை மற்றும் அலட்சியம் ஆகியவற்றின் ஒரு கலவையாக இருந்தது.

குறிப்பாக, நூறாயிரக்கணக்கிலான தொழிலாள வர்க்க அமெரிக்கர்களின் நிலைக்கு புஷ் நிர்வாகம் காட்டிய அப்பட்டமான அலட்சியத்தை காத்ரினா புயல் அம்பலப்படுத்தியது. நியூ ஓர்லியன்ஸ் வழியே பறந்த ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் சன்னல் வழியே புஷ் கீழ் நோக்கிப் பார்க்கின்ற புகைப்படத்தில் இந்த அலட்சியம் சித்திரப்படுத்தப்பட்டிருந்தது. பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதான பேரில் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பிறவெங்கிலும் அமெரிக்க அரசாங்கம் போர் நடத்திக் கொண்டிருந்த நிலைமைகளின் கீழ் அமெரிக்காவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் இது ஆழமான அரசியல் தாக்கத்தைக் கொண்டிருந்தது.

 


இந்தியப் பெருங்கடலின் சுனாமியால் சுமத்ரா கரையோரக் கிராமம் ஒன்று நாசமடைந்து கிடக்கிறது

 

 

இந்தியப் பெருங்கடல் பூகம்பம் மற்றும் சுனாமி

இந்தியப் பெருங்கடலில் சுனாமியை தோற்றுவித்த பூகம்பம் 2004 டிசம்பர் 26 அன்று தான் நடந்தது, ஆனால் இந்தப் பேரழிவின் வீச்சையும் அளவையும் முழுவதாகப் புரிந்து கொள்ளவே பல நாட்கள் பிடித்தது. இந்தோனேசியத் தீவான சுமத்ராவுக்கு கொஞ்சம் மேற்கே மையம் கொண்டு, ரிக்டர் அளவுகோலில் 9.1க்கும் 9.3க்கும் இடையில் பதிவான இந்த பூகம்பம், உலகில் இதுவரை நடந்த பூகம்பங்களில் மூன்றாவது பெரியதாக அறியப்பட்டது.

இந்தோனேசியா தான் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகியவை அதற்கடுத்தபடியாக பாதிக்கப்பட்ட நாடுகள் ஆகும். வெள்ளத்திலும் வெள்ளம் மூழ்கடித்ததால்(சில கடலோரப் பகுதிகளில் இது 10 மீட்டர்கள் அதாவது 33 அடிகள் வரையும் சென்றது )ஏற்பட்ட நாசத்திலும் இந்தியப் பெருங்கடலை சுற்றிய 14 நாடுகளிலும் சுமார் 300,000 பேர் இறந்தனர்.

உயிர்தப்பியவர்களை காப்பாற்றுவதிலும் இறந்தவர்களது சடலங்களை மீட்பதிலும் பிராந்திய மக்கள் முயற்சிகளைத் தொடங்கிய சமயத்தில் WSWS அது குறித்த களச் செய்திகளில் பங்குபெற்றது. குறிப்பாக இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவர்கள் கடலோரப் பகுதிகளின் கிழக்கத்திய மற்றும் தெற்கத்திய பகுதிகளுக்குப் பயணம் செய்து சுகாதாரப் பராமரிப்புத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களின் முயற்சிகளை செய்திகளாக்கியது. தென்னிந்தியாவிலும் களத்திற்கு சென்று செய்திகள் சேகரிக்கப்பட்டன.

தொழிலாளர்கள் மற்ற தொழிலாளர்களின் நிலைக்கு அளித்த பதிலிறுப்பு நெகிழ்த்தக்க கூடியதாக இருந்தது. இந்த துயர சம்பவத்தின் தாக்கம் தேசிய எல்லைகள் கடந்து இன மற்றும் மத வேறுபாடுகளையும் கடந்து சென்றது. இலங்கையில் எமது செய்தியாளர்களில் ஒருவர் குறிப்பிட்டது போல:

ஆண்களும் பெண்களும், இளைஞர்களும் யுவதிகளுமாய் மண்வெட்டி, மண்வாரி மற்றும் பிற கருவிகளுடன் கிழக்கு திசையில் போய்க் கொண்டிருந்தனர். குப்பைகளை அகற்றுவதிலும், வீடுகளை மீட்பதிலும், குடும்பத்தினர் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்புவதற்கும் உதவுவதற்காக தமது சொந்த முன்முயற்சியில் இவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

மொழியும் மதமும் என்னவாக இருந்தாலும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஒன்று தான் என்ற அடிப்படையான உணர்வு உழைக்கும் மக்களிடையே தோன்றியிருந்ததை இந்த நெருக்கடி துரிதமாக வெளிக்கொண்டு வந்திருந்தது. நேர்காணல் செய்யப்பட்ட ஒருவர் இதைச் சுருக்கமாய்க் கூறினார்: எண்ணிலடங்காதோர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற ஒரு சமயத்தில் இன அல்லது மத அடிப்படையில் சிந்திப்பதற்கு இடமில்லை. நாம் எல்லோருமே மனிதர்கள் தான்.

உலகெங்கும் இன மற்றும் மத வித்தியாசங்களை கடந்து சாதாரண மக்கள் கொடுத்த பெருந்தன்மையான பதிலிறுப்புக்கு நேரெதிரான வகையில், தேசிய அரசாங்கங்கள் ஒன்று அலட்சியத்தையோ அல்லது உணர்ச்சியின்மையையோ வெளிப்படுத்தின அல்லது தமது சொந்த நலன்களை முன்னெடுப்பதற்கு இந்தப் பேரழிவை பயன்படுத்தின. இலங்கையில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நாட்டின் 22 மாகாணங்களில் 12 இல் இராணுவ ஆட்சியை திணித்தார்.

இந்தோனேசியாவில் இராணுவ அதிகாரிகள் பூகம்பத்தாலும் பேரலையாலும் விளைந்த குழப்பத்தை, சுமத்ராவின் வடமுனையில் அமைந்திருக்கும் ஏசஹ் மாகாணத்தில் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ஒரு தாக்குதலை தொடக்குவதற்கு சாதகமாக்கிக் கொள்ள முனைந்தனர். தாய்லாந்தில் பில்லியனரான தக்ஷின் ஷினாவட்ராவின் அரசாங்கம் இலாபம் தரும் சுற்றுலாத் துறைக்கு முன்னுரிமையளித்து விட்டு ஏழை மீன்பிடிக் கிராமங்களை உதாசீனம் செய்தது. இந்திய அரசாங்கம், பிராந்தியத்தில் தனது மேலாதிக்க சக்தியை வெளிக்காட்டிக் கொள்ளும் முயற்சியில், தாழ்வுப் பகுதியான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 80 சதவீத மக்கள் வீடிழந்த நிலையில் இருந்தும் அவர்களுக்கு அந்நிய உதவி எதுவும் கிட்டுவதை தடை செய்தது.

ஏகாதிபத்திய சக்திகளை பொறுத்தவரை, அவை உதவியாக மிகச் சிறு தொகையையே அளிக்க முன்வந்தன. அதுவும் கூட வெளியுறவுக் கொள்கை மற்றும் பிரச்சாரம் குறித்த சிந்தனைகளால் தூண்டப்பட்டதாக இருந்ததே தவிர, சகமனிதருக்குத் தோள் கொடுக்கும் நோக்கத்தால் அல்ல. முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் ஒரு பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ வசதிகளை அமர்த்துவது பயங்கரவாத நடவடிக்கையாக வளர்ச்சி காணத்தக்க அதிருப்திக் குவியல்களை வற்றச் செய்யும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலரான கோலின் பவெல் நம்பிக்கை தெரிவித்தார்.

வலது-சாரிப் பிரதமரான ஜோன் ஹோவார்டின் ஆஸ்திரேலிய அரசாங்கம், இந்தோனேசிய முன்னாள்-ஜெனரல் யுதோயோனாவின் ஆட்சியுடன் செய்து கொண்டிருந்த இருதரப்பு ஒப்பந்தத்தின் மூலமாக தனது உதவி முயற்சிகளைச் செலுத்தியது. நிதியுதவியின் பெரும்பகுதி ஆஸ்திரேலிய பெருநிறுவனங்களுக்கு செல்வதற்கு இந்த உடன்பாட்டின் வழி ஏற்பாடாகியிருந்தது.

ஜனவரி 8-9 அன்று மிச்சிகன் ஆன் ஆர்பரில் ஒரு தேசிய அங்கத்தவர் கூட்டத்தில் மார்க்சிசம், அனைத்துலகக் குழு மற்றும் முன்னோக்கின் விஞ்ஞானம்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி மீதான ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு என்ற ஒரு அறிக்கையை தொடங்கும்போது உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுத் தலைவரான டேவிட் நோர்த் உலகெங்கிலும் இருந்து இந்த துயர சம்பவம் குறித்து எழுந்த மிகப்பெரும் அக்கறை உணர்வைக் குறிப்பிட்டுக் கூறினார்.

உண்மையான துயரத்தின் இந்த வெளிப்பாடுகள் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தலைவர்களின் தரப்பில் இருந்து வெளிப்படும் வஞ்சமிக்க, வேடதாரித்தனமான மற்றும் சம்பிரதாயமான அக்கறைகளில் இருந்து எவ்வளவு வேறுபட்டதாக இருக்கிறது! இந்தப் பெருந்துயர் சம்பவத்தில் வாழ்க்கை நாசமடைந்து விட்டிருக்கும் மில்லியன் கணக்கான மக்களின் கதி குறித்த அக்கறையை புஷ்ஷினாலோ அல்லது பிளேயரினாலோ ஒருவருக்கு மன ஆறுதல் அடைகின்ற விதத்தில் வார்த்தைகளில் வெளிப்படுத்துவதற்கு இயலாமல் போனது.

சுனாமிப் பேரழிவில் வெளிப்பட்டதாகச் சொல்லப்பட்ட இயற்கையின் திகைக்க வைக்கும் நோக்கத்தை அறியவியலாத் தன்மை குறித்து ஊடகங்களில் வெளியான வெற்றுக் கருத்துகள் குறித்து நோர்த் கூறினார்:

சுனாமியின் பாதிப்பு முதலாளித்துவத்தின் பகுத்தறிவற்ற தன்மையையும் பரந்த மக்களின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்துகின்ற வகையில் உற்பத்தி சக்திகளை அபிவிருத்தி செய்வதற்கு அதனால் இயலாத நிலையையும் குறிப்பாக வரைபடம் போன்று அம்பலப்படுத்துகிறது. ஆசிய அற்புதம் குறித்து ஊடகங்கள் குதூகலிக்கின்றன, ஆனால் உண்மை என்னவென்றால் இப்பிராந்தியத்தில் கடந்த தசாப்தத்தில் உட்செலுத்தப்பட்ட மூலதனத்தின் ஆதாயங்கள் சலுகைபடைத்த சிறு எண்ணிக்கையிலான உயரடுக்கினரின் மீது மட்டுமே பொழியப்படுகிறது. மிக சாதகமான காலநிலைகளில் கூட மிகக் குறைவான பாதுகாப்பையே தரக் கூடிய குடிசைகளில் தான் ஆசியாவின் மில்லியன்கணக்கான  மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

பேரழிவு இன்னும் மோசமடைந்ததற்கு காரணம் பசிபிக் கடலில் 40 வருடங்களுக்கு முன்பே வந்து விட்ட சுனாமி எச்சரிக்கை அமைப்பு இந்தியப் பெருங்கடலில் இல்லாமலிருந்தது. இப்படியொரு அமைப்புக்கு தேவை இருப்பது நன்கறிந்த ஒரு விஷயம். உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டது போல, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் மலிவு உழைப்பைச் சுரண்டியதன் மூலமாக அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய பெருநிறுவனங்களால் குவிக்கப்பட்ட மலைபோன்ற இலாபங்களை கருத்தில் கொண்டால் இங்கு சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவுவதற்குத் தேவையான செலவு என்பது சொற்பம் தான்.

சுனாமியின் காரணங்கள் மற்றும் பின்விளைவுகள் குறித்தும் அது எழுப்பிய அரசியல் பிரச்சினைகள் குறித்தும் உலக சோசலிச வலைத் தளமும் அத்துடன் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவின் சோசலிச சமத்துவக் கட்சிகளும் பொதுக் கூட்டங்களை நடத்தின. இந்தக் கூட்டங்களுக்கு நல்ல பங்கேற்பு கிட்டியது என்பதோடு உலக சோசலிச வலைத் தளத்தின் பகுப்பாய்வுக்கான ஒரு முக்கியமான பதிலிறுப்பையும் இது எடுத்துக்காட்டியது.

கொழும்பு கூட்டத்தில் பங்குபெற்றவரில் ஒருவர் கூறினார்: சுனாமிப் பேரழிவு குறித்த ஒரு உண்மையான பகுப்பாய்வையும் இந்த வகை துயரங்களைத் தடுப்பதற்கான ஒரு விஞ்ஞானபூர்வமான வேலைத்திட்டத்தையும் நான் தேடிக் கொண்டிருந்தேன். ஆள்வோர் ஊக்குவிக்கும் தேசிய ஒற்றுமைமற்றும் தேசத்தின் மறுகட்டுமானம்போன்ற திட்டங்களில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. அதனால் தான் ஒரு புதிய பாதையைக் காண நான் இங்கு வந்தேன்.

 


இந்தியப் பெருங்கடல் சுனாமி தாய்லாந்தில்

Featured material

1. 3 January 2005 ஆசிய சுனாமி: ஏன் எச்சரிக்கைகள் விடுக்கப்படவில்லை

2. 6 January 2005 இலங்கையின் கிழக்கில் சுனாமியில் இருந்து உயிர்தப்பியவர்கள் உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடுகின்றனர்

    3. 10 January 2005 இந்தியா: சுனாமி அலை பற்றிய எச்சரிக்கைகளை கொடுத்திருக்க இயலும்

5. 14 January 2005 இலங்கை ஜனாதிபதி நிவாரண நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இராணுவத்தை நியமித்துள்ளார்

6. 9 February 2005 ஆசிய சுனாமி பேரழிவை எதிர்கொள்ள ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கு

    7.     23 July 2005 கிழக்கு இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்டோர் உயிர்வாழப் போராடுகின்றனர்

    31 December 2005  One year after the Asian tsunami: an indictment of the profit system 

காத்ரீனா புயலும் வளைகுடாக் கடற்கரையும்

காத்ரீனா புயல் முதலில் பஹாமாசுக்கு மேலே ஆகஸ்டு 23, 2005 அன்று உருவானது. இது தெற்கு ஃபுளோரிடாவைக் கடந்தபோது - அதனையொட்டி பல உயிரிழப்புகளும் வெள்ளங்களும் ஏற்பட்டன - அது முதல் நிலை புயலாக இருந்தது. மெக்சிகோ வளைகுடாவின் சூடான நீருக்குள் நுழைந்ததும் அதன் சக்தி மேலும் அதிகரித்தது. ஆகஸ்டு 29, திங்களன்று காலை தென்கிழக்கு லூசியானா மற்றும் கடலோர மிசிசிபி மற்றும் அலபாமாவைக் கடக்கும்போது அது அமெரிக்க வரலாற்றின் வலிமையான புயல்களில் ஆறாவது பெரியதாக ஆகி விட்டிருந்தது.

இந்தப் புயலுக்கு 1,800க்கும் அதிகமான மக்கள் பலியாகியிருந்தனர். குறிப்பாக நியூ ஓர்லியன்ஸில், நீர்த்தேக்கங்கள் உடைந்து நகரின் அநேகப் பகுதி வெள்ளத்தில் சிக்கியதில் உயிர்ப்பலி அதிகமாக இருந்தது. பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல முடியாத மக்கள் - குறிப்பாக வயதானவர்களும் கார்கள் இல்லாத ஏழை மக்களும் - கட்டிட உச்சிகளில் இருந்து மீட்கப்பட்டனர் அல்லது நகரின் உட்பகுதிகளில் உள்ள மையங்களில் பரிதாபகரமான நிலைமைகளின் கீழ் தங்க வைக்கப்பட்டனர்.

மக்கள் மீது சுமத்தப்பட்ட உயிர்பலியும் மற்றும் பொருள்நாசமும் அமெரிக்க முதலாளித்துவத்தின் சிதைவடைந்த உள்கட்டமைப்பு மற்றும் பாதிக்கப்பட்டோரின் துயர நிலைக்கு ஆளும் வர்க்கம் காட்டிய அப்பட்டமான அலட்சியம் மற்றும் குரோதம் ஆகியவற்றின் விளைவே என்று WSWS விளக்கியது. செப்டம்பர் 2 அன்று வெளியான ஆசிரியர் குழு அறிக்கை ஒன்று காத்ரினா அமெரிக்க அரசியலில் ஒரு தீர்மானமான திருப்புமுனை என்ற முடிவுக்கு வந்திருந்தது:

நியூ ஓர்லியன்ஸிலும் மிசிசிபியின் கடலோரக் கரைப் பகுதியிலும் கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் பெருந்துயரமானது அமெரிக்க வரலாற்றில் இணை கூற முடியாத ஒரு தேசிய அவமதிப்பாக உருவெடுத்து விட்டிருக்கிறது.

நியூ ஓர்லியன்ஸின் இத்தனை நாசங்களுக்கும் இடையில் கடுமையான மனிதப் பாதிப்பு, நம்பிக்கையின்மை, நிர்க்கதி நிலை மற்றும் உதாசீனப்படலின் காட்சிகள் ஒட்டுமொத்த உலகத்தின் கண்களுக்கு முன்பாக, மிக முக்கியமாய், அமெரிக்காவின் சொந்த மக்களின் திகைத்த கண்களுக்கு முன்பாக அமெரிக்க முதலாளித்துவ சமூகத்தின் இற்றுப் போன மையக் கருவை அம்பலப்படுத்தியிருக்கின்றன.

உள்ளூர் அதிகாரிகள் மற்றும் போலிசின் மிருகத்தனமான பதிலிறுப்பு மற்றும் நியூ ஓர்லியன்ஸ் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நேர்காணல்கள் மற்றும் புகைப்படங்கள் உடன் கண்ணால் கண்டவர்களிடம் இருந்தான செய்தி சேகரிப்பு ஆகியவையும் உலக சோசலிச வலைத் தளத்தின் செய்திகளில் இடம்பிடித்திருந்தன. செய்திகள் வாசகர்களுடனான இருவழி உரையாடலாக இருந்தன. திகைப்பில் மாட்டிக் கொண்டிருந்த குடியிருப்புவாசிகளிடம் இருந்த கடிதங்களும் இடம்பெற்றன, உலகெங்கிலும் இருந்தான மக்களின் கருத்துரைகளும் இடம்பெற்றன.

ஆகஸ்டு இறுதி முதல் டிசம்பர் இறுதி வரையான நான்கு மாதங்களில் உலக சோசலிச வலைத் தளம் இந்தத் துயர சூழலின் சமூகக் காரணங்களை அம்பலப்படுத்தும் 60 கட்டுரைகள் மற்றும் வருணனைகளை வெளியிட்டது. பல தசாப்த கால தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம் மற்றும் பொது முகமைகள் மற்றும் வேலைத்திட்டங்களின் அகற்றம் ஆகியவை இந்தப் புயலின் சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கத்தை பன்மடங்காக்கியது.

காத்ரினா தாக்கி ஒரு வாரத்திற்குப் பின், WSWS வெளியிட்ட ஆசிரியர் குழு அறிக்கை ஒன்றில், இந்த பெருந்துயர் சம்பவத்தில் வெளிப்பட்டிருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படையான சமூக முரண்பாடுகளைக் குறித்து விளக்கியது.

சமூக உள்கட்டமைப்பை செயல்பாட்டில் பராமரிக்கக் கூடிய உழைப்பை வழங்குவது உழைக்கும் மக்கள் தான், ஆனாலும் அவர்களுக்கு அதில் முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. இந்தச் சமூக அமைப்புமுறைகள் பெரும்பாலும் பகாசுர பெருநிறுவனங்களின் உடமையிலும் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன. இந்நிறுவனங்களுக்கு இலாபம் தான் தீர்மானிப்பதற்கான தகுதியே தவிர மனிதத் தேவை அல்ல. நியூ ஓர்லியன்ஸை சுற்றியிருக்கும் நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்கள் போன்ற அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் பொறுப்பு கோரும் இதுபோன்ற அமைப்புமுறைகளும் கூட, செல்வம் படைத்தவர்கள் தான் அமெரிக்க அரசியலைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதால், இலாப நலன்களுக்குக் கீழ்ப்படியச் செய்யப்படுகிறது.

செப்டம்பர் 15 அன்று ஆசிரியர் குழு விடுத்த இரண்டாவது அறிக்கையில், நியூ ஓர்லியன்ஸை மறுகட்டுமானம் செய்வதற்கு அவசியமான ஆதாரவளங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க ஆளும் உயரடுக்கின் திரட்டப்பட்ட செல்வத்தில் இருந்து இந்த ஆதார வளங்களை எளிதாக எடுத்துக் கொள்ள முடியும் என்று அதில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருந்தது. எப்படியிருந்தபோதிலும், சமூகத்தை சோசலிசரீதியில் மறுகட்டுமானம் செய்வதன் அடிப்படையிலமைந்த, தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு புதிய முன்னோக்கு தான் அவசியமாக இருந்தது:

நியூ ஓர்லியன்ஸ் மற்றும் வளைகுடாக் கரையை மறுகட்டுமானம் செய்வதென்பது எல்லாவற்றுக்கும் முதலாய் சமூகத் திட்டமிடலுக்கான அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது. நிலம், நீர், தாது வளம், உழைப்பு மற்றும் கருவிகள் என பொருள்ரீதியான வள ஆதாரங்களின் ஒரு விரிவான கையிருப்பு விவரத்துடன் இது தொடங்கப்பட வேண்டும். இந்த சமூகத் திட்டமிடலானது, பிராந்தியத்தில் வாழும் அத்துடன் மறுகட்டுமானப் பணியின் மையமாகத் திகழவிருக்கும் உழைக்கும் மக்களுடன் முழுக்க விவாதிக்கப்பட்டு ஜனநாயகமுறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். சந்தையின் அராஜகமும் பெருநிறுவன அமெரிக்காவின் இலாப நலன்களும் மக்களின் தேவைக்குக் கீழ்ப்படியச் செய்யப்பட வேண்டும்.

வர்க்க அறியாமை, அறிவீனம் மற்றும் அலட்சியம் இவற்றின் ஒரு கலவையாக புஷ் அரசாங்கம், புயலால் அதிகமாக நாசம் செய்யப்பட்டிருந்தவர்களை புறக்கணித்தது, உதவி மறுத்தது, பழி கூறியது, சுரண்டியது. இறுதியாக புஷ் தேசத்திற்கான ஒரு உரை வழங்க நியூ ஆர்லியன்ஸுக்கு பயணம் செய்தபோது ஆளும் உயரடுக்கிடம் இருந்த பதட்டத்தையும், ஒரு தீர்மானகரமான நிகழ்வாக - ஒட்டுமொத்த அரசியல் மற்றும் சமூக அமைப்புமுறைக்கும் எதிரான வெகுஜன எதிர்ப்புக்கு எரியூட்ட அச்சுறுத்திய ஒரு நிகழ்வாக - காத்ரினா ஆகியிருந்ததோ என்கிற அதன் அச்சத்தையும் WSWS சுட்டிக் காட்டியது.

இதன் அரசியல் தாக்கம் அமெரிக்காவிற்குள் மட்டுமல்லாமல் உலகெங்கும் உணரப்பட்டது. ஆண்டின் மூன்றாம் பெரிய இயற்கைப் பேரிடராக, காஷ்மீரில் நடந்த ஒரு பூகம்பத்தில் 20,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதை ஒட்டி, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலரும் அந்த சமயத்தில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான விஜே டயஸ், கருத்து தெரிவித்தார்:

ஆசிய சுனாமிக்கும் காஷ்மீர் பூகம்பத்திற்கும் காட்டிய அதே மனபாவத்தையே அமெரிக்க ஆளும் வர்க்கம் நியூ ஓர்லியன்ஸின் உழைக்கும் மக்களை நோக்கியும் காட்டியது. சென்ற டிசம்பரில் தெற்காசியாவின் ஏழைப்பட்ட கிராமவாசிகள் விடயத்தில் போலவே ஆகஸ்டில் அமெரிக்கத் தொழிலாளர்களுக்காகவும் புஷ் தனது விடுமுறைத் திட்டங்களை மாற்றுவதற்கு தயாரில்லை. காத்ரினா புயல் தாக்குவதற்கு முன்பாகவும் சரி, தாக்கிய போதும் சரி, தாக்கிய பின்னும் சரி, பெருநிறுவன உயரடுக்கின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது மட்டுமே புஷ் நிர்வாகத்தின் பின்னால் இருந்த வழிகாட்டும் கோட்பாடாக இருந்தது.


காத்ரினா புயலுக்குப் பின்னர் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் நியூ ஓர்லியன்ஸ்


மெக்சிகோ குடா பகுதியில் காத்ரினா புயல் - செயற்கைக்கோள் படம்

Featured material

1. 2 September 2005 Hurricane Katrina’s aftermath: from natural disaster to national humiliation

3. 15 September 2005 நியூ ஓர்லியன்சை திரும்ப கட்டியெழுப்புவதற்கு பிரதான தடைக்கல் இயற்கையல்ல, இலாப முறையே

4. 16 September 2005 Bush’s vision for New Orleans: a profiteer’s paradise

5. 19 September 2005 மதம், விஞ்ஞானம் மற்றும் கத்திரினா சூறாவளி

6. 21 October 2005 The Asian tsunami, Hurricane Katrina and the Kashmiri earthquake: lessons for the working class

 

களேபரத்தில் மத்திய கிழக்கு

2005 முழுவதிலும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலான அமெரிக்க ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்பின் பின்விளைவுகள் லெபனான், காசா, ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவெங்கிலும் பெருகிய நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்புகளில் உணரப்பட்டது.

ஈராக்கிலான அமெரிக்கப் போர் அதன் மூன்றாம் ஆண்டை எட்டிய நிலையில், WSWS ஆசிரியர் குழு அறிக்கை அறிவித்தது:

இந்த ஊடுருவலின் குற்றவியல் தன்மையானது புற்றுநோயைப் போல ஈராக்கிலான அமெரிக்க நடவடிக்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பரவி விட்டிருக்கிறது. காலனியப் போர்கள் மற்றும் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா, மற்றும் உலகின் பிற ஒடுக்கப்பட்ட பகுதிகள் மீதான ஆக்கிரமிப்புகளுடன் தொடர்புபட்ட அத்தனை குற்றங்களையும் ஒட்டுமொத்தமாக இது மறு உற்பத்தி செய்திருக்கிறது.

போரின் மிருகத்தன்மையானது மறைப்பதற்கு மேலும் மேலும் கடினமாகிக் கொண்டிருந்தது. ஜெனிவா மாநாடு மற்றும் பிற ஒப்பந்தங்களின் கீழ் தடை செய்யப்பட்டிருக்கக் கூடிய வெள்ளை பாஸ்பரஸ் உள்ளிட ஆயுத வழிமுறைகளைப் பயன்படுத்தி முந்தைய நவம்பரில் எவ்வாறு அமெரிக்கப் படைகள் ஃபலுஜாவை நாசமாக்கின என்பது குறித்த புதிய தகவல்கள் 2005 ஆம் ஆண்டு முழுவதிலும் வந்த வண்ணம் இருந்தன.

ஃபலுஜாவில் வெளிப்பட்ட காட்டுமிராண்டித்தனம் ஒரு தனிமைப்பட்ட சம்பவம் அல்ல. அமெரிக்கப் படைகள் அப்பாவி மக்களைப் படுகொலை செய்வது குறித்த செய்திகள் அடிக்கடி இடம்பெற்றன. குறைந்தது இரண்டு பிற நகரங்களேனும் திட்டமிட்டு அழிக்கப்பட்டன: செப்டம்பரில் டல் அஃபார் மற்றும் நவம்பரில் ஹூசேபா.

அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் செய்த குற்றங்களை விசாரணை செய்வது மிகவும் ஆபத்து வாய்ந்ததாக இருந்தது. பல சந்தர்ப்பங்களில், வெகுதொலைவில் இருந்து சுடும் அமெரிக்க இராணுவ துப்பாக்கிதாரிகள் செய்தியாளர்களைச் சுட்ட சம்பவங்கள் நடந்தன. செப்டம்பரில், அமெரிக்க தொலைதூர துப்பாக்கிவீரர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் ஒலிப் பணியாளர் ஒருவரை பாக்தாத்தில் சுட்டுக் கொன்று விட்டார். அமெரிக்கப் படைகளின் கரங்களில் சிக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட செய்தியாளர் அல்லது ஊடக உதவியாளர் எண்ணிக்கையில் அவர் பதினெட்டாவது ஆவார்.

மற்ற சந்தர்ப்பங்களில், எல் சல்வடோரில் பயன்படுத்தப்பட்ட மாதிரியின் அடிப்படையில் அமெரிக்காவில் ஒழுங்கமைக்கப்பட்ட ஈராக்கிய கொலைப் படையினர் ஆட்களைக் கடத்தினர் அல்லது கொலை செய்தனர். உதாரணத்திற்கு ஜூலை மாதத்தில் ஒரு வேனுக்குள் பத்து பேர் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த நிலையில் கண்டறியப்பட்டார்கள், வேனுக்குள் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தொட்டிருந்தது.

2005 ஆம் ஆண்டின் கோடை மற்றும் இலையுதிர் காலத்தில் சதாம் உசேன் மீதான கபடவேடத்தனமான கண்துடைப்பு விசாரணை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அவரது பாதுகாப்பு வழக்கறிஞர்களில் இருவர் கொலைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். வரவிருந்த விசாரணை குறித்து wsws கருத்திட்டது:

ஹூசைன் பல குற்றங்களுக்குப் பொறுப்பானவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு நாட்டின் மீது [ஈரான்] ஊடுருவல் செய்ததற்காக, ஆயுதமேந்திய எதிர்த்தரப்பை மிருகத்தனமாக ஒடுக்கியதற்காக, நிராயுதபாணியான அப்பாவி மக்களுக்கு எதிராக கொலைபாதகப் பதிலடி தாக்குதலை மேற்கொண்டதற்காக மற்றும் தடம்புரண்ட நீதிக்காக அவர் மீது விசாரணை நடத்தப்பட இருக்கிறது என்றால், ஈராக்கை ஆக்கிரமித்து அடிபணியச் செய்ததில் இவை அத்தனை குற்றங்களையும் புஷ் நிர்வாகமும் இழைத்திருக்கிறது. அதுவும் இதே அளவுக்கு விசாரணை செய்யப்பட வேண்டும்.

ஆப்கானிஸ்தானில், ஈராக்கை விட குறைந்த மட்டத்தில் என்றாலும், அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்புப் படைகளுக்கும் ஆப்கான் கெரில்லாக்களுக்கும் இடையிலான சண்டை தொடர்ந்தது. அமெரிக்கப் படைகள் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசியது அடிக்கடி கிளர்ச்சியை பற்றவைத்தது. ஈராக்கில் அமெரிக்காவின் நிலை மேலும் மேலும் அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையில், குறிப்பாக ஹமீத் கர்சாய் ஆட்சியை உறுதி செய்த அமெரிக்கக் கட்டுப்பாட்டிலான ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்தைய காலத்தில், புஷ் நிர்வாகம் அதன் நேட்டோ மற்றும் ஆசியக் கூட்டாளிகளுக்கு மேலும் துருப்புகளை அனுப்ப நெருக்குதல் அளித்தது.

மத்திய கிழக்கு பகுதியில் பரவலான இந்த ஏகாதிபத்திய போர்களின் ஸ்திரம்குலைக்கும் தாக்கமானது பிப்ரவரியில் லெபனானின் முன்னாள் பிரதமரான ரபிக் ஹரிரியியின் படுகொலையில் வெளிப்பாடு கண்டது. சிரியா மீது புஷ் நிர்வாகம் வம்பிழுக்கும் அச்சுறுத்தல்களையும் டமாஸ்கஸில் பதவியில் இருந்த ஆட்சி தான் இந்தக் கொலைக்கு நேரடியான காரணம் என்ற உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளையும் முன்வைப்பதற்கு இது தூண்டியது. ஹரிரியின் மரணத்தால் யாருக்கு இலாபம் என்பதை உலக சோசலிச வலைத் தளம் ஆய்வு செய்தது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் நெருக்குதலின் கீழ் சிரியா லெபனானில் இருந்து தனது இராணுவப் படைகளை விலக்கிக் கொண்டது. ஆனால் பிரதானமான ஷியா கட்சியான ஹெஸ்போல்லா அமெரிக்கத் தலையீட்டு அச்சுறுத்தலுக்கு எதிராக மில்லியன்கணக்கானோர் பங்குபெற்ற ஒரு பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்தது.

பாலஸ்தீன ஜனாதிபதியாக மக்மூத் அப்பாஸ் தேர்வானதைத் தொடர்ந்து விரிந்து சென்ற அமெரிக்க இராணுவ நெருக்குதலுக்கு ஏற்ப தன்னை சரி செய்து கொள்வதற்கு பாலஸ்தீன அதிகாரம் (PA)முனைந்தது. ஏரியல் ஷரோன் தலைமையிலான இஸ்ரேல் அரசாங்கம் ஒரு கைதியை விடுதலை செய்ததற்கும் நிதி மானியங்கள் வழங்கியதற்கும் பிரதிபலனாக அதனுடன் அப்பாஸ் ஒரு சண்டைநிறுத்தத்தில் கையெழுத்திட்டார்.

ஆகஸ்டு மாதத்தில், இஸ்ரேலின் ஆட்சி காசா பகுதியில் குடியேறியிருந்த அத்தனை ஜியோனிச மக்களையும் பலவந்தமாக அகற்றி பதிலிறுப்பு செய்தது. பகுதியாக அமெரிக்காவை திருப்திப்படுத்துவதற்கும், அதேபோல பெரும்பான்மையினர் சூழ நடுவில் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகக் கூடியவர்களாய் அவர்கள் இருப்பதை அகற்றும் பொருட்டுமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இஸ்ரேலியப் படைகள் மேற்குக் கரை, காசா பகுதி மற்றும் கோலன் குன்று ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிய 1967 போருக்குப் பிந்தைய காலத்தில் நடந்தேறிய வலது-சாரி குடியேற்ற இயக்கத்தின் எழுச்சி குறித்து WSWS நான்கு பகுதிகளாக வெளியான கட்டுரை ஒன்றில் பகுப்பாய்வு செய்தது.

ஈரானில் ஜூனில் மக்மூத் அகமதினிஜாத் ஜனாதிபதியாகத் தேர்வானதை தொடர்ந்து, அதன் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் அமெரிக்க இராணுவ முஸ்தீபுகளுக்கான பதிலிறுப்பாக ஈரானின் இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சி இன்னும் சமரசமற்ற அமெரிக்க-எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தது. அமெரிக்கா மீதும் மற்றும் ஈரானிய முதலாளித்துவ வர்க்கத்தின் மிக சலுகைபடைத்த பிரிவுகளின் மீதும் தொடுத்த ஜனரஞ்சகத் தாக்குதல்களினால் அகமதினிஜாத் மக்கள் ஆதரவை வெல்ல முடிந்தது.

ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க விநியோகத்தின் பாதையில் ஒரு முக்கியமான இடைப்புள்ளியான உஸ்பெகிஸ்தானில் மே மாதத்தில் நடைபெற்ற அரசாங்க-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரியான இஸ்லாம் கரிமோவின் ஒரு மிருகத்தனமான படுகொலை நடவடிக்கைக்கு இட்டுச் சென்றது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதே மாதத்தில் குவோண்டானோமோவில் குரான் அவமதிப்பு உள்ளிட கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டது குறித்த நியூஸ்வீக்கில் வெளியான ஒரு செய்தியறிக்கை முஸ்லீம்கள் அதிகமாய் வாழும் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் நாடுகளில் கலவரங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தூண்டியது.

இந்த அபிவிருத்திகள், குறிப்பாக போர் தொடுக்கும் முடிவின் சதி போன்ற தன்மை குறித்த புதிய அம்பலப்படுத்தல்கள் வெளியாகிக் கொண்டிருந்த சமயத்தினால், அமெரிக்காவிற்குள்ளும் ஐரோப்பாவிற்குள்ளும் போர் எதிர்ப்பு மனோநிலைக்கு எரியூட்டியது. மே மாதத்தில் பிரிட்டிஷ் ஊடகங்களுக்குக் கசிந்த டவுனிங் ஸ்டிரீட் மெமோ என்பதான ஒன்று, 2001, செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்த சில மாதங்களுக்குள்ளாகவே ஈராக்குடனான போரை புஷ் நிர்வாகம் தீர்மானித்து விட்டிருந்தது என்றும், பிரிட்டிஷ் பிரதமரான டோனி பிளேயர் 2002 பிப்ரவரி வாக்கிலேயே போருக்கு ஒப்புதல் கையெழுத்திட்டிருந்தார் என்றும், சதாம் உசைனைத் தூக்கியெறிவதற்கான போரில் இறங்குகின்ற கொள்கையைச் சுற்றி உளவுத் தகவல்களும் உண்மைகளும் பின்னப்பட்டுக் கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் கேபினட் எச்சரிக்கப்பட்டிருந்தது என்றும் எடுத்துக் காட்டியது.

பெருநிறுவனக் கட்டுப்பாட்டில் இருந்த அமெரிக்க ஊடகங்கள் போருக்கான வெகுஜன எதிர்ப்பை நிராகரித்த அதே நேரத்தில் அவை தூபமிட்ட பொய்கள் அம்பலப்படுவதை தணிப்பதற்கு முனைந்தன. இந்த ஊடக இருட்டடிப்பு மற்றும் போருக்கு ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் அரசியல்வாதிகள் அளித்த இருகட்சி ஆதரவு இவற்றைத் தாண்டி, அமெரிக்கர்கள் மூன்றில் இரண்டு பங்கினர் அளவுக்கு ஈராக்கில் இருந்து உடனடியாக துருப்புகளைத் திரும்பப் பெற விரும்பினர் என்பதை கருத்துக்கணிப்புகள் சுட்டிக் காட்டின.

ஈராக்கில் கொல்லப்பட்ட ஒரு அமெரிக்கப் படைவீரரின் தாயான சிண்டி ஷீகன், புஷ் அவரது ஒரு மாத கால ஆகஸ்டு விடுமுறைக் கழிப்பின் போது டெக்சாசின் கிராபோர்டில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில் இருந்த சமயத்தில், அவ்வீட்டின் முன்பாக தனது தனிநபர் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கியதற்கு பின்னர் பாரிய போர் எதிர்ப்பு கருத்து குறித்த நிதர்சனம் அமெரிக்க ஊடகங்களிலும் கூட மறுக்கவியலாததாக ஆகிவிட்டது. நூற்றுக்கணக்கானோர் அவருக்கு ஆதரவாகத் திரண்டனர்.

ஷீஹனின் பிரச்சாரம், புஷ் நிர்வாகம் மற்றும் போருக்கு அவர் வெளியிட்ட நெகிழச் செய்யும் கண்டனம், மற்றும் அவர்களை உடனே தாயகம் வரச் செய்யுங்கள் வாகனத்தின் மூலமாக அவர் தூண்டிய பரவலான போராட்டங்கள் ஆகியவை குறித்த விரிவான செய்திகளை WSWS வெளியிட்டது. உத்தியோகபூர்வ போர் ஆதரவு கருத்தொற்றுமையின் ஊடாக உடைத்துக் கொண்டு அமெரிக்க அரசியலில் புதிய சக்திகள் எழுந்திருப்பதை இது குறிக்கிறது என WSWS குறிப்பிட்டது.

இந்தப் பிரச்சாரம் வாஷிங்டனில் நடந்த ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் உச்சம் பெற்றது. 2003 பிப்ரவரியில் நடந்த உலகளாவிய ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் நடந்த மிகப் பெரிய எதிர்ப்பு வெளிப்பாட்டில் நூறாயிரக்கணக்கிலானோர் அமெரிக்கத் தலைநகருக்கு படையெடுத்தனர். ஷீஹன்(Sheehan)போரை நேர்மையுடன் எதிர்த்தார் இருகட்சிகளையும் விமர்சனம் செய்தார், என்றபோதிலும் ஆர்பாட்டத்தில் பேசியவர்கள் முன்னோக்கிய எந்தவொரு வழியையும் வழங்கவில்லை என்பதை WSWS எச்சரிக்கை செய்தது. ஜனநாயகக் கட்சியுடனும் ஒட்டுமொத்த இரு-கட்சி அரசியல் அமைப்புமுறையில் இருந்தும் உடைத்துக் கொள்வதற்குப் பதிலாக, நெடுங்காலமாய் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கான சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பின் கல்லறையாகத் திகழ்ந்து வரும் ஜனநாயகக் கட்சிக்கு அழுத்தமளிப்பதையே அவர்கள் முன்வைத்தனர்.

 


மேற்கு பாக்தாத்தில் ரோந்து சுற்றும் துருப்புகள்

Featured material

16 February 2005 மஹ்மூத் அப்பாசும் பாலஸ்தீனிய தேசிய இயக்கத்தின் சீரழிவும்
பகுதி 1

17 February 2005 மஹ்மூத் அப்பாசும் பாலஸ்தீனிய தேசிய இயக்கத்தின் சீரழிவும்
பகுதி 2

17 February 2005 Mossad, the CIA and Lebanon The assassination of Rafiq Hariri: who benefited?

19 March 2005 Washington’s criminal war against Iraq enters its third year

1 July 2005 Iran’s presidential election a harbinger of social and political convulsions

15 August 2005 இஸ்ரேலிய அரசும் அதிதீவிர-வலதுசாரி குடியேறியோர் இயக்கமும்-- பகுதி 1

16 August 2005 இஸ்ரேலிய அரசும் அதிதீவிர-வலதுசாரி குடியேறியோர் இயக்கமும்-- பகுதி 2

17 August 2005 இஸ்ரேலிய அரசும் அதிதீவிர-வலதுசாரி குடியேறியோர் இயக்கமும்-- பகுதி 3

18 August 2005 இஸ்ரேலிய அரசும் அதிதீவிர-வலதுசாரி குடியேறியோர் இயக்கமும்-- பகுதி 4

29 August 2005 US pushes military build-up in Afghanistan as armed resistance escalates

28 September 2005 After September 24 protest: What way forward in the struggle against war?

ஐரோப்பாவில் நெருக்கடி ஆழமடைதல்

ஐரோப்பாவை முதலாளித்துவ அடிப்படையில் ஐக்கியப்படுத்துகின்ற திட்டம் - ஐரோப்பிய ஒன்றியம் - ஜனநாயகத்துடன் இசைந்து செல்ல முடியாதது என்பது 2005 இல் கூடுதல் தெளிவாகிக் கொண்டிருந்தது. பல வருடங்களாய் புரூசேல்ஸில் இருந்த ஐரோப்பிய ஆணையம் கண்டம் முழுமைக்குமான சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை உத்தரவிட்டு வந்திருந்தது. இப்போது ஐரோப்பிய அரசாங்கங்கள், ஜேர்மனியின் தலைமையில், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இந்த சதிக்கு ஒரு ஜனநாயக-விரோதமான அரசியல் சட்டத்தின் அங்கியைக் கொண்டு மூட முனைந்தனர். பாரிய வாக்குப் புறக்கணிப்பைத் தாண்டி ஸ்பெயினில் நடந்த ஒரு கருத்துக்கணிப்பில் இது நிறைவேற்றப்பட்டது.

பெருகிச் சென்ற எதிர்ப்பின் காரணத்தால் மே மாதத்தில் நெதர்லாந்திலும் பிரான்சிலும் நடந்த கருத்துக்கணிப்புகளில் இந்த அரசியல் சட்டம் தோற்கடிக்கப்பட்டது. இந்த முதலாளித்துவ அரசியல் சட்டத்தை பிரான்சின் வலது-சாரி மற்றும் குட்டி-முதலாளித்துவ இடதுகளின் தேசியவாத விண்ணப்பங்களின் அடிப்படையில் இல்லாமல், சோசலிச சர்வதேசியம் மற்றும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்திற்கான அடிப்படையில் நிராகரிக்குமாறு பிரெஞ்சுத் தொழிலாளர்களை வலியுறுத்தும் ஒரு அறிக்கையை WSWS ஆசிரியர் குழு வெளியிட்டது.

நாட்டுக்கு வெளியே இராணுவ மூர்க்கத்தனம் உள்நாட்டில் சமூக அழிப்பு என்னும் கொள்கைக்கான ஒரு கருவியாக இருப்பது என்ற தன் உண்மையான முகத்தை ஐரோப்பிய ஒன்றியமும் காட்டியது. கண்டத்தின் மக்களை ஒன்றுபடுத்துவதற்கு எல்லாம் அப்பாற்பட்டு, ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நன்மைகள் மீதான தாக்குதல்களுக்கான களமாக அது ஆகியது. அகதிகளிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டன. கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பா இரண்டிலுமே சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள் அமலாக்கப்பட்டதை அடுத்து, கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் ஐக்கியப்பட்டு நடத்திய முதல் ஆர்ப்பாட்டம் மார்ச் மாதத்தில் புரூசேல்ஸில் நடந்தது.

வர்க்க மோதல்கள் அவற்றின் மிகப் பகிரங்கமான அரசியல் வடிவத்தை எடுக்கின்றதொரு நாடாக பிரான்ஸ் அதன் வழமையான பாத்திரத்தை ஆற்றியது. பிப்ரவரியில் அரை மில்லியன் பேர் அரசாங்கத் தாக்குதல்களுக்கு எதிராக வீதிகளில் திரண்டனர். 100,000 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் நிகழ்ந்து கொண்டிருந்த கல்வி அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அக்டோபரின் பின்பகுதியில் பாரிசில் இரண்டு இளைஞர்கள் போலிசிடம் இருந்து தப்பியோடுகையில் உயிரிழந்ததை அடுத்து சமூகப் பதட்டங்கள் வெடித்தன. நாடு முழுவதும் புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தினர் வசிக்கும் பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன. பாரிஸ் பல தசாப்தங்களாக சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியால் ஆளப்பட்டிருந்தது. இந்தக் கட்சிகள் எல்லாம் இப்போது புறநகர்ப் பகுதிகளில் கலகத் தடுப்பு போலிசாரை நிறுத்துவதை முழுமையாக ஆதரித்தன. இந்த இளைஞர்களை ஆதரிக்க மறுத்ததன் மூலம், போலி-இடது LCR(Ligue Communiste Révolutionnaire) தனது வர்க்க நிலைப்பாட்டை தெளிவாக்கியது.

ஜேர்மனியில், ஆழமடைந்த சமூகத் துருவமயமாக்கம், 2005 செப்டம்பரில் நடந்த தேசியத் தேர்தலைத் தொடர்ந்து ஒரு அரசாங்க மாற்றத்துக்கு அழைத்துச் சென்றது. ஏழு வருட காலம் அதிகாரத்தில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சி(SPD)மற்றும் பசுமைக் கட்சியின் கூட்டணி சான்சலர் அங்கேலா மேர்கெலின் கீழான SPD மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் மகா கூட்டணி ஒன்றின் மூலமாக இடம்பெயர்க்கப்பட்டது.

சான்சலர் ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD)அரசியல் அமைப்பு விதிகளை சூழ்ச்சிக் கையாளல் செய்து முன்கூட்டிய தேர்தலைக் கொண்டுவந்திருந்தார். மிகப் பெரியதும் மிகவும் தொழிற்துறைமயப்பட்டதுமான ஜேர்மன் மாகாணமான வடக்கு ரைன் - வெஸ்ட்பாலியாவில் வரலாறு காணாத மிக மோசமான தேர்தல் தோல்வியை SPD சந்தித்ததற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவர் திட்டமிட்டுத் தூண்டினார்.

சமூக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு பொறிந்தமையானது, ஜேர்மனியில் 2005 ஜனவரி 1 அன்று அமலுக்கு வந்த ஹார்ட்ஸ் IV என்று அழைக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களின் நேரடி விளைவாக இருந்தது. இச்சட்டங்கள் வறுமை வெடித்து அதிகரிக்க வழிசெய்தன என்பதோடு ஒரு பெரும் மலிவூதியத் துறையையும் உருவாக்கியது.

அதேசமயத்தில் Die Linke(இடது கட்சி)என்ற ஒரு புதிய கட்சியும் உதயமானது. சமூக ஜனநாயகக் கட்சியினர் வலது நோக்கி தீவிரமாகத் திரும்பியதால் உருவான அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் நோக்கம் கொண்டதாய் இது இருந்தது. கிழக்கு ஜேர்மனியில் இருந்தான பழைய ஸ்ராலினிசக் கட்சி மற்றும் முன்னாளில் ஜேர்மனின் நிதி அமைச்சரும் SPD தலைவருமான ஓஸ்கர் லஃபொன்ரைன் தலைமையில் சமூக ஜனநாயகக் கட்சியில் இருந்து பிரிந்த தேர்தல் மாற்று வேலை மற்றும் சமூக நீதி(WASG)அமைப்பு மற்றும் நீண்டகால தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோருக்கு இடையிலான தேர்தல் கூட்டணியாக இடது கட்சி 2005 ஜூலையில் உருவானது.

இந்த முழு அதிகாரத்துவ உருவாக்கமானது தொழிலாளர்களை சிக்க வைப்பதற்கும் அவர்களை சீர்திருத்தவாத பிரமைகளுக்குள் கட்டிப் போடுவதற்குமாய் அமைக்கப்பட்டிருந்தது. இடது கட்சி இடது வாய்வார்த்தைகளை ஆவேசமாய் பேசிய அதேநேரத்தில் நடைமுறையில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவளித்தது. SPD உடன் முறித்துக் கொள்ளும் தொழிலாளர்கள் ஒரு புரட்சிகரப் பாதைக்கு சென்று விடக் கூடிய சாத்தியம் குறித்து அஞ்சிய போலி-இடது குழுக்களின் ஒரு ஒட்டுமொத்தமான எண்ணிக்கையை இது ஈர்த்தது.

செப்டம்பர் தேர்தலில், தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான வேலைத்திட்டத்தை முன்னெடுத்த ஒரேயொரு அரசியல் சக்தி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி(PSG)மட்டுமே. வடக்கு ரைன் - வெஸ்ட்பாலியா, ஹெஸி, சாக்சோனி மற்றும் பேர்லின் ஆகிய நான்கு மாகாணங்களில் PSG வேட்பாளர்கள் களமிறங்கினர்.

செப்டம்பர் 18 தேர்தலில், வாக்காளர்கள் SPDக்கும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்திற்கும் (CDU)இடையிலான வலது-சாரிக் கருத்தொற்றுமையை நிராகரித்து, இடது கட்சிக்கு மிகப்பெரும் வாக்கு அதிகரிப்பை அளித்திருந்தனர். அத்துடன் எந்தப் பெரிய கட்சி ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கும் என்ற கேள்வியும் திறந்து விடப்பட்டிருந்தது. இறுதியாக, CDUவும் SPDம் ஒரு பெரும் கூட்டணிக்கான உடன்பாட்டைக் கண்டன. CDU இன் அங்கேலா மேர்கெல் சான்சலராகத் தேர்ந்தெடுக்கப்பட, SPD நிதி அமைச்சகத்தையும் அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களை திணிப்பதற்கான பொறுப்பையும் எடுத்துக் கொண்டது.

பிரிட்டனில் மே 5 நடந்த பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அதன் பெரும்பான்மை மிகப்பெருமளவில் குறைந்து விட்டிருந்தது. குறிப்பாக தொழிற்கட்சியின் கோட்டைகளாகக் கருதப்பட்ட இடங்களிலும் கூட ஆதரவு குறைந்து விட்டிருந்தமையானது, ஈராக் மீதான சட்டவிரோதப் போர் மற்றும் ஆக்கிரமிப்பில் பிரிட்டனின் பங்கு மற்றும் ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல் ஆகியவற்றின் விளைவாக இருந்தது.

ஜூலை 7 அன்று இலண்டனில் நடந்த பயங்கரவாதக் குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்ததோடு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். WSWS ஆசிரியர் குழு அறிக்கை இந்தத் தாக்குதல்களைக் கண்டனம் செய்தது. ஸ்காட்லாந்தில் ஜி8 உச்சிமாநாடு நடக்கவிருந்த வேளையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த உச்சிமாநாட்டில் கூடிய அரசாங்கத் தலைவர்கள் இந்த பயங்கரச் சம்பவத்தை சாக்காக்கி தமது போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலின் கொள்கையை நியாயப்படுத்தினர். பயங்கரவாதத்தின் மீதான போர் தொடர்கிறது என்று பிரதமர் பிளேயர் வலியுறுத்தினார்.

இந்த குண்டுவெடிப்புகளுக்கு பின்னர், WSWS, முஸ்லீம் இளைஞர்கள் ஏன் இதில் பங்குபெறுகிறார்கள், இன்னும் நூற்றுக்கணக்கிலானோர் ஏன் மதத் தீவிரவாதத்தை நோக்கி ஈர்க்கப்படுவதோடு கொல்வதற்கும் கொல்லப்படுவதற்கும் தயாராகின்றனர், பிளேயர் அரசாங்கம் ஏன் உளவுத் துறையின் தோல்வி குறித்தும் இத்தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் தூதரகம் முன்னரே எச்சரித்திருந்ததாக வந்த செய்திகள் குறித்தும், அத்துடன் தாக்குதல் நடத்தியவர்கள் உளவுத்துறை முகமைகள் நன்கறிந்தவர்கள் தான், கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தவர்கள் தான் என்ற, பின்னர் உண்மையென நிரூபணமான, குற்றச்சாட்டுகள் குறித்துமான விசாரணையை எதிர்க்கிறது ஆகிய உத்தியோகபூர்வ பதிலிறுப்பு பதில்கூறத் தவறிய அரசியல் பிரச்சினைகளை ஆராய்ந்தது.

ஜூலை 22 அன்று, பிரேசிலைச் சேர்ந்த தொழிலாளியான ஜோன் சார்ல்ஸ் டி மெனெசெஸ் இலண்டன் சுரங்கப்பாதை இரயில் அருகில் போலிசால் நெருக்கமான தூரத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட போது தான், அதுவரை இரகசியமான சுட்டுக் கொலை செய்யும் கொள்கை இருந்து வந்திருப்பது தெரியவந்தது. WSWS குறிப்பிட்டது:

மகா சாசன நாடான இங்கிலாந்து, இப்போது, அப்பாவிப் பொதுமக்கள் தலைநகரின் வீதிகளில், போலிசாரின் முடிவுக்கேற்ப, எந்த விளக்கமும் இல்லாமல், அதிக காரண நியாயமும் இல்லாமல், அத்துடன் சிறு வருத்த அறிக்கையை மட்டும் கொண்டு வரக் கூடிய வகையில், சுட்டுக் கொல்லப்படத்தக்கதொரு நாடாக இருக்கிறது.

இலண்டன் குண்டுவெடிப்பு மற்றும் சார்ல்ஸ் டி மெனெசெஸ் அரசால் படுகொலை செய்யப்பட்டது ஆகியவற்றில் இருந்து WSWS கண்ட படிப்பினைகள் WSWS பேர்லின் PSG இன் ஒரு தேர்தல் கூட்டத்தில் ஜூலி ஹைலண்ட் வழங்கிய அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. மத்திய கிழக்கை ஸ்திரம் குலைத்து இங்கிலாந்திற்குள்ளாக இன மற்றும் மதப் பதட்டங்களை தூண்டிய பிளேயரின் குற்றவியல் கொள்கைகளால் விதைக்கப்பட்டிருந்த சூறாவளியை பிரிட்டிஷ் மக்கள் அறுவடை செய்ய நேர்ந்தது குறித்து அவர் விளக்கினார்.


பாரிசின் புறநகர்ப் பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் ஒரு கார்

Featured material

6 April 2005 போப் இரண்டாம் ஜோன் போல் : ஓர் அரசியல் இரங்கற் குறிப்பு

8 April 2005 பிரெஞ்சு இடதும் ஐரோப்பிய அரசியலமைப்பு மீதான கருத்தெடுப்பும்

5 May 2005 பிரிட்டன்: மே 5 பொதுத் தேர்தலும், தொழிற்கட்சியிசத்தின் தோல்வியும்

25 May 2005 ஐரோப்பிய அரசியலமைப்பு பற்றிய பிரெஞ்சு கருத்து வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்று வாக்களிக்கவும்
ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக

13 June 2005 தேசிய சீர்திருத்தவாதத்தின் இறுதி முடிவு
ஜேர்மனி: லாபொன்டைனும் அவரது ``இடதுசாரி கட்சியும்``

29 June 2005 சமூக சமத்துவத்திற்காக. ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக. PSG இற்கு வாக்களியுங்கள்.
2005 ஜேர்மன் தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை

7 July 2005 ஐரோப்பா நெருக்கடியில்

8 July 2005 London terror bombings: a political crime

25 July 2005 New name, old program German Party of Democratic Socialism renames itself “The Left Party”

14 September 2005 The lessons of the July 7 London bombings and the state murder of Jean Charles de Menezes

4 November 2005 பிரான்ஸ்: போலீசிற்கு எதிராக பரவிவரும் கலகங்கள் அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுக்கின்றன

 

அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகளும் சமூகப் பிரச்சினைகளும்

அமெரிக்காவில் புஷ் நிர்வாகம் போலிஸ் அரசு அதிகாரங்களைக் கட்டியெழுப்புவதை முன்நகர்த்தியது. இது பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற பெயரில் நடத்தப்பட்டாலும் கூட, உண்மையில் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக நல உதவிகள் ஆகியவற்றிலான வெட்டுகளுக்கு தொழிலாள வர்க்கம் அளித்த எதிர்ப்பையும், ஏகாதிபத்திய போருக்கு பெருகிச் சென்ற எதிர்ப்பையும் ஒடுக்கும் திசையிலேயே இது செலுத்தப்பட்டது.

ஜனவரி 20 அன்று பதவியேற்பு உரை அளித்து புஷ் தனது இரண்டாவது பதவிக்காலத்தை தொடங்கினார். ஈராக் பேரழிவோ அல்லது அமெரிக்க இராணுவவாதத்திற்கு எதிரான சர்வதேச வெகுஜன எதிர்ப்போ எதுவுமே அவரது புதிய நிர்வாகத்தை தன் பிற்போக்குத்தனமான இலக்குகளைப் பின்பற்றுவதில் இருந்து தடுத்து விடும் என்பதான பிரமைகள் எதனையும் அகற்றும் நோக்கத்துடனானதாக அந்த உரை இருந்தது என்று WSWS எழுதியது.

வெகுவிரைவிலேயே புஷ் அவரது வருடாந்த கூட்டரச உரையில்(State of the Union speech), சமூகப் பாதுகாப்பை அகற்றுவது என்ற அவரது உள்நாட்டுக் கொள்கையின் மையமான அம்சத்தை வெளிப்படுத்தினார். 1930களில் ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட் நிர்வாகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்தே அமெரிக்காவில் சமூக நல உதவிகளுக்கான அடித்தளமாக இருந்து வருகின்ற மூத்த குடிமக்களுக்கான ஓய்வுக் கால வருவாய்த் திட்டத்தை அகற்றுவது குறித்து அதில் சூசகம் செய்தார். ஆனாலும் அவரது இந்த முன்முயற்சி பாரிய வெகுஜன எதிர்ப்புக்கு முகம் கொடுத்த நிலையிலும், பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகள் தொடர்ச்சியாக ஏற்பட்டதில் வெள்ளை மாளிகையின் கவனம் திசைமாறி விட்ட நிலையிலும், விரைவாக நிலைகுலைந்தது.

புஷ் நிர்வாகம், குடியரசுக் கட்சி மற்றும் ஒட்டுமொத்தமாக அரசியல் ஸ்தாபகத்தின் மீதும் நம்பிக்கை இழக்க வகைசெய்யும் வண்ணமான ஒரு முக்கியமான அத்தியாயமாக, டெர்ரி சியாவோ வழக்கில் கூட்டரசாங்கத்தின் பாத்திரம் அமைந்திருந்தது. இப்பெண் 15 ஆண்டுகளாக மீண்டு வராத கோமா நிலையில் இருந்தார். அவரது கணவரான மைக்கேல் அவரது கருணைக் கொலைக்கு விண்ணப்பித்தார். டெர்ரி சியாவோவின் பெற்றோரோ அதற்கு ஆட்சேபித்தனர். இந்த தனிப்பட்ட ஒரு குடும்பத் துயரத்தை குடியரசுக் கட்சியின் கிறிஸ்தவ அடிப்படைவாதப் பிரிவு தலையிட்டு தனது பிற்போக்குத்தன நோக்கங்களுக்கு சுரண்டிக் கொள்ள முனைந்தது.

அதன்பின் மொத்த உலகமும் ஒரு அவலட்சணமான காட்சியைக் காண நேர்ந்தது. டெக்சாஸின் ஆளுநராக 152 சிறைக் கைதிகள் மரண தண்டனையளிக்கப்படுவதற்கு ஒப்புதல் முத்திரையளித்தவரும், ஜனாதிபதியாக ஈராக்கின் ஒட்டுமொத்த நகரங்களும் தரைமட்டமாக்கப்படுவதற்கும், உலகெங்கிற்கும் அமெரிக்க சிறப்புப் படைகள் மற்றும் சிஐஏவின் தற்கொலைப் படைகள் அனுப்பப்படுவதற்கும், சித்திரவதையைப் பரவலாகப் பயன்படுத்துவதற்கும் உத்தரவிட்டவருமான ஜோர்ஜ் புஷ்ஷின் ஊக்குவிப்பில் மனித வாழ்க்கைக்கு மரியாதை என்னும் பிரச்சாரம் நடந்தது. செனட் தலைவரான ஹாரி ரேய்ட் தொடங்கி ரெவரெண்ட் ஜெஸி ஜாக்சன் வரையான ஜனநாயகக் கட்சி பிரபலங்களும் இதில் அவருக்கு உதவினர், உடந்தையாக இருந்தனர்.

WSWS ஆசிரியர் குழுத் தலைவரான டேவிட் நோர்த் மிச்சிகன் ஆன் ஆர்பரில் நடந்த ஒரு கூட்டத்தில் வழங்கிய அறிக்கையில் இந்த வலது சாரிப் பிரச்சாரத்தில் விஞ்ஞானமும் பகுத்தறிவும் மறுதலிக்கப்பட்டதை விவரித்தார். ஜனநாயகக் கட்சியில் இருந்துமான இருகட்சி ஆதரவு இல்லாமல் புஷ் மற்றும் நாடாளுமன்றக் குடியரசுக் கட்சியினர் இதில் தலையீடு செய்திருக்க முடியாது என்று அவர் விளக்கினார்:

அமெரிக்காவின் அரசியல் மற்றும் புத்திஜீவித்தன வாழ்விலான பரிதாபத்திற்குரிய சீரழிவு வெறுமனே அதிவலதின் கிளர்ச்சியில் மட்டும் வெளிப்பாட்டை காணவில்லை, மாறாக நெடுங்காலமாக ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களாகவும் சமூக முன்னேற்றத்திற்கு உதவுபவர்களாகவும் காட்டிக் கொண்டு வந்திருக்கக் கூடிய ஜனநாயகக் கட்சியும் மற்ற பிற சக்திகளும் முழு சரணாகதி அடைந்ததிலும் முழு வெளிப்பாட்டை கண்டிருக்கிறது. அடிப்படையான ஜனநாயக உரிமைகளை சட்டரீதியான உத்தரவுகள் மூலம் கைவிடுவதை சட்டமாக்க முனையும் அப்பட்டமாய் அரசியல்சட்ட விரோதமானதான டெரி சட்டத்தை நாடாளுமன்றத்தின் வழி திணிப்பதென்பது ஜனநாயகக் கட்சி உடந்தையாக இல்லாமல் குடியரசுக் கட்சியினருக்கு சாத்தியமாகியிருக்க முடியாது.

அமெரிக்காவின் தாராளவாத ஸ்தாபனங்களின் சிதைவு அந்த ஆண்டின் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. 2005 கோடையில், நியூயோர்க் டைம்ஸ் செய்தியாளர் ஜூடித் மில்லர் சிறையிலடைக்கப்பட்டதானது அமெரிக்காவின் முன்னணி செய்தித்தாளுக்கும் தேசியப் பாதுகாப்பு எந்திரத்திற்கும் இடையிலிருந்த முறையற்ற உறவை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

2003 இல் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு முன்னதாக ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருந்ததாக சொல்லப்பட்ட விடயத்தில் சிஐஏ மற்றும் பென்டகனின் பொய்ப் பிரச்சாரத் தகவல்கள் வெளிவரும் பாதையாகத் தான் மில்லர் சேவை செய்தார். ஆனால் துணை ஜனாதிபதி ரிச்சார்ட் செனியின் தலைமை உதவியாளரான லூயிஸ் லிபி, முக்கியமானதொரு போர் விமர்சகரான ஜோசப் வில்சனைத் தண்டிக்கும் பொருட்டு சிஐஏ இல் வேலை செய்யும் அவரது மனைவியின் பெயரை ஊடகங்களுக்கு கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு அவலட்சணமான விவகாரத்தில் மில்லர் சாட்சியாகி விட்டிருந்தார். லிபி மீதான குற்றச்சாட்டு பின்னர் பதிவு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டது என்றபோதிலும் புஷ் தலையிட்டு அவருக்கு சிறைத் தண்டனை இல்லாமல் செய்தார்.

இதேசமயத்தில் தான் AFL-CIO பிளவும் உருவானது. இதில் குறிப்பாக பொதுத் துறையைச் சேர்ந்த சுமார் ஆறு பெரிய சங்கங்கள் முறித்துக் கொண்டு வெற்றிக்கான மாற்றம்(Change to Win)என்றழைக்கப்படும் ஒரு தனியான குடையின் கீழான அமைப்பை உருவாக்கின. இந்த இரண்டு அதிகாரத்துவ குழுக்களுக்கும் இடையில் கோட்பாட்டு பேதம் எதுவும் இல்லை, இரண்டுமே தொழிலாள வர்க்கத்தை ஜனநாயகக் கட்சி மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கீழ்ப்படியச் செய்ய முனைந்தன என்பதை WSWS விளக்கியது.

சங்க அங்கத்தவர்களிலான நெடிய சரிவின் மூலமாக இந்தப் பிளவு திடப்பட்டது. தனியார் துறை அங்கத்தவர் எண்ணிக்கை 8 சதவீதத்திற்கும் கீழாகச் சரிந்து 100 ஆண்டுகளில் கண்டிராத மட்டங்களை எட்டியது. வெற்றிக்கான மாற்றக் கன்னையானது சீர்திருத்தம் என்ற மேலோட்டமான விடயத்தை எடுத்துக் கொண்டது என்றாலும், பெருநிறுவனங்களின் இலாபங்களை பாதுகாப்பதற்கு AFL-CIO இல் எஞ்சியிருந்த சங்கங்களின் அளவுக்கு அதுவும் உறுதியோடு இருந்தது.

அச்சமயத்தில் நாட்டின் மிகப் பெரிய விமானசேவை நிறுவங்களில் நான்காவது பெரியதான நோர்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மெக்கானிக்குகள், 25 சதவீத ஊதிய வெட்டை எதிர்த்தும் சுமார் பாதி எண்ணிக்கையிலானோர் ஆட்குறைப்பு செய்யப்பட்டதை எதிர்த்தும் வேலைநிறுத்தம் செய்தனர். அப்போது இரண்டு கன்னைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களுமே தமது சங்கத்தைச் சேர்ந்த அந்நிறுவனத் தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு வேலையைத் தொடர்வதற்கே அறிவுறுத்தின. நோர்த்வெஸ்ட் மெக்கானிக்குகள் வேலைநிறுத்தத்தில் இருந்தும் அத்துடன் அதே ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட நோர்த்வெஸ்ட் திவால்நிலையைத் தொடர்ந்து நடந்த வேலைவெட்டுகளில் இருந்துமான கடுமையான படிப்பினைகளை WSWS வரைந்தது.

டிசம்பரில் நியூயோர்க் மாநகரப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 34,000 பேர் மூன்று நாள் வேலைப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியது குறித்த செய்திகள் WSWS இல் வெளியாயின. நாட்டின் மிகப் பெரும் போக்குவரத்து அமைப்பை முடக்கிப் போட்ட இந்த வேலைநிறுத்தம் தொழிலாளர்களின் மகத்தான சமூக சக்தியையும் போர்க்குணத்தையும் விளங்கப்படுத்தியது. நகரின் பில்லியனர் மேயரான மைக்கேல் புளூம்பேர்க், பெருநிறுவன ஊடகங்களில் இருந்தான நச்சுத்தனமான தாக்குதல்கள், அரக்கத்தனமான வேலைநிறுத்த-விரோத சட்டங்கள் மற்றும் தமது சொந்த சர்வதேச சங்கம் அத்தனைக்கும் அஞ்சாமல் இத்தொழிலாளர்கள் கண்ணியமான வாழ்க்கைத் தரங்களைப் பாதுகாப்பதற்காய் வேலைப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


2005 ஆம் ஆண்டின் கூட்டரசாங்க உரை நிகழ்த்துகிறார் ஜோர்ஜ் W.புஷ்

Featured material

21 January 2005 புஷ்ஷூடைய இரண்டாவது பதவியேற்பு விழா
அமெரிக்காவுக்கு வெட்கக்கேடான நாள்

4 April 2005 டெர்ரி ஷியாவோவின் வழக்கும் அமெரிக்காவின் அரசியல், கலாச்சார நெருக்கடியும்

7 July 2005 டைம்ஸ் நிருபருக்கு சிறை: பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு தாக்குதல்

12 July 2005 AFL-CIO இல் பிளவு

29 October 2005 லீபி குற்றவிசாரணையின் அரசியல் விளைவுகள்

 

இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணிகளும்

2005 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு மையமான அரசியல் தலையீடாக, இலங்கையில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கம் பின்பற்றிய போர் மற்றும் சமூகப் பிற்போக்குத்தனத்தின் கொள்கைகளுக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்த பிரச்சாரத்தைக் கூறலாம். நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்கவைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ அதிகாரத்தைப் பிடித்தார்.

முதலில் 2003 இல் குமாரதுங்க எதிர்க்கட்சியான வலது-சாரி UNP அரசாங்கத்திற்கு எதிராக எடுத்த நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட நடவடிக்கையால் தூண்டப்பட்டு, பின் ஆசிய சுனாமியின் பாதிப்பால் மேலும் மோசமடைந்த அரசியல் நெருக்கடியை SEP ஆய்வு செய்தது. ஆளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒரு குறுகிய தேர்தல் வெற்றியை வென்றெடுக்கும் நோக்கத்தில் இராஜபக்ஷ தீவிர-வலது புத்த மேலாதிக்கக் குழுக்களுடன் கூட்டணி வைத்த அதேசமயத்தில், குட்டி முதலாளித்துவ இடது NSSP பாரம்பரிய வலது-சாரி முதலாளித்துவ உருவாக்கமான ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனது ஆதரவை வழங்கியது.

SEP பொதுச் செயலரான விஜே டயஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, தமிழ் பிரிவினைவாத இயக்கமான LTTEக்கு எதிரான உள்நாட்டுப் போரை தொடர்வதற்குரிய தயாரிப்புகளை எதிர்த்ததோடு, முதலாளித்துவ கூட்டணிகள் தமிழ் பிரிவினைவாதிகள் ஆகிய இரு தரப்புக்குமே எதிரான ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தை முன்வைத்தார்.

SEP இன் பிரச்சாரம் வன்முறை அச்சுறுத்தல்களையும் தாண்டி சிங்கள மற்றும் தமிழ் ஆகிய இருமொழி பேசும் தொழிலாள வர்க்கத்தினரிடையே கணிசமான வரவேற்பை பெற்றது. இந்தியாவில் தமிழ் மொழி பேசும் மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்திலும் விஜே டயஸ் உரையாற்றினார்.

இராஜபக்ஷ வெற்றி பெற்றதற்குப் பின்னர் விஜே டயஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சர்வதேச ஸ்திரமின்மையும் அத்துடன் இலங்கை முதலாளித்துவத்திற்குள்ளான உள்முக முரண்பாடுகளும் பெருகும் நிலையில் புதிய அரசாங்கமானது சண்டை நிறுத்தத்தை முறிப்பதற்கும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தைத் தொடர்வதற்கும் தள்ளப்படும் என்று விளக்கினார்.

இப்போது இராஜபக்ஷ அதிகாரத்தில் இருக்கிறார் என்ற நிலையில், நாட்டின் 20 ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது அல்லது மக்களின் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்துவது ஆகியவற்றில் பரந்த பெரும்பான்மை மக்களின் அபிலாஷைகளை அவரால் பூர்த்தி செய்ய முடியாது என்பது விரைவிலேயே வெளிப்பட இருக்கிறது. ஜனதா விமுக்தி பெருமுன (JVP) மற்றும் ஜதிகா ஹெல உறுமயா (JHU)ஆகிய கட்சிகளது கூட்டணியுடன் தான் இராஜபக்ஷ பிரச்சாரம் செய்தார். இக்கட்சிகள் இப்போதைய சண்டை நிறுத்தத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் எதிரானவை. இப்போது அவர் கண்ணியமான அமைதிக்கு, அதாவது விடுதலைப் புலிகளுடனான எந்தப் பேச்சுவார்த்தைகளுக்கும் சாத்தியமில்லாத நிபந்தனைகளை முன்வைக்கின்ற ஒரு பேச்சுவார்த்தைக்கு, வாக்குறுதியளிக்கிறார். அரசியல் அரிச்சுவடி தெரிந்த எவரொருவருக்கும் இது தெரியும், இது அமைதிக்கான திட்டம் அல்ல, யுத்தத்திற்கான திட்டம் என்று.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI)வாழ்க்கையில் இன்னுமொரு முக்கிய நிகழ்வாக அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளி நடந்தது. இதில் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் புரட்சிகர இயக்கத்தின் வரலாறு குறித்த முக்கியமான அறிக்கைகளை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த தலைவர்கள் வழங்கினர். இந்த அறிக்கைகள் பின்னர் WSWS ஆல் வெளியிடப்பட்டன. அவற்றில் சில:

 

  முதலாம் விரிவுரை: ரஷ்யப் புரட்சியும் 20ம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சினைகளும்-- பகுதி 1

  இரண்டாம் விரிவுரை: மார்க்சிசம் எதிர் இருபதாம் நூற்றாண்டிற்கு சற்று முன்னர் இருந்த திரித்தல்வாதம் -- பகுதி 1

  மூன்றாம் விரிவுரை: போல்ஷிவிசத்தின் தோற்றம் மற்றும் "என்ன செய்ய வேண்டும்?"

  Marxism, history and the science of perspective

  World War I: The breakdown of capitalism

  ஆறாம் விரிவுரை: ஒரு நாட்டில் சோசலிசம் அல்லது நிரந்தரப் புரட்சி

  Marxism, art and the Soviet debate over “proletarian culture”

  The 1920s: the road to depression and fascism

  The rise of fascism in Germany and the collapse of the Communist International

ரோபர்ட் சேர்விஸ் எழுதிய ஸ்டாலின் வாழ்க்கைசரிதம் குறித்து ஃபிரட் வில்லியம்ஸ் எழுதிய ஒரு நீளமான விமர்சனத்தை WSWS வெளியிட்டது. இந்த சரிதத்தில் தகவல் பிழைகளும் முக்கியமான உரைகளின் விடுபடல்களும் கலந்திருந்தன. மிக முக்கியமாக, இது ஸ்ராலினுக்கு மறுநிவாரணமளிக்க உதவும் முனைப்பைக் குறித்தது. சேர்விஸ் பின்னாளில் லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைசரிதம் ஒன்றும் எழுதி அதில் வரலாறு குறித்தும் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்தும் அளித்திருந்த பொய்மைப்படுத்தல்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு மிகப்பெரும் பிரச்சாரத்திற்கான விவாதப்பொருளாக இருந்தன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளது வேலைகளிலும் நான்காம் அகிலத்தின் வரலாற்றிலும் இடம்பிடித்த நான்கு முக்கியமான தோழர்கள் 2005 ஆம் ஆண்டில் காலமாகினர். முன்னோடி இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டான த்ருபா ஜோதி மஜூம்தார் (1929-2005); நீண்டகால இலங்கை ட்ரொட்ஸ்கிசவாதியான வேலுப்பிள்ளை சரவணப்பெருமாள் (1948-2005); ஜேர்மன் ட்ரொட்ஸ்கிசவாதியான நாதன் ஸ்டீன்பெர்கர் (1910-2005) [நாஜிக்களால் நாடு கடத்தப்பட்ட இவர் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச வதை முகாமிலும் மற்றும் கிழக்கு ஜேர்மனியின் தண்டனையில் இருந்தும் உயிர்தப்பியவர்] மற்றும் ரால்ஃப் எட்மண்ட் (1926-2005) [அமெரிக்க தகடு உலோகத் தொழிலாளியான இவர் தனது மத்திய வயதில் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முக்கியமானதொரு பங்களிப்பைச் செய்தார்] ஆகிய இந்த நால்வருக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நினைவஞ்சலி செலுத்தியது

Featured material

11 January 2005 மார்க்சிசம், அனைத்துலகக்குழு மற்றும் விஞ்ஞானபூர்வமான முன்னோக்கு: அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடி பற்றிய ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு -- பகுதி 1

2 June 2005 Review of Robert Service’s Stalin: A Biography–Part One Harvard University Press, 2005, 715 pages

3 June 2005 Review of Robert Service’s Stalin. A Biography—Part Two Harvard University Press, 2005, 715 pages

  

9 November 2005 இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் சென்னை கூட்டத்தில் உரையாற்றினார்

10 November 2005 இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: நவ சமசமாஜ கட்சியும் தேசிய சந்தர்ப்பவாதத்தின் முட்டுச் சந்தும்

22 November 2005 இலங்கை தேர்தல்களுக்கு பின்னர்: தொழிலாள வர்க்கத்திற்கு அடுத்தது என்ன ?

 

கலை, கலாச்சாரம் மற்றும் விஞ்ஞானம்

திரைப்படங்கள் குறித்த விரிவான செய்திகளை WSWS தொடர்ந்து வெளியிட்டது. குட்நைட் அன் குட்லக், ஜார்ஹெட், சிரியனா மற்றும் முனிச் ஆகிய அந்த ஆண்டின் இறுதிவாக்கில் வெளியான அரசியல் செறிவான படங்களும் இதில் அடங்கும்.

The Aviator, Million Dollar Baby, Hotel Rwanda, The Assassination of Richard Nixon, Gunner Palace, Crash மற்றும் The Constant Gardener உள்ளிட்ட மற்ற திரைப்படங்களின் திறனாய்வுகளும் இடம்பெற்றன.

WSWS இன் திறனாய்வாளர்கள் Berlin, San Francisco, Sydney, Toronto, Cottbus and Neubrandenburg, மற்றும் Vancouver ஆகிய இடங்களில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்றனர். ஓவியம் மற்றும் இசைத்துறை சார்ந்த திறனாய்வுகளும் இடம்பெற்றன.

இடது-சாரி ஜேர்மன் ஓவியரான Kathe Kollwitz படைப்புகள் கண்காட்சி, சோவியத் சகாப்த புரட்சிகர சுவர்ப்படங்களின் கண்காட்சி ஆகியவற்றின் மீதான திறனாய்வுகளும் அத்துடன் சாதனை படைத்த “தி மசாக்கர்”, பை 50 சென்ட் ராப் வெளியீடு மீதான ஒரு விமர்சனமும் இதில் அடங்கும்.

அமெரிக்காவின் நாடகாசிரியரான ஆர்தர் மில்லர் மறைவுக்கு கலைப் பிரிவின் ஆசிரியரான டேவிட் வால்ஷ் ஒரு நீளமான நினைவஞ்சலியை எழுதினார். இது மில்லரை அவரது வரலாற்றுப் பொருத்தத்தில் அமர்த்தி விவாதித்தது:

1940கள், 1950கள் மற்றும் 1960களில் மில்லர் தான் முன்னணி அமெரிக்க நாடகாசிரியர் என்று சொன்னால்(அநேகமாக அவர் தான் முன்னணியில் இருந்தார்)அது வேறெதனையும் விட அச்சமயத்தில் இருந்த வலிமிக்க அகநிலைவாத-கலைத் துறை நிலைமைகளையே பேசுகிறது. அவரது நாடகங்கள் எத்தனை காலத்திற்கு உயிர்ப்புடன், அர்த்தமுள்ள படைப்புகளாக இருக்கும் என்பது கேள்விக்குறியே.

அக்டோபர் மாதத்தில், பிரிட்டிஷ் நாடக ஆசிரியரான ஹரோல்ட் பின்டருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஊடகத் துறை மற்றும் கல்வி வட்டாரங்களில் இருந்த பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. திரைக்கதை ஆசிரியராகவும், கவிஞராகவும் மற்றும் நடிகராகவும் அறியப்பட்டிருக்கக் கூடிய பின்டர் போருக்குப் பிந்தைய பிரிட்டிஷ் நாடக அரங்கில் மிகவும் செல்வாக்கு பெற்ற மனிதர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். அவரது படைப்புகளில் தி கேர்டேக்கர், தி டம்ப் வெயிட்டர் மற்றும் தி ஹோம்கமிங் ஆகியவையும் இருந்தன. போர் எதிர்ப்பு செயல்பாட்டாளராகவும் இருந்த அவர் 1991 வளைகுடாப் போரையும் 2003 ஈராக் ஆக்கிரமிப்பையும் கண்டனம் செய்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் மீது போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை எழுப்பினார்.

நவீன இயற்பியலின் பல பகுதிகளிலும் ஒரு புரட்சிகரத் தாவலைக் குறித்த ஆல்பேர்ட் ஐன்ஸ்டீனின் நகரும் பொருட்களின் மின்னியக்கவியல் குறித்து(சிறப்பு ஒப்புமைத் தத்துவம் என்றால் இன்னும் எளிதில் புரியும்)என்ற ஆய்வறிக்கையும், அத்துடன் சேர்த்து இன்னும் மூன்று முக்கிய விஞ்ஞான ஆய்வறிக்கைகளும் வெளியிடப்பட்ட 100 வது ஆண்டாக 2005 ஆம் ஆண்டு அமைந்தது.

நான்கு பகுதிகள் கொண்ட தொடர்வரிசைக் கட்டுரைகளில், பீட்டர் சைமண்ட்ஸ் ஐன்ஸ்டீனின் சாதனையை விவாதித்தார். பின் வாசகர்களுக்கும் WSWS மற்றும் கட்டுரையாசிரியருக்கும் இடையிலான கடிதங்கள் மற்றும் பதில்களின் தொடர்ச்சியில் இன்னும் ஏராளமான விடயங்கள் விவாதிக்கப்பட்டன. ஐன்ஸ்டீனின் அரசியல் பார்வைகள் தொடங்கி அவரது விஞ்ஞான தத்துவங்களின் அடுத்தடுத்த நீட்சி வரையான பல்வேறு விடயங்களும் இதில் இடம்பெற்றன.

_____________________