ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் 13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு இந்திய நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையளிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஹரியானா மானேசரில் காரின் பகுதிகளை இணைக்கும் மாருதி சுசூகி தொழிற்சாலையில் பணியாற்றிய பதின்மூன்று போர்குணமிக்க தொழிலாளர்கள், அரசினால் கொடூரமான முறையில் ஜோடிக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் தற்போது சிறையில் ஏழரை ஆண்டுகளுக்கும் மேலாக கழித்திருக்கிறார்கள். அதில் கடைசி மூன்று வருடங்களை அவர்கள் செய்யாத ஒரு கொலைக்காக ஆயுள் தண்டனையின் கீழ் அனுபவித்து வருகிறார்கள்.

ராம் மெஹர், சந்தீப் தில்லான், ராம் பிலாஸ், சரப்ஜீத் சிங், பவன் குமார், சோஹன் குமார், அஜ்மீர் சிங், சுரேஷ் குமார், அமர்ஜீத், தன்ராஜ் பாம்பி, பிரதீப் குஜ்ஜார், யோகேஷ் மற்றும் ஜியாலால் ஆகிய 13 தொழிலாளர்கள் மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கத்தின் (Maruti Suzuki Workers Union - MSWU) முழுத் தலைமையையும் உள்ளடக்கும்.

இந்தியாவில் மிகப்பெருமளவில் வாகன உற்பத்தி செய்யும் மாருதி சுசூகி அத்துடன் நிறுவனம் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கி வந்த மாருதி உத்யோக் காம்கர் தொழிற்சங்கத்திற்கும் எதிராக, வேலைநிறுத்தங்கள், ஆலை உள்ளிருப்புகள், மற்றும் காவல்துறையினருடன் மோதல்கள் உள்ளிட்ட ஒரு ஆண்டுக்குமேலாக நடந்த சாமானிய தொழிலாளர்களின் கிளர்ச்சியின் மூலமாக MSWU உருவாக்கப்பட்டது.

ஜோடிக்கப்பட்டு குற்றம் சுமத்தப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை காவல்துறையினர் கொண்டுசெல்கின்றனர்

MSWU வை நசுக்கவும் மற்றும் அதன் தலைவர்களை ஆயுள் முழுதும் சிறையில் அடைக்கவும் ஜப்பானுக்கு சொந்தமான மாருதி சுசூகி, நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகிய இந்திய பெரும் வணிகத்தின் இரண்டு பிரதான கட்சிகள், காவல்துறை மற்றும் நீதிமன்றங்களுடன் இரகசியமாக ஒன்றாக இணைந்து வேலை செய்தது.

இந்தியாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் இத்தகைய இளம் தொழிலாளர்களை துன்புறுத்துவதற்கும் மேலும் அவர்களை ஒரு முன்மாதிரியாக ஆக்குவதற்கும் உறுதியாக இருந்தனர், ஏனேனில் அவர்கள் இந்தியாவில் பூகோளரீதியாக இணைக்கப்பட்டிருக்கும் வாகனத் தொழிற்சாலையில் நிலவுகிற மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள வாகனத் தொழிலாளர்களுக்கான விதிமுறையாக மாறிக்கொண்டுவருகிற மோசமான வேலை நிலைமைகளை எதிர்த்து சவால் விடுவதற்கு துணிந்தனர்.

மார்ச் 17, 2017 அன்று தொழிலாளர்களுக்கு தண்டனைக்கான தீர்ப்பு அளிக்கப்படும் விசாரணையின்போது, 13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படவேண்டும் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் அனுராக் ஹூடா வலியுறுத்தியிருந்தார். தொழிலாளர்களின் எதிர்ப்புகள் மிருகத்தனமாக நசுக்கப்படும் என்பதை முதலீட்டாளர்களுக்கு உறுதிப்படுத்துவதற்கு அது தேவையாக இருக்கிறது என்று கூறினார். “நமது தொழில்துறை வளர்ச்சி வீழ்ச்சியடைந்துவிட்டதுடன், வெளிநாட்டு நேரடி முதலீடும் (Foreign Direct Investment-FDI) வறண்டு விட்டது. பிரதமர் நரேந்திர மோடி “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இத்தகைய சம்பவங்கள் நம்மைப் பற்றிய எண்ணத்தின் மீது ஒரு கறையாக உள்ளது.”

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (International Committee of the Fourth International ICFI) மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் (World Socialist Web Site - WSWS) நீதிமன்றத்தால் ஆயுள்தண்டனை அறிவிக்கப்பட்ட மறுநாளே உடனடியாக மாருதி சுசூகி தொழிலாளர்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காக சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு ஒரு சர்வதேச அளவிலான பிரச்சாரத்தை முன்னெடுப்பதன் மூலம் பதிலிறுப்பு செய்தது.

இந்த வர்க்கப் போர்க் கைதிகளை வெற்றிகரமாக விடுதலை செய்வதற்கான தங்களது முயற்சிகளை இரண்டு மடங்காக அதிகரிக்கும்படி உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்களை, மூன்று வருடங்களாக ICFI மற்றும் WSWS ஊக்கிவித்து வந்துள்ளது, அவர்களின் ஒரே ”குற்றம்” ஒரு கொடூரமான வேலை விதிமுறைகள், மலிவு கூலியுழைப்பு மற்றும் நிலையற்ற ஒப்பந்தமுறை வேலைகள் ஆகியவற்றை சவால் விடுத்தது தான்.

அவர்கள் மீதான குற்றத் தீர்ப்புகள், ஒரு ஐந்தாண்டு கால சட்டவழி பழிதீர்த்தலின் உச்சகட்டமாக இருந்தன, அது யூலை 18, 2012 இல் நிறுவனத்தால் தூண்டப்பட்டு பணியிடத்தில் நடந்த அடிதடி கைகலகலப்புடன் தொடங்கியது, அப்போது நிறுவனத்தின் குண்டர்கள் தொழிலாளர்களுக்கு எதிராக விஷமத்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த கைகலப்பின் மத்தியில், எங்கிருந்து உருவானது என்று உறுதிசெய்யப்படாத ஒரு பற்றவைக்கப்பட்ட நெருப்பு தோன்றியது, அதனால் உருவான புகையில் மூச்சுத்திணறி மனிதவள மேலாளரான அவனிஷ் குமார் தேவ் இறந்தார், அவர் தொழிலாளர்களிடம் பரிவுணர்வு கொண்டவராக இருந்தார்.

ஒரு கொடூரமான வேலை நடப்புமுறையையும், குறைந்த ஊதியம் வழங்கும் நிலையற்ற ஒப்பந்தமுறை வேலைகளையும் சவால் செய்ததற்காக ஆயுள் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட 13 தொழிலாளர்கள்

முதலில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியின் மாநில அரசாங்கத்தின் முழு சக்தியையும் பயன்படுத்தி, நிறுவனமானது மானேசர் தொழிற்சாலையின் தொழிலாளர் படையை களையெடுப்பதற்கு யூலை 18, 2012 நடந்த சம்பவங்களை பயன்படுத்தி 546 நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் 1,800 ஒப்பந்த தொழிலாளர்களையும் வேலையைவிட்டு நீக்கி புதியவர்களை வேலைக்கு அமர்த்தியது. இதற்கிடையில், காவல்துறை மற்றும் அரசாங்கத்துடன் சேர்ந்து மாருதி சுசூகி சதியில் ஈடுபட்டு ஒரு அச்சுறுத்தும் பயங்கர தாக்குதல் இயக்கத்தை. தொடங்கியது, 200 க்கும் அதிகமான தொழிலாளர்களை கைது செய்து, துன்புறுத்தியது. இறுதியில், 148 தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டனர் மேலும் அவர்கள் மீது கொலை மற்றும் பிற கடுமையான குற்றவியல் குற்றங்கள் சுமத்தப்பட்டன.

உலகளவில் மாருதி சுசூகி தொழிலாளர்களுக்காக ஆதரவை அணிதிரட்டுவதில் ஒரு முக்கிய அம்சமாக, வழக்கின் தீர்ப்பு நகலை அடிப்படையாக கொண்டு ஐந்து தொடர் கட்டுரைகளில் மிக விரிவாக ஜோடிக்கப்ட்ட வழக்கை அம்பலப்படுத்தியது. அது உலக சோசலிச வலைத் தளத்தில் (WSWS) வெளியிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஒரு சட்டபூர்வமான மோசடியாக இருந்தது என்பதை அது எடுத்துக் காட்டியது. தொழிலாளர்களின் வக்கீல்கள் நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தியதைப் போன்று காவல்துறை, சாட்சியங்களை ஜோடித்தது மற்றும் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டது. அவர்கள் முக்கிய சாட்சியத்தின் கூறுகளில் ஒன்றாக ஆரம்பநிலை தடயவியல் சோதனைகளை செய்யவும் தவறிவிட்டார்கள். நிறுவன அதிகாரிகளின் சாட்சியங்களை பாராட்டுகிற அதே சமயம் யூலை 18, 2012 சம்பவங்களை அந்த இடத்தில் நேரில் பார்த்த தொழிலாளர்கள் ஒருபக்கம் சார்ந்தவர்களாக இருப்பார்கள் என நீதிபதி கூறி எந்தவொரு தொழிலாளியும் சாட்சியாக சேர்க்கப்படாததை நியாயப்படுத்தினார்

இறுதியாக நீதிபதி, நிறுவனம் வழங்கிய பட்டியலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட 89 பேர் உட்பட 117 தொழிலாளர்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால் முக்கிய குற்றவாளிகள் என்று 13 பேருக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட குற்றத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டார். அவர்களை குற்றவாளிகளாக்குவதற்காக அவர் வேண்டுமென்றே சட்டத்தை வளைத்தார். ஆதாரத்தை நிரூபிக்கும் பாரத்தை அவர் தொழிலாளர்கள் மேல் சுமத்தினார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் உள்ள ஓட்டைகளை அடைக்கவும் முரண்பாடுகளை சரி செய்யவும் வேண்டிய வாதங்களை வழங்கினார். (பார்க்கவும் Part 1: a travesty of justice)

அவர்களைக் கைதுசெய்து, காவலில் வைத்து மற்றும் அவர்களை மார்ச் 2017 இல் குற்றவாளிகளாக்கி தண்டனையளித்தது வரையிலான பெரும்பாலும் ஐந்து வருட கால இடைவெளியில், பெருநிறுவன முதலீட்டாளர்களுக்கு மறு உத்தரவாதம் அளிப்பதற்கு முயன்றனர், அதற்கு முன்னுதாரணமாக மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஹரியானா காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் உட்பட இந்திய அரசாங்கமும் நீதித்துறை அதிகாரிகளும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்கள்.

தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனைகளுக்கு எதிராக ஹரியானாவின் இந்துமதவாத பாஜக தலைமையிலான தற்போதைய மாநில அரசு முறையீடு செய்துள்ளது ஏனேனில் அவர்கள் தூக்கிலிடப்படவேண்டும் என்று அது விரும்புகிறது.

ஆரம்பத்திலிருந்தே, ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - (சிபிஎம்) மற்றும் பழைய ஆனால் சிறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் முறையே அவற்றின் தொழிற்சங்க கருவிகளான CITU மற்றும் AITUC, மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு பிரச்சார இயக்கத்தை ஏற்பாடு செய்ய மறுத்து வருகின்றன. உண்மையில், ஏப்ரல் 2017 இலிருந்து, அவர்களைப் பற்றிய எந்தவோரு குறிப்பையும் அவர்களுடைய வெளியீடுகளிலிருந்து அவர்கள் திறம்பட அகற்றியிருக்கிறார்கள்.

அதற்கு காரணம் மாருதி சுசூகி தொழிலாளர்களின் போர்குணமிக்க முன்னுதாரணத்தை கண்டு ஸ்ராலினிஸ்டுகள் அஞ்சுகின்றனர், மேலும் நீதிமன்றம், காவல்துறை மற்றும் அரசு அமைப்புகள் கூட்டாக, அவர்கள் மீது ஜோடித்த வழக்குகளை தொடுத்து சிறைக்குள் தள்ளிய சதிகளை அம்பலப்படுத்துவதற்கான பிரச்சார இயக்கம், முதலாளிகளுடனும் மற்றும் சமீபகாலம் வரை இந்தியாவின் பெரும் வணிகங்களின் ஆதரவுபெற்ற கட்சியான காங்கிரஸ் கட்சியுடனும் இருக்கும் அவர்களது வளமான உறவுகளுக்கு பங்கத்தை விளைவிக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

இந்த மெளனமான சதிக்கு எதிராக, இந்த வர்க்கப் போர் கைதிகளை உடனடியாக விடுவிப்பதற்கான முயற்சிகளை ஹரியானவிலும், இந்தியா முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் அதிகப்படுத்த வேண்டும். தற்போதைய நிலைமகளின் கீழ் அதாவது பேரழிவான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் ஆபத்துக்கள் நரகங்கள் போலிருக்கும் இந்தியாவின் சிறை அமைப்புகளுக்குள் உள்ள சிறைக்கைதிகள் மீது பரவக்கூடிய ஆபத்தான நிலைமைகளின் கீழ் அவர்களை விடுவிப்பது என்பது வாழ்வா சாவா போராட்டமாக மாறியுள்ளது.

மாருதி சுசூகி தொழிலாளர் சங்கம் (MSWU) தொடங்கப்பட்ட ஆண்டு நிறைவை மாருதி சுசூகி தொழிலாளர்கள் நினைவு கூருகின்றனர்

MSWU வை நிறுவுவதற்கு போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் தேவைப்பட்டது, அது தொழிலாளர்களின் இதயங்களில் பெருமையான இடத்தை பிடித்து இருப்பது புரிந்துகொள்ளக்கூடியது. மார்ச் 2, திங்கட்கிழமை அன்று MSWU ஆதரவாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மானேசர் ஒன்றிணைக்கும் ஆலையில் 2011 இல் MSWU நிறுவப்பட்டதன் ஒன்பதாவது ஆண்டுதினத்தை குறிக்கும்விதமாக ஒரு சிறியளவிலான விழாவினை எற்பாடு செய்தார்கள்.

பகல் வேலை தொடங்குவதற்கு முன்னதாக தொழிற்சாலையின் வாயிற்கதவுகளுக்கு எதிரே நடந்த இந்த நிகழ்வில் ஒப்பந்த தொழிலாளர்களுடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான இரவு மற்றும் பகலில் பணிபுரியும் தொழிலாளர்களும் பங்குபற்றினர்.

குஷிராம், MSWU வின் தற்காலிகக் குழுவின் ஒரு முக்கிய உறுப்பினர், இந்த குழு, யூலை - ஆகஸ்ட் 2012 கைதுகளுக்குப் பின்னர், MSWU தலைமை சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு மேலும் அடுத்தடுத்து கைதுகள் நடந்த நிலையில் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்வை ஹிந்தி மொழியில் விவரிக்கும் நகல் ஒன்றை, WSWS க்கு அனுப்புவதன் மூலமாக இந்த நினைவு விழாவை கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

அதில் கொலைகார வகுப்புவாத தாக்குதலுக்கு மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியில் பிளவுகளை விதைப்பதற்காக மோடி அரசாங்கத்தினால் தூண்டி விடப்பட்டுக் கொண்டிருக்கும் கொலைகார வகுப்புவாத தாக்குதல்கள் மற்றும் கொலைகள் ஆகியவற்றுக்கு நேரெதிராக, மத பிளவுகளைக் கடந்து தொழிலாள வர்க்கம் ஒன்றிணைவதற்கான அவசியத்தை வலியுறுத்தி பேசிய தலைவர்களின் உரைகளை குஷிராம் சுருக்கமாக கூறியிருக்கிறார்.

குஷிராம் குறிப்பிட்டதன் மொழியாக்கத்தை நாம் கீழே பதிவிடுகிறோம்

மார்ச் 2 அன்று, இதுவரை MSWU நிறுவப்பட்டு ஒன்பதாவது ஆண்டைக் குறிப்பதற்கு மானேசர் தொழிற்சாலைக்கு வெளியே நடந்த ஒரு பேரணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்குபற்றினர்

“இன்று, பெரும் கோலாகலமாக, மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கம் (MSWU) அதன் ஒன்பதாவது ஆண்டு நினைவு தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. மார்ச் 1 சங்கம் நிறுவப்பட்ட நாளாக இருந்தது ஆனால் ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் இந்தக் கூட்டம் மார்ச் 2 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 9 வருடங்களுக்குப் பின்னர் இன்னமும் தொழிலாள வர்க்கத்தின் உற்சாகம் இங்கு கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கத்துடன் சேர்ந்து மற்ற தொழிற்சங்கங்களும் அமைப்புக்களும் இந்த கூட்டத்தில் பங்குபற்றியிருக்கின்றன.”

“அமைப்பின் வரலாறு பற்றி பேசும் போது, MSWU தலைவர் அஜ்மெர் சிங் சிவப்பு கொடியின் பாரம்பரியத்தை எப்பொழுதும் முன்னெடுத்துச் செல்வதற்கும், இந்த போராட்டத்தில் அனைத்தையும் தியாகம் செய்திருக்கும் தொழிலாள வர்க்கத்தின் உறுப்பினர்களை ஒருபோதும் மறக்காமலிருக்க தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.”

“இன்று நாம் அனுபவிக்கும் சலுகைகளுக்கு பெருமளவில் காரணமாக இருப்பது சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இன்னமும் இருக்கின்ற 13 பேர் தான் என்று கூடியிருந்த பார்வையாளகளிடம் அவர் கூறினார்,”

“திரு. சிங், நாட்டில் நடந்துகொண்டிருக்கும் இந்து முஸ்லீம் கலவரத்தைப் பற்றி பேசினார். சமூக விரோத சக்திகளின் செல்வாக்கின் கீழ் தொழிலாளர்கள் வரக்கூடாது என்று அவர் எச்சரிக்க செய்தார். தொழிலாள வர்க்கம், போராட்டத்தின் மூலமாக உருவாக்கிய தனித்துவமான அடையாளத்தை பராமரிக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். மதம் பிளவுபடுத்துவது என்பதையும், போராட்ட நிகழ்வுப்போக்கு நம்மை ஒன்றுபடுத்துகிறது என்பதையும் எங்களது இயக்கம் எங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. என்று அவர் குறிப்பிட்டார்.”

“சமீபத்திய டெல்லி கலவரத்தில் எத்தனை அப்பாவிகள் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் பலியானவர்கள் அனைவரும் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று எங்களுக்கு தெரியும். இத்தகைய கலவரங்களின்போது ஒரு முதலாளியோ அல்லது அரசியல்வாதியோ அல்லது அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ காயமடைந்திருக்கிறார்கள் என்று நாங்கள் கேள்விபட்டதேயில்லை. எனவே, இத்தகைய தாக்குதல்களின் பின்னால் யார் இருக்கிறார்கள் மற்றும் இவைகளிலிருந்து யார் ஆதாயம் அடைகிறார்கள் என்பது பற்றியும் நாங்கள் கவனமாக சிந்திக்கவேண்டும்.”

“சுயநலமுள்ள அரசியல்வாதிகள் அவர்களின் அற்ப இலாபங்களுக்காக அப்பாவிகளை பலி கொடுப்பது பற்றி மனசாட்சி எதுவும் அற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இத்தகைய வன்முறைகளுக்கு எதிராக வெகுஜனங்களுடன் தொழிலாள வர்க்கம் எப்போதும் நிற்கவேண்டும்.”

“MSWU வரலாறு பற்றி, தற்காலிக செயற்குழு உறுப்பினர் ராம்நிவாஸ் பேசினார். தொழிலாளர்கள் நேர்மையுடன் அவர்களது வேலையை தொடர்ந்து செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். தற்போதைய அரசியல் சூழ்நிலையில், “ராம் ராஜ்ஜியத்தின்” (இந்துத்துவா கருத்து) முன்மாதிரியாக மாருதி சுசூகி தொழிற்சாலை சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது என்று அவர் கூறினார். உண்மையில் உற்பத்தியிலிருந்து நிரந்தரத் தொழிலாளர்களை தள்ளி வைப்பதற்கான சதியின் ஒரு பகுதியாக இது இருக்கிறது. எனவே சங்கம் ஒரு போராட்ட காலத்திற்கு நுழைந்தால், நிர்வாகமானது தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டுவருவதன்மூலம் தொழிற்சாலையை இயங்க வைக்க முடியும்.”

“உற்பத்தியை நாங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் இந்த தொழிற்சாலையில் எங்களுடைய பெரும் வேலைநிறுத்தப் போராட்டங்களில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். மாருதி சுசூகி தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் உரிமைகளுக்காக கூடுதலாக போராடியிருக்கிறார்கள் அதைப் போல ஒப்பந்த அமைப்பு முறையை ஒழிப்பதற்கும் மற்றும் அவர்களுடைய முதல் பிரதான கோரிக்கையாக நிரந்தர வேலைக்கு உரிமை ஆகியவற்றை கோரியுள்ளார்கள். போராட்டத்தை நடத்துவதற்கான அவர்களின் விருப்பம் அவர்களை சிறை வரைக்கும் கொண்டு சென்றுள்ளது.”

“தோழர் குஷிராம் அவரது உரையில் தொழிலாளர்களின் அரசியல் நனவை உயர்த்துவதற்கான பிரச்சனையை கொண்டுவந்தார். ஒரு நிரந்தரத் தொழிலாளியின் சராசரி வருமானம் ஒப்பந்த தொழிலாளர்களை விட பல மடங்கு அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு மாதத்திற்கு ரூ.15,000 – 20,000 ($200-$270) மட்டுமே வழங்கப்படுகிறது. என அவர் குறிப்பிட்டார். ஒரு தொழிலாளிக்கு ரூ.20,000 வரை மருத்துவ செலவுக்கு ஒதுக்கப்படுகிறது இது ஏதாவது முக்கியமான உடல்நல பிரச்சனையை சமாளிப்பதற்கு போதுமானதாக இல்லை. நிர்வாகம் அதன் இலாபங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் ஒப்பந்த தொழிலாளர்களை அதிகமாக பணியிலமர்த்துவதன் மூலம் அதை செய்கிறது. இந்த 20 வயதுகளில் உள்ள இளம் தொழிலாளர்களிடமிருந்து தொழிலாளர்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக அவர்கள் மீது குறி வைக்கப்பட்டது, ஏனெனில் அவர்கள் நிர்வாகத்திற்கும், காங்கிரஸ் கட்சியின் மாநில அரசாங்கத்திற்கும் எதிராக தங்களது இந்த போர்க்குணம் மற்றும் உறுதியான தன்மையை வெளிப்படுத்தினார்கள், அவை இரண்டுமே ஆலையில் வேர்வை சிந்த வைக்கும் வேலை நிலைமைகளுக்கும் தொடர்ச்சியான நிர்வாகத்தின் முறைகேடுகளுக்கும் பணிந்து செல்லும்படி தொழிலாளர்களை நிர்ப்பந்தித்தன”

மேலதிக வாசிப்புகளுக்கு

இந்திய போராட்டம், சிறையில் அடைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிராக சட்டரீதியில் பழிவாங்கிய நடவடிக்கையின் ஏழு ஆண்டுகளைக் குறிக்கிறது

[31 July 2019]

மே தினம் 2017: ஜோடிப்புவழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள 13 இந்திய மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாக்கவேண்டும்

[3 May 2017]

மாருதி சுசூகி தொழிலாளர்கள் எதற்காகப் போராடினார்கள்

[12 April 2017]

ஆளும் வர்க்கத்தின் தாக்குதலை முறியடிக்க,

இந்திய தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம் தேவை

[20 February 2013]

Loading