ஜோன்சன் மற்றும் மக்ரோன் அரசாங்கங்கள் புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரை துன்புறுத்துவதில் ஒத்துழைப்பை அதிகரிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரெக்ஸிட் தொடர்பாக பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் கருத்து வேறுபாடு கொண்டதோடு, வர்த்தகம், வணிகம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகள் தொடர்பான உடன்பாட்டை இன்னமும் எட்டவில்லை. ஆனால் புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோரின் ஜனநாயக உரிமைகளைத் துன்புறுத்துவதற்கும் நசுக்குவதற்கும் பரஸ்பர நோக்கத்தை தாராளமாக அவர்களிடம் காண முடிகிறது.

பல தசாப்தங்களாக மேற்கின் இராணுவ ஆக்கிரமிப்பின் தாக்கத்தில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கு புகலிடம் வழங்குவதற்கு பதிலாக, பொது மக்களின் பார்வையில் அவர்களை பலிகடாக்களாக ஆக்கிவிடுவதற்கான மிகவும் கொடூரமான மற்றும் பிற்போக்குத்தனமான பிரச்சாரத்திற்காக இரு அரசாங்கங்களும் கூட்டு சக்திகளாக ஒன்றிணைந்து கொண்டுள்ளன.

ஆகஸ்ட் 8, 2020 சனிக்கிழமையன்று சிறிய படகுகளில் இருந்து இங்கிலாந்தின் துறைமுக நகரமான டோவர் நகருக்கு புகலிடம் கோருபவர்கள் என்று கருதப்படும் ஒரு குழுவை ஒரு எல்லைப் படை கப்பல் கொண்டு வருகிறது. வடக்கு பிரான்சிலிருந்து இங்கிலாந்து வரை சிறிய படகுகளில் ஆபத்தான கடலை கடக்க முயற்சிக்கும் மக்களின் எண்ணிக்கையானது அமைதியான கோடை காலநிலை ஒரு சாதனையளவு கால்வாயை கடக்க தூண்டியுள்ளதால் எல்லை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறுகிறது. (AP Photo/Kirsty Wigglesworth)

இலண்டனிலுள்ள ஜோன்சன் அரசாங்கத்திற்கும் பாரிஸிலுள்ள மக்ரோன் நிர்வாகத்திற்கும் இடையில் ஒரு புதிய ஒப்பந்தம் நவம்பர் 28 திகதியன்று பிரிட்டிஷ் உள்துறை செயலாளர் பிரிதி பட்டேல் மற்றும் அவரது சமதரப்பு பிரெஞ்சு பிரதிநிதியான உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனன் ஆகியோர் உடன்பட்டனர்.

டார்மனுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பேசிய பட்டேல், புதிய தொகுப்பு "பிரெஞ்சு கடற்கரைகளிலுள்ள போலீசாரின் எண்ணிக்கையை எப்படி இருமடங்காக்குகிறது, அது இன்னும் அதிக தொழில்நுட்பங்களிலும் கண்காணிப்புகளிலும் முதலீடு செய்யும் - சட்ட அமலாக்க முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும் ராடார் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதுடன், இப்போது நமது எல்லை பாதுகாப்பை கடுமையாக்கும் வகையில் நாம் பகிர்ந்து கொண்டுள்ளோம்" என்று அறிவித்தார்.

புலம்பெயர்ந்தோரையும் பத்திரிகையாளர்களையும் இரக்கமின்றி அடித்துத் துன்புறுத்திய ஒரு பொலிஸ் வன்முறை கலவரம் என்று மட்டுமே விபரிக்க கூடிய பாரிஸின் தெருக்களில் பிரெஞ்சு பாதுகாப்புப் படையினர் வன்முறை நடவடிக்கைகளை நடத்திய சில நாட்களுக்குப் பின்னர் புலம்பெயர்ந்தோரை மிருகத்தனமாக நடத்துவதற்கான இந்த உறுதிமொழி வருகிறது.

இரண்டு அரசாங்கங்களும், தொற்று நோய்க்கான விடையிறுப்புக்கு, தங்களுடைய பொக்கிஷங்கள் காலியாக இருப்பதாக தத்தமது குடிமக்களுக்கு வலியுறுத்தியபோதிலும், ஆளில்லா விமானங்கள், ராடார் உபகரணங்கள், கேமராக்கள் மற்றும் ஒளியியல் பைனாகுலர்கள் ஆகிய பல மில்லியன் கணக்கான பெறுமதியான பல புதிய அதிநவீன இராணுவ கண்காணிப்பு தொழில்நுட்ப ஒரு தொகுதிக்கு வேண்டுகோள் செய்ய முடிந்தது.

சுரங்கப்பாதை, இரயில், படகு சேவை மற்றும் டிங்கீஸ் எனப்படும் சிறு படகு வழியாக கால்வாயைக் கடந்து வர முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்கும் நோக்கில், 2014 ஆண்டு முதல் பிரித்தானியாவானது பிரான்சுக்கு மொத்தம் 192 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி வழங்கியுள்ளது என்பதை அதிகாரிகள் வெளிப்படுத்தினர். பிரெஞ்சுக் கடற்கரை இடமான கலே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு போன்ற உள்கட்டுமானங்களில் பெரும்பான்மை பணம் செலவிடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட வார இறுதியில், பிரான்சிலிருந்து கடந்து செல்லும் முயற்சியில் போராடிய ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் குளிர்விறைப்பு ஹைப்போதெர்மியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உட்பட 45 புலம்பெயர்ந்தோரை பிரெஞ்சு ரோந்து படகுகள் இடைமறித்தன. 2020 ஆம் ஆண்டில் இதுவரை 8,000 க்கும் மேற்பட்ட கடலை கடக்கும் முயற்சிகள் நடந்துள்ளன. 2019 ஆண்டில் 1,844 கடக்கும் முயற்சிகளும், 2018 ஆண்டில் 299 முயற்சிகளும் இருந்தன.

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து புகலிடம் கோருவோரைத் தடுக்கும் கூடுதல் நடவடிக்கைகள் டிசம்பர் 1 திகதி முதல் நடைமுறைக்கு வந்தன. பிரெஞ்சு போலீஸ் ரோந்துகளானது பிரித்தானியாவிற்கு மிக குறுகிய மற்றும் எளிதாக கடக்கும் தூரங்களுடைய கடற்கரை பகுதிகளில் இரட்டிப்பாக்கும். இந்த நீண்ட கடற்கரைப் பாதையில் புலம்பெயர்ந்தோர் மற்றும் தஞ்சம் கோருவோரை வேட்டையாடுவது, இன்னும் கூடுதலான ஆபத்துக்களை ஏற்படுத்தும் வகையில், இன்னும் தொலைதூர கடற்கரைப் பகுதிகளில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்குவதற்கு துணிச்சலுக்கு மக்களை கட்டாயப்படுத்துவதன் மூலம் மேலும் இறப்புக்களை ஏற்படுத்தும் மற்றும் இன்னும் ஆபத்தான வழிமுறைகள் மற்றும் வழிகள் மூலம் இங்கிலாந்தை அடைய முயற்சிப்பார்கள்.

கடக்க முயன்ற நான்கு பேர் கடந்த ஆண்டு இறந்துவிட்டதாகவும், இந்த ஆண்டு இதுவரை ஏழு பேர் இறந்ததாகவும் தெரியவருகிறது.

இரண்டு ஐரோப்பிய அரசாங்கங்களுக்கிடையிலான ஒப்பந்தம் "கால்வாயைக் கடப்பதை சாத்தியமற்றதாக மாற்றுவதற்கான பொதுவான பணியில்" குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பட்டேல் கூறினார். குறுக்கு வழியை உருவாக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிவேகமாக வளர்ந்து வருவதாகவும், கடத்தல் கும்பல்கள் ஆபத்தான பயணங்களை "எளிதாக்குகின்றன" என்றும் அவர் கூறினார். மேலும் சிரித்தபடியே பட்டேல் பொய் கூறுகையில், "சட்டவிரோத இடம்பெயர்வு ஒரு அடிப்படை காரணத்திற்காக உள்ளது என்ற உண்மையை நாம் இழக்கக்கூடாது: ஏனென்றால் குற்றவியல் கும்பல்கள் -மக்கள் கடத்தல்காரர்கள்- இந்த வர்த்தகத்தை எளிதாக்குகிறார்கள்" என்றார்.

மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் பாரசீக வளைகுடாவிலிருந்து ஐரோப்பாவிற்கு தப்பி ஓட வேண்டிய கட்டாயத்திலான மனித அலை, மனித கடத்தல்காரர்களால் அவ்வாறு செய்யமுடியாது என்பது உள்துறை அமைச்சருக்கு நன்கு தெரியும். உலகின் ஏகாதிபத்திய சக்திகளால் உருவாக்கப்பட்டு, மிக முக்கியமாக ஐரோப்பாவில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸினால் தோற்றுவிக்கப்பட்ட, தீவிரமாக்கப்பட்ட இந்த மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள், போர்கள், தூண்டிவிடப்பட்ட சகோதர மோதல்களில் இருந்தும், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அழிவுகளில் இருந்தும் தப்பி ஓடுகின்றனர்.

டோரி அரசாங்கம் புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோருக்கு "விரோத சூழலை" உருவாக்கும் கொள்கையை இரட்டிப்பாக்குகிறது. "புலம்பெயர்ந்தோரின் கிரிமினல் கும்பல்கள்" கால்வாயைக் கடந்து, இங்கிலாந்தை "படையெடுப்பதன்" ஒரு மோசமான மற்றும் தவறான பொதுக் காட்சியை வரைவதன் மூலம் புலம்பெயர்வை குற்றத்திற்கு உள்ளாக்குவதை உள்துறை அலுவலகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆங்கிலோ-பிரெஞ்சு ஒப்பந்தமானது சர்வதேச மனித உரிமை அமைப்பால் விமர்சிக்கப்பட்டது. அமைப்பின் அகதி மற்றும் புலம்பெயர்ந்தோர் உரிமைகள் திட்ட இயக்குனரான ஸ்டீவ் வால்டெஸ்-சைமண்ட்ஸ் கூறினார், "பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் இந்தக் கால்வாய் முழுவதும் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர், ஏனென்றால் அவர்களுக்கு எந்த பாதுகாப்பான விருப்பத் தேர்வுகளும் இல்லை— இந்த நாட்டில் குடும்பத்துடன் மீண்டும் இணைய, அல்லது ஒரு பயனுள்ள புகலிட முறையை அணுகுவதற்கு, அவர்கள் உரிமை பெற்றிருக்கிறார்கள். பிரித்தானிய அரசாங்கம் அதன் அண்டை நாடுகளுடன் புகலிடத்தை வழங்கும் பொறுப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும். இங்கிலாந்திற்கு செல்லும் பாதைகளை மூடுவதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது, அது கண்மூடித்தனமானதும் மற்றும் பொறுப்பற்றதும் — இது ஏற்கனவே நம்பமுடியாத கஷ்டங்களைத் தாங்கிக் கொண்ட மக்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்திலுள்ள அபாயங்களை அதிகரிப்பதைத் தவிர வேறொன்றுமில்லை.”

கடந்த மாதம், ஜோன்சன் அரசாங்கம், கால்வாயை கடக்கப் பயன்படுத்தப்படும் சிறிய படகுகளை எடுத்து சென்றதற்காக புலம்பெயர்ந்தவர்களை சிறையில் அடைக்கிறது என தெரியவந்தது. இந்த கைவினை மிகச்சிறு படகுகளை வழிநடத்துபவர்கள் மீது "வசதியேற்படுத்துதல்" என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தஞ்சம் கோரும் மக்கள், கால்வாயின் போக்குவரத்து நிறைந்த நிலைமைகளிலும், ஆபத்தான சூழ்நிலைகளில் அவர்களின் கடற்பரப்பு கைவினைப் படகுகள் இலக்கின்றி நகர்த்துவதைத் தடுப்பதற்காக சிறைக்கு அனுப்பப்படுகின்றனர்.

குடியேற்ற அமலாக்கப் பிரிவு, ஆங்கிலக் கால்வாய் வழியாக புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் செல்லும் படகுகளின் ட்ரோன் காட்சிகளைப் பகுப்பாய்வு செய்து வருகிறது. இதுவரை ஆபத்தான பயணத்தில் படகுகளை செலுத்திய எட்டு புலம்பெயர்ந்தவர்கள் ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடுமையான தண்டனைகள் 16 முதல் 30 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டன. 2007 ஆம் ஆண்டு தொழிற் கட்சியின் எல்லைகள் சட்டத்தின் கீழ், சிறைத்தண்டனையிலிருந்து விடுதலையானவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவதற்கு தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள்.

சிறிய படகுகளை ஓட்டிச் சென்றதற்காக புலம்பெயர்ந்தோர் சிறையில் அடைக்கப்பட்டதை அறிவித்த அரசாங்க செய்தி வெளியீடுகள், நேட்டோ படைகளால் அடிக்கடி பேரழிவுக்கு தப்பி ஓடுபவர்களை "மக்கள் கடத்தல்காரர்கள்" என்று விபரிக்கிறது. இது கடத்தல்காரர்களுக்கு "ஒரு நிதி அல்லது பிற பொருள் நலனுக்காக" பயணங்களுக்கு வசதியளித்துள்ளது என்பது ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையின் (United Nations Refugee Agency) வரையறையை மீறுவதாக இந்த சட்டபூர்வ அட்டூழியம் இருக்கிறது.

தஞ்சம் கோருவோர் முள்வேலிக்கு பின்னால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ முகாம்களிலுள்ள கொடூரமான நிலைமைகள் குறித்து எந்தவொரு பொது மக்களுக்கும் தெரிவதை மறைக்கும் முயற்சியில் உள்துறை அலுவலகம் ஈடுபட்டுள்ளது.

கென்ட்டில் ஃபோக்ஸ்டோனுக்கு அருகிலுள்ள நேப்பியர் (Napier) தடுப்பு முகாம் குடியிருப்புகளுக்கு விஜயம் செய்பவர்கள், இப்போது உண்ணாவிரதங்கள், தற்கொலை முயற்சிகள், பொது உடல்நலக்குறைவு, அமைதியின்மை மற்றும் குடியிருப்பாளர்களிடையே வழக்கமான மருத்துவ அவசரநிலைகள் பற்றி வெளியே பேசுவதைத் தடுக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின் கீழ் அமைதியாக இருப்பதற்கான உறுதிமொழியில் கையெழுத்திட வேண்டும்.

நேப்பியர் முகாம் பகுதியிலுள்ள 400 ஆண் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆடை, அடிப்படை வசதிகள் மற்றும் ஆலோசனை வழங்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கு உள்துறை அலுவலகம் சார்பில் தனியார் பாதுகாப்பு நிறுவனம் மூலம் இரகசியத் தகவல் படிவம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை நேரில் பார்த்த கார்டியன், நேப்பியர் "சேவை பயனர்கள்" அதாவது புகலிடம் கோருவோர் பற்றிய எந்தவொரு தகவலையும் இரகசியமாக நடத்துவதற்கு கையெழுத்திட்டுள்ளார்கள் என்று கூறுகிறது.

இத்தகைய தகவல்கள் உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்திற்கு உட்பட்டவையாக இருக்கிறது, இது தேசிய பாதுகாப்பு, உளவுத்துறை, தற்பாதுகாப்பு, சர்வதேச உறவுகள் மற்றும் மற்றொரு நாட்டிற்கு நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்பட்டுள்ள தகவல்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தை மீறினால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

உள்துறை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் பத்திரிகை கேள்விகளுக்கு ஒரு நிராகரிக்கும் பதிலை அளித்தார்: "நேப்பியர் தளம் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக எங்கள் விடுதி வழங்குநரான கிளியர்ஸ்ப்ரிங்ஸ் ரெடி ஹோம்ஸ் (Clearsprings Ready Homes) மற்றும் பங்குதாரர்களுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றியுள்ளோம்."

நேப்பியரை இயக்குவதற்கு உள்துறை அலுவலகம் கிளியர்ஸ்பிரிங்ஸ் ரெடி ஹோம்ஸை (Clearsprings Ready Homes) நியமித்திருந்தாலும், தடுப்பு மையத்தின் அன்றாட குறிப்பிடத்தக்க பொறுப்புகளை நிர்வாகத்திற்கான "NACCS எனப்படும் ஒரு வாடகை முகவர் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனத்திற்கு" துணை ஒப்பந்தம் செய்துள்ளது என்று கார்டியன் தெரிவித்துள்ளது. எனவே புகலிடம் கோருவோரை தடுத்து வைத்திருப்பது தனியார் உரிமையாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

“புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் கோருவோரைப் பாதுகாப்பதில் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) உறுதியான போராட்டத்தை நடத்தும் என இந்த ஆண்டு அக்டோபரில் பிரிட்டனின் SEP காங்கிரஸ் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஏகாதிபத்திய போர்களாலும் நாடுகடந்த பெருநிறுவனங்களால் மிருகத்தனமாக சுரண்டப்படும் கொடுமைகளாலும் பாதிக்கப்பட்டவர்கள், போர்க் கப்பல்களின் உதவியுடன் ஐரோப்பாவின் அரசாங்கங்களால் கூட்டாக வேட்டையாடப்படுகின்றனர், கடலில் ஆயிரக்கணக்கானவர்கள் இறக்க அனுமதிக்கப்படுகிறார்கள், சித்திரவதை முகாம்களில் சிறையில் அடைக்கப்படுகின்றனர் மற்றும் நாடுகடத்தலுக்கு உட்படுகின்றனர்." SEP ஆனது “பிரித்தானியா எடுத்த நடவடிக்கைகள், ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களின் ஐரோப்பா கோட்டை கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதில் நமது சர்வதேச தோழர்களுடன் இணைந்து செயல்படும் என்று அது உறுதியளிக்கிறது. மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட பயங்கர இறப்பு எண்ணிக்கை மற்றும் தஞ்சம் கோருவோர் நடைமுறை வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரமான நிலைமைகளை நாங்கள் எடுத்துக்காட்டுவோம்.

பிரிட்டனிலுள்ள சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) பிரான்சிலுள்ள அதனுடைய சகோதரக் கட்சியான Parti de l'égalité socialiste (PES), ம் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மீதான பாசிசத் தாக்குதல்களை எதிர்க்க ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றன.

Loading