நேட்டோ பொதுச் செயலர் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக நேட்டோவை ஒரு போர்ப் படையாக "மாற்றுவதற்கு" அழைப்பு விடுக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற நேட்டோ சக்திகள் உக்ரேனுக்குள் ஆயுதங்களைக் குவித்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், ரஷ்யா மற்றும் சீனாவுடன் நேரடியாகப் போர்களை நடத்தும் ஆற்றல் கொண்ட ஒரு போர்ப் படையாக நேட்டோ மாற்றப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 11, 2022 திங்கட்கிழமை, உக்ரேனின் கியேவின் புறநகர்ப் பகுதியான இர்பின் தெருவில் உக்ரேனிய டாங்கிகள் உருளுகின்றன (AP Photo/Evgeniy Maloletka) [AP Photo/Evgeniy Maloletka]

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போரை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, நேட்டோ ஏற்கனவே ரஷ்யாவுக்கு எதிராக அதன் 40,000 பலமான அதிரடி விடையிறுப்பு படையை அணிதிரட்டியுள்ளது. ஆனால் இது அமெரிக்க இராணுவத் திட்ட வல்லுனர்கள் 'வல்லரசு மோதல்' என்று எதை அழைக்கிறார்களோ அதற்கான தயாரிப்பில் இந்த கூட்டணியை வெகு பரந்தளவில் மாற்றுவதற்கான ஆரம்பம் மட்டுமே ஆகும்.

Telegraph க்கு அளித்த ஒரு பேட்டியில், நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க் கூறுகையில், இந்த மாற்றமானது 'பொறி அமைப்பு தடுப்புமுறையில் இருந்து மறுப்பு அல்லது சுயபாதுகாப்பைக் கொண்டு தடுக்கும் விஷயத்தை நோக்கி நகர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. மிகவும் ஆபத்தான ஓர் உலகில், எல்லா நேட்டோ கூட்டணி நாடுகளையும் பாதுகாக்க மற்றும் காப்பாற்ற நாம் தொடர்ந்து ஆற்றலுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்றார்.

நேட்டோவின் 'மாற்றத்திற்கான' உடனடி சாக்குப்போக்கு உக்ரேன் போராக இருந்தாலும், ரஷ்யாவைப் போலவே சீனாவும் இலக்கில் உள்ளது என்பதை ஸ்டோல்டென்பேர்க் தெளிவுபடுத்தினார்.

'ஜூன் மாதம் நேட்டோ உச்சிமாநாட்டில் ஒப்புக் கொள்ளப்படும் இந்த புதிய மூலோபாயக் கருத்துருவுக்கான பணியை நாங்கள் இறுதி செய்து வருகிறோம்… மேலும் அங்கே, சீனா ஒரு முக்கிய பாகமாக இருக்குமென நான் எதிர்பார்க்கிறேன்,” என்றார்.

சீனா, 'எல்லா நேட்டோ பிராந்தியங்களையும் எட்டக்கூடிய புதிய நவீன அணுஆயுதத் திறன்கள் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளில்' பலமாக முதலீடு செய்து வருகிறது, “… ரஷ்யாவும் சீனாவும் இன்னும் மிக நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதைப் பார்க்கிறோம் என்பதும் கவலைக்குரியதாக உள்ளது,” என்றார்.

2014 இல் இருந்து, “நாம் பனிப்போர் முடிந்ததற்குப் பின்னர் மிகப் பெரியளவில் நேட்டோ மீளப் பலப்படுத்துவதை நடைமுறைப்படுத்தி உள்ளோம்,” என்று ஸ்டோல்டென்பேர்க் தெரிவித்தார்.

ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் தொடர்ச்சியாக ஒட்டுமொத்த அரசுகளையும் நேட்டோ உள்வாங்கிக் கொள்வதே இந்த மாற்றத்தின் முக்கிய அம்சமாக இருக்கும்.

திங்கட்கிழமை டைம்ஸ் ஆஃப் இலண்டன் குறிப்பிடுகையில், இன்னும் ஒரு சில மாதங்களில் பின்லாந்தும் சுவீடனும் நேட்டோவில் சேரத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டது. சுவீடன் மற்றும் பின்லாந்து கலந்து கொண்ட கடந்த வார கூட்டணியின் வெளியுறவு மந்திரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின்' போது 'பல்வேறு அமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்களின் தலைப்பே' அவ்விரு நாடுகள் உறுப்பினர் ஆவது சம்பந்தமாக இருந்ததாக டைம்ஸ் குறிப்பிட்டது.

இந்த ஜூனில் பின்லாந்து விண்ணப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து விரைவிலேயே சுவீடன் விண்ணப்பிக்கும் என்று டைம்ஸ் குறிப்பிட்டது.

ஸ்டோல்டென்பேர்க் கூறுகையில், 'பின்லாந்தை நேட்டோவில் வரவேற்கும் முடிவை மிக விரைவாக எடுக்க முடியும், அதன் பின்னர் அதை தலைநகரங்கள் அல்லது பாராளுமன்றங்களில் அங்கீகரிப்பது ஒரு சம்பிரதாயமான செயல்முறையாக இருக்கும்,' என்று வலியுறுத்தினார்.

வாரயிறுதி வாக்கில், நேட்டோ 'Rising Griffin” என்ற பெயரில் லித்துவேனியாவில் தொடர்ச்சியான பல போர் பயிற்சிகள் மேற்கொண்டது. அந்த பயிற்சியில் 1,000 துருப்புகளும் 200 வாகனங்களும் ஈடுபட்டன.

இந்த பயிற்சியை விவரித்து கூறுகையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை குறிப்பிட்டதாவது, “நேட்டோவின் மேம்பட்ட முன்னோக்கிய பிரசன்னம் (eFP) போர்க் குழுவான லித்துவேனியா, அந்த பால்டிக் அரசின் அடர்ந்த காடுகளில் பயிற்சி ஒத்திகைகளுக்காக அமெரிக்க இராணுவத்தின் 66 வது கவசப் படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு பட்டாலியனுடன் இணைந்து செயல்பட்டது.

'Rising Griffin என்ற இந்த பயிற்சியைப் பொறுத்த வரையில், துருப்புக்கள் ருக்லாவில் உள்ள அவற்றின் தளத்திலிருந்து பாப்ராடேவில் (Pabradė) உள்ள பயிற்சி மைதானம் வரையில் ஒரு சாலை அணிவகுப்பை நடத்தினர், இது ஒருங்கிணைந்து நகர்வதற்கும் தொடர்பு கொள்வதற்குமான அவர்களின் தகைமையை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.'

'கூட்டணிப் பகுதியைப் பாதுகாப்பதில் நேச நாடுகளின் உறுதியை எடுத்துக்காட்ட, ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்த பின்னர், அமெரிக்க இராணுவம் 66 வது கவசப் படைப்பிரிவின் 3 வது பட்டாலியனின் நிலைநிறுத்தலை விரிவாக்கியது. இது 2019 இல் இருந்து லித்துவேனியாவிற்கு அனுப்பப்பட்ட நான்காவது பட்டாலியன் ஆகும், அப்போது லித்துவேனிய அரசாங்கம் ஒரு குதிரைப்படை பிரிவை நிலைநிறுத்தக் கோரி இருந்தது.”

போலந்து, எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியாவில் 2016 இல் இருந்து நேட்டோ 'மேம்படுத்தப்பட்ட முன்னோக்கிய பிரசன்ன' போர்க் குழுக்களை நிலைநிறுத்தியுள்ளது, இவை ஒவ்வொன்றும் ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் உள்ள நேட்டோ உறுப்பு நாடுகளாகும்.

கார்டியன் குறிப்பிட்டது, 'உக்ரைன் போர், அப்பிராந்தியத்தில் கூட்டணி அதன் பிரசன்னத்தை கூடுதலாக வலுப்படுத்த வழிவகுத்துள்ளது, ருமேனியா, பல்கேரியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவிற்குப் பன்னாட்டு பட்டாலியன்கள் அனுப்பப்பட உள்ளன. லித்துவேனியாவில் இராணுவ பிரசன்னம் தோராயமாக 1,200 இல் இருந்து சுமார் 1,600 சிப்பாய்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் ஜேர்மன் இராணுவத்தின் இலகுவான இடம் விட்டு இடம் நகர்த்தக்கூடிய Ozelot விமான-தகர்ப்பு அமைப்புமுறை போன்ற புதிய தளவாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

வாரயிறுதியில் உக்ரேனிய தலைநகர் கியேவுக்கு விஜயம் செய்த இங்கிலாந்து பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன், கியேவ் மீதான உக்ரேனிய பாதுகாப்பை '21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆயுத சாதனை' என்று அழைத்தார்.

இதற்கிடையே, இந்த மோதலில் அமெரிக்கா மற்றும் நேட்டோ உண்மையில் எந்தளவுக்கு ஈடுபட்டிருக்கின்றன என்பது தெளிவாகி வருகிறது. Le Figaro இன் மூத்த சர்வதேச நிருபர் Georges Malbrunot ட்விட்டரில் எழுதினார், ''அமெரிக்க டெல்டாஸ் படைப்பிரிவைப் போலவே, உயர்மட்ட SAS சிறப்புப் படைப் பிரிவுகளும் போர் தொடங்கியதில் இருந்து உக்ரேனில் உள்ளன,' என்று ஒரு பிரெஞ்சு உளவுத்துறை ஆதாரநபர் தெரிவிக்கிறார்,” என ட்வீட் செய்தார்.

இரண்டு வெளிநாட்டு போராளிகளுடன் சேர்ந்து அவர் சமீபத்தில் உக்ரேனுக்கு பயணம் செய்ததாக Malbrunot கூறினார். அவர் ஒரு பிரெஞ்சு செய்தி நிகழ்ச்சியில் கூறுகையில், 'உக்ரேனிய இராணுவத்திற்கு நுழைய, அமெரிக்கர்கள் பொறுப்பாக இருந்தார்கள் என்பதைக் காண, எனக்கு ஆச்சரியமாக இருந்தது, அவர்களும் ஆச்சரியப்பட்டார்கள்,” என்றார். அமெரிக்காவின் காலடித்தடம் 'குறிப்பிடத்தக்கதாக' இருந்ததாக அவர் தெரிவித்தார்.

உக்ரேனில் போர் ஒரு புதிய கட்டத்தில் நுழைகையில் நேட்டோவின் இந்த பாரிய கட்டமைப்பு நடக்கிறது, நேட்டோ சக்திகள் ரஷ்ய படைகளைப் போர்க்களத்தில் முறியடிக்க முயன்று வருகின்றன. 'இன்னொரு போர் வரப் போகிறது, டொன்பாஸிற்கான போர்,” என்று உக்ரேனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா ஞாயிற்றுக்கிழமை NBC இன் 'Meet the Press' நிகழ்ச்சியில் கூறினார்.

கடந்த வாரம் நேட்டோ தலைமையகத்தில் பேசிய குலேபா, 'டொன்பாஸுக்கான போர் உங்களுக்கு நினைவூட்டும், அதைச் கூற நான் வருந்துகிறேன், ஆனால் இது உண்மைதான், டொன்பாஸிற்கான போர் உங்களுக்கு இரண்டாம் உலகப் போரை நினைவூட்டும்,' என்றார். அந்த போர் 'மிகப் பெரிய அளவிலான நடவடிக்கைகள், சூழ்ச்சிகள், ஆயிரக்கணக்கான டாங்கிகள், கவச வாகனங்கள், விமானங்கள், பீரங்கிகள் ஈடுபடுவதை' காணும், '… அதற்கான ரஷ்யாவின் தயாரிப்புகளில் நாம் என்ன பார்க்கிறோம் என்பதன் அடிப்படையில் அது உள்நாட்டு நடவடிக்கையாக இருக்காது. ரஷ்யா அதற்கென ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது, நாங்கள் எங்களின் திட்டத்தைக் கொண்டிருக்கிறோம். முடிவு போர்க்களத்தில் தீர்மானிக்கப்படும்,” என்றார்.

பைடென் நிர்வாகத்தின் ஆரம்பத்தில் இருந்து அமெரிக்கா 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பி உள்ளது. 'உக்ரேனியர்களுக்கு ஆதரவாக ஆதார வளங்கள், ஆயுதங்கள், இராணுவ உபகரணங்களையும், இராஜாங்க ஆதாரவளங்களையும் அமெரிக்கா அதிகரித்து வருகிறது' என ஜனாதிபதி பைடெனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன், CBS இன் 'Face the Nation' நிகழ்ச்சியில் ஞாயிற்றுக் கிழமை கூறினார்.

Loading