பிரெஞ்சு மக்களின் அரசியல் கருத்துக்களை போலீஸ் ஆவணப்படுத்துவதற்கு மக்ரோன் அரசாங்கம் அங்கீகாரம் அளிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த மாத தொடக்கத்தில், பிரெஞ்சு மக்களின் அரசியல் கருத்துக்களை பாரியளவில் ஆவணப்படுத்துவதற்கு வசதியாக, மக்ரோன் அரசாங்கம் தனது பொலிஸ் உளவுத்துறை வழிகாட்டுதல்களில் பெரும் மாற்றங்களை அமைதியாக செயல்படுத்தியுள்ளது.

இந்த மாற்றங்கள், டிசம்பர் 4 அன்று வழங்கப்பட்ட தொடர்ச்சியான நிறைவேற்று ஆணைகள் மூலம் இயற்றப்பட்டன. அவைகள் எந்தவொரு பத்திரிகை அறிக்கையோ அல்லது பொது விவாதத்தோடும் இல்லாமல், ஆரம்பத்தில் பிரெஞ்சு தரவு மற்றும் தொழில்நுட்ப வலைப் பதிவு நெக்ஸ்ட் இன்பாக்டின் (Next Inpact) ஒரு கட்டுரையின் காரணமாக மட்டுமே அவைகள் வெளிப்படுத்தப்பட்டன. தனிநபர்கள் பற்றிய விரிவான தனிப்பட்ட கோப்புகளை காவல்துறையினர் உருவாக்கக்கூடிய நிலைமைகளையும், இந்த கோப்புகள் கொண்டிருக்கக்கூடிய தகவல்களையும், இந்த ஆணைகள் பெரிதும் விரிவுபடுத்துகின்றன.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் தொலைக்காட்சி உரையை 2020 ஏப்ரல் 13 திகதி திங்கள்கிழமை மத்திய பிரான்சின் லியோனில் ஒரு குடும்பம் பார்க்கிறது. (AP Photo/Laurent Cipriani)

நவம்பர் மாதம் வரை, உள்துறை அமைச்சகத்தின்படி, உளவுத்துறை அமைப்புகளால் பராமரிக்கப்படும் கோப்புகளில் இருந்து பிரிக்கப்பட்ட இந்த போலீஸ் கோப்புகள் நாடு முழுவதும் 60,000 க்கும் மேற்பட்டவர்களின் விரிவான தனிப்பட்ட தகவல்களைக் கொண்டிருக்கின்றன.

இது இப்போது மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. முன்னதாக, வழிகாட்டுதல்கள் தனிப்பட்ட "நபர்கள்" பற்றிய தகவல்களை சேகரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வதைக் குறிக்கின்றன. இது "தனிநபர்கள்" மற்றும் "தத்துவமுறையான நபர்கள்" ஆகிய இரண்டையும் சேர்க்க மாற்றப்பட்டுள்ளது — பிந்தையது ஒரு சட்ட ரீதியான அமைப்பிற்கான பிரெஞ்சு சட்டத்தில் ஒரு வரையறையாக இருப்பதுடன், "குழுவாங்கங்கள்" என இருபிரிவுகளையும் உள்ளடக்குகின்றன.

"குழுவாக்கம்" என்ற மிகவும் தெளிவற்றது, இது சந்தேகத்திற்கு இடமின்றி சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் எதிர்ப்பு இயக்கங்களை உள்ளடக்கியது, இதில் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான "மஞ்சள் சீருடை" எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் அடங்கும், இது 300,000 பேர்கள் வரை பேஸ்புக் குழுக்களில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தனர். "தனிநபர்கள் வைத்திருக்கும் அல்லது [அமைப்பு] அல்லது குழுவுடன் நேரடி மற்றும் நேரடியாக அல்லாத தொடர்புவைத்திருக்கும் அல்லது வைத்திருக்கும் தரவுகளை சேகரிக்க முடியும் என்று ஆணை குறிப்பிடுகிறது...."

யார் "ஆபத்து" என்று கருதப்படுகிறார்கள் என்பதை தீர்மானிப்பதற்கான அளவுகோல்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. சட்டத்தின் முந்தைய பதிப்பு "பொது பாதுகாப்பு" என்று அச்சுறுத்திய நபர்களைக் குறிக்கிறது. புதிய பதிப்பு "பொது அல்லது அரசின் பாதுகாப்பு", என்பது "குடியரசின் பிரதேசம் அல்லது நிறுவனங்களின் ஒருமைப்பாடு" மற்றும் "தேசத்தின் அடிப்படை நலன்களுக்கு" எதிரான அச்சுறுத்தல்களைக் குறிக்கிறது. பிந்தையது "பிரான்சின் முக்கிய தொழில்துறை, பொருளாதார மற்றும் விஞ்ஞான நலன்கள்" மற்றும் அதன் "வெளியுறவுக் கொள்கை" உள்ளிட்ட தனித்தனியாக வரையறுக்கப்படுகிறது.

ஆவணப்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்படும் தகவல்களும் மாற்றப்பட்டுள்ளன. முன்னதாக, சட்டம் கேள்விக்குரிய நபரின் "அரசியல், தத்துவ, மத மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள்" ஆவணமாக்கலை குறிக்கிறது. இது "அரசியல் கருத்துக்கள், தத்துவ மற்றும் மத நம்பிக்கைகள் அல்லது தொழிற்சங்க உறுப்பினர்" என்று மாற்றப்பட்டுள்ளது. இலக்கு வைக்கப்பட்டவர்களின் சமூக ஊடக நடவடிக்கைகளையும் போலீசார் சேகரிக்க உள்ளனர்.

குறிப்பிடத்தக்க வகையில், தனிநபர் சுதந்திர பாதுகாப்பு அமைப்பான குவாட்ரேச்சர் டு நெட் (Quadrature Du Net) போல, பெரிய அளவிலான முக அங்கீகாரத்திற்காக பொலிஸ் கோப்புகளைப் பயன்படுத்துவதை வெளிப்படையாக விலக்கிய ஒரு பிரிவையும் இந்த ஆணை நீக்கியது.

சமூக சமத்துவமின்மை, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் வலதுசாரி இராணுவவாத கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் பரந்த எதிர்ப்பை நசுக்குவதற்கு மக்ரோன் அரசாங்கம் ஒரு பொலிஸ் அரசை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு மக்ரோன் அரசாங்கம் தேசிய புலனாய்வு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முகமையின் மூலோபாய வழிகாட்டல்களில் இதேபோன்ற மாற்றங்களை அங்கீகரித்தது, உளவுத்துறை அமைப்புகளின் பங்கு மக்கள் மீது "நாசவேலை இயக்கங்கள்" மற்றும் "எழுச்சி வன்முறைகளை" எதிர்ப்பதற்கு உள்ளது என்று அறிவித்தது.

2014 இல், "தேசிய உளவுத்துறை மூலோபாயம்" ஆனது ஐந்து கவனம் செலுத்தும் பகுதிகளை பட்டியலிட்டது: பயங்கரவாதம், உளவு மற்றும் பொருளாதார குறுக்கீடு, பேரழிவு ஆயுதங்கள் பெருக்கம், சைபர் தாக்குதல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம். புதிய பதிப்பில் ஒரு புதிய வகை, "நெருக்கடிகளின் எதிர்பார்ப்பு மற்றும் பெரிய அளவிலான அபாயங்கள்" என்ற புதிய வகை அடங்கும். "நிறுவப்பட்ட அமைப்பை குறைமதிப்பிற்குட்படுத்துதல்" என்ற தலைப்பின் கீழ், "ஒரு நாசவேலை தன்மையுடைய இயக்கங்கள் மற்றும் வலைப்பின்னல்களின் அதிகரித்து வரும் வலிமை, எழுச்சி வன்முறை மூலம் நமது ஜனநாயகம் மற்றும் குடியரசு அமைப்புகளின் அஸ்திவாரங்களை பலவீனப்படுத்துவதையும், ஏன் அழிக்கவும் கூட நோக்கம் கொண்டுள்ளதால், மிகவும் முன்கூட்டியே ஆக்கிரமிக்கப்பட்ட நெருக்கடியின் ஒரு காரணியாக உள்ளது" என்று அது கூறியது.

இந்த மாற்றங்கள், கடந்த இரண்டு தசாப்தங்களாக "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற போலிக்காரணத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரங்களின் பரந்த விரிவாக்கம் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை அகற்றுவது ஆகியவை சமூக எதிர்ப்பிற்கு எதிராக இயக்கப்பட்டன என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. கடந்த வியாழனன்று பிரான்ஸ் இன்ஃபோ (France Info) இல் பேசிய உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனன் புதிய போலீஸ் ஆவண விதிகள் அவசியப்படுகின்றன, ஏனென்றால் "தீவிரவாத கட்சிகளுடன் தொடர்புடைய கருத்துக்களும் அரசியல் நடவடிக்கைகளும், துல்லியமாக பிரிவினைக்கு அழைப்பு விடுப்பவர்கள், புரட்சிக்கானவர்கள், உளவுத்துறை அமைப்புகளால் அறியப்பட வேண்டும்" என்றார்.

சோசலிஸ்ட் கட்சி (PS) சமீபத்திய மாற்றங்களை விமர்சித்துள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் போரிஸ் வல்லட் (Boris Vallaud), சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆனால் சோசலிஸ்ட் கட்சி (PS) பொலிஸ் அதிகாரங்களைக் கட்டமைப்பதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது, 2015 இல் பிரான்சுவா ஹாலண்டின் கீழ் இரண்டு ஆண்டு அவசரகால நிலையை உருவாக்கி, ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்தியது.

பொலிஸ்-அரசு சட்டங்களின் ஒரு பெரும் பகுதி இப்போது மக்ரோனால் முன்னோக்கி தள்ளப்படுகிறது. நவம்பர் 24 அன்று, தேசிய சட்டமன்றம் மக்ரோனின் "விரிவான பாதுகாப்பு" சட்டத்தை (“global security” law) நிறைவேற்றியது, இது பொலிஸ் அதிகாரிகளை படமாக்குவதை குற்றவாளியாக்குகிறது, இது மற்றய ஜனநாயக-விரோத மாற்றங்களில் ஒன்றாக உள்ளது. அதற்கு முந்தைய நாள், பாரிஸின் மையத்தில் அமைதியான அகதிகள் முகாமுக்கு எதிராக பொலிசார் வன்முறை வெறியாட்டத்தை நடத்தினர்.

நவம்பர் 28 அன்று நூறாயிரக்கணக்கானோரின் ஆர்ப்பாட்டம் உட்பட தொடர்ச்சியான பாரிய எதிர்ப்புக்களை முகங்கொடுத்திருந்த நிலையில், மக்ரோன் சட்டத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய விதியை தற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளார், ஆனால் அதை "மீண்டும் எழுத" உறுதிபூண்டுள்ளார். மேலும், ஒரு ஆர்ப்பாட்ட கண்டனத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நபரையும் உளவு பார்க்க ட்ரோன்களை பயன்படுத்துவது உட்பட "விரிவான பாதுகாப்பு" சட்டத்தில் (“global security” law) மாற்றப்படாது உள்ளன.

ஒரே நேரத்தில் இந்த மாற்றங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, குவாட்ரேச்சர் டு நெட் (Quadrature de Net) தனது அறிக்கையில் குறிப்பிட்டது, “விரிவான பாதுகாப்புச் சட்டத்தின் மூலம், அனைத்து எதிர்ப்பாளர்களையும் ஒரு போராட்டத்தில் படமாக்க முடியும், மேலும்… அவர்களில் பெரும் பகுதியை முக அங்கீகார தொழில்நுட்பத்தின் மூலம் அடையாளம் காண முடியும், இந்த கண்காணிப்பு எப்போதுமே ஒரு நீதிபதியால் அங்கீகரிக்கப்படாமலோ அல்லது சீர்தூக்கிபார்க்காமலோ, [பொலிஸ் தாக்கல் முறைகள்] அவர்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் மையப்படுத்த ஒரு முழுமையான அமைப்புமுறையை அவர்களுக்காக ஏற்கனவே தயார் செய்துள்ளன.”

அதே நேரத்தில், மக்ரோன் அரசாங்கம் அதன் "பிரிவினைவாத-எதிர்ப்பு" சட்டத்தை நிறைவேற்ற நகர்ந்து கொண்டிருக்கிறது, அது "குடியரசின் கொள்கைகளுக்கு மரியாதை" என்று மறுபெயரிடப்பட்டது, அது, குடியரசுக்கு விரோதமானதாக அறிவிக்கப்பட்டுள்ள அடிப்படையில், அரசியல் கட்சிகள் உட்பட சட்ட சங்கங்கள் மற்றும் அமைப்புகளை கலைப்பதற்கு அரசுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும்.

பிரிவினைவாத எதிர்ப்பு சட்டம், செய்தி ஊடகம் மற்றும் அரசியல் ஸ்தாபம் முழுவதிலும் ஒரு அதி-வலது முஸ்லிம்-விரோத பிரச்சாரத்தின் பின்னணியில் கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் பாரிஸ் பள்ளி ஆசிரியர் சாமுவேல் பட்டி பயங்கரவாதியால் கொலை செய்யப்பட்டதையடுத்து, உள்துறை அமைச்சர் டார்மனன் 75 க்கு மேற்பட்ட மசூதிகள் மூடுவதை அறிவித்துள்ளார். டஜன் கணக்கான முஸ்லிம் அமைப்புக்கள் கலைக்கப்பட்டன, மற்றும் பல்பொருள் அங்காடியின் அடுக்கு தட்டுகளில் ஹலால் மற்றும் பிற சர்வதேச உணவுகள் இருப்பதையும் கண்டித்தார். முஸ்லீம்-விரோத பிரச்சாரமானது நவ-பாசிஸ்டுகளை ஊக்குவிக்கவும், சட்டபூர்வமாக்கவும், தொழிலாள வர்க்கத்தை மத வழியில் பிளவுபடுத்தவும் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

பிரான்சிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவ ஜனநாயகம் அழுகிப் போய், உடைந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில், ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தொடர்ந்து எதிர்த்து, பதவியில் நீடிப்பதற்கான தனது உறுதியை அறிவிக்கவும் தொடர்கிறார். ஜேர்மனியில் பாசிச ஜேர்மனிக்கான மாற்றீடு (Alternative for Germany) பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக உயர்த்தப்பட்டுள்ளது. 2018 ல் இருந்து சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தில் வேலைநிறுத்தங்கள் மற்றும் இடதுசாரி ஆர்ப்பாட்டங்கள் வளர்ச்சி கண்டதற்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு சர்வாதிகாரத்தை நோக்கி திரும்புவதாகும்.

நீண்டகால பொருளாதார பூட்டுதலால் பாதிக்கப்படக்கூடிய பெரிய நிறுவனங்களின் இலாபங்களைப் பாதுகாப்பதற்காக, மில்லியன் கணக்கான மக்கள் இறந்துபோகும் தொற்றுநோய்க்கு அதன் குற்றவியல் பதிலால் தூண்டப்பட்ட சமூக எதிர்ப்பின் வெடிப்புக்கு ஆளும் உயரடுக்கு தயாரிப்பு செய்து வருகிறது. தொழிலாள வர்க்கத்தின் விடையிறுப்பு, அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலும் இருந்து சுயாதீனமாக, தொழிலாளர் அரசாங்கங்களையும் சோசலிசத்தையும் ஸ்தாபிப்பதற்கு அதனுடைய சொந்த அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதாகும்.

Loading