பெருந்தொற்று நோய்களின் போது இதுவரை கண்டிராத COVID-19 தொற்றுக்கள் இந்தியாவில் பதிவாகியுள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

1.366 பில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, புதன்கிழமை ஒரு நாடு உலகளவில் இதுவரை கண்டிராத COVID-19 நோயாளிகளை பதிவு செய்தது. ஜனவரி 8, 2021 அன்று அமெரிக்காவானது அதன் கொடூரமான குளிர்கால எழுச்சியின் போது 307,581 கோவிட் நோயாளிகளின் முந்தைய சாதனையை படைத்தது. பிப்ரவரி 11 அன்று 10,000 க்கும் குறைவான தொற்றுக்களுக்குப் பின்னர், ஏப்ரல் 21, 2021 அன்று இந்தியா 315,728 தொற்றுக்களை உறுதிப்படுத்தியது. புதிய கோவிட் நோயாளிகளின் நாட்டின் தொற்றுநோயியல் வளைகோடு, தொடர்ந்து மேல்நோக்கி சுழன்று செல்கிறது.

உலகளவில், கோவிட்-19 இனால் 144.4 மில்லியன் நோயாளிகள் பதிவாகியுள்ளனர், 3 மில்லியனுக்கும் அதிகமான இறப்புக்கள் பதிவாகியுள்ளன. இது உலக மக்கள் தொகையில் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பெரும்பாலான நோய்த்தொற்றுகள் அறிகுறியற்றவை என்பதால், நோயின் உண்மையான அளவு இன்னும் தெரியவில்லை. உலக சுகாதார அமைப்பு (WHO) 2020 அக்டோபரில் உலக மக்கள் தொகையில் சுமார் 10 சதவிகிதத்தினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு மதிப்பீட்டைச் செய்தது. ஒருவேளை உண்மையான எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கலாம், ஆனால் எந்த அர்த்தமுள்ள சமூக நோயெதிர்ப்பு சக்தியிலிருந்தும் (herd immunity) வெகு தொலைவில் உள்ளது என்று ஒருவர் ஊகிக்க முடியும்.

இந்த ஏப்ரல் 15, 2021 இல், மருத்துவ ஊழியர்கள் நோர்மண்டி, ரூவன் நகரிலுள்ள சார்லஸ் நிக்கோல் பொது மருத்துவமனையிலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிகயை பராமரிக்கிறார்கள். பல ஐரோப்பிய நாடுகளிலுள்ள மருத்துவமனைகள் மீண்டும் நெருக்கடியில் உள்ளன, கடுமையான கோவிட்-19 கொண்ட இளம் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கின்றனர் ஏனெனில் வயதான குழுக்கள் தடுப்பூசிகளால் பயனடைகின்றனர். (AP Photo/Christophe Ena, File)

செல்வந்த நாடுகள் தங்கள் மக்களுக்கு விரைவாக கோவிட்-19 தடுப்பூசிகளை நோயெதிர்ப்பிற்கு பயன்படுத்தியுள்ளதால், தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கையைத் தவிர, பெருந்தொற்று நோயின் தாக்கம் தெற்காசியாவிற்கு மாறியுள்ளது, குறிப்பாக இந்தியாவில் மில்லியன் கணக்கான வறிய மற்றும் ஆதரவற்றவர்களுக்கு தடுப்பூசிகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்பது நம்பிக்கையற்ற விஷயமாக உள்ளது. அதன் மக்கள் தொகையில் 8 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் கோவிட்-19 தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸைப் பெற்றுள்ளனர்.

உலகளவில், 871,000 க்கும் மேற்பட்ட புதிய கோவிட்-19 நோயாளிகளின் புதிய ஒரு நாள் அதிகபட்ச உயர்வும் பதிவாகியுள்ளது. புதிய கோவிட் நோயாளிகளின் ஏழு நாள் நகரும் சராசரி ஒவ்வொரு நாளும் 790,000 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளுடன் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது மற்றும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒப்பிடுகையில், கடந்த உலகளாவிய எழுச்சியின் குளிர்கால உச்சம் ஜனவரி 12, 2021 அன்று 746,000 க்கு நெருக்கமாக வந்தது. கடந்த வாரம் 5.27 மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளானது இது முந்தைய வாரத்தை விட 15 சதவீதம் அதிகமாகும். தொற்றுக்கள் தொடர்ந்து எட்டு வாரங்களாக உயர்ந்து வருகின்றன. இந்த வேகத்தில் சென்றால், தினசரி கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அடுத்த மாதத்திற்கு முன்பு எளிதாக 1 மில்லியனை அடைய முடியும்.

இறப்பு எண்ணிக்கையின் நகரும் சராசரி இப்போது நாளொன்றுக்கு 12,000 க்கும் அதிகமான உயிரிழப்புகளும் மற்றும் அதிகரித்தும் வருகிறது. கோவிட் தொற்றுகளின் தாமதமான குறிகாட்டியாக மரணங்கள் இருப்பதால், கடந்த எழுச்சியின் உச்சநிலை ஜனவரி 27 அன்று நாளொன்றுக்கு 14,408 இறப்புக்களை எட்டியது. இந்த உயர்வானது விரைவில் விஞ்சிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அதிகாரபூர்வ கோவிட் நோயாளிகள் 16 மில்லியனாக வேகமாக நெருங்கி வருகின்றது, இதுவரை 184,000 க்கும் அதிகமான மக்கள் தங்கள் தொற்றுகளால் மடிந்துள்ளனர். நேற்று மேலும் 2,100 பேர் உயிரிழந்தனர். ஏழு நாள் இறப்புக்களின் சராசரி முதல் அலையை விஞ்சிவிட்டது, ஏனெனில் அது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்த கொடூரமான புள்ளிவிவரங்கள் இருந்தபோதிலும், அதே காலகட்டத்தில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் தகனம் செய்யும் எண்ணிக்கை குறித்து பைனான்சியல் டைம்ஸ் பெற்ற தரவுகளானது பொது சுகாதார அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் எண்ணிக்கையை விட இறப்பு எண்ணிக்கைகள் 10 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன. ஆயினும்கூட, மூத்த சுகாதார அதிகாரிகள் இந்த புள்ளிவிவரங்களை குறைத்து மதிப்பிட முயற்சித்துள்ளனர், "கோவிட் நெறிமுறைகளைப் பயன்படுத்தி தகனம் செய்யப்பட்டதால்" எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டது என்று கூறியுள்ளனர்.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் உயிரியல் புள்ளியியல் மற்றும் தொற்றுநோயியல் பேராசிரியரான டாக்டர் பிரமர் முகர்ஜி, அதிகாரிகள் "தரவுகள் தர மறுப்பு" நிலையில் உள்ளனர். "எல்லாம் மிகவும் தெளிவற்ற சகதியாகவுள்ளது. நிலைமையை யாரும் தெளிவாக புரிந்து கொள்ளவில்லை என்று உணரப்படுகிறது, அது மிகவும் எரிச்சலூட்டுகிறது" என்று ராய்ட்டர்இடம் கூறினார்

பைனான்சியல் டைம்ஸ் மூத்த தரவுகள்-காட்சிப்படுத்தல் பத்திரிகையாளரான ஜோன் பர்ன்-முர்டோக் தனது ட்டுவிட்டர் பதிவில் விளக்கினார்: "நான் ஏழு மாவட்டங்களில் செய்தி அறிக்கைகளை ஒருங்கிணைத்தேன், ஒட்டுமொத்தமாக, தகனம் செய்யப்பட்ட கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதே பகுதிகளில் அதிகாரபூர்வ கோவிட் இறப்பு எண்ணிக்கையை விட பத்து மடங்கு பெரியதாக இருக்கின்றன." இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் பிரதேசத்தில், கோவிட்-19 க்கான தகன எண்ணிக்கை உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையை விட 24 மடங்கு அதிகமாக இருந்தது. குஜராத் மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமான வதோதராவில் இது 21 மடங்காக இருந்தது.

இந்த உறுதிப்படுத்தல்களை கருத்தில் கொண்டு, தனிநபர் அடிப்படையில், இது பெருந்தொற்று நோயுடன் அமெரிக்காவின் அனுபவத்தின் மிக மோசமான நிகழ்வு காலத்திற்கு இணையாக இந்தியாவின் இறப்பு எண்ணிக்கையை வைக்கிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, இது தற்போதைய எழுச்சியின் தொடக்கம் தான்.

குஜராத்திலுள்ள சுடுகாடுகளிலுள்ள தகன உலைகள் மிகவும் தீவிரமாகவும் இடைவிடாமலும் இயங்கி வருகின்றன, இதனால் உலோகத் ஆதரவுத் தகடுகள் உருகத் தொடங்கியுள்ளன. வைரங்களின் மெருகூட்டலுக்கு பெயர் பெற்ற சூரத்தில் சுடுகாட்டை நடத்தும் அறக்கட்டளையின் தலைவரான கமலேஷ் செயிலர், ராய்ட்டர்செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "உடல்களை சரியான நேரத்தில் தகனம் செய்ய 100 சதவீத திறனில் நாங்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறோம்" என்றார். அவர்களின் சுடுகாட்டரங்கில் ஆறு எரிவாயு உலைகள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

அஸ்வினிகுமார் என்ற சுடுகாட்டை நிர்வகிக்கும் பிரசாந்த் கப்ராவாலா ராய்ட்டர்இடம் கூறுகையில், கடந்த சில வாரங்களில் தகனம் மூன்று மடங்கிற்கு மேல் அதிகரித்திருக்கிறது என்றார். அவர் குறிப்பிட்டார், "நான் தொடர்ந்து 1987 முதல் சுடுகாட்டிற்கு சென்று வருகிறேன், 2005 முதல் அதன் அன்றாட செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளேன், ஆனால் இத்தனை ஆண்டுகளாக பல சடலங்கள் தகனம் செய்ய வருவதை நான் பார்த்ததில்லை."

வழக்கமான செய்தி நிகழ்வாக மாறி பேசப்படுவதாக இருப்பது, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டைய நகரமான நாசிக் நகரில் உள்ள நகராட்சி மருத்துவமனையான 150 படுக்கைகள் கொண்ட டாக்டர் ஜாகிர் ஹுசைன் மருத்துவமனையில் ஒரு மருத்துவ ஆக்ஸிஜன் தொட்டி கசிந்ததால், சுவாச வென்டிலேட்டர்களை நம்பியிருந்த 24 கோவிட்-19 நோயாளிகளின் மரணத்திற்கு வழிவகுத்தது என்று இப்போதுதான் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையின் முக்கிய சேமிப்பு தொட்டிகளில் ஏற்பட்ட செயலிழப்பு நோயாளிகளின் மூச்சுத்திணறலுக்கு வழிவகுத்த பின்னர் ஆக்ஸிஜன் விநியோகம் திடீரென்று நிறுத்தப்பட்டது. அவர்களில் 11 பேர்கள் 33 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, 13 கிலோ லீட்டர் ஆக்ஸிஜன் டாங்கிகள் சமீபத்தில்தான் செயற்படத் தயாராக இருந்தன.

"பூர்வாங்க தகவலின்படி, இணைக்கும் பகுதி ... ஆக்ஸிஜன் தொட்டி உடைந்தது, இது தொட்டியில் கசிவு மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தை பாதித்தது. நோயாளிகளுக்கு உதவ மருத்துவமனை ஜம்போ சிலிண்டர்களைப் பயன்படுத்தியது. நகர்த்தப்படக்கூடிய சில நோயாளிகள் மற்றய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும், விநியோகம் திடீரென்று துண்டிக்கப்பட்டதால் 22 நோயாளிகள் இறந்தனர்." மாலையில் மேலும் இருவர் இறந்தனர்.

இறுதியில் மருத்துவமனைகளுக்கு வரும் பல நோயாளிகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதற்கு முன்பு இறக்கின்றனர். பலர் ஏற்கனவே தங்கள் குடும்பங்களால் இறந்து அங்கு கொண்டு வரப்படுகிறார்கள். பெரும்பாலானவை சோதிக்கப்படாதவை, இது உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் மற்றும் என்ன நடக்கிறது என்பதற்கு இடையே ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. இந்தியாவில் கால் பங்கிற்கும் குறைவான இறப்புக்கள்தான் உத்தியோகபூர்வமாக ஒரு மருத்துவ பரிசோதகரால் சான்றளிக்கப்படுகின்றன, இது பெருந்தொற்று நோயின் அளவை உறுதிப்படுத்துவது சவாலாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்தியாவின் தலைநகரான டெல்லி ஒரு வார கால பொதுமுடக்கத்தை அறிவித்தது, இது அரசாங்க அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை திறந்திருக்க அனுமதித்தது, இது அர்த்தமற்ற நடவடிக்கைக்கு சமமாகும். நகரத்தின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு இணையவழி செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் திறனில் இருப்பதாகவும், மருத்துவ ஆக்ஸிஜன் கடுமையான பற்றாக்குறையில் இருப்பதாகவும் ஒப்புக்கொண்டார். ஆனால் பின்னர் அவர் மேலும் கூறினார், "நான் எப்போதும் பொதுமுடக்கங்களுக்கு எதிராக இருந்திருக்கிறேன், ஆனால் இது டெல்லியிலுள்ள மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எங்களுக்கு உதவும்." இந்த அரசியல் சாகசங்கள், பெருந்தொற்று நோய் பேரழிவை ஏற்படுத்தியுள்ள ஒவ்வொரு கண்டத்திலும் அரசியல்வாதிகளால் ஒரே மாதிரியாக மீண்டும் மீண்டும் வந்துள்ளன. குறுகிய கால அரைமனதுடன் நடவடிக்கைகளால் மிகச் சிறிதளவுதான் அடையப்படும்.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, பெரும் நிறுவனங்களின் நலன்களுக்கு கட்டுப்பட்டவர், நாடு தழுவிய முழு பொதுமுடக்கத்தை நடைமுறைப்படுத்த மாட்டேன் என்று பிடிவாதமாக உள்ளார். ட்ரம்பைப் போலவே, இந்தியாவும் பெருந்தொற்று நோயிலிருந்து "காப்பாற்றப்பட மாட்டாது" என்று அவர் அறிவித்தார், ஆனால் ஒரு பொதுமுடக்கமானது நாட்டின் பொருளாதாரத்திற்கு பேரழிவைக் கொண்டு வரும் என்றார். இந்த பெருந்தொற்று நோய் பரவுவதற்கு முந்தைய ஆண்டில் ஆக்ஸ்பாம் கருத்துப்படி, இந்தியாவின் செல்வந்தர்கள் 1 சதவிகிதத்தினர் அதன் செல்வத்தில் 73 சதவீதத்தை வைத்திருந்தனர், அதே நேரத்தில் மிக வறிய பாதிளவைக் கொண்ட 670 மில்லியன் மக்கள், தங்களுடைய செல்வத்தில் 60 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளனர்.

Loading