மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யும் சுத்திகரிப்புத் தொழிலாளர்களைப் பாதுகாக்க நடந்த ஆர்ப்பாட்டத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரெஞ்சு மாணவர்கள் பேசுகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தனது வெறுக்கப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்தத்தை செயல்படுத்துவதற்கான திட்டங்களை அறிவித்த ஒரு நாளின் பின்பு, பிரான்சில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. வியாழனன்று இரவு ஆர்ப்பாட்டங்கள் மீதான பொலிஸ் ஒடுக்குமுறையின் போது சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த எதிர்ப்புக்கள் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி ஆலைகள் உட்பட பிரான்சின் முக்கியமான தொழில்கள் முழுவதிலும் விரிவடைந்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் மறியல் போராட்டங்களுடன் ஒன்றிணைந்துள்ளன.

உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மானின், தலைநகர் முழுவதும் குப்பை அள்ளும் தொழிலாளர்கள் மீது கைப்பற்றல் நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை காலை, பாரிஸ் 1, பாரிஸ் 3 மற்றும் பாரிஸ் சித்தே பல்கலைக்கழக மாணவர்கள் குப்பை அள்ளும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொல்பியாக் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் மார்ச் 7 அன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர், இது தலைநகரில் ஒன்றரை வாரங்களுக்கு குப்பை சேகரிப்பை சீர்குலைத்தது. மார்ச் 7 முதல் லு ஹவ்ரே இல் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எழுபது மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஐவ்ரி-சுர்-செயினிலுள்ள குப்பை எரியூட்டி நிலையத்துக்கு பயணம் செய்தனர்.

கடந்த 16ம் திகதி காலை, பிரெஞ்சு இராணுவத்தினர் ஐவ்ரி-சுர்-செயினிலுள்ள ஒரு குப்பை கொட்டும் டிப்போவில் இருந்து குப்பை லாரிகளை அணுகி எடுப்பதற்காக, அங்கு சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் மேற்கொண்ட மறியல் போராட்டத்தை பொலிசார் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்தி தாக்கி கலைத்தனர். 

மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய பிறகே இந்த மறியல் போராட்டம் கலைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசார், 5 மாணவர்களை கைது செய்து வெள்ளிக்கிழமை மாலை வரை தடுத்து வைத்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து மாணவர்களையும் விடுவிக்கக் கோரி நூற்றுக்கணக்கான மக்கள் பாரிஸ் முதலாவது வட்டாரத்தின் போலிஸ் நிலையத்துக்கு வெளியே ஒன்று திரண்டனர்.

தொல்பியாக் வளாகத்திற்கு அருகில், வேலைநிறுத்தம் செய்யும் சுத்திகரிப்புத் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் பங்கெடுத்த மற்றும் ஆர்ப்பாட்டத்தின் மீதான வன்முறையான பொலிஸ் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட மாணவர்களான ஜோனஸ் மற்றும் லிசா ஆகியோருடன் உலக சோசலிச வலைத் தளம் பேசியது.

கிரோண்ட் முலானிலுள்ள பாரிஸ் சித்தே பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஜோனஸ், அன்று காலை நடந்த சம்பவத்தை விளக்கினார். 'நான் வகுப்பில் இருந்தபோது, எங்களை அணிதிரட்ட பலர் விரிவுரை அரங்குகளைச் சுற்றி வந்தனர். பல விரிவுரை அரங்குகளிலிருந்து தன்னிச்சையாக எழுச்சியடைந்து எழுந்தனர், பின்னர் நாங்கள் மற்றய விரிவுரை அரங்குகளிற்கு எழுச்சி பெறச் செய்யச் சென்றோம். நாங்கள் சென்று தேவைப்படும் தொழிலாளர்களுக்கு கைப்பற்றுவதை தடுக்க உதவ நினைத்தோம். அது ஒரு சங்கிலித் தொடர் விளைவைக் கொண்டிருந்தது, நாங்கள் அனைவரும் தொல்பியாக் [பல்கலைக்கழகம்] நோக்கி அணிவகுத்துச் சென்று அங்கு கூடியிருந்த மற்றய மாணவர்களுடன் சேரத் தொடங்கினோம்.'

'நாங்கள் பல்கலைக்கழகத்தை நெருங்கியபோது, காவல்துறையினர் எங்களைத் தாக்கினர் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கினர், இது எங்களில் பலரை தாக்கியது. பின்னர் சிறிது நேரம் அங்கேயே இருந்தோம், சில நிமிடங்களுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் புகைக் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானோம். நாங்கள் எதிர்த்தபடி, கடந்து செல்ல முயற்சித்தோம், ஆனால் நாங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டோம். சுமார் அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்களுக்குப் பிறகு, அவர்கள் எங்களை மீண்டும் தெருவில் தள்ளிவிட்டனர். குழு சிதறியது, அவர்கள் எங்களில் ஐந்து பேரை கைது செய்தனர்.'

ஓய்வூதியச் சீர்திருத்தத்தின் ஜனநாயக விரோத நிறைவேற்றத்தையும், ஆர்ப்பாட்டங்களை நசுக்க போலிஸைப் பயன்படுத்துவதையும் ஜோனஸ் கண்டனம் செய்தார், 'ஒரு 'ஜனநாயகத்தில்' என்ன நடக்கிறது என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தும் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்துவதை ஒரு முறை தவிர்த்தால் நன்றாக இருக்கும்' என்றார்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சமூக கோபத்தை லிசா விளக்கினார். 'அனைத்து தொழிலாளர்களும் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரானவர்கள். அரசாங்கம் விரும்புவது தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக அல்ல என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நாங்கள் அனைவரும் உண்மையில் ஆர்ப்பாட்டம் செய்யவும், ஒரு பெரிய வேலைநிறுத்தத்திற்கு ஒழுங்கமைக்கவும், வேலைநிறுத்தத்திற்கு கட்டமைக்கவும் விரும்புகிறோம்.'

மக்ரோன் அரசாங்கத்தை தொழிலாளர்கள் எவ்வாறு தோற்கடிக்க முடியும் என்று கேட்கப்பட்டபோது, ஜோனஸ் பதிலளித்தார்: '49.3 சட்டமானது [ஓய்வூதிய வெட்டுக்களை முன்னெடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சட்டப் பிரிவு] நெருப்பில் எண்ணெயை மட்டுமே ஊற்றியது. மக்கள் ஏற்கனவே அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து கொண்டிருந்தனர். நாம் ஒரு அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும், அதுதான் அரசாங்கத்தை வீழ்த்த அல்லது மாற்றுவதற்கான ஒரே வழியாகும். அரசுக்கு எதிராக மட்டுமல்ல, முதலாளிகளுக்கும், பெரும்நிறுவனங்களுக்கும் எதிராகவும் இருக்க வேண்டும். அவர்கள்தான் இந்த சீர்திருத்தத்தின் பின்னணியில் இருக்கிறார்கள்' என்றார்.

அவர் தொடர்ந்தார்: 'எங்களிடம் உண்மையான பலம் இருப்பதை எல்லா இடங்களிலுமுள்ள தொழிலாளர்களுக்கு நாம் காட்ட வேண்டும், இளைஞர்களும் கூட. இந்த சீர்திருத்தம் எங்களுக்கும் அருவருக்கத்தக்கது என்பதால், தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க இளைஞர்கள் அணிதிரள வேண்டும். தொழிலாளர்களின் ஓய்வு பெறும் வயதடன் இரண்டு ஆண்டுகளை சேர்த்தால், வேலைச் சந்தை எங்களுக்கு இன்னும் அடைபட்டதாக இருக்கும்.'

'இந்த அணிதிரட்டலில் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்தாக்குதலில் ஈடுபட வேண்டும், மேலும் பலதைக் கோர வேண்டும் என்பதையும் நான் சேர்க்க விரும்புகிறேன். குறைந்த பணவீக்கம், குறைந்தகால ஓய்வூதியம் மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்ரோன் எங்களிடமிருந்து பெற்ற அனைத்து சமூக ஆதாயங்களையும் திருப்பித் தர வேண்டும், இன்னும் அதிகமாக நாம் கோர வேண்டும்.'

நேற்று மாலை மக்ரோன் 49.3 வது சட்டப் பிரிவைப் பயன்படுத்தியதற்கு எதிராக பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கிய நிலையில், முக்கிய பிரெஞ்சு தொழிற்சங்கங்களின் கூட்டணியான கூட்டு-தொழிற்சங்கம், அடுத்த வாரம் வியாழக்கிழமை ஒன்பதாவது தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாள் அணிதிரட்டலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

போராட்டத்தை விரக்தியடையச் செய்வதிலும் தனிமைப்படுத்துவதிலும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் வகிக்கும் பங்கைப் பற்றி ஜோனஸ் பேசினார்: 'எட்டு [முந்தைய] பெரிய நாட்கள் ஆர்ப்பாட்டங்கள் ஒரு தொடக்கம் என்று நான் நினைக்கிறேன், ஆனால் தொடர்ச்சியாக எட்டு பெரிய நாட்கள் மிகவும் பயங்கரமானவை. சர்வஜன வாக்கெடுப்புகளை முன்மொழிவதன் மூலமும், எங்காவது தொலைதூர தேதிகளை முன்மொழிவதன் மூலமும், தொழிற்சங்கங்கள் இயக்கத்தை சிறிது சிறிதாக உடைக்கின்றன, ஏனெனில் ஒத்திவைக்கப்பட்ட தேதிகளில் அணிதிரட்டுவது அனைவருக்கும் சோர்வை ஏற்படுத்துகிறது' என்று அவர் குறிப்பிட்டார்.

'தொழிலாளர்கள் தான் தங்கள் அட்டவணையை முடிவு செய்ய வேண்டும், அவர்கள் வேலை நிறுத்தத்தில் மகிழ்ச்சியடையவில்லை என்றால், ஒவ்வொரு நாளும் செல்ல முடிவு செய்தால், நாங்கள் ஒவ்வொரு நாளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். இப்போது நாங்கள் தொழிற்சங்க நாட்காட்டியை மட்டுமே பின்பற்றுகிறோம், ஏனெனில் அது மட்டுமே உள்ளது.'

'தொழிற்சங்க அமைப்புகளைக் கடந்து போராட்ட இயக்கம் செல்லும்போது என்ன நடக்கும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன், தொழிலாளர்கள் அடித்தளத்தில் தங்களை ஒழுங்கமைப்பதன் மூலம் தொடங்குகிறார்கள். இப்போது, உண்மையில், தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு வெளியே ஒழுங்கமைக்கத் தொடங்கியிருப்பதை நாங்கள் காண்கிறோம்' என்று லிசா மேலும் தெரிவித்தார்.

வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலிஸ் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது, மத்திய பாரிஸிலுள்ள உயர்நிலைப் பள்ளி ஹென்றி IV இல் மாணவர்கள் சீர்திருத்தம் மற்றும் மக்ரோன் 49.3 வது பிரிவை தேசிய சட்டமன்றத்தின் மூலம் கட்டாயப்படுத்த பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பிரான்ஸ் முழுவதிலுமுள்ள டசின் கணக்கான உயர்நிலைப்பள்ளிகளின் மாணவர்களும் இதேபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். உலக சோசலிச வலைத் தளம் முற்றுகையில் பங்கெடுத்துக் கொண்ட ஹென்றி IV உயர்நிலைப்பள்ளி இரண்டு மாணவர்களான எத்தியன் மற்றும் ஜூலியன் ஆகியோருடன் பேசியது.

'இந்த சட்டத்தை வலுக்கட்டாயமாக நிறைவேற்ற 49.3 சட்ட பிரிவை  பயன்படுத்துவதை எதிர்த்து எங்கள் முற்றுகை உள்ளது. நாம் தொடர்ந்து வீதியில் அணிதிரண்டு, இயன்றவரை அனைத்தையும் தடுத்தால் மட்டுமே இந்த சீர்திருத்தத்தை அகற்ற முடியும்.'

இந்த சீர்திருத்த சட்டத்தை அவர் ஏன் எதிர்த்தார் என்பதை எத்தியன் விளக்கினார்: 'இது முற்றிலும் நியாயமற்றது மற்றும் பெரும்பாலான பெரிய பணிச் சூழ்நிலைகளில், அது கடினமாக இருக்கும். நான் நிர்வாகிகள் அல்லது நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் பணிபுரிபவர்களைப் பற்றி பேசவில்லை, ஆனால் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பேருந்து ஓட்டுநர்கள், குப்பை சேகரிப்பவர்கள் பற்றி பேசுகிறேன். அவர்களுக்கு பணம் இல்லை என்று சொல்வதை நிறுத்த வேண்டும். அன்றாடம் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கும் பங்குதாரர்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும் வணிகங்களுக்கான விஷயங்களை நாங்கள் தொடர்ந்து நிதியளிக்கிறோம்.'

'ஆர்ப்பாட்டங்களும் நாடாளுமன்றமும் வேலை செய்யவில்லை என்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். இது இப்படியே தொடர்ந்தால், இன்னும் பல வன்முறைகள் நடக்கும். பொதுவான ஆர்ப்பாட்டங்கள் வேலை செய்யவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் விவாதங்கள் வேலை செய்யவில்லை என்றால், தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வேலை செய்யவில்லை என்றால், விஷயங்கள் இன்னும் தீவிரமானதாகிவிடும்.'

சீர்திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் எத்தியன் பேசினார். 'அதுதான் தேவை. அது முடிந்தவரை தொடர வேண்டும். வேலைநிறுத்தங்கள் முடிந்தவரை பெரியதாக மாற வேண்டும். மேலும் பலர் சேர்ந்து சீர்திருத்தத்தை தடுக்க முடியும்' என்று எத்தியன் தெரிவித்தார்.

'எல்லாவற்றையும் முடக்குவது அவசியம், நாட்டை முடக்கும் முயற்சியில் சேர அனைவரும் முடிவு செய்ய வேண்டியது அவசியம். வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்தால் மட்டுமே மக்ரோனை அகற்ற முடியும்' என்று ஜூலியன் கூறினார்.

Loading