வியட்நாமிய ட்ரொட்ஸ்கிச தலைவரான தா து தாவ் ஸ்ராலினிஸ்டுகளால் கொலை செய்யப்பட்டு எழுபத்தைந்து ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆகஸ்ட் 26 அன்று, டாக்டர் ஜோசப் ஸ்காலிஸ், சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 2016 இல் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிக்கோ டுரேற்றவுக்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி (CPP) மற்றும் அதன் அரசியல் வழியைப் பின்பற்றும் பல்வேறு அமைப்புகள் அளித்த ஆதரவு குறித்து ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஒரு போட்டி கட்சியான பார்ட்டிடோ கொமுனிஸ்டா பிலிபினாஸ் (PKP) எடுத்த நடவடிக்கைகளுடன் வரலாற்று ஒற்றுமையை ஆராய்வதன் மூலம் கட்சியின் இந்தக் கொள்கையின் வரலாற்று மற்றும் அரசியல் தோற்றத்தை ஸ்காலிஸ் ஆய்வு செய்தார். இதற்கான பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகால ஸ்ராலினிசத் தலைவரான ஜோமா சிஸனின் பதில், பேராசிரியர் ஸ்காலிஸுக்கு எதிராக வெட்கக்கேடான அவதூறுகளின் பிரச்சாரத்தைத் தொடங்குவதும், அவர் ஒரு "சிஐஏ முகவர்" என்று குற்றம் சாட்டியதாக இருந்தது. சிஸனும் அவரது ஆதரவாளர்களும் இந்த பொய்களை டாக்டர் ஸ்காலிஸ் மற்றும் "ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு" எதிரான மெல்லிய மறைக்கப்பட்ட அல்லது மறைக்கப்படாத அச்சுறுத்தல்களுடன் இணைக்கின்றனர்.

வியட் மின் வடக்கு வியட்நாமில் ஆட்சிக்கு வந்து, ஹோ சி மின் தலைமையில் ஹனோய் நகரில் ஒரு ஆட்சியை அமைத்தார். ஆனால் தெற்கில் புதிய அமெரிக்க ஆதரவுடைய வலிமைமிக்க என்கோ டின் டையம் (Ngo Dinh Diem) பதவியில் இருத்தப்பட்டார். மேலும் வியட் மின் தேர்தலில் நிச்சயமாக வெற்றிபெற்றுவிடும் என்பதால் அவர் உறுதியளித்தபடி தேர்தலை நடத்தாது, பதிலாக சைகோனை தளமாகக் கொண்ட வியட்நாம் குடியரசு அல்லது தெற்கு வியட்நாம் ஜெனீவா ஒப்பந்தத்தை மீறுவதாக இருப்பதாக அறிவித்தார்.

இந்த அரசியல் உள்ளடக்கத்தில், தென்கிழக்கு ஆசியாவில் ஸ்ராலினிசத்தின் மிக மோசமான குற்றங்களில் ஒன்றான, வியட்நாமிய ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் தலைவரான தா து தா (Ta Thu Thau) வை இந்த மாதம் 75 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மரணதண்டனைக்கு உள்ளாக்கியதை நினைவு கூர்வது பொருத்தமானதும் மற்றும் சரியான நேரத்திற்கு உரியதுமாகும். ட்ரொட்ஸ்கிச தலைவர் செப்டம்பர் 14, 1945 இல் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை "மக்கள் நீதிமன்றம்" விசாரித்தபோதும், அது அவரை தண்டிக்க மறுத்துவிட்டது. பின்னர் அவர் ஒரு ஸ்ராலினிச வியட் மின் துப்பாக்கி சூட்டு அணியால் சுடப்பட்டார். அவர் இறந்த தேதி, வியட்நாமிய அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தாலும் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இந்த மாதம் வியட்நாமிய ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் தலைவரான தா து தாவ் தூக்கிலிடப்பட்ட 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. மத்திய வியட்நாமில் (அன்னாம்) குவாங் ட்ரை நகருக்கு அருகே வியட் மின் துப்பாக்கிச் சூட்டு அணி சூடு நடத்தியது. நாட்டின் மிகப் பெரிய நகரம் மற்றும் வியட்நாமிய தொழிலாள வர்க்கத்தில் ட்ரொட்ஸ்கிச செல்வாக்கின் மையமான தெற்கில் உள்ள சைகோனை அடைய முயன்றபோது, செப்டம்பர் 14, 1945 அன்று தாவ் கைப்பற்றப்பட்டார். அவர் ஹோ சி மின் தலைமையிலான இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியினால் கட்டுப்படுத்தப்படும் தேசியவாத அரசியல் முன்னணியான வியட் மின் நடத்தும் “மக்கள் நீதிமன்றம்” முன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

சில அறிக்கைகளின்படி, பிரெஞ்சு காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் வீரரான நன்கு அறியப்பட்ட தொழிலாள வர்க்க போராளியை தண்டிக்க மக்கள் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், ஒரு வியட்நாம் துப்பாக்கி சூடு குழு தெற்கு வியட்நாமில் ஸ்ராலினிச தலைவரான டிரான் வான் கியாவின் உத்தரவின் பேரில் மரண தண்டனையை நிறைவேற்றியது. ஹனோய் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல் அவர் அத்தகைய கடுமையான முடிவை எடுத்திருக்க சாத்தியமில்லை.

ஹோ சி மின் பின்னர் மரணதண்டனையை ஆதரித்தார், தாவ் "ஒரு சிறந்த தேசபக்தர்" என்று ஒப்புக் கொண்டார், ஆனால் "நான் வகுத்த நிலைப்பாட்டைப் பின்பற்றாதவர்கள் அனைவரும் உடைந்து போவார்கள்" என்று அறிவித்தார்.

வியட்நாமில் பிரெஞ்சு அடக்குமுறைக்கு எதிராக 1930 ஆம் ஆண்டு பாரிஸ் ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பின்னர் தா து தாவ் இன் ஒரு படம்

தா து தாவ் எதிர்த்த "நிலைப்பாடு" வியட்நாமில் ஸ்ராலினிச தலைமை எடுத்த முடிவாகும். இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த ஜப்பானின் சரணடைவை அடுத்து ஸ்ராலினின் உத்தரவின் பேரில் செயல்பட்டு, பிரிட்டிஷ் துருப்புக்களுடன் சேர்ந்து பிரெஞ்சு காலனித்துவ படைகள் வியட்நாமிற்கு திரும்புவதை ஏற்றுக்கொள்வதும் மற்றும் வரவேற்பதுமே அந்நிலைப்பாடாகும்.

1943 ஆம் ஆண்டு ஸ்ராலின், சேர்ச்சில் மற்றும் ரூஸ்வெல்ட் இடையேயான தெஹ்ரான் ஒப்பந்தத்தின் கீழ், இந்தோ-சீனாவின் முன்னாள் பிரெஞ்சு காலனியின் இராணுவக் கட்டுப்பாடு அதன் படைகள் வடக்கை ஆக்கிரமிக்கவிருந்த சீன கோமின்டாங்கிற்கும், தெற்கே தனது படைகளை நிலைநிறுத்தவிருந்த பெரிய பிரித்தானியாவிற்கும் இடையே பிரிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

1945 ஆம் ஆண்டில் ஸ்ராலின், ட்ரூமன் மற்றும் சேர்ச்சில் இடையே போட்ஸ்டாமில் நடந்த உச்சிமாநாட்டில், சேர்ச்சிலுக்குப் பதிலாக கிளெமென்ட் அட்லீ இறுதியில் வந்தார். அதில் இந்த இராணுவப் பகிர்வு உறுதி செய்யப்பட்டது. இதன்படி பிரிட்டிஷ் துருப்புக்கள் பழைய பிரெஞ்சு காலனித்துவ நிர்வாகத்தின் ஆயுதம் ஏந்தியவர்களாக செயல்படவும், மற்றும் அதிகாரத்திற்கு மீட்டமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.

ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களுக்கும் அவர்களது பிரெஞ்சு கைப்பாவைகளுக்கும் எதிராக கெரில்லா யுத்தத்தை அரசியல் ரீதியாக நடத்திய ஹோ சி மின் மற்றும் இராணுவரீதியாக நடாத்திய வோ குயென் கியாப் ஆகியோரால் நடத்தப்பட்ட எந்தவொரு போராட்டத்தையும் கருத்தில் கொள்ளாமல் இந்த ஏற்பாடுகளை ஸ்ராலின் மேற்கொண்டார்.

ஹோ சி மின் ஸ்ராலினின் கட்டளைகளுக்கு அடிபணிந்தார், அதே நேரத்தில் பின்விளைவுகளிலிருந்தும் தப்பிக்க முயன்றார். குறிப்பாக வடக்கில் பெரிய கோமின்டாங் இராணுவம், அங்கு அவரது வியட் மின் படைகள் தங்கள் வலுவான தளத்தைக் கொண்டிருந்தன. வியட்நாமிய புரட்சியின் ஆதரவுக்காக இந்த நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்திடம் முறையிடுவதை விட, பல்வேறு விரோத சக்திகளான சீனா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு இடையே சூழ்ச்சிக்கையாளல் செய்ய அவர் முயன்றார்.

தா து தாவ் மற்றும் வியட்நாமிய ட்ரொட்ஸ்கிஸ்டுகள், பழைய ஐரோப்பிய காலனித்துவ சக்திகள் மீண்டும் திரும்புவதை எதிர்த்ததுடன் மற்றும் பரவலான மக்கள் எதிர்ப்புக்களை அணிதிரட்ட உதவினர். குறிப்பாக தெற்கில், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தாவும் அவரது தோழர்களும் குறிப்பாக கப்பல்துறை, இரயில், மற்றும் பிற ட்ராம் போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் தொழிலாளர் இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தனர்.

வியட்நாமிய தொழிலாளர் இயக்கம்

1931 மற்றும் 1936 க்கு இடையில் தெற்கு வியட்நாமின் தொழிலாளர் இயக்கத்தில் ஏற்பட்ட அரசியல் நிலைமைகள் மிகவும் அசாதாரணமானவை. அதில் ட்ரொட்ஸ்கி தலைமையிலான இடது எதிர்ப்பாளர்கள் தொடர்பாக வியட்நாம் ஸ்ராலினிசக் கட்சி கம்யூனிச அகிலத்தின் வழியைப் பின்பற்றவில்லை. மேலும் பிரெஞ்சு காலனித்துவ அதிகாரிகளின் அடக்குமுறைக்கு எதிராக பொதுவான நிலைப்பாட்டை எடுத்த ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இடையே கணிசமான தொடர்பு மற்றும் கூட்டு வேலையும் இருந்தது.

பிரெஞ்சு அரசாங்கம் அனைத்து வியட்நாமிய மொழி வெளியீடுகளுக்கும் பயன்படுத்திய அதே தணிக்கைக்கு உட்படுத்தப்படாத ஒரு பொதுவான பிரெஞ்சு மொழி வெளியீடான லா லுட் (La Lutte - போராட்டம்) ஐ வெளியிடுவதில் இரு தரப்பினரும் ஒத்துழைத்தனர். ஸ்ராலினிஸ்டுகளின் உத்தியோகபூர்வ பெயரான இந்தோசீன கம்யூனிஸ்ட் கட்சியின் (ICP) உள்ளூர் பிரதிநிதிகளுடன் தா து தாவ் தலைமையிலான ட்ரொஸ்கிஸ்டுகளின் பிரிவு இணைந்து பல தேர்தல் பிரச்சரங்களில் ஈடுபட்டனர். 1935 இல் சைகோன் நகர சபைக்கு தா து தாவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

(ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் மற்றொரு பிரிவு ஸ்ராலினிஸ்டுகளுடன் கூட்டு வேலையை எதிர்த்தது. மேலும் இந்த சர்ச்சையில் சம்பந்தப்பட்ட அரசியல் பிரச்சினைகள் சிக்கலானவை, மேலும் பகுப்பாய்வு இதற்கு தேவை. சோவியத் ஒன்றியத்தில் உள்ள பழைய போல்ஷிவிக்குகள், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மீதான அரசியல் படுகொலை மற்றும் மாஸ்கோ பொய்வழக்குகளின் தாக்கத்தின் கீழ் இந்தோசீன கம்யூனிஸ்ட் கட்சி வியட்நாமிய ட்ரொட்ஸ்கிஸ்டுகளுடனான அனைத்து கூட்டு நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டுவந்தது மற்றும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளிடையே உள்ள பிரிவு வேறுபாடுகள் குறைந்துவிட்டன.)

ஏப்ரல் 1939 இல், ட்ரொட்ஸ்கிஸ்டுகள், தா து தாவுடன் "தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் முன்னணிக்கு" தலைமை தாங்கி, முதலாளித்துவ "அரசியலமைப்புவாதிகள்" மற்றும் ஸ்ராலினிச ஆதரவுடைய "ஜனநாயக முன்னணி" இரண்டையும் கொச்சின்சீன மாகாணத் தேர்தலில் தோற்கடித்தனர். தெற்கிலுள்ள இப்பகுதி பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது. தேர்தலில் முக்கிய பிரச்சினை பிரெஞ்சு இராணுவத்திற்கு நிதி ஆதாரங்களை வழங்குவதற்கான "தேசிய பாதுகாப்பு வரிக்கு" ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் எதிர்ப்பாகும். பிரான்சில் அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த மக்கள் முன்னணி அரசாங்கத்துடன் அவர்கள் இணைந்ததன் ஒரு பகுதியாக ஸ்ராலினிஸ்டுகள் அதனை ஆதரித்தனர்.

தா து தாவை விமர்சித்த ட்ரொட்ஸ்கிச பிரிவின் முன்னணி உறுப்பினரான நுகோ வான் சூயெட் (Ngo Van Xuyet) இன் கருத்தின் படி, ஆளுனர் ஜெனரல் ஜோசப்-ஜூல்ஸ் ப்ரூவீ 1939 மாகாணத் தேர்தலின் முடிவுகளை ஒதுக்கி வைத்தார். இதற்கு, “தா து தாவின் தலைமையில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள், முற்றான விடுதலையை வெல்வதற்கு சாத்தியமான ஒரு போரைப் பயன்படுத்த விரும்புகின்றார்கள்.” என்று காரணமாக கூறினார். மறுபுறம், ஸ்ராலினிஸ்டுகள் "பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டைப் பின்பற்றி", "போர் வெடித்தால் விசுவாசமாக இருப்பார்கள்" என்றனர்.

ஆகஸ்ட் 1939 இன் ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தத்திலிருந்து எழுந்த மதிப்பீடானது பிரெஞ்சு மற்றும் வியட்நாமிய ஸ்ராலினிஸ்டுகள் திடீரென ஒரு போர்க்குணமிக்க போர் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு மாற வழிவகுத்தது. செப்டம்பர் 26, 1939 இல், பிரெஞ்சு அரசாங்கம் பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சியை தடைசெய்யும் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இது ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இரண்டையும் சட்டவிரோதமாக்க இந்தோ-சீனாவில் பயன்படுத்தப்பட்டது.

தா து தாவ், பிரெஞ்சு காலனித்துவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தென் சீனக் கடலில் உள்ள தீவான பவுலோ-கொன்டோர் தண்டனை முகாமில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த தீவு, அதன் வியட்நாமிய பெயரான கொன் சோன் என்ற பெயரில், "புலி கூண்டுகளின்" தளமாக இழிபெயர் பெற்றது. இதில் தென் வியட்நாமிய கைப்பாவை அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட வியட்நாமிய விடுதலைப் போராளிகள் சித்திரவதை செய்யப்பட்டு காட்டுமிராண்டித்தனமான சூழ்நிலையில் அடைத்து வைக்கப்பட்டனர்.

1945 இன் காட்டிக்கொடுப்புக்கள்

மார்ச் 1945 இல், ஜப்பானிய படைகள் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியைக் கலைத்து, இந்தோ-சீனா மீது நேரடி ஆட்சியைப் பெற்றன. தா து தா 1944 ஆம் ஆண்டின் இறுதியில், பவுலோ-கொன்டோரில் இருந்து ஐந்து ஆண்டு காலத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்கினார். கோடையில் வடக்கே பயணம் செய்து, வேலைநிறுத்தம் செய்யும் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் ட்ரொட்ஸ்கிச ஆதரவாளர்களை சந்தித்தார். இந்த பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது, சைகோனுக்கு திரும்பும் பாதி வழியிலேயே, குவாங் ரியில் ஸ்ராலினிஸ்டுகள் தாவை கைப்பற்றினர்.

சைகோனில், பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியை மீட்டெடுப்பது மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்களின் நுழைவு ஆகியவை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்த ஒரு பொது மக்கள் எழுச்சியைத் தூண்டின. அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தொழிலாளர் ஆயுதக்குழு, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு படைகளால் கொடூரமாக ஒடுக்கப்பட்டது. இதில் அதிகமான படுகொலை உட்பட அக்டோபர் 3, 1945 அன்று தி நேகே பாலத்தில் 200 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். நகரத்தில் வெகுஜன அடக்குமுறையிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்த ட்ரொட்ஸ்கிச போராளிகள் வியட் மின் மற்றும் மீளமைக்கப்பட்ட நில உரிமையாளர்-காலனித்துவ இராணுவப் படைகளுக்கு இடையிலான கிராமப்புறங்களில் சிக்கினர். ஒரு சிலரே நாட்டை விட்டுவிட்டு வெளியேறி தப்பிப்பிழைத்தனர்.

இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி அதன் ஸ்தாபக ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளபடி, சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் (இலங்கை):

செப்டம்பர் 1945 இல் பதட்டங்கள் கூர்மையடை,ந்த நிலையில், ஸ்ராலினிஸ்டுகள் மக்கள் குழுக்களை நிராயுதபாணியாக்கி, மாகாண மத்திய குழுவை அடக்கி, லா லூட் அமைப்பின் தலைவர் தா து தாவ் உட்பட பல ட்ரொட்ஸ்கிஸ்டுகளை கொலை செய்தனர்.. சுதந்திரத்தைப் பெறுவதற்குப் பதிலாக, பிரெஞ்சுக்காரர்களுடனான இந்தோசீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒத்துழைப்பு தெற்கில் காலனித்துவ ஆட்சியை மீட்டெடுக்க மட்டுமே உதவியது. போருக்குப் பிந்தைய புரட்சிகர எழுச்சியைக் காட்டிக் கொடுத்ததற்கும், அதைத் தொடர்ந்து முதலில் பிரெஞ்சு பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனுமான ஸ்ராலினிஸ்டுகளின் சூழ்ச்சிக்கும் வியட்நாமிய மக்கள் ஒரு பயங்கரமான விலை கொடுக்க வேண்டியிருந்தது. 30 வருட கால போரானது நாட்டை பாரிய அழிவிற்கும், மில்லியன் கணக்கானோரின் மரணத்திற்கும் உள்ளாக்கியது.

பல தசாப்தங்களாக, வியட்நாமிய ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் துன்பகரமான தலைவிதியும், 1930 களில் அவர்களின் முக்கிய அரசியல் பங்கும், நான்காம் அகிலத்தின் ஆதரவாளர்களிடையே அதிகம் அறியப்படவில்லை அல்லது புரிந்து கொள்ளப்படவில்லை. 1953 வரை தலைமைப் பதவிகளை வகித்த மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான திருத்தல்வாதிகள், சீன மற்றும் வியட்நாமிய ட்ரொட்ஸ்கிஸ்டுகளை "ஒரு புரட்சியின் அகதிகள்" என்று நிராகரித்தனர். பின்னர், 1960 களில், வியட்நாமில் அமெரிக்க தலையீட்டின் போது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக ஹோ சி மின் தலைமையிலான வியட்நாமிய ஸ்ராலினிச தலைமையை பப்லோவாதிகள் பாராட்டி, மேலும் வியட்நாமிய ட்ரொட்ஸ்கிஸ்டுகளை பற்றி கேள்வி எழுப்புவதையே எதிர்த்தனர்.

ஆனால் 1945 ல் நடந்த மோதலில், ஹோ சி மின் ஸ்ராலினிசத்தின் தனிச்சிறப்பான தேசியவாத நோக்குநிலையை வெளிப்படுத்தினார். அவர் தனது கூட்டாளிகளிடம் கூறியது போல், பழைய காலனித்துவ சக்திகள் பலவீனமாகவும் மதிப்பிழந்தவையாகவும் இருந்ததால், பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் படைகளை மீண்டும் அனுமதிக்க அவர் விரும்பினார். அதே நேரத்தில் மிகப் பெரியதாகவும் நெருக்கமாகவும் இருந்த சீனப் படைகள் பாரிய ஆபத்தாக இருந்தன.

சீனாவில் ஒரு வெற்றிகரமான புரட்சிக்கான வாய்ப்புகள் குறித்து ஆழ்ந்த சந்தேகம் ஒன்றை அவர் வெளிப்படுத்தினார். சக்திவாய்ந்த கோமிண்டாங் படைகள் மூன்று ஆண்டுகளில் சிதைந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. அதே நேரத்தில், ஒரு வியட்நாமிய தேசியவாதியின் சீன-விரோத தப்பெண்ணங்களை பிரதிபலிக்கும் அவர், அதன் அருகாமையும் தெற்கிலுள்ள சிறிய அயல்நாட்டுடனான மோதலின் நீண்ட வரலாறு காரணமாக, மாவோ சேதுங் அல்லது சியாங் கேய்-ஷேக் தலைமையிலான சீனா, ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளை விட வியட்நாமால் அஞ்சப்படும் ஒன்றாக கருதினார்.

ஹோ, ஸ்ராலினிசத்தின் தர்க்கத்தைப் பின்பற்றி, உலகளாவிய சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தை நீண்டகாலமாக நிராகரித்து, ஒரு சுதந்திர வியட்நாமை நிறுவுவதற்கான குறிக்கோளுடன் ஒரு தேசியவாத முன்னோக்கில் முன்னேறினார். தனது தேசியவாத இருப்பினை நியாயப்படுத்தலின் அடிப்படையில், தா து தாவ் உள்ளிட்ட புரட்சிகர சர்வதேசவாதிகள் கொல்லப்படுவதற்கு அவர் ஒப்புதல் அளித்தார்.

அமெரிக்க ஆக்கிரமிப்பு

பெரும் சக்திகளுடன் தேசியவாத சூழ்ச்சிக்கையாளலை நம்பியிருப்பது வியட்நாமிய புரட்சியின் மூலநாடியாக இருந்தது என்பதை நிரூபித்தது. பிரெஞ்சு சரணடைதலில் முடிவடைந்த 1954 ஆம் ஆண்டில் டீன் பீன் பூ (Dien Bien Phu) முற்றுகையிடப்பட்ட வியட் மினின் பெரும் இராணுவ வெற்றியின் பின்னர், சோவியத் மற்றும் சீன ஸ்ராலினிச தலைவர்கள் ஜெனீவா உடன்படிக்கையில் துரோகத்தை வடிவமைத்தனர். இதில் வியட்நாம் முற்றாக பிரிக்கப்பட்டு, தெற்கில் பலமான அமெரிக்க ஆதரவுடன் சைகோனை தலைமையிடமாகக் கொண்ட வலதுசாரி நிர்வாகம் அமைக்கப்பட்டது.

வியட் மின் வடக்கு வியட்நாமில் ஆட்சிக்கு வந்து, ஹோ சி மின் தலைமையில் ஹனோய் நகரில் ஒரு ஆட்சியை அமைத்தது. ஆனால் தெற்கில் புதிய அமெரிக்க ஆதரவுடைய வலிமைமிக்க என்கோ டின் டையம் (Ngo Dinh Diem) பதவியில் இருத்தப்பட்டார். மேலும் வியட் மின் தேர்தலில் நிச்சயமாக வெற்றிபெற்றுவிடும் என்பதால் அவர் உறுதியளித்தபடி தேர்தலை நடத்தாது, பதிலாக சைகோனை தளமாகக் கொண்ட வியட்நாம் குடியரசு அல்லது தெற்கு வியட்நாம் ஜெனீவா ஒப்பந்தத்தை மீறுவதாக இருப்பதாக அறிவித்தார்.

கெரில்லா யுத்தம் 1960 இல் மீண்டும் தொடங்கிய போது மேலும் அமெரிக்கா பெருகிய எண்ணிக்கையிலான இராணுவ “ஆலோசகர்களை” அனுப்பியது. இறுதியில் 500,000 துருப்புக்களைத் தாண்டிய ஒரு பிரம்மாண்டமான இராணுவம், மிக நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி, வான் மற்றும் கடல் மீது முழு ஆதிக்கத்துடன் இருந்தது. இந்த காலகட்டத்தில், தேசிய விடுதலை முன்னணியால் (NLF) தெற்கு வியட்நாமின் தொழிலாள வர்க்கத்திற்குள், குறிப்பாக சைகோன் பாட்டாளி வர்க்கத்திற்குள் ஒரு வலுவான மக்கள் தளத்தை நிறுவ முடியவில்லை. அங்கு ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் மீதான காட்டுமிராண்டித்தனமான ஸ்ராலினிச அடக்குமுறை ஒரு ஆழமான மாற்றமுடியாத காயத்தை விட்டுச் சென்றது. டெட் தாக்குதல் விவசாயிகளிடையே தேசிய விடுதலை முன்னணி இன் வலிமையை நிரூபித்தாலும், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கும் அவர்களின் கைப்பாவை ஆட்சிக்கும் எதிராக கெரில்லா போராளிகளுடன் சேர நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சி இருக்கவில்லை.

1973 ல் அமெரிக்கா திரும்பப் பெறும் வரை, போர் பெருகிய முறையில் இரத்தக்களரி அடிப்படையில் தொடர்ந்தது. சுமார் 60,000 அமெரிக்கர்களுடன் மூன்று மில்லியன் வியட்நாமியர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். ஏப்ரல் 1975 இல் சைகோனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மேல்மாடியிலிருந்து ஹெலிகாப்டர் வெளியேற்றுவதில் உச்சக்கட்டத்தை அடைந்த தேசிய விடுதலை முன்னணியின் தாக்குதல்வரை தென் வியட்நாமின் ஆட்சி இன்னும் இரண்டு வருடம் உயர்வாழக்கூடியதாக இருந்தது.

போருக்கு பிந்தைய வியட்நாம்

வியட்நாம் போர் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு தோல்வியில் முடிவடைந்தாலும், ஸ்ராலினிச ஆட்சியின் கீழ் வியட்நாமின் சுதந்திரம் மாயையானதும் தற்காலிகமானதும் என்பதை நிரூபித்தது. வியட்நாம், உலகளாவிய பொருளாதாரத்தினதும், ஏகாதிபத்தியத்தால் ஆதிக்கம் செலுத்தும் தேசிய அரசுகளின் உலக அமைப்பினது ஒரு பகுதியாகவும் இருந்தது. கெமர் ரூஜின் இனப்படுகொலை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க 1978 ல் கம்போடியா மீது படையெடுத்து, பின்னர் அண்டை நாடான ஸ்ராலினிச ஆளும் ஆட்சிகளுடன் வியட்நாம் மோதலுக்கு வந்தது. பின்னர் 1979 இல் கெமர் ரூஜ் இன் முக்கியமான ஆதரவாளனான மக்கள் சீனக் குடியரசுடன் இரத்தக்களரி எல்லைப் போரை நடத்தியது.

1980 களில் தொடங்கி, முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதை நோக்கி சீன ஸ்ராலினிஸ்டுகள் திரும்பியது வியட்நாமில் இதேபோன்ற வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்கியது. 1986 முதல், Doi Moi (புதுப்பித்தல்) கொள்கையின் கீழ், வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சி முதலில் வெளிநாட்டு முதலாளித்துவ நிறுவனங்களுக்கான சிறப்பு மண்டலங்களை ஸ்தாபிப்பது, பின்னர் வியட்நாமிய முதலாளித்துவத்தின் முழு அளவிலான வளர்ச்சியை மேற்பார்வையிட்டது. அதேநேரத்தில் தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்கு ஒரு கட்சி சர்வாதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டது.

இன்று, வியட்நாம் மாபெரும் நாடுகடந்த நிறுவனங்களான ஜப்பானிய, அமெரிக்க, தென் கொரிய, அத்துடன் சீனா, ஹாங்காங் மற்றும் தைவானை தளமாகக் கொண்ட நிறுவனங்களின் உற்பத்திச் சங்கிலியுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒரு கணிசமான தொழிலாள வர்க்கம் உருவாகி சீனாவில் நிலவும் நிலையை விட ஊதிய மட்டங்களில் கொடூரமாக நிலைமையின் கீழ் சுரண்டப்படுகின்றது.

ஒரு தேசிய அரசாக, வியட்நாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சீனாவுக்கு எதிரான சாத்தியமான நட்பு நாடாக கருதப்படுகிறது. ஹனோய் மற்றும் வாஷிங்டனுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் 1995 இல் நிறுவப்பட்டன. அமெரிக்க போர்க்கப்பல்கள் வியட்நாம் போரின் போது அவர்களின் முக்கிய தளமான கேம் ரான் பே போன்ற துறைமுகங்களுக்கு திரும்பியுள்ளன. மேலும் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தென் சீனக் கடலில் பல்வேறு தீவுகள் பற்றிய சீனாவுடனான வியட்நாமிய மோதல் போன்ற பிரச்சினைகள் குறித்து தங்கள் வியட்நாமிய சகாக்களுடன் தொடர்ந்து ஆலோசிக்கின்றனர்.

2016 ஆம் ஆண்டில், அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாமுக்கான ஆயுத விற்பனை மீதான நான்கு தசாப்த கால தடையை முடிவுக்குக் கொண்டுவந்ததை, ஒரு கட்டத்தில் ஜனாதிபதி பராக் ஒபாமா இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை "இயல்பாக்குவதில்" ஒரு தீர்க்கமான நடவடிக்கை என்று பாராட்டினார். அந்நேரத்தில் WSWS பின்வருமாறு எழுதியது:

அமெரிக்கப் போருக்குப் பின்னர் வியட்நாமின் பரிணாமம், லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி தத்துவத்திற்கு எதிர்மறையான ஒரு வரலாற்று நிரூபணத்தை வழங்குகிறது. ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து இந்த ஒடுக்கப்பட்ட நாட்டை விடுவிப்பது, இறுதியில், ஒடுக்கப்பட்ட மக்களை அதன் பின்னால் வழிநடத்தும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சியின் மூலம் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும், மேலும், போரால் சிதைந்த வியட்நாமை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார பிரச்சினைகள் எதுவும் வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிச தலைமையால் முன்வைக்கப்பட்டதுபோல் தேசியவாத கொள்கைகளின் அடிப்படையில் தீர்க்க முடியாது. அனைத்து தேசிய பொருளாதாரங்களின் மீதும் உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஆதிக்கத்தின் சகாப்தத்தில், சோசலிச மாற்றம், தேசிய மண்ணில் தொடங்கி, சர்வதேச அரங்கில் மட்டுமே பூர்த்தியடைய முடியும்.

தா து தாவ் மற்றும் பிற வியட்நாமிய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த கொள்கைகள் பல தசாப்த கால கசப்பான வரலாற்று அனுபவங்களால் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளன. ஹோ சி மின் மற்றும் அவரது ஸ்ராலினிச வாரிசுகளின் சந்தர்ப்பவாத சூழ்ச்சிகள் வியட்நாமிய மக்களை ஒரு முட்டுச் சந்துக்கு இட்டுச் சென்றுள்ளன. ஒரு உண்மையான சோசலிச மற்றும் புரட்சிகர இயக்கத்தை கட்டியெழுப்புவது மட்டுமே, அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் வியட்நாமிய பிரிவாக ட்ரொட்ஸ்கிச கட்சியை கட்டுவதே, முன்னோக்கி செல்லும் பாதையை வழங்குகிறது.

Loading