JDE இல் "எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்தும்" ஒப்பந்தத்தை Uniteதிணிக்கிறது: "தொழிலாளர்கள் Unite தொழிற்சங்கத்தில் நம்பிக்கையை இழந்துவிட்டனர்"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

Jacobs Douwe Egberts (JDE) உடனான Unite இன் அழுகிய ஒப்பந்தம் தொழிற்சங்கம் 'எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்தும்' அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி நிறுவனத்தின் திட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தியதால் JDE தொழிலாளர்களால் அங்கீகரிக்கப்பட்டது. ஒப்பந்தம் ஊதியங்கள், விதிமுறைகள் மற்றும் வேலைநிலைகளில் பாரிய வெட்டுக்களை ஏற்படுத்தும்.

வேலைநிறுத்தத்தின் முதல் நாளில் மறியல் போராட்டத்தில் JDE தொழிலாளர்கள் (WSWS Media)

அதன் நிறுவனசார்பு ஒப்பந்தத்தின் வெற்றியை முழங்க நேற்று காலை Unite இன் வெளியிட்ட ஒரு பத்திரிகை அறிக்கை, ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பொய்களால் நிரம்பியிருந்தது. அதன் தலைப்பு, 'பான்பரி காப்பி தொழிலாளர்கள் 'எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்துவதை' நீக்கும் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக அதிகளவில் வாக்களித்தனர்' எனக்கூறியது.

உண்மையில் JDE உடனான அதன் 'எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்தும்' அச்சுறுத்தல்களை உள்ளடக்கிய ஒப்பந்தத்தை Unite முன்வைத்தது. அதுபோல, JDE தொழிலாளர்கள் தலையில் துப்பாக்கி வைக்கப்பட்டபடி வாக்களித்தனர். அவர்கள் 'இல்லை' என்று வாக்களித்திருந்தால், செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் பணிநீக்க அறிவிப்புகள் நடைமுறைக்கு வரும். Unite எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்துவதை 'அகற்றியது' நிறுவனத்திற்கு விரும்பிய அனைத்தையும் கொடுப்பதற்காகும்.

வாக்களிப்பின் முடிவு 81% புதிய விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டது மற்றும் 18.5% 'இல்லை' என வாக்களித்தனர். 93% இனர் வாக்களிப்பில் கலந்துகொண்டனர். மிருகத்தனமான புதிய 4/4 மாற்றுவேலை முறை பற்றி ஒரு தனியான வாக்கெடுப்பில் 80.4 சதவிகிதம் ஆதரவாகவும், 14.8 சதவிகிதம் எதிராகவும் மற்றும் 4.8 சதவிகிதம் வாக்குச் சீட்டுகள் பயனற்றவையாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. JDE தொழிலாளர்கள் மிகவும் ஆத்திரத்துடன் பிடுங்கி வாக்களித்தனர். அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் கிட்டத்தட்ட 20 சதவிகித தொழிலாளர்கள் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தனர் என்பது வெறும் வாக்கு எண்ணிக்கைக்கு பின்னால் உள்ள எதிர்ப்பின் அளவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இது Unite இன் உணவுத்துறையின் தேசிய அதிகாரி ஜோ கிளார்க்கை பின்வருமாறு கூறுவதிலிருந்து நிறுத்தவில்லை. நேற்று 'எங்கள் உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்தை ஒரு ஜனநாயகரீதியான வாக்கெடுப்பில் அதிகமாக ஏற்றுக்கொண்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஒப்புதலின் அளவு இம்மோதலின் போதும் கடுமையான பேச்சுவார்த்தைகளின் போதும் Unite பெரும்பாலான ஊழியர்களின் விருப்பங்களை பிரதிபலிக்கின்றது என்பதை காட்டுகிறது.

Unite இன் வாக்கெடுப்பு ஜனநாயகரீதியானதோ அல்லது JDE தொழிலாளர்களின் விருப்பத்தையோ பிரதிபலிக்கவோ இல்லை. Unite தனது நிறுவன சார்பு ஒப்பந்தத்தை ஜூலை 15 அன்று முதன்முதலில் வெளியிட்டபோது அது கோபத்தை தூண்டியது. இரண்டு மாத தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் மற்றும் கூடுதல் வேலைநேரத் தடைகளுக்குப் பின்னர், தொழிலாளர்களுக்கு வேண்டுமென்றே நாசகாரச் செயல்கள் முன்வைக்கப்பட்டது. அதில் 9,000 பவுண்டுகள் வருடாந்த ஆண்டு ஊதியக் குறைப்பு, மேலதிக வேலைக்கான ஊதியம் குறைக்கப்பட்டது, ஒரு நீண்ட வேலை வாரம் மற்றும் 4/4 மாற்று வேலைமுறை, நான்கு நாள் காலப்பகுதியில் ஊழியர்களை இரண்டு 12 மணித்தியால பகல் வேலை நாட்களைத் தொடர்ந்து இரண்டு 12 மணிநேர இரவுவேலைக்க கட்டாயப்படுத்தியது ஆகியவை அடங்கும்.

வாக்கெடுப்புக்கு முன்னதாக, Unite தொழிலாளர்களிடையே எதிர்ப்பை ஒடுக்க வேலை செய்தது. உள்ளூர் Unite இன் பேஸ்புக் குழுவில் விமர்சனக் கருத்துக்களை தடைசெய்து, தொழிலாளர்களின் கோபத்திற்கு குரல் கொடுக்கும் பான்பரி 300 ட்விட்டர் கணக்கை மூட அழைப்பு விடுத்தது. ஜூலை 26 அன்று ஒரு JDE இல் தொழிலாளி WSWS இடம் கூறியது போல், 'ஒப்பந்தத்திற்கு எதிராக பேசிய எவரும் தணிக்கை செய்யப்படுவார்கள் ... நாளை வாக்களிப்பு தொடங்கும் போது, வேறுகருத்துக்களைக் கொண்ட மக்கள் வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.'

அந்த வாரம் கிளார்க் சேதத்தை கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்டு Unite இன் சார்பாக கடிதங்களை வெளியிட்டார். 'எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்தும்' திரும்பப் பெறப்படவில்லை, ஆனால் JDE இல் தொழிலாளர்கள் ஒப்பந்தத்தை நிராகரிக்க முடிவு செய்தால், தொழிற்சாலை நடவடிக்கைகளுக்காக Unite மீண்டும் வாக்களிப்பை நடாத்தும் என்று அவர் முதலில் ஒப்புக்கொண்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு இரண்டாவது கடிதம் வந்தது. கிளார்க் இப்போது JDE நிதி ரீதியாக 'கஷ்டப்படுகின்றது' என்றும் தொழிலாளர்கள் ஒப்பந்தத்தை நிராகரித்தால் தொழிற்சாலை இடமாற்றம் செய்யப்படும் என்றும் கூறினார்.

நேற்று 'வெற்றியை' அறிவிக்கையில் கிளார்க், 'எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்துவது' மேஜையில் இருந்து அகற்றப்பட்டது என்பது Unite மற்றும் Unite இன் தொழிற்சாலை தொழிலாளர் குழுவிற்கு ஒரு பெரிய சாதனை' என்று கூறினார். இது தொழிற்சங்கத்தின் 'உயர் தொழிற்துறை நடவடிக்கை மற்றும் அழுத்தம்கொடுக்கும் பிரச்சாரம்' என்றார். வாக்கெடுப்பின் போது Unite பொதுச் செயலாளருக்கான முன்னணி வேட்பாளரும் மற்றும் 'இடது' என்று கூறப்படும் ஸ்டீவ் ரேர்னர் ட்விட்டரில் தனது சொந்த அறிக்கையையில் Uniteஇன் காட்டுக்கொடுத்த ஒப்பந்தத்தை 'வெற்றி' என்று விவரித்தார்.

இத்தகைய வெற்றிகளை தொழிலாள வர்க்கம் ஏற்க முடியாது!

British Airways, British Gas மற்றும் Go North West போன்றவற்றில் முந்தைய காட்டிக்கொடுப்பைப் போலவே, JDE இலும் இது தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கான ஒரு 'வெற்றி' ஆகும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிற்சங்கங்கள் 'எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்தும்' அச்சுறுத்தல்களுக்கு நிறுவன அளவிலான மறுசீரமைப்பிற்காக தொழில்துறை போலீஸ்காரர்களாக தங்கள் சேவைகளை வழங்குவதன் மூலமே தமது பிரதிபலிப்பை காட்டின. Unite இன் 'அழுத்தம்கொடுக்கும்' மூலோபாயம், வரையறுக்கப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கையை பயன்படுத்தி, பெருநிறுவன நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில், தொழிலாளர்களின் எதிர்ப்பை ஒடுக்கவும், நிறுவனக் கட்டளைகளை விதிக்கவும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயல்படுவதாகும்.

'எதிர்வரவிருக்கும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் நிர்வாகத்துடன் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப இப்போது ஒரு வாய்ப்பு உள்ளது' என்றும், JDE இல் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய ஆக்கபூர்வமான விவாதங்களில் நுழைய நாங்கள் குறிப்பாக ஆர்வமாக உள்ளோம்” என கிளார்க் விளக்கியதன் மூலம் JDE இல் 'வெற்றி' என்றால் என்பது தெளிவாகின்றது.

அவருடைய வார்த்தைகள் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். JDE இல் 'எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்தும்' கோரிக்கைகள் அனைத்தும் Unite இன் காட்டிக்கொடுக்கப்பட்ட ஒப்பந்தம் மூலம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. JDE செய்தித் தொடர்பாளர் Banbury Guardian இடம், 'எங்கள் கூட்டாளிகள் சமீபத்திய பேச்சுவார்த்தை ஒப்பந்தத்திற்கு ஆதரவாக பெரும்பன்மையுடன் வாக்களித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் ... எங்கள் தொழிற்சாலைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க ஒன்றாக வேலை செய்கிறோம்” எனத் தெரிவித்தார்.

ஆனால் தாக்குதல்கள் அங்கு நிற்காது. Unite உடனான 'ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள்' மற்றும் எந்தவொரு 'முதலீட்டு வாய்ப்புகளும்' உலகெங்கிலும் உள்ள தொழிற்சாலைகளுக்கு எதிரான ஏலப்போட்டியில் யார் அதிக போட்டியிடக்கூடிய விகிதத்தில் ஊதியம் மற்றும் நிபந்தனைகளை வழங்க முடியும் என்பதனூடாகவே அடையமுடியும் எற்பதை JDE ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

Unite நேற்று தனது அழுகிய காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தத்தை அறிவித்தபோது, JDE Peet அதன் அரையாண்டு முடிவுகளில் வட்டிக்கும் வரிக்கும் முன்னைய அதன் இலாபம் 0.8 சதவீதம் அதிகரித்து 636€ மில்லியன் என அறிவித்தது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபேபியன் சைமன் கடந்த ஆண்டு €10 மில்லியன் “தங்க வரவேற்பு வருமானமாகவும்” மற்றும் ஆண்டு சம்பளம் 1€ மில்லியன் மற்றும் 'மேலதிக கொடுப்பனவு வாய்ப்புகளுடன்' சேர்ந்தார். அவர் நிறுவனத்தை 'பலமான விளைவுகள்', அனைத்து முக்கிய அளவீடுகளிலும் வரி, இலாபம், பண உருவாக்கம் மற்றும் சந்தையில் செயல்திறன் ஆகியவற்றை பாராட்டினார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, தொழிலாளர்கள் ஒரு இரக்கமற்ற நிறுவனத்திற்கு எதிராக தங்கள் போராட்டத்தை தொடங்கினர். ஆனால் Unite ஒரு பெருநிறுவன கூட்டுழைப்பு அமைப்பு என்ற முறையில் தொழிலாளர்கள் இரண்டு முனைகளில் ஒரு போரினை எதிர்கொள்வதை நிரூபித்துள்ளது. இந்த முக்கிய பாடத்தை பல JDE தொழிலாளர்கள் ஏற்கனவே வரைந்து கொண்டிருக்கிறனர்.

ஒரு பான்பரி தொழிலாளி நேற்று WSWS இடம் கூறியது போல், 'JDE இருண்ட காட்டிக்கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தினை கொண்டாட்டுகையிலும் மற்றும் ஜோ 'வேப்ஸ் கிளார்க் உலகம் முழுவதும் அவர் எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்தும் போரை இழக்கவில்லை என்று சொல்கிறார். ஆனால் உண்மை என்னவெனில் JDE சுற்றிவர நின்று எதுவும் செய்யாமல் இருப்போருக்கு மில்லியன் கணக்கான செலவளிக்கையில் தொழிற்சங்கம் பான்பரி இல் தமது இடது மற்றும் வலது புறத்தில் உறுப்பினர்களை இழக்கிறது.

'Unite தொழிற்சங்கமும் மற்றும் ஜோ கிளார்க்கும் எழுந்தமானமாக வேலையிலிருந்து நீக்கி மீண்டும் வேலையில் இருத்தும் போரை இழந்துள்ளனர் மற்றும் தொழிலாளர்கள் Unite இன் தொழிற்சங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். குறிப்பாக பான்பரி தொழிற்சாலைக்குழு பலவீனமாகவும் அவமானமாகவும் தெரிகிறது. Unite இன் தொழிற்சங்கத்திற்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதை நாங்கள் ஒருபோதும் அறிய மாட்டோம். ஆனால் தொழிலாளர்களே அதில் பெரியளவில் இழந்தவர்கள் மற்றும் ஒரு காலத்தில் பெரியதாக இருந்து தொழிற்சாலையின் எதிர்காலம் இருண்டதாக தெரிகிறது.

ஜோ கிளார்க் (credit: WSWS Media)

JDE காட்டிக்கொடுப்பின் முக்கிய பாடம் என்னவெனில், நிறுவன சார்பு தொழிற்சங்கங்களுக்கு எதிராக ஒரு சாமானிய தொழிலாளர்களின் கிளர்ச்சியும் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் புதிய மற்றும் சுயாதீன அமைப்புகளை உருவாக்குதலுமாகும்.

JDE யில் தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்ட ஒப்பந்தம் ஒரு கசப்பான தோல்வி என்றாலும், தொழிலாளர்களிடையே ஒரு போராட்ட மனப்பான்மை உள்ளதுடன் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி பற்றி ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் போராட்டங்களின் வளர்ந்து வரும் அலைகளிலும் இதே செயல்முறை பிரதிபலிக்கிறது. சோசலிச சமத்துவக் கட்சி இந்த முயற்சிகளுக்கு ஆதரவளித்து தொழிலாள வர்க்கத்தின் போராட்ட திறனையும் மற்றும் நிறுவனம், தொழிற்சங்கங்கள், முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அரசு ஆகியவற்றிலிருந்து சோசலிசத்திற்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அதன் அரசியல் மற்றும் அமைப்புரீதியான சுயாதீனத்தை ஊக்குவிக்கும்.

JDE தொழிலாளர்கள் எங்களை தொடர்பு கொண்டு விவாதத்தைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading