செவ்வாய் கிரகத்தில் தானியங்கி ஹெலிகாப்டர் மற்றொரு உலகில் முதல் காற்றாடியால் இயங்கும் பறத்தலை நிறைவு செய்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்கள்கிழமை அதிகாலை, சிறிய தானியங்கி ஹெலிகாப்டர் இன்ஜெனுயிட்டி (Ingenuity - கூர்மதித்திறன்) மனித வரலாற்றில் மற்றொரு கிரகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பறத்தலை வெற்றிகரமாக நிகழ்த்திய முதல் வான்கலமாகியது. ஜெட் உந்துவிசை ஆய்வகத்தில் (JPL- Jet Propulsion Laboratory) இன்ஜெனுயிட்டி குழுவானது கிழக்கத்தைய நேரப்படி 6:46 மணிக்கு வெற்றிகரமாக பறத்தலிருந்து தரவைப் பெற்றது. இது செவ்வாய் கிரகத்தின் சுற்றுமண்டலத்தில் பறப்பதன் மூலம் பரந்த தொழில்நுட்ப சாதனைகள் மற்றும் விஞ்ஞான சாத்தியங்களை நிரூபித்தது.

நாசாவின் பேர்செவெரன்ஸ் (Perseverance – விடாமுயற்சி) என்ற விண்கலம் படம்பிடித்த இந்த வீடியோவில், நிறுவனத்தின் இன்ஜெனுயிட்டி செவ்வாய் கிரக ஹெலிகாப்டர் ஏப்ரல் 19, 2021 அன்று மற்றொரு கிரகத்தில் முதல் சக்திவாய்ந்த, கட்டுப்படுத்தப்பட்ட பறத்தலை நிகழ்த்தியது. Credit: NASA/JPL-Caltech/ASU/MSSS

"எங்கள் ரைட் சகோதரர்களை செவ்வாய் கிரகத்தில் இருத்துவதைப் பற்றி நாங்கள் நீண்ட காலமாக யோசித்து வருகிறோம், அது இங்கே நிகழ்ந்துள்ளது" என்று JPL இல் இன்ஜெனுயிட்டியின் திட்ட மேலாளர் மிமி ஆங் அவரது சக செவ்வாய் கிரக ஆய்வாளர்களின் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் கூறினார். "நாங்கள் எங்கள் வெற்றியைக் கொண்டாட ஒரு கணம் எடுத்துக்கொள்வோம், பின்னர் ஓர்வில் மற்றும் வில்பரிடமிருந்து அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஒரு குறிப்பை எடுப்போம். அவர்களது புதிய விமானம் பற்றி தங்களால் இயன்றவரை கற்றுக்கொள்ள அவர்கள் மீண்டும் வேலைக்கு வந்ததாக வரலாறு காட்டுகிறது. நாங்களும் அதை செய்வோம்” என்றார்.

செவ்வாய் கிரகத்தின்படி 12:33 மணிக்கு, ரைட் சகோதரர்கள் தளம் என அழைக்கப்படும் ஒரு "ஓடுபாதை" செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து இன்ஜெனுயிட்டி மேல் எழும்பியது. சூரிய சக்தியால் இயங்கும் காற்றாடிக்கு அதிகபட்ச சூரிய ஒளி மற்றும் உகந்த பறக்கும் சூழ்நிலைமைகளை வழங்குவதற்காக இந்த நேரம் முன்னர் இன்ஜெனுயிட்டி கட்டுப்பாட்டாளர்களால் தீர்மானிக்கப்பட்டது. அதன் உள் உயரம் அளக்கும் கருவி மற்றும் பிற கருவிகளில் இருந்து திரும்பிக்கிடைத்த தரவு பறப்பின் ஒவ்வொரு அம்சமும் திட்டமிட்டபடி சென்றது என்பதை உறுதிப்படுத்தியது: 39.1 வினாடிகளுக்கு மேல், ஹெலிகாப்டர் அதன் காற்றாடிகளை மேலே சுழற்றி, மேலெழுந்து அதிகபட்சமாக மூன்று மீட்டர் உயரத்திற்கு எழும்பி, வட்டமிட்டு காற்பகுதி திருப்பத்தை எடுத்து தொடர்ந்து வட்டமிட்டு இறங்கி, இறுதியாக சிவப்பு கிரகத்தைத் தொட்டது.

ஹெலிகாப்டர் பறத்தலில் இருந்தபோது இந்த படத்தை இன்ஜெனுயிட்டியின் உள்ள வழிகாட்டும் புகைப்படகருவி பிடித்தது. இந்த கலம் செவ்வாய் கிரகத்தின் மூன்று மீட்டர் உயரத்தில் சுற்றிக்கொண்டிருந்தது, அதன் நிழலை படத்தின் மையத்தில் காணலாம். Credit: NASA/JPL-Caltech

இன்ஜெனுயிட்டியின் தாய்க்கலமான பேர்செவெரன்ஸ் (Perseverance) வானூர்தியில் இருந்து பெற்ற படங்கள், வெற்றிகரமான பறத்தலை உறுதிப்படுத்தியது. பேர்செவெரஸின் Mast Cam Z கருவி ஹெலிகாப்டரின் பறத்தலை ஒரு குறுகிய ஒளிப்பதிவாக உருவாக்கியது. இது கிரக ஆராய்ச்சியில் இந்த புதிய முதல் நிகழ்வைப் படம்பிடித்தது.

விண்வெளி பயணத்தின் அனைத்து சாதனைகளையும் போலவே, செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இயங்கும் முதல் பறத்தலுக்கும் மிகவும் கடின உழைப்பு தேவைப்பட்டது. இந்த சிரமங்களில் ஒன்று கடந்த வாரம், விண்கலம் முதன்முதலில் பறக்க திட்டமிடப்பட்டபோது, பறப்பதற்கு முந்தைய காற்றாடியின் சோதனையின் போது பிழை கண்டறியப்பட்டபோது வெளிப்பட்டது. சிக்கலை பல நாட்கள் கவனமாக ஆராய்ந்த பின்னர், புதுப்பிக்கப்பட்ட மென்பொருளானது இன்ஜெனுயிட்டிக்கு பதிவேற்றப்பட்டது. இது அதன் உள் வழிகாட்டுதலை வழிசெலுத்தல், மேலெழுவதற்கான மற்றும் தடையின்றி தரையிறங்குவதற்கான கட்டுப்பாட்டு அமைப்புகளை எடுத்துக்கொள்ள அனுமதித்தது.

மேலும், பூமியும் செவ்வாயும் தற்போது சுமார் 288 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. அதாவது வானலை சமிக்கைகள் அந்த தூரத்தை கடக்க 16 நிமிடங்களுக்கு மேல் ஆகும். இதன் பொருள் வானூர்தியை உண்மையான நேரத்தில் இயக்கப்பிடி கருவியின் (joystick) மூலம் பறக்க வைக்க முடியாது. இதனால் பறத்தல் தன்னியக்கமாக நிகழ வேண்டும். கூடுதலாக, ஈர்ப்பு விசை இருக்கையில் பறக்க இது வடிவமைக்கப்பட வேண்டும். இது பூமியின் மூன்றில் ஒரு பங்கும், அதன் சுற்றுமண்டலம் பூமியை விட ஒரு சதவீதம் அடர்த்தியானது.

ஹெலிகாப்டர்வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர் பேர்செவெரன்ஸ் தன்னையும் இன்ஜெனுயிட்டியையும் படம்பிடித்தது. Credit: NASA/JPL-Caltech/MSSS

இன்ஜெனுயிட்டி (கூர்மதித்திறன்) என்பது நாசாவின் செவ்வாய் கிரக 2020 பணியின் ஒரு அங்கமாகும். இதில் பேர்செவெரன்ஸ் விண்கலமும் அடங்கும். பயணத்தின் முக்கிய அம்சம் வான்கலம் மற்றும் அதன் விரிவான வானுயிரியல் பரிசோதனை பிரிவான இன்ஜெனுயிட்டியும் செவ்வாய் சுற்றுமண்டலத்தில் பறப்பதில் உள்ள சிரமங்களைப் பற்றிய நுண்ணறிவை வழங்குவதற்காக ஒரு சோதனை தளமாகச் சேர்க்கப்பட்டது. பல வழிகளில், இது செவ்வாய் ஆராய்ச்சி பணி மற்றும் அதனுடன் இணைந்த விண்கலமான சோஜோர்னர் (Sojourner) போன்றது. இது 1997 இல் தரையிறங்கியது மற்றும் பெரும்பாலும் புதிய தொழில்நுட்பங்களை பரிசோதிக்கவும் எதிர்கால பயணங்களுக்கான அடித்தளத்தை அமைப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இருபத்தி நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், பேர்செவெரன்ஸ் மற்றும் இன்ஜெனுயிட்டி இரண்டும் அந்த மரபில் ஒரு உருவாக்கமும், தொடர்ச்சியுமாகும்.

இப்போது இன்ஜெனுயிட்டிக்கான அடிப்படை திறன்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மேலும் பல பறத்தல்கள் முயற்சிக்கப்படவுள்ளது. வியாழக்கிழமை திட்டமிடப்பட்டுள்ள முதலாவது பறத்தலின்போது, ஹெலிகாப்டர் பறக்கும்போது இரண்டு மீட்டர் பக்கவாட்டுக்கு நகரும். அதன் பின்னர் அது புறப்பட்ட நிலைக்கு நகர்ந்து பின்னர் தரையிறங்கும். அதன் மூன்றாவது பறத்தல் இந்த பறக்கும் தூரத்தை 50 மீட்டர் நீட்டித்து பின்னர் திரும்பும்.

இந்த ஆரம்ப பறத்தல்களின் தரவு இன்னும் முழுமையாக பகுப்பாய்வு செய்யப்பட்ட பின்னர் நான்காவது மற்றும் சாத்தியமான ஐந்தாவது பறத்தல்களுக்கான திட்டங்கள் முடிவு செய்யப்படும். சேகரிக்கப்பட்ட உண்மையான தரவு பல நூறு உருவகப்படுத்திப் பார்க்கப்பட்ட பரிசோதனை பறத்தல்களுடன் நெருக்கமாக பொருந்துகிறது என்பதை அனைத்து ஆரம்ப அறிகுறிகளும் காட்டுகின்றன. இன்று காலை வெற்றிக்கு முன்னதாக நிகழ்த்தப்பட்ட இன்ஜெனுயிட்டி குழு, அதாவது அந்த இறுதி பறத்தல்களுக்கான பறத்தல் சுயதரவுகள் பெரிதும் விரிவாக்கப்பட வாய்ப்புள்ளது என்றது. பறந்ததற்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பின் போது, ஆங் புதிய தொழில்நுட்பத்தை முடிந்தவரை முன்னோக்கித்தள்ள “600 அல்லது 700 மீட்டர்” பறக்க விரும்புவதோடு, “அதிக, வேகமான மற்றும் தூரத்திற்கு” பறக்க விரும்புவதாக கூறினார்.

சுற்றி பறப்பதைத் தவிர, செவ்வாய் நிலப்பரப்பை சுற்றிவருதல், தரையிறக்குதல் மற்றும் கணக்கெடுப்பு ஆகியவற்றிற்காக இன்ஜெனுயிட்டியானது ஒரு உயர் தெளிவுதிரைத்திறன் (high-resolution) கொண்ட கீழ்நோக்கி காணப்படும் ஒளிப்பதிவு கருவிகளைக் கொண்டுள்ளது. திருப்பி அனுப்பப்பட்ட ஆரம்ப புகைப்படங்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தன. வண்ணப் படங்கள் வரும் நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டநேர பறத்தல்கள் மேற்கொள்ளப்பட்டால், பேர்செவெரன்ஸ் பயணிப்பதற்கும் மேலதிக ஆய்வு செய்வதற்கும் சாத்தியமான ஆர்வமுள்ள பகுதிகளைத் தேடுவதற்கு அடுத்தடுத்த படங்கள் பயன்படுத்தப்படும்.

நாசாவின் இன்ஜெனுயிட்டி ஹெலிகாப்டர்அதன் முதல் பரிசோதனை பறத்தலை சிவப்பு கிரகத்தில் முயற்சிக்கும்போது, இந்த கலைவடிவ உள்ளடக்கத்தில் காணப்படுவது போல், செவ்வாய் 2020 பேர்செவெரன்ஸ் விண்கலம் அருகில் காணப்படுகின்றது. Credit: NASA

எவ்வாறாயினும், இத்தகைய பறத்தல்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். ஏப்ரல் 3 ஆம் தேதி பேர்செவெரன்ஸ் ஆல் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இன்ஜெனுயிட்டி இறக்கப்பட்டதிலிருந்து, விண்கலத்தின் செயல்பாடுகள் பெரும்பாலும் ஹெலிகாப்டருக்கு ஆதரவை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளது. அதற்கும் பூமிக்கும் இடையிலான தகவல்தொடர்பு காவியாக செயல்படுவதோடு, அதன் பறத்தல்களை காலஅட்டவணைப்படுத்துவதையும் செய்கின்றது. பரிசோதனை பறத்தல்கள் முடிந்தவரை சீராக செல்வதை உறுதி செய்வதற்காக, தற்போது Van Zyl Overlook என்றழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 64 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ள பேர்செவெரன்ஸ் எவ்வித விஞ்ஞானரீதியான பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

எனவே, மே மாத தொடக்கத்தில் பேர்செவெரன்ஸ் தனது திட்டமிடப்பட்டுள்ள வழமையான செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும்போது, இன்ஜெனுயிட்டின் செயற்பாட்டிற்கான 30 நாள் கால இடைவெளி நிறைவுசெய்யும் அந்த நேரத்தில், ஹெலிகாப்டர் அதன் வடிவமைப்பு விவரக்குறிப்புகளின் எல்லையைத் தாண்டி உடைந்துபோகவும் செயலிழக்கவும் செய்யப்படும். மேலும் முக்கிய செவ்வாய் 2020 திட்டம் தொடரும்.

பின்னர், இன்ஜெனுயிட்டின் பறத்தல்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் எதிர்வரவிருக்கும் ஆண்டுகளில் கவனமாக கற்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்படும். அதிலிருந்து என்ன கற்றுக் கொள்ளப்பட்டது மற்றும் எதிர்கால வேற்று கிரக விமானங்களின் வடிவமைப்பை பற்றிய எவ்வாறான தகவல்களை தரும் எனவும் பார்க்கப்படும். எதிர்கால செவ்வாய் கிரக விண்கலங்களை உருவாக்க ஏற்கனவே யோசனைகள் உள்ளன. அவை எங்காவது இறங்க வேண்டிய அவசியமின்றியும், பெரியதாகவும் மற்றும் சுற்றுக்கலங்களுடன் தொடர்பு கொள்ளும் திறன் கொண்டதாகவும், இது நீண்ட மற்றும் அதிக சிக்கலான பணிக்கும் அனுமதிக்கும்.

இன்ஜெனுயிட்டியிலிருந்து கற்றுக் கொள்ளப்பட்டவை, சனியின் மிகப்பெரிய சந்திரனான டைட்டனுக்கு திட்டமிடப்பட்ட ஒரு பயணமான Dragonfly க்கான வழிகாட்டுதலையும் வழங்கும். Dragonfly 2027 ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது டைட்டனின் மேற்பரப்பில் ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு பறக்க வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் சந்திரனின் அசாதாரண தனித்துவமான மற்றும் சிக்கலான வேதியியலை ஆராயும். இது இன்ஜெனுயிட்டியிலிருந்து இதுவரை கற்றுக்கொண்ட அனைத்திலிருந்தும், இன்னும் கற்றுக்கொள்ளப்படவுள்ளவற்றிலிருந்தும் அடிப்படையாகக் கொண்டு அவ்வாறு செய்யப்படும்.

Loading