"தொற்றுநோயைக் கட்டுப்பாடுத்தமுடியாத மீளெழுச்சி" குறித்து விஞ்ஞான சபை எச்சரிக்கையில்

மக்ரோன் அரசாங்கம் பிரான்சில் தேசிய பொது முடக்கத்தை நிராகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று, பிரெஞ்சு அதிகாரிகள் டிசம்பர் 29 திகதியன்று 24 மணி நேர இடைவெளியில் 969 மக்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர், இது கடந்த வாரத்தில் உத்தியோகபூர்வ மொத்தத் தொகை 2,376 ஆகவும், பெருந்தொற்று நோய் தொடங்கியதிலிருந்து மொத்த எண்ணிக்கையாக 64,078 ஆகவும் இருந்தன. ஒவ்வொரு நாளும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுக்கள் பதிவாகின்றன, இருப்பினும் இது விடுமுறைக் காலத்தில் குறைக்கப்பட்ட பரிசோதனையின் காரணமாக குறிப்பிடத்தக்களவில் குறைத்து மதிப்பிடப்படுகிறது. டிசம்பர் 24 முதல் 25 வரை 48 மணி நேரத்திற்கும் மேலாக, 40,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி, நாட்டில் COVID-19 வைரஸூடன் 24,776 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

French President Emmanuel Macron (Image Credit: AP Photo/Francois Mori)

திங்களன்று, சுகாதார மந்திரி ஒலிவியே வெரான் அன்று காலை பாதுகாப்பு சபையின் கூட்டத்தை தொடர்ந்து France 2 தொலைக்காட்சி மாலை நேர செய்தி நிகழ்வில் பங்குபற்றியிருந்தார். பிரான்சில் பேரழிவுகரமான மற்றும் விரைவுபடுத்தப்பட்ட நிலைமை இருந்தபோதிலும், அரசாங்கம் "பொது அல்லது உள்ளூர் பொது முடக்கம் பற்றிய கருத்தை நிராகரிக்கிறது" என்று வெரான் அறிவித்தார். செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட ஒரே புதிய நடவடிக்கைகள், பிரான்சின் கிழக்கு பகுதியில் இருக்கும் இருபது மாவட்டங்களில், ஜனவரி 2 இல் தொடங்கி மாலை 6:00 மணி முதல் காலை 6.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் கொண்டுவரப்படலாம். முக்கியமாக, இந்த நடவடிக்கைகள் பள்ளிகளை மூடுவது, அல்லது அத்தியாவசியமற்ற பணிகளை நிறுத்துவது ஆகியவைகள் உள்ளடக்கப்பட்டதல்ல.

பிரான்சில் இந்த வைரஸின் புதிய முக்கிய பகுதியாக கிழக்கு பகுதி மாவட்டங்கள் உருவாகி வருகின்றன. டிசம்பர் 18 முதல் 24 வரை வாரத்தில், Doubs, Ardennes, Meurthe-et-Moselle, மற்றும் Alpes-Maritimes மாவட்டங்கள் 100,000 க்கு 300 க்கும் மேற்பட்ட தொற்று நிகழ்வு வீதம் அல்லது தேசிய சராசரியை விட இரு மடங்குக்கும் அதிகமாக பதிவு செய்தது. டிசம்பர் 29 அன்று, Grand-Est பிராந்தியம் 68 இறப்புக்களை பதிவு செய்தது, இது தலைநகரப் பிராந்தியத்தின் மக்கள்தொகையில் பாதிக்கு உட்பட்டிருந்தாலும் கூட, மிக உயர்ந்த தினசரி இறப்பு-எண்ணிக்கை கொண்ட பிராந்தியமாக, Île-de-France ஐ கடந்து சென்றது.

டிசம்பர் 29 அன்று பகிரங்கமான ஒரு ஆவணமானது, அரசாங்கம் நியமித்த COVID-19 விஞ்ஞான சபை டிசம்பர் 23 அன்று முன்னணி அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது என்றும், ஜனவரி மாதம் "கட்டுப்படுத்தமுடியாத முறையில் மீண்டும் தொற்று நோய் தொடங்கக்கூடும்" என்றும் காட்டியது. சபையில் மூன்று விருப்பங்களை முன்மொழிந்தது, அவற்றில் இரண்டு புதிய பொது முடக்க நடவடிக்கைகள் டிசம்பர் 28 இல் செயல்படுத்தப்பட உள்ளன, மற்றொன்று ஜனவரி 2ல் ஆகும், ஆறு நாட்கள் கழித்தும் இந்த எச்சரிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

புதிய ஆண்டில் பிரெஞ்சு தொழிலாளர்களிடமிருந்து இலாபத்தைப் பெறுவதில் எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் இருக்க மக்ரோன் அரசாங்கம் அதற்கு பதிலாக மூன்றாவது விருப்பத்தை தொடரத் தேர்ந்தெடுத்துள்ளது, இது சபையின் "பின்னைய பிரதிபலிப்பு" என்று விவரிக்கப்படுகிறது, இது உள்ளூர் மட்டத்தில் சிறிய நடவடிக்கைகளை மாற்றியமைக்கிறது, மருத்துவமனையில் சேர்க்கை விகிதங்களில் இது தங்கியிருக்கிறது. இந்த விருப்பத் தேர்வானது "மிகவும் தாமதமாக தலையிடுவதற்கான அபாயத்தை முன்வைக்கிறது, பின்னர் ஒரு மிக தாமதமாக, மேலும் கடுமையான, நீண்ட மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்" என்று சபை எச்சரித்தது.

சபையின் அறிக்கையால் கூறப்படவில்லை என்றாலும், வெளிப்படையான உட்குறிப்பு என்னவென்றால், இதில் கூடுதல் தடுக்கப்படக்கூடிய மரணங்களும் உள்ளடங்கும். மக்ரோன் அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான இறப்புகளுக்கு வழிவகுக்கும் மற்றும் மருத்துவமனை அமைப்புமுறை மூழ்கடிக்கும் ஒரு கொள்கையைப் பின்பற்றுகிறது.

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு என்பது ஒரு மிகச் சிறிய பகுதி நடவடிக்கையாகும், இது கிழக்கு பிராந்தியங்களில் வைரஸ் பரவலின் அளவிற்கு மட்டுப்படுத்தப்பட்ட விளைவை ஏற்படுத்தும். அக்டோபரில், COVID-19 கொத்தணிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை பணியிடங்கள் மற்றும் பள்ளிகளில் நிகழ்ந்ததாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. ஆயினும்கூட, வெரான் இந்தக் கண்டுபிடிப்புகள் அற்பமானவை என்று நிராகரித்தார். நேச்சர் (Nature) பத்திரிகையில் நவம்பரில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், "அமெரிக்காவில் பள்ளி மூடல்கள் COVID-19 வைரஸ் தொற்று நிகழ்வுகள் மற்றும் இறப்பு விகிதத்தை 60 சதவிகிதம் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது." அமெரிக்க மருத்துவ சங்கத்தின் பத்திரிகையில் (Journal of the American Medical Association) வெளியிடப்பட்ட மற்றொரு ஜூலை ஆய்வில், "பள்ளி மூடல் COVID-19 மற்றும்… இறப்பு ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க சரிவுடன் தொடர்புடையது" என்று கண்டறிந்துள்ளது.

"பகுத்தறிவும் விஞ்ஞானமும்" கொரோனா வைரஸ் பதிலுரைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற மக்ரோனின் கூற்றுக்கள் இருந்தபோதிலும், அவரது அரசாங்கத்தின் கொலைகாரக் கொள்கை, அரசாங்கம் நியமித்த மற்றும் சுயாதீனமான விஞ்ஞானிகளின் ஆலோசனைக்கு முன்னால் காற்றில் பறக்கிறது.

France 2 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி, தடுப்பூசியை டிசம்பர் 27 அன்று பிரான்ஸில் ஒப்புதல் பெற ஊக்குவிப்பதற்குவதற்கு வெரான் பயன்படுத்தினார். தடுப்பூசி நீண்ட காலத்தில் வைரசை கட்டுப்படுத்துவதற்கான உண்மையான சாத்தியத்தை வழங்குகிறது என்றாலும், ஒரு வெற்றிக் கதையாக அதனை முன்கூட்டியே ஊக்குவிப்பு என்பது கோடைக்கு முன்னர் பத்தாயிரக்கணக்கான கூடுதல் இறப்புக்களை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் தற்போதைய "சமூக நோயெதிர்ப்பு சக்திப் பெருக்கும்" கொள்கையிலிருந்து ஒரு சிடுமூஞ்சித்தனமான திசைதிருப்பலாக உள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, பிரான்சில் 100 பேர்கள் மட்டுமே முதல் தடுப்பூசி டோஸைப் பெற்றனர். பிப்ரவரி இறுதிக்குள் ஒரு மில்லியன் தடுப்பூசிகளின் இலக்கை அடைந்தாலும், ஆண்டு இறுதிக்குள் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்க அந்தக் காலத்திற்குப் பின்னர் ஒவ்வொரு வாரமும் மில்லியன் கணக்கானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். 90 சதவிகிதத்திற்கும் அதிகமான தொற்றுநோய்களைக் கண்டறியத் தவறிய முதல் பொது முடக்கத்திற்குப் பின்னர் செயற்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் பரவலான ஊக்குவிக்கப்பட்ட, ஆனால் கடுமையாக பற்றாக்குறையாக நிதியளிக்கப்பட்ட, பரிசோதனை மற்றும் தடமறிதல் முறையைப் போலவே, தடுப்பூசியின் அறிமுகமும் ஆளும் உயரடுக்கிற்கு இலாப நலன்களுக்கு அடிபணிய வைப்பதாக இருக்கும்.

பரிசோதனை மற்றும் தடமறிதல் திறனை விரிவுபடுத்துவதற்கும், அதிகமான சுகாதாரப் பணியாளர்களை பணிக்கு அமர்த்துவதற்கும், மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கும் மக்ரோன் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படக்கூடிய நூற்றுக்கணக்கான பில்லியன்கள் அதற்கு பதிலாக பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

வைரஸுக்கு எதிரான போராட்டத்தின் பாசாங்கைத் தக்கவைத்துக் கொள்ள அரசாங்கமானது வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளை மட்டுமே செய்துள்ளது. இது டிசம்பரில் இரண்டாவது, வரையறுக்கப்பட்ட பொது முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது, இருப்பினும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அதன் சொந்த வரையறையான தினசரி 5000 ஆக இருக்வேண்டிய தொற்று வரம்புகள் ஒருபோதும் எட்டப்படவில்லை. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இரண்டாவது அலை வேகமாக துரிதப்படுகையில், தொழிலாளர்கள் பணியில் இருந்தனர், மேலும் வேலைநிறுத்தம் செய்த மாணவர்களை பள்ளிகளுக்கு வன்முறை மூலம் கட்டாயப்படுத்த அரசாங்கம் காவல்துறையைப் பயன்படுத்தியது. இந்தக் கொள்கைகளின் விளைவாக பல்லாயிரக்கணக்கானவர்கள் தேவையில்லாமல் இறந்துள்ளனர்.

பிரித்தானியாவில் முதன்முதலில் வரிசைப்படுத்தப்பட்ட மிக மூர்க்கமான தொற்றும் மரபுவழி திரிபு வடிவ வைரஸானது டிசம்பர் 26 அன்று பிரான்சில் கண்டறிந்தது மற்றொரு கவலைக்குரிய விடையமாக இருக்கிறது. கடந்த 48 மணிநேர இடைவெளியில், பிரித்தானியாவில் 100,000 க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இது பிரான்சில் பதிவான எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகமாகும். இது ஏற்கனவே ஸ்பெயின், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பின்லாந்து மற்றும் சுவீடன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம், ஜேர்மனிய அதிகாரிகள் நவம்பர் மாதத்திலேயே மரபுவழி திரிபு வடிவ வைரஸானது நாட்டில் தொற்றியிருந்ததை வெளிப்படுத்தினார்கள்.

வைரஸின் புதிய மற்றும் இன்னும் மிக வேகமாக தொற்றுகின்ற மரபுவழி திரிபு வடிவ வைரஸின் வெளிபடலானது, கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தவேண்டிய அவசரத்தை மட்டுமே அதிகரிக்கிறது. London School of Hygiene and Tropical Medicine இன் விஞ்ஞானிகளின் குழு, இங்கிலாந்தில் வைரஸ் பரவல், புதிய மரபுவழி திரிபு வடிவத்தின் விளைவை மாதிரியாகக் கொண்டது என அறிவிக்கிறது. "நவம்பர் 2020 இல் இங்கிலாந்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய பொது முடக்கத்திற்கு ஒத்த கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கைகள், ஆரம்பப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கூட மூடப்பட்டாலொழிய, பயனுள்ள மறுவுற்பத்தி எண் R ஐ 1 க்கும் குறைவாகக் குறைக்க வாய்ப்பில்லை" என்று அவர்கள் முடிவு செய்தனர்.

இந்த மோசமான குளிர் காலத்தில், ஐரோப்பா முழுவதிலும் முதலாளித்துவ அரசாங்கங்களால் பின்பற்றப்படும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பணியிலும் மற்றும் குழந்தைகளை பள்ளியில் வைத்திருப்பது என்ற கொள்கையானது, ஒரு கொடூரமான குளிர் காலத்தில் நூறாயிரக்கணக்கான உயிர்களை இழக்கச் செய்யப்படுவதை உறுதிப்படுத்துகிறது. தடுப்பூசிகள் வெளிவரத் தொடங்கிய நிலையில், இதை நிறுத்துவதற்கு அத்தியாவசியமற்ற உற்பத்தியையும் பள்ளிகளும் மூடப்பட வேண்டும். ஆளும் உயரடுக்கின் அரசியல்-குற்றவியல் கொள்கையை எதிர்க்கவும், விஞ்ஞானரீதியில் வைரசுக்கு எதிரான போராட்டத்தை அமுல்படுத்தவும் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவது தான் தீர்க்கமான கேள்வியாக இருக்கிறது.

Loading