WSWS : Tamil : நூலகம்
பதினைந்தாவது ஆண்டு தினம்

உலக சோசலிச வலைத் தளத்தின் பதினைந்து வருடங்கள்: 1998-2013

உலக சோசலிச வலைத் தளத்தின் 15 வது ஆண்டு நிறைவுக்கு வாசகர் வாழ்த்துக்கள்
உலக சோசலிச வலைத் தளம் 1998
உலக சோசலிச வலைத் தளம் 1999
உலக சோசலிச வலைத் தளம் 2000
உலக சோசலிச வலைத் தளம் 2001
உலக சோசலிச வலைத் தளம் 2002
உலக சோசலிச வலைத் தளம் 2003
உலக சோசலிச வலைத் தளம் 2004
உலக சோசலிச வலைத் தளம 2005
உலக சோசலிச வலைத் தளம 2006
உலக சோசலிச வலைத் தளம 2007
உலக சோசலிச வலைத் தளம 2008
உலக சோசலிச வலைத் தளம 2009

Year in Review: 2006

மீளாய்வு ஆண்டு: 2006

ஈராக்கிலான அமெரிக்கப் போரின் நான்காவது ஆண்டு, சுன்னி மற்றும் ஷியா பிரிவு போராளிகளுக்கு இடையேயான உட்சண்டை மோதல் முழுவீச்சில் வெடித்த நிலையில் மிகவும் குருதிபாய்ந்ததாக இருந்தது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு ஆட்சி இத்தகைய மோதல்களை ஊக்குவித்தது மற்றும் வளர்த்தது என்பதோடு அப்பாவி மக்களுக்கு எதிரான இரத்தம் தோய்ந்த கொடுமைகளை தானும் தொடர்ந்து செய்து வந்தது. அதே நேரத்தில் அமெரிக்கா, ஈரான் மீதான போருக்கும் அச்சுறுத்தல் விடுக்கத் தொடங்கியது. ஈரான் மீதான அணு ஆயுதத் திட்ட குற்றச்சாட்டு என்ற நாடகபாணியிலான நெருக்கடியின் ஒரு நெடிய வரிசையில் முதலாவதை அடுத்து இது நடந்தது.

மிக வலிமையான ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்கா சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறியமையானது வலிமை குறைந்த சக்திகளையும் அதேபோல் செய்ய ஊக்குவித்தது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கூட்டாளியான இஸ்ரேல் இதில் மிகவும் வெளிப்பட்ட வகையில் நடந்து கொண்டது. ஆகஸ்டில் லெபனான் மீது ஆக்கிரமிப்பு செய்து அந்நாட்டின் தெற்குப் பகுதியில் பெரும்பான்மையான பகுதிகளை நாசம் செய்தது. ஆனால் ஷியா பிரிவு ஹெஸ்புல்லா இயக்கத்தின் படைகளுடனான மோதலில் ஒரு அவமானகரமான பின்னடைவையும் சந்தித்தது.

இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்‌ஷாவும் அமெரிக்க உதாரணத்தை பின்பற்றுவதற்கான வாய்ப்பைப் பற்றிக் கொண்டார். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புடனான நான்காண்டு கால போர் நிறுத்தத்தை முறித்த இவர், தீவில் உள்நாட்டுப் போரைத் தொடர்வதை, புஷ் நிர்வாகத்தின்பயங்கரவாதத்தின் மீதான போரின் நீட்சியாகச் சித்தரித்தார்.

இத்தகைய போர்களில் ஈடுபட்ட ஒவ்வொரு நாட்டிலுமே, இராணுவ நடவடிக்கையுடன் கைகோர்த்து உள்நாட்டு ஒடுக்குமுறை அதிகரிப்பும் நிகழ்ந்தது. அமெரிக்காவில், முன்கண்டிராத மட்டத்திற்கு உள்நாட்டில் வேவுபார்ப்பு, அத்துடன் இராணுவ-உளவு எந்திரத்தால்பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட எவரொருவரையும் கடத்துவது, சித்திரவதை செய்வது மற்றும் காலவரையற்று கைது செய்து வைத்திருப்பதற்கு வெளிப்படையான அரசாங்க ஒப்புதல் ஆகியவையும் இதில் இடம்பெற்றிருந்தன.

http://www.wsws.org/asset/355f4389-a34d-437d-9c78-f391e2b21dbL/Ramadi_august_2006_patrol.jpg?rendition=image480
அமெரிக்கப் படைவீரர்கள் ரமாதி சண்டையின் போது


ஈராக்கில் இரத்த வெள்ளமும் போர் அதிகரிப்பும்

ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க மற்றும் கூட்டணிப் படைகள் இழைத்த பாரிய போர்க் குற்றங்கள் குறித்த ஆதாரம் பெருகிச் சென்றமையானது இந்தப் போர்கள் மனிதாபிமான அடிப்படையிலானவை அல்லது ஜனநாயகத்தை ஸ்தாபிக்க நிகழ்த்தப்பட்டவை என்று கூறப்பட்டதான மோசடியை அம்பலப்படுத்தியது. மாறாக ஆக்கிரமிப்பு ஆட்சியானது ஈராக்கிற்குள்ளாக குறுங்குழுவாத மற்றும் இனப் பதட்டங்களை தூண்டியது என்பதோடு ஆக்கிரமிப்பிற்கான எந்த எதிர்ப்பிற்கும் எதிராக மிருகத்தனமான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது.

தொடர்ச்சியான சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் வரைமுறையற்ற படுகொலைகள் ஆகியவை உள்ளிட்ட வக்கிரமான அட்டூழியங்கள், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் வளம் செறிந்த பிராந்தியங்கள் முழுவதிலும் தனது பூகோள-அரசியல் மேலாதிக்கத்தை விரிவுபடுத்த ஆளும் வர்க்கத்தினால் அமர்த்தப்பட்ட போர் எந்திரத்தின் மிருகத்தனத்தை எடுத்துக் காட்டின.

அமெரிக்க மற்றும் கூட்டணிப் படைகள் 2006 இல் பைஜி, பஸ்ரா, பாக்தாத், இசாகி, தார் தார், மஹ்முடியா, மற்றும் ரமாதி ஆகிய ஈராக்கிய நகரங்களிலும் அதேபோல் ஆப்கானிஸ்தானின் அஸிசி, ஜாரி மற்றும் கெரெஸ்க் பகுதிகளிலும் இழைத்த போர்க் குற்றங்களில் இருந்து பெறக் கூடிய அடிப்படையான படிப்பினைகளை உலக சோசலிச வலைத் தளம் தெளிவுபடுத்தியது.

மே மாதத்தில் அமெரிக்க அரசாங்கம், ஆறு மாதத்திற்கும் அதிகமான காலத்திற்கு முன்னர் ஈராக்கின் ஹடிதாவில் நடந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் என மொத்தம் 24 அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த தனது மவுனத்தை இறுதியாக உடைத்தது. பலியானவர்களில் அநேகம் பேர் தலையிலும் மார்பிலும் சுடப்பட்டு இறந்திருந்தனர். இமான் வாலீத் என்ற ஒன்பது வயதுச் சிறுமி டைம் இதழில் கூறியிருந்ததை WSWS மேற்கோளிட்டது, “முதலில் [அமெரிக்கப் படையினர்கள்] எனது அப்பாவின் அறைக்குச் சென்றார்கள். அவர் அப்போது குரான் படித்துக் கொண்டிருந்தார். எங்களுக்கு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அவர்களது முகங்களை என்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அவர்களின் துப்பாக்கிகள் தான் பாதை முழுவதும் தெரிந்தன. அவர்கள் எனது தாத்தாவைச் சுட்டார்கள் முதலில் மார்பிலும் பின் தலையிலும். பின் அவர்கள் என் பாட்டியையும் கொன்று விட்டார்கள்.”

ஜூன் மாதத்தில், முன்னதாக மூன்று மாதங்களுக்கு முன்னால் அமெரிக்கப் படையினர் இசாகியில் ஏழு அப்பாவிகளைத் திட்டமிட்டுக் கொன்றதற்கான ஆதாரம் வெளியில் வந்தது. இந்த ஏழு பேரில் ஐந்து பேர் சுமார் ஆறு வயது பாலகர்கள். பெண்களும், சிறுவர்களும், குழந்தைகளுமான இவர்களை கைகளில் விலங்கிட்டு அழைத்து வந்த அமெரிக்கப் படையினர்கள் அவர்களை தலையில் சுட்டுக் கொண்டனர். அதன்பின் இந்தப் படுகொலை குறித்த ஆதாரம் எதனையும் மறைக்கும் பொருட்டு அவர்கள் ஒரு விமானத் தாக்குதலுக்கும் அழைப்பு விடுத்தனர். அமெரிக்க இராணுவம் இந்தக் குற்றத்துக்குப் பொறுப்பானவர்களை பின்னர் விடுவித்து விட்டது. இசாகி படுகொலை சம்பவத்துக்குப் பின்னர், WSWS எழுதியது:

இந்த சம்பவங்கள் எல்லாம் வெறுமனே பிறழ்ச்சியால் ஏற்பட்ட நிகழ்வுகள் அல்ல. மாறாக, இவை, இந்நாட்டின் பரந்த எண்ணெய் வள ஆதாரங்கள் மீதான அமெரிக்க மேலாதிக்கத்தைப் பத்திரப்படுத்திக் கொள்வதற்கும் அமெரிக்க மேலாதிக்கத்தின் புவி மூலோபாய நலன்களை முன்னெடுப்பதற்கும் நடத்தப்பட்ட ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போர் மற்றும் காலனித்துவ பாணி ஆக்கிரமிப்பு என்ற இம்மோதலின் இயல்பில் இருந்து தவிர்க்க முடியாது எழுவனவாகும்.

இந்த வலிந்து நடத்துகின்ற வன்முறை மற்றும் கொடூரத்தின் கூறுகள் ஒட்டுமொத்தமாக அமெரிக்க சமூகத்தின் வன்முறை மற்றும் பின்தங்கிய நிலையை பிரதிபலிக்கின்றன. பொது நனவையும் தேசியக் கலாச்சாரத்தையும் கரடுமுரடாக்குவதற்கும் சீரழிப்பதற்கும் கால் நூற்றாண்டு காலத்திற்கு மேல் ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகங்களும் செய்து வந்திருந்த ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தின் பின்விளைவுகளையும் அமெரிக்க இராணுவம் எங்கு அது செல்கின்றபோதும் தவிர்க்கவியலாமல் உடன் அழைத்துச் செல்கிறது

2006 அக்டோபரில் பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையான லான்செட் வெளியிட்ட ஒரு ஆய்வு, அமெரிக்க ஆக்கிரமிப்பின் விளைவாக கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்த ஒரு விஞ்ஞான மதிப்பீட்டை உருவாக்க முதன்முறையாக முனைந்தது. 655,000 ஈராக்கியர்கள் அல்லது ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 2.5 சதவீதம் பேர் என்ற அந்த மதிப்பீடு திகைக்க வைக்கக் கூடியதாய் இருந்தது. இந்த மதிப்பீடு பின்னர் ஒரு மில்லியனுக்கும் அதிகமானதாய் அதிகரிக்கப்பட்டது. அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகமானது பாரிய போர்க் குற்றங்களின் ஆதாரத்தை உதாசீனப்படுத்த அல்லது குறைத்துக் காட்ட அதனால் இயன்ற ஒவ்வொன்றையும் செய்தது.

கீழ்நிலை அதிகாரிகளும் சிப்பாய்களும் அமெரிக்க இராணுவப் படுகொலைகளை நடத்தினார்கள் என்றால், உயர்நிலை அதிகாரிகள் அதற்கு அங்கீகாரமளித்தனர், அவற்றை மறைத்தனர். இந்த ஊடுருவலையும் சித்திரவதையையும் வடிவமைத்தவர்கள் தான் மிகவும் கண்டனத்திற்குரிய போர்க் குற்றவாளிகள் ஆவர். ஜோர்ஷ் புஷ், டிக் செனி, ஆல்பேர்டோ கோன்சேல்ஸ், டோனால்ட் ரம்ஸ்ஃபீல்ட், கொண்டலிசா ரைஸ், கோலின் போவெல், ஜான் ஆஷ்கிராஃப்ட், ராபர்ட் கேட்ஸ், மற்றும் இராணுவ அதிகாரிகள் தான் தற்கொலைப் படைகள் மற்றும் சித்திரவதையின் பயன்பாடு உள்ளிட்ட மிருகத்தனமானதொரு வேலைத்திட்டத்தை திட்டமிட்டு ஊக்குவித்தனர், அமல்படுத்தினர் மற்றும் மேற்பார்வை செய்தனர்.

இந்தக் குற்றவியல் எந்திரத்தின் உயர் நிலை பொறியாளர்கள் எல்லாம் சட்டபயம் இன்றி செயல்பட்ட அதே நேரத்தில், டிசம்பர் 30 அன்று நள்ளிரவில் ஒரு இரகசியமான இடத்தில் தூக்கிலடப்பட்ட சதாம் உசைனை ஒரு உதாரணமாக்க அவர்கள் முனைந்தனர்.

இந்த தூக்குக்கு முந்தைய மோசடியான விசாரணை அமெரிக்க நியமன பொறுப்பதிகாரியான போல் பிரேமரால் ஏற்பாடு செய்யப்பட்டதாயும், புஷ் நிர்வாகத்தினால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதிகளால் மேற்பார்வை செய்யப்பட்டதாயும் இருந்ததோடு அடாவடித்தனத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகவும் இருந்தது. ஹூசைன் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து WSWS குறிப்பிட்டது:

தனது முக்கிய எதிரியை உலகின் கண்களின் முன்னாள் பகிரங்கமாகக் கொன்று, தன்னால் அதைச் செய்ய முடிகிறது என்பதை உரக்கச் சொல்வதே புஷ் நிர்வாகத்தின் மிக அடிப்படையான அரசியல் நோக்கமாக இருக்கிறது. வெள்ளை மாளிகையைப் பொறுத்தவரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எந்த வருங்கால எதிரிக்கும் அமெரிக்காவின் விருப்பத்தை எதிர்த்தால், அவரின் இரத்தச் சகதி கதி தான் உங்களுக்கும் என்று தெரிந்து கொள்வதற்கான ஒரு உதாரணப் பாடம் தான் சதாம்.

ஈரான்-ஈராக் போரில் அமெரிக்கா ஓசையின்றி ஆதரவளித்து வந்திருந்த பாத்திச ஆட்சி ஈராக்கில் அழிக்கப்பட்டமையானது பேர்சிய வளைகுடாப் பகுதியில் ஈரானை வலிமையான பிராந்திய சக்தியாக ஆக்கியதோடு உலகின் மிக முக்கியமான எண்ணெய் உற்பத்திப் பிராந்தியத்தில் மேலாதிக்கம் செலுத்துவதற்கான அமெரிக்க முனைப்பின் அடுத்த இலக்காக ஈரானை ஆக்கியது.

ஈரானிய ஆட்சியைப் பலவீனப்படுத்துவதற்கான அமெரிக்க முனைப்பில் ஒரு புதிய கட்டம் 2006 ஆம் ஆண்டில் தொடங்கியது. ஈரான் அதன் யுரேனியச் செறிவு திட்டத்தைத் தொடரவிருப்பதாக அறிவித்ததை அடுத்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அதன் மீது பொருளாதாரத் தடைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அழுத்தமளிப்பதற்கு புஷ் நிர்வாகம் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. ஜனவரி 21 அன்று WSWS ஆசிரியர் குழு அறிக்கை தெரிவித்தது:

புஷ் நிர்வாகம், ஆதாரவளங்கள் செறிந்த பிராந்தியத்தில் தனது தளைகளற்ற மேலாதிக்க நோக்கங்களை முன்னெடுப்பதற்காக, எப்படி ஈராக்கிற்கு எதிராக பேரழிவு ஆயுதங்கள் என்ற குற்றச்சாட்டைப் பயன்படுத்திக் கொண்டதோ, அதேபோல ஈரானியஅணு ஆயுத அச்சுறுத்தலையும் சுரண்டி கொள்ள முனைந்து வருகிறது.

மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளை எதிர்த்த அதே சமயத்தில், உலக சோசலிச வலைத் தளம் தெஹ்ரானின் பிற்போக்குத்தனமான மதச்சார்பு ஆட்சிக்கோ அல்லது அணு ஆயுதங்களைப் பெறுவதற்கு அதன் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு முயற்சிக்குமோ எந்தவிதமான அரசியல் ஆதரவும் வழங்கவில்லை.

அணுஆயுதப் போரின் அச்சுறுத்தல், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கான பதிலிறுப்பு அல்ல, மாறாக மத்திய கிழக்கிலும் அதனைத் தாண்டியும் அணுஆயுதப் பேரழிவுக்கான ஒரு செய்முறையே ஆகும். புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் வேலைத்திட்டம் மட்டுமே ஏகாதிபத்தியத்தின் கொள்ளைவேட்டை அரசியலுக்கும் அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தலுக்குமான ஒரே நடைமுறை மாற்றீடாகும்.

அந்த ஆண்டில், ஈரானுக்கு எதிரான அமெரிக்க முனைப்பை தமது சொந்த நலன்களுக்கான ஆபத்தாகக் கண்ட சீனா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு வந்த நிலையிலும் புஷ் நிர்வாகம் அந்நாட்டிற்கு எதிரான நெருக்குதலை அதிகரித்த போது, ஈரான் மீது குண்டுவீசுவதற்கு அமெரிக்கா தயாரிப்பு செய்வதன் மேலதிக சான்றுகள் பகிரங்கமாயின. ஐநாவின் அணுச் சோதனை முகமையான IAEA விமர்சித்து அறிக்கை விடுமளவுக்கு அமெரிக்க அதிகாரிகளது பொய்ப்புனைவுகள் அப்பட்டமானவையாக இருந்தன. ஆயினும் அந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக, ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில், ஈராக்கின் உதாரணம் காட்டியதைப் போல போருக்கு ஒரு சாக்காக பயன்படுகின்ற வண்ணமாக ஈரான் மீது கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளை செயல்படுத்தியது.

http://www.wsws.org/asset/0c9325b2-e8c8-42e1-8dbf-72ce6375c70F/Saddam-Hussein-executed-for-war-crimes.jpg?rendition=image480
சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டார்

http://www.wsws.org/asset/22e0e4ca-839e-4d57-8fba-eb74be8d900M/060202-F-7823A-035.jpg?rendition=image480
ஈராக்கின், டால் அஃபாரில் அமெரிக்க துருப்புகள் ரோந்து சுற்றுகின்றன

 

Featured material

24 February 2006 Sectarian violence engulfs Iraq following mosque bombing

13 April 2006 US threats against Iran—the specter of nuclear barbarism

31 May 2006 Mass rioting reveals depth of Afghan opposition to US occupation

2 June 2006   ஜோர்ஜ் புஷ்ஷும் ஹடித் படுகொலைகளும்

12 October 2006 New study says US war has killed 655,000 Iraqis

30 December 2006  சதாம் ஹுசைனின் மரண தண்டனை நிறைவேற்றம்


லெபனான் மற்றும் இலங்கையிலான போர்

அமெரிக்கா சர்வதேசச் சட்டத்தை அப்பட்டமாக மீறியமையானது, வலிமை குறைந்த சக்திகளுக்கு, குறிப்பாக மத்திய கிழக்கில் பிரதான அமெரிக்கக் கூட்டாளியான, இஸ்ரேலுக்கு, பின்பற்றுவதற்கான ஒரு உதாரணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. 2006 ஜூலை மாதத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் ஒரு பாரிய ஊடுருவலை நடத்தின. இது உலகின் கவனத்தை ஈர்த்த ஒரு மாத-கால சண்டைக்கு இட்டுச் சென்றதோடு ஒரு பரந்த பிராந்தியப் போரின் அபாயத்தையும் முன்நிறுத்தியது.

தெற்கு லெபனானில் ஹெஸ்புல்லா சிப்பாய்கள் இஸ்ரேலிய படைவீரர்கள் பலரைக் கைது செய்து வைத்திருந்தனர். “கடத்தப்பட்டிருந்தவர்களை மீட்பதான போர்வையின் கீழ் இஸ்ரேல் இந்த ஆக்கிரமிப்பைத் தொடங்கியது. இத்தகையதொரு இராணுவ நடவடிக்கைக்கான திட்டங்களை இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஒரு இரகசியக் குழு இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே விவாதித்திருந்த விடயம் பின்னர் வெளியில் வந்தது.

இந்தப் படையெடுப்பிற்கு அமெரிக்காவின் முழு அரசியல், நிதி மற்றும் இராணுவ ஆதரவு கிட்டியது. WSWS ஆசிரியர் குழு அறிக்கை ஒன்று குறிப்பிட்டது:

லெபனானுக்குள்ளாக ஹெஸ்புல்லாவை ஒரு இராணுவ மற்றும் அரசியல் சக்தியாக இருப்பதில் இருந்து அகற்றுவது என்ற இந்தப் போரின் உடனடி நோக்கமானது இந்நாட்டில் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு இருக்கும் அனைத்து வெகுஜன எதிர்ப்புக்கு எதிராகவும் செலுத்தப்படுகிறது. புஷ் நிர்வாகமும் ஜெருசலேமில் இருக்கும் அதன் கூட்டாளிகளும்(1)சிரியாவின் பாதிச ஆட்சியை அகற்றுவது, மற்றும்(2)ஈரானுக்கு எதிராக ஒரு முழு-வீச்சிலான போரைத் தொடங்குவது ஆகிய அம்சங்களை நோக்கிய ஒரு அத்தியாவசிய படியாக இதனைக் காண்கின்றன.

லிடானி நதி வரையில் தெற்கு லெபனான் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் இஸ்ரேலியப் படைகள் மிருகத்தனமான தாக்குதல்களை நடத்தின. மக்கள் இடத்தை விட்டு அகலும்படி துண்டுச்சீட்டுகளை அவை கீழே இறைத்த அதேசமயத்தில் மக்கள் தப்பிச் செல்லும் வழிகளில் IDF குண்டுவீசிக் கொண்டிருந்தது. மத்திய கிழக்குக்குப் பயணம் செய்த அமெரிக்க வெளியுறவுச் செயலரான கொண்டலிசா ரைஸ் இஸ்ரேலிய போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விட மறுத்ததன் மூலம் இஸ்ரேல் அதன் போர் நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொள்ள உதவினார்.

கனா நகரத்தின் ஒரு குடியிருப்பு வீட்டில் 57 பேர் கொல்லப்பட்ட சம்பவம் - இதில் அநேகம் பேர் குழந்தைகள் - உட்பட ஈவிரக்கமற்ற அட்டூழியங்களில் ஈடுபட்ட போதும், புஷ் நிர்வாகமும் சரி அமெரிக்க ஊடகங்களும் சரி தமது இடைவிடாத ஆதரவை இஸ்ரேலிய படையெடுப்புக்கு அளித்தன.

இந்தக் கொள்கையானது மத்திய கிழக்கு முழுவதிலும் போர்களை விரிவாக்குவதற்கு அமெரிக்க மக்களை தயாரிப்பு செய்கின்ற நோக்கம் கொண்டதாய் இருந்தது என்று WSWS எச்சரித்தது:

லெபனானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்ததானது, சிரியாவிலும் ஈரானிலும்ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரும் நோக்கத்துடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் இராணுவப் பிரச்சாரங்களுக்கான ஒரு படிக்கட்டு மட்டுமே. வருங்காலத்தில் தனது உலக மேலாதிக்க விருப்பங்களுக்கு ஒரு சவாலாக உருவெடுக்கலாம் என்று அமெரிக்கா கருதக் கூடிய எந்தவொரு ஆட்சியையும் அதிகாரத்தில் தொடர அனுமதிப்பதற்கு அதற்கு விருப்பமில்லை.

இஸ்ரேலியத் தாக்குதல் மிகவும் மூர்க்கமாக இருந்தபோதிலும், லெபனானின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளிடையே பரவலான ஆதரவைப் பெற்றிருந்த ஷியா இயக்கமான ஹெஸ்போல்லா இந்த படைத்தாக்குதலுக்கு ஆவேசமான எதிர்ப்பை வெளிப்படுத்தியது. IDF அதிகம் முன்னேற முடியவில்லை என்பதோடு வடக்கு இஸ்ரேலின் நகரங்கள் மீது பதிலடிக் குண்டுவீச்சு நிகழ்த்தப்படுவதை நிறுத்த அதனால் இயலவில்லை. ஒரு மாத கால போருக்குப் பின்னர், இஸ்ரேலும் புஷ் நிர்வாகமும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலால் ஆதரவளிக்கப்பட்ட ஒரு போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன.

விளைவு அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்குமான ஒரு படுதோல்வி. WSWS விளக்கியது:

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளின் சர்வதேசப் பிம்பமுமே கடுமையான அடி வாங்கியிருக்கிறது. இஸ்ரேல் முன்னெப்போதையும் விட சட்டக்கட்டுப்பாடுகள் அற்ற ஒரு கொலைகார ஆட்சியாகக் காட்சியளிக்கிறது. லெபனானில் மீண்டும் மீண்டும் போர்க் குற்றங்களை நிகழ்த்தியதற்கான பொறுப்புக்குரியதாக அது இருக்கிறது.  ஆட்டுவிக்கும் குற்றவியல் ஆட்சியாக அமெரிக்கா காட்சியளிக்கிறது; அமெரிக்காவிடம் இருந்து இஸ்ரேல் பெற்றிருந்த குண்டுகளும் ஏவுகணைகளும் நாட்டையே நாசம் செய்து கொண்டிருந்த சமயத்தில் பெய்ரூட்டில் நின்று கொண்டு ரைஸ்ஒரு புதிய மத்திய-கிழக்கு உதயமாவது குறித்து பிரகடனம் செய்து கொண்டிருந்த காட்சியை எதுவும் அழித்து விட முடியாது.

2006 கோடையில் வெடித்த இன்னொரு முக்கியப் போர் ஒரு மாதத்திற்கு அல்ல மூன்று வருடங்களுக்கு தொடர்ந்தது. இலங்கையில், இரண்டு தீவிர சிங்களவாதக் கட்சிகளது ஆதரவுடன் 2005 நவம்பர் தேர்தலில் குறுகிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்‌ஷஅமைதிக்கான மனிதர் வேடத்தை எல்லாம் வெகு விரைவில் களைந்தார். 1983 இல் கொழும்பின் ஆளும் உயரடுக்கினரால் தொடங்கப்பட்டிருந்த இரத்த ஆறு பாயும் இனவாதப் போருக்குள் நாட்டை மீண்டும் அமிழ்த்தினார்.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE)அமைப்பிற்கு எதிரான திட்டமிட்ட இராணுவ ஆத்திரமூட்டல்களின் விளைவாக, இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஓஸ்லோ அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஜூன் மாதத்தில் முறிவடைந்தன. அடுத்த சில வாரங்களுக்குள், விடுதலைப் புலிகளால் மூடப்பட்ட ஒரு விவசாய மதகினை மீண்டும் திறப்பதற்கு மனிதாபிமான ரீதியில் நடவடிக்கை எடுப்பதான பேரில், அரசாங்கம், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்கான தாக்குதலைத் தொடுத்தது. இது பத்தாயிரக்கணக்கிலான உயிர்களைப் பலி வாங்கிய போர் மேலும் அதிகரிப்பதற்கு வழிவகை செய்து தந்தது.

அக்டோபர் மாதத்தில், இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி அரசாங்கம் போரை மீண்டும் நடத்துவதைக் கண்டனம் செய்தது, அந்நடவடிக்கையின் ஆழமான அரசியல், பொருளாதார மற்றும் வரலாற்று மூலங்களை தோலுரித்துக் காட்டியது, அத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தையும் முன்னெடுத்தது. போருக்கு மீண்டும் திரும்புவதென்பது அமெரிக்காவால் ஆரம்பிக்கப்பட்ட புதிய உலகளாவிய இராணுவவாதக்  காலகட்டத்துடன் பிணைந்ததாகும் என்று WSWS விளக்கியது. நேரடியாக புஷ் நிர்வாகத்தால் ஊக்குவிக்கப் பெற்றும், ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் அமெரிக்கா இழைத்த குற்றங்களால் ஊக்கம் பெற்றும், கொழும்பில் இருந்த அரசாங்கம் தீவின் தமிழ் சிறுபான்மை மக்களுக்கு எதிராக, “பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போர் என்ற குடையின் கீழ் தனது மூர்க்கத்தனத்தை கட்டவிழ்த்து விட்டது.

தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தில், தீவின் சிங்களம் மற்றும் தமிழ் பேசும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜன மக்களை ஒன்றுதிரட்டுவதற்கான போராட்டத்தின் பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கின் போர் வலயங்களில் இருந்து இலங்கை பாதுகாப்புப் படையினரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திரும்பப் பெற SEP கோரியது.

இலங்கை இராணுவமும் அதன் துணைப் படையினரும் உதவி ஊழியர்கள் 17 பேரை ஈவிரக்கமற்று படுகொலை செய்தமை மற்றும் பள்ளி ஒன்றின் மீதான வான்வழித் தாக்குதலின் மூலம் ஏராளமான இளம் மாணவிகளைக் கொலை செய்தமை ஆகியவை உட்பட்ட  அட்டூழியங்களைப் புரிந்து வந்ததையும், தமிழ் மக்களையும் மற்றும் போர் குறித்து விமர்சனப் பார்வை கொண்ட பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களையும் பீதியடையச் செய்வதற்காக இரகசியமான கடத்தல் மற்றும் நீதிவிசாரணைக்கு அப்பாற்பட்ட படுகொலைப் பிரச்சாரத்தை நடத்தியதையும் சுட்டிக் காட்டி கட்சி எச்சரித்தது

இதற்கான பிரதான உதாரணமாய், SEP ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ் கிழக்கில் இருக்கும் கிராமப்புற நகரமான முள்ளிப்பொத்தானாவில் உள்ள அவரது வீட்டில் ஆகஸ்ட் 7 அன்று சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அவரைப் படுகொலை செய்தவர்களை கைது செய்து தண்டிக்கக் கோரி SEPயும் உலக சோசலிச வலைத் தளமும் ஒரு சர்வதேசப் பிரச்சாரத்தைத் முன்னெடுத்தன.

 

http://www.wsws.org/asset/b5485061-72fe-4ddd-9035-1a8782332d3M/Bombed_commercial_centre.jpg?rendition=image480
தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகளால் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு இலக்கான ஒரு கட்டிடம்

 

http://www.wsws.org/asset/86ee5044-7087-4ee1-a83e-4ea15ee293cC/unga-rice-FMSamaweera_600.jpg?rendition=image480
விடுதலைப் புலிகள் மீதான இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரான மங்கள சமரவீரா உடன் அமெரிக்க வெளியுறவுச் செயலர் கொண்டலிசா ரைஸ் நிற்கிறார்.

Featured material

6 May 2006  இலங்கை: சமாதானம் பற்றிய பேச்சுக்களுக்கு பின்னால் முழு யுத்த அச்சுறுத்தல் வெளிப்படுகிறது

15 July 2006 Israeli attack on Lebanon threatens to engulf entire Middle East in war

21 July 2006 லெபனானுக்கு எதிரான அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய போரின் உண்மையான நோக்கங்கள்

14 August 2006 லெபனான் போர் நிறுத்த காலக் கெடுவிற்கு முன்பு: அமெரிக்கா, இஸ்ரேல் அரசியல் வீழ்ச்சியை எதிர்கொள்ளுகின்றன

21 October 2006 இலங்கையில் யுத்தத்தை நிறுத்துவதற்கான சோசலிச வேலைத் திட்டம்


ஒரு போலிஸ்-அரசின் கட்டமைப்பு

போலிஸ்-அரசு முறைகளின் மூலமாக ஆட்சி செய்வதற்கு அமெரிக்க அரசாங்கம் முன்னேறிய தயாரிப்புகளுடன் இருப்பது குறித்த தொடர்ச்சியான அம்பலப்படுத்தல்கள் 2006 ஆம் ஆண்டு வெளியாயின. அமெரிக்காவிலான இரகசிய வேவுபார்ப்பு, குவாண்டானோமோ குடாச் சிறையிலான சித்திரவதை மற்றும் மனித உரிமை மீறல்கள், மற்றும் சிறைப்பட்டவர்களை அசாதாரண நாடுகடத்தல் என்று சொல்லப்படக் கூடிய ஒரு நடைமுறையின் மூலம் சித்திரவதைக்கான இரகசிய சிறைக்கு அனுப்புவதற்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் எவ்வாறு அமெரிக்காவுக்கு உதவின ஆகியவற்றை அம்பலப்படுத்தும் அறிக்கைகள் மீது WSWS கருத்துகள் தெரிவித்தது. அத்துடன் இராணுவத் தீர்ப்பாயங்களில் கைதிகள் விசாரிக்கப்படுவதற்கு முன்னதாய் அரசியல் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதாவில் அவர்களுக்கு இருந்து வந்த வசதிகள் அனைத்தையும் ஒதுக்கி வைக்கும் ஒரு சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது, புஷ் கையெழுத்திட்டார்.  

2005 டிசம்பரில் நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு கட்டுரையில், முன்னதாக வெளிநாட்டு உளவு விடயங்களில் மட்டுமே சம்பந்தப்பட்டதாய் இருந்திருந்த தேசியப் பாதுகாப்பு முகமை அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த மில்லியன் கணக்கான அமெரிக்கர்களை ஒட்டுக்கேட்ட விவகாரம் வெளியாகியிருந்தது. தொலைத்தொடர்பு துறை மற்றும் கணினித் துறை தொழில்நுட்பங்களின் உதவியுடன் தேசியப் பாதுகாப்பு முகமையால் உருவாக்கப்படும் விரிவான தரவுத்தளங்களை விவரிக்கும் ஒரு புத்தகத்தை இக்கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான ஜேம்ஸ் ரைஸன் 2006 ஜனவரியில் வெளியிட்டார்

நீதிமன்ற உத்தரவுகள் இன்றி NSA தரவுகளை மும்முரமாக தோண்டியெடுத்திருந்தது. அமெரிக்காவிற்குள் உள்ளும் நாட்டில் இருந்து வெளியே பேசப்படுகின்ற தகவல் தொடர்புகளையும் முழுக்க துருவியிருந்தது. நூறாயிரக்கணக்கான மில்லியன் அமெரிக்கர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டிருந்தன. WSWS எச்சரித்தது: “இந்த அச்சுறுத்தல் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. அமெரிக்க ஜனநாயகத்தின் நீடித்த உடைவின் விளைபொருள் தான் இது. முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியிலும் அதனால் விளைந்த சமூக ஏற்றத்தாழ்வின் துர்வளர்ச்சியிலும் தான் இதன் வேர் தங்கியுள்ளது.”

NSA இன் இந்த சட்டவிரோத வேவு பார்ப்பு குறித்த விபரங்கள் இந்நாளிதழுக்கு 2004 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னமாகவே தெரிந்திருந்தது என்பதையும், ஆனாலும் அதனை வெளியிடுவதற்கு அந்தப் பத்திரிகை ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருந்துள்ளது என்பதும் ஆகஸ்ட் மாதத்தில் நியூயோர்க் டைம்ஸில் வெளியானதொரு பத்தியில் வெளியானது. அதனை வெளியிடாமல் நிறுத்தி வைப்பதற்கு புஷ் நிர்வாகம் டைம்ஸ் நாளிதழை வலியுறுத்தியுள்ளது, அந்நாளிதழும் அதற்கு உடன்பட்டிருக்கிறது. WSWS குறிப்பிட்டது:  

அமெரிக்காவின் வெகுஜன ஊடகங்கள் அரச எந்திரத்திற்குள்ளாக மனதளவில் ஒன்றுகலந்து விட்டிருப்பதையே டைம்ஸின் நடத்தை காட்டுகிறது. எந்த மட்டத்திற்கு ஊடகங்கள் அரசாங்கத்தின் பிரச்சார வாலாக செயல்படுகின்றன, கண்ணசைவைக் கொண்டு உண்மைகளை மறைக்கின்றன அல்லது திரிக்கின்றன என்பதை இது காட்டுகிறது.

அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் வழக்கையொட்டி வெளியான பாதுகாப்பு ஆவணங்கள் குறித்த செய்திகளையும் WSWS வெளியிட்டது. 5,000க்கும் அதிகமான பக்கங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதில் பிரதானமாக போராளி நிலை மீளாய்வு தீர்ப்பாயங்கள் (Combatant Status Review Tribunals)என்று சொல்லப்படும் கட்டப் பஞ்சாயத்து முறை நீதிமன்றங்களின் உரைகள் இடம்பெற்றிருந்தன. கைதிகள்எதிரிப் போராளிகள்என்ற தங்கள் மீதான முத்திரையை சவால் செய்து இந்நீதிமன்றங்களில் முறையிட்டிருந்தனர். அசோசியேடட் பிரஸ் தனது பகுப்பாய்வை வெளியிட்டபோது நாம் எழுதினோம்: “எந்தக் காரணமும் இன்றி பல வருடங்களாக சிறைப்படுத்தப்பட்டு துஷ்பிரயோகத்துக்கும் பரிதாபகரமான நிலைமைகளுக்கும் ஆட்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் நூற்றுக்கணக்கான பேரின் வாழ்க்கையின் மீது இந்தப் பகுப்பாய்வு பார்வையிடுகிறது. ஜெனிவா உடன்பாடுகள் மற்றும் சர்வதேசச் சட்ட நிர்ணயங்களை அப்பட்டமாக மீறிய வகையில் அவர்கள் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.”

அசாதாரண நாடுகடத்தல்(ஏறக்குறைய கடத்தல் போல தான்)என்ற சிஐஏயின் நடைமுறையில் ஐரோப்பிய அரசாங்கங்கள் உடந்தையாக இருந்தன என்பதற்கான மேலதிக ஆதாரங்கள் இந்த ஆண்டில் எழுந்தன. முன்னதாக இந்த நடைமுறை குறித்து தங்களுக்குத் தெரியாது என்பதாக ஐரோப்பிய அரசாங்கங்கள் கூறியிருந்தன. ஆயினும் கைதிகளை சித்திரவதை செய்ய வசதியாக இரகசிய சிறை மையங்களுக்கு அவர்களைக் கொண்டு செல்ல சிஐஏ பயன்படுத்தும் விமானத்தை அனுமதித்ததை மார்ச் மாதத்தில் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரின் அரசாங்கம் ஒப்புக் கொண்டது.

ஏப்ரல் மாதத்தில், மனித உரிமை அமைப்பான சர்வதேசப் பொதுமன்னிப்பு சபையின் ஒரு அறிக்கை குறித்து நாங்கள் எழுதினோம். இந்த அறிக்கை ஏமன் நாட்டைச் சேர்ந்த மூவர் ஆப்கானிஸ்தான், ஜிபொதி மற்றும் அநேகமாய் கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் அமெரிக்காவின் நான்கு இரகசிய சிறைகளில் அனுபவித்த வேதனைகளை நுட்பமாக விவரித்ததோடு, சட்டவிரோதக் கடத்தல்களுக்கு சிஐஏ பயன்படுத்திய விமானங்கள் ஐரோப்பிய விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான முறைகள் வந்துசென்றிருந்தன என்பதையும் ஆவணப்படுத்தியிருந்தது. இந்த அசாதாரண நாடுகடத்தல் குறித்து நாங்கள் எழுதினோம்: “முறையான குற்றச்சாட்டுப் பதிவும் இல்லை, எந்த அரசு அதிகாரிகளுக்குமான அறிக்கையும் இல்லை, கைதிகள் எங்கிருக்கின்றனர் என்பது குறித்து குடும்பத்தினருக்கு தகவலும் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் வழக்கறிஞர்களையோ அல்லது பிற சட்ட உதவிகளையோ அணுக வழியில்லை; ஏறக்குறைய கண்காணாது போய் விட்டார்கள்.” 

அக்டோபர் மாதத்தில், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்டில் நிறைவேறி விட்டிருந்த 2006 இராணுவ ஆணையங்கள் சட்டத்தில் ஜனாதிபதி ஜோர்ஷ் புஷ் கையெழுத்திட்டார். இந்தச் சட்டம் நிறைவேறியதற்குப் பின்னர், WSWS எழுதியது:

இது அமெரிக்கக் குடிமக்களின், அத்துடன் சட்டரீதியாய் தங்கியிருப்போர் மற்றும் பிற புலம்பெயர்ந்தவர்களின் உரிமைகளைத் தாக்குகிறது. இவர்கள் வெறும் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மட்டுமே, எந்த நீதித்துறை மறுஆய்வும் இல்லாமலே, கைது மற்றும் ஆயுள் வரை சிறை செல்லும் அச்சுறுத்தலுக்கு ஆட்பட நேரும்.

இந்த சட்டத்தின் ஷரத்துகளின் படி, ஜனாதிபதி எந்தவொருவரையும்சட்டவிரோதமான எதிரிப் போராளி என்று முத்திரை குத்தி அவர் உளவுத்துறை முகவர்களால் முற்றுகையிடப்படுவதற்கும் எந்தவிதமான சட்டப் பரிகாரங்களும் இல்லாமல் காலவரையின்றி சிறையில் தள்ளப்படவும் செய்ய முடியும். எதிராளி இராணுவத்தின் அங்கத்தவராக இல்லாவிடினும்அமெரிக்காவிற்கு எதிராக குரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு தனிநபரையும் இந்தச் சட்டம்சட்டவிரோதமான எதிரிப் போராளி என்றே வரையறை செய்கிறது

அரசியல் சட்டத்தின் மீதும் உரிமைகள் வரிசையின் மீதுமான இந்தத் தாக்குதலின் வரலாற்றுத் தன்மைக்கு அடுத்துவந்ததொரு ஆய்வு முக்கியத்துவமளித்தது.

சட்டவிரோத எதிரிப் போராளி என்று கூறி அமெரிக்க அரசாங்கத்தால் கைது செய்து சிறையிலடைக்கப்படுகின்ற குடிமகனல்லாத எவரொருவருக்கும் ஆட்கொணர்வு உரிமைகளை அகற்றுவது இந்தச் சட்டம் முன்மொழிந்த மிகப் பெரிய சட்ட மாறுதல் ஆகும். தங்களைக் கைது செய்ய அவசியமான போதுமான ஆதாரம் இருக்கிறதா என்பதை ஆராய நீதி விசாரணை கோருவதற்கும் கூட இந்தத் தனிநபர்களுக்கு எந்த உரிமையும் இருக்காது.

இந்த அறிக்கைகளில் இருந்து தெளிவாகும் விடயம் என்னவென்றால், அரசியல்ரீதியான எதிர்ப்பை குற்றமாக்குவதற்கும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலான அமெரிக்கப் போர்களை எதிர்ப்பவர்களையும் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து நிற்பவர்களையும் பயங்கரவாத ஆபத்து கொண்டவர்களாய் அணுகி அவர்களை கைது செய்து ஒரு புதிய அமெரிக்க குலாக் சிறையில்(அரசியல் கைதிகளுக்கான சிறை)அடைப்பதற்கும் புஷ் நிர்வாகம் மற்றும் இராணுவ மற்றும் உளவு முகமைகளின் கீழ் திட்டங்கள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

 

http://www.wsws.org/asset/9991fd9d-32bc-4f89-9833-9637193504eN/nsa_aerial.jpg?rendition=image480
மேரிலான்ட், ஃபோர்ட் மியாடெயில் தேசியப் பாதுகாப்பு முகமையின் தலைமையகம்

Featured material

12 May 2006 Framework for a police state
US government phone spying targets all Americans

4 July 2006 July 4th 2006: The state of US democracy 230 years after the American Revolution

22 August 2006 A damning admission: New York Times concealed NSA spying until after 2004 election

29 September 2006 US Congress legalizes torture and indefinite detention

18 October 2006 Bush signs Military Commissions Act authorizing police-state tribunals, torture


WSWS சர்வதேச ஆசிரியர் குழுக் கூட்டம்

2006 ஜனவரி 22 முதல் 27 வரை ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் விரிந்த கூட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 2006 ஆம் ஆண்டின் அரசியல் எழுச்சிகளுக்குத் தயாரிப்பு செய்தது. உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் முன்னணி அங்கத்தவர்களும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளும் ஏறக்குறைய உலகின் ஒவ்வொரு பிராந்தியத்தின் அரசியல் நிலைமைகள் குறித்துமான அறிக்கைகளை வழங்கினர். இவை பின்னர் WSWS இல் பிரசுரமாயின.

சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் துவக்க உரை அளித்தார். அவர் விளக்கினார்:

அரசியலின் நிலை குறித்த பகுப்பாய்விற்கான, நடப்பு அரசியல் சூழலுக்குள்ளான சாத்தியங்கள் குறித்தான மதிப்பீட்டிற்கான எந்தவொரு தீவிர முயற்சியும் உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று அபிவிருத்தி குறித்த ஒரு துல்லியமான மற்றும் கனகச்சிதமான புரிதலில் இருந்து முன்னெடுக்கப்பட்டாக வேண்டும்.

முதலாளித்துவத்தின் வரலாற்று அபிவிருத்தி குறித்த பகுப்பாய்வு பின்வரும் அடிப்படையான கேள்விக்குப் பதிலளிப்பதாக இருக்க வேண்டும்: உலகப் பொருளாதாரத்தின் அமைப்புமுறையாக முதலாளித்துவம் மேல் நோக்கி சென்று சென்றுகொண்டிருக்கிறதா, அதன் உச்சநிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறதா, அல்லது சரிந்து ஒரு பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறதா?

இந்தக் கேள்விக்கு நாம் அளிக்கக் கூடிய பதில், நமது நடைமுறைக் கடமைகளைத் தெரிவு செய்வதில் மட்டுமல்ல, நமது இயக்கத்தின் ஒட்டுமொத்த தத்துவார்த்த மற்றும் வேலைத்திட்ட நோக்குநிலைக்கும் கூட, மிகவும் நீண்ட காலத்திற்கான பின்விளைவுகளைத் தவிர்க்கவியலாமல் கொண்டிருக்கும்.

நிக் பீம்ஸ் உலகப் பொருளாதாரம் குறித்த தனது அறிக்கையில் கூறினார்:

முக்கியமான அனைத்து தொழிற்துறைப் பொருளாதாரங்களிலும் அத்துடன் உலகப் பொருளாதாரத்திலும் மேலதிகமான வலிமையான வளர்ச்சிக்கான கணிப்புகளுடன் இந்த ஆண்டு தொடங்கியிருக்கிறது. குறுகிய கால நம்பிக்கையுடனான பார்வைகளுக்குப் பின்னால், முக்கியமான பொருளாதார அறிஞர்கள் உலகப் பொருளாதாரத்தின் நிலை குறித்துக் கவலை கொண்டிருக்கின்றனர். முக்கியமாக பெருகிச் செல்லும் அமெரிக்க நிதிப் பற்றாக்குறை மற்றும் கடன் அதிகரிப்பினால் உருவாக்கப்பட்டிருக்கும் தொடர்ச்சியான ஆழமாய் வேரூன்றிய கட்டமைப்பு தடுமாற்றங்கள் மற்றும் பதட்டங்களை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இவை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஒரு நெருக்கடியை, இல்லாவிட்டால், துரிதமான மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் உலக முதலாளித்துவம் கடந்து வந்திருக்கக் கூடிய வரலாற்றுப் பாதையை மீளாய்வு செய்த பின் பீம்ஸ் இவ்வாறு முடித்தார்: “1870 முதல் 1914 வரையான பூகோளமயமாக்கலின் முந்தைய காலகட்டம் போர்களுக்கும் புரட்சிகளுக்கும் இட்டுச் சென்றது. பூகோளமயமாக்கத்தின் நடப்புக் கட்டத்தின் விளைவும் கூட அதேஅளவுக்கு வெடிப்பு மிகுந்ததாகவே இருக்கும்.”

அமெரிக்க முதலாளித்துவத்தின் வெகுமுக்கியமான பாத்திரத்தை பரி கிரே விளக்கினார்: “கடந்த நூற்றாண்டில் உலக முதலாளித்துவத்தின் கதியானது வேறெந்த தேசியப் பொருளாதாரம் அல்லது தேசிய அரசை விடவும் அமெரிக்காவுடன் தான் அதிகமாக இணைந்திருக்கிறது.” உலகப் பொருளாதாரம் தொடர்பாய் அமெரிக்கப் பொருளாதாரத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை ஆராய்ந்த அவர் கூறினார்:

இந்த ஆழமான மாற்றங்கள் வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகளிலும் அமெரிக்காவிற்குள் இருக்கும் பல்வேறு வர்க்கங்களின் சமூக அங்கலட்சணங்களிலும் ஒரு பெரும் தாக்கத்தைக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க ஆளும் உயரடுக்கே கூட மாறி விட்டிருக்கிறது. சரிவின் பொதுவான நிகழ்முறை ஆளும் அடுக்குகளின் அரசியல், புத்திஜீவித மற்றும் அறவழி சிதைவிலும் கூட ஒரு நச்சுத்தனமான வெளிப்பாட்டைக் காண்கிறது. பொதுவாக, மிகவும் கொள்ளையிடும், அறியாமைமிக்க, குறுகிய பார்வை கொண்ட மற்றும் பிற்போக்குத்தனமான கூறுகள் உச்சத்திற்கு எழுந்து விட்டிருக்கின்றன.

டேவிட் வோல்ஷ் தனது அறிக்கையில் கலையின் தற்போதைய நிலை குறித்தும் அது எப்படி சமூகத்தின் புறநிலைப் பிரச்சினைகளைப் பிரதிபலித்தது என்பது குறித்தும் திறனாய்வு செய்தார். அவர் கூறினார்:

கலைஞனோ அல்லது கலைஞர்களோ வாழ்க்கை மற்றும் சமூகத்தின் உண்மையான உந்துசக்திகளில் இருந்து தூரம் செல்லச் செல்ல, சமூகம் மற்றும் உளவியல் சக்திகளின் உண்மையான வரிசை குறித்து தெளிவற்றும் உறுதியற்றும் இருக்கும் வரைக்கும் கலை விகித உணர்வு தொலைந்து கிடக்கும்.

இந்தச் சிக்கல்களில் புறநிலையான வரலாற்றுப் பிரச்சினைகள் இருப்பது தெளிவு. கலை தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியாது அல்லது மொத்தமாக தனக்குத்தானே விளங்கச் செய்ய முடியாது. பரந்த மக்களின் சமூக இயக்கம் ஒரு தீர்மானகரமான பாத்திரத்தை ஆற்றுகிறது. “மனிதகுலத்தின் தொடுவானத்தை மூடிமறைத்திருக்கக் கூடிய சந்தேக மேகங்களை மற்றும் அவநம்பிக்கை மேகங்களை ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் மற்றும் மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டம் விரட்டியடிப்பது குறித்து ட்ரொட்ஸ்கி எழுதுகிறார்.

ஈராக் போர் குறித்து, சீனா, ஐரோப்பா, பிரிட்டன், இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, சியோனிசம் மற்றும் மத்திய கிழக்குக்கான முன்னோக்குகள் குறித்து, ஜனநாயக மற்றும் அரசியல்சட்ட உரிமைகள் மீதான பெருகும் தாக்குதல்கள் குறித்து, மற்றும் 2006 அமெரிக்கத் தேர்தல்கள் மற்றும் அதில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் ஆகியவை குறித்த அறிக்கைகளும் இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றன.

இந்த அறிக்கைகள் 2006 இன் தொடக்கத்தில் உலக விவகாரங்களின் நிலை குறித்து நன்கு ஆய்வு செய்த ஒரு மார்க்சிச பகுப்பாய்வைக் கொண்டிருந்ததோடு வரவிருந்த காலகட்டத்திற்கான தொழிலாள வர்க்கப் போராட்டங்களுக்கு வழிகாட்டுவதற்கான ஒரு முன்னோக்கையும் கொண்டிருந்தது. 2008 ஆம் ஆண்டில் வெடித்து இன்று வரை தொடர்ந்து வருகின்ற உலக நிதி நெருக்கடியாயினும் சரி, இந்த நெருக்கடியின் பாதிப்பால் மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் உலகின் பிற பகுதிகளை உலுக்கிய பாரிய மக்கள் எழுச்சிகளாயினும் சரி இரண்டையுமே இந்த அறிக்கைகள் முன்னெதிர்பார்த்தன.

அனைத்துலகக் குழுவின் பல பிரிவுகளது தொடர்ச்சியான அரசியல் முன்முயற்சிகளுக்கும் ஒரு அடித்தளத்தை சர்வதேச ஆசிரியர் குழுக் கூட்டம் வழங்கியது. பேர்லினில் மாநிலத் தேர்தலுக்கான ஜேர்மன் பிரிவின் பிரச்சாரமும் இதில் அடங்கும். இப்பிரச்சாரத்தில் சமூக ஜனநாயகக் கட்சியினர், ஜனநாயக சோசலிசத்திற்கான கட்சி(முன்னாள் ஸ்ராலினிஸ்டுகள்) மற்றும் தேர்தல் மாற்று (WASG) உள்ளிட்ட இடது என்றழைக்கப்படுகின்ற அத்தனை போக்குகளில் இருந்தும் PSG தன்னை கூர்மையாக தனித்துவப்படுத்திக் காட்டியது.  கடைசியாகக் குறிப்பிட்ட இரண்டு குழுக்களும் ஒன்றிணைந்து உருவாக்கிய இடது கட்சி தான் இப்போது ஜேர்மனியில் முதலாளித்துவ ஆட்சியின் முட்டுத் தூண்களில் பிரதானமான ஒன்றாக இருக்கிறது.

Featured material


அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியத் தேர்தல்

அமெரிக்காவில், நவம்பரில் நடந்த இடைத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி ஒரு முக்கிய பிரச்சாரத்தை முன்வைத்தது. நியூயோர்க், கலிபோர்னியா மற்றும் மிச்சிகன் ஆகிய இடங்களில் கூட்டரசாங்க ஆசனங்களுக்கும் இல்லிநோய், மேய்ன், ஓரிகான் மற்றும் வாஷிங்டனில் மாநில அரசாங்க ஆசனங்களுக்கும் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது.

இந்தப் பிரச்சார அறிவிப்பில் விளக்கியது போல, SEP இன் முன்னோக்கு முழுக்க முழுக்க தேர்தலை அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக புஷ் நிர்வாகத்தின் போர், ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் கொள்கைகளுக்கு அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களும் இளைஞர்களும் காட்டக் கூடிய எதிர்ப்புகளுக்கு, குரலும் தலைமையும் வழங்குவதற்கானது ஆகும்.”

நியூயோர்க்கில் அமெரிக்க செனட் வேட்பாளராக SEP சார்பில் WSWS ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பில் வான் ஓகென் களமிறங்கினார். முந்தைய தேர்தலில் இத்தொகுதியில் வென்றிருந்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும் அநேகமாக ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப்பட இருந்தவருமான ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து பில் வான் ஓகென் போட்டியிட்டார். ஹிலாரி கிளிண்டன் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கத் தாக்குதல் போரை அங்கீகரித்து வாக்களித்திருந்தார்.

இல்லிநோயில், SEP வேட்பாளரான ஜோ பனராவ்ஸ்கிஸ் வாக்குச்சீட்டில் இடம்பெற்று விடாமல் தடுக்கும் வேலையில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். SEP முன்னெடுத்த ஒரு சர்வதேசப் பிரச்சாரத்தின் விளைவாக SEP வேட்பாளரின் பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெற சான்றிதழ் பெற்றது.

SEP இன் பிரச்சாரக் களத்தில், உழைக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை அடிப்படையாகக் கொண்ட சோசலிசக் கோரிக்கைகளின் ஒரு வேலைத்திட்டம் விவரிக்கப்பட்டதோடு, அது பின்வருமாறு முடிக்கப்பட்டது:

குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிக்கும் மற்றும் அவற்றின் பரஸ்பர சகதிவீச்சுப் பிரச்சாரங்கள் மற்றும் பொய்களுக்கும் நிதியாதாரம் அளிக்கின்ற பெருநிறுவன அமெரிக்கா மற்றும் பெரும் செல்வந்தர்களின் பில்லியன் கணக்கிலான டாலர் பங்களிப்பில் SEPக்கு அணுகலும் இல்லை, SEP அதை விரும்பவும் இல்லை. தொழிலாளர்கள், தொழில் நிபுணர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை பரந்த அளவில் அணிதிரட்டக் கூடிய, அத்துடன் தேர்தலுக்கும் கடந்து தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த சோசலிசக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளங்களை உருவாக்குகின்ற வேர்மட்டத்திலான ஒரு அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமாக மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவைத் தட்டியெழுப்புவது என்ற நாங்கள் சாதிக்க நினைப்பதை எட்ட முடியும்.

SEP கணித்திருந்ததைப் போலவே, மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களும் இளைஞர்களும் 2006 தேர்தலில், ஈராக் போருக்கும் மற்றும் புஷ் நிர்வாகம் மற்றும் குடியரசுக் கட்சியின் பிற்போக்குத்தன கொள்கைகளுக்குமான தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற வகையில் வாக்களித்தனர். ஜனநாயகக் கட்சியினர், போர் எதிர்ப்பு மனோநிலைக்கு மிகவும் கோழைத்தனமாகத் தான் விண்ணப்பம் செய்தனர் என்ற போதிலும் கூட, அமெரிக்க மக்களிடையேயான இந்த இடதுநோக்கிய நகர்வை தகுதியில்லாமலே அறுவடை செய்து கொண்டனர். பிரதிநிதிகள் சபையில் டசின் கணக்கான ஆசனங்களை வென்று, 12 ஆண்டுகளில் முதன்முறையாக அவை மற்றும் செனட் இரண்டிலுமே கட்டுப்பாட்டை கைப்பற்றினர்.

தேர்தலுக்கு அடுத்த நாளில் வெளியிட்ட அறிக்கையில் WSWS எச்சரித்தது:

வாக்காளர்களிடையே பாரிய போர்-எதிர்ப்பு மனோநிலை நிலவுவதற்கும், “ஈராக் போரின் வெற்றிக்கெனவும்பயங்கரவாதத்தின் மீதான போரை தொடர்ந்து நடத்துவதற்கெனவும் ஜனநாயகக் கட்சி தலைவர்கள் பூண்டிருக்கும் உறுதிக்கும் இடையில் ஒரு மிகப்பெரும் பிளவு நின்றுகொண்டிருக்கிறது.

புஷ் நிர்வாகத்திற்கும் போருக்குமான தமது எதிர்ப்பை வெளிப்படுத்த ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்தவர்கள், ஜனநாயகக் கட்சியின் தேர்தல் வெற்றி வெளிநாடுகளிலும் சரி அல்லது உள்நாட்டிலும் சரி அமெரிக்கக் கொள்கையில் எந்த முக்கிய மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என்பதை வெகுவிரைவிலேயே கண்டுகொள்ள இருந்தார்கள். மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களும் இளைஞர்களும் மிக விரைவாகவே ஜனநாயகக் கட்சியினருடன் நேரடி மோதலுக்குள் வர இருந்தார்கள்.

ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் நவம்பர் 25 அன்று நடந்த தேர்தலில் ஆஸ்திரேலிய SEP போட்டியிட்டது. மாநிலத்தில் அதிகாரத்தில் இருந்த ஆஸ்திரேலிய தொழிற்கட்சியை எதிர்த்தும், அதேபோல் பசுமைக் கட்சியினரை எதிர்த்தும் போட்டியிட்டது. தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கங்களில் இருந்தும் ALP இல் இருந்தும் முறித்துக் கொண்டு புரட்சிகர சோசலிசக் கோட்பாடுகளின் அடிப்படையில் போராட்டத்திற்கான புதிய அமைப்புகளைக் கட்டியெழுப்பப் போராட வேண்டும் என்பதே SEP இன் தேர்தல் பிரச்சாரக் களத்தின் மையத்தானமாக இருந்தது.

Featured material


பிற அரசியல் அபிவிருத்திகள்

ஜனவரி 2 அன்று, மேற்கு விர்ஜினியாவில் சாகோ சுரங்கத்தில் ஏற்பட்ட ஒரு வெடிப்பில் 13 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்தச் சுரங்கம் 2004 மற்றும் 2005 இல் பல்வேறு பாதுகாப்பு மீறல்களுக்காய் பேசப்பட்டதாகும். அடுத்த ஐந்து மாதங்கள் வரை பல தொடர்ச்சியான கட்டுரைகளில், WSWS, 12 சுரங்கத் தொழிலாளிகளின் உயிரைப் பலிகொண்ட இந்தத் துயரச் சம்பவத்தின் விவரங்களை விசாரணை செய்ததோடு பாதுகாப்புச் செலவினத்திலான வெட்டுகள் எப்படி மீட்பைப் பாதித்தன என்பதையும் காட்டியது.

பல்வேறு மாநிலங்களில் இருக்கும் சுரங்கங்களின் நிலைமைகள் குறித்து வந்த கடிதங்களை WSWS வெளியிட்டது. அத்துடன் சிக்கிக் கொண்ட சுரங்கத் தொழிலாளிகளின் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் நேர்காணல் செய்தது. அத்துடன் சுரங்கத் தொழிலின் வரலாற்றையும் மேம்பட்ட நிலைமைகள் கோரி சுரங்கத் தொழிலாளிகள் நடத்திய சக்திவாய்ந்த போராட்டங்களையும் நாங்கள் ஆய்ந்தறிந்தோம். சுமார் இரண்டு தசாப்தங்களாக முன்மொழியப்பட்டு வந்திருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதை கிளிண்டன் மற்றும் புஷ் நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தடுக்காமல் மற்றும் இறுதியில் இல்லாதழிக்காமல் இருந்திருப்பார்களேயானால் இந்த ஆண்டில் அமெரிக்காவின் நிலக்கரிச் சுரங்கங்களிலான உயிரிழப்புகளில், அத்தனையையும் இல்லாவிட்டாலும், அநேகத்தை நம்மால் தடுத்திருக்க முடியும் என்று நிலக்கரித் துறை கட்டுப்பாடுகள் அகற்றம் குறித்த ஒரு கட்டுரை தெரிவித்தது.

WSWS இந்தச் செய்திவரிசையில் சுரங்கத் தொழிலாளிகளின் குரலாய் சேவை செய்தது; சுரங்கத் தொழிலாளர்களின் மரணத்திற்கு இட்டுச் சென்றது எது என்பதன் மீதான சமூக மற்றும் அரசியல் அம்பலப்படுத்தல்களையும் வழங்கியது; தொழிற்துறை மற்றும் சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டங்களின் வரலாற்றை விளக்கியது; அத்துடன் சுரங்கங்களில் இருந்த பரிதாபகரமான நிலைமைகளை எதிர்த்துப் போரிடுவதற்கு சுரங்கத் தொழிலாளர்களுக்கு அவசியமாக இருந்த முன்னோக்கையும் வழங்கியது.

கனடாவில் கனேடிய மூலதனத்தின் சக்திவாய்ந்த பிரிவுகள் தமது ஆதரவை கன்சர்வேடிவ் கட்சியை நோக்கித் திருப்பியதை அடுத்து - வலது சாரி ஜனரஞ்சக சீர்திருத்தக் கட்சி/ கனேடிய கூட்டணியும் மற்றும் கனேடிய உயரடுக்கினர் அரசாங்கத்திற்கென பாரம்பரிய மாற்றுக் கட்சியாக பராமரித்து வந்த முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியும் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்தாபிக்கப்பட்டது தான் இந்தக் கட்சி - ஜனவரியில் பன்னிரண்டு ஆண்டு கால லிபரல் அரசாங்கம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது. கனேடிய வரலாறு கண்டிராத அளவுக்கு மிகப்பெரும் சமூகச் செலவின வெட்டுகளை லிபரல்கள் செய்தனர், பெருவணிகங்களுக்கும் செல்வந்தர்களுக்குமான வரிகளை வெட்டினர், அத்துடன் கனடாவின் இராணுவத்தை மறுவலிமைப்படுத்துவதற்கான ஒரு பெரும் முனைப்பை முன்னெடுத்தனர். இத்தனைக்குப் பின்னரும் கூட ஆளும் வர்க்கம் இன்னும் மேலதிகமாய் தீவிர வலது-சாரிப் பாதையைக் கோரியது.

பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான புதிய அரசாங்கம் ஆப்கானிஸ்தான் போரில் கனடாவின் பங்கேற்பை அதிகரித்ததோடு உள்நாட்டில் புஷ் நிர்வாகத்தின் ஜனநாயக-விரோத வழிமுறைகளை நகலெடுத்துப் பின்பற்றியது. டொரோண்டோவில் இஸ்லாமியப் பயங்கரவாத செல் ஒன்றை - உண்மையில் இது அரச ஆத்திரமூட்டல்கார முகவர்களால் கைப்புரட்டு செய்யப்பட்ட இளைஞர்களின் குழு - நாடகபாணியில் கைது செய்ததும் இதில் அடங்கும். இச்சம்பவம் ஊடகங்களின் பெரும் பீதிபரப்பும் பிரச்சாரத்திற்கான சந்தர்ப்பமாக மாறியது.

ஐரோப்பிய அரசாங்கங்கள் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டுக்குப் பின்னால் அணிவகுத்ததால், தாயகத்தில் இஸ்லாமிய-விரோத இனவெறியைத் தூண்டி விடுவதன் மூலம் ஒரு மூர்க்கமான வெளியுறவுக் கொள்கைக்கு ஆதரவைத் திரட்ட அந்த அரசாங்கங்கள் முனைந்தன. 2005 இலையுதிர் காலத்தில், டென்மார்க்கின் வலது-சாரி செய்தித்தாளான ஜில்லாண்ட்ஸ்-போஸ்டன் இஸ்லாமின் தீர்க்கதரிசியான முகமது குறித்த ஒரு இனப்பாகுபாட்டு கார்ட்டூனை வெளியிட்டது. 2006 இன் ஆரம்பத்தில், பிரான்சின் முக்கிய செய்தித்தாள்களும், அதனைத் தொடர்ந்து உலகெங்குமான செய்தித்தாள்கள் மற்றும் ஒளிபரப்பு ஊடகங்களும் இதனை அடியொற்றின. இதற்கு எதிர்வினையாக, இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து வடக்கு ஆபிரிக்கா வரையிலும் பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த கார்ட்டூன்களை வெளியிட்டது ஒரு அரசியல் ஆத்திரமூட்டல் என WSWS கண்டனம் செய்தது. சகிப்புத்தன்மை சிறிதுமற்ற இத்தகைய அசிங்கத்தை பகிரங்கமாய் பிரகடனம் செய்வது என்று நாமெல்லாம் சொல்கின்ற ஒன்றை இது மதச்சார்பின்மை குறித்த பிரச்சினை என்றும் ஊடக சுதந்திரம் குறித்த பிரச்சினை என்றும் கூறிப் பாதுகாக்க முனைந்த தாராளவாதிகளையும் போலி இடதுகளையும் நாங்கள் அம்பலப்படுத்தினோம். உண்மையில், இஸ்லாமை ஒரு பின்தங்கிய மற்றும் தாழ்ந்த கலாச்சாரமாகக் காட்டுவதற்கான பிரச்சாரம் என்பது ஐரோப்பாவிலும் மற்றும் அமெரிக்காவிலும் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பெருகும் தாக்குதல்களின் பகுதியாக இருந்தது என்பதை WSWS விளக்கியது.

ஐரோப்பாவைப் பொறுத்த வரை மிக முக்கிய நாடுகள் பலவற்றிலும் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் அபிவிருத்தியடைந்த நிலையில், வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் பொதுச் சேவைகளிலான வெட்டுகளுக்கு பெருகிச் சென்ற சமூக எதிர்ப்புக்கு ஒரு பலிகடாவை உருவாக்க ஆளும் உயரடுக்கினர் மேற்கொண்ட ஒரு முயற்சியாகத் தான் முஸ்லீம் விரோத மனோநிலை தூண்டிவிடப்பட்டது என்பது தெளிவுபடத் தெரிந்தது.

ஜேர்மனியில், புதிதாக பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு சம்பளம் பெருமளவில் குறைந்து விட்டிருந்ததை எதிர்த்தும், நீண்ட வேலை நேரம் மற்றும் மோசமடைந்த நிலைமைகள் ஆகியவற்றை எதிர்த்தும் பிப்ரவரி 6 அன்று சுமார் 40,000 பொதுச் சேவை ஊழியர்கள் ஒரு வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இந்த வேலைநிறுத்தப் போராட்டம் இறுதியில் வேர்டி தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு முடிவுக்குக் கொண்டு வரப்படும் வரையில் 14 வாரங்கள் தொடர்ந்து நடந்து, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜேர்மன் வரலாற்றின் மிக நீண்ட போராட்டம் என்றானது.

பொதுச் சேவை ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடந்து கொண்டிருந்த அதேசமயத்தில், ஒரு சிறு வல்லுனர் சங்கத்தைச் (professional union) சேர்ந்த 22,000 பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவர்கள் ஊதியங்கள் மற்றும் வேலைநிலைமைகள் தொடர்பான தமது சொந்த வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். 700 பிராந்திய மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவமனை மருத்துவர்களும் பின்னர் இதில் இணைந்து கொண்டனர். வேர்டி சங்கம் இந்த மருத்துவர்களை எதிர்த்தது, கண்டித்தது, வேலைநிறுத்தங்களைத் தனிமைப்படுத்தியது, இறுதியில் அவை தோல்வியில் முடியப் பங்களிப்பு செய்தது. WSWS இதிலிருந்தான படிப்பினைகளை வரைந்தது, அத்துடன் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலிறுப்பாக தலைநகரிலான தேர்தல் பிரச்சாரத்தில் சோசலிசக் கொள்கைகளுக்காகப் பிரச்சாரம் செய்த ஜேர்மனி SEP(PSG)ஐ ஆதரிக்க தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது.

2006 மார்ச் 18 அன்று, முதல் வேலை ஒப்பந்தம் (CPE)அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்த்து பாரிஸ் மற்றும் பிற பிரெஞ்சு நகரங்களில் 1.5 மில்லியன் மக்கள் பேரணி நடத்தினர். இந்த ஒப்பந்தம் இளம் தொழிலாளர்களை தன்னிச்சையாக வேலையை விட்டு அகற்ற முதலாளிகளுக்கு உரிமை வழங்கியது. மக்களிடையே மிகப்பெரும் ஆதரவைப் பெற்று பழமைவாத வில்பன் அரசாங்கத்தை அதிர்ச்சிகுட்படுத்தியிருந்த இளம் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் இயக்கத்தின் உச்சகட்ட செயல்பாடாக இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.

WSWS, பிரான்சில் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகம் கொடுத்த அரசியல் கடமைகளை விளக்கியதோடு சீர்திருத்தவாத மற்றும் தேசிய முன்னோக்குகளுடன் நனவுடன் முறித்துக் கொள்வதற்கான அவசியம் இருப்பதை வலியுறுத்தியது. சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதில் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் முக்கியமான பாத்திரங்களை ஆற்றியிருக்கின்றன என்பதையும் உத்தியோகபூர்வ இடதின் இன்னுமொரு அரசாங்கமும் கூட இதற்குச் சளைக்காத ஒரு துரோகப் பாத்திரத்தையே ஆற்றவிருக்கிறது என்றும் நாங்கள் எச்சரித்தோம்.

அரசாங்கம் ஏப்ரல் ஆரம்பத்தில் CPE திரும்பப் பெற்றுக் கொண்டு அதிலிருந்து சற்று மாறுபட்ட வடிவத்தில் அதனை மறுஅறிமுகம் செய்தபோதுதீவிர இடது என்று சொல்லிக் கொண்ட அத்தனை கட்சிகளும் இதனை ஒரு முக்கிய வெற்றியாகப் பிரகடனம் செய்தன. உண்மையில் பிரான்சின் தொழிலாளர்களும் இளைஞர்களும் முகம் கொடுத்த எந்தப் பிரச்சினையுமே தீரவில்லை. CPE எதிர்ப்புப் போராட்டம் கற்றுக் கொடுத்த படிப்பினைகளை விவாதிக்கின்ற ஏராளமான கூட்டங்களை WSWS பிரான்சில் நடத்தியது. இந்த மாதத்தில், WSWS அன்றாடக் கட்டுரைகளை பிரெஞ்சு மொழியில் பதிவிடத் தொடங்கியது, அதன்பின் அன்றாடம் பிரெஞ்சில் கட்டுரைகள் பதிவிடுவது WSWS இல் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஏப்ரல் மாதத்தில், இத்தாலியில் சில்வியோ பெர்லுஸ்கோனியின் வலது-சாரி அரசாங்கம் நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் அகற்றப்பட்டது. ரோமனோ பிராடி தலைமையிலான மையவாத-இடது கூட்டணி குறுகிய வித்தியாசத்திலான வெற்றியைப் பெற்றது. “கொள்கைகளில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை; சமூகநல சேவைகள் மற்றும் வேலைகள் மீது அதே தாக்குதல்களை நடத்துவதற்குத் தான் பிரோடியும் யோசனை வைக்கிறார்; ஆனால் அதற்கு தொழிற்சங்கங்களின் உதவியையும், ஸ்ராலினிச இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான வாரிசான PDL இன் உதவியையும் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறார் என்பது மட்டுமே வேறுபாடு என்பதை WSWS விளக்கியது.

நடுத்தர-வர்க்க இடதுடன் மிக நெருக்கமான வரிசையில் இருந்த முன்னாள் ஸ்ராலினிஸ்டுகளின் கன்னையான ரிஃபோண்டஸியோன் கம்யூனிஸ்டா புதிய அரசாங்கத்திற்கும் அதன் போர் (அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்பின் பகுதியாக இத்தாலியத் துருப்புகள் ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டிருந்தன) மற்றும் சிக்கன நடவடிக்கைக்கான வேலைத்திட்டத்திற்கும் பிரதான முட்டுத்தூணாக எழுச்சி கண்டதே இந்த தேர்தலின் மிக முக்கியமான விளைவாக இருந்தது. RC அளித்த ஆதரவிற்கான பரிசாக இக்கன்னையின் தலைவரான ஃபாஸ்டோ பெர்டினோட்டி மிகவும் சக்திவாய்ந்த நாடாளுமன்றப் பதவியான கீழவையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மே மாதத்தில், ஆஸ்திரேலியாவில் ஹோவார்டு அரசாங்கம், கிழக்கு திமோருக்கு 1,300 துருப்புகளை அனுப்பியது. முன்னதாக சாலமன் தீவுகளில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கான பதிலிறுப்பாக அது தன் நவ-காலனித்துவ போலிஸ்-இராணுவப் படையை திண்ணப்படுத்தியதற்கு சில வாரங்களுக்குப் பின்னர் இது நடந்தது. இந்தத் தலையீடு ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடனான அப்பட்டமான நவ-காலனித்துவ வம்பிழுத்தல் நடவடிக்கை என்று ஆஸ்திரேலிய SEP விடுத்த ஒரு அறிக்கை வகைப்படுத்தியது.

கிழக்கு திமோர் தலையீட்டுக்கு எதிராக SEPம் WSWSம் பொதுக் கூட்டங்கள் நடத்தின. நடுத்தர வர்க்க இடது இத்தலையீட்டை ஆதரித்து எப்படி 1999 இல் செய்ததைப் போலவே தன்னை ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் பின்னால் நிறுத்திக் கொண்டது என்பதை நிக் பீம்ஸ் இக்கூட்டங்களில் அளித்த தனது அறிக்கையில் விளக்கினார்.

ஆறு வாரங்களுக்குள்ளாகவே இத்தலையீட்டால் ஆஸ்திரேலிய ஆதரவுடனான ஒரு அரசியல் கவிழ்ப்பு நடந்தேறியது. தேசிய ஃபிரெடிலின் இயக்கத்தைச் சேர்ந்த பிரதமர் மரி அல்காடிரி அகற்றப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவான ஜோஸ் ரமோஸ் ஹோர்டா அமர்த்தப்பட்டார். ஆஸ்திரேலியா எப்படி கிழக்கு திமோர் ஆட்சி மாற்றத்தை ஏற்பாடு செய்தது என்ற மூன்று பாகங்கள் கொண்ட விரிவானதொரு பகுப்பாய்வினை WSWS வெளியிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றுவதில் முந்தைய ஐந்து ஆண்டுகளில் கான்பெரா செய்த சூழ்ச்சி வேலைகளை இக்கட்டுரைகள் அலசின.

அதேபோல் தென் பசிபிக்கில் மற்ற இடங்களிலும் ஆஸ்திரேலியா செய்த வெறுப்புக்குரிய தந்திரமான நடவடிக்கைகளை WSWS அம்பலப்படுத்தியது. சாலமன் தீவுகள் அரசாங்கத்தை ஸ்திரம் குலைப்பதற்கும் அந்நாட்டை நவ-காலனித்துவ முறையில் ஆஸ்திரேலியா கைப்பற்றுவது குறித்த விசாரணை எதனையும் தடுப்பதற்குமான ஒரு வழிவகையாக மோசடியான கற்பழிப்புக் குற்றச்சாட்டுகளின் பேரில் சாலமன் தீவுகளின் அட்டர்னி ஜெனரலான ஜூலியன் மோடியை நாடு கடத்துவதற்கு தொழிற்கட்சியின் ஆதரவுடன் ஹோவார்ட் அரசாங்கம் செய்த முயற்சியும் இதில் அடங்கும்.

ஜூலை 1 அன்று மெக்சிகோ ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பெரும் அரசியல் நெருக்கடி உருவானது. ஆளும் வலது-சாரி PAN கட்சியைச் சேர்ந்த ஃபெலைப் கால்டெரான் மிகக் குறுகிய வித்தியாசத்தில் ஜனரஞ்சகக் கட்சியான PRD இன் வேட்பாளரான ஆண்டரஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடாரை வெற்றி கண்டிருப்பதாகக் கூறினார். ஏராளமாய் மோசடி நடந்திருப்பதாகக் கூறி லோபஸ் ஓப்ரடார் இந்த முடிவினை சவால் செய்தார். அவரது ஆதரவாளர்களின் பாரிய ஆர்ப்பாட்டங்கள் பல மாதங்களுக்கு மெக்சிகோ நகரை முடக்கிப் போட்டன. இறுதியாக கால்டிரான் டிசம்பர் 1 அன்று அதிகாரத்தில் அமர்ந்தார்.

லோபஸ் ஓப்ரடார் அரசியல்ரீதியாக கம்பி மேல் நடக்க முயற்சி செய்தார் என WSWS விளக்கியது. ஒரு பக்கத்தில் சமூக வேலைத்திட்டங்களுக்கும் வேலைகளுக்குமான மெக்சிகோ தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு விண்ணப்பம் செய்ய முனைந்த அவர், அதன் பகுதியாக, மெக்சிகோவின் ஆளும் சிறுஎண்ணிக்கையிலானோர் மீது ஆவேசமாக தாக்கிப் பேசினார். இன்னொரு பக்கத்தில், ஆளும் உயரடுக்கின் பொருளாதார மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை தீவிரமாக சவால் செய்யக் கூடிய எந்தக் கொள்கைகளையும் ஜனாதிபதியாக அவர் முன்னெடுக்க மாட்டார் என மெக்சிகோவின் மற்றும் வெளிநாடுகளின் வர்த்தகங்களுக்கு உறுதியளிக்க அவர் முனைந்திருந்தார்.

செப்டம்பர் மாதத்தில், தாய்லாந்தில் நடந்த ஒரு இராணுவ சதியில் ஜனரஞ்சகமாய் ஆவேச உரையாற்றக் கூடிய பில்லியனர் தக்‌ஷின் ஷினாவாத்ரா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு நாடுகடத்தப்பட்டார். இந்த கவிழ்ப்பை தொடர்ந்த பல மாதங்களுக்கு முடியாட்சி உள்ளிட ஆளும் உயரடுக்கின் வலது-சாரிக் கன்னைகளால் தூண்டப்பட்ட உள்நாட்டுச் சண்டை நடைபெற்றது. தக்‌ஷினின் அரசியல் அடித்தளமாக இருந்த விவசாய வடகிழக்குப் பகுதிகளில் கிராமப்புற வெகுஜன மக்களுக்கு அளிக்கப்பட்ட சமூகச் சலுகைகள் கட்டுப்படுத்தவியலாத அரசியல் பின்விளைவுகளைக் கொண்டதாகி விடும் என இக்கன்னைகள் அஞ்சின.

நவம்பரிலும் டிசம்பரிலும் இலத்தீன் அமெரிக்காவில் வெளிவந்த தேர்தல் முடிவுகள், தொழிலாள வர்க்கம் இடது நோக்கி நகர்வதைத் தடுத்து நிறுத்துவதற்காக சமூக ஜனநாயக மற்றும் ஜனரஞ்சக வாய்வீச்சை பயன்படுத்திய ஆளும் உயரடுக்கின் கன்னை ஒன்று எழுச்சி கண்டிருப்பதை ஊர்ஜிதம் செய்தன. பிரேசில் ஜனாதிபதியாக லூலா மீண்டும் தேர்வு செய்யப்பட்டது, நிக்கராகுவாவில் டானியல் ஒர்டேகா மீண்டும் அதிகாரத்திற்கு வந்தது, மற்றும் ஈக்வடாரில் ரஃபேல் கோரியா தேர்ந்தெடுக்கப்பட்டது ஆகியவையும் இதில் அடங்கும்.

 

http://www.wsws.org/asset/74c7091b-d02b-425e-b05b-2e3a847269cE/fra1-m20_v2.jpg?rendition=image480
முதல் வேலை ஒப்பந்தத்திற்கு (CPE) எதிராக பாரிஸில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Featured material

·         25 January 2006 கனடாவின் கன்சர்வேட்டிவ் அரசாங்கம் தொழிலாளர்கள் மீதும் ஜனநாயக உரிமைகள் மீதும் தாக்குதலை உக்கிரப்படுத்தும்

·         25 January 2006 History of bitter struggle by US miners
In the background of the Sago Mine disaster -- part 1

·         26 January 2006 History of bitter struggle by US miners
In the background of the Sago Mine disaster -- part 2

·         4 February 2006 ஐரோப்பிய செய்தி ஊடகம் முஸ்லீம்-எதிர்ப்பு கேலிச் சித்திரங்களை வெளியிடுகிறது: ஒரு இழிந்த மற்றும் முன்னேற்பாட்டுடன் செய்யப்பட்ட ஆத்திரமூட்டலாகும்

·         28 March 2006 பிரான்ஸ்: "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான போராட்டம் புதிய தொழிலாள வர்க்க தலைமைக்கான அவசியத்தை எழுப்புகிறது

·         1 June 2006 கிழக்கு திமோரில் ஆஸ்திரேலியாவின் நவ காலனித்துவ ஆக்கிரமிப்பை எதிர்க்கவும்

·         14 June 2006 The social movements in France: Political lessons from the last 10 years
Part one

·         15 June 2006 The social movements in France: Political lessons from the last 10 years
Part two

·         16 June 2006 The Toronto terror plot and the Canadian establishment’s political agenda

·         18 July 2006 Election crisis in Mexico deepens as one million protestors demand recount

·         21 July 2006 ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம், கிழக்கு திமோர் மற்றும் DSP யின் பங்கு

·         12 September 2006 Germany: Political lessons of the hospital doctors’ strike


கலை, கலாச்சாரம் மற்றும் மெய்யியல்:

2006 ஆம் ஆண்டு பொதுவாக அமெரிக்க மற்றும் ஆங்கில மொழிப் படங்களுக்கு ஒரு வறுமையான ஆண்டு என்பதை ஆண்டின் இறுதியில் WSWS சுட்டிக்காட்டியது. WSWS திரை விமர்சனங்களில் இருந்தான சில தலைப்புகள் அதனைக் காட்டும்:

பீட்டர் ஜாக்சனின் கிங் காங்: ஒரு பிரம்மாண்டமான அற்பம்

யுனைடெட் 93: எப்படி ஏன் நடந்தது என்பதைத் தவிர மீதியெல்லாம் இருக்கிறது

பிரெய்ரி ஹோம் கம்பேனியன் திரைப்பட வடிவம்: எதிர்பார்க்கக் கூடியதை விட மிகவும் குறைவாய் இருக்கிறது

தி டெவில் வியர்ஸ் பிரடா: பணம் மற்றும் புகழ் உடனான ஒரு காதல் விவகாரம்

ஓலிவர் ஸ்டோனின் வேர்ல்ட் டிரேட் செண்டர்: கொச்சையான நேர்மையற்றதொரு படைப்பு

மைக்கேல் மேனின் மியாமி வைஸ்: இந்தப் படம் எதற்கு?

சோஃபியா கோப்போலாவின் மேரி அண்டோயினெட்: கேக் கூட இல்லை?

ஸ்கார்செசியின் தி டிபார்டெட்: நில், சிந்தனை செய்

மெல் கிப்சனின் அபோகாலிப்டோ: ஒரு வலிமிகுந்த அனுபவம்

கலைப் பிரிவு ஆசிரியரான டேவிட் வோல்ஷ் தனது ஆண்டு இறுதித் திறனாய்வில் குறிப்பிட்டது போல, நல்ல கலையுணர்வு கொண்ட திரைப்படப் படைப்பாளிகளும் கூட அவர்கள் வாழ்ந்த மற்றும் உழைத்த சமூகத்தினைப் பற்றிய புரிதலில் பரிதாபகரமாய் பின்தங்கி இருந்தனர்: “எல்லாவற்றுக்கும் முதலாய் வரலாறு மற்றும் சமூகம் குறித்த அறிவின் மூலமாக கண்ணியமான மற்றும் மனிதாபிமான நோக்கங்கள் செறிவுபடுத்தப்பட்டு ஆழப்படுத்தப்பட வேண்டும். முக்கியமான வேலையைச் செய்ய வேண்டுமென்றால் ஒருவருக்கு முக்கியமான விடயங்கள் குறித்துத் தெரிந்திருக்க வேண்டும்.”

விதிவிலக்காய் சில படங்களும் வந்தன. இவற்றில் சில மட்டுமே அமெரிக்கச் சந்தையில் பொது வெளியீட்டில் இடம்பெற்றன, அநேக படங்களை திரைப்பட விழாக்களில் மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. வாட்டர் (இப்படத்தைக் குறிவைத்து வலது-சாரி இந்து அடிப்படைவாதிகளின் தணிக்கைப் பிரச்சாரம் நடந்தது; இப்படத்தின் திறனாய்வுடன் இயக்குநர் தீபா மேத்தா உடனான ஒரு நேர்காணலும் இடம்பெற்றது), ஈராக் போர் குறித்த ஆவணப்படமான தி பிரிசனர் அல்லது ஹவ் பிளான்டு டு கில் டோனி பிளேர்; 1916 ஐரிஷ் கிளர்ச்சி குறித்த பிழைகொண்ட கென் லோச் படம், தி விண்ட் தேட் ஷேக்ஸ் தி பார்லி போன்ற படங்களைக் குறிப்பாகக் கூறலாம்.

ரோபர்ட் அல்ட்மான் மற்றும் ஜப்பானின் ஷோஹீ இமாமுரா ஆகிய இரண்டு முக்கிய திரைப்படப் படைப்பாளிகளுக்கு நினைவஞ்சலிகள் இடம்பெற்றிருந்தன.

இசையின் பக்கத்தில், டிக்சி சிக்ஸ் குழு அவர்களது போர்-எதிர்ப்பு நிலைப்பாட்டையும் தொழிலாள வர்க்கம் முகம் கொடுக்கும் சமூக நிலைமைகள் குறித்த அவர்கள் அனுதாபத்தையும் வெளிப்படுத்துகின்ற ஒரு ஆல்பத்தை வெளியிட்டனர். அக்குழுவின் முதல்நிலைப் பாடகரான நடாலி மேய்ன்ஸ் ஜோஷ் W.புஷ் மற்றும் 2003 ஈராக் போருக்கு எதிராகக் குரல் கொடுத்ததை அடுத்து இக்குழுவுக்கு எதிரானதொரு வலது-சாரிப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அந்த சூழ்ச்சி வேட்டை பெருமளவில் தோல்வியடைந்தது.

மோசார்ட்டின் 250வது பிறந்ததினத்தையொட்டி தொடர்ச்சியான பல கட்டுரைகளை WSWS வெளியிட்டது. அவரது தொழில்வாழ்க்கை, இத்தாலிய மற்றும் ஜேர்மன் இசைப் பாணி கலந்த தனித்துவமான அவரது பாணி மற்றும் பரொக் பாரம்பரியத்திற்கும் அவரது நண்பரும் தனியாலோசகருமான ஜோசப் ஹேடன் இருவருக்கும் அவர் பட்ட கடன்கள் ஆகியவற்றைச் சுருக்கமாகக் கூறி, இந்த மாபெரும் இசைத்தொகுப்பாளரை வடிவாக்கிய சமூக மற்றும் அரசியல் உள்ளடக்கத்தை இக்கட்டுரைகள் திறனாய்வு செய்தன.

நியூயோர்க் நகரின் குகெனிம் அருங்காட்சியகத்தில் நடந்த 800 ஆண்டுகால ரஷ்யக் கலைப்படைப்புகள் கண்காட்சி குறித்து WSWS திறனாய்வு எழுதியது. “புதிய ரஷ்யாவை உலக அரங்கில் ஒரு முக்கிய தரப்பாகச் சித்திரிப்பது என்ற இந்த கண்காட்சியின் அரசியல் நோக்கத்தை WSWS விளக்கியது. ரஷ்யப் புரட்சியின் போதான கலையும், ஸ்ராலினிசத்தின் அழிவுகரமான வேலைகளுக்கு முன்பாக கலையில் புரட்சி ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறாததை நாங்கள் விமர்சனம் செய்தோம்.

குவாண்டானோமோ குடாவில் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் சிறைப்பட்டிருந்த டேவிட் ஹெக்ஸ் என்ற ஆஸ்திரேலியர் நடத்தப்பட்ட விதம் குறித்த ஒரு மல்டிமீடியா தயாரிப்பான ஹானர்  பவுண்ட் என்ற படைப்பையும் WSWS திறனாய்வு செய்தது.

மெய்யியல் துறையில் மார்க்சிசத்துக்குப் பிந்தைய மார்க்ஸ்: கார்ல் மார்க்சின் மெய்யியல் என்ற டோம் ரொக்மோரின் தொகுதிக்கு டேவிட் நோர்த் இரு பகுதிகளாக அளித்த திறனாய்வையும் WSWS வெளியிட்டது. மார்க்சை அடிப்படையில் ஒரு ஹெகலியராகவே இருந்த கருத்துவாதியாகச் சித்தரிக்கும் ரொக்மோரின் முயற்சிகளையும் ஏங்கெல்ஸை ஒரு கொச்சையான எந்திரத்தனமான சடவாதியாக அவர் தாக்கியதையும் நோர்த் மறுத்தார். நோர்த் எழுதினார்:

மார்க்சிசத்துக்கு முந்தைய உளவியல் மற்றும் அரசியலின் பல்வேறு வடிவங்களுக்கும் மீண்டும் உயிரூட்ட வாதிடும் புதிய கல்வியியல் இலக்கியத்தின் கணிசமான அமைப்புகள் இருக்கின்றன. 1840களின் ஆரம்பத்தில் இளம் கலாநிதி. மார்க்ஸின் உதயமானது மாற்று இடது-முற்போக்கு மெய்யியல்கள் மற்றும் சமூக இயக்கங்களின் அபிவிருத்தியை தடை செய்து விட்டது.  ஹேகலின் தத்துவத்தின் மீது உருப்போடும் விமர்சனத்தை செய்ததன் அடிப்படையில் மார்க்சின் படைப்பு அபிவிருத்தியடைந்ததால், மார்க்சின் தாக்குதலால் செய்யப்பட்ட சேதாரம் சீர்செய்யப்பட வேண்டும் என்று வாதிடப்படுகிறது. மார்க்ஸ் தான் ஹேகலின் படைப்புகளைத் தலையாலன்றி காலால் நிற்குமாறு செய்திருந்தார் என்ற நிலையில், அப்பழைய கருத்துவாத மெய்யியலாளரை மீண்டும் அவரது தலையாலேயே நிற்குமாறு செய்ய புரட்டிப் போடுவது அவசியம் என்று இந்த எழுத்தாளர்கள் வாதிடுகிறார்கள்.

 

http://www.wsws.org/asset/fd810434-5cfb-48a4-87db-4cd5490ab73F/saral.jpg?rendition=image480
தீபா மேத்தாவின் வாட்டர் இல் இருந்து ஒரு காட்சி

Featured material