பௌல் குரூக்மன் அமெரிக்காவில் ஒரு மில்லியன் கோவிட் இறப்புகளை ஜனநாயகத்தின் வெற்றியாக அறிவிக்கிறார்

பிரின்ஸ்டன் பொருளாதார நிபுணரும், நியூயார்க் டைம்ஸ் கட்டுரையாளரும், பிடன் நிர்வாகக் குட்டியுமான பால் க்ருக்மேன், கோவிட் போரை சீனா எப்படி இழந்தது என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். இது அமெரிக்க தாராளவாதத்தின் அறிவார்ந்த, அரசியல் மற்றும் தார்மீகச் சிதைவுக்கு ஒரு மோசமான சுய-வெளிப்பாடு ஆகும்.

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரின்ஸ்டன் பொருளாதார நிபுணரும் நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளரும் மற்றும் பைடென் நிர்வாக கைக்கூலியுமான பௌல் குரூக்மன், “கோவிட் போரை சீனா எப்படி இழந்தது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். இது அமெரிக்க தாராளவாதத்தின் அறிவார்ந்த, அரசியல் மற்றும் தார்மீக சிதைவின் பேரழிவு தரும் சுய-அம்பலப்படுத்தலாகும்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

கோவிட் போரில் வெற்றி பெறுவது என்பது பாரிய மரணம் மற்றும் நோயை ஏற்றுக்கொள்வது என குருக்மன் வரையறுக்கிறார். அமெரிக்காவும் ஐரோப்பாவும், 'அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகின்றன' என்று அவர் எழுதுகிறார். அதாவது, தினமும் மில்லியன் கணக்கானவர்களை தொற்றிக் கொள்ளும் ஒரு தொற்றுநோயைத் தடுப்பதற்கான எந்தவொரு திட்டமிட்ட முயற்சியையும் அவர்கள் கைவிட்டுவிட்டனர்.

குருக்மனின் கூற்றுப்படி, சீனா கோவிட் போரை இழந்துவிட்டது. ஏனெனில் அது நோய்த்தொற்று பரவுவதை எதிர்த்ததுடன், கடந்த மூன்று ஆண்டுகளில் அதன் இறப்புகளின் எண்ணிக்கையை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய இறப்புகளின் எண்ணிக்கையைவிட குறைவாக வைத்துள்ளது.

குரூக்மன் சீனாவின் பாரிய மரணத்தைத் தவிர்ப்பதை —குறைந்தபட்சம் இப்போது வரை— ஒரு 'தோல்வி' என்றும் அதில் இருந்து பாடங்கள் எடுக்கப்பட வேண்டும் என்றும் விவரிக்கிறார். அவ்வாறு எடுக்கவேண்டிய பாடங்கள் என்ன?

'முக்கிய பாடம் என்னவென்றால், ஒரு தொற்றுநோயை எதிர்கொண்டு நாம் பொது சுகாதார நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது அல்ல. சில சமயங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.”

சில சமயங்களில்?! வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பொது சுகாதார நடவடிக்கைகள் விதிவிலக்கானதாக கருதப்பட வேண்டும், மேலும் முடிந்தவரை விரைவாக கைவிடப்பட வேண்டும் என்பதாகும்.

பொது சுகாதாரக் கொள்கையை முதலாளித்துவ பொருளாதார நலன்களுக்கு அடிபணியச் செய்வதற்கான அமெரிக்க முடிவை நியாயப்படுத்தும் குருக்மன், 'முகக்கவசங்கள் மற்றும் பூட்டுதல்கள் கூட கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் என்று கற்பனை செய்வது ஒருபோதும் யதார்த்தமானது அல்ல' என்கிறார். இது முற்றிலும் பொய்யானது.

உண்மையில், தொற்றுநோய்க்கான சீனாவின் பிரதிபலிப்பான தொடர்புத் தடமறிதல், வெகுஜன சோதனை, முகக்கவசம் மற்றும் பூட்டுதல் போன்ற அடிப்படை மற்றும் நன்கு அறியப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் வைரஸ் பரவுவதை திறம்பட தடுக்கவும் உயிர்களைக் காப்பாற்றவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபித்துள்ளது.

2021 இன் பிற்பகுதியில் பூஜ்ஜிய கோவிட் கொள்கையை கைவிடும் நியூசிலாந்தின் முடிவை, சீனா என்ன செய்திருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக குருக்மன் மேற்கோள் காட்டுகிறார். அதாவது, கோவிட்-19 பரவுவதை நிறுத்துவதற்கான முயற்சிகளை கைவிட்டு, தடுப்பூசிகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்பதாகும்.

ஆனால் அமெரிக்க மூலோபாயத்தினை நோக்கி நியூசிலாந்து திரும்பியது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை குருக்மன் ஒப்புக்கொள்கிறார்.

'தடுப்பூசிகளுக்கு பின்னர், திறந்துவிடப்பட்டதானது தொற்றுக்களின் அதிகரிப்பிற்கும் இறப்புகளில் ஒரு பெரிய உயர்வுக்கு வழிவகுத்தது. ஆனால் இந்த இடங்கள் முன்னதாகவே திறக்கப்பட்டிருந்தால் நிகழ்ந்திருக்கும் அளவுக்கு கடுமையானதாக இருந்திருக்காது. அதனால் அதன் ஒட்டுமொத்த தனிநபர் இறப்புகள் அமெரிக்காவை விட மிகக் குறைவாக உள்ளன.”

'எவ்வாறாயினும், பூட்டுதல்கள் கொரோனா வைரஸை நிரந்தரமாக அழிக்கக்கூடும் என்று சீனாவின் தலைவர்கள் நம்பியதாகத் தெரிகிறது. மேலும் அவர்கள் பெரும்பாலும் இதற்கு மிகப்பெரும் முரண்பாடான சான்றுகளை எதிர்கொண்டாலும் இதை நம்புவது போல் செயல்படுகிறார்கள்' என குருக்மன் வலியுறுத்துகிறார்.

குருக்மன் இந்த 'மிகப்பெரும் ஆதாரத்தை' மேற்கோள் காட்டத் தவறிவிட்டார். உண்மையில், பொது சுகாதார நடவடிக்கைகளை விரைவாகச் செயல்படுத்துவது கோவிட்-19 இன் பரவலைத் தடுக்கும் என்பதை நிஜ வாழ்க்கை சான்றுகள் பெருமளவில் நிரூபிக்கின்றன.

சீனா எதிர்கொள்ளும் சோகமான சூழ்நிலை என்னவென்றால், 'உடல்கள் அதிக அளவில் குவியட்டும்' என்ற முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் வார்த்தைகளில், அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவின் முடிவால், தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான அதன் முயற்சிகள் இடைவிடாமல் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளன.

தேசிய நடவடிக்கைகளில் தங்கியிருக்கும் சீனாவின் அடிப்படை தவறான கணக்கீடு என்னவென்றால், அவை அவர்களுக்குள் சரியாக இருந்தாலும் ஒரு வைரஸ் பரவுவதைத் தடுக்க, அதன் நீக்குதலுக்கும், இல்லாதழிப்புக்கும் உலகளாவிய ஒருங்கிணைந்த பொது சுகாதார நடவடிக்கைகள் தேவை.

குருக்மன் வலியுறுத்துவது போல், ஜி ஜின்பிங்கின் ஆட்சி 'அதன் சொந்தமாக தயாரிக்கப்பட்ட பொறியில் அகப்பட்டிருக்கவில்லை'. கோவிட்-19 இன் உலகளாவிய பரவல் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவில் இருந்து வெளிப்படும் இடைவிடாத சர்வதேச புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களிலிருந்து அதன் இக்கட்டான நிலை உருவானது.

குருக்மனின் பத்தி, கோவிட்-19 இன் தன்மை மற்றும் அதிகரித்து வரும் பொது சுகாதார நெருக்கடி பற்றிய அறியாமையின் அதிர்ச்சியூட்டும் நிலைக்கு சாட்சியமளிக்கிறது. 'சில சீனர்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது' என அவர் எழுதுகிறார்.

சரி, பேராசிரியர் குருக்மனுக்கான சில செய்திகள் இதோ: தடுப்பூசி போடப்பட்டவர்கள் கூட —பல மாதங்களாக செயல்திறன் குறைந்துவிடும் தடுப்பூசிகள்— மீண்டும் மீண்டும் நோய்த்தொற்றுகள் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். நெடுங் கோவிட் என்பது மக்களை முடக்கி மோசமாக்கும் ஒரு நோயாகும்.

நோய்த்தொற்று மீண்டும் ஏற்படுவதால், முக்கியமான உறுப்பு அமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது, இது ஆயுட்காலம் குறைவதற்கு வழிவகுக்கும் என்று அதிகரித்து வரும் சான்றுகள் காட்டுகின்றன.

இறுதியாக, சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையுடன் ஒப்பிடும் போது, கோவிட்-19க்கான அமெரிக்காவின் பதில், 'எதேச்சதிகாரத்தை' விட 'ஜனநாயகத்தின்' மேன்மையை நிரூபிக்கிறது என குருக்மன் கூறுகிறார்.

ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்கள் பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க இறப்புகளை ஏற்றுக்கொள்வது சரியானது என குருக்மன் நம்பலாம்.

ஆனால் அவர் பாதுகாப்பது 'ஜனநாயகத்தை' அல்ல, மாறாக மனித வாழ்வையும் மக்கள் உடல்நலனையும் அவமதிக்கும் இரக்கமற்ற நிதிய தன்னலக்குழுவின் ஆட்சியையாகும்.

Loading