இன்னொரு சீன எதிர்ப்பு ஆத்திரமூட்டல்: அமெரிக்க, கனேடிய போர்க்கப்பல்கள் தைவான் ஜலசந்தியை கடக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இன்னுமொரு மோதலை விரும்பும் நடவடிக்கையில், இந்த ஆண்டு பத்தாவது முறையாக அமெரிக்க கடற்படை கடந்த வாரம் தைவான் ஜலசந்தி வழியாக ஒரு போர்க்கப்பலை அனுப்பியுள்ளது. கனேடிய போர் கப்பல் HMCS வின்னிபெக் உடன் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் USS Dewey சீனாவின் பிரதான நிலப்பகுதியை தைவான் தீவில் இருந்து பிரிக்கும் குறுகிய ஜலசந்தி வழியாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பயணம் செய்தது.

வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் USS Dewey (வலது) [Wikimedia Commons]

இந்த போக்குவரத்து 'அமெரிக்கா மற்றும் எங்கள் கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளின் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் இற்கான பங்களிப்பை' எடுத்துக்காட்டுகிறது என்று அமெரிக்க இராணுவம் அபத்தமாக அறிவித்தது. வட அமெரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தகைய கடற்படை நடவடிக்கைகள், ஆசியாவில் சீனாவுக்கு எதிராக ஒரு தசாப்த கால அமெரிக்க இராணுவ தயாரிப்பின் ஒரு பகுதியும் மற்றும் சீனாவுடன், இந்த விஷயத்தில் குறிப்பாக ஆபத்தான வெடிப்பார்ந்த புள்ளியாகியுள்ள தைவான் தொடர்பாக பதட்டத்தை ஏற்படுத்துவதாகக் கணக்கிடப்படுகிறது.

கடந்த ஒரு வருடத்தில், ட்ரம்ப் மற்றும் இப்போது பைடென் ஆகியோரின் கீழ், 1979 இல் அமெரிக்க-சீன இராஜதந்திர உறவுகளை நிறுவுவதற்கான அடிப்படையை உருவாக்கிய தைவானின் அந்தஸ்து குறித்து சீனாவுடனான நீண்டகால உடன்பாடுகளை அமெரிக்கா குறைமதிப்பிற்கு உட்படுத்தி வருகிறது. அந்த நேரத்தில், அமெரிக்கா தைவான் உட்பட அனைத்து சீனாவின் சட்டபூர்வமான அரசு பெய்ஜிங் என அங்கீகரித்து, தைபேயுடனான இராஜதந்திர உறவுகள் மற்றும் இராணுவ ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, தீவில் இருந்து அனைத்து இராணுவப் படைகளையும் திரும்பப் பெற்றது.

பெய்ஜிங்கில் இந்த பிரச்சினையின் பாதிக்கக்கூடியதிறனை வாஷிங்டன் தெளிவாகப் புரிந்துகொள்கிறது. பெய்ஜிங், தைவான் சீனாவின் தவிர்க்க முடியாத பகுதி என்று வலியுறுத்துவதுடன் மற்றும் தைபே எப்போதாவது முறையான சுதந்திரத்தை அறிவித்தால் அது இராணுவ பலத்தை நாட நேரிடும் என்று கடந்த இரண்டு தசாப்தங்களாக எச்சரித்துள்ளது. ஆயினும், தைவான் அதிகாரிகளுடனான ட்ரம்பின் உயர் மட்டத் தொடர்பைத் தொடர்ந்து, தைபேக்கு ஆயுத விற்பனையை அதிகரிப்பதன் மூலமும், தைவான் ஜலசந்தியினூடான அடிக்கடி கடற்படைப் போக்குவரத்தின் மூலமும் பைடென் நிர்வாகம் வேண்டுமென்றே சீனாவை சீண்டுகின்றது.

ஒரு அரை உத்தியோகபூர்வமான கசிவால் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு கிடைத்த தகவல், சமீபத்தில் அமெரிக்க சிறப்புப் படைகள் தைவானில், தைவான் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்ததை சமீபத்தில் வெளிப்படுத்தியது. நான்கு தசாப்தங்களில் முதன்முறையாக தைவானில் அமெரிக்க இராணுவ பிரசன்னம் பெய்ஜிங்கில் எச்சரிக்கை மணியை ஒலித்தது. ஏனென்றால் ஜப்பானில் இருந்து பிலிப்பைன்ஸ் வரை செல்லும் முதல் தீவு சங்கிலி என்று அழைக்கப்படும் மூலோபாய நிலையில் இந்த தீவு அமைந்துள்ளதால் ஒரு போர் என்று வருகையில் சீனாவுக்கு எதிரான ஒரு தடைக்கு இத்தீவை அமெரிக்கா பயன்படுத்தலாம்.

சமீபத்திய தைவான் ஜலசந்தி போக்குவரத்தை பெய்ஜிங் கண்டித்துள்ளது. மக்கள் விடுதலை இராணுவத்தின் கிழக்கு பிரிவு கட்டளையகம் (PLA) தைவான் சீனப் பிரதேசத்தின் ஒரு பகுதி என்று அறிவித்து மற்றும் அமெரிக்கா, கனடா இரகசியமாக இணைந்து 'ஆத்திரமூட்டவும் மற்றும் பிரச்சனையை கிளறிவிடவும் ... தைவான் ஜலசந்தியின் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் கடுமையாக பாதிக்க செய்கின்றன' என்று குற்றம் சாட்டியது.

கனேடிய போர்க்கப்பல் இங்கு பிரசன்னமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பைடென் நிர்வாகம் சீனாவுடனான மோதலில் நட்பு நாடுகளின் இராணுவ ஆதரவைப் பெற முயற்சிக்கிறது. கனடாவின் பங்கேற்பு, சீனாவிற்கு எதிரான அமெரிக்க பொருளாதார மற்றும் இராணுவ-மூலோபாய தாக்குதலில் அதன் முழுமையான ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாகும். கனேடிய ஆயுதப்படைகள் இப்போது வழக்கமாக சீனாவின் கரையில் போர்க்கப்பல்களை நிறுத்துகின்றன மற்றும் இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூருக்கு இடையே உள்ள மலாக்கா நீரிணையை கனடாவிற்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைத்து, செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு தேசிய தேர்தலை அழைப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, கனடாவின் ட்ரூடோ லிபரல் அரசாங்கம் சீனாவுடனும் ரஷ்யாவுடனும் மூலோபாயப் போட்டியை நடத்துவதற்காக, கனடா-அமெரிக்க கூட்டு விண்வெளி மற்றும் கடல்சார் 'பாதுகாப்பு கட்டளையகமான' NORAD இனை 'நவீனமயமாக்க' வாஷிங்டனுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

கடந்த மாதம், ஒரு தாக்குதல் பிரிட்டிஷ் விமானம் தாங்கி கப்பல் குழுவுடன் பயன்படுத்தப்படும் பிரிட்டிஷ் போர்க்கப்பல் HMS ரிச்மண்ட் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக முதன்முறையாக தைவான் ஜலசந்தி வழியாக பயணம் செய்தது. அக்டோபர் தொடக்கத்தில், பிரிட்டிஷ் போர்க்கப்பல்கள் இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி குழுக்கள் மற்றும் ஜப்பானிய, நியூசிலாந்து மற்றும் டச்சு கடற்படைக் கப்பல்களுடன் தைவானின் கிழக்கில், நீரில் வலிமையைக் காட்டும் ஒரு பெரிய கடற்படை பயிற்சியில் சேர்ந்தன.

அமெரிக்காவின் கடற்படை ஆத்திரமூட்டலுக்கான சாக்குப்போக்குகள் முற்றிலும் கபடமானது. சீன கடற்கரைக்கு அருகில் அதன் போர்க்கப்பல்களில் பயணம் செய்வதற்கும், அதன் போர் விமானங்களை பறப்பதற்கும் 'உரிமை' உள்ளது என்பதை அது வலியுறுத்தும் அதே வேளையில், தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் (ADIZ) சீன இராணுவ விமானத்தின் ஊடுருவலை ஆக்கிரமிப்பு மற்றும் அச்சுறுத்தல் என்று அமெரிக்கா முத்திரை குத்துகிறது. ADIZ இல் ஒரு நிலையான சர்வதேச சட்டம் இல்லை. தைவான், பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் தெற்கின் பல்வேறு ADIZ களை தாண்டியே சீன விமானங்கள் 'முதல் தீவு சங்கிலி' க்கு அப்பால் பசிபிக் பகுதிக்கு பறக்க முடியும்.

மேலும், தைவானின் ADIZ அத்தீவைச் சுற்றியுள்ள வான்வெளியை உள்ளடக்கியது மட்டுமல்லாமல் சீன பெருநிலப்பரப்பில் 300 கிலோமீட்டர் வரை நீண்டுள்ளது! இதன்படி பார்த்தால், கிழக்கு சீனாவின் குறிப்பிடத்தக்க பகுதிகளில் உள்ள சீன விமானங்கள் தைவான் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் புறப்பட கூட முடியாது.

தைவான் மீது சீனாவுடன் பதட்டத்தை தூண்டுவதன் மூலம், பைடென் நிர்வாகம் நெருப்புடன் விளையாடுகிறது. சீனாவுடனான போரினல் உள்ள ஆபத்து அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை வட்டாரங்களில் அறியப்பட்டுள்ளது. அங்கு அமெரிக்கா அத்தகைய போரை வெல்லும் திறன் குறித்து கவலைகள் எழுப்பப்படுகின்றன. இந்த மாத தொடக்கத்தில், ஓய்வுபெற்ற அமெரிக்க லெப்டினன்ட் கேர்ணல் டானியல் டேவிஸ், சீனாவுடனான தாய்வானில் ஏற்பட்ட மோதலில் அமெரிக்கா கிட்டத்தட்ட தோல்வியை சந்திக்கும் எனவும், அணுசக்தி போரில் வீழ்ந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்தார்.

ஞாயிற்றுக்கிழமை பைனான்சியல் டைம்ஸ், அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளைத் தவிர்க்கும் திறன் கொண்ட அணுசக்தி திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சீனா பரிசோதனை செய்ததற்கு அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளின் எதிர்வினை பற்றிய கட்டுரை இடம்பெற்றது. இப்பரிசோதனை 'ஹைப்பர்சோனிக் ஆயுதங்களில் சீனா வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது மற்றும் அமெரிக்க அதிகாரிகள் அறிந்துள்ளதை விட மிகவும் முன்னேறியது' என்று அதிகாரிகள் கூறியதாக கட்டுரை தெரிவித்தது. சீனா மீதான அமெரிக்காவின் இராணுவ மேன்மை மறைந்துபோவதை பற்றிய பரந்த கவலைகளை இந்த கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன.

அக்டோபர் 12 அன்று 'தைவான் மீதான மோதலின் கடுமையான ஆபத்துகள்' என்ற தலைப்பில் பைனான்சியல் டைம்ஸ் தலையங்கம், சீனாவுடனான அமெரிக்க இராணுவ மோதல் உலகிற்கு பேரழிவாக இருக்கும் என்று எச்சரித்தது. 'இத்தகைய மோதல்களிலிருந்து விரோதப் பிரிவுகளாக உருவெடுக்கும் உலகத்தினை பெய்ஜிங்யும் வாஷிங்டனும் வெளிப்படுத்தும். யார் 'வெற்றியாளரராக' இருந்தாலும், அனைவரும் தோல்வியடைவார்கள். தைவான் ஜலசந்தியின் குறுக்கே கடக்கும் தேர்வு ஒரு சகிப்புத்தன்மை மற்றும் பேரழிவு தரும் மோதலுக்கு இடையே உள்ளது. அது மாறாது' என்று எழுதியது.

'பொது உணர்வு, அமைதியான மற்றும் குளிர்ந்த தலைகளை' காட்டுமாறு அனைத்து தரப்பினருக்கும் ஒரு இயலாமையான வேண்டுகோளுடன் தலையங்கம் முடிந்தது. எவ்வாறாயினும், ஒபாமா, ட்ரம்ப் மற்றும் இப்போது சீனாவுக்கு எதிராக அதிகரித்து வரும் அமெரிக்க மோதல்கள் அகநிலை நோக்கங்களால் உந்தப்படுவதில்லை. ஆனால் அமெரிக்காவின் வரலாற்று வீழ்ச்சியை அனைத்து விலைகொடுத்தும் ஈடுசெய்யவும், சீனா அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை குறைமதிப்பிற்குள்ளாக்குவதை தடுப்பதில் இருந்து எழுகின்றது.

மேலும், சீனாவின் பொருளாதார மற்றும் இராணுவ முன்னேற்றங்கள், அமெரிக்காவிற்கு ஒரு இடைவேளை கொடுப்பதைத் தவிர்த்து, அதிக அமெரிக்க இராணுவ செலவினங்களுக்காகவும், விரைவில் போரை நாடவும் ஒரு வாதமாக மாறியுள்ளது. அதே நேரத்தில், ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும் ஒரு வெளிப்புற எதிரிக்கு எதிராக உள்நாட்டில் கடுமையான சமூக பதட்டங்களை முன்னிறுத்த முற்படுகிறது. சீனாவின் 'முக்கிய பிரச்சனைகளில்' மிகவும் உணர்திறன் கொண்ட தைவான் மீது கவனம் செலுத்துவது அமெரிக்கா அண்மையான எதிர்காலத்தில் போருக்கு தீவிரமாக தயாராகி வருவதற்கான எச்சரிக்கையாகும்.

Loading