பள்ளிகளில் மக்ரோன் அரசாங்கத்தின் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை பிரெஞ்சு ஆசிரியர்கள் கண்டிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பள்ளிகளில் மக்ரோன் அரசாங்கத்தின் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை பிரெஞ்சு ஆசிரியர்கள் கண்டிக்கின்றனர் மத்தியில் கோபம் அதிகரித்து வருகிறது.

நேற்று இரவு, பிரதம மந்திரி ஜோன் காஸ்டெக்ஸ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், அரசாங்கம் எந்தவொரு பொதுமுடக்க நடவடிக்கைகளையும் தொடர்ந்து நிராகரிக்கிறது என்று அறிவித்தார். தினசரி தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி 20,000 க்கும் அதிகமாக உள்ளது, மற்றும் தினசரி இறப்புக்கள் 427 ஆக உள்ளன. தேசிய அளவில் 64 சதவிகிதத்திற்கும் அதிகமான அவசர சிகிச்சைக்கான படுக்கைகள் நிரப்பப்பட்டுள்ளன, தற்போது 3,277 கொரோனா வைரஸ் நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். ஆயினும்கூட காஸ்டெக்ஸ் "நிலைமை ஒரு பொதுமுடக்கத்திற்கு நியாயப்படுத்த முடியாதது" என்று அறிவித்தார்.

அவரது அறிக்கைகள், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கைகளுக்கு நேரடியாக முரண்படுகின்றன, அவர்கள் கடந்த வாரம் மக்ரோனின் அறிவிப்பை, ஒரு தேசிய பொதுமுடக்கத்தை நிராகரிப்பதை கண்டனம் செய்துள்ளனர். பிரெஞ்சு பெருநிறுவனங்களின் இலாபங்களுக்காக ஒரு பொதுமுடக்கத்தினால் ஏற்படும் எந்தவொரு தாக்கத்தையும் தடுக்க, இந்த வைரஸ் பரவ அனுமதிக்கும் கொள்கையை மக்ரோன் வெளிப்படையாக பின்பற்றி வருகிறார். Journal de Dimanche பத்திரிகைக்கு தேசிய முதலாளிகள் சங்கத்தின் தலைவரான Geoffrey Roux de Bézieux, அரசாங்கத்துடன் தொடர்ச்சியான பரிமாற்றத்தில் இருப்பதாக அறிவித்தார், மேலும் "ஒரு முழு பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்ட, கடந்த "மார்ச் மாதத்திற்கு ஒத்த ஒரு தீர்விற்கு திரும்புவதன் மீது வணிகர்கள் கோபப்படுவார்கள்" என்று கூறினார்.

பள்ளி அமைப்புமுறை என்பது இலாபங்களுக்காக உயிர்களை பலி வாங்கும் கொள்கையின் கூர்மையான மையமாகும். பிரெஞ்சு அரசாங்கம், மற்றய எந்தவொரு நாட்டையும் விட அதிக நாட்கள் இந்த பெருந்தொற்று நோய் முழுவதும் பள்ளிகள் திறந்திருப்பதாக பெருமையடித்துக் கொண்டுள்ளது. ஐரோப்பா முழுவதும் மற்றும் அமெரிக்காவைப் போலவே, குழந்தைகளும் ஆசிரியர்களும் வகுப்பறைகளில் அடைத்து வைக்கப்படுகின்றனர், இதனால் அவர்களுடைய பெற்றோர்கள் வேலைக்குச் செல்ல கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

ஆனால் சர்வதேச அளவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இக்கொள்கைக்கு எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. சிகாகோவில், 20,000 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் ஜனநாயகக் கட்சி மேயர் மற்றும் பைடன் நிர்வாகம் கோரிய நேரில் சென்று கல்விகற்க வகுப்புகள் மீண்டும் தொடங்கவேண்டும் என்பதை நிராகரித்து வாக்களித்தனர். இங்கிலாந்திலுள்ள கல்வியாளர்கள் ஜனவரி மாதம் பள்ளிகளை மூடுமாறு கட்டாயப்படுத்தினர்.

உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசிய பிரெஞ்சு ஆசிரியர்கள், சமூக இடைவெளி நடவடிக்கைகள் இல்லாமை, அவர்களுடைய மாணவர்கள் இந்த வைரஸ் தொற்றினால் இருளில் வைக்கப்பட்டிருப்பதாகவும், மற்றும் தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்படும் போது கூட பள்ளிகளின் வகுப்பறைகளில் மாணவர்களை வைத்திருக்க வேண்டும் என்ற ஒரு திட்டமிட்ட கொள்கை பற்றியும் விவரித்தனர்.

21 ஆண்டுகளாக ஆசிரியராகவும், தற்போது இரண்டாம் ஆண்டு தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் இருக்கும் ஸ்ரெஃபானி என்பவர் "தற்போதைய சூழ்நிலையால், தான் மிகவும் வருத்தத்தில் இருப்பதாகவும்" WSWS இடம் தெரிவித்தார். இன்று என் பள்ளியில் ஒரு மாணவர் வைரஸ் தொற்றுப் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது என்று கூறினார். இந்த மாணவர் கேன்டீனில் சாப்பிட்டுள்ளார் (எனவே ஒரு முகக்கவசம் இல்லாமல்), மற்றும் எவரும் ஒரு தொற்று தொடர்புடையவர்களாக கருதப்படவில்லை. என்னுடைய வகுப்பில் வைரஸ் தொற்று மாணவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஒரு வாரம் வீட்டில் இருந்தார், எந்த விளக்கமும் இல்லாமல் திரும்பி வந்துள்ளார், மற்றும் எவரும் ஒரு தொற்று தொடர்புடையவராக கருதப்படுவதில்லை ஏனெனில் எல்லோரும் ஒரு முகக்கவசம் அணிந்துள்ளனர். ஏழு வயதுடைய மாணவர்கள் எப்படி ஒரு முகக்கவசம் அணிவார்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம்."

சமூக இடைவெளிக் கொள்கையாக இருப்பது "நாங்கள் ஜன்னலைத் திறக்கிறோம்," என்று அவர் கூறினார். "தொடர்பு தடமறிதல் விதிகள் மற்றய இடங்களை விட பள்ளியில் வேறுபட்டவை: [கூறப்படுகிறது] பள்ளிகளில் எந்தத் தொடர்பும் இல்லை. இங்கு எல்லோரும் மாணவர்களாக இருப்பதால் சமூக இடைவெளி இல்லை.

அரசாங்கத்தின் கொள்கையானது "தொழிலாளர்கள் நேரடியாக ஆபத்தில் இருக்கும் அதே வேளையில் பொருளாதாரத்தைப் பாதுகாக்க பள்ளிகள் முற்றிலும் திறந்திருக்க வேண்டும்."

நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளியில் மாற்று ஆசிரியராக மூன்று வருட அனுபவம் கொண்ட ஆங்கில ஆசிரியரான எமலீன் இதே போன்ற நிலைமைகளை விவரித்தார்.

“எனது பள்ளியில் சமூக இடைவெளி எதுவும் இல்லை. எனக்கு மொத்தம் ஆறு வகுப்புகள் உள்ளன, நான் ஒரு வகுப்பிற்கு 33 மாணவர்கள் வரை கொண்டிருக்கிறேன்… நிறைய மாணவர்கள் தங்கள் முககவசங்களை சரியாக அணிவதில்லை அல்லது முககவசம் அவர்களுக்கு மிகப் பெரியதாக உள்ளது, எனவே அது நாள் முழுவதும் அவர்களின் முகத்தை விட்டு நழுவ விடுகிறது. ஒருவர் இன்று வகுப்பில் இருமியும் மற்றும் தும்மியும் கொண்டிருந்தார், ஒவ்வொரு முறையும் அவரது முககவசத்தை கீழே இழுத்துக்கொண்டார், எனவே அடுத்த நாட்களில் அந்த வகுப்பில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனது மாணவர்களில் பலர் கோவிட் தொற்றைக் பெற்றிருக்கிறார்கள், ஆனால் அதிலிருந்து மீண்டுள்ளனர். எனது பள்ளியில் நிறையக் குழந்தைகள் உள்ளனர், ஆனால் அனைத்து தொற்றுக்களும் இருந்தபோதிலும் பள்ளி மூடப்படவில்லை.”

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவருக்கும் வளங்களை அதிக அளவில் முதலீடு செய்வதன் மூலம் பள்ளிகள் மூடப்பட்டு இணையவழி கற்றல் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்று தான் நினைத்தேன். "அரசாங்கம் உண்மையான தீர்வுகளில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்," என்று அவர் கூறினார். "முதலாவது பொதுமுடக்கத்தின் போது என்ன நடந்தது என்பது ஒரு முழுமையான நகைச்சுவையாகும்: எங்களுக்கு வேலை செய்ய எதுவும் இல்லை. எங்கள் புத்தகங்கள், எங்கள் கணினிகள், எங்கள் வைஃபை, எங்கள் மொபைல் போன்கள்… இது முற்றிலும் பயங்கரமானது. ஒரு வகுப்பிற்கு / ஒரு நிலைக்கு சரியான இணையவழி ஆதாரங்கள் அவர்களிடம் இருந்தால், நாங்கள் இணையவழி கற்பித்தலைச் செய்ய முடியும், இது அனைவருக்கும் மிகவும் எளிதாக இருக்கும் என்று நான் நேர்மையாக நினைக்கிறேன். எந்த பயணமும் இல்லை, நெரிசலான வகுப்பறைகளும் இல்லை, முககவசம் அணியாமல் இருக்கலாம் மற்றும் உங்கள் வகுப்பு தோழர்களுக்கு தொற்று ஏற்படாது.”

"நாங்கள் 'பலியாக்கப்பட்டவர்கள்' என நான் உண்மையில் உணர்கிறேன்," என அவர் மேலும் கூறினார். பள்ளி திறப்புகளுக்கு எதிராக சிகாகோ ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் பற்றி தான் முன்பு கேள்விப்பட்டதில்லை, ஆனால் அதற்கு ஆதரவு அளிப்பதாக அவர் கூறினார். "ஆஹா, எனக்கு [அதைப் பற்றி] தெரியாது! அவர்களுக்கு நல்லது!" ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆசிரியர்கள் ஒன்றுபட்ட போராட்டம் நடத்த வேண்டும் என்று தான் நினைப்பதாக அவர் மேலும் கூறினார். "நான் முற்றிலும் அதை ஒப்புக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார். "நான் சுரண்டப்படுவதை விட சோர்வாக இருக்கிறேன்... நாம் முக்கியமில்லை போல் இருக்கிறது. குறைந்த ஊதியம், கண்ணுக்கு தெரியாமல்: வெறும் வேலைக்கு செல் வாயை மூடு."

17 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒரு நடுநிலைப் பள்ளி ஆசிரியரான கிளேர், அரசாங்கம் "பெரும் செல்வந்தர்களையும் பங்குதாரர்களையும்" பாதுகாக்கிறது என்று கூறினார், அதனால்தான் பள்ளிகள் திறந்தே வைக்கப்படுகின்றன. "பள்ளிகளை மூடுவது குழந்தைகளுக்கு ஒரு பேரழிவாக இருக்கும் என்று கூறி அவர்கள் அதை மூடிமறைக்கிறது தான் மோசமானது."

"குழந்தைகள் ஆபத்தில் தள்ளப்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன், ஆனால் கல்வி அமைச்சகம் ஆரம்பத்தில் இருந்தே பள்ளி அமைப்புமுறை பாதுகாப்பானது மற்றும் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாது என்று வலியுறுத்தியது ... அக்டோபரில், நாங்கள் ஒரு டஜன் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் இருந்தன, ஆனால் வைரஸ் தொற்று ஏற்பட்ட சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு தொடர்ந்து அனுப்புகின்றனர், மற்றும் மற்றய மாணவர்கள் ஒருபோதும் பரிசோதிக்கப்படவில்லை. கடந்த மூன்று வாரங்களாக, எங்களுக்கு தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. அக்டோபரில், 5 ஆசிரியர்கள் தொற்றுக்கு உள்ளானார்கள், அவர்களில் இரண்டு பேர் நிச்சயமாக பள்ளியில் உள்ளனர்.

மக்ரோன் அரசாங்கமானது அதன் குற்றவியல் கொள்கைக்காக தொழிற்சங்கங்களிடமிருந்து அது பெற்ற முழு ஆதரவு காரணமாக மட்டுமே பள்ளிகளைத் திறக்க முடிந்தது. தேசிய கல்வி சங்கங்கள் பாடசாலைகளை திறந்து வைக்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றன. அவர்கள் மக்ரோன் அரசாங்கத்தின் பொய்க்கூற்றை பாதுகாப்பதற்காக, திறமையான தொலைதூரக் கற்றல் ஏற்பாடு திறனாக செய்ய முடியாது என்று கூறுகின்றனர், எனவே ஆசிரியர்கள் பள்ளிகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

நவம்பர் மாதம், நாடெங்கிலுமுள்ள டஜன் கணக்கான பள்ளிகளில் வேலைநிறுத்தங்கள் வெடித்தன. தொழிற்சங்கங்கள் ஒரு நாள் "எச்சரிக்கை வேலைநிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்ததன் மூலம் விடையிறுக்கப்பட்டன, அவைகள் பள்ளிகளை மூடுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக பள்ளிகளை மூடவேண்டும் என்ற கோரிக்கைகளையும், போராட்டத்தையும் நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்பதை தெளிவுபடுத்தின.

மக்ரோன் அரசாங்கத்தின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைக்கு எதிராக ஒரு போராட்டம் ஒழுங்கமைக்கப்பட வேண்டுமானால், அதை கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களே ஏற்பாடு செய்ய வேண்டும். கல்வியாளர்கள் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை பள்ளிகளில் உருவாக்க வேண்டும், தொழிற்சங்க எந்திரங்களிலிருந்து சுயாதீனமாக அது இருக்க வேண்டும், மேலும் பிரான்சிலும் ஐரோப்பாவிலும் இணையவழியில் பிற ஆசிரியர்களை அணுக வேண்டும். பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுவதற்கு ஐரோப்பிய அளவிலான வேலைநிறுத்தத்தைத் தயாரிப்பதற்கான வழிமுறைகளை இது வழங்கும், இதனால் தடுப்பூசி மக்களுக்கு பாதுகாப்பாக வழங்கப்படும். தொலைதூரக் கற்றலுக்காக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையான அனைத்து வளங்களையும் வழங்குவதற்கும், பெற்றோர்கள் வீட்டிலேயே இருப்பதற்கும், தங்கள் குழந்தைகளைப் பராமரிப்பதற்கும் ஒரு வருமானத்தை வழங்குவதற்கும் ஏராளமான வளங்கள் செலவிடப்பட வேண்டும்.

Loading