இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் இராஜினாமா குறித்து

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இது முதலில் ட்விட்டரில் வெளியிடப்பட்டது.

ஆறு வாரங்கள் மட்டுமே பதவியில் இருந்த பின்னர் இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் இராஜினாமா செய்வது பிரிட்டனில் வர்க்க ஆட்சியின் அடிப்படை நெருக்கடியின் வளர்ச்சியை மேலும் உறுதிப்படுத்துகிறது. மார்க்சிஸ்டுகள் விளக்கியது போல், ஆளும் வர்க்கம் பழைய வழியில் ஆட்சி செய்ய முடியாதபோது ஒரு புரட்சிகர நிலைமை உருவாகிறது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இந்த நிலையில் ஆளும் வர்க்கத்தால் ஆட்சி செய்யவே முடியவில்லை. அதன் உயிர் பிழைப்பு இப்போது, தீவிர பிளேயர் வாத கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிற் கட்சியின் திறனையும், பெருகிய முறையில் போர்க்குணமிக்க தொழிலாள வர்க்கத்தின் கழுத்தை நெரிக்கும் தொழிற்சங்கங்களின் எந்திரத்தையும் சார்ந்துள்ளது.

ஒரு புரட்சிகர நெருக்கடியின் மற்ற இன்றியமையாத கூறு —தொழிலாள வர்க்கம் பழைய வழியில் வாழ முடியாது— நிச்சயமாக உள்ளது. நெருக்கடியில் அதன் தலையீடுதான் இப்போது முக்கியமான பிரச்சினை. பொதுத் தேர்தலுக்கான கோரிக்கையானது சுயாதீனமான வெகுஜன நடவடிக்கைக்கான அழைப்புகளை நோக்கி செலுத்தப்பட வேண்டும்.

Loading