டொயோட்டா இந்திய தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க கர்நாடக முதலமைச்சர் நிறுவனத்துடன் சதி செய்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள இரண்டு பிடாடி ஆலைகளில் 3,000 க்கும் மேற்பட்ட டொயோட்டா தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தம் உடனடி ஆபத்தில் உள்ளது. அவசியமெனில் அடக்கு முறை அரசு நடவடிக்கைகளை பயன்படுத்துவது உட்பட வேலைநிறுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவது குறித்து கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். யெடியூரப்பா, கம்பனி நிர்வாகம் மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகாரிகளுடன் ஒர் மூடப்பட்ட தனியறையில் கலந்தாலோசித்தார்.

“டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரில் (TKM ) இயல்பு நிலையை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று யெடியூரப்பா தனது இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்தின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார், தலைமைச் செயலாளர் டி.எம்.விஜய் பாஸ்கர் இன்று மூத்த அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை கூட்டி “தேவையான நடவடிக்கைகள்” என்னவென்பதை அறிவிப்பார்.

வாகன ஆலைக்குள் வேலை செய்யும் வாகன தொழிலாளர்கள் (நன்றி: விக்கிமீடியா காமன்ஸ்)

எகனாமிக் டைம்ஸில் கூட்டத்தை முன்னோட்டமிடும் ஒரு கட்டுரையில், தொழிலாளர்களின் எதிர்ப்பை நொருக்குவதற்கான சதித்திட்டம் பற்றி நன்கு அறிந்த ஒரு ஆதாரம், ஆலையில் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்காக அரசாங்கம் தொழிலாளர்கள் மீது வழக்குத் தொடரலாம் என்று விளக்கினார். "வழக்குத் தொடர அரசாங்கம் அனுமதி வழங்கியவுடன், ஊழியர்கள் பணிக்கு திரும்ப நிர்வாகம் ஒரு சுருக்கமான காலத்தை வழங்கும். அரசாங்க உத்தரவை மீறுபவர்கள் மற்றும் வேலைக்கு வராதிருப்பவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள்” என்று அந்த அந்த ஆதாரம் தொடர்ந்தது.

இரண்டு TKM ஆலைகளில் 3,000 க்கும் மேற்பட்ட வேலைநிறுத்தக்காரர்கள் நவம்பர் 9 ஆம் தேதி உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தை தொடங்கினர். ஒரு நாள் கழித்து, பெங்களூருவில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள 432 ஏக்கர் பரப்பளவில் உள்ள வளாகத்தில் இருந்த தொழிலாளர்களை நிர்வாகம் கதவடைப்பு செய்தது. ஜப்பானிய வாகன நிறுவனமான டொயோட்டாவுக்கு 89 சதவீதமும், இந்திய நிறுவனமான கிர்லோஸ்கருக்கு 11 சதவீதமும் சொந்தமான TKM பிடாடி வளாகத்தை பூகோள ரீதியாக போட்டித்தன்மையுடன் வைத்திருக்க அது 25 சதவீத உற்பத்தி அதிகரிப்பு கோருகிறது. இது தற்போதைய 80,000 மாத இலக்குக்கு பதிலாக 100,000 வாகனங்களை உற்பத்தி செய்யும்படி வாகன உற்பத்தியாளர்களை கட்டாயப்படுத்தும்.

வேலைநிறுத்தம் தொடங்கிய மூன்று நாட்களுக்குப் பின்னர், அந்த நேரத்தில் ஆலை மூடப்பட்டிருந்தாலும், ”முறைகேடான செயல்கள்” என்று குற்றம் சாட்டி 39 தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த நிர்வாகம் அதன் ஆத்திரமூட்டல்களை தீவிரப்படுத்தியது. அந்த சமயத்தில் அதிகரித்த உற்பத்தி இலக்கை ஏற்றுக்கொள்வதாகவும், நிறுவனத்தின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடமாட்டேன் என்றும் உறுதியளித்து தொழிலாளர்கள் கையெழுத்திட்டால் தான் அவர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப அனுமதிக்க முடியும் என்று நிர்வாகம் அறிவித்த போது மாநில அரசாங்கம் பணிக்கு திரும்பும்படி தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டு அதன் தலையீட்டை செய்தது. இந்த உத்தரவை ஏற்றுக்கொள்வதற்கான தயார்நிலையை தொழிற்சங்கம் சுட்டிக்காட்டிய போதிலும், வேலைநிறுத்தம் செய்பவர்கள் அந்த விதிமுறைகளை நிராகரித்ததுடன் தொடர்ந்தும் அதை சவால் செய்து வருகின்றனர். (காண்க: “வேலைக்கு திரும்பும்படி கோரும் அரசாங்க உத்தரவை மீறி டொயோட்டா இந்தியா தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்கிறார்கள்”).

திங்களன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அரசாங்க அமைச்சர்களின் கருத்துக்கள், அவர்கள் கம்பனி மற்றும் கார்ப்பரேட் உயரடுக்கு முழுவதன் பக்கத்தில்தான் இருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தியது, மோசமான வேலை நிலைமைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் கோபம் பரந்தளவில் வெடிப்பதற்கான தூண்டுதலாக இல்லாது அந்த வேலைநிறுத்தத்தை விரைவாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கம்பனி மற்றும் கார்ப்பரேட் உயரடுக்கு முழுவதுமாக விரும்புகிறது. "வேலைநிறுத்தம் தொடர நாங்கள் அனுமதிக்க எந்த வழியும் இல்லை, ஏனெனில் இது பல தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தீங்கு விளைவிக்கும், மேலும் கர்நாடகா ஒரு தொழில் நட்பு மாநிலம் என்ற உருவத்தையும் பாதிக்கும்" என்று தொழிலாளர் மந்திரி சிவரம் ஹெப்பர் எகனாமிக் டைம்ஸிடம் தெரிவித்தார்.

"கர்நாடகா ஒரு அமைதியான மாநிலம் மற்றும் தொழில்துறை அமைதியின்மை அற்றது" என்று ஏமாற்றுத்தனமாக கூறிய, தொழிலாளர் அமைச்சர், பாஜக மாநில அரசாங்கம் முதலீட்டாளர்களின் நலன்களுக்கு வழங்கும் முன்னுரிமையை வலியுறுத்தினார். "இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக நமது அரசாங்கம் வெளியில் எதிர்மறையான காட்சியை பெறுவதை முதலமைச்சர் பி.எஸ்.யெடியுரப்பா விரும்பவில்லை" என்று அவர் கூறினார். "தொழிலாளர் சட்டங்களில் சமீபத்திய மாற்றங்களின் நோக்கம் அதிக முதலீட்டைப் பெறுவது தான்." என்றார்.

இந்தக் கருத்து இந்திய ஆளும் உயரடுக்கின் இரக்கமற்ற உந்துதலுக்கு தலைமை தாங்கி முன்னெடுத்து செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றியதாகும், அதாவது பூகோள நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஒரு மலிவான தொழிலாளர் கூடமாக சீனாவுடன் போட்டியிடுவது. இந்த நோக்கத்திற்காக, முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களில் "மிகப்பெரும் பாய்ச்சல்" என்று அவர் கூறி, தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் வணிக விதிமுறைகள் மீது மோடி ஒரு துடைத்துக்கட்டும் தாக்குதலைத் தொடங்கினார்.

திங்களன்று நடந்த கூட்டத்தில் இருந்து கம்பனி விரும்பிய அனைத்தையும் பெற்றுள்ளது என்பதைக் குறிக்கும் வகையில், TKM துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் இந்த சந்திப்பை "மிக சிறப்பானது" என்று விவரித்தார்.

வேலைநிறுத்தக்காரர்களுக்கு எதிராக அரச அதிகாரத்தின் முழு சக்தியையும் பயன்படுத்துவதற்கு முழு ஆளும் உயரடுக்கின் ஆதரவும் இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை அதிகாரிகள் தவறாகக் கையாள்வது, சமூக சமத்துவமின்மை மற்றும் வறுமை ஊதியங்கள் ஆகியவை குறித்து தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்துவரும் எதிர்ப்பை நன்கு அறிந்துள்ள, கார்ப்பரேட் நிர்வாகிகள் மற்றும் மிக உயர்ந்த செல்வந்தர்கள் இந்த வேலைநிறுத்தத்தை கொடூரமாக நசுக்குவதன் மூலமாக மற்ற பிரிவினருக்கு ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறார்கள். வேலைநிறுத்தம். கர்நாடக முதலாளிகள் சங்கம் அண்மையில் யெடியூரப்பாவுக்கு எழுதிய கடிதத்தில், “சட்டவிரோத கிளர்ச்சியை” நசுக்க தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், டொயோட்டா வேலைநிறுத்தம் பரவும் என்றும் மற்றும் “முழுப் பகுதியிலும் தொழில்துறை உறவுகளை சீர்குலைக்கும்” அச்சுறுத்தலை கொண்டுள்ளது என்றும் குறிப்பட்டனர்.

3,460 தொழிற்சங்கப்படுத்தப்பட்ட உற்பத்தி பிரிவு தொழிலாளர்கள் உட்பட சுமார் 6,500 தொழிலாளர்கள் டி.கே.எம். இல் பணிபுரிகிறார்கள், அதில் மீதமுள்ளவர்கள் மேற்பார்வையாளர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களாவார். 700 தொழிலாளர்கள் நிறுவனத்தின் "சுய கட்டுப்பாட்டை" ஆதரிப்பதற்கான உறுதிமொழிகளில் கையெழுத்திட்டுள்ளதாகவும், புதிய உற்பத்தி இலக்குகளை பூர்த்தி செய்வதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் தொழிலாளர் அமைச்சர் கூறினார். இருப்பினும், டிசம்பர் 3 ஆம் தேதி வரையில் உற்பத்தி வரிசை 10 சதவீதத்திற்கும் குறைவான திறனுடன் தான் இயங்குகிறது என்று நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

WSWS உடன் பேசிய வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர், “ஆலைக்குள் நுழைவதற்கு முன்பு உறுதிமொழிகளை வழங்கும்படி தொழிலாளர்களை TKM நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, இது தொடர்பாக அவர்கள் வாட்ஸ்அப் மற்றும் தபால்கள் மூலம் செய்திகளை அனுப்பினர். நிர்வாகம் இப்போது பிளவுகள் உருவாக்கும் தந்திரத்தில் ஈடுபட்டுள்ளது.” அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சம்பள உயர்வுக்கான வாய்ப்பை வழங்குவதாக கூறி புதிய உற்பத்தி இலக்குகளை தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்களை கவர்ந்திழுக்கும் முயற்சிகள் இதில் அடங்கும். அங்கே "சம்பள அளவில் திடீர் பாய்ச்சலாக 15,000 ரூபாய் (சுமார் $ 200), என்றளவில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது” என்று தொழிலாளி விளக்கினார்.

இத்தகைய முறைகள் மூலம் வேலைநிறுத்தத்தை பலவீனப்படுத்தும் முதலாளியின் திறன் டொயோட்டா தொழிலாளர்களின் போராட்டத்தை தனிமைப்படுத்திய TKM ஊழியர் சங்கம் (டி.கே.எம்.இ.யூ) வேலைநிறுத்தக்காரர்களை வழிநடத்திய முட்டுச்சந்தின் விளைவு தான். ஸ்ராலினிச தலைமையிலான அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏ.ஐ.டி யூ.சி) மற்றும் இந்திய தொழிற்சங்கங்களின் மையம், மற்றும் அவர்கள் அரசியல் ரீதியாக வழிநடத்தும் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு (ஜே.சி.டி.யு) ஆகியவை டொயோட்டா தொழிலாளர் போராட்டத்திற்கு உதட்டளவில் ஆதரவு தெரிவித்துள்ளன, ஆனால் பெருகிவரும் கார்ப்பரேட்-அரசு தாக்குதலை தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களின் பாதுகாப்புக்காக தொழில் துறை ரீதியான எந்தவொரு அணிதிரட்டலையும் செய்யவில்லை

பெங்களூரு பகுதி மற்றும் அதற்கு அப்பால் உள்ள அனைத்து வாகன மற்றும் தொழில்துறை தொழிலாளர்களையும் உடனடியாக ஒன்று சேர்த்து விரிவுபடுத்தினால் மட்டுமே TKM தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வெற்றிபெற முடியும். தொழிலாளர்கள் குறிப்பாக ஒரு இரக்கமற்ற முதலாளிக்கு எதிரான போரில் மட்டும் ஈடுபட்டில்லை, ஆனால் முழு ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் அரசு எந்திரத்திற்கும் எதிராகவுமாகும், அவை வேலைநிறுத்தம் செய்பவர்களை மீண்டும் ஆலைகளுக்குள் பணிக்கு செல்ல கட்டாயப்படுத்திவதில் உறுதியுடன் உள்ளன, அவை பெருநிறுவன இலாபங்களை அதிகரிப்பதற்காக அடிமை உழைப்புக்கு ஒத்த நிலைமைகளின் கீழ் வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கின்றனர்.

தொழிலாளர்கள் மீது வழக்குத் தொடுப்பது வேலைநிறுத்தத்தை நொறுக்குவது ஆகிய அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட தற்கும் மாநில அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கான ஒரே வழி தொழிலாளர் நிலைமைகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மீதான ஆளும் வர்க்கத்தின் தாக்குதலுக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை பெருமளவில் அணிதிரட்டுவது மட்டுமே.

அத்தகைய ஒரு போராட்டத்திற்கு இந்தியாவில் நிலைமைகள் மிகவும் சாதகமானவையாக இருக்கின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்னர், மோடி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர் ஒழுங்குமுறைகளை அகற்றுவதை எதிர்த்து நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் பல கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். பரந்த வேளாண் வணிகங்களின் பிடியை வலுப்படுத்துவதற்காக விவசாய நெறிமுறைகளை நீக்குவதற்கு எதிராக விவசாயிகள் ஒரு வெகுஜன இயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர், இதனால். தொழிலாளர்கள் மற்றும் இந்தியா முழுவதும் வறிய கிராமப்புற உழைப்பாளர்களுக்கு வாகன தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தில் சேரவும் ஆதரவளிக்கவும் ஒரு வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் அது மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கப்படும்.

இந்த வேலைத்திட்டத்திற்காக போராட, வேலைநிறுத்தம் செய்யும் TKM தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் கட்டுப்பாட்டை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்காக தங்களது சொந்த சுயாதீன அமைப்புகளை- சாமானிய மற்றும் நடவடிக்கைக் குழுக்களை நிறுவ வேண்டும். இந்த குழுக்கள், TKM தொழிலாளர்களுக்கு எதிரான மாநில அரசாங்கத்தின் மிரட்டும் பயமுறுத்தல்களை நிறுத்தும்படி நிர்ப்பந்திக்க பிராந்தியத்தில் உள்ள மற்ற அனைத்து தொழில்துறை பிரிவுகளிலுள்ள தொழிலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும், ஐக்கியப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அறைகூவல் விடுக்க வேண்டும், மற்றும் அனைத்து தொழிலாளர்களும் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

டொயோட்டா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் மற்றும் மலிவான உழைப்புக் கூலியாக தொழிலாளர்களை வழங்க இந்திய ஆளும் உயரடுக்கு எடுக்கும் முயற்சிகளை தோற்கடிப்பதற்கு எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயம் தேவைப்படுகிறது.

வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் தங்கள் போராட்டங்களை ஒன்றிணைக்க முயற்சிக்க வேண்டும், அவர்கள் எந்த வகையிலும் இலாபத்தை ஈட்டுவதற்காக தங்கள் ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீது முரட்டுத்தனத்தை பிரயோகிப்பதில் குறைவற்றவர்களாக இருக்கும் அதே நிறுவனங்கள் மற்றும் ஆளும் உயரடுக்கினரின் தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர்.

Loading