ஜூலியன் அசான்ஜ் கோவிட்-19க்கு நேர்மறை சோதனை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூலியன் அசான்ஜ் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது துன்புறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இலண்டனில் பாராளுமன்றத்தைச் சுற்றி பல ஆயிரம் மக்கள் மனிதச் சங்கிலியை உருவாக்கிய சனிக்கிழமை அன்று அவர் சோதனை முடிவைப் பெற்றார்.

2019 இல் பெல்மார்ஷ் சிறையில் ஜூலியன் அசான்ஜ் [Photo: Just Giving]

அவரது மனைவி, ஸ்டெல்லா, பத்திரிகையாளர்களிடம், 'நான் வெளிப்படையாக அவரைப் பற்றி கவலைப்படுகிறேன், அவரது பொது ஆரோக்கியத்திற்கு அடுத்த சில நாட்கள் முக்கியமானதாக இருக்கும். அவர் இப்போது 24 மணி நேரமும் தனது சிறைக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ளார்.” அசான்ஜ் வாரம் முழுவதும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், வெள்ளிக்கிழமை காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

அசான்ஜிற்கு ஏற்பட்ட தொற்று, மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அவரது சட்டக் குழுவின் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை உறுதிப்படுத்துகிறது, அவர் மீதான தவறான சிறைத்தண்டனையால் அவரது உடல்நலம் மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கைக்கு புதுப்பிக்கப்பட்ட அவசரத்தை அது கொடுக்க வேண்டும்.

தொற்றுநோய்க்கு சில மாதங்களுக்கு முன்னர், 100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஒரு பகிரங்க கடிதத்தில் கையெழுத்திட்டனர், அவர் இங்கிலாந்தின் உயர்மட்ட பாதுகாப்பு சிறைச்சாலையான HMP பெல்மார்ஷில் அடைக்கப்பட்டிருப்பது அசான்ஜின் உயிருக்கு ஆபத்து என எச்சரித்தனர். கோவிட்-19 பிரிட்டன் முழுவதும் வேகமாகப் பரவத் தொடங்கியபோது, முன்னணி கையொப்பமிட்டவர்களில் ஒருவரான டாக்டர் ஸ்டீபன் ஃப்ரோஸ்ட், உலக சோசலிச வலைத் தளத்திடம், “இந்த வழக்கைப் பற்றி நமக்குத் தெரிந்ததை வைத்து, திருமதி அசான்ஜ் கவலைப்படுவது சரிதான். ஜூலியன் அசான்ஜ், நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர் என்பதால், ஈக்வடோர் தூதரகத்திலும், பின்னர் பெல்மார்ஷ் சிறையிலும் பல ஆண்டுகளாக தன்னிச்சையாக காவலில் வைக்கப்பட்டிருப்பதால், கொரோனா வைரஸ் தொற்று உட்பட, வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது.

'அவர் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும், இதனால் அவர் அவசரமாக தேவைப்படும் சுகாதாரப் பாதுகாப்பை அணுக முடியும். இங்கிலாந்து அரசாங்கம் ஜூலியன் அசான்ஜின் வாழ்க்கையுடன் ரஷ்ய சில்லி (Russian roulette) விளையாட்டை திறம்பட விளையாடுகிறது.”

மற்றொரு மருத்துவர் லீசா ஜோன்சன் விளக்கினார், 'நீண்ட காலத்திற்கு முன்பு 2015 மருத்துவ மற்றும் மனித உரிமை வல்லுநர்கள் ஒரு அற்பமான நோயைத் தவிர வேறு எதுவும் ஜூலியன் அசான்ஜிற்கு ஆபத்தானது என்பதை நிரூபிக்க முடியும் என்று எச்சரித்தனர். அவரது உடல்நிலை இப்போது இன்னும் பலவீனமாக உள்ளது, மேலும் கொரோனா வைரஸ் அந்த எச்சரிக்கைகளை மிகவும் அவசரமாக்கவும் மோசமாக்கவும் மட்டுமே செய்கிறது.”

அவர் மேலும் கூறுகையில், “ஜூலியன் அசான்ஜ் சிறையில் கொரோனா வைரஸ் அல்லது வேறு ஏதேனும் பேரழிவு நோய்க்கு உள்ளானால், அது விபத்தாக இருக்காது. இது நீண்டகால உளவியல் சித்திரவதை மற்றும் வேண்டுமென்றே மருத்துவ புறக்கணிப்பு ஆகியவற்றின் எதிர்விளைவாக இருக்கும்.”

விக்கிலீக்ஸ் நிறுவனர் மார்ச் 2020 இல் ஜாமீனுக்கு விண்ணப்பித்தார், வழக்கறிஞர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அவரது பலவீனமான ஆரோக்கியத்திற்கு 'மிகவும் உண்மையான' மற்றும் 'அபாயகரமான' ஆபத்தை மேற்கோள் காட்டினர். வீட்டுக் காவலில் வைப்பது, GPS இணைப்பு உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளை ஏற்க அவர் தயாராக இருந்ததாக அவரது கரிசினை இருந்தது. உலகளாவிய பூட்டுதலின் போது, அவர் ஒரு 'விமானப் பயண அபாயத்தை' ஏற்படுத்தியதாக அபத்தமான அடிப்படையில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

அதற்கு பின்னர், அவர் ஒரு தேசிய கைதிகள் விடுதலை திட்டத்திலிருந்து விலக்கப்பட்டார், இது சிறை ஊழியர்கள் மற்றும் கைதிகளிடையே கோவிட்-19 ஆபத்தான பரவலுக்கான ஆதாரங்களால் தூண்டப்பட்டது. கொடுக்கப்பட்ட போலி காரணம் என்னவென்றால், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு (குற்றம் இல்லாமல்) தண்டனை அனுபவிக்காததால், அவர் தகுதியற்றவர்.

அக்டோபர் 2020 இறுதிக்குள், நீதி அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் 1,529 கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், முந்தைய மாதத்தில் மட்டும் 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தது 32 கைதிகள் இந்த வைரஸால் கொல்லப்பட்டிருந்தனர்.

நவம்பரில், நோய்த்தொற்றுகளின் அலை பெல்மார்ஷ் சிறையைத் தாக்கியது. ஸ்டெல்லா அசான்ஜ் அதை வெளிப்படுத்தினார், 'ஜூலியனின் சிறைக்கூட தொகுதியில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஊழியர்கள் உட்பட 56 பேர் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.' இது 200க்கும் குறைவான கைதிகளைக் கொண்ட ஒரு தொகுதியில் இருந்தது.

அசான்ஜ் மற்றும் பிற கைதிகள் காலவரையற்ற பூட்டுதலின் கீழ் வைக்கப்பட்டனர், 24 மணிநேரமும் அவர்களது சிறை அறைகளில் அடைக்கப்பட்டனர். அவரது வழக்கறிஞர் எட்வார்ட் ஃபிட்ஸ்ஜெரால்ட் ஜாமீன் மனுவில் பூட்டுதல் நடைமுறைகளால் 'அவரது மன ஆரோக்கியம் மற்றும் அவரது மனித தொடர்புக்கு ஆபத்து' என்று எச்சரித்திருந்தார். அந்த இலையுதிர்காலத்தில் அசான்ஜின் நாடு கடத்தல் விசாரணையின்போது, அவரது பாதுகாப்பு குழு, அவரது மனநலத்திற்கு ஏற்பட்ட சேதம் மற்றும் தற்கொலை ஆபத்து பற்றிய விரிவான மருத்துவ ஆதாரங்களை முன்வைத்தது.

பெல்மார்ஷ் கோவிட்டால் பூட்டப்பட்ட அதே மாதத்தில், சிறைக்குள் இருந்த அசான்ஜின் நண்பர்களில் ஒருவர் பிரேசிலுக்கு நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் தற்கொலை செய்து கொண்டார். ஸ்டெல்லா ட்விட்டரில், “ஜூலியனிடம் பேசினேன். அவரது நண்பர் ஒருவர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் இன்னும் ஜூலியனின் பகுதியில் உள்ள அறையில் உள்ளது. ஜூலியன் பேரழிவிற்கு உள்ளானார்.”

அந்த வீரமிக்க பத்திரிகையாளரை பிரிட்டன் இடைவிடாது துன்புறுத்துவது ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அக்டோபர் 2021 இல், அசான்ஜிற்கு எதிராக உயர் நீதிமன்ற மேல்முறையீட்டின் போது, அவர் பெல்மார்ஷில் ஒரு சிறிய பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். டெய்லி மெயிலின் படி, அவரது 'வலது கண் இமை தொங்கியது, நினைவாற்றல் குறைபாடுகள் மற்றும் நரம்பியல் பாதிப்புக்கான அறிகுறிகளுடன்' இருந்தார்.

பக்கவாதம் ஏற்பட்ட பயங்கரமான நிலைமைகளை விவரித்த ஸ்டெல்லா, “உங்கள் மன ஆரோக்கியம் மற்றும் தற்கொலை செய்துகொள்ளும் அபாயத்தைப் பற்றி விவாதிக்கும் உயர் நீதிமன்ற மேல்முறையீட்டில், நீங்கள் பங்கேற்க முடியாத ஒரு உயர் நீதிமன்ற மேல்முறையீட்டைக் கேட்பது பயங்கரமானதாக இருந்திருக்கும். அதில் நீங்கள் எல்லாவற்றையும் உருவாக்குகிறீர்கள் என்று அமெரிக்கா வாதிடுகிறது.”

சித்திரவதை தொடர்பான ஐ.நா. வின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்சர், மே 2019 இல் பெல்மார்ஷ் சிறைச்சாலைக்குள் ஒரு மருத்துவக் குழுவுடன் சென்று அசான்ஜை பரிசோதித்து, அவர் உளவியல் சித்திரவதைக்கான அறிகுறிகளைக் காட்டினார் என்று முடிவு செய்தார். அவர் அசான்ஜின் நோய் குறித்து கருத்து தெரிவிக்கையில், 'அசான்ஜின் பக்கவாதம் ஆச்சரியமல்ல. அவரை பரிசோதித்தபின் நாங்கள் எச்சரித்தபடி, தனிமைப்படுத்தல், தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றின் தொடர்ச்சியான அழுத்தத்திலிருந்து விடுபடாவிட்டால், அவரது உடல்நலம் அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கீழ்நோக்கிய சுழற்சியில் நுழையும். இங்கிலாந்து உண்மையில் அவரை மரணத்திற்கு சித்திரவதை செய்கிறது.”

மெல்சர் மேலும் கூறுகையில், 'வீடியோ இணைப்பு மூலம் தனது சொந்த விசாரணையில் கலந்து கொள்ள அசான்ஜ் தெளிவாக மருத்துவ ரீதியாக தகுதியற்றவர் என்பதால், அமெரிக்காவில் ஒரு போலி விசாரணைக்கு ஆளாவதற்கு அவர் பொருத்தமானவரா என்பதை அவர்கள் எவ்வாறு விவாதிக்க முடியும், சித்திரவதைகள் மற்றும் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க மறுக்கும் ஒரு நாடு, ஆனால் இரகசிய தகவல்களை வெளிப்படுத்துபவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை துன்புறுத்துகிறது?”

வாஷிங்டன் மற்றும் லாங்லி சார்பாக செயல்படும் பிரிட்டிஷ் அரசாங்க சிறைக்காவலர்களால் அவருக்கு இழைக்கப்பட்ட குற்றங்களின் பட்டியலில் அசான்ஜின் கோவிட் தொற்று சமீபத்தியது. தொற்றுநோயின் முதல் ஆண்டில் உலக சோசலிச வலைத் தளம் எழுதியது, 'தவிர்க்க முடியாத முடிவு என்னவென்றால், அசான்ஜை துன்புறுத்துபவர்கள் கோவிட்-19 நோய்தொற்று அவர்களுக்காக அழுக்கான வேலையைச் செய்வதையும் இருபத்தியோராம் நூற்றாண்டின் மிக முக்கியமான பத்திரிகையாளரைக் கொன்றுவிடுவதையும் எதிர்பார்க்கிறார்கள்.'

செப்டம்பர் 2021 இல், ஒரு Yahoo செய்தி விசாரணை, இது பல ஆண்டுகளுக்கு முன்பு, இலண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் தஞ்சம் கோரியபோது, அவரை படுகொலை செய்ய, CIA ஆல் தீட்டப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சி என்பதை நிரூபித்தது. அவரை நாடு கடத்தக் கோரும் சட்ட வழக்கு அதே நோக்கத்தை வெவ்வேறு வழிகளில் பின்பற்றுகிறது, அமெரிக்க அதிஉயர் பாதுகாப்பு சூப்பர்மாக்ஸ் சிறையில் அவரை அடக்கம் செய்யும் நோக்கத்துடன்.

அக்டோபர் 8, 2022 அன்று ஜூலியன் அசான்ஜை நடத்தப்படும் விதத்தை எதிர்த்து 7,000 பேர் இலண்டனில் மனிதச் சங்கிலியை நடத்தினர்.

சனிக்கிழமையன்று நடந்த போராட்டம், அசான்ஜின் பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்டவற்றில் மிகப் பெரியதாகும், இது பரந்த வயதுடையவர்களையும் பலதரப்பட்ட சமூகப் பின்னணியை சேர்ந்தவர்களையும் ஈர்த்திருந்தது. விக்கிலீக்ஸ் நிறுவனரின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கான வெகுஜன, உலகளாவிய பிரச்சாரத்திற்கான சாத்தியக்கூறுகளை இது சுட்டிக்காட்டியது. அசான்ஜின் உயிருக்கான அச்சுறுத்தல் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது மற்றும் ஏகாதிபத்தியப் போரின் யதார்த்தத்துடன், அவர் அம்பலப்படுத்திய பணி, மிகவும் முக்கியமானது, இந்த பிரச்சாரம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் அவசரமாக கட்டமைக்கப்பட வேண்டும்.

Loading