ஜூன் 14 அன்று புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரித்தானியாவின் உள்துறை அலுவலகம் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் அதன் மிருகத்தனமான கொள்கையை முன்னெடுத்துச் செல்கிறது. கிழக்கு ஆபிரிக்கா அரசுடனான புலம்பெயர்வு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கூட்டாண்மை (Migration and Economic Development Partnership) ஒப்பந்தத்தை அறிவித்து சரியாக இரண்டு மாதங்களுக்கு பின்னர் முதல் விமானம் ஜூன் மாதம் 14 ஆம் திகதி புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் சட்டவிரோதமாக ஐக்கிய இராச்சியத்திற்கு வரும் மக்கள் 4,500 மைல்கள் தொலைவில் புகலிடக் கோரிக்கையை “முன்னெடுக்க” அனுப்பப்படுவார்கள்.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஜனவரி 1, 2022 முதல் இங்கிலாந்தில் 'வழமைக்குமாறான முறையில்' வந்ததாகக் கருதப்படும் எவரும் ருவாண்டாவிற்கு இடமாற்றம் செய்யப்படலாம். ருவாண்டாவில் ஒருமுறை, புகலிட விண்ணப்பம் சட்டபூர்வமானதாகக் கருதப்பட்டால், அவர் ருவாண்டாவில் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார் இங்கிலாந்தில் அல்ல. இல்லையெனில் அவர்கள் மூன்றாவது நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார்கள்.

இங்கிலாந்து உள்துறைச் செயலர் பிரிதி பட்டேல் மற்றும் ருவாண்டாவின் வெளியுறவு மற்றும் சர்வதேச கூட்டுறவு அமைச்சர் வின்சென்ட் பிருடா புலம்பெயர்வு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கூட்டாண்மையில் கையெழுத்திட்டனர் (Credit: Priti Patel/Twitter) [Photo: Priti Patel/Twitter]

ஜூன் 1 அன்று, உள்துறை அமைச்சகத்தின் ஒரு அறிக்கை, 'ருவாண்டாவிற்கு பயணிக்க வேண்டியவர்களுக்கு முறையான வெளியேற்றல் கடிதங்களை வழங்கத் தொடங்கியுள்ளது' என்று கூறியது. 'அங்கு இடமாற்றம் செய்யப்பட்டவர்களில்', 'ஆங்கில கால்வாயை கடப்பது உட்பட ஆபத்தான, தேவையற்ற மற்றும் சட்டவிரோத பயணங்களை மேற்கொண்டவர்கள் உள்ளடங்குகின்றனர்…' எனக் குறிப்பிட்டது.

உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேலின் குடியேற்றத்திற்கான புதிய திட்டத்தின் கீழ், பல்லாயிரக்கணக்கான மக்கள் ருவாண்டாவிற்கு திருப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியில் மற்ற அரசுகளுடனும் இங்கிலாந்து வெளியேற்றும் ஒப்பந்தங்களை இறுதி செய்கிறது.

மனித உரிமைக் குழுக்களால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கண்டனம் செய்யப்பட்ட போதிலும் நாடுகடத்தல்கள் முன்னோக்கிச் செல்கின்றன.

இங்கிலாந்து-ருவாண்டா விமானம் புறப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர், உலகளவில் கட்டாய இடப்பெயர்ச்சிக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறித்த ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) அதன் சமீபத்திய அறிக்கையை வெளியிட உள்ளது. உலகளவில் புகலிடக் கோரிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை ஏற்கனவே 100 மில்லியனாக இருப்பதாக மதிப்பிடுகிறது. UNHCR தலைவர் பிலிப்போ கிராண்டி கூறுகையில், ஜோன்சன் அரசாங்கம் அதன் ருவாண்டா கொள்கையை உருவாக்கிய தேசிய மற்றும் எல்லைகள் சட்டம் 'ஆபத்தில் உள்ளவர்கள் இங்கிலாந்தில் தஞ்சம் புகுவதற்கான சாத்தியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதுடன் மற்றும் உலகளவில் அகதிகளுக்கான பாதுகாப்பை பலவீனப்படுத்துகிறது.'

இவை எதுவும் அரசாங்கத்தை தொந்தரவு செய்யாது. உள்துறை அலுவலக அறிக்கை பட்டேலின் அச்சுறுத்தலை மேற்கோளிட்டுள்ளது, 'இந்த செயல்முறையை தடுத்து வெளியேற்றுவதை தாமதப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று எங்களுக்குத் தெரியும். நான் பின்வாங்க மாட்டேன்...' பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்திற்காக கிகாலிக்கு பிரதமர் போரிஸ் ஜோன்சனின் ருவாண்டாவிற்கான முதல் விமானம் பயணத்தின் ஒரு வாரம் கழித்து, இது ஒழுங்கமைக்கப்பட உள்ளதாக கார்டியன் குறிப்பிட்டது. ஜோன்சனின் வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் கருத்துகளைத் தொடர்ந்து வெளிவந்த பட்டேலின் கருத்துக்களில், டெய்லி மெயிலிடம் சண்டையிடுவதற்குத் தயாரிப்பு செய்வதாக தெரிவித்தார். இடதுசாரி வழக்கறிஞர்களுக்கு எதிராக அதைச் சமாளிக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்களின் பெரிய விளக்கப்படம் எங்களிடம் உள்ளது” என்று கூறினார்.

குடியேற்ற சட்டம் தொடர்பாக பணிபுரியும் பாரிஸ்டர் ஸ்டீவன் கலிவர்-ஆண்ட்ரூ கடந்த வாரம் பிபிசியிடம் கூறுகையில், ஜூன் 14 இனை நாடுகடத்தப்படும் தேதியாக அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. ஆனால் “அரசாங்கத்தை இதைச் செய்ய அனுமதிக்கும் சட்டம் 2022 ஜூன் 28 ஆம் தேதி வரை நடைமுறைக்கு வருமா என்று தெரியவில்லை' என்றார்.

செப்டம்பர் 16, 2021, வியாழன், இங்கிலாந்தின் டோவர் துறைமுகத்தில் உள்ள ஆங்கிலக் கால்வாயில் இருந்து படகுகளில் இருந்து எடுக்கப்பட்ட பிறகு, பிரிட்டிஷ் எல்லைப் படையின் ரோந்துப் படகில் இருந்து குடியேறியவர்கள் என்று கருதப்பட்டவர்கள் இறங்குகிறார்கள் (AP Photo/Alastair Grant) [AP Photo/Alastair Grant]

குறைந்தபட்சம் 100 பேருக்கு அவர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்படுவதாகக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. Care4Calais தொண்டு நிறுவனம் இந்த வாரம் 'தடுப்பு மையங்களில் உள்ள ருவாண்டாவிற்கு அனுப்பப்படவுள்ள 100 பேரில் 80 பேருக்கு நாட்டைவிட்டு அகற்ற 'அறிவித்தல்' அனுப்பப்பட்டுள்ளது. இக் குழுவால் பயன்படுத்தப்படும் வார்த்தையான அவர்களின் ‘நாடுகடத்தல்’ உடனடி என்று பதினேழு பேருக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 10 பேருக்கு ஜூன் 14 தேதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தடுப்பு மையங்களில் உள்ளனர், அவர்கள் அனைவரும் மிகவும் பயப்படுகிறார்கள்” எனக் கூறியது.

Care4Calais இன் ஒரு கட்டுரை, “அகதிகள் பாதுகாப்பாக இருக்கமாட்டார்கள். ருவாண்டா சர்வாதிகார நாடாகும். இது அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுபவர்களை சிறையில் அடைத்து, சித்திரவதை செய்து, கொலை செய்கிறது. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் UNHCR உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் இதுபற்றி கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளன. பிரிட்டன் அங்கு அனுப்ப விரும்பும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சாத்தியமற்றது” எனக் குறிப்பிடுகிறது.

ருவாண்டாவிற்கு அனுப்பப்படுவதைப் பற்றிய அச்சத்தினால், இலண்டனின் கட்விக் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள புரூக் ஹவுஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் குழு, ஜூன் 3 அன்று முடிவடைந்த ஐந்து நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது.

20 பக்கங்கள் கொண்ட அவர்களது நாடு கடத்தல் கடிதங்கள், ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கின்றன. ருவாண்டாவிற்கு வெளியேற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், சட்டபூர்வமாக கருதப்படாத பாதை வழியாக பிரிட்டனுக்கு வந்ததன் காரணமாக மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு உரிமை இல்லை என்று கூறப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளான சிரியா, சூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் மக்கள் குழுக்கள் உட்பட, வெளியேற்றப்படும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களின் பல்வேறு நாட்டினரை கார்டியன் பட்டியலிட்டுள்ளது. அவர்கள் தப்பி ஓடியவந்த போர் மண்டலங்களுக்கு அவர்களை திருப்பி அனுப்ப இங்கிலாந்து உதவுகின்றது. கடிதம் அறிவிக்கிறது: “உங்களுக்கு சுயவிருப்பத்துடன் இங்கிலாந்தை விட்டு வெளியேற தேர்வு உள்ளது. இருப்பினும், நீங்கள் வெளியேற்றப்படுவீர்களானால் அது ருவாண்டாவுக்குக்காகவே இருக்கும்.”

புகலிடக் கோரிக்கையாளர்கள் 2022 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி ருவாண்டாவிற்கு விமானம் மூலம் அனுப்பப்படுவார்கள் என்று அவர்களுக்குத் தெரிவிக்க பிரித்தானிய உள்துறை அலுவலகம் வழங்கிய ஆவணத்தின் ஒரு பகுதி(Credit: Ioannis E Kolovos/Twitter)

ஆங்கில கால்வாய் வழியாக பிரித்தானியா மீது 'படையெடுப்பு' செய்த புலம்பெயர்ந்தோர் பற்றி பல ஆண்டுகளாக அசுத்தத்தை வெளிப்படுத்தும் பரபரப்பு செய்தித்தாள்கள் மற்றும் பிற ஊடகங்களின் உதவியினால் பட்டேல், தனது தேசியம் மற்றும் எல்லைகள் சட்டம் அதன் எல்லைகளை பிரிட்டன் 'கட்டுப்படுத்திக்கொள்ள' பயணங்களை முடிவுக்கு கொண்டு வரும் என்று உறுதியளித்தார். அரசாங்கம் வெளியேற்ற விரும்பும் எவருக்கும் எதிராக அவரது நாடு கடத்தல் முறை பயன்படுத்தப்படும் என்பதே உண்மை. “ருவாண்டாவிற்கு நாடுகடத்துதற்கு இலக்கான 100 பேர் கொண்ட முதல் குழுவில் கணிசமானவர்கள் சூடானைச் சேர்ந்தவர்கள் என கார்டியன் குறிப்பிட்டது.

'சூடானியர்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சிறிய படகுகளில் பிரித்தானியாவிற்கு வந்த மிகப்பெரிய தேசிய குழு அல்ல. அங்கு அவர்கள் இந்த ஆண்டின் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் வந்த137 பேர்களில் ஏழாவது இடத்தை பிடித்தனர். அவர்கள் புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதில் 92% விகிதத்தைக் கொண்டுள்ளனர்”.

ருவாண்டா கொள்கை எவ்வளவு கொடூரமானது என்பதைக் குறிக்கும் வகையில், ருவாண்டாவிற்குத் தனி ஆண்கள் மட்டுமே நாடு கடத்தப்படுவார்கள் என்ற உள்துறை அமைச்சகத்தின் வாக்குறுதி பொய்யானது என அம்பலப்படுத்தப்படுகிறது. Care4Calais இன் கூற்றுப்படி, “இரண்டு சிறுவர்கள் [ருவாண்டாவிற்கு அனுப்பப்பட உள்ளனர்] தங்களுக்கு வெறும் 16 வயதுதான் என்று கூறுகிறார்கள். அவர்கள் 23 மற்றும் 26 வயதுடையவர்கள் என உள்துறை அலுவலகம் கூறுகிறது. எனவே நாடுகடத்தப்படுவதற்கு முன் சரியான வயதை மதிப்பீடு செய்வது அவசியம். சூடானில் தனது கிராமம் தாக்கப்பட்டபோது 16 வயதுடைய இளைஞன் தனது சகோதரன் கண்ணெதிரில் கொல்லப்பட்டதைக் கண்டார். அவர் தப்பித்து பின்னர் திரும்பிச் சென்று பார்த்தபோது கிராமம் முழுவதும் இல்லாமல் போனதைக் கண்டார்”.

Love146 UK இற்கான பிரச்சார மேலாளர் டானியல் சோஹேஜ் இனை கார்டியன் பத்திரிகை மேற்கோள் காட்டியது. '14 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வயது 23 என தவறாக மதிப்பிடப்படுவதை நாங்கள் பார்க்கிறோம். நாங்கள் பார்த்த குழந்தைகளின் எண்ணிக்கை 1999 இல் பிறந்த தேதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் தெளிவாக 18 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கும்போது மிகவும் கவலைக்குரியதும் மற்றும் இளவயதினரை ஆபத்தினுள் ஆழ்த்துகிறது”.

பல வாரங்களாக, மீண்டும் திங்களன்று அவரது தலைமை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து தப்பிய பின்னர், ஜோன்சன் அரசாங்கம் அதன் பிரெக்ஸிட் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்கு 'முன்னேற வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். குடியேற்றக் கொள்கை வெளிப்படுத்துவது போல், ஜனநாயக உரிமைகளைக் கிழித்தெறிவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் வேலைகள், ஊதியம், நிபந்தனைகள் மற்றும் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதலின் அதிகரிப்பை இது முன்வைக்கின்றது.

ருவாண்டா தொட்டர்பான கொள்கை மற்றும் ஒட்டுமொத்த குடியேற்ற எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல் ஆகியவை டோரி கட்சியின் ஒவ்வொரு பிரிவினராலும் ஆதரிக்கப்படுகின்றன. இதில் ஜோன்னை பதவி நீக்கம் செய்யக்கோரிய தார்மீகப் போராளிகளாகக் காட்டிக் கொள்ளும் பின்வரிசை உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.

புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை பாதுகாப்பது குற்றமாக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் உள்ள பொலிசார் இரண்டு புலம்பெயர்ந்தவர்களை நாடுகடத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, ஒரு பெரும் கூட்டத்தின் ஒரு பகுதியாக அதனை தடுத்தற்காக அடுத்த மாதம், மூன்று பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். ஸ்காட்லாந்தின் பொது வழக்கு சேவையான அலுவலகம் அவர்கள் ஆகஸ்ட் 3/4 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறியது. ஒரு மனுவில், 'Kenmure Street Three' அமைப்பு அவர்கள் மீதான பொது ஒழுங்கு குற்றச் சாட்டுகள் கைவிடப்பட வேண்டும் என்று கோருகிறது: 'ஆயிரக்கணக்கானவர்களுடன் சேர்ந்து இதை எதிர்த்தபோது, நாங்கள் மிருகத்தனமாக நடத்தப்பட்டோம், அடைக்கப்பட்டோம், இப்போது அடக்குமுறை மற்றும் துன்பகரமான நீதிமன்ற நடைமுறையை எதிர்கொள்கிறோம். நாம் இது நடக்கவிடக்கூடாது” என்கிறது.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் பரந்த அளவில் இனப்படுகொலை நடந்த ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள ஒரு நாட்டில் மக்கள் காணாமல் போனது, ஜனநாயக நெறிமுறைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலின் சமீபத்திய கட்டம் மட்டுமே. மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய மாநாட்டை (ECHR) உள்ளடக்கிய மனித உரிமைச் சட்டம் 1998 ஐ அகற்றுவதற்கான தனது நோக்கத்தை அரசாங்கம் மே மாதம் இராணி உரையில் அறிவித்தது. ஒரு புதிய உரிமைகள் மசோதா இந்த சட்டத்தை மறுசீரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீதித்துறை செயலாளர் டொமினிக் ராப் மார்ச் மாதம் 'வெளிநாட்டு குற்றவாளிகளை நாடு கடத்துவதில் உள்ள சவால்கள்' தனது 'பிரச்சினைக்குரிய விடயங்களில்' உள்ளடங்குவதாக கூறினார்.

Loading