பணியிலிருக்கும் பிரெஞ்சு இராணுவத்தினர் ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதி அச்சுறுத்தல் கடிதத்தை வெளியிடுகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிறன்று மாலை, பிரெஞ்சு நவ-பாசிச இதழான Valeurs actuelles (தற்போதைய மதிப்புகள்) இல் 2,000 பணியிலிருக்கும் இராணுவத்தினரால் கையொப்பமிடப்பட்ட ஒரு புதிய கடிதத்தை வெளியிட்டது. முஸ்லிம்கள் மற்றும் பிரான்சின் தொழிலாள வர்க்க புறநகர்ப் பகுதிகளை கண்டனம் செய்யும் வகையில், 23 ஓய்வுபெற்ற தளபதிகளால் Valeurs actuelles இல் வெளியிடப்பட்ட ஏப்ரல் 21 ஆட்சிக் கவிழ்ப்பு சதி அச்சுறுத்தலை அது ஆதரிக்கிறது, மேலும் பணியிலிருக்கும் இராணுவ அதிகாரிகள் அத்தகைய ஆட்சிக் கவிழ்ப்பு சதியை ஆதரிக்கிறார்கள் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

பாரிஸில் புதன்கிழமை, நவம்பர் 1, 2017 அன்று பிரான்சானது இரண்டு ஆண்டு கால அவசரகால நிலையின் முடிவைக் குறிக்கும் நிலையில் ஈபிள் கோபுரத்தின் கீழ் ஒரு சிப்பாய் காவலுக்கு நிற்கிறார். (Christian Hartman, Pool via AP)

ஏப்ரல் 21 கடிதமானது, ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பிரான்சின் "இஸ்லாமியமயமாக்கல்" என்று கூறப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியது மற்றும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதி அச்சுறுத்தலையும் விடுத்தது. செயலற்ற தன்மையானது "நமது நாகரிகத்தின் மதிப்புகளை பாதுகாக்கவும், தேசிய பிராந்தியத்தில் நமது சக தேசத்தினரை பாதுகாக்கவும் ஒரு ஆபத்தான குறிக்கோள் பணித்திட்டத்தில் நமது செயலூக்கமான கடமையிலிருக்கும் தோழர்களின் தலையீட்டிற்கும் மற்றும் வெடிப்பிற்கும்" வழிவகுக்கும் என்று அது கூறியது. அத்தகைய "உள்நாட்டுப் போரில்" ஏப்ரல் 21 கடிதம் மேலும் கூறியது, "நீங்கள் பொறுப்பேற்கவிருக்கும் இறப்புக்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும்."

மக்ரோனுக்கும் அரசாங்கத்துக்கும் முகவரியிடப்பட்ட மே 9 கடிதம் கூட அறிவிக்கிறது: "ஆம், எங்கள் மேலதிகாரிகள் தங்கள் கடிதத்தின் உள்ளடக்கத்தில், முழுமையாக சரியானவர்களாக இருக்கிறார்கள். நமது பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் வன்முறையை நாம் காணலாம். பொது இடங்களில், பொது விவாதத்தில் வகுப்புவாதம் வளர்ந்து கொண்டே வருவதை நாம் காண்கிறோம். பிரான்ஸ் மீதும் அதன் வரலாற்றின் மீதும் வெறுப்பு வாடிக்கையாகி வருவதை நாங்கள் காண்கிறோம்."

பிரான்சில் வரவிருக்கும் "உள்நாட்டு எழுச்சி" குறித்த எச்சரிக்கையானது, இராணுவம் மக்கள் மீது சுடுவதற்கான அரசாங்கத்தின் உத்தரவுகளைப் பின்பற்றும் என்று அது வலியுறுத்துகிறது: "ஆமாம், உள்நாட்டுப் போர் வெடித்தால், இராணுவம் அதன் சொந்த மண்ணில் ஒழுங்கை பராமரிக்கும், ஏனென்றால் அது அவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படும். அதுதான் உள்நாட்டுப் போரின் வரையறையும் கூட. அத்தகைய ஒரு பயங்கரமான சூழ்நிலையை யாரும் விரும்ப முடியாது, எங்கள் மேலதிகாரிகளோ அல்லது நாமோ, ஆனால் ஆமாம், மீண்டும், பிரான்சில் உள்நாட்டுப் போர் தயாரிக்கப்பட்டு வருகிறது, இது உங்களுக்கு நன்றாகத் தெரியும்."

இந்தக் கடிதம் பிரான்சிலும், நேட்டோ கூட்டணி முழுவதிலும், சர்வதேச ரீதியாகவும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். உலக முதலாளித்துவம் 1930களில் இருந்து அதன் ஆழ்ந்த சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது, ஏனெனில் பெருந்தொற்று நோய் மற்றும் "வைரஸுடன் வாழ்வதற்கு" அரசாங்கங்களின் அழைப்புக்கள் மில்லியன் கணக்கான இறப்புகளுக்கு வழிவகுத்த பின்னர், இது பெருகிவரும் தொழிலாள வர்க்க சீற்றமாகும். நேட்டோவின் இறுக்கமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஆயுதப் படைகளில் அதிவலது வலைப் பின்னல்கள் ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளை ஒழுங்கமைக்க முடியும் மற்றும் இரத்தம் தோய்ந்த சர்வாதிகாரங்களை அமைக்கக்கூடும் என்ற அச்சுறுத்தல் கொடிய ஆபத்தானது.

ஜனவரி 6ம் திகதி வாஷிங்டனில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்பாடு செய்ய டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட வரலாற்று ரீதியாக முன்னோடியில்லாத முயற்சிக்கும், அவரது தேர்தல் தோல்விக்கான சான்றிதழை நிறுத்துவதற்கும் பின்னர் மட்டுமல்லாமல், ஆனால் ஸ்பெயின் இராணுவத்தில் பாசிச அதிகாரிகளின் ஆறு மாத கால ஆட்சிக் கவிழ்ப்பு சதி அச்சுறுத்தல் பிரச்சாரத்திற்குப் பின்னர் இது வந்துள்ளது. கடந்த ஆண்டு பெருந்தொற்று நோயின் ஆரம்ப மாதங்களில் ஐரோப்பிய அரசாங்கங்கள் ஒரு கடினமான பொதுமுடக்கங்களை ஒழுங்கமைக்க நிர்ப்பந்தித்தன. இந்த அதிகாரிகள் ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஐரோப்பா முழுவதிலும் வேலைநிறுத்தங்களுக்குப் பின்னர் தங்கள் ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டத்தைத் தொடங்கினர்.

பிரெஞ்சு இராணுவ மற்றும் நவ-பாசிச வட்டாரங்களில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதியை தயாரிப்பதற்கான பிரச்சாரம் தெளிவாக நடந்து வருகிறது. ஏப்ரல் 17 அன்று அதிவலது அரசியல்வாதி பிலிப் டு வில்லியே, "நான் ஒரு எழுச்சிக்கு அழைப்பு விடுக்கிறேன்" என்ற தலைப்பில் Valeurs actuelles இல் ஒரு வெறித்தனமான, பாசிசவாத விண்ணப்பத்தை வெளியிட்டார், இந்த பெருந்தொற்று நோய்க்கு ஏனையவற்றுடன், கம்யூனிஸ்ட் அறிக்கை, அடையாள அரசியல் மற்றும் சுவிஸ் வங்கியாளர்கள் ஆகியோரைக் குற்றம் சாட்டினார்.

நான்கு நாட்களுக்குப் பின்னர் - டு வில்லியேயின் தந்தை ஆதரித்த ஒரு திடீர் ஆட்சி கவிழ்ப்பான தோல்வியுற்ற ஏப்ரல் 21, 1961 ஆண்டு பிரான்சில் இருந்து அல்ஜீரிய சுதந்திரத்தைத் தடுக்கும் நம்பிக்கையில் தளபதிகளால் அல்ஜியர்ஸ் திடீர் ஆட்சி கவிழ்ப்பு செய்யப்பட்டதன் 60 வது ஆண்டு நிறைவின் போது- முதலாவது ஆட்சிக் கவிழ்ப்பு சதி அச்சுறுத்தல் தோன்றியது.

Valeurs actuelles ஆனது பணியிலிருக்கும் இராணுவத்தினரை தொடர்பு கொண்டு ஒரு புதிய கடிதத்தை வெளியிடுவதாக அறிவித்தது என்றுமே 7ம் திகதி, Le Parisien பத்திரிகையானது தெரிவித்தது. அது இரண்டு நாட்களுக்குப் பின்னர் வெளிவந்தது. இதழின் இயக்குனர் ஜெஃப்ராய் லெஜியூன் புதிய கடிதம் இராணுவத்தில் பரவலாக பரப்பப்பட்டு பல நூறுகள் முதல் மற்றும் 2,000 கையெழுத்துக்கள் பெறப்பட்டதாக Le Parisien இடம் கூறினார். ஏப்ரல் 21 கடிதத்தைப் போலல்லாமல், அதன் ஆசிரியர்கள் அல்லது கையெழுத்திட்டவர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை.

குறிப்பிடத்தக்க வகையில், மே 9 கடிதத்தின் ஆசிரியர்கள் பிரெஞ்சு மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அவர்களின் சம்மதம் என்பது, வெளிநாடுகளில் நவ-காலனித்துவ போர்களிலும் உள்நாட்டில் காவல்துறை நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டதிலிருந்து வருகிறது என்று அறிவிக்கின்றன. "செய்தித்தாள்கள் எங்களைத் தான் ‘அக்கினித் தலைமுறை’" என அழைத்துள்ளது என்று அது கூறுகிறது, மேலும் "ஆப்கானிஸ்தான், மாலி, மத்திய ஆபிரிக்க குடியரசு அல்லது வேறு எங்கிலும், நம்மில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் எதிரியின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டுள்ளோம். சிலர் தோழர்களை இழந்துள்ளனர். நீங்கள் எங்கள் மண்ணில் விட்டுக்கொடுத்து வரும் இஸ்லாமியவாதத்தை அழிக்க அவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துள்ளனர்."

ஜனவரி 2015 ஆண்டு சார்லி ஹெப்டோ பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் பிரான்சுக்குள் 10,000 துருப்புக்களை முன்னாள் சோசலிஸ்ட் கட்சித் தலைவர் பிரான்சுவா ஹாலண்ட் நிலைநிறுத்தியதைக் குறிப்பிட்டு, "கிட்டத்தட்ட நாம் அனைவரும் பாதுகாப்பு படைக்காவல் நடவடிக்கை (Operation Sentinel) என்பதை அனுபவித்துள்ளோம்," என்று அது மேலும் கூறுகிறது: "எங்கள் புறநகர்ப் பகுதிகள் கைவிடப்பட்டதையும், குற்றங்களுக்கு வசதியளிக்கப்பட்டதையும் நாங்கள் பார்த்தோம். பல மத சமூகங்களால் நம்மை சுரண்டுவதற்கான முயற்சிகளை நாங்கள் அனுபவித்துள்ளோம், அவர்களுக்கு பிரான்ஸ் எதையும் குறிக்கவில்லை - கேலி, அவமதிப்பு, வெறுப்பு ஆகியவற்றின் ஒரு பொருளைத் தவிர வேறொன்றுமில்லை."

இரண்டாம் உலகப் போரின் போது, பிரான்சில் 1940-1944 நாஜி ஆக்கிரமிப்பிற்கு பிரெஞ்சு அரசாங்கம் ஒத்துழைத்ததை எதிர்ப்பு போராளிகள் (Resistance fighters) எதிர்த்த அதே வழியில், அது இஸ்லாத்துடனான ஒத்துழைப்பை எதிர்ப்பதாகக் கூறி, மக்ரோனை ஒரு துரோகி என்று அந்தக் கடிதம் கண்டிக்கிறது. "எங்கள் மேலதிகாரிகளின் எச்சரிக்கை கூக்குரல் முந்தைய நிகழ்வுகளை எதிரொலிக்கிறது. எங்கள் மூத்தவர்கள் 1940 இன் எதிர்ப்புப் போராளிகள், பெரும்பாலும், உங்களைப் போன்றவர்கள் துரோகிகள் என்று அழைத்தனர், அதே நேரத்தில் சட்டவல்லுநர்கள், கோழைத்தனத்தால், சேதத்தைக் கட்டுப்படுத்த தீமையுடன் ஒப்பந்தங்களை உடைத்தனர்," என்று அவர்கள் எழுதுகின்றனர்.

நாஜி ஆட்சிக்கும் பிரான்சில் அமைதியாக வேலை செய்து வாழும் மில்லியன் கணக்கான முஸ்லிம்களின் பிரசன்னத்திற்கும் இடையிலான இந்த சமன்பாடு ஒரு வெறுக்கத்தக்க அரசியல் பொய்யாகும். அதிவலது பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட இந்தக் கடிதமானது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு பாசிச சதி என்பது மேலும் ஒரு எச்சரிக்கையாகும். இரத்தம் தோய்ந்த, அதிவலது ஆட்சிக் கவிழ்ப்பு சதி ஆபத்தை எதிர்க்க தொழிலாளர்கள் அரசியல் ரீதியாக எச்சரிக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட வேண்டியது அவசரமானது.

ஆட்சிக் கவிழ்ப்பு சதி மற்றும் சர்வாதிகாரத்திற்கான திட்டங்களுக்கு எதிர்ப்பை அணிதிரட்டும் பணியை அரசு அதிகாரிகளிடமோ அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு உடந்தையாக இருக்கும் ஸ்தாபகமயப்பட்ட அரசியல் கட்சிகளிடமோ விட்டுவிட முடியாது.

ஏப்ரல் 21 கடிதம் வெளிவந்ததிலிருந்து, மக்ரோன் ஆட்சிக் கவிழ்ப்பு சதி அச்சுறுத்தல் குறித்து காது கேளாத மெளனத்தை கடைப்பிடித்து வருகிறார். அவரது அரசாங்கமானது அதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட வேலை செய்தது, முதல் கடிதம் ஓய்வு பெற்ற அதிகாரிகளால் வெளியிடப்பட்டது என்று குறிப்பிட்டது. "ஓய்வு பெற்ற" அதிகாரிகள் தங்கள் செயலூக்கமான பணியிலிருக்கும் சகாக்களுடன் தொடர்புகளை பராமரிக்கிறார்கள் மற்றும் அத்தகைய சூழ்நிலைகளில் அரசியல் அறிக்கைகளை வெளியிட பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற நன்கு அறியப்பட்ட உண்மை இருந்தபோதிலும் இது நடக்கிறது. அப்போதிருந்து, ஏப்ரல் 21 கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் குறைந்தபட்சம் 18 செயலூக்கமான பணியிலிருக்கும் இராணுவத்தினர்களைக் கண்டறிந்ததாக அரசாங்கம் ஒப்புக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சித் தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோன், இந்தக் கடிதத்திற்கு இராணுவத்தில் குறைந்த ஆதரவு தான் உள்ளது என்று வலியுறுத்தினார் மற்றும் மக்ரோன் அரசாங்கமே ஆட்சிக் கவிழ்ப்பு சதி அச்சுறுத்தலுக்கு எதிராக போராடும் என்ற மாயைகளை ஊக்குவிக்க முயன்று, அந்தக் கடிதத்தை விசாரிக்குமாறு மக்ரோனுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

செயலூக்கமுடன் பணியிலிருக்கும் இராணுவத்தினர்களின் சமீபத்திய கடிதம் அத்தகைய வாதங்களை வெடிக்கச் செய்கிறது, ஏப்ரல் 21 கடிதமானது இராணுவ உயர் மட்டத்திற்குள் கணிசமான ஆதரவைக் கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது. முந்தைய கடிதத்திற்கு அரசாங்கத்தின் பலவீனமான விடையிறுப்பு அதிவலது அதிகாரிகள் தங்கள் ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டத்தை விரைவுபடுத்த தைரியம் அளிக்கிறது என்பது வெளிப்படையாக இருக்கிறது.

இந்த போக்கு நேற்றும் தொடர்ந்தது. பாதுகாப்பு மந்திரி புளோரன்ஸ் பார்லி கிரெய்லுள்ள ஒரு பிரெஞ்சு விமானத்தளத்திற்கு விஜயம் செய்தபோது சமீபத்திய கடிதம் பற்றி சுருக்கமாக பேசினார், "இந்த பத்தியானது நமது தேசத்தை பிரிக்கும் நோக்கத்துடன் அதிவலதுகளின் தொனியையும் மற்றும் குறிப்புகளையும் பயன்படுத்துகிறது" என்று கூறினார்.

இராணுவத்தையும் அதன் ஆசிரியர்களையும் அநாமதேயமாக வைத்திருந்ததற்காக "கோழைகள்" என்று மே 9 ம் திகதி எழுதிய கடிதத்தை மெலோன்சோன் விமர்சித்தார். உலகம் முழுவதும் போர் தொடுக்கும் இராணுவத்தின் திறனை அது பலவீனப்படுத்துகிறது என்ற தேசியவாத அடிப்படையில் இந்த கடிதத்தை ஆட்சேபித்த மெலோன்சோன், "இராணுவத்தின் வலிமை அதன் ஒருங்கிணைப்புத் தான். அது ஒத்திசைவாக இருக்க வேண்டுமானால், அதன் அணிகளிலுள்ள அரசியல் பூசல்களை மட்டுமல்லாமல், மக்களுக்கு எதிராக திரும்புமாறு சிப்பாய்களை அழைக்கும் பிளவுபடுத்தும் கருத்துக்களையும் நாம் தடை செய்ய வேண்டும்."

இத்தகைய கருத்துக்களானது ஆட்சிக் கவிழ்ப்பு சதிகாரர்களை மட்டுமே ஊக்குவிக்கின்றன, குறிப்பாக பெருந்தொற்று நோய்க்கு மத்தியில், மக்ரோனும் மெலோன்சோனும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதியை விட தொழிலாள வர்க்க எதிர்ப்பைக் கண்டு மிகவும் பயப்படுகிறார்கள் மற்றும் மக்களுக்கு எதிராக பாதுகாப்புப் படைகளை நம்பியுள்ளனர் என்பதை நன்கு அறிவார்கள்.

மக்ரோன் முறையாக அரசின் பொலிஸ் அதிகாரங்களை கட்டமைத்துள்ளார். நவம்பர் 2018 இல் "மஞ்சள் சீருடையாளர்கள்" மீது தாக்குதல் நடத்தும் கலகப் பிரிவு போலீசாரை ஊக்குவிக்க நாஜி-ஒத்துழைப்பு சர்வாதிகாரி பிலிப் பெத்தானை பாராட்டிய பின்னர், அவர் மார்ச் 2019 இல் பாரிஸில் போலீஸ் நடவடிக்கைகளுக்காக இராணுவத்தை நிலைநிறுத்தினார். இந்த துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு செய்ய அதிகாரம் பெற்றிருந்தனர். இப்போது, அவர் போலீஸை படப்பிடிப்பு செய்வதை தடை செய்ய ஒரு "பொதுப் பாதுகாப்பு" சட்டத்தை (“global security” law) நிறைவேற்றுகிறார்.

ஏப்ரல் 21 மற்றும் மே 9 கடிதங்கள் இரண்டுமே, "இஸ்லாமியமயமாக்கல்" மீதான அவர்களின் கண்டனங்களில், மக்ரோனின் பிற்போக்குத்தனமான "பிரிவினைவாத-எதிர்ப்பு" சட்டத்தை எதிரொலித்தன, பிரான்ஸ் ஒரு பாரிய பிரிவினைவாத இஸ்லாமிய இயக்கத்தால் அச்சுறுத்தப்படுகிறது என்ற பொய்யை அடிப்படையாகக் கொண்டது.

பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் இராணுவ-சர்வாதிகார ஆட்சியின் ஆபத்து வேகமாக வளர்ந்து வருகிறது. அரசியல் ரீதியாக எச்சரிக்கை செய்வது மற்றும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது, மற்றும் இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பிரிவான Parti de l’égalité socialiste (PES) கட்டமைப்பதும், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் அதன் சகோதரக் கட்சிகளையும் கட்டமைப்பதும் முக்கியமான பணியாகும்.

Loading