பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றுக்கு மக்ரோனும் லு பென்னும் முன்னேறியுள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று நடைபெற்ற பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில், 2017 தேர்தலின் முதல் சுற்றுப் போல, வெளியேறும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் நவ-பாசிச வேட்பாளர் மரின் லு பென்னும் ஏப்ரல் 24 அன்று ஜனாதிபதிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளர். ஆரம்ப மதிப்பீடுகளின்படி நேற்று இரவு, அவர்கள் முறையே 27.4 சதவிகிதம் மற்றும் 24.0 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளனர். முன்னாள் சோசலிஸ்ட் கட்சி அதிகாரியான ஜோன்-லூக் மெலோன்சோன், அடிபணியா பிரான்ஸ் (Unsubmissive France LFI) கட்சியின் வேட்பாளர் 21.6 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

மெலோன்சோனின் பிரச்சார மேலாளர், மானுவல் பொம்பார்ட், மெலோன்சோனுக்கு கிடைத்த வாக்குகள் 'அற்புதமான முடிவு' என்று ஒரு இரவு அறிக்கையை வெளியிட்டார், ஆனால் 'வருத்தமின்றி, இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற இது போதுமானதாக இருக்காது' என ஒப்புக்கொண்டார்.

இந்த புள்ளிவிபரங்கள் சரியென நிரூபிக்கப்பட்டால், 2002 மற்றும் 2017 தேர்தல்களுக்குப் பின்னர், ஒரு நவ-பாசிச வேட்பாளர் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் கட்டத்திற்கு முன்னேறுவது இது மூன்றாவது முறையாகும். லு பென்னுக்கும் வலதுசாரி 'செல்வந்தர்களின் ஜனாதிபதிக்கும்' இடையே ஒரு நச்சுத் தேர்வை வாக்காளர்கள் மீண்டும் எதிர்கொண்டுள்ளனர் என்ற உண்மை, ஆளும் ஸ்தாபகம் 'இடது' என்று பொய்யாக ஊக்குவிக்கும் அமைப்புகளின் அரசியல் திவால் நிலையை அம்பலப்படுத்துகிறது. வெறுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதியையோ அல்லது ஒரு நவ-பாசிஸ்ட்டையோ தோற்கடிக்க இயலாது என்பதை போலி இடதுகள் நிரூபித்துள்ளார்கள்.

ஏப்ரல் 10, 2022 ஞாயிற்றுக்கிழமை பாரிஸில் தேர்தல் நாளில் அவர்களது தலைமையகத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் தீவிர வலதுசாரி வேட்பாளர் மரின் லு பென் ஆகியோரை திரை காட்டுகிறது. (AP Photo/Francois Mori)

மே 1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்திற்குப் பிந்தைய சகாப்தத்தில், பிரான்சில் ஆதிக்கம் செலுத்திய தேர்தல் கட்சிகள் வீழ்ச்சியடைந்துள்ளதை இத் தேர்தல் உறுதிப்படுத்தியுள்ளது. கோலிஸ்டுகளின் சமீபத்திய அவதாரமான வலதுசாரி குடியரசுக் கட்சியின் (LR) வலெரி பெக்ரெஸ் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) அன் இடால்கோ ஆகியோர் முறையே 4.7 மற்றும் 1.8 சதவிகிதம் பெற்றனர். இந்த இரண்டு கட்சிகளும், 1968 முதல் 2017 வரை பிரான்சின் முக்கிய அரசாங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தின. பசுமைக் கட்சி வேட்பாளர் யானிக் ஜாடோட் 4.5 சதவீதமும், ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) வேட்பாளர் ஃபாபியான் ரூசல் 2.4 சதவீத வாக்குகளும் பெற்றனர். இந்த வேட்பாளர்கள் அனைவரும் இப்போது நீக்கப்பட்டுள்ளனர்.

அதி தீவிர வலதுசாரி பத்திரிகையாளரும், இன வெறுப்பைத் தூண்டியதற்காக தண்டிக்கப்பட்டவரும், மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கிய பின்னர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்காக கிளர்ந்தெழுந்த அதிகாரிகளின் பிரிவுகளுக்கு நெருக்கமானவருமான எரிக் செமூர் 7 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

இரண்டாவது சுற்றுக்கான தேர்தல் பிரச்சாரம் பெரும் நிச்சயமற்ற தன்மை மற்றும் ஸ்தாபக அரசியல் கட்சிகளில் இருந்து மக்கள் அந்நியப்படுதல் ஆகியவற்றிற்கு மத்தியில் தொடங்குகிறது. முதல் சுற்றில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 26.2 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை. எந்த ஒரு வேட்பாளர்களுக்கும் வாக்களித்ததை விட அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள். மக்ரோனுக்கு எதிராக லு பென் 48 அல்லது 49 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன, மேலும் லு பென் மக்ரோனை தோற்கடிக்க ஒரு உண்மையான வாய்ப்பு உள்ளது.

முன்னாள் முதலீட்டு வங்கியாளராக மக்ரோன், பிரான்ஸ் இப்போது நெருக்கடியில் ஆழமாக மூழ்கிக் கொண்டிருக்கிறது பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்த வேண்டுமென 2017 இல் பிரச்சாரம் செய்தார். பிரான்சில் கடந்த வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்கள் COVID-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 768 பேர் இறந்துள்ளனர். ஆனால், மக்ரோன் அரசாங்கம் வாக்காளர்கள் COVID-19 க்கு சாதகமாக சோதனை செய்தாலும் முகமூடிகள் இல்லாமல் வாக்களிக்க மக்களை ஊக்குவிக்கிறது, இது வாக்களிப்பை ஒரு நோய்பரப்பும் நிகழ்வாக மாற்றியது. உக்ரேன் போருக்கு மத்தியில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ பொருளாதாரத் தடைகள் காரணமாக இயற்கை எரிவாயு, சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பிற முக்கிய பொருட்களின் பற்றாக்குறை வெளிவருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு சுருக்கமான உரையில், மக்ரோன் 'தீவிர வலதுசாரிகளின் பாதையைத் தடுப்பதற்காக' மக்களை அணிதிரட்டி, பிரெஞ்சு 'ஒருமைப்பாட்டின் பெரும் இயக்கத்தை' கட்டியெழுப்புவதாகக் கூறினார். அவர் மேலும் கூறினார்: 'வரும் ஆண்டுகளில் நமது தேசத்தின் சேவையில் ஒரு பொதுவான செயலை கட்டியெழுப்ப பல்வேறு நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் ஒன்றிணைக்க புதிய ஒன்றைக் கண்டுபிடிக்க நான் தயாராக இருக்கிறேன். அது எங்களுடைய பலம்.

ஒரு பொதுஜன, ஜனநாயக அரசாங்கத்திற்கு தலைமை தாங்க, தான் தயாராகி வருவதாக லு பென் வாய்ச்சவடாலை விடுத்தார். 'வலது, இடது, பிற இடங்களில் இருந்தும், எல்லாப் பின்னணியிலிருந்தும் இந்த மாபெரும் தேசிய மற்றும் மக்கள் பேரணியில் சேருமாறு வாக்காளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். 'இடதுசாரிகள் தான் இந்த தேர்தலின் திறவுகோலை ஏறக்குறைய வைத்திருக்கிறார்கள் என்று ஒருவர் கூறலாம்” என லு பென்னின் தேசிய பேரணியின் (RN) அதிகாரிகள், லிபரேஷன் நாளிதழுக்கு கூறினர்.

லு பென்னின் பேச்சு 'புலம்பெயர்ந்தவர்களின் குடியேற்றத்தை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர' அச்சுறுத்தல்களை விடுத்ததோடு, காவல்துறையை கட்டியெழுப்ப உறுதிமொழிகளையும், மக்ரோனின் தொழிலாளர்-விரோதக் கொள்கைகளுக்கு எதிரான வாக்குவாத முறையீடுகளையும் ஒன்றிணைத்தது. மக்ரோன், ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தவும், சமூக நலன்புரி பெறுபவர்களை அவர்களின் நலன்களுக்காக வேலை செய்ய கட்டாயப்படுத்தவும் உறுதியளித்தார்'. அதிக பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நாங்கள் வழங்கும் ஒற்றுமையை பாதுகாப்பதாகவும், உத்தரவாதமான உரிமைகளைப் பெறுவதற்கான சாத்தியம் அல்லது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்போது ஓய்வு பெறுவதற்கான சாத்தியத்தை லு பென் உறுதியளித்தார். லு பென், முஸ்லீம் பெண்களுடைய முகத்திரைகளை தடை செய்ய முயற்சி செய்யலாம் என்ற செய்திகளுக்கு மத்தியில், 'பெண்கள் உரிமைகள்' மற்றும் 'மதச்சார்பின்மை' ஆகியவற்றை பாதுகாப்பதாக அவர் உறுதியளித்தார்.

மக்ரோனின் ஜனாதிபதி பதவியானது அரசியல் ஸ்தாபகத்திற்குள் இருந்து எந்த இடதுசாரி எதிர்ப்பையும் சந்திக்கவில்லை. ஆதலால், நவ-பாசிஸ்டுகள் 'இடது' என்று காட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் மக்ரோன் 'வைரஸுடன் வாழ்வது' என்ற அவரது கொலைகாரக் கொள்கை உட்பட பாசிசக் கொள்கைகளை தீவிரமாக சட்டபூர்வமாக்கினார். அவர் பிரான்சின் நாஜி-ஒத்துழைப்பு சர்வாதிகாரி பிலிப் பெத்தானை பாராட்டினார், அதே நேரத்தில் சமூக சமத்துவத்திற்கு அழைப்பு விடுக்கும் 'மஞ்சள் சீருடை' போராட்டங்களை அடக்குவதற்காக கலகத் தடுப்புப் பொலிஸின் கூட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டார். மக்ரோன் அரசாங்க அதிகாரிகள் லு பென்னை 'இஸ்லாத்திற்கு மென்மையானவராக இருக்கின்றார்' என பகிரங்கமாகத் தாக்கினர்.

ஆயினும்கூட, இந்த நச்சு சூழ்நிலையில், ஊடகங்களும் ஆளும் உயரடுக்கும் 'இடது' என்று கட்டமைத்துள்ள கட்சிகள், அதி தீவிர வலதுசாரிகளுக்கு அரசியல் எதிர்ப்பின் அடித்தளத்தை தொடர்ந்து விட்டுக் கொடுத்துள்ளன. மெலோன்சோன் மற்றும் பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) அல்லது தொழிலாளர் போராட்டம் (LO) போன்ற போலி-இடது கட்சிகள் 'மஞ்சள் சீருடை' போராட்டக்காரர்களை தனிமைப்படுத்தின அல்லது கண்டனம் செய்தன. பிரான்சில் 142,000 பேரும் ஐரோப்பா முழுவதும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்களும் COVID-19 காரணமாக இறந்தபோதும், அவர்கள் தீவிர வலதுசாரிகளின் தலைமையில் தடுப்பூசி எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்.

இறுதியாக, மெலோன்சோன், NPA, பொது தொழிலாளர் கூட்டமைப்பு (CGT) தொழிற்சங்கம் மற்றும் LO போன்ற ஸ்ராலினிச அமைப்புகள் அனைத்தும் உக்ரேனில் ரஷ்யாவுடனான போரில் மக்ரோன் மற்றும் நேட்டோவுடன் தங்களை இணைத்துக் கொண்டன. ரஷ்யாவிற்கு எதிராக, அங்கு உக்ரேனிய நவ-நாஜி அசோவ் பட்டாலியன் போன்ற ஆயுத்தாரிகளுக்கு நேட்டோ ஆயுதங்களை வழங்கி வருகிறது.

இரண்டாவது சுற்றில் மக்ரோன் அல்லது லு பென் வெற்றி பெற்றாலும், புதிய ஜனாதிபதி ஒரு பிற்போக்கு அரசாங்கத்தை வழிநடத்துவார், அது தொழிலாள வர்க்கத்துடன் வன்முறை மோதலுக்கு வரும். இத் தேர்தல், பிரான்சில் ஒரு நவ-பாசிச ஜனாதிபதியின் ஆபத்துக்களை முன்வைக்கிறது. எவ்வாறாயினும், லு பென்னுக்கு எதிரான குறைந்த தீமையாக மக்ரோனை ஆதரிக்குமாறு இப்போது வாக்காளர்களுக்கு அழைப்பு விடுக்கும் வேட்பாளர்கள் ஒரு அரசியல் மோசடியைச் செய்கிறார்கள்: மக்ரோன் ஒரு நவ-பாசிச ஜனாதிபதி பதவிக்கு மாற்று இல்லை.

செமூர் மற்றும் சிறிய அதி தீவிர வலதுசாரி வேட்பாளர் நிக்கோலா டுபோன்ட்- என்னியோன் இருவரும் லு பென்னுக்கு இரண்டாம் சுற்றில் வாக்களிக்க அழைப்பு விடுத்தாலும், தோற்கடிக்கப்பட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் 'செல்வந்தர்களின் ஜனாதிபதியின்' பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்.

'எங்கள் நாட்டின் எதிர்காலம் குறித்து நான் ஆழ்ந்த கவலையடைகிறேன், ஏனெனில் அதி தீவிர வலதுசாரிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னெப்போதையும் விட நெருக்கமாக உள்ளனர்,' லு பென்னின் தேர்தல் உள்நாட்டில் 'முரண்பாடு, இயலாமை மற்றும் தோல்வி' மற்றும் 'ஐரோப்பிய மற்றும் சர்வதேச அரங்கில் பிரான்ஸ் அழிக்கப்படுவதற்கு' வழிவகுக்கும்' என்று பெக்ரெஸ் கூறினார். 'இவ்வாறு, பிரச்சாரம் முழுவதும் ஆழமான வேறுபாடுகள் இருந்தபோதிலும், மரின் லு பென் ஆட்சிக்கு வருவதையும் அதனால் ஏற்படும் குழப்பத்தையும் தடுப்பதற்காக” நான் இமானுவல் மக்ரோனுக்கு வாக்களிப்பேன் என மேலும் அவர் தெரிவித்தார்.

பசுமைவாதிகள், PS மற்றும் PCF ஆகியவையும் மக்ரோனுக்கு வாக்களிக்க அழைப்பு விடுத்தன, மேலும் மெலோன்சோளின் அடிபணியா பிராஸ் கட்சியானது (LFI) சிடுமூஞ்சித்தனமான, ஒரு மறைக்கப்பட்ட அழைப்பை மக்ரோனுக்கு வாக்களிக்க விடுக்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக முக்கிய நகரங்களின் தொழிலாள வர்க்கப் பகுதிகளில், மக்ரோன் அல்லது லு பென்னுக்கு வாக்களிக்க விரும்பாத LFI வாக்காளர்கள் மத்தியில் 2017 இல் தோன்றிய பரவலான எதிர்ப்பைக் கண்டு LFI அதிகாரிகள் அஞ்சுகின்றனர். மெலோன்சோனின் உதவியாளர் Adrien Quatennens, France2 தொலைக்காட்சியிடம், LFI அதன் உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தும், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய அனுமதிக்கும், ஆனால் ஒரு Le Pen வாக்கு தேர்வு பட்டியலில் இருக்காது எனக் கூறினார்.

70 வயதாகும் மெலன்சோன், 2027 ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று கூறிய அவர், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறத் தவறியதை தனது கட்சியை பலப்படுத்தும் வெற்றியாக முன்வைத்தார். “எங்கள் போராட்டத்தின் புதிய பக்கம் திறக்கப்படுகிறது. நீங்கள் அதைத் திருப்புவீர்கள், சிறப்பாகச் செய்த வேலையின் பெருமையுடன் நாங்கள் அதைத் திருப்புவோம்,' பிரான்ஸ் 'அரசியல் அவசர நிலையை' எதிர்கொள்கிறது என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், மெலன்சோன் 2017 இல் அவர் வகித்த அதே பிற்போக்குத்தனமான பாத்திரத்தை வகிக்கத் தொடங்குகிறார் என்பது வெளிப்படையானது: மக்ரோனின் வன்முறையான பிற்போக்குத்தனமான ஜனாதிபதி பதவிக்குப் பின்னால் அவரது மில்லியன் கணக்கான வாக்காளர்களை இணைத்துள்ளார். உண்மையில், அவரது சலுகை உரையின் முடிவில், மெலன்சோன் மீண்டும் மீண்டும் முழக்கமிட்டார்: “திருமதி லு பென்னுக்கு நீங்கள் எந்த வாக்குகளையும் கொடுக்கக்கூடாது! திருமதி லு பென்னுக்கு ஒரு வாக்கு கூட கொடுக்க முடியாது!”

உண்மையில், மக்ரோனின் சொந்த ஜனாதிபதியின் முழு இராணுவவாத மற்றும் பாசிசப் போக்கானது, மெலன்சோனின் முன்னோக்கு ஒரு தவறான முன்னோக்கு என்பதையும், பிரான்சில் தீவிர வலது பக்கம் திரும்புவதை எதிர்க்க விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதையும் காட்டுகிறது. 2017 இல், லு பென்னை எதிர்ப்பதற்கு மக்ரோனுக்கு வாக்களிக்க விரும்பினார் என்பதை மெலன்சோன் இதேபோல் அறிவித்தார். ஆயினும்கூட, LFI ஆனது மக்ரோன் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் பிரெஞ்சு அரசியலை வலது பக்கம் திருப்புவதற்கும் உதவியது.

இந்த தீவிர வலது பக்கம் திரும்புவதை நிறுத்துவதற்கு தொழிலாள வர்க்கத்தை, முழு அரசியல் அமைப்புமுறைக்கு எதிராக, ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தில் அணிதிரட்டுவதும், மக்ரோன் அல்லது லு பென்னுக்கு ஆதரவை வழங்க மறுப்பதும் தேவைப்படுகிறது.

Loading